இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday, 31 December 2008

புத்தாண்டு சபதம் மற்றும் வாழ்த்துக்கள்

இந்த வருடமாவது,

  • காலை 8 மணிக்கு முன்பு அலாரம் வைக்க வேண்டும்.
  • அலாரம் அடிச்சதும் ஆஃப் பண்ணிட்டு தூங்கறதை தவிர்க்கனும்.
  • பல் துலக்கிவிட்டு காபி குடிக்க வேண்டும்.
  • குளிப்பதற்கு முன்பே உடைகளை சலவை செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து நடைபயிற்சி போகனும்.
  • வலைப்பூவில் யாருடனும் சண்டை போடக் கூடாது.
  • இரவில் டிவியை ஆஃப் பண்ணிட்டு தூங்கனும்.
  • வருகிற SMS எல்லாம் படிச்சிட்டு அழிக்கனும்.
  • 70 கிமீ வேகத்திற்கு மேல் பைக் ஓட்டுவதை தவிர்க்கனும்.
  • டீலர்களிடம் மரியாதையாக நடந்துக்கனும்.
  • கோபப் படுவதை குறைக்கனும்.
  • ரத்தம் பாக்காம ஷேவ் பண்ணனும்.
  • மாசத்துக்கு 2 பதிவு மட்டும் போடனும்.
  • எல்லார் பதிவுகளும் ’படிச்சிட்டு’ கமெண்ட் போடனும்.
  • ரகசியங்களை காப்பாத்தனும்.
  • காலைல 10 மணிக்கு ஊறப்போடற துணியை மாலை 6 மணிக்கு துவைக்கிறதை தவிர்க்கனும்.
  • சமையல் அறைல துணி காயப் போடறதை தவிர்க்கனும்.
  • நானே சமையல் செஞ்சி சாப்டனும்னு நினைக்கிறதை நிறைவேத்தனும்.
  • வலைப்பூவில் உருப்படியாக எதாவது எழுத முயற்சிக்கனும்.
  • கிராமத்து நினைவுகள்ல மாசத்துக்கு ஒரு பதிவாவது போடனும்.
  • உடல் எடையை அல்லது கொழுப்பை குறைக்கனும்.
  • வாரம் ஒருமுறையாவது வீட்டை சுத்தம் பண்ணனும்.
  • சரியான நேரத்திற்கு சாப்பிடனும்.
லாஸ்ட்.. பட் நாட் லீஸ்ட்..
  • இதை எல்லாம் நாளை வரையிலாவது ஞாபகம் வச்சிக்கனும்.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

Tuesday, 30 December 2008

இன்று (30.12.08) இரவு 8 மணி முதல் 9 மணி வரை கோவை ரெய்ன்போ எஃப் எம் கேளுங்க மக்கா.

'சுற்றுச் சூழல் போராளி' பட்டத்தை பெற்ற கோவையை சேர்ந்த அன்பர் ம.யோகநாதன் அவர்களது சிறப்புப் நேர்க்காணல் இன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை கோவை ரெய்ன்போ பண்பலைவரிசையில் ஒலிபரப்படுகிறது. வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள் தவறாமல் கேட்டு ஊக்கம் கொடுங்கள். சில விஷயங்களை நம்மால் நேரடியாக பங்கெடுத்து செய்ய முடியாமல் இருக்கும். ஆனால் அதை ஈடுபாட்டுடனும் அற்பணிப்புடனும் செய்பவர்களை ஊக்குவிப்பதும் ஒருவித சேவை மாதிரி தான். ஆகவே தவறாமல் இந்த சிறந்த மனிதரின் நேர்க்காணலை கேட்டு அவருக்கு உற்சாகமளிப்போம். முடிந்தால் அவரின் நேர்க்காணலை இங்கு வலையேற்ற முயற்சிக்கிறேன். கோவை தவிர பிற பகுதி நண்பர்களும் கேட்கலாம்.

Sunday, 28 December 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா


பள்ளி, கல்லூரி ஆண்டு மலர்களில் தொடங்கிய எழுத்துப் பயணம் நண்பர் வட்டம் இலக்கியப் பத்திரிகை பிறகு திண்ணை இணைய இதழ் எனத் தொடர்ந்து இன்ரு வலைப்பூக்களில் அழகான கதைகள் கவிதைகள் என கலக்கிக் கொண்டிருப்பதோடு மட்டும் இல்லாமல் மிகச் சிறந்த புகைப்பட கலைஞராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் என் பாசத்திற்குரிய ராமலக்‌ஷ்மியக்காவுக்கு இன்று ( டிசம்பர் 28) பிறந்தநாள். ஏராளமான விலைமதிப்பற்ற முத்துக்களை எடுத்து சரம் கோர்க்கும் நம் லக்‌ஷ்மியக்கா இன்று போல் என்றும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துவோம்.

Saturday, 27 December 2008

ஓசைசெல்லா

Friday, 26 December 2008

Software Collection 2008 - ஓசி & ஒசத்தி

Cnet நிறுவனம் 2008ம் ஆண்டுக்கான சிறந்த மென்பொருட்களை பட்டியலிட்டிருக்கிறது. இதெல்லாம் சீப் & பெஸ்ட் இல்லமா.. ஓசி & ஒசத்தி... :)

நம் கணினிக்கு அவசியம் தேவையானவை. கணினி பாதுகாப்புக்கென பட்டியலிடப் பட்டிருப்பவை தவறவிடக் கூடாத மென்பொருட்கள்.

எச்சரிக்கை : கீழே இருப்பவை விண்டோஸ் இயங்குதளத்திற்கு மட்டுமே.

Windows Starter Kit
Web Browsers
E-mail clients
Office and Productivity
Image Editors
Music Jukeboxes
Video Jukeboxes and Playback
File Compression
Chat
Torrent
Utilities
Security Starter Kit

Sunday, 21 December 2008

அபியும் நானும் - டபுள் விமர்சனம்


பெண் குழந்தைகள் என்றால் அப்பாக்கள் ஓவர் அழிச்சாட்டியம் செய்வார்கள். அது தான் இந்த படத்தின் முதல் பாதி. படம் அழகாக நகர்கிறது. குழந்தையின் PreKG அட்மிஷனுக்கு பண்ணும் ஆர்ப்பாட்டம் ஜாலி. அதற்காக அவர்கள் பண்ணும் வாக்குவாதம் இப்போது எல்லார் வீட்டிலும் நடப்பது தான்.

“ குழந்தைக்கு சொல்லிக்குடுக்கும் அளவுக்கு அப்பா அம்மாவுக்கு நாலேஜ் இருக்கான்னு பரீட்சை வைப்பாங்க”ன்னு ஐஸ்வர்யா சொல்லும் போது “ அப்போ பள்ளி கூடத்துல என்ன புடுங்குவாங்களாம்” என்று நந்துf/oநிலா மாதிரி ப்ரகாஷ்ராஜ் கேட்பார் என்று எதிர்பார்த்து எமாந்தேன். அதற்காக அலெக்சாண்டரின் குதிரையின் பெயர் என்ன என்று தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு மெனக்கெட்டு தயார் செய்வது டூ மச்சி.. இதற்கும் குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? சிலர் பல வருடங்களாக குழந்தையின் அடிமிஷனுக்காக பரீட்சை எழுத வருகிறார்களாம். கொய்யால கொழந்தைக்கு அட்மிஷனா? இல்ல வயசுக்குவந்த பையன்/பொண்ணுக்கு அட்மிஷனாடா?

பொண்ணு பள்ளியில் படிக்கும் போதே வெளிநாட்டு பல்கலைகழகங்களோட அப்ளிகேஷனை கையில் வைத்துக் கொண்டு அலையும் அப்பாக்களை விட கல்லூரி முடிந்ததும் எந்த வெளிநாட்டு மாப்பிள்ளை சிக்குவான் பொண்ண எப்போ தொரத்திவிடலாம்னு காத்துட்டு இருக்கும் அப்பாக்கள் அதிகம் இருக்கும் இந்த காலத்தில் MBA படிக்க பொண்ணு டில்லி போவதை எதிர்க்கிறார் ப்ரகாஷ்ராஜ். சரி தொலையட்டும்..

ஒருவழியாக முதல் பாதி சுபம்.

இரண்டாம் பாதி.. அடக் கொடுமையே!.. ப்ரகாஷ்ராஜ் எனும் அப்பனை கேனையனாக காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அநியாயத்துக்கு ஜோக்கராய் தெரிகிறார். கல்லூரியில் படிக்கும் பொண்ணுகிட்ட “ உன் வாழ்க்கையை நீயே அமைச்சிக்கிறது உன் உரிமை மட்டுமில்லை.. கடமையும் கூட”ன்னு டகால்ட்டி டயலாக் விடுபவர் பொண்ணு ஒருத்தனை லவ் பன்றான்னு தெரிஞ்சதும் கொதித்தெழுகிறார். அந்த பையன் ஒரு பஞ்சாபி என்று தெரிந்ததும் மேலும் நொந்து போகிறார். அப்பா செல்லமாக வளர்ந்த ஒரு பெண் தன் கல்யாண தேதியை சாப்பிடும் நேரத்தில் அப்பாவிடம் தகவலாய் தெரிவிக்கிறார். கல்யாண தேதி பற்றி அவரிடம் கேட்க கூட மாட்டாராம். கல்யாணம் எப்படி நடக்க வேண்டும் என்பது உட்பட எல்லாம் ப்ரகாஷ்ராஜ்க்கு தெரியாமலே தீர்மாணிக்கப் படுகிறது.

தன் மீதான் பாசம் குறைவதாக படுவதால் ப்ரகாஷ்ராஜ்க்கு மாப்பிள்ளை மீது வெறுப்பு வருகிறது. பிறகென்ன? இருக்கவே இருக்கு தமிழ் சினிமா சீன் டெம்ப்ளெட்.

கதவருகே காரணமே இல்லாமல் நாயகி வந்து நிற்கும் போது வீட்டில் ஒரு வெட்டி கும்பல் உட்கார்ந்துக் கொண்டு நாயகனுக்கே தெரியாத அவனை பற்றின நற்குணங்களை எல்லாம் பட்டியல் போடுவார்கள். உடனே ஒளிந்திருந்து இதை ஒட்டு கேட்கும் நாயகிக்கு நாயகன் மீது நல்ல அபிப்ராயம் வந்துவிடும்.

இதே போல் ப்ரகாஷ்ராஜ், வீட்டுக்கு வரும் போது அந்த சர்தார்ஜி மாப்பிள்ளையின் பேட்டி டிவியில் வருகிறது. நடு வழியில் நின்றுவிடும் காரை மாப்பிள்ளை சரி செய்கிறார். இதெல்லாம் கூட பரவாயில்லை. திட்டக் கமிஷனின் உறுப்பினராய் மட்டுமே இருக்கும் மாப்பிள்ளையிடம் பிரதமரே நேரடியாக போன் செய்து முனுசாமி இருக்காருங்களா என்பது போல் ஜோகிந்தர் இருக்கிறாரான்னு பேசுகிறார். பாவம் பிரதமர் ஆபிசில் வேலை பார்க்கும் டசன் கணக்கான செயலர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள் போல.

பிறகு மாப்பிள்ளையின் சேவை மனப்பான்மை எல்லாம் தெரியவைத்து ப்ரகஷ்ராஜ் மனதை மாற்றுகிறார்கள். ஆனால் இதை எதுவும் சீரியசாக செய்யவில்லை. ஒவ்வொரு சீனிலும் ப்ரகஷ்ராஜ் கட்டாயமாக வழிகிறார். பார்க்கவே பாவமாக இருக்கிறது. ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சி படமும் முடிகிறது.

இந்த மாதிரி கதைக்கெல்லாம் துறுதுறுன்னு குறும்பு கொப்பளிக்க இருக்கிற நாயிகி இருக்க வேணாமா? திரிஷா தான் கிடைத்தாரா? குழந்தைகளாக வரும் குட்டிப் பெண்கள் மனதில் நிற்கிறார்கள். திரிஷா சகிக்கலை..

