இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday, 6 December 2008

அவளும் நானும் அருகருகே..

கவிதாயினி கல்யாணத்துக்கு போய்ட்டு சித்தார்த்தை நினைச்சிட்டு மனக்கண்ணீர் ( மனக்கண் இருக்கும் போது மனக்கண்ணீர் இருக்காதா? ) விட்டுட்டே பஸ்ல ஏறி உட்கார இடம் தேடினேன்.

காட்சி 1


”சார் முன்னாடி இடம் இருக்கு போங்க..” - கண்டக்டர்.

முன் பகுதியில் இருவர் சீட்டில் ஒரு அழகான பெண்ணும் வலது பக்கம் மூவர் இருக்கையில் 2 பெரிய அம்மாக்களும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அழகான பெண்ணிடம் “ எச்சுச் மீ.. அந்த சீட்ல உட்காந்த்துக்க முடியுமா? நான் இதுல உக்காந்துப்பேனே..”

மகா கேவலமா என்னை ஒரு பார்வை பார்த்தவாறே “ இல்ல.. என்னால அங்க போக முடியாது.. முன்னாடி இடம் இருக்கு பாருங்க..”

அந்த அம்மணி கை காட்டிய இடம்.. இஞ்சினுக்கு இடது புறம் இருக்கும் டூல்பாக்ஸ் வைக்கிற இடம்.. வெயில் கொளுத்துகிறது... அங்க உக்காந்தா இப்போ இருக்கிற பாதி கருப்பு போய் முழு கருப்பாகிடுவேன்..
ஹ்ம்ம்ம்.. யாரு பெத்த புள்ளயோ.. இம்புட்டு நல்லவளா இருக்காளே.. எல்லாம் ரொம்ப அழகா இருக்கிற திமிரு..

பரவால்ல.. பக்கத்துல உக்காருங்கன்னு சொன்னா என்ன கொறைஞ்சிடுவ.. அது சரி.. நாமளே இவ்ளோ அழகான பொண்ணு பக்கத்துல உக்கார ஆசைபடும் போது, அவ இன்னும் அழகான பையன தான பக்கத்துல உட்கார வைக்க ஆசைபடுவா.. உண்மையின் கசப்பை சுவைத்துக் கொண்டே வலதுபுறம் இருந்த பெரியம்மாக்கள் பக்கத்தில் இடம் கேட்டு உட்கார்ந்தேன்...

சிறிது நேரத்தில் அந்த பெண் அருகில் வேறொரு பெண் வந்து அமர்கிறார்..

அடிக்கடி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் கவனித்திருக்கலாம்.. எங்குமே இடம் இல்லாமல் எதாவது ஒரு இளம்பெண் பக்கத்தில் இடம் இருந்தால் தைரியமாக அங்கு உட்காரலாம். ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.. ஆனால் அப்படி ஒரு பெரிய அம்மா பக்கத்தில் உட்கார்ந்தால் அவ்ளோ தான்..

“ ஏன் தம்பி.. இந்த பஸ்ல இடம் இல்லைனா அடுத்த பஸ்ல வரலாம் இல்ல.. பொம்பளைங்க பக்கத்துல எல்லாம் ஏன் உட்கார்றிங்க”ன்னு கேப்பாங்க...
கொய்யால அப்டியே தூக்கி போட்டு மிதிக்கலாம்னு இருக்கும்.. எதோ நம்ம மூஞ்சிய பார்த்து தான் இப்டி சொல்றாங்கன்னு ஆரம்பத்துல நினைச்சிப்பேன்.. ஆனா ரொம்ப நல்ல புள்ளயாட்டம் இருக்கிற பல பசங்களுக்கும் இதே நிலை தான்.. பல முறை பார்த்திருக்கேன்..

பஸ்ஸில் கேவலமான பாடல்களை போட்டு சாவடிச்சார் ட்ரைவர்.. கண்டக்டர் அண்ணாச்சியை அழைத்து சத்தம் குறைவாக வைக்க சொல்லிவிட்டு என் மொபைலில் இருக்கும் இசையராசா பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன்..

காட்சி 2

எல்லாம் ரொமாண்டிக் பாடல்களா இருக்கு.. யார்கிட்டயாச்சும் கடலையை ஆரம்பிக்கனுமே.. இப்போ யார் வெட்டியா இருப்பாங்க.. புது ஆன்லைன் தோஸ்த் அபர்ணாகிட்ட நம்ம குலத்தொழிலான மொபைல் சாட் ஆரம்பிக்கலாம்.. இந்த கோயம்புத்தூர் குசும்பி தான் நல்லா ரகளை பண்ணுவா...

