இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday 12 November, 2008

டரியல் v1.11.2


தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போக பிடிக்காம இங்கயே இருக்கிறதுன்னு முடிவு பண்ணி இருந்தேன். ஆனால் தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு அக்கா அழைத்து நன்றாக அர்ச்சனை செய்ததாலும் 2 அக்கா குடும்பங்கள் அண்ணன் மற்றும் சித்தப்பா குடும்பம் எல்லாம் ஊருக்கு வந்திருப்பதால் எங்க வீட்டு செல்லங்களை எல்லாம் பார்த்து சில மாதங்கள்/ஆண்டுகள் ஆனதாலும்.. நாமதான் அவர்கள் வீட்டிற்கு போறதில்ல.. அவர்கள் வரும் போதும் பார்க்காமல்இருப்ப்து சரியல்ல என்று நினைத்ததாலும் தீபாவளி அன்று காலை ஊருக்கு கிளம்பி மாலையே கோவை வந்துவிட்டேன். வரும் போது எங்கம்மா பாதி பை நிரப்பி சில பல பலகாரங்கள் வச்சிட்டாங்க.. அதிரசம், இனிப்பு பூந்தி போன்றவை.... அவ்வளவையும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.. மொரப்பூருக்கு அடுத்த ரயில் நிலையமான பொம்மிடியில் தலை தீபாவளி முடித்துவிட்டு என் நண்பன் ரயில் ஏறினான். நான் முன்பதிவு செய்யாமல் அமர்ந்த இடம் தான் அவன் முன் பதிவு செய்து வைத்திருந்த இடம்..:). எதிரில் இருந்த சீட் காலியாக இருந்ததால் அவர்களை அங்கே உட்கார சொல்லிவிட்டேன். நண்பனின் மனைவி எங்கள் பள்ளி ஜூனியர்.அவர்கள் வீட்டில் குடுத்துவிட்ட பலகாரங்களை எடுத்து அண்ணா இதை வச்சிக்கோங்க.. அதை வச்சிக்கோங்கன்னு ஒரே அன்புத் தொல்லை.. எல்லாத்தையும் உன் ஊட்டுக்காரனுக்கு குடு .. ஆளை விடு என்று தப்பித்தேன்.சிலதை என் பையில் போட பார்த்தார்கள். ஹிஹி.. விடுவோமா.. நான் கொண்டு வந்ததை எல்லாம் அப்படியே சிந்தாமல் சிதறாமல் அவர்கள் பையில் திணித்துவிட்டு எஸ் ஆகிவிட்டேன்.


^^^^^

என் அக்கா ஒரு அறுந்த வாலை பெத்து வைத்திருக்கிறாள்.2 வயது தான் ஆகிறது. இந்த காலத்து குழந்தைகளுக்கு யார் தான் இப்படி பேசக் கத்துக் குடுத்தாங்களோ.. வாய் ஓயாம பேசிட்டே இருக்கா. நான் சின்ன பையனா இருந்தப்போ என்னை சிரிக்க வைக்கவே பந்தயம் கட்டுவார்களாம். இப்போவும் ஊருக்கு போனா " ரெண்டு வார்த்தை பேசித்தான் பாருடா.. ஒன்னும் கொறஞ்சிடாது" என்று பெரியவங்க பலர் நக்கல் அடிப்பாங்க. "ஊர்ல" அவ்ளோ அடக்க ஒடுக்கம்.:).. ஆனா இப்போ இருக்கிற குட்டீஸ் வெளுத்து வாங்கறாங்க. பார்க்கும் எதற்கும் விளக்கம் கேட்கிறர்கள். இது என்ன ?அது என்ன? இது ஏன் இப்டி இருக்கு? அது ஏன் அப்டி இருக்கு? அப்பப்பா.. என்னா ஒரு சந்தேகம்.. என்னா ஒரு அறியும் ஆர்வம்?.. எல்லாம் சரி தான் .. அதை எல்லாம் என் அக்கா மகள் எப்படி என்னைக் கேட்கலாம்... அவளுக்கு விளக்கம் சொல்ல எனக்கு தெரியவில்லை என்பதையும் அன்று அவள் தெரிந்துக் கொண்டிருப்பாள். பிறகு அவள் அம்மாவிடம் கேட்டிருப்பாள்..
“ஏம்மா இப்படி இருக்கான்
உன் தம்பி
ஒன்னுமே தெரியாமல்....