அபபா மகள் இடையிலான உணர்வு பூர்வமான உறவுக்கும் இந்த படத்துக்கும் பெரிய சம்பந்தம் எதும் இல்லை. முதல் பாதியில் மட்டுமே ஓரளவு சம்பந்தம் தெரிகிறது.

........மேலே இருக்கும் விமர்சனம், தியேட்டரை வாழ்க்கைக்கான வகுப்பறையாக நினைத்து பாடம் கற்க செல்பவர்களுக்கு மட்டுமே.....

என்னை மாதிரி பொழுதுபோக்குக்கு சினிமா பார்ப்பவர்களுக்கு :
முதல் பாதி - அழகு - பார்க்கலாம்..
2வது பாதி - ஜாலி - எதார்த்ததை எல்லாம் தூக்கி எங்காவது வைத்துவிட்டு பார்க்கலாம்.
.. பாடல்களைத் தவிர அதிக பட்சமாக 15 முதல் 20 நிமிடங்கள் தான் எரிச்சல் படுத்தும் காட்ச்சிகள் இருக்கின்றன. மற்ற படி போர் அடிக்காமல் தான் இருந்தது...

ஈழத் தமிழர்களுக்கு மட்டும்.. இந்தியத் தமிழர்களுக்கு இல்லை..

அத்திரி என்ற பதிவர் பின்னூட்டங்களை மட்டுமே படித்து , நான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவன் என்பதை முன்பு நம்பிவிட்டதாகவும் இப்போது அது பொய் என தெரிந்துக் கொண்டது போலவும் ஒரு பதிவை போட்டிருக்கிறார். பின்னூட்டத்தில் ஒரு ஈழத் தமிழரும் என்னைப் போன்ற ஐந்தறிவுகளை பற்றி சிலாகித்து புலம்பி இருக்கிறார். :)

நீங்கள் எல்லாம் நம்ப வேண்டும் என்ற எந்த அவசியமும் எனக்கில்லை. நீங்கள் நம்புவதால் எனக்கு பயன் என்ன ? இழப்பு தான் என்ன?. இப்போதும் சொல்கிறேன். காஷ்மீரின் நிலை வேறு. ஈழத்தின் நிலை வேறு. காஷ்மிர் பிரிவினையை எதிர்த்தாலும் தனி ஈழத்தை ஆதரிக்கிறேன். காஷ்மிர் மக்களுக்கு இந்தியா எந்த குறையும் வைக்கவில்லை. மாறாக சிறப்பு அந்தஸ்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் நிலை அப்படி இல்லை. அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப் படுவது நிஜம். அதனால் தனி ஈழத்தை ஆதரிக்கிறேன்.

ஆனால் என்னக் காரணத்திற்காகவும் பயங்கரவாதிகளை ஆதரிக்க முடியாது. ராஜிவ் படுகொலை, சக ஈழப் போராளித் தலைவர்கள் படுகொலை என அவர்கள் எவ்வளவோ பாதகங்களை செய்திருக்கிறார்கள். புலிகளை எதிர்ப்பதால் நான் உங்களுக்கு எதிரியாய் தெரிந்தால் அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என்னை எதிரியாய் நினைப்பவர்களின் நட்புக்கு நான் ஏங்கவும் இல்லை. நான் மட்டுமில்லை.. வேறு எந்த காங்கிரஸ்காரருமே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தான் பேசுகிறோமோ ஒழிய, இதுவரையில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. காங்கிரசை பிடிக்காத சில தமிழக “ நல்ல “ உள்ளங்கள் தான் காங்கிரஸ், ஈழத் தமிழர்களுக்கு எதிரனவர்கள் போல் சித்தரிக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் “சிலரும்” அதை நம்பி சமயங்களில் உளறி வைக்கிறாகள். அதை பற்றி எல்லாம் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. நாங்க என்ன சீசன் அரசியலா செய்கிறோம்? :))))

நானும் இந்த விஷயத்தை பேசாம விடனும்னு தான் நினைக்கிறேன். ஆனால் பின்னூட்ட பெரியசாமிகள் தொல்லை தாங்கலைடா நாராயணா. பதிவு எதை பற்றி இருந்தாலும் இவர்கள் தனி ஆவர்த்தனம் பாட ஆரம்பிச்சிடறானுங்க. நான் என்ன செய்வது? வீட்டை திறந்து வைத்திருந்தால் விருந்தினர்கள் மட்டும் நுழைவார்கள் என்று நினைத்திருந்தேன். இதுவரையில் அப்படித்தான் இருந்தது. சில வேளைகளில் விருந்தினர்களுடன் சேர்ந்து சில தெருநாய்களும் நுழைந்துவிடுகின்றனவே. :(

( இந்தப் பதிவிற்கும் சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்கள் வரும்.. பாருங்க.. :)) )

Saturday, 20 December 2008

சபாஷ் செய்னா

Saina Nehwal - 1990 மார்ச் 17ல் ஹரியானா மாநிலத்தில் பிறந்த அழகுப் பெண். இப்போது பெயர் சொல்லும் இந்திய badminton வீராங்கனை. ஆரம்பத்தில் துரோனாச்சார்யா விருது பெற்ற SM.அரிஃப் அவர்களிடம் பயிற்சி பெற்று இப்போது புல்லேலா கோபிசந்தின் ஹைதராபாத் அகாடமியில் பயிற்சி பெறுகிறார். ஒலிம்பிக்கில் கலக்கியதை தொடர்ந்து இப்போது உலக தரவரிசை பட்டியலில் 10வது இடத்தை பிடித்து சாதித்திருக்கிறார்.சாதனைகள் :

  • 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேசிய சாம்பியன்.
  • Asian Satellite Badminton tournament இருமுறை வெற்றி.
  • 2006ல் பிலிப்பைன்ஸ் ஓபன் வெற்றி
  • BWF World Junior Championshipsல் இரண்டாவது இடம்
  • உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன் ( இந்தியாவின் முதல் பெண் )
  • 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய ஒரே இந்திய வீராங்கனை.
  • செப்டெம்பர் 2008ல் சீன - தைபே ஓபனில் வெற்றி

இபோது World Super Series Masters badminton போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறி சாதித்துள்ளார்.
இன்னும் பல பல வெற்றிகளை குவித்து நாட்டுக்கு பெருமை தேடித்தர வாழ்த்துக்கள் செய்னா.

Thursday, 18 December 2008

ஈழத்து எதிரிகளும் கோடம்பாக்கத்து கோமாளிகளும்

ராஜிவ்காந்தி படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் இந்த அளவு ஈழ தமிழர்களுக்கான ஆதரவு குரல் இருந்ததில்லை என நினைக்கிறேன். ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் மிக பலமாகவே குரல்கள் எழுந்தன. எல்லாம் மிக அழகாக சீராக போனதாகவே நினைவு. தினம் தினம் இந்த குரல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அதுவும் ஒரே குரலாக இருந்தது. ஈழ மக்கள் படும் அவதிக்கு எதிராக மக்கள் பெரும் ஆதரவு உருவானது.

வழக்கமாக‌ ஈழப் போராட்டங்களுக்கு எதிராக பேசுபவர்கள் கூட அந்த மக்கள் படும் துயரங்களை பார்த்து அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு எதிராக எதுவும் பேசாமல் அல்லது பேச முடியாமல் இருந்தார்கள். எல்லாம் நல்லபடியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. அனைத்துக் கட்சி கூட்டம்.. ராஜினாமா முடிவு.. எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.

போராட்டங்களின் நோக்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அரசியல் நிர்பந்தம் குடுத்து போரை நிறுத்தவைப்பது. பாதிக்கப் பட்ட மக்களுக்கு மருந்து பொருள் உட்பட்ட நிவாரணம் வழங்குவது.. அந்த குறிக்கோளை நோக்கி எல்லாம் ஓரளவு நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.. எந்த எதிர்ப்பும் அல்லது தடுமாற்றமும் அல்லது நோக்கச் சிதறலும் இல்லாமல்..

இடையில் வந்தார்கள் பாரதிராஜா, சத்தியராஜ், அமீர், சேரன் , சீமான் போன்ற கோடம்பாக்கத்து கோமாளிகள். வந்தோமா ஈழ மக்களுக்கு ஆதரவும் சிங்கள அரசுக்கு எதிர்ப்பும் தெரிவித்துவிட்டு மூடிக்கொண்டு வந்தோமான்னு இருந்திருக்கணும். ஏன்னா, அதான் எல்லாம் சரியான திசையில் போய்ட்டு இருக்கே.. பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து திரைத் துறையினரும் தங்கள் குரலை எழுப்பியதன் மூலம் சப்தம் இன்னும் பலமாகி இருக்கும்.

ஆனால் இந்த கோமாளிகள் என்ன செய்தார்கள்?.. ஈழ மக்கள் என்ற தளத்திலிருந்து பிரபாகரன் என்ற தனிமனித துதிபாடலுக்கு சென்றார்கள். ஈழமக்கள் படும் அவதியிலிருந்து அவர்களைக் காக்கணும்.. பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கணும்...அதற்கு போரை நிறுத்தணும்.. அதற்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கணும்... அதைவிடுத்து புலிகள்.. தடைநீக்கம்.. வீரன் .. வெங்காயம் என்று எது இப்போதைக்கு தேவை இல்லாததோ அதை நோக்கி போராட்டத்தை திசை திருப்பினார்கள்.. அதோடு விட்டார்களா? அமைதிப் படையில் சென்ற சில ராணுவ வீரர்கள் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த இந்திய ராணுவ வீரர்களையும் இந்தியாவையும் எதிர்த்து அவமதித்து பேசினார்கள்.. இவனுங்களுக்கு ஈழத்தில் தவறிழைத்த ராணுவ வீரர்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தார்கள். இரவு பகலாக‌ எல்லையில் நின்று நம்மை காக்கும் கண்ணிய வீரர்கள் இவனுங்களின் நினைவுக்கு வரவே இல்லை. ஆகவே ஒட்டுமொத்தமாக இந்தியா மற்றும் இந்திய ராணுவத்தினை குறை கூறினார்கள்...

மக்களின் உணர்ச்சியைத் தூண்டி கோடிகோடியாக காசு சம்பாதிக்க இந்திய ராணுவத்தை புனிதப் படையாக காட்டிக் கொள்ளை அடிக்கும் இந்த குள்ள நரிக் கும்பல் ராமேஷ்வரத்திம் நின்றுகொண்டு பிரபாகரன் காதுகுளிரவேண்டும் என இந்தியாவை குறை சொல்லி கத்திக் கூப்பாடு போட்டது. ஈழ மக்கள் இதைத் தான் எதிர்பார்க்கிறார்களா? அல்லது சரியான தீர்வையா?

இது போதாதா என்னடா காரணம் கிடைக்கும் கோதாவில் குதிக்கலாம் என்று இருப்பவர்களுக்கு. ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தவர்களும் புலிகள் எதிர்ப்பு என்ற பெயரில் எதிர்ப்புக் குரல் கொடுக்க தொடங்கினார்கள்.

இந்த கோ.கோமாளிகளின் கோமாளித்தனமான பேசுக்களுக்காக இவர்களை தமிழக அரசாங்கம் கைது செய்தது. இவர்களோடு சேர்ந்தார்கள் வையகத்து கோமாளியும் அவரது அடிபொடியும். இலங்கையில் என்ன நடக்குதுன்னு சொல்றேன் பேர்வழின்னு கிள‌ம்பி தனித் தமிழ்நாடு என்பதில் முடித்தார்கள். இதனால் இவர்களையும் கைது செய்ய வேண்டியதாயிற்று.

ஈழமக்களுக்கு ஆதரவு என்ற ஒரே நோக்கத்துடன் நடைபெற்ற போராட்டங்களும் ஆதரவுக் குரல்களும் இந்த கோமாளிகளின் கைது.. இவர்களுக்கு ஆதரவு/எதிர்ப்பு.. ஜாமின்.. விடுதலை என அப்படியே திசை மாறியது. ஒரே குரலாக இருந்ததை பல குரல்களாக மாற்றிய பெருமை இந்த ஜோக்கர்களையே சேரும். பிறகு ஈழமக்களுக்கு ஆதரவு என்ற நிலை மாறி புலிகள் எதிர்ப்பு என்ற பேச்சு பலமாக ஒலிக்க ஆரம்பித்தது. முழுமையாக இருந்த ஈழ ஆதரவு நிலை பாதியாக குறைந்தது. இதுதான் ஈழத் தமிழர்களுக்கு இந்த கோமாளிகள் செய்யும் நன்மையா? இவர்கள் தான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்களா?