“ ஹாய் அபு.. எப்டி இருக்க? என்ன பண்ணிட்டு இருக்க?..”

"ஹாய் சஞ்சய்.. நல்லா இருக்கேன்.. நீங்க எப்டி இருக்கிங்க? நான் பஸ்ல ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன்..”

”வாவ்.. சேம் பின்ச்( கொய்யால் இதுகெல்லாமா கிள்ளிப்பாங்க). நானும் பஸ்ல தான் ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன்..”

“ஓ.. அப்டியா? நான் ஈரோட்ல ஃப்ரண்ட் கல்யாணத்துக்கு போய்ட்டு இப்போ கோவை போய்ட்டு இருக்கேன்.. நீங்க? “

“ ஆஹா.. என்ன கொடுமை அபு இது?.. நானும் ஈரோட்ல என் ஃப்ரண்ட் கல்யாணத்துக்கு போய்ட்டு இப்போ தான் கோவை போய்ட்டு இருக்கேன் “

“ஹே.. பொய் சொல்லாதிங்க.. “

“அட நிஜமா தான் அபர்ணா.. இப்போ நான் போற பஸ் பெருந்துறை தாண்டி இருக்கு..”

“ஹய்யோ.. நான் போற பஸ்ஸும் இப்போ தான் பெருந்துறை க்ராஸ் பண்ணுது”

”அடப்பாவி.. நீ எந்த பஸ்ல இருக்க? ஒருவேளை 2 பேரும் ஒரே பஸ்ல இருக்கப் போறோம் ..:) “

“ இது 1 டூ 5 சர்வீஸ் பஸ்.. “

“இந்த பஸ்ஸும் 1-5 சர்வீஸ் தான்.. ட்ரைவர் சீட்க்கு புன்னாடி பஸ் நம்பர் இருக்கும் பாத்து சொல்லு.. இந்த பஸ் நம்பர் TN38 AQ 8314..”

" OMG.. நானும் இந்த பஸ்ல தான் இருக்கேன்.. நீங்க எங்க இருக்கிங்க? “

“ட்ரைவர் சீட்க்கு பின்னாடி.. 3 பேர் உட்காரும் சீட்”

“நான் உங்களை பார்த்துட்டேன்.. நான் கண்டக்டர் சீட்க்கு பின்னாடி.. 2 பேர் உட்காரும் சீட்.. லெஃப்ட்ல திரும்பிப்பாருங்க.. :)”

பார்த்து சிரித்துக் கொள்கிறோம்.. அபர்ணா அவள் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் எதோ சொல்கிறாள்.. அந்த பெண் எழுந்து என் அருகில் வந்து...

“ நான் இங்க உட்கார்ந்த்துக்கிறேன்.. நீங்க அங்க போய்டுங்க..” என்கிறார்..

.............இப்போது நானும் அபர்ணாவும்..அதாவது அந்த திமிர் பிடிச்ச அழகு தேவைதையும் அருகருகில்... :)




காட்சி 1 : நடந்தது...
காட்சி 2: நடந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்ல.. :))

38 Comments:

Sanjai Gandhi said...

ஆசை இருக்கு தாசில்பண்ண..
அதிர்ஷ்டம் இருக்கு...............

On behalf of
துளசிடீச்சர் :)

நிஜமா நல்லவன் said...

அடப்பாவி நான் ஏன் நிஜம்னு நினைச்சுகிட்டே படிச்சேன்....:(

நிஜமா நல்லவன் said...

ஆனாலும் நடந்ததை விட நடக்காதது தான் நல்லா இருக்குல்ல...:)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

காட்சி 1 : நடந்தது...
காட்சி 2: நடந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்ல.. :))
//////////////////////////////



ம்ஹூம், நமக்கு ஸ்கூல்ல இருந்தே இப்படித்தான். நடந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்ல.. :))

ச.பிரேம்குமார் said...

//காட்சி 1 : நடந்தது...
காட்சி 2: நடந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்ல.. :)) //

உஸ்ஸ்ஸ்ஸ்..... இப்பவே கண்ணக் கட்டுதே

Poornima Saravana kumar said...

அடபாவிங்களா!!!!!!!!!

Poornima Saravana kumar said...

நடக்காதத்துக்கே இவ்ளோ பில்ட் அப்பா?
அப்போ நடந்திருந்தா????????????????

Vidya Poshak said...

Keep Dreaming, If you aim for Star you might end up getting a Moon... iimsai

Unknown said...