அவளுக்கு விளக்கம்
தேவைப்படும் பட்டியலில்
இப்போதும் நானும்...”
..... அவள் என்னை அன்பொழுக அழைப்பது.. “ டேய் சஞ்சய்” :(

^^^^^

என்னடா இது வெங்காய வாழ்க்கை நகரத்தில்.. காசை தவிர பெறுவதற்கு வேறு ஒன்றுமே இல்லையா?.. கிராமத்தில் புதியதாய் ஒருவன் குடி புகுந்தால் பெரிசோ சிறுசோ நடத்தரமோ தானே வழியப் போய் அந்த புதிவனிடம் பேச்சுக் குடுப்பார்கள். சில நிமிடங்களில் அவன் அத்தனை விவரங்களும் பிரதி எடுக்கப் பட்டிருக்கும்.. அடுத்த சில நாட்களில் அந்தப் புதியவன் ஊரின் பழையவர்களில் ஒருவனாக நடத்தப் படுவான்/நடந்துக் கொள்வான். பாத்திர பண்டங்களும் பரிமாற ஆரம்பித்திருக்கும்...ஆனால் இங்கே நகரத்தில்...நான் இந்த தெருவில் குடிபுகுந்து ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டது. எங்க வீட்டு ஓனரைத் தவிர வேறு ஒரு பயலையும் எனக்குத் தெரியாது.வீட்டு ஓனர், வாடகை வாங்கியாகனுமே... இந்த காலிப்பையன் தன் வீட்டை ஒழுங்காய் பராமறிக்கிறானா என்று கண்காணித்தாகனுமே... நான் எவ்வளவு சினேகமாய் பார்த்தாலும் எல்லோரும் ஒருவித இறுக்கத்தோடே கடந்து செல்கிறார்கள்.. என் எதிர் வீட்டுக் குட்டி பாப்பாவைத் தவிர... அவள் மட்டுமே பார்க்கும் போதெல்லாம் புன்னகைக்கிறாள் ரொம்பவே அழகாக....

”எப்போதும்
மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும்...
எனக்கு மட்டும்
வெறிச்சோடியே தெரிகிறது
எங்கள் தெரு....”

டரியல் SMS :-
" நடிகர் விவேக் மு.க. ஸ்டாலின்னு போன் செய்கிறார்.
ஸ்டாலின் : ஹலோ..
விவேக் : முக.ஸ்டாலினா?
ஸ்டாலின் : ஆமாங்க..
விவேக் : சார் ஒரு டவுட்..
ஸ்டாலின் : கேளுங்க..
விவேக் : நீங்க வெறும் முக ஸ்டாலினா இல்ல நாக்க முக்க ஸ்டாலினா? “

டரியல் டயலாக் by Bill Gates:-
"Your most unhappy customers are your greatest source of learning.."

டரியல் of the week :-
கடைசி வரை பார்க்கவும்..

51 Comments:

said...

1st???

said...

haiya naan dhaan parshtu.. oru chicken briyani parcel anupidunga sanjai :)))

said...

எச்சூஸ்மி அந்த கடைசி தெலுங்கு வீடியோ சூப்பர்.

ஆனால் அந்த வீடியோவை இதுக்கு முன்னாடித்த "டேய் பெர்பார்மன்ஸ் பண்ண விடுங்கடா" போஸ்ட்டில் போட்டிருந்திருக்க வேண்டும்.

said...

என்ன G3 கரெக்ட்தானே?

said...

சூப்பர் ஜார் !

வெரி நைஜ்!
அவுரு எவுரு நெச்ட்டு ஆந்திரா CM தானே?