பிறகு.. மிதிக்க வேண்டிய இடத்தில் மிதித்ததால் கொஞ்சம் பொத்திக் கொண்டு இருந்தார்கள். புலிகள் எதிர்ப்பு என்ற பெயரில் எழுந்த எதிர்ப்புக் குரல்களும் குறைந்தன. பிறகு மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம்... டில்லி பயணம்... வெளியுறவு துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்ப முடிவு .. என்று நிலமை ஓரளவு சீரடைந்தது... பொது மக்கள் மீதான தாக்குதலும் ஓரளவு குறைந்து புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்துக்கிடையிலான போராக மட்டும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வைகோ மட்டும் அவ்வப்போது கருணாநிதியை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.. ஏன் சொன்னபடி ராஜினாமா செய்யவில்லை என்று.. அட கூறுகெட்ட குப்பா, உங்க கட்சியில இருக்கிற 2 பேரும் ஏனய்யா இன்னும் ராஜினாமா செய்யவில்லை? கருணாநிதியை பற்றி உமகென்ன‌ய்யா கவலை.. உம்ம வேலையை ஒழுங்கா பார்க்க வேண்டியது தானே.. ராஜினாமா செய்து இந்தியாவின் கவனத்தை ஈர்க்க வேண்டியது தானே.. அப்போ தானே இலங்கை பிரச்சனைன்னா விடுதலைபுலிகள் மற்றும் ராணுவத்துக்கிடையேயான போர் என்பது மட்டுமில்லை.. அது அப்பாவி தமிழ் மக்களின் வாழ்க்கை பிரச்சனையும் கூட என்று தமிழகம் தாண்டிய பிற மாநில மக்களுக்கும் புரிந்திருக்கும். அதை செய்யாமல் தனி தமிழகம், பிரபாகரன் துதிபாடல் என்று விஷயத்தை திசை திருப்பிவிட்டு ஈழ மக்களின் நிஜ எதிரியாக இருக்கிறீர்களே நீங்களும் அந்த கோ.கோமாளிகளும்...

இப்போது இந்திய வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கே அனுப்பி போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் குடுக்க முடிவு செய்துள்ள நிலையில் மீண்டும் சீமான் என்னும் அரைவேக்காடு பழைய பல்லவியை ஆரம்பித்திருக்கிறது. ஈழ மக்களின் துயரங்களை பற்றி பேசியதைவிட பிரபாகரன் பிரபாகரன் என்று பொலம்புவதையே தொழிலாகக் கொண்டுள்ளது அந்த ஜந்து. அதாவது ஓரளவு நிலைமை சீரடைந்து ஈழ தமிழர்களுக்காக மீண்டும் சில நல்ல முயற்சிகளை அரசாங்கம் எடுக்கும் போது தேவை இல்லாமல் பேசி எதிர்ப்புக் குரல்களை மீண்டும் எழுப்புகிறது இந்த அரைலூசு முண்டம்.

இவனைப் போன்ற ஆட்கள் இந்தியாவை குறை சொல்லும்போது கர்நாடகா தண்ணீர் கொடுக்க மறுக்கும் போது இதை யாராவது கேட்கிறீர்களா என்ற கீறல் விழுந்த ரிக்கார்டை போடுகிறார்கள். நான் சொல்கிறேன்.. கர்நாடகாவை குறை சொல்ல தமிழனுக்கு யோக்கியதையே கிடையாது.. ஏன் என்று விரைவில் தனிப்பதிவாக போடுகிறேன்.

புலிகள் ராஜிவை கொன்றார்கள் என்று சொல்லும் காங்கிரசார், காந்தியை கொன்றவனை இந்திராவை கொன்றவனை என்ன செய்தார்கள் என்று கேட்டிருக்கு இந்த முண்டம். அடேய் வீரவெங்காயம்.. அவர்களுக்கெல்லாம் காங்கிரஸ்காரர்கள் பாராளுமன்ற வளாகத்தில் சிலைவைத்திருக்கிறார்களா? இல்லை கோவில் கட்டி வழிபடுகிறார்களா? இல்லை அவர்களுக்கு தியாகி பட்டம் குடுத்திருக்கிறார்களா?

எதற்கெடுத்தாலும் காங்கிரஸ்காரர்கள் ராஜிவ் படுகொலை என்ற பல்லவியையே பாடுகிறார்களாம். அட அல்லக்கைகளே.. எப்போதாவது எதற்கெடுத்தாலும் இந்திய அமைதிப் படை செய்த தவறுகள் என்ற பல்லவியையே பாடுகிறார்கள் என்று சொல்லி அந்த மக்களின் அவதியை கொச்சை படுத்தி இருக்கிறோமா? அப்படி சொல்லவும் விரும்பவில்லை. ஏன்னா அன்று நடந்த தவறுகள் கடுமையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான் அதை நாங்கள் துன்பியல் சம்பவம் என்ற ரீதியில் கூட கொச்சை படுத்தவில்லை..உங்களுக்கு மட்டும் ராஜிவ் உயிர் துச்சமாக தெரிகிறதா? ராஜிவ் படுகொலை துன்பியல் சம்பவம் என்று சொல்லி கொச்சைபடுத்திய பிரபாகரன் அமைதிப் படையின் தவறுகளையும் துன்பியல் சம்பவம் என்று ஏன் விடவில்லை? அமைதிப் படையின் தவறுகளுக்கு ராஜிவ் குற்றவாளி என்று நினைத்தால் ராஜிவை கொன்றதற்காக பிரபாகரனும் புலிகள் பயங்கரவாத அமைப்பும் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். ராஜிவுக்கு ஒரு நீதி இந்த பயங்கரவாதிக்கு ஒரு நீதியா?

இந்த கோமாளிக் கூட்டம் மறுபடியும் முட்டாள்தனமாக உளறினால் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு தளம் பெரிய அளவில் குறையும் என்பது நிஜம். இது தேவை இல்லாமல் அரசாங்கத்தை உசுப்பிவிடும் செயல் தான். இவன் சிறையில் இருக்கும் போது இவனுடன் இருந்தவர்கள் எல்லாம் சொந்த அண்ணன் தம்பிகளை கொன்றுவிட்டு சிறைக்கு வந்தார்களாம். பார்ப்பணன் போன்ற எதிரிகளை கொல்லாமல் அண்ணன் தம்பிகளை கொன்றுவிட்டார்கள் என்று முத்துக்களை உதிர்த்திருக்கிறது இந்த அரைவேக்காடு.

தெரிந்தோ தெரியாமலோ உயர்பதவிகளில் பிராமண‌ர்கள் இருக்கும் போது இது போன்ற லூசுத் தனமான உளறல்கள் இவனுக்கு எந்த பெரிய பிரச்சனையையும் உண்டாக்காது.. ஆனால் ஈழ மக்களுக்கு ஆதரவாக உருவாகும் சூழலை நிச்சயம் பாதிக்கும். ஆகவே இவனைப் போன்ற ஈழதமிழர்களின் எதிரிகளை அடையாளம் காணவேண்டும். ஒன்று ஆக்கப் பூர்வமான உதவி செய்.. இல்லை எனில் மூடிக் கொண்டு போய்விடு.

வெளியில் சொல்ல விரும்பாத .. என்னால் முடிந்த ஆக்கப் பூர்வமான உதவியை செய்தவன் என்ற யோக்கியதையில் இதை சொல்ல உரிமை இருப்பதாலேயே இவனை போன்ற ஜந்துக்களை மூடிக் கொண்டு இருக்க சொல்கிறேன்.

Ajith Vs Vijay

நமக்கு தெரிஞ்ச வரையில் பார்த்தாலும் சிவாஜி - எம் ஜி ஆர், ரஜினி - கமல் என பெரும் ஜாம்பவான்கள் சம காலத்தில் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். எங்க தலைவரோட மெகா டிவியில மெல்லிசை மன்னர் எம் எஸ் வி அவர்களை பற்றிய சிறப்பு நகழ்ச்சிகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அதில் எம் எஸ் வி சொன்னார் “ எதோ ஒரு படத்தில் நடிக்க சிவாஜியை அனுகிய போது அதில் அண்ணன் ( எம் ஜி ஆர்) நடித்தால் நன்றாக இருக்குமே ”என்று ஆலோசனை தந்தாராம். அவர்களுக்குள் நடிப்பில் எவ்வளவோ போட்டிகள் இருந்திருக்கின்றன. ஆனால் அவர்களோ அவர்களின் ரசிகர்களோ ஒருவரை ஒருவர் அசிங்கப் படுத்தும் வசனங்களை தங்கள் படங்களிலோ ஊடகங்கள் வழியாகவோ பரப்பியதில்லை.

ஆனால் இந்த தகர டப்பா வாயனுங்க விசய்யி அசீத்து பேனுங்க தொல்லை தாங்களைடா சாமி.. அவனுங்க தான் அவனுங்க நடிக்கிற படத்துல ஒருத்தரை ஒருத்தர் தாக்கி வசனம் பேசறானுங்க.. இந்த ஈரு பேனுங்க அதை விட மோசம்.. அவனுங்க அழிச்சாட்டியத்தை பாருங்க..

விசய்யி பேனுங்க :

”சூர்யா வயிறு 6 பேக்ஸ்
விஷால் வயிறு 4 பேக்ஸ்
விஜய் வயிறு 2 பேக்ஸ்

அஜித் வயிறு ஃபேமிலி பேக்..

....Ajith Rockz....”

---------------

இது அசீத்து பேனுங்க SMS :

”Number of Remake films by Actors:

ரஜினி : 35 வருடங்களில் 6
கமல் : 46 வருடங்களில் 5
அஜித் : 16 வருடங்களில் 3

டாக்டர்.விஜய் : 14 வருடங்களில் 18

....Dr.Vijay Rockz.... “

-----------

இது பொதுவான டெம்ப்ளெட்.. பேரை மட்டும் மாத்தி போட்டு அனுப்பறானுங்க..

”கவுண்டமணி : ச்ச்சோ.... போன் எடுத்தா நச்சி நச்சின்றானுங்க.. எதோ அஜித் படமாம்.. அஜித் ரசிகனுங்களாலயே பாக்க முடியலையாம்.. என் ரசிகனுங்களை பாக்க சொல்றானுங்க.. அட இது பரவால்லைப்பா.. சோசியல் மேட்டர்.. பண்ணிக்கலாம்.. அஜித் சாங்ஸ் எல்லாம் ஹிட்டாக்க சொல்றானுங்க.. நான் என்ன அஜித் ரசிகனுங்க மாதிரி பொறம்போக்கா? ஒரே குஷ்டமப்பா.. சாரி.. கஷ்டமப்பா..

அஜித் : போன் வயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சி

கவுண்டமணி : இது செல் போன் டா

அஜித் : ஹ.. அரசியல்ல இதெல்லாம் சாதரனப்பா.. “

அஜித ரசிகர்கள் விஜய் பேரை போட்டு இதை அனுப்பறானுங்க.. :)

........ கைவசம் இருக்கும் அசீத்து விசைய்யி சோக்குகளை நீங்களும் பின்னூட்டுங்க சாமியோவ்வ்.. :).........

டக்ளஸ் அண்ணன் : உண்மையை சொல்லுங்க.. தலைப்பை பார்த்ததும் என்னவோ எதோன்னு டரியல் ஆகித் தானே வந்திங்க.. நீங்கள்ல்லாம் இன்னும் திருந்தலையா.. எங்க எவன் அடிச்சிப்பான்னு காத்துட்டு இருக்காங்கய்யா.. போங்கய்யா.. போய்.. புள்ள குட்டிங்களை படிக்க வைங்க.. நீங்க எல்லாம் எப்போ தான் சஞ்சய் மாதிரி நல்ல புள்ளயா ஆகப் போறிங்களோ... :)))

Wednesday, 17 December 2008

இன்று ( டிசம்பர் - 17 ) ஒரு குசும்புக்கு பிறந்தநாள்..



