இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 25 October, 2008

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?

பரபரப்பான அல்லது சர்ச்சைக்குரிய விவகாரங்களை தவிர்க்கவே விரும்பினாலும் இது உணர்வுபூர்வமானதும் முக்கியமானதுமான விவகாரம் என்பதால் இந்த பதிவு.

ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா எந்த வகையில் பங்காற்றி தீர்வுக்கு வழி செய்ய முடியும்? நாம் இங்கு ராஜினாமா செய்கிறோம், மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறோம்..இன்னும் பல வழிகளில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் சிங்கள இனவெறி அரசுக்கு. ஆனால் அது ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையில் உதவும்? இதைப் பார்த்து சிங்கள அரசு திருந்திவிடுமா? தமிழர்கள் மீதான தாக்குதலைக் கைவிடுமா?

இந்தியா அவர்களிடன் கோரிக்கைத் தான் வைக்க முடியும். கட்டளை இட முடியாது. அந்த கோரிக்கையை அவர்கள் காதில் வாங்கிக்கொள்வது போல் தெரியவில்லை. பிறகு இந்தியா என்ன செய்ய வேண்டும்? ராணுவத்தை அனுப்பி பங்களாதேஷ் போல ஈழத் தமிழகம் மலர செய்ய வேண்டுமா? அப்படி அனுப்பப் படும் ராணுவத்தை ஏற்கும் மனநிலையில் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்களா? நாம் கடந்த காலத்தை பற்றி யோசித்து ராணுவத்தை அனுப்பத் தயங்குவது போல் ஈழ மக்களும் தயங்கமாட்டார்களா?

இலங்கை ராணுவத்திற்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தலாம். ஆனால் சீனாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இப்போதும் ஆயுதம் குடுக்கிறார்களே. நாம் நிறுத்தினாலும் அவர்கள் குடுப்பார்களே. அந்த ஆயுதங்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப் படாதா?.. இந்தியா ராணுவ உதவி வழங்குவதை நியாயப் படுத்தவில்லை. உடனே நிறுத்தினாலும் சிங்கள இனவெறி அரசுக்கு அதனால் எந்த இழப்பும் இல்லையே.

வேறு எந்த வகையில் தான் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியும்.? நாம் இங்கு நடத்தும் போராட்டங்கள் எல்லாமே இலக்கே இல்லாமல் குருட்டுத் தனமாக வெறும் எதிர்ப்பு காட்டுவது என்ற வகையில் தான் இருக்கு. சரியான தீர்வை சொல்லி ஒருவரும் போராடவில்லை.யாரையும் திட்டாமல் நேர்மையாக உங்கள் கருத்த்துக்களை சொல்லுங்கள்.

இந்தியாவின் பங்களிப்பு எபப்டி இருக்க வேண்டும் என்பதில், குறிப்பாக ஈழத்து சகோதரர்களின் கருத்தை அறிய விரும்புகிறோம்.

இது நிச்சயம் பலருக்கும் ஒரு தெளிவை உண்டாக்கும்.
அனானி ஆப்ஷனும் திறந்துவிடுகிறேன்.
தனிமனித தாக்குதல்கள் வேண்டாம்.
ஈழத் தமிழ் மக்களுக்கு பயன் படும் வகையிலான கருத்துக்களை மட்டுமே சொல்லுங்க.

Friday, 24 October, 2008

எதையாவது புறக்கணிக்கனும் பாஸு

கொஞ்சநாளாவே தமிழ் பதிவர்கள் ஆளாளுக்கு எதயாவது புறக்கணிக்கிறாங்க. சிலர் தினமலரை.. சிலர் ஹிண்டுவை.. சிலர் ப்ளீச்சிங் பவுடர் பதிவை.. சிலர் டோண்டு பதிவை.. இப்படி எதையாவது புறக்கணிக்கிறாங்க. நாமளும் நம்ம பங்குக்கு எதையாவது புறக்கணிக்கனுமே..

அதனால இனி சர்ச்சைக்குறிய பரபரப்பான பதிவுகளை இந்த வலைப்பூவில் எழுதுவதை புறக்கணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அப்பப்போ வேற எதுனா பரபரப்பு பதிவுகளுக்கு போய் கபடி ஆடிக்கலாம். இங்கு வேண்டாம்.

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என் கும்மிக் கழக கண்மணிகள் இப்போதெல்லாம் என் பதிவு பக்கமே வருவதில்லை. குசும்பன் ஆன்லைன்ல என்னை பார்க்கும் போதெல்லாம் ஓவர் டார்ச்சர். பெரும்பதிவராம் நான். என்ன கொடுமை இது? இதெல்லாம் எனக்கு தேவையா? ஆனாலும் இது குசும்பனின் வழக்கமான நக்கல் தான் என விட்டுவிட்டேன்.