:)

said...

நல்லா இருக்கு

said...

அந்த வீடியோவுல இருக்குற நடிகர் தான் ஆந்திராவின் விஜயகாந்தா?

said...

:)

said...

]
\“ஏம்மா இப்படி இருக்கான்
உன் தம்பி
ஒன்னுமே தெரியாமல்....
\

அது சரி...:)

said...

\
அவளுக்கு விளக்கம்
தேவைப்படும் பட்டியலில்
இப்போதும் நானும்...
\

அவளுக்கு மட்டுமா ...?! ;)

said...

ஆந்திராவின் விஜயகாந்த

said...

\\வரும் போது எங்கம்மா பாதி பை நிரப்பி சில பல பலகாரங்கள் வச்சிட்டாங்க.. அதிரசம், இனிப்பு பூந்தி போன்றவை.... அவ்வளவையும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே வந்தேன்\\

இனிமேல இப்படி எல்லாம் யோசிக்காதீங்க. அப்படியே ரெண்டு ஸ்டாப் தள்ளி எங்க காலேஜ்க்கு வாங்க. நாங்க அதையெல்லாம் என்ன செய்யறதுன்னு யோசிச்சிகிறோம்

said...

”எப்போதும்
மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும்...
எனக்கு மட்டும்
வெறிச்சோடியே தெரிகிறது
எங்கள் தெரு....”


எப்ப இருந்து இந்த மாதிரி ஃஃபீலீங் கவிதையெல்லாம்
எனக்கு ஒண்ணுமே புரியலை

said...

பிறகு அவள் அம்மாவிடம் கேட்டிருப்பாள்..

ஏம்மா இப்படி இருக்கான்
உன் தம்பி
ஒன்னுமே தெரியாமல்....

அவளுக்கு விளக்கம்
தேவைப்படும் பட்டியலில்
இப்போதும் நானும்...”
..... அவள் என்னை அன்பொழுக அழைப்பது.. “ டேய் சஞ்சய்” :(//



:))))))))))))))))))))))))

said...

குழந்தைங்க நம்மளை டி, டா எல்லாம் போட்டு கூப்பிட்டா நம்மளை ரொம்ப நெருக்கமா நினைக்கிறாங்கன்னு அர்த்தம். அதனால இதுக்கு எல்லாம் :( இந்த மாதிரி போடாம :) இப்படி போட்டு ப‌ழ‌குங்க‌.

said...

//பார்க்கும் எதற்கும் விளக்கம் கேட்கிறர்கள். இது என்ன ?அது என்ன? இது ஏன் இப்டி இருக்கு? அது ஏன் அப்டி இருக்கு? //

உங்க தலைய பற்றி வியந்து போய் கேட்டதுக்காக இப்படி எல்லாம் குழந்தய திட்டலாமா மாம்ஸ்!

கிரவுண்டு சும்மா தானே இருக்கு அடுத்த கிரிக்கெட் சீரியஸ் அங்க நடத்தலாமா என்று கேட்டதாக சொன்னீங்களே அந்த பொண்ணா இது?:)))

said...

நடந்துக் கொள்வான். பாத்திர பண்டங்களும் பரிமாற ஆரம்பித்திருக்கும்...ஆனால் இங்கே நகரத்தில்...நான் இந்த தெருவில் குடிபுகுந்து ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டது. //

ஒருத்தரும் உங்களுக்கு பழய சோறு கூட போடல அதானே உங்க வருத்தம்
:( ஈரோடு போங்க அங்க ஒரு நல்லவர்
இருக்கார் கார்டன் ஹோட்டல் அழைச்சுக்கிட்டு போய் சாப்பாடு வாங்கி கொடுப்பார்.
(வீட்டில் சாப்பிட்டால் மரணத்தை அருகில் தரிசனம் செய்துவிட்டு வரலாம்)

said...

//நான் எவ்வளவு சினேகமாய் பார்த்தாலும் எல்லோரும் ஒருவித இறுக்கத்தோடே கடந்து செல்கிறார்கள்//

உங்க முகத்தில் தெரியும் ”ராஜ கலை” அப்படி!!!