NameOccupationBirthKnown for
SaravanaVel@குசும்பன்
Designer
17-Dec-2008 குசும்பு
Shirley S. Abrahamson
Judge
17-Dec-1933 Wisconsin Chief Justice
Gregg Araki
Film Director
17-Dec-1959 Mysterious Skin
Sylvia Ashton-Warner
Novelist
17-Dec-1908 Incense to Idols
Burt Baskin
Business
17-Dec-1913 Co-Founder of Baskin-Robbins
Ludwig van Beethoven
Composer
17-Dec-1770 Prominent composer
Paul Benedict
Actor
17-Dec-1938 A white guy on The Jeffersons
Alexander Bickel
Scholar
17-Dec-1924 The Least Dangerous Branch
Anthony J. Drexel Biddle, Jr.
Diplomat
17-Dec-1897 Ambassador to governments in exile
Jeremy Brooks
Novelist
17-Dec-1926 Jampot Smith
David Butler
Film Director
17-Dec-1894 Calamity Jane
Paul Butterfield
Musician
17-Dec-1942 Paul Butterfield Blues Band
Erskine Caldwell
Author
17-Dec-1903 Tobacco Road
Christopher Cazenove
Actor
17-Dec-1945 English character actor
Jack L. Chalker
Author
17-Dec-1944 SF author, wrote Well World series
Domenico Cimarosa
Composer
17-Dec-1749 Il Matrimonio segreto
Humphry Davy
Chemist
17-Dec-1778 Leading early 19th century chemist
Nancy-Ann DeParle
Business
17-Dec-1956 Health care administrator
Sheila Dixon
Politician
17-Dec-1953 Mayor of Baltimore
Peter Farrelly
Film Director
17-Dec-1956 A Farrelly Brother
Arthur Fiedler
Conductor
17-Dec-1894 Conductor of the Boston Pops
Penelope Fitzgerald
Novelist
17-Dec-1916 The Blue Flower
Ford Madox Ford
Novelist
17-Dec-1873 The Good Soldier
Jaimee Foxworth
Actor
17-Dec-1979 Family Matters
Ron Geesin
Musician
17-Dec-1943 Audio innovator, co-wrote Atom Heart Mother
Duff Goldman
Chef
17-Dec-1974 Ace of Cakes
Andrew Gould
Business
17-Dec-1946 CEO of Schlumberger
Bob Guccione
Business
17-Dec-1930 Founder, Penthouse magazine
Curtis Harrington
Film Director
17-Dec-1922 Voyage to the Prehistoric Planet
Joseph Henry
Physicist
17-Dec-1797 Discovered electromagnetic induction
Bernard Hill
Actor
17-Dec-1944 Boys from the Blackstuff
Laurie Holden
Actor
17-Dec-1972 Silent Hill
Ernie Hudson
Actor
17-Dec-1945 Warden Glenn on Oz
John I. Jenkins
Educator
17-Dec-1953 President, University of Notre Dame
Milla Jovovich
Actor
17-Dec-1975 The Fifth Element
Eddie Kendricks
Singer
17-Dec-1939 The Temptations
Arthur E. Kennelly
Physicist
17-Dec-1861 Kennelly-Heaviside layer
Thomas Starr King
Religion
17-Dec-1824 Saved California to the Union
William Lyon Mackenzie King
Head of State
17-Dec-1874 Three-time Prime Minister of Canada
Klaus Kinkel
Politician
17-Dec-1936 German Foreign Minister, 1992-98
Eugene Levy
Comic
17-Dec-1946 Earl Camembert from SCTV
Willard F. Libby
Chemist
17-Dec-1908 Carbon-14 dating technique
Chuck Liddell
Sports Figure
17-Dec-1969 The Iceman, UFC fighter
George Lindsey
Actor
17-Dec-1935 Goober on Gomer Pyle
Sol Linowitz
Business
17-Dec-1913 Negotiated return of the Panama Canal
Barry Livingston
Actor
17-Dec-1953 Ernie Douglas on My Three Sons
Richard Long
Actor
17-Dec-1927 Jarrod Barkley on The Big Valley
William McChesney Martin
Economist
17-Dec-1906 Federal Reserve Chairman, 1951-70
Chris Matthews
Talk Show Host
17-Dec-1945 Hardball with Chris Matthews
Big John McCarthy
Sports Figure
17-Dec-1962 UFC referee
James McClatchy
Publisher
17-Dec-1920 Former Chairman, McClatchy Newspapers
James H. McGraw
Publisher
17-Dec-1860 Co-Founder of the McGraw-Hill Companies
Mike Mills
Bassist
17-Dec-1958 Bassist for R.E.M.
Art Neville
Musician
17-Dec-1937 One of the Neville Brothers
Kerry Packer
Business
17-Dec-1937 Richest man in Australia
Eli Pariser
Activist
17-Dec-1980 MoveOn.org
Sarah Paulson
Actor
17-Dec-1974 Down with Love
Katina Paxinou
Actor
17-Dec-1900 For Whom the Bell Tolls
Bill Pullman
Actor
17-Dec-1953 Independence Day
Paula Radcliffe
Track and Field
17-Dec-1973 English long distance runner
Joseph Verner Reed
Government
17-Dec-1937 US Ambassador to Morocco, 1981-85
Giovanni Ribisi
Actor
17-Dec-1974 Sky Captain's Dex Dearborn
Marissa Ribisi
Actor
17-Dec-1974 Dazed and Confused
Paul Rodgers
Musician
17-Dec-1949 Vocalist for Free and Bad Company
Bruce C. Rohde
Business
17-Dec-1948 CEO of ConAgra, 1997-2005
William Safire
Columnist
17-Dec-1929 NYT columnist and language maven
Edward Short
Politician
17-Dec-1912 Leader, House of Commons, 1974-76
Peter Snell
Track and Field
17-Dec-1938 Olympic distance runner
Mike Sodrel
Politician
17-Dec-1945 Congressman, Indiana 9th
Wes Studi
Actor
17-Dec-1947 Geronimo: An American Legend
Sean Patrick Thomas
Actor
17-Dec-1970 Barbershop
Leonard S. Unger
Diplomat
17-Dec-1917 US Ambassador to Taiwan, 1974-79
Chase Utley
Baseball
17-Dec-1978 2nd Base, Philadelphia Phillies
Christine A. Varney
Attorney
17-Dec-1955 Partner, Hogan & Hartson
John Greenleaf Whittier
Poet
17-Dec-1807 American abolitionist poet
Jeffrey Wigand
Scientist
17-Dec-1942 Tobacco industry whistleblower
Nat Wolff
Musician
17-Dec-1994 The Naked Brothers Band
Anthony à Wood
Historian
17-Dec-1632 Oxford historian
Patrice Wymore
Actor
17-Dec-1926 Ocean's Eleven


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குசும்பன் மாமா... வாழ்க வளமுடனும் நலமுடனும்...

Sunday, 14 December 2008

இதுதாண்டா போலிஸ்

ஆந்திராவில் பெண்கள் மீது திராவகம் வீசிய 3 பொறம்போக்குகளை அம்மாநில காவல்துறையினர் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். இதை கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. எல்லா மாநில காவல்துறையும் இதுபோல் அதிரடி நடவடிக்கை எடுத்தால் இந்த பொறம்போக்குகள் மாதிரி மேலும் பல பொறம்போக்குகள் உருவாவதை தடுக்கலாம்.

இதை தெலுங்கு தேசம் போன்ற அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் சில ”மனித உரிமை அமைப்புகளும்” எதிர்த்துள்ளன. இந்த மானம்கெட்ட மனித உரிமை அமைப்பினரை முதலில் என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும். அதென்னவோ தெரியவில்லை ரவுடிகளையும் தாதாக்களையும் அவர்களைப் போன்ற பரதேசிகளையும் கொன்றால் இந்த “மனித” உரிமை ஆர்வலர்களுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது.

அட வெங்காயங்களா.. இது போன்ற ரவுடி நாய்களால் எத்தனை அப்பாவி உயிர்கள் போகிறது.. எவ்வளவு பேர் வாழ்க்கை நாசமாகிறது.. அவர்களால் கட்டவிழ்த்துவிடப் படும் வன்முறைகள் தான் எவ்வளவு?.. அவர்களால் எடுக்கப் பட்ட உயிர்கள் தான் எவ்வளவு? அவர்களெல்லாம் உங்கள் பார்வையில் மனிதர்களாகத் தெரியவில்லையா? அவர்களின் உயிர்களை இந்த ரவுடி நாய்கள் எடுக்கும் போது எப்போதாவது இந்த நாய்களுக்கு எதிராக போராடி இருக்கிறீர்களா?..

அரசியல்வாதிகளை விட கேவலமான விளம்பரப் பிரியர்கள் இந்த மனித உரிமை அமைப்பினர். ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுக்கப் படும் விவகாரங்களில் மட்டும் அதுவும் தீயவர்களுக்கு ஆதரவாக மட்டும் களமிறங்கும் இந்த விளம்பர கும்பல்.

பேசாமல் மனித உரிமை அமைப்பு என்ற பெயரை மாற்றி “ரவுடிகள் உரிமை அமைப்பு” என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த என்கவுண்டரில் ஈடுபட்ட ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு “வீர தீர “ சாதனை புரிந்ததர்காக குடியரசுத்தலைவர் விருது வழங்க வேண்டும்..

அப்டியே இந்த அப்சல் குருவுக்கும் ஒரு என்கவுண்டர் ப்ளான் பண்ணா நல்லா இருக்கும்..

சகோதரி திருமதி ராப் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அகில உலக அகிலாண்ட நாயகன் ஜேகேயார் ரசிகர் மன்ற போலி தலைவியும் மீ த ஃபர்ஸ்ட் மற்றும் என்டிடிவி புகழ் பெரும்பதிவர் சகோதரி திருமதி. ராப் அவர்களுக்கு வலையுலக மொக்கைசாமிகள் சார்பில் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களைத் தெரி”வித்து”க் கொள்கிறேன்... :)

Tuesday, 9 December 2008

Google SMS - பேஷ் பேஷ் - Dont Miss it.

நம்மில் பெரும்பாலோர் கூகிளின் பரம ரசிகர்கள் தான். கூகுளின் ஒவ்வொரு சேவையும் செம கலக்கலா இருக்கும். உதாரணம் சொல்லி பதிவை பெரிசாக்க விரும்பலை.

இப்போ கூகுள் குறுஞ்செய்தி சேவையை அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள். குறுஞ்செய்தி என்றால் அடுத்தவர் கைப்பேசிக்கு செய்தி அனுப்பும் மொக்கை சேவை இல்லை.. நமக்கு மிகவும் பயனுள்ள சேவை இது. இதற்காக சிறப்புக் கட்டணங்கள் எதுவும் இல்லை. நாம் வேறு கைப்பேசிக்கு செய்தி அனுப்ப ஆகும் கட்டணம் தான் இதற்கும். கூகுள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. என்னைப் போன்ற அளவில்லா இலவச குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருப்பவர்களுக்கு இன்னும் சவுகர்யமே.. :)

தேர்தல் பற்றிய செய்தி வேண்டுமெனில் news delhi election என்று அனுப்பினால் அடுத்த சில நொடிகளில் டில்லி தேர்தல் பற்றிய தலைப்பு செய்திகள் கிடைக்கிறது.

dlf stock என்று அனுப்பினால் அந்த பங்கின் தற்போதைய விலை கிடைக்கிறது.