நெனைச்சேன் இதுல ஏதோ உள் குத்து இருக்கனுமேன்னு!

cheena (சீனா) said...

நடந்தது நல்லதாகவே நடந்தது
நடவாதது நல்லதாகவே நடக்க நல்வாழ்த்துகள்

கோவைக்குசும்பு அபு பாவம்

Anonymous said...

ஒரு அழகிய தமிழ்மகனுக்கு இப்படி ஒரு சோதனையா??
என்ன கொடுமை இது :)))

துளசி கோபால் said...

டீச்சர் மனசை இவ்வளோ துல்லியமா அளந்த மாணவருக்குப் 'போடு கிரேஸ் மார்க் ஒரு அஞ்சு':-)))

அன்புடன் அருணா said...

இது பின் நவீனத்த்துவக் கதையா ??? முன் நவீனத்துவக் கவிதையா சஞ்சய்???
என்னப்பா இது சஞ்சய்க்கு வந்த சோதனை???
அன்புஅன் அருணா

Anonymous said...

//நாமளே இவ்ளோ அழகான பொண்ணு பக்கத்துல உக்கார ஆசைபடும் போது, அவ இன்னும் அழகான பையன தான பக்கத்துல உட்கார வைக்க ஆசைபடுவா..//

அது சரி.

சென்ஷி said...

:))

நான் சத்தியமா எதிர்ப்பார்க்கல.. ஆனாலும் நடந்திருந்தா நல்லாயிருந்திருக்குமில்ல..

ஆசை இருக்கு அட்வைஸ் பண்ண...
அதிர்ஷ்டம் இருக்கு..... :))

தாரணி பிரியா said...

என் பங்குக்கு நானும் ஒரு பழமொழி சொல்லுக்கிறேன்.

"ஆட்டுக்கு வாலை ..............."

:)

Blanks fill பண்ணிங்கோங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) இது நல்லாருக்கே..

Sateesh said...

ஆச யார விட்டுச்சு... :)

விஜய் ஆனந்த் said...

:-)))...

நல்லா கெளப்புறாங்கய்யா பொரளிய...

கப்பி | Kappi said...

:))

மங்களூர் சிவா said...

/
பொடியன்-|-SanJai said...

ஆசை இருக்கு தாசில்பண்ண..
அதிர்ஷ்டம் இருக்கு...............

On behalf of
துளசிடீச்சர் :)
/


ப்ரேக் தி ரூல்

இந்த பழமொழி எல்லாம் மாத்துங்க
"ஆசை இருக்கு
எருமை மேய்க்க
அதிர்ஷ்டம் இருக்கு கலெக்டராக"-ன்னு

துளசி கோபால் said...

ஆளாளுக்குப் பழமொழின்னு ஆகிப்போச்சே......

இப்படி வச்சுக்கலாம்.

'அவலை ( அவளை) நினைச்சு உரலை இடிச்சக் கதையால்ல இருக்கு'


oops. ஸ்மைலி போட மறந்துட்டேனே

Anonymous said...

நடந்திருந்தா நல்லாதான் இருக்கும்.

துளசி டீச்சர் சொன்னதை வழிமொழிகிறேன்

Anonymous said...

// நிஜமா நல்லவன் said...
அடப்பாவி நான் ஏன் நிஜம்னு நினைச்சுகிட்டே படிச்சேன்....:(
//

அம்புட்டு நல்லவரா நீங்க

Vidhya Chandrasekaran said...

me the 25th:)

Karthik said...

காட்சி 1 : நடந்தது...
காட்சி 2: நடந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்ல.. :))

naa nambhi padhiciten baasu.. sandegam vera nambha frnd APARNAA thaan annatha frndoo??? neenga PODIYAn illa KADIYAN....

//ஆனால் அப்படி ஒரு பெரிய அம்மா பக்கத்தில் உட்கார்ந்தால் அவ்ளோ தான்..//

ivanga tholla thaanga mudiyaadu pa.. anaikku coll poithu bus la last seat periya row magalir seat la neraya aambalainga irundaanga.. naa ukanthutu vanden... appo oru ammani vandu elunduga sonnanga... naa mudiyaadu nu solliten.. Irakkam illadavan.. urupadunaa saabam vithuchu...

naa udane "INGA PAARUNGA... ADHO ANGA AMBALA SEAT LA 5 AKKA IRUKAANGA.. AVANGA EN SEAT LA IRUKAANGA.. NAA AVANGALODA SEAT LA IRUKEN.. VENUMNAA POI AVANGA KITA KATHUNGA!!!!"