ஆங் பார்க்கிற பார்வை அப்படி! வெளியே வரும் பொழுது எல்லோரும் போர்வைய போத்திக்கிட்டுதானே வெளியே வருகிறார்களாம்!

said...

//”எப்போதும்
மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும்...
எனக்கு மட்டும்
வெறிச்சோடியே தெரிகிறது
எங்கள் தெரு....”//

மாம்ஸ் மாலை 6 மணிக்கு மேல் அப்படி தெரிஞ்சா அதுக்கு பேரு மாலை கண் நோய்!!!

said...

ஆமா.. G3.. நீங்க தான் பஸ்ட்டு.. :)

சிக்கன் பிரியாணியா.. அதெல்லாம் புதுப் பொண்ணு காயத்ரி வாங்கித் தருவா. :))

said...

// நந்து f/o நிலா said...

எச்சூஸ்மி அந்த கடைசி தெலுங்கு வீடியோ சூப்பர்.//
ஹிஹி.. டேங்ஸ் :)

//நந்து f/o நிலா said...

என்ன G3 கரெக்ட்தானே?//

ஒரு குருப்பாத் தான் சுத்திட்டு இருக்கிங்களோ? :(

said...

//Pondy-Barani said...

சூப்பர் ஜார் !

வெரி நைஜ்!
அவுரு எவுரு நெச்ட்டு ஆந்திரா CM தானே?

:)//

நன்றி பரணி :)
அவர்மட்டுமா நெஸ்டு சிஎம்மு? :))

said...

//வால்பையன் said...

அந்த வீடியோவுல இருக்குற நடிகர் தான் ஆந்திராவின் விஜயகாந்தா?//

ஆமாம் வால்.. அவரை ஆந்திராவின் கேப்டன் என்று தான் சொல்கிறார்கள். :))

said...

// தமிழன்...(கறுப்பி...) said...

\
அவளுக்கு விளக்கம்
தேவைப்படும் பட்டியலில்
இப்போதும் நானும்...
\

அவளுக்கு மட்டுமா ...?! ;)//
தோடா.. வேற யாருக்கெல்லாம் தேவையாம்?
நல்லா கெலப்பறாங்கயய பொரளிய.. :(
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

said...

//Busy said...

ஆந்திராவின் விஜயகாந்த//

ஆமாம் பிசி :)

said...

//தாரணி பிரியா said...
இனிமேல இப்படி எல்லாம் யோசிக்காதீங்க. அப்படியே ரெண்டு ஸ்டாப் தள்ளி எங்க காலேஜ்க்கு வாங்க. நாங்க அதையெல்லாம் என்ன செய்யறதுன்னு யோசிச்சிகிறோம்//

ஊட்டுக்கு கூப்டு ஒரு வேளை சோறு போட முடியலை.. பலகாரம் வேணுமாம்ல பலகாரம்.. :))

said...

//தாரணி பிரியா said...

எப்ப இருந்து இந்த மாதிரி ஃஃபீலீங் கவிதையெல்லாம்
எனக்கு ஒண்ணுமே புரியலை//

எனக்கு மட்டும் புரிஞ்ச மாதிரி பேசறிங்க.. :))

ஹய்யோ.. ஹய்யோ... :)))

said...

//தாரணி பிரியா said...

குழந்தைங்க நம்மளை டி, டா எல்லாம் போட்டு கூப்பிட்டா நம்மளை ரொம்ப நெருக்கமா நினைக்கிறாங்கன்னு அர்த்தம். அதனால இதுக்கு எல்லாம் :( இந்த மாதிரி போடாம :) இப்படி போட்டு ப‌ழ‌குங்க‌.//
அது சரி.. நான் பாதியை தான் சொல்லி இருக்கேன்.. பாதியை சென்சார் பண்ணிட்டேன்.. :))

said...