கிரிக்கெட்( CRICKET india ) , ராசிபலன் (horoscope september 7), பண பரிமாற்ற மதிப்பு(5000 inr in usd) , விமான நிலவரம் ( it302), ரயில் முன்பதிவு விவரம்( pnr number), வானிலை( weather chennai), கால்குலேட்டர் (5+2*2, half cup in teaspoon, 70F in C, 1 dollar in INR, 3 USD in INR ), மொழிபெயர்ப்பு வசதி(translate hello in french), சில வார்த்தைகளுக்கான விரிவாக்கம் அல்லது சுருக்க விவரம்( define tamil ) , உள்ளூர் வணிக சேவைகள்(parotta chennai :)) ) பற்றிய விவரம் என அத்தனை வசதிகளும் அசத்தலாக இருக்கிறது.

trains morappur to coimbatore என்று செய்தி அனுப்பினால் அடுத்த நொடி மொரப்பூரிலிருந்து கோவை செல்லும் ரயில்களின் பட்டியல் ரயில் எண் உட்பட கிடைக்கிறது. அதில் இருக்கும் வரிசை எண்ணை திரும்ப அனுப்பினால் அந்த குறிப்பிட்ட ரயில் புறப்படும் நேரம் சேரும் நேரம் எல்லாம் கிடைக்கிறது.

movies coimbatore என்று அனுப்பினால் கோவையில் பிரபல தியேட்டர்களின் திரைப்படங்கள் பட்டியல் கிடைக்கிறதும். அதன் வரிசை எண்ணை திரும்ப அனுப்பினால் அந்த படம் எந்த தியேட்டரில் போட்டிருக்காங்க அதன் முகவரி தொலைப்பேசி எண் எல்லாம் கிடைக்கிறது.

population of coimbatore என்று அனுப்பினால் கோவயில் மக்கள் தொகை கிடைக்கிறது. இது போல் gdp of pakistan, states of china என்று தேவையான எல்லாம் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

”capital of ethiyopiaஎன்று கேட்டால் , அடேய் தடியா உன்னை எல்லாம் என்னன்னுடா பெத்தாங்க.. எண்டா தப்பா டைப் பண்ணி என் உயிர வாங்குற என்று அசிங்க படுத்துவதில்லை.. ப்ரதர்
Did you mean 'capital of ETHIOPIA'?

Q&A:
Ethiopia
Capital: Addis Ababa
Source: www.britannica.com/eb/article-9344092/Ethiopia - என்று பொறுமையாய் விவரம் தருகிறது..

மேலும் தகவலுக்கு http://www.google.co.in/mobile/default/sms/ .

சேவைக்கான எண்
9-77-33-00000 . +91 அல்லது 0 எதுவும் சேர்க்கத் தேவை இல்லை. உள்ளூர் எண்ணாகவே செயல்படுகிறது.

....என் மொபைலில் “A" என்று பதிவு செய்து வைத்துவிட்டேன். இனி பொழுதுபோக்கே இது தான்.. :))

Saturday, 6 December 2008

அவளும் நானும் அருகருகே..

கவிதாயினி கல்யாணத்துக்கு போய்ட்டு சித்தார்த்தை நினைச்சிட்டு மனக்கண்ணீர் ( மனக்கண் இருக்கும் போது மனக்கண்ணீர் இருக்காதா? ) விட்டுட்டே பஸ்ல ஏறி உட்கார இடம் தேடினேன்.

காட்சி 1


”சார் முன்னாடி இடம் இருக்கு போங்க..” - கண்டக்டர்.

முன் பகுதியில் இருவர் சீட்டில் ஒரு அழகான பெண்ணும் வலது பக்கம் மூவர் இருக்கையில் 2 பெரிய அம்மாக்களும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அழகான பெண்ணிடம் “ எச்சுச் மீ.. அந்த சீட்ல உட்காந்த்துக்க முடியுமா? நான் இதுல உக்காந்துப்பேனே..”

மகா கேவலமா என்னை ஒரு பார்வை பார்த்தவாறே “ இல்ல.. என்னால அங்க போக முடியாது.. முன்னாடி இடம் இருக்கு பாருங்க..”

அந்த அம்மணி கை காட்டிய இடம்.. இஞ்சினுக்கு இடது புறம் இருக்கும் டூல்பாக்ஸ் வைக்கிற இடம்.. வெயில் கொளுத்துகிறது... அங்க உக்காந்தா இப்போ இருக்கிற பாதி கருப்பு போய் முழு கருப்பாகிடுவேன்..
ஹ்ம்ம்ம்.. யாரு பெத்த புள்ளயோ.. இம்புட்டு நல்லவளா இருக்காளே.. எல்லாம் ரொம்ப அழகா இருக்கிற திமிரு..

பரவால்ல.. பக்கத்துல உக்காருங்கன்னு சொன்னா என்ன கொறைஞ்சிடுவ.. அது சரி.. நாமளே இவ்ளோ அழகான பொண்ணு பக்கத்துல உக்கார ஆசைபடும் போது, அவ இன்னும் அழகான பையன தான பக்கத்துல உட்கார வைக்க ஆசைபடுவா.. உண்மையின் கசப்பை சுவைத்துக் கொண்டே வலதுபுறம் இருந்த பெரியம்மாக்கள் பக்கத்தில் இடம் கேட்டு உட்கார்ந்தேன்...

சிறிது நேரத்தில் அந்த பெண் அருகில் வேறொரு பெண் வந்து அமர்கிறார்..

அடிக்கடி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் கவனித்திருக்கலாம்.. எங்குமே இடம் இல்லாமல் எதாவது ஒரு இளம்பெண் பக்கத்தில் இடம் இருந்தால் தைரியமாக அங்கு உட்காரலாம். ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.. ஆனால் அப்படி ஒரு பெரிய அம்மா பக்கத்தில் உட்கார்ந்தால் அவ்ளோ தான்..

“ ஏன் தம்பி.. இந்த பஸ்ல இடம் இல்லைனா அடுத்த பஸ்ல வரலாம் இல்ல.. பொம்பளைங்க பக்கத்துல எல்லாம் ஏன் உட்கார்றிங்க”ன்னு கேப்பாங்க...
கொய்யால அப்டியே தூக்கி போட்டு மிதிக்கலாம்னு இருக்கும்.. எதோ நம்ம மூஞ்சிய பார்த்து தான் இப்டி சொல்றாங்கன்னு ஆரம்பத்துல நினைச்சிப்பேன்.. ஆனா ரொம்ப நல்ல புள்ளயாட்டம் இருக்கிற பல பசங்களுக்கும் இதே நிலை தான்.. பல முறை பார்த்திருக்கேன்..

பஸ்ஸில் கேவலமான பாடல்களை போட்டு சாவடிச்சார் ட்ரைவர்.. கண்டக்டர் அண்ணாச்சியை அழைத்து சத்தம் குறைவாக வைக்க சொல்லிவிட்டு என் மொபைலில் இருக்கும் இசையராசா பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன்..

காட்சி 2

எல்லாம் ரொமாண்டிக் பாடல்களா இருக்கு.. யார்கிட்டயாச்சும் கடலையை ஆரம்பிக்கனுமே.. இப்போ யார் வெட்டியா இருப்பாங்க.. புது ஆன்லைன் தோஸ்த் அபர்ணாகிட்ட நம்ம குலத்தொழிலான மொபைல் சாட் ஆரம்பிக்கலாம்.. இந்த கோயம்புத்தூர் குசும்பி தான் நல்லா ரகளை பண்ணுவா...

“ ஹாய் அபு.. எப்டி இருக்க? என்ன பண்ணிட்டு இருக்க?..”

"ஹாய் சஞ்சய்.. நல்லா இருக்கேன்.. நீங்க எப்டி இருக்கிங்க? நான் பஸ்ல ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன்..”

”வாவ்.. சேம் பின்ச்( கொய்யால் இதுகெல்லாமா கிள்ளிப்பாங்க). நானும் பஸ்ல தான் ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன்..”

“ஓ.. அப்டியா? நான் ஈரோட்ல ஃப்ரண்ட் கல்யாணத்துக்கு போய்ட்டு இப்போ கோவை போய்ட்டு இருக்கேன்.. நீங்க? “

“ ஆஹா.. என்ன கொடுமை அபு இது?.. நானும் ஈரோட்ல என் ஃப்ரண்ட் கல்யாணத்துக்கு போய்ட்டு இப்போ தான் கோவை போய்ட்டு இருக்கேன் “

“ஹே.. பொய் சொல்லாதிங்க.. “

“அட நிஜமா தான் அபர்ணா.. இப்போ நான் போற பஸ் பெருந்துறை தாண்டி இருக்கு..”

“ஹய்யோ.. நான் போற பஸ்ஸும் இப்போ தான் பெருந்துறை க்ராஸ் பண்ணுது”

”அடப்பாவி.. நீ எந்த பஸ்ல இருக்க? ஒருவேளை 2 பேரும் ஒரே பஸ்ல இருக்கப் போறோம் ..:) “

“ இது 1 டூ 5 சர்வீஸ் பஸ்.. “

“இந்த பஸ்ஸும் 1-5 சர்வீஸ் தான்.. ட்ரைவர் சீட்க்கு புன்னாடி பஸ் நம்பர் இருக்கும் பாத்து சொல்லு.. இந்த பஸ் நம்பர் TN38 AQ 8314..”

" OMG.. நானும் இந்த பஸ்ல தான் இருக்கேன்.. நீங்க எங்க இருக்கிங்க? “

“ட்ரைவர் சீட்க்கு பின்னாடி.. 3 பேர் உட்காரும் சீட்”

“நான் உங்களை பார்த்துட்டேன்.. நான் கண்டக்டர் சீட்க்கு பின்னாடி.. 2 பேர் உட்காரும் சீட்.. லெஃப்ட்ல திரும்பிப்பாருங்க.. :)”

பார்த்து சிரித்துக் கொள்கிறோம்.. அபர்ணா அவள் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் எதோ சொல்கிறாள்.. அந்த பெண் எழுந்து என் அருகில் வந்து...

“ நான் இங்க உட்கார்ந்த்துக்கிறேன்.. நீங்க அங்க போய்டுங்க..” என்கிறார்..

.............இப்போது நானும் அபர்ணாவும்..அதாவது அந்த திமிர் பிடிச்ச அழகு தேவைதையும் அருகருகில்... :)




காட்சி 1 : நடந்தது...
காட்சி 2: நடந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்ல.. :))

Thursday, 4 December 2008

ஜேகே ரித்திஷும் சில நடிக தலைவர்களும் பல பதிவர் ரசிகர்களும்

ஆயுத பூஜை அன்று கோவை பாலிமர் சேனலில் அண்ணன் ஜேகே ரித்திஷின் சிறப்புப் பேட்டி..நான் பார்க்கும் போது பேட்டியின் கடைசி சில வினாடிகள் மட்டுமே..

பேட்டி எடுப்பவர் : நீங்கள் ஏன் ரசிகர் மன்றங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை?
( அண்ணாத்தைக்கு அதிகாரப் பூர்வ ரசிகர் மன்றங்கள் இல்லை என்பது அப்போ தான் தெரிஞ்சது )

ஜேக்கேயார் : ( அவர் பேச்சு, வார்த்தைக்கு வார்த்தை நினைவில்லை.. ஓரளவு நினைவிருப்பது மட்டும் ) எதுக்குங்க அதெல்லாம்? எல்லாரும் சம்பாதிக்கிறத வச்சி குடும்பத்தை கவனிக்கட்டும். என்னிடம் மன்றத்துக்கு அனுமதி கேட்டு இப்போவும் வந்துட்டு தான் இருக்காங்க. நான் அதெல்லாம் தேவை இல்லைனு சொல்லி அனுப்பிட்டு தான் இருக்கேன். சென்னைல சில இடங்கள்ல என் ரசிகர் மன்றம்னு சொல்லி பேனர் எல்லாம் வச்சிருந்தாங்க. அவங்கள எல்லாம் கூப்டு இனி இந்த மாதிரி எல்லாம் பண்ணாதிங்க. எனக்கு மன்றம் எல்லாம் வேண்டாம். எதோ பேனர் வச்சது வச்சிட்டிங்க. இந்த பகுதில எதாவது உதவி தேவைன்னா சொல்லுங்க வந்து பண்றேன். ஆனா அது மன்றம் பேர்ல வேண்டாம் அப்டின்னு சொல்லி இருக்கேன். நான் யாருக்கும் மன்றம் வைக்க அனுமதி தரதில்லை.

------------------------------------------------------------------------------

அப்போ எனக்கு எதுக்கோ தெரியலை ரஜினி நினைவுக்கு வந்தார்... கடைசியா ராகவேந்திரா மண்டபத்துல ரஜினி ”தன்” ரசிகர்களை சந்திச்சி உளறும் போது தல ஜெக்கேயார் நினைவுக்கு வந்து தொலைத்தார்.

