இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday, 18 December 2008

Ajith Vs Vijay

நமக்கு தெரிஞ்ச வரையில் பார்த்தாலும் சிவாஜி - எம் ஜி ஆர், ரஜினி - கமல் என பெரும் ஜாம்பவான்கள் சம காலத்தில் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். எங்க தலைவரோட மெகா டிவியில மெல்லிசை மன்னர் எம் எஸ் வி அவர்களை பற்றிய சிறப்பு நகழ்ச்சிகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அதில் எம் எஸ் வி சொன்னார் “ எதோ ஒரு படத்தில் நடிக்க சிவாஜியை அனுகிய போது அதில் அண்ணன் ( எம் ஜி ஆர்) நடித்தால் நன்றாக இருக்குமே ”என்று ஆலோசனை தந்தாராம். அவர்களுக்குள் நடிப்பில் எவ்வளவோ போட்டிகள் இருந்திருக்கின்றன. ஆனால் அவர்களோ அவர்களின் ரசிகர்களோ ஒருவரை ஒருவர் அசிங்கப் படுத்தும் வசனங்களை தங்கள் படங்களிலோ ஊடகங்கள் வழியாகவோ பரப்பியதில்லை.

ஆனால் இந்த தகர டப்பா வாயனுங்க விசய்யி அசீத்து பேனுங்க தொல்லை தாங்களைடா சாமி.. அவனுங்க தான் அவனுங்க நடிக்கிற படத்துல ஒருத்தரை ஒருத்தர் தாக்கி வசனம் பேசறானுங்க.. இந்த ஈரு பேனுங்க அதை விட மோசம்.. அவனுங்க அழிச்சாட்டியத்தை பாருங்க..

விசய்யி பேனுங்க :

”சூர்யா வயிறு 6 பேக்ஸ்
விஷால் வயிறு 4 பேக்ஸ்
விஜய் வயிறு 2 பேக்ஸ்

அஜித் வயிறு ஃபேமிலி பேக்..

....Ajith Rockz....”

---------------

இது அசீத்து பேனுங்க SMS :

”Number of Remake films by Actors:

ரஜினி : 35 வருடங்களில் 6
கமல் : 46 வருடங்களில் 5
அஜித் : 16 வருடங்களில் 3

டாக்டர்.விஜய் : 14 வருடங்களில் 18

....Dr.Vijay Rockz.... “

-----------

இது பொதுவான டெம்ப்ளெட்.. பேரை மட்டும் மாத்தி போட்டு அனுப்பறானுங்க..

”கவுண்டமணி : ச்ச்சோ.... போன் எடுத்தா நச்சி நச்சின்றானுங்க.. எதோ அஜித் படமாம்.. அஜித் ரசிகனுங்களாலயே பாக்க முடியலையாம்.. என் ரசிகனுங்களை பாக்க சொல்றானுங்க.. அட இது பரவால்லைப்பா.. சோசியல் மேட்டர்.. பண்ணிக்கலாம்.. அஜித் சாங்ஸ் எல்லாம் ஹிட்டாக்க சொல்றானுங்க.. நான் என்ன அஜித் ரசிகனுங்க மாதிரி பொறம்போக்கா? ஒரே குஷ்டமப்பா.. சாரி.. கஷ்டமப்பா..

அஜித் : போன் வயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சி

கவுண்டமணி : இது செல் போன் டா

அஜித் : ஹ.. அரசியல்ல இதெல்லாம் சாதரனப்பா.. “

அஜித ரசிகர்கள் விஜய் பேரை போட்டு இதை அனுப்பறானுங்க.. :)

........ கைவசம் இருக்கும் அசீத்து விசைய்யி சோக்குகளை நீங்களும் பின்னூட்டுங்க சாமியோவ்வ்.. :).........

டக்ளஸ் அண்ணன் : உண்மையை சொல்லுங்க.. தலைப்பை பார்த்ததும் என்னவோ எதோன்னு டரியல் ஆகித் தானே வந்திங்க.. நீங்கள்ல்லாம் இன்னும் திருந்தலையா.. எங்க எவன் அடிச்சிப்பான்னு காத்துட்டு இருக்காங்கய்யா.. போங்கய்யா.. போய்.. புள்ள குட்டிங்களை படிக்க வைங்க.. நீங்க எல்லாம் எப்போ தான் சஞ்சய் மாதிரி நல்ல புள்ளயா ஆகப் போறிங்களோ... :)))

25 Comments:

Poornima Saravana kumar said...

me the 1st

Poornima Saravana kumar said...

ha ha
ho ho

Poornima Saravana kumar said...

படிச்சிட்டு வாரேன்

விஜய் ஆனந்த் said...

:-)))...

// நீங்க எல்லாம் எப்போ தான் சஞ்சய் மாதிரி நல்ல புள்ளயா ஆகப் போறிங்களோ... :))) //

அது சரி....

கார்க்கிபவா said...

//Number of Remake films by Actors:

ரஜினி : 35 வருடங்களில் 6
கமல் : 46 வருடங்களில் 5
அஜித் : 16 வருடங்களில் 3

டாக்டர்.விஜய் : 14 வருடங்களில் 1//

ரஜினி ஆறா? என்ன கொடுமை சரவணன்.. அவர் நடிச்சதுல 25% ரீமேக்தான்..