Ambala seat la sogusa ukaaruvaanga.. Goyaala naama ukarntha sandaiku varuvaanga!!!

Karthik said...

Seri unmaiya sollunga.. Ungaluku unmaiyile aparnaa oru frnd irukaangala??

Poornima Saravana kumar said...

// சின்ன அம்மிணி said...
// நிஜமா நல்லவன் said...
அடப்பாவி நான் ஏன் நிஜம்னு நினைச்சுகிட்டே படிச்சேன்....:(
//

அம்புட்டு நல்லவரா நீங்க

//

??????

Karthik said...

//காட்சி 1 : நடந்தது...
காட்சி 2: நடந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்ல.. :))

OMG, ஏன் இந்த கொலைவெறி??
:)

Unknown said...

ஏய் பாவி அண்ணா உன்ன நம்பி ஒரு கல்யாணத்துக்கு அனுப்ப முடியலியே...:(( என்னமோ போ.. :))))))) இப்படியாவது ஒரு அண்ணி வரும்ன்னு பார்த்தா.. ம்ம்ம்ம்.. ;))))

ரசிகன் said...

ha..ha... nice one:)))

சுரேகா.. said...

ஒரு நிமிஷம் நடந்திருந்தா சுவாரஸ்யமா இருக்குமேன்னு தோணிச்சு!

சூப்பர்

KARTHIK said...

இதுவும் நல்லத்தான் இருக்குங்க.

எவனும் பொண்ணுகுடுக்கலைனா இப்படித்தான் நாம கனவு கண்டுகிட்டே இருக்கவேண்டியதுதான்.
விடுங்க டான்.
காட்சி 2 சீக்கிரம் நெனவாக வாழ்த்துக்கள்.

வ ம சங்கம்.
தலைமையகம்.
ஈரோடு.

Kumky said...

கார்த்திக் said...
இதுவும் நல்லத்தான் இருக்குங்க.

எவனும் பொண்ணுகுடுக்கலைனா இப்படித்தான் நாம கனவு கண்டுகிட்டே இருக்கவேண்டியதுதான்.
விடுங்க டான்.
காட்சி 2 சீக்கிரம் நெனவாக வாழ்த்துக்கள்.

வ ம சங்கம்.
தலைமையகம்.
ஈரோடு.

எதோ எல்லாரும் கலந்துபேசி சீக்கிறமா ஒரு முடிவு செஞ்சி எங்களையெல்லாம் காப்பாத்துங்க தேவுடா......

Sanjai Gandhi said...