........ அகிலாண்ட நாயகன் ஜேகே ரித்திஷ் ரசிகர் மன்ற தலைவலி சாரி தலைவி என்று ஊரை ஏமாற்றும் ராப்பிற்கு கண்டனம்னு சொல்லி அப்போவே பதிவு போட நினைத்து விட்டுட்டேன். இப்போ என் மாமன் அப்துல்லா( ராமன் அப்துல்லா இல்லை ) போட்டிருக்கும் பதிவுக்கு கண்டனம் சொல்லி இந்த பதிவு போட்டாச்சி.. :)

.........ப்ளாக் பக்கம் வர காரணமே இல்லாம இருந்த எனக்கு ஒரு பதிவு போட வாய்ப்பு தந்த அப்துல்லா மாமனுக்கு நன்றி... :))

( தலைப்பு : ச்சும்மா மீட்டரை அதிவேகமாக ஓடவிடுவதற்க்கு தான்.. :) )

Wednesday, 26 November 2008

செல்லம்.. ஐ லவ் யூ டி..

கல்யாணம் முடிந்து சொந்த பந்தங்களின் விருந்து, ஊர்சுத்தல் எல்லாம் முடிந்து வந்துவிட்டோம். இன்று நாங்கள் இருவர் மட்டுமே இருக்கும் முதல் நாள். வித்தியாசமான உணர்வு.. உறக்கம் இன்ஸ்டால்மெண்டில் தான் வந்தது. ஒருவழியாய் விடியல் வந்துவிட்டது.. மெதுவாக போர்வை விலக்கி மொபைலில் நேரம் பார்க்கிறேன்.. ஆஹா மணி 6.30..


என்ன இவள்.. என்னை விட மோசமான்வளா இருப்பாள் போல.. இன்னும் எந்திரிக்கலையா.. எழுப்பலாமா.. இல்லை.. இன்று தான் இருவரும் தனியாய் ஆரம்பிக்கும் முதல் நாள்.. அவள் விருப்பத்திற்கு இருக்கட்டும்.. மெதுவாய் விழிக்கட்டும்.. ஹ்ம்ம்ம்.. இல்லை.. எழுப்பலாம்... அவள் கையால் இன்று ஒரு அதிகாலை காபி குடிக்கலாம்.. வேறு வழி இல்லை.. எழுப்பி விட வேண்டியது தான்..

அட.. போர்வை காலியாய் இருக்கே.. முன்னாடியே எழுந்திட்டா போல.. டேய் உனக்கு இப்படி ஒரு பொறுப்பான பொண்டாட்டியா? இருக்காதே.. தப்பாச்ச்சே.. சரி.. விதி வலியது.. நமக்கும் இப்டி வந்திருக்கு போல..

படுக்கை அறைக் கதவு லேசாய் திறந்து இருக்கு.. எங்கிருந்தோ லைட்டா வெளிச்சம் வருதே.. அட.. ஹாலில் லைட் எரியுது.. வீட்டை கூட்டி பெருக்கிட்டு இருக்கா.. அடியேய் கிராதகி.. எனக்கு டஸ்ட் அலர்ஜிடி.. இங்கயும் கூட்டல் பெருக்கலை பண்ணாதே.. இந்த அறை தவிர மற்றவை மட்டும் பெருக்கு.. ஹ்ம்ம்.. நான் மனசுல நெனைக்கிறது அவளுக்கு கேட்கவா போகுது.. கொஞ்ச நேரம் ஆய்டிச்சி.. ஆஹா.. நிஜமாவே இந்த அறை கூட்ட வரலை.. செல்லம் ஐ லவ் யூ டி..

எதோ கமகமன்னு வாசம் வருதே.. குளிச்சிட்டு தலை நிறைய பூ வச்சிருப்பாளோ.. ஹ்ம்ம்.. இருக்கும்.. இருக்கும்..வாசம் இப்போ அதிகமாய் வருதே.. ஆமாம்.. என்னை நோக்கித் தான் வரா.. அச்சச்சோ.. இந்த நேரத்துலையே எனனை எழுப்ப ட்ரை பண்ணுவாளோ.. முதல் நாளே எப்படி எரிஞ்சி விழறது.. அதுககாக நல்லவன் மாதிரி நடிச்சி எழுந்திட்டாலும் தினமும் இவ்ளோ சீக்கிறம் எழுப்ப ஆரம்பிச்சிடுவாளே..

சரி .. என்னதான் பண்றான்னு பார்ப்போம்.. அய்யோ.. பக்கத்துல வந்துட்டா.. டேய் கண்ணை மூடிக்கோ.. ஹ்ம்ம்.. ஆச்சு.. அச்சச்சோ இதென்ன கலாட்டா காலைத் தொட்டு கும்பிடறாளே.. ஆஹா.. இந்தக் காலத்துல இப்படி ஒரு பொண்ணா.. டேய்... நீ உனக்கே தெரியாம எதுனா புண்ணியம் பண்ணி இருக்கியாடா?.. அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லையே.. சரி.. மறுபடியும் விதி வலியது..!
ஹாலின் வெளிச்சத்தை கடன் வாங்கி இருப்பதால் இங்க தெளிவா எதுவும் பார்க்க முடியாது.. அதனால கொஞ்சமா கண் திறந்திருப்பது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை.. அட.. என்னடா இவ.. இப்போ எதுக்கு முன்னாடி வரா.. அடேய் உஷாரா இரு.. கழுத்தை நெறிக்க போறா.. இல்லை தலையணை வச்சி மூச்சி முட்ட வச்சி போட்டுத் தள்ளிடுவாளோ.. காலைத் தொட்டு கும்பிடறதை எலலாம் பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கே.. ச்சே..ச்சே.. அப்டி எல்லாம் இருக்காது.. பார்க்க கொஞ்சூண்டு நல்ல புள்ளயாத்தான் இருககா..

பக்கம் வந்துட்டா.. கண்ணை மூடிக்கிறேன்.. என்ன செய்யப் போறா இப்போ..

ஹய்ய்ய்ய்ய்ய்யோ...என்னால நம்பவே முடியலை... உதட்டில் இவ்வளவு அழகான முத்தமா? அடியேய் என் அழகான அப்பாவியே.. காலையிலேயே ரொமான்ஸா.. வேணாம்டி.. இதுக்கு மேல தாங்க மாட்டேன்.. போய்டு.. சொல்லவும் முடியவில்லையே.. இதெல்லாம் திருட்டு தனமா இல்ல ரசிச்சிட்டு இருக்கேன்... அப்பாடா.. போய்ட்டா..

எங்க போறா.. அடடே நேரா சமயலறைக்கு தான் போறா.. இன்னைக்கு என்ன செய்வா.. சிம்பிளா தோசை இட்லின்னு முடிச்சிடுவாளா.. இல்லை.. புருஷனை அசத்த முதல் சமையலே கலக்கலா செய்வாளா?.. டேய்.. இரு..இரு.. கற்பனையில மிதக்காத.. உன் பொண்டாட்டிக்கு மொதல்ல சமையல் தெரியும்னு உனக்கு தெரியுமா? ஓவரா அலட்டிக்காதடா டேய்.. அட ஆமால்ல.. இல்ல.. எதும் தெரியாம எதுக்கு அங்க போகப் போறா.. அட்லீஸ்ட் ஒரு காப்பியாவது போடத் தெரியாதா?

என்னவோ உருட்டறா.. எதையோ தேடறா போல.. என்ன இது.. இந்த நேரத்துல லேசா தூக்கம் வருது.. சரி.. அவ சமைக்கட்டும்.. அலாரம் அடிக்கிறவரை நாம கொஞ்சம் தூங்குவோம்.. அடடா..தூங்க விட மாட்டா போல.. காப்பி வாசம் கமகமன்னு வருதே.. பேஷ் பேஷ் இத இதத் தான் நான் எதிர்பார்த்தேன்.. ஆஹா அடேய் நல்லவனே.. நீ இப்படி அநியாயத்துக்கு குடுத்து வச்சவனா இருக்கியேடா.. நீ கெட்டவன்னு நீயே தான் ஊர் பூராவும் சொல்லிட்டு திரியற.. ஆனா நீ ரொம்ப நல்லவண்டா.. இல்லைனா உனக்கு இப்படி ஒரு பொண்டாட்டி கெடைப்பாளா?.. சரி சரி.. நீயே கண்ணு வைககாத..

இன்னைக்கு ஒரு கப் காப்பி சேர்த்து குடிக்கனும்.. வாசமே இப்படி இருக்கே.. குடிச்சா இன்னும் சுவையா இருக்கும் போல இருக்கே... இதை எப்டி பாராட்டறது.. ஹ்ம்ம்ம்ம்...சரி 2 கப் காப்பி குடிச்சி முடிக்கிற வரைக்கும் எதுனா புதுசா யோசிச்சி பாராட்டலாம்.. அவ காப்பி போட்டு அசத்தற மாதிரி நான் பாராட்டி அசத்திடறேன்...

பக்கம் வந்து எனனை எழுப்பப் போறா.. நானும் ஒன்னும் தெரியாதவன் மாதிரி எந்திரிக்கப் போறேன்..

அட ச்ச.. அதுக்குள்ள இந்த அலாரம் வேற.. ம்ம்ம்.. அலாரம் ஆஃப் பண்ணறேன்..

"என்னங்க இது.. இந்த நேரத்துக்கு போய் அலாரம் வச்சி எந்திரிக்கிறிங்க?"

"அதுவா.. தினமும் 7 மணிக்கு அலாரம் வச்சி பழக்கம் ஆய்டிச்சி கண்ணா..அதான்"

" இனி இந்த நேரத்துல எல்லாம் அலாரம் வைக்காதிங்க.. அப்டி வைக்கிறதா இருந்தா 8 மணிக்கு அலாரம் வைங்க.."

போர்வையை இன்னும் நல்லா இழுத்து போத்திகிட்டா..

Tuesday, 25 November 2008

அவியல் - பரிசல்காரன் கவனிக்க


நம்ம பரிசல்காரர் அவியல் என்ற பெயரில் தவறான தகவலைத் தந்து ஊரை ஏமாற்றுகிறார்... இதோ உண்மையான அவியல்..

தேவையான பொருட்கள்

  • கத்தரிக்காய் 2
  • வாழைக்காய் 2
  • உருளைகிழங்கு 2
  • கேரட் 2
  • பீன்ஸ் 100 கிராம்
  • பூசணிக்காய் 2 பெரிய துண்டுகள்
  • முருங்கக்காய் 3
  • தேங்காய் பாதியளவு
  • புளித்தத் தயிர் 2 கப்
  • பச்சை மிளகாய் 5
  • மஞ்சள் பொடி ½ டேபிள் ஸ்பூன்
  • கடுகு ½ டேபிள் ஸ்பூன்
  • உப்பு தேவைக்கேற்ப ( சூடு சொரணைக்கேற்ப )
செய்முறை :

காய்கறிகள் அனைத்தையும் நன்றாகக் கழுவி 2 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.( காய்கறிகளை மட்டும்.. கையையும் சேர்த்து அல்ல)..

பிறகு மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்... பின் தேங்காயை துருவி அதனுடன் சிறிதளவு சீரகம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும். சீரகம் சேர்த்தால் நல்ல பசை போன்று அரைக்கமுடியும்.( டிப்ஸ்மா டிப்ஸ்.. )

இப்போது வேக வைத்த காய்கறிகளுடன், அரைத்த தேங்காய் + பச்சை மிளகாய் கலவையை சேர்த்து அதனுடன் புளித்த தயிர் மற்றும் சூடு சொரணைக்கேற்ப உப்பும் சேர்த்து குறைவான வெப்பத்தில் சில நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்.

பின் கடைசியாக சிறிதளவு கடுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பி்லை சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும்.

....... அவியல் ரெடி.......