Mahesh said...

இந்த SMS தொல்லைகள் இன்னுமா முடியல?

Poornima Saravana kumar said...

ithellam oru polappa???????????????
ithaya vera me the 1st nu muthal aala comment pottutu patikkap poirukken......................
muthalla patichirunthanna ungala kallalaiye adichuk konniruppen................ ungalukku thaan vera vela vetty illama antha naatharingalap pathi pottu irukkinganna enakku enga pochu puthi.. title a paarthum patichirukken paarunga... che ithellam oru polappa............
................................
...................................
pongayya poi uruppatiyaa ethum nalla padam iruntha poip paarunga..

Anonymous said...

உண்மையை சொல்லுங்க, சஞ்சய் நிஜமாவே நல்ல பிள்ளையா :)

Anonymous said...

அஜித் - விஜய் சரி, இதுல சூர்யாவை யாரு கோத்துவிட்டது

Sanjai Gandhi said...

//ரஜினி ஆறா? என்ன கொடுமை சரவணன்.. அவர் நடிச்சதுல 25% ரீமேக்தான்..//

அப்டியா? :(

Sanjai Gandhi said...

//pongayya poi uruppatiyaa ethum nalla padam iruntha poip paarunga..//

என் இந்த ரத்த வெறி? :)

Sanjai Gandhi said...

// சின்ன அம்மிணி said...

உண்மையை சொல்லுங்க, சஞ்சய் நிஜமாவே நல்ல பிள்ளையா :)//

இப்டி திடீர்னு கேட்டா எப்டிக்கா? யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்ல.. :))

தாரணி பிரியா said...
This comment has been removed by the author.
Unknown said...

// நீங்க எல்லாம் எப்போ தான் சஞ்சய் மாதிரி நல்ல புள்ளயா ஆகப் போறிங்களோ... :)))//

ஏய் அண்ணா நீ போட்ட பதிவு கூட என்ன பாதிக்கல... ஆனா.. ஆனா... உன்ன அப்பறம் கவனிச்சிக்கிறேன்.. :))

Unknown said...

//சின்ன அம்மிணி said...
உண்மையை சொல்லுங்க, சஞ்சய் நிஜமாவே நல்ல பிள்ளையா :)//

இல்ல இல்ல இல்லவே இல்ல...

இப்படிக்கு
அவர் அன்பு தங்கை.. ;))))))

Sen22 said...

:))))))))

தாரணி பிரியா said...

//நீங்க எல்லாம் எப்போ தான் சஞ்சய் மாதிரி நல்ல புள்ளயா ஆகப் போறிங்களோ... :)))//

ஏன் இப்படி கோயமுத்தூர்காரங்க ஆன பிறகு பொய் எல்லாம் சொல்லகூடாது

தாரணி பிரியா said...

ஹீம் வயசாகி போச்சுல்ல. அதுதான் விஜய், அஜீத் எல்லாம் பிடிக்க மாட்டேங்குது. எங்க காலம் மாதிரி வருமான்னு எங்க தாத்தா டயலாக்சை ரிபீட் செய்யறீங்க.

சரவணகுமரன் said...

:-))

வால்பையன் said...

இந்த ரசிகர்களின் அடிதடியை கூட நான் நேரில் பார்த்திருக்கிறேன்

லூசு பயலுக

ஆமா,

உங்க தலைவரும், எதிர் கட்சி தலைவரும் கூடத் தான் மாத்தி மாத்தி அறிக்கை விட்டுகிட்டு இருக்காங்க

நாகை சிவா said...

இவிங்க எப்பவுமே இப்படி தான் பாஸ்.. விட்டுத்தள்ளுங்க...

அன்புடன் அருணா said...

ஏனிந்தக் கொலைவெறி???
வேறென்ன சொல்ல?
அன்புடன் அருணா

மங்களூர் சிவா said...

// நீங்க எல்லாம் எப்போ தான் சஞ்சய் மாதிரி நல்ல புள்ளயா ஆகப் போறிங்களோ... :))) //

:))))))))))))))))))

Sanjai Gandhi said...

விஜய் ஆனந்த் : முடியலையா? :)
--------------------
மகேஷ் : நம்மூர்ல அதுக்கு தான் ஏகப் பட்ட சலுகை தராங்களே.. அவ்ளோ சீக்கிறம் முடிச்சி வச்சிருவோமா என்ன? :)
--------------------
சின்ன அம்மணி அக்கா : சூர்யா சும்மா அட்மாஸ்பியருக்கு.. :))
--------------------
ஸ்ரீமதி : உன் பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா தங்கச்சி.. :))
--------------------
நன்றி சென்22 :)
--------------------
தாரணி அக்கா : அடங்க மாடிங்களா? :(

Sanjai Gandhi said...

நன்றி சரவணகுமார் :)
---------------
வாலு யாரு எங்க தலிவரு? :(
---------------
நாகைசிவா : புலி சொல்லி கேட்காம இருப்பேனா? விட்டுடறேன் :)
---------------
அருணாக்கா : சும்மா டைம் பாஸ்க்கா :)
---------------
மங்களூர் சிவா : ஏன் சிரிப்பு? நம்ப முடியலையா? பொறாமை :)

Tamiler This Week