// குசும்பன் said...
ஒருத்தரும் உங்களுக்கு பழய சோறு கூட போடல அதானே உங்க வருத்தம்//

என் கஷ்டத்த நீங்க தான் மாமா புரிஞ்சிகிட்டிங்க.. :((

// :( ஈரோடு போங்க அங்க ஒரு நல்லவர்
இருக்கார் கார்டன் ஹோட்டல் அழைச்சுக்கிட்டு போய் சாப்பாடு வாங்கி கொடுப்பார்.//

நாங்க எல்லாம் ரங்கீலா பார்ட்டிங்க.. பிசாத்து பவிழம் எல்லாம் போக மாட்டோம்.. அதெல்லாம் உங்கள மாதிரி டிடர்ஜண்டு பார்ட்டிங்கள இட்டுன்னு போறதுக்கு தான்.. :))

// (வீட்டில் சாப்பிட்டால் மரணத்தை அருகில் தரிசனம் செய்துவிட்டு வரலாம்)//

ச்ச..ச்ச.. சசி அக்கா உருளகிழங்கு குழம்பு, கோதுமை ரசம், பருப்பு தோசை, அரிசிமாவு சப்பாத்தி எல்லாம் நல்லா செய்வாங்க.. :))

said...

// குசும்பன் said...

//நான் எவ்வளவு சினேகமாய் பார்த்தாலும் எல்லோரும் ஒருவித இறுக்கத்தோடே கடந்து செல்கிறார்கள்//

உங்க முகத்தில் தெரியும் ”ராஜ கலை” அப்படி!!!
//

ஓய்.. கொழுப்பா..

// ஆங் பார்க்கிற பார்வை அப்படி! வெளியே வரும் பொழுது எல்லோரும் போர்வைய போத்திக்கிட்டுதானே வெளியே வருகிறார்களாம்!//

பொறாமை புடிச்ச மாமன்.. :))

said...

// குசும்பன் said...

//”எப்போதும்
மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும்...
எனக்கு மட்டும்
வெறிச்சோடியே தெரிகிறது
எங்கள் தெரு....”//

மாம்ஸ் மாலை 6 மணிக்கு மேல் அப்படி தெரிஞ்சா அதுக்கு பேரு மாலை கண் நோய்!!!//

தோடா.. கண்டுபிடிப்பு முருகேசன்.. :))

said...

பொடியன்-|-SanJai said...
// குசும்பன் said...

//”எப்போதும்
மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும்...
எனக்கு மட்டும்
வெறிச்சோடியே தெரிகிறது
எங்கள் தெரு....”//

மாம்ஸ் மாலை 6 மணிக்கு மேல் அப்படி தெரிஞ்சா அதுக்கு பேரு மாலை கண் நோய்!!!//

தோடா.. கண்டுபிடிப்பு முருகேசன்.. :))

ஹா,ஹா,ஹா

said...

சூப்பரப்பு,

அக்கா மகள் உங்களை பொடியனாக்குனதுக்கு வாழ்த்துக்கள்:))

said...

//விலெகா said...

சூப்பரப்பு,

அக்கா மகள் உங்களை பொடியனாக்குனதுக்கு வாழ்த்துக்கள்:))//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

said...

ஓ! இது தான் டரியலா???? வந்துட்டோம்ல

said...

//அவள் என்னை அன்பொழுக அழைப்பது.. “ டேய் சஞ்சய்” :(//

ஹி ஹி ஹி

Anonymous said...

//என் அக்கா ஒரு அறுந்த வாலை பெத்து வைத்திருக்கிறாள்//
அவகிட்ட கேக்கறேன் யார் அறுந்த வாலுன்னு

said...

\\ Sanjai said ஊட்டுக்கு கூப்டு ஒரு வேளை சோறு போட முடியலை.. பலகாரம் வேணுமாம்ல பலகாரம்.. :))//


இதைத்தான் நம்முரூல சொ.செ.சூ.வெ.அப்படின்னு சொல்லுவாங்க. விதி விட்டா போகும் இந்த சன்டே வாங்க. புதுசா ஒரு சமையல் டிரை பண்ணப்போறேன். சாப்பிட ஆள் வேணுமில்ல.

said...