நி.நல்லவர் :
1.அம்புட்டு நல்லவரா நீங்க? :)
2. என்னா ஒரு வில்லத் தனம்? :(
---------------
சுரேஷ் : நீங்களும் நம்ம ஜாதி தானா? :))
---------------
ப்ரேம்குமார் : எனக்கு கண்ண கட்டினதால வந்த கனவு தான் இது. உங்களுக்கும் கண்ண கட்டுதா? அப்போ உங்களுக்கும் இதே மாதிரி கனவு வரும். நீங்களும் பதிவு போடுங்க. :))
---------------
பூர்ணிக்கா( பூசணிக்கா இல்ல)
1. ஹிஹி
2.நடக்கலைனா தான் பில்டப்.. நடந்திருந்தா அப்டியே பிக்கப் பண்ணிட்டு கண்டினியூ பண்ணி இருந்திருப்பேன்.. இங்க வந்து டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன்.. :))
---------------
வெங்கி அண்ணா : உங்க அழிச்சாட்டியத்துக்கு ஒரு அளவே இல்லையா? பவன் எப்டி இருக்கான்?
---------------
தி : ஹிஹி.. எழுதறவனை பார்த்ததும் முடிவு பண்ணிட்டிங்களா? இவனுக்கெல்லாம் இப்டி நடக்காதுன்னு.. :))
---------------
சீனா சார் : ஹிஹி.. யாரு பெத்த புள்ளயோ அ(பு)து.. நல்லா இருக்கட்டும் :)
---------------
துர்க்கா : எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம் என் அருமை தங்கச்சி.. :(
---------------
துளசி ரீச்சர் : ரீச்சர் வெரும் 5 மார்க் தானா? கனவு பலிக்கட்டும்னு வாழ்த்த மாட்டிங்களா? :(
---------------
அறுணாக்கா: ஆமாம்க்கா.. உங்க தம்பிக்கு வந்த சோதனை பாருங்க.. காலம் கனவுலையே முடிஞ்சிடும் போல.. :)
---------------
வேலன் அண்ணாச்சி : ஹிஹி.. நன்றி :)
---------------
சென்ஷி : எழுதறது நான் தான்னு தெரிஞ்சுமா இத நம்பினிங்க? நீங்க ரொம்ப நல்லவருங்க..:))
---------------
தாரணி அக்கா : அம்மா சமையல்ல கொஞ்சம் எண்ணெய் கொறைச்சிக்க சொல்லுங்க.. கொழுப்பு ஜாஸ்தி ஆய்டிச்சி.. :))
---------------
முத்த்க்கா : நான் கனவு மட்டுமே கண்டுட்டு இருக்கிறது உங்களுக்கு நல்லா இருக்கா? அவ்வ்வ்வ்வ்வ்வ் :(
---------------
இத்யாதி : உங்களயும் விட்டு வைக்கலையா? அனுபவம் இருந்தா சொலுங்க சார்.. :))
---------------
விஜய் ஆனந்த் : பொரளி இல்லைப்பா.. இது பொலம்பல் :)
---------------
நன்றி கப்பி.. சிரிப்புக்கு அர்த்தம் என்னவோ? :)
---------------
மங்களூர் மாமா : கொஞ்சம் ஓவராத் தான் போறிங்க.. :)
---------------
துளசி டீச்சர் : என்னை அசிங்க படுத்தறதுன்னா மட்டும் உங்களுக்கு பழமொழி எங்க இருந்து தான் வருதோ? :)
---------------
சின்ன அம்மணி அக்கா: நீங்களும் டீச்சர் கூட கூட்டணியா? தண்டனையா 10 கூடை ஆஸ்திரேலியா ஆப்பிள் அனுப்பி வைங்க :)
---------------
25க்கு வாழ்த்துக்கள் வித்யா மம்மி :)
---------------
கார்த்திக் : தம்பி உன் ஃப்ரண்டு போன் நம்பரும் போட்டோவும் அனுப்பி வையி. உன் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறென். டேய் நிஜமா கோவைல உனக்கு அபர்ணான்னு ஃப்ரண்ட் இருக்காளா? நம்பர் குடுடா செல்லம் :))
---------------
//Seri unmaiya sollunga.. Ungaluku unmaiyile aparnaa oru frnd irukaangala??//

ஆனாலும் ஒரு மனுஷனுக்கு இம்புட்டு பயம் இருக்க கூடாதுடா தம்பி :)
-------------------
இலக்கியவாதி கார்த்திக் : எலலாம் ஒரு நப்பாசை தான் தல :))
-------------------
ஸ்ரீமதி : நானும் உன்னை ஒரு பெரிய மனுஷியா நெனச்சி பொண்ணு பாக்க சொன்னேன்.. பொறுபபா எதுனா பண்ணி இருக்கியா? அப்புறம் நான் இப்டி தான இருப்பேன். :)
-------------------
ரசிகன் மாம்ஸ் : நன்றி மாம்ஸ்.. என்னா மாமா ஆணி அவ்ளோ அதிகமா? இல்லை மங்களூரார் மாதிரி ஆஃப்லைன்ல செட்டில் ஆய்ட்டிங்களா? :))
-------------------
சுரேகா : உங்க வாய் முகூர்த்தம் பலிக்காமலா போய்டும்.. அப்போவும் சொல்றென்.. :)
-------------------
இலக்கியவாதி கார்த்திக் : அதென்ன வம சங்கம்? புதுசு புதுசா கிளம்பறாங்கய்யா :))
-------------------
வாங்க கும்க்கி : உங்க ஏரியா பையன்.. நீங்க தான் பார்த்து எதுனா பண்ணனும் :)

KARTHIK said...

//அதென்ன வம சங்கம்? புதுசு புதுசா கிளம்பறாங்கய்யா :))//

அதென்னங்க இலக்கியவாதி.எனக்கு சத்தியமா ஒரு வெங்காயமும் தெரியாதுங்க.

வாம=வரமட்டையர்சங்கம்

வழிப்போக்கன் said...

காட்சி 2: நடந்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்ல.. :))//

விதி யார விட்டுச்சு???
(ச்சும்மா ஜாலிக்கு..)

Kumky said...

அடப்பாவிங்களா.....
மெய்ல்ல பாலோ போட்டிருந்தா போன ஜென்மத்து பதிவுக்கு பின்னூட்டம் போட்டு அது இப்ப வந்து கொழப்பமாக்கீதே....

Tamiler This Week