பரிசலாரே இது தான் அவியல்.. கண்டதையும் சொல்லி ஊரை எமாற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.. :))

.....எங்களுக்கும் சமையல் தெரியும் ஓய்.. :))

Monday, 24 November 2008

பச்சா பாய் Vs லுச்சா பாய்

1984 Sikh carnage was wrong: Rahul

Amritsar, November 18 Congress general secretary Rahul Gandhi condemned the anti-Sikh violence in the aftermath of Indira Gandhi’s assassination, saying “whatever happened was wrong”.

“The 1984 riots were wrong. I strongly condemn the carnage,” Rahul said at a news conference in response to a question on Operation Bluestar and the riots. “There is no truth that there is hatred among Sikhs against the Congress party. I have travelled a lot and wherever I go and interact with them (Sikhs), I find lots of love for us... When my grandmother lost elections in 1977, I saw with my own eyes many Sikhs assembling by her side at our residence, when many others had left her isolated. We cannot forget all this.”

Rahul said he and his family bore no ill-will against the community of “which the whole country is proud of”.

Rahul reacted to BJP chief Rajnath Singh’s description of him as a “bachcha” in politics. “Yes, I am a bachcha. But then, 70% of the country’s population is bachcha. What kind of message is Rajnath Singh sending?”

In an interview with The Indian Express Editor-in-Chief Shekhar Gupta on NDTV’s Walk the Talk, Rajnath Singh had said, “I would not like to comment on Rahul at all, I consider Rahul a child... Maybe some politicians consider him a rival but as far as I’m concerned he is just like my child.”

இது பச்சா பாய் கதை .... :)

அடுத்து பாருங்க .... லுச்சா பாய் கதை.. :)

Thursday, 20 November 2008

Reversible Specialist Nanthu f/o Nila

இதுல இரண்டாவது பாதியை பின்னாடி ( யாரு பின்னாடியா? அடிங்க! ) இருந்து படிக்கனுமாம்.. நந்துf/oநிலா சொல்றார். :)

Saturday, 15 November 2008

பெண்களூரில் அப்பாரவி

நம் தோழர் செந்தழல் ரவி இன்று முதல் அப்பாரவியாக பதவி உயர்வுப் பெறுகிறார். ஒரு குட்டி தேவதைக்கு அபபா ஆகி இருக்கிறார். இனியாவது நல்ல புத்தியுடன் பொறுப்பாக நடந்துக் கொள்ள ப்ரார்த்திப்போம். :).. தாயும் குட்டிப் பாப்பாவும் நலமாக இருப்பதாக தகவல். குழந்தை ஆரோக்கியமாகவும் எல்லா வளங்களுடனும் வளர வாழ்த்துக்கள்.. :)

Thursday, 13 November 2008

இந்த நாய்ங்கள எல்லாம் அம்மணமாக்கி அடிக்கனும் - Adults Only

சென்னை சட்டக் கல்லூரியில் ஜாதி சண்டை அரங்கேறி இருக்கிறது. அந்த ஜாதி வெறிபிடித்த பரதேசிகளின் செயலை பார்க்கும் போது அவமானமாய் இருந்தது.. இந்த கம்மனாட்டி பசங்களா நாளை சட்டத்திற்கு போராடப் போகிறார்கள். ஜாதித் தலைவர்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் அடியாட்களாய் போக வேண்டிய பன்னாடை பரதேசிகள் எல்லாம் சட்டம் பயின்று என்ன மயிறப் புடுங்கப் போகுதுங்க? இதுங்களால ஈடூபாட்டுடன் இந்த படிப்பை படிப்பவர்கள் மீதும் ஒட்டு மொத்தமாய் வெருப்பு வருகிறது. சட்டம் படித்தால் சில நாய்கள் சட்டத்தால் கட்டுபடுத்த முடியாதவர்கள் என்று நினைத்துக் கொள்கின்றன. எதற்கெடுத்தாலும் வன்முறை தான் இவர்களின் வழி. ஜாதி சண்டை போடவா இந்த நாய்களை பெத்து வளர்க்கிறார்கள். இந்த பேமானிகளின் செயல்களை பார்த்து இவர்களை பெற்றவர்கள் எவ்வளவு கலங்கிப் போய் இருப்பார்கள்.. இதுக்காடா உங்களை எலலாம் கடன் வாங்கி கஷ்டப் பட்டு படிக்க வைக்கிறாங்க? இந்தக் கபோதிகள் சாப்பிட போனால் ஹோட்டலில் பணம் கொடுப்பதில்லை.. கேட்டால் வன்முறை.. போலிஸ்காரர்களுடன் எப்போதும் மோதல்.. எந்த பொது விதியையும் கடைபிடிப்பதில்லை.. எப்போதும் ஒரு வெறித்தனம்.. இதுக்காடா சட்டம் படிக்க வரீங்க? ஒவ்வொரு நாயும் கையில் ஆயுதங்களுடன் அடியாட்களை விட கேவலமாக காட்சி அளித்தார்கள்... த்தூ தெறி.. இந்த சொறிநாய்களின் உதவியுடன் தான் நீதி மன்றங்களுக்கு போக வேண்டும் என்பதை நினைக்கையில்.. பேசாமல் தூக்குப் போட்டு தொங்கலாம்..

இந்த வெறிநாய்களை அம்மணமாக்கி அடிபப்தற்கு முன் அப்போது அம்மணமாய் வேடிக்கை பார்த்த காவல் துறை துணிமாட்ட வேண்டும். அங்கே காக்கி சட்டை அணிந்து வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் அம்மாணமகத் தான் தெரிந்தார்கள்.

சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் கொடிய ஆயுதங்களுடன்....
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியவர்கள் கையில் லத்தியுடன் அம்மணமாய்..
சந்தோஷம்டா.. ரொம்ப சந்தோஷம்..

( வன்முறையில் ஈடுபடும் சில சொறி நாய்களின் மீதுள்ள நியாயமான கோபம் தான் இந்த பதிவு.. எல்லா சட்ட மாணவர்களையும் சாடுவது நோக்கமல்ல )

கவிதாயினி காயத்ரிக்கும் இலக்கியவாதி சித்தார்த்துகும் கல்யாண வாழ்த்து!

அகில உலக அழுகாச்சிக் கவிதாயினி.. குருந்தொகை உரையாசிரியை.. தொலைந்த தன் பர்ஸை தானே கண்டுபிடித்த தானைத் தலைவி ..போலி முனைவர் காயத்ரிக்கும் ஆலிவுட் முதல் அமிஞ்சிக்கரை வரை அத்தனை கதைகளையும் அலசி ஆராயும் குவைத்தின் மாபெரும் இலக்கியவாதி சித்தார்த்துக்கும் வருகிற டிசம்பர் 4ஆம் தேதி கல்யாணமுங்க.. இந்த இரு இலக்கியவாதிகளும் அனைத்து வளங்களும் பெற்று என்றும் சந்தோஷமாய் வாழ வாழ்த்திடுவோமுங்க.

திருமண நாள் : 04.12.2008, வியாழக் கிழமை.
இடம் : சக்தி மஹால், பெருந்துறை ரோடு, ஈரோடு.

வரவேற்பு : 08.12.2008 திங்கட்கிழமை.
இடம் : Yes Yes ராயல் மஹால், திருமங்கலம், சென்னை.

Wednesday, 12 November 2008

டரியல் v1.11.2


தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போக பிடிக்காம இங்கயே இருக்கிறதுன்னு முடிவு பண்ணி இருந்தேன். ஆனால் தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு அக்கா அழைத்து நன்றாக அர்ச்சனை செய்ததாலும் 2 அக்கா குடும்பங்கள் அண்ணன் மற்றும் சித்தப்பா குடும்பம் எல்லாம் ஊருக்கு வந்திருப்பதால் எங்க வீட்டு செல்லங்களை எல்லாம் பார்த்து சில மாதங்கள்/ஆண்டுகள் ஆனதாலும்.. நாமதான் அவர்கள் வீட்டிற்கு போறதில்ல.. அவர்கள் வரும் போதும் பார்க்காமல்இருப்ப்து சரியல்ல என்று நினைத்ததாலும் தீபாவளி அன்று காலை ஊருக்கு கிளம்பி மாலையே கோவை வந்துவிட்டேன். வரும் போது எங்கம்மா பாதி பை நிரப்பி சில பல பலகாரங்கள் வச்சிட்டாங்க.. அதிரசம், இனிப்பு பூந்தி போன்றவை.... அவ்வளவையும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.. மொரப்பூருக்கு அடுத்த ரயில் நிலையமான பொம்மிடியில் தலை தீபாவளி முடித்துவிட்டு என் நண்பன் ரயில் ஏறினான். நான் முன்பதிவு செய்யாமல் அமர்ந்த இடம் தான் அவன் முன் பதிவு செய்து வைத்திருந்த இடம்..:). எதிரில் இருந்த சீட் காலியாக இருந்ததால் அவர்களை அங்கே உட்கார சொல்லிவிட்டேன். நண்பனின் மனைவி எங்கள் பள்ளி ஜூனியர்.அவர்கள் வீட்டில் குடுத்துவிட்ட பலகாரங்களை எடுத்து அண்ணா இதை வச்சிக்கோங்க.. அதை வச்சிக்கோங்கன்னு ஒரே அன்புத் தொல்லை.. எல்லாத்தையும் உன் ஊட்டுக்காரனுக்கு குடு .. ஆளை விடு என்று தப்பித்தேன்.சிலதை என் பையில் போட பார்த்தார்கள். ஹிஹி.. விடுவோமா.. நான் கொண்டு வந்ததை எல்லாம் அப்படியே சிந்தாமல் சிதறாமல் அவர்கள் பையில் திணித்துவிட்டு எஸ் ஆகிவிட்டேன்.


^^^^^

என் அக்கா ஒரு அறுந்த வாலை பெத்து வைத்திருக்கிறாள்.2 வயது தான் ஆகிறது. இந்த காலத்து குழந்தைகளுக்கு யார் தான் இப்படி பேசக் கத்துக் குடுத்தாங்களோ.. வாய் ஓயாம பேசிட்டே இருக்கா. நான் சின்ன பையனா இருந்தப்போ என்னை சிரிக்க வைக்கவே பந்தயம் கட்டுவார்களாம். இப்போவும் ஊருக்கு போனா " ரெண்டு வார்த்தை பேசித்தான் பாருடா.. ஒன்னும் கொறஞ்சிடாது" என்று பெரியவங்க பலர் நக்கல் அடிப்பாங்க. "ஊர்ல" அவ்ளோ அடக்க ஒடுக்கம்.:).. ஆனா இப்போ இருக்கிற குட்டீஸ் வெளுத்து வாங்கறாங்க. பார்க்கும் எதற்கும் விளக்கம் கேட்கிறர்கள். இது என்ன ?அது என்ன? இது ஏன் இப்டி இருக்கு? அது ஏன் அப்டி இருக்கு? அப்பப்பா.. என்னா ஒரு சந்தேகம்.. என்னா ஒரு அறியும் ஆர்வம்?.. எல்லாம் சரி தான் .. அதை எல்லாம் என் அக்கா மகள் எப்படி என்னைக் கேட்கலாம்... அவளுக்கு விளக்கம் சொல்ல எனக்கு தெரியவில்லை என்பதையும் அன்று அவள் தெரிந்துக் கொண்டிருப்பாள். பிறகு அவள் அம்மாவிடம் கேட்டிருப்பாள்..
“ஏம்மா இப்படி இருக்கான்
உன் தம்பி
ஒன்னுமே தெரியாமல்....