நேற்று இரவு என் வலையுலக சகோதரியிடமிருந்து வழக்கமான ஒரு மெசேஜ்..
“ அண்ணா வாட் டூயிங்” (இதை டெப்ளட்டா வச்சிருப்பா போல.. தினமும் இதைத் தான் அனுப்பறா ) :))
“ எங்க க்ரூப் ப்ளாக்ல ரொம்ப நாள் கழிச்சி ஒரு பதிவு போட்டுட்டு இருக்கேன்”
....உடனடி கேள்வி
“ யாரை திட்டி?”

என்ன கொடுமை சார் இது? நான் பதிவு போட்டாலே யாரையாச்சும் திட்டியாத் தான் இருக்குமா? நல்ல இமேஜ்.. இதே ரேஞ்ச்ல போனா வெளங்கிடும்..
அதனால இனி இதையாவது புறக்கணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் பாஸு..:)

இதே மாதிரி உங்களுக்கும் தோனுச்சினா நீங்களும் எதையாவது புறக்கணிங்க.. அது வழக்கம் போல என் வலைப்பூவா கூட இருக்கலாம்.. :))) எனக்கு என் அன்பு சகோதரியின் SMS உரையாடல் மாதிரி உங்களுக்கும் எதாவது காரணம் இருந்தா அதையும் சொல்லிடுங்க.. :)

இதற்கு நான் அழைப்பது...
.....எந்த தொடர் பதிவிலும் இதுவரை மாட்டாமல் தப்பித்த பதிவர் யாராவது இருந்தால் அவரை அழைக்கிறேன்... ஹ்ம்ம்ம் இதுக்கு யாரையும் அழைக்கலைனே சொல்லி இருக்கலாம்.. :)

மிஸ்டர் ஃநொந்தழல் ஆவி : ”வெக்கம் மானம் ரோஷம் சூடு சொரணை இதெல்லாம் இல்லாமல் வாழுவது எப்படி ஃபார் டம்மீஸ்”னு ஒரு பதிவு போடுங்க.. சின்ன வயசுல இருந்தே முன் கோவம் ஜாஸ்தி தான். ஆனா சமீப காலமா கன்னா பின்னான்னு கோவம் வருது.. :(

Wednesday, 22 October, 2008

சந்திரயான் 1- சர்வேசனின் வேண்டுகோளுக்காக

படத்தை அமுக்கி படிச்சிக்கோங்க...நன்றி : தினமலர்.காம்
மேலும் முழுத் தகவல்களுக்கு இங்கே ஆங்கிலத்தில்

இந்திய வின்வெளி விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்

சந்திரயான் - 1 ஆளில்லா வின்கலத்தின் நிலவு பயணத்தை வெற்றிகரமாக துவங்கி இருக்கும் நம் இந்திய வின்வெளி விஞ்ஞானிகளுக்கு நம் இனிமையான நல்வாழ்த்துக்கள். இந்தியாவிற்கு கிடைத்த பெருமையான தீபாவளி பர்சு இது தான். நம் விஞ்ஞானிகளின் வின்வெளிப் பயணத்தில் மேலும் பல மைல்கற்களை எட்டவேண்டுமென வாழ்த்துவோம்.

Wednesday, 15 October, 2008

சன் குழுமம் எப்போ திருந்தும்?


அடப்பாவிகளா.. அடப்பாவிகளா.. குறைந்த பட்சம் பின்னனி இசையாவது மாத்தி இருக்கலாமேடா? இதுக்கு சன் டிவியை குறை சொல்றதா? இல்லை இசை அமைப்பாளரையா? சன் டிவின்னாலே காப்பி தானோ.. பேசாம சன் குழுமம் என்பதை காப்பி குழுமம் என்று வைத்துக் கொள்ளலாமே.. :(

வால்பையனும் ப்ளீச்சிங்பவுடரும் ஒருவர் தான் - ஆதாரம் இங்கே

வால்பய்யன் தான் ப்ளீச்சிங் பவுடர்.. இல்லை இல்லை.. நல்லதந்தி தான் வால்பையன்... இல்லை இல்லை ப்ளீச்சிங் பவுடர் தான் நல்லதந்தி..என்று ஆளாளுக்கு புரளியை கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.

வால்பய்யன் தான் ப்ளீச்சிங் பவுடர் என்பதற்கு இதோ ஆதாரம். ஒரு நண்பரின் புதிய சாதனைக்கு வாழ்த்து சொல்வதற்காக ஒரு மெயில் த்ரட் ஆரம்பிக்கப் பட்டது. அதில் வால்பய்யனும் ப்ளீச்சிங் பவுடரும் வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்.