தீபாவளி பட்சணக் கதைய நம்ப முடியலயே:):):)

said...

ஆஹா பேச்சப்பாரு, தீபாவளி பட்சணத்தை கொடுத்தா அதை மதிச்சு எடுத்துக்கிட்டு கூட போக மாட்டாராம், ஆனா இவர வீட்டுக்கு கூப்டு சாப்பாடு போடணுமாம்:):):)

said...

அந்தக் குழந்தை தெய்வீக அருள் பெற்ற குழந்தைங்க, எவ்ளோ அறிவு தெளிவு இந்த வயசுலயே பாருங்க:):):)

said...

பாலகிருஷ்ணாக்கே இப்படியா, நீங்கல்லாம் ஜூனியர் என்டிஆர், மோகன்பாபு படமெல்லாம் பார்த்ததில்லையா? அண்டசராசர நாயகனுக்கே டப் டெர்ரர் கொடுப்பாங்க:):):)

said...

//பிரேம்குமார் said...

ஓ! இது தான் டரியலா???? வந்துட்டோம்ல//
வாங்க ப்ரேம்.. ரொம்ப நன்றி.. :)

said...

// சின்ன அம்மிணி said...

//என் அக்கா ஒரு அறுந்த வாலை பெத்து வைத்திருக்கிறாள்//
அவகிட்ட கேக்கறேன் யார் அறுந்த வாலுன்னு//

அக்கா பொண்ணுதான்னு பார்த்தா அக்காவும் அப்டி தான் இருக்காங்க.. நான் ரொம்ப சமத்து பையன்க்கா.. :)

said...

//இதைத்தான் நம்முரூல சொ.செ.சூ.வெ.அப்படின்னு சொல்லுவாங்க. விதி விட்டா போகும் இந்த சன்டே வாங்க. புதுசா ஒரு சமையல் டிரை பண்ணப்போறேன். சாப்பிட ஆள் வேணுமில்ல.//

இதை படிச்சதுக்கே எனக்கு ஒடம்பு சரி இல்லாம போச்சி.. வந்து சாப்ட்டா அவ்ளோ தான்... :((

said...

// rapp said...

தீபாவளி பட்சணக் கதைய நம்ப முடியலயே:):):)//
அட 100% நிஜம்ங்க.. எதையும் வச்சிருந்து சாப்டறது எல்லாம் எனக்கு பிடிககாது.. பார்த்ததும் ஸ்வாகா பண்ணியாகனும்.. :)

அதுக்காக இப்படி மூட்டை கட்டி குடுத்தா என்ன பன்றது? அதான் குடுத்துட்டேன்.. :)

said...

// rapp said...

அந்தக் குழந்தை தெய்வீக அருள் பெற்ற குழந்தைங்க, எவ்ளோ அறிவு தெளிவு இந்த வயசுலயே பாருங்க:):)://

வேணாம்..வலிக்கிது.. அழுதுடுவேன்.. :((

said...

//rapp said...

பாலகிருஷ்ணாக்கே இப்படியா, நீங்கல்லாம் ஜூனியர் என்டிஆர், மோகன்பாபு படமெல்லாம் பார்த்ததில்லையா? அண்டசராசர நாயகனுக்கே டப் டெர்ரர் கொடுப்பாங்க:):):)//

அவங்களுக்கும் டரியல்ல துண்டு போட்டு வச்சிருக்கோம்.. :))

said...

/
“ஏம்மா இப்படி இருக்கான்
உன் தம்பி
ஒன்னுமே தெரியாமல்....
/

புத்திசாலி பொண்ணு!!

said...

செம டரியல் இந்த வாரம் சஞ்சய்.. அந்த ரெயில்வே ஸ்டேஷன் ஃபோட்டோ சூப்பர். அருமையா இருக்கு.

said...

Me the 50... :))))

Tamiler This Week