அவளுக்கு விளக்கம்
தேவைப்படும் பட்டியலில்
இப்போதும் நானும்...”
..... அவள் என்னை அன்பொழுக அழைப்பது.. “ டேய் சஞ்சய்” :(

^^^^^

என்னடா இது வெங்காய வாழ்க்கை நகரத்தில்.. காசை தவிர பெறுவதற்கு வேறு ஒன்றுமே இல்லையா?.. கிராமத்தில் புதியதாய் ஒருவன் குடி புகுந்தால் பெரிசோ சிறுசோ நடத்தரமோ தானே வழியப் போய் அந்த புதிவனிடம் பேச்சுக் குடுப்பார்கள். சில நிமிடங்களில் அவன் அத்தனை விவரங்களும் பிரதி எடுக்கப் பட்டிருக்கும்.. அடுத்த சில நாட்களில் அந்தப் புதியவன் ஊரின் பழையவர்களில் ஒருவனாக நடத்தப் படுவான்/நடந்துக் கொள்வான். பாத்திர பண்டங்களும் பரிமாற ஆரம்பித்திருக்கும்...ஆனால் இங்கே நகரத்தில்...நான் இந்த தெருவில் குடிபுகுந்து ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டது. எங்க வீட்டு ஓனரைத் தவிர வேறு ஒரு பயலையும் எனக்குத் தெரியாது.வீட்டு ஓனர், வாடகை வாங்கியாகனுமே... இந்த காலிப்பையன் தன் வீட்டை ஒழுங்காய் பராமறிக்கிறானா என்று கண்காணித்தாகனுமே... நான் எவ்வளவு சினேகமாய் பார்த்தாலும் எல்லோரும் ஒருவித இறுக்கத்தோடே கடந்து செல்கிறார்கள்.. என் எதிர் வீட்டுக் குட்டி பாப்பாவைத் தவிர... அவள் மட்டுமே பார்க்கும் போதெல்லாம் புன்னகைக்கிறாள் ரொம்பவே அழகாக....

”எப்போதும்
மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும்...
எனக்கு மட்டும்
வெறிச்சோடியே தெரிகிறது
எங்கள் தெரு....”

டரியல் SMS :-
" நடிகர் விவேக் மு.க. ஸ்டாலின்னு போன் செய்கிறார்.
ஸ்டாலின் : ஹலோ..
விவேக் : முக.ஸ்டாலினா?
ஸ்டாலின் : ஆமாங்க..
விவேக் : சார் ஒரு டவுட்..
ஸ்டாலின் : கேளுங்க..
விவேக் : நீங்க வெறும் முக ஸ்டாலினா இல்ல நாக்க முக்க ஸ்டாலினா? “

டரியல் டயலாக் by Bill Gates:-
"Your most unhappy customers are your greatest source of learning.."

டரியல் of the week :-
கடைசி வரை பார்க்கவும்..

Tuesday, 11 November 2008

டேய்... பர்ஃபார்மன்ஸ் பண்ண உடுங்கடா...

ஈரோடு முதல் ஹோசூர் வரையிலான 6 மாவட்டங்களில் எங்கள் துறையில் அனைவருக்கும் நன்கு தெரிந்த நிறுவனமாக இருந்தாலும் கோவையைப் பொறுத்த வரையில் நாங்கள் அப்போது புதிது. அந்த மாவட்டங்களில் ராஜா என்பதை விட மகராஜா போல் தான் எங்களுக்கு மரியாதை இருக்கும். எந்த நிறுவனமாக இருந்தாலும் விநியோகம் செய்ய எங்களை அணுகிவிட்டு தான் பிறரை பார்ப்பார்கள். அந்த மிதப்பிலேயே இருந்த எங்களை ஒரு நிறுவனம் கோவையில் வியாபாரம் ஆரம்பிக்க வற்புறுத்தியது. அவர்கள் நச்சரிப்பாலும் ஈரோட்டு சாம்ராஜ்ய மிதப்பிலும் எதோ ஒரு தைரியத்தில் ஒரு இளிச்சவாயனின் தலைமையில் கோவையிலும் கால் பதித்தோம்..

அந்த இளிச்சவாயன் அதற்கு முன் இரு முறை மட்டுமே கோவை வந்திருக்கிறான். ஒரு முறை ஒரு நிறுவன முகவர்கள் சந்திப்பிற்கும் மற்றொரு முறை ஒருவர் திருமணத்திற்கும் மட்டுமே. ஆகவே அவனுக்கு கோவையில் அப்போது கிழக்கு மேற்கு கூட தெரியாது. ஆனாலும் ஒரு மாதம் பெரும் அலைச்சலுக்கு பின் அலுவலகமும் , சேமிப்புக் கிடங்கும் முடிவு செய்து குடி புகுந்தாயிற்று. ( அந்த நாட்கள் அனுபவத்தை 10 பதிவா போடலாம்..:) )

அடுத்து தான் ஆரம்பிச்சது சீனே.. :)

முதல் வேலையாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் டீலர்களை வளைச்சிப் போடனும். நாம் இங்கு புதிது என்பதாலும் நாங்கள் ஒப்பந்தம் போட்ட நிறுவனத் தயாரிப்புகளை அதற்கு முன் கோவை ஏரியாவில் விநியோகித்தவர்கள் சரியாக செயல்படாததாலும் எங்களுக்கு கடும் சவால்கள் காத்திருந்தது. சிறு மற்றும் நடுத்தர டீலர்கள் எங்கள் ஈரோட்டு புராணத்தை கேட்டதும் கொஞ்சம் பவ்யமாக நடந்துக் கொள்வார்கள். ஆனால் இந்த பெரிய டீலர்கள் இருக்கிறார்களே முதல் ஒரு மாதம் என்னை சாவடிச்சிட்டாங்க..

அந்த கால்ங்களில் பெரும்பாலான டீலர்களிடம் நான் பட்ட பாடு...

ஒவ்வொரு முறையும் வழக்கமான சம்பிரதாயமான பேச்சுகளுக்கு பின் ஆரம்பிப்பேன்..

[பச்ச கலரு - நானு
சேப்பு கலரு - டீலரு
கருப்பு கலரு - கடை ஸ்டாப் அல்லது கஸ்டமர்]


“இந்த மாடல் மத்த ப்ராண்ட் விட ரொம்பவே பெட்டர் சார்”

ம்ம்ம்... வேர்ல்பூல்ல இதே ரேஞ்ச்ல ஒன்னு இருக்கு

ஆமாம் சார்.. ஆனா அதுல ஹெல்த்கார்ட் இருக்காது.. அதும் இல்லாம

ஏம்ப்பா அந்த கஸ்டமர்க்கு ஓனிடால ப்ளாக் 200 காட்டு

ம்ம்.. சொல்லுங்க..”

அதை விட இதுல...”

“சார் அந்த கஸ்டமர் எல்ஜில சவுண்ட்மாஸ்டர் கேக்கறார்.. இப்போ அது நம்மகிட்ட ஸ்டாக் இல்லை”

டீலர் நம்ம ப்ராடக்ட் கேட்டலாக் எடுத்து பார்ப்பார்..

சார் அதுல லெஃப்ட் சைட்ல இருக்கு பாருங்க...

ப்ரகாஷ் சவுண்ட்மாஸ்டர் ஸ்டாக் இருக்கா.. அர்ஜெண்டா 5 செட் வேணுமே” - இது போன்ல..
பேசி முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணனும்...
பேசி முடிச்சிட்டார்..

ஆக்சுவலா இந்த மாடல் தான் இருக்கிறதுலயே ஃபாஸ்ட் மூ....

ஏம்ப்பா.. சவுண்ட் மாஸ்டர் நாளைக்குத் தான் வரும்.. சாம்சங்க்ல கே44 காட்டு..”

ஃபாஸ்ட் மூவிங் சார்..”

சார்.. உங்களுக்கு சவுண்ட் நல்லா வேணும்னா சான்சுய்ல ஹார்ட்ராக் பாருங்க.. அருமையா இருக்கும்.. வெலையும் கம்மி தான்..” ஒரு கஸ்டமரிடம்..

ம்ம்ம்.. என்ன சொன்னிங்க சஞ்சய்..?

வாஷிங் மெஷின்ல நம்மள்து ஃபைபர் ட்ரம் சார்.. மத்த ப்ராண்ட் மாதிரி ஸ்டீல்.....”

ஏம்ப்பா .. ஏன் அந்த ஃப்ரிட்ஜ் பார்த்த கஸ்டமர் வெளிய போறாங்க..?

“ சார் அவங்க வாங்கற மாதிரி தெரியலைங்க.. சும்மா வெலை விசாரிச்சிட்டு இருக்காங்க..”

அப்புறம் சஞ்சய்.. உங்க ப்ராண்ட்டுக்கு அவ்வளவா விளம்பரம் இல்லையே.. நாம் என்ன தான் கஸ்டமருக்கு எதுத்து சொன்னாலும் அவங்க கேக்கறது.........”

“ சொல்லுங்க.. என்ன வேணும்...”

“ ஏனுங்க.. போன வாரம் டிவி எடுத்துட்டு போனோம்.. புள்ளி புள்ளியா வருதுங்களே...”

கேபிள் பிரச்சனையா இருக்கும்.. பாருங்க..”

“ இல்லீங்க .. நாங்க டிஷ் ஆண்டனா போட்டிருக்கோம்..”

ஏம்பா குமாரு.. இவர் கிட்ட அட்ரஸ் வாங்கி வச்சிக்கோ.. அந்த கம்பனி சர்வீஸ் செண்டருக்கு போன் பண்ணி கம்ப்ளைண்ட் புக் பண்ணிடு..”

சர்விஸ் செண்டர்ல இருந்து ஆளுங்க வருவாங்க.. போய்ட்டு வாங்க...”

“ இவங்க டிஷ் சரியா ஃபிட் பண்ணி இருக்க மாட்டாங்க.. இருந்தாலும் டிவி தான் பிரச்சனைன்னு வந்துடுவாங்க.. என்ன பன்றது பாருங்க

கஸ்டமர் சாதாரனமா விட்டாலும் பக்கத்து வீட்டுக்காரன் வந்து பயமுறுத்துவான் சார்..

அது தான் இப்போ பெரிய பிரச்ச.....

“ ஏனுங்க.. அந்த கருப்புகலர் டிவி பாத்தேனுங்க.. வெல ரொம்ப ஜாஸ்தியா இருக்குதுங்களே.. மத்த கடைல எல்லாம் கம்மியா சொல்றாங்க...”- எனக்கு இடதோ வலதோ ஒருத்தன்..

அவரை சமாளித்து அனுப்பறார்..
இந்த மாடல்ல மட்டும் 5 செட் அனுப்பறேன் சார்.. அது எப்படி போகுதுனு பாருங்க.. அப்புறம் இன்னும் ஜாஸ்தி பண்ணலாம்.. 2 செட் போச்சின்னாலே உங்களுக்கும் ஒரு கான்ஃபிடண்ட் வரு........

ஹலோ.... ஆங்.. சொல்லுங்க சார்.. இல்லைங்க இப்போ எதும் வேணாம்.. இல்லைங்க.. சேல்ஸ் ரொம்ப டல்லா இருக்கு..
பேசி முடிச்சிட்டார்...

சொல்லுங்க சார். ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிங்கன்னா நானும் அப்டியே கெலம்பிடுவேன்.. சார் வேற ரொம்ப பிசியா இருக்.....

“சார்.. சர்வீஸ் செண்டர்ல இருந்து கால் பண்ணாங்க.. அந்த வாப்ப்பாறை கஸ்டமர்து பிக்சர் ட்யூப் கம்ப்ளைண்டாம்... வாரண்டிமுடிஞ்சி போச்சாம்.. ஃப்ரியா மாத்த முடியாதுன்னு சொல்றாங்க....”

அந்த 5 மட்டும் அனுப்ப.....

“ஏனுங்க.. ஒரு மாசம் தான் ட்யூ கட்டலை.. அதுக்கே.......

............டேய்........ பர்ஃபார்மன்ஸ் பண்ண உடுங்கடா.......... :(

..... இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சி ஒரு மாசத்துல கிட்டத் தட்ட எல்லா டீலர்கிட்டயும் ஆர்டர் எடுத்து எல்லாக் கடைகள்லயும் இடம் புடிச்சாச்சி.. அதை பார்த்த சாம்சங் நிறுவனம் அப்போ இருந்த டிஸ்ட்ரிப்யூட்டர் கிட்ட இருந்து பாதி மாடல்ஸ் பிரிச்சி எங்களுக்கு குடுத்துட்டாங்க... :) ..... இப்போல்லாம் கால் மேல கால் போட்டு தானே டீலர்ஸ் கிட்ட பேசுவோம்.. அதும் சில லேட் பேமண்ட் டீலர்ஸ் கிட்ட எல்லாம் ஒரே தாதா எஃபக்ட் தான்...:))

Tamiler This Week