படத்தை பெரிசு பண்ணி பாருங்க.. வால்பையன் தன் வழக்கமான ஐடியில் வந்து வாழ்த்து சொல்லி இருக்கிறார். பின் ப்ளிச்சிங் பவுடர் என்ற ஐடியில் வந்து வாழ்த்து சொல்லி இருக்கிறார். தன் ப்ளீச்சிங் பவுடர் ஐடிக்கு அவர் ஒரிஜினல் பெயரான அருண்குமார் என்றே பெயர் வைத்திருக்கிறார். கீழே அன்புடன் ப்ளீச்சிங் பவுடர் என்று போட்டிருக்கிறார். ஆகவே இதன் மூலம் வல்பையன் + ப்ளீச்சிங் பவுடர் = அருண்குமார் என்று அறிவிக்கப் படுகிறது.. :)))

நன்றி : நாமக்கல்சிபி
மற்றும் வால்பய்யன் & ப்ளீச்சிங்பவுடர் ( அடுத்தடித்து மெயில் அனுப்பி மாட்டினதுக்கு ) :)))

Sunday, 12 October, 2008

பின்லேடனை அழைத்தீர்களா?

நேற்றைய தினம் நான் ஒரு வீட்டில் பீரோபுல்லிங் பண்ணி ஆட்டைய போட்டுக் கொண்டிருந்த போது அருகில் வந்த ஒரு தெரிந்த அன்பர் ஹாய் என்றார். நான் ஆட்டையப் போடும் போது ஆண்டவனே அருகில் வந்து சொரிந்தாலும் நான் கண்டுக்க மாட்டேன். ஒரு வீட்டில் ஆட்டையப் போட நினைத்து பீரோவை இழுத்துக் கொண்டிருந்த போது ஐந்தே நிமிடத்தில் பீரோவை இழுத்து உதவியவர் அந்த அன்பர்.அதோடு என் கொள்ளைப் பொருட்களின் தீவிர நுகர்வோர் அவர். அந்த நன்றிக் கடனுக்காக ’இன்னாமே’ என்று கேட்டுத் தொலைத்து விட்டேன். அதன் பலன் கைமேல் கிடைத்தது. அன்பர் ஒரு பிரபல பிக் பாக்கெட் பேர்வழி. பிக் பாக்கெட் அடிப்பவர்களெல்லாம் இன்று முட்டுக் காட்டில் கூடுகிறார்களாம். அதற்கு நான் வர வேண்டுமாம்.

ஏன் ஐயா, கொள்ளைக்காரன் என்றால் உங்கள் வீட்டு எடுபிடியா? நீங்கள் கூப்பிட்ட இடத்துக்கு ஓடி வருவதற்கு? அதோடு, இதுதான் ஒரு பிரபல கொள்ளையனை ஒரு கூட்டத்துக்கு அழைக்கும் முறையா?

பொதுவாக நான், 25 ஆண்டுகளாக தொடர் கொள்ளை அடித்துவரும் வரும் என் மதிப்புக்குரிய ஒரு கொள்ளைக்காரனையும் நேற்றே அடிக்கத் துவங்கியிருக்கும் ஒரு பிக் பாக்கெட் இளைஞனையும் தராதரம் பார்க்காமல் சமமான அளவிலேயே பாவித்துப் பழகுவேன். பீரோ புல்லிங் திருடன், பிக் பாக்கெட் அடிப்பவன் என்றெல்லாம் பார்த்துப் பழகுவது எனக்கு வழக்கமில்லை. ஆனால் என்னுடைய இந்த மொள்ளமாறித் தனத்தை தங்களுக்குச் சாதகமாக நினைத்துக் கொண்டு பலரும் நம்முடைய தோளுக்கு மேல் ஏறிக் கொண்டு நம்மை அவர்கள் ப்ளேடுக்கு சானை பிடிக்க வைக்க பார்க்கிறார்கள்.

சரி, நேரம் இன்னும் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட பிக்பாக்கெட் பேர்வழிகள் கூட்டத்திற்கு பின்லேடனையும் அழைத்திருக்கிறீர்களா? அப்படியானால் நானும் வருகிறேன். சரியா?

09.0.2050.

5.19 p.m.

.... இது யாரையும் புண்படுத்த எழுதவில்லை.. சும்மா டைம் பாஸ் மச்சி ....

Friday, 10 October, 2008

ஜெயலலிதாவுக்கு வைகோ சவால்

”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும்.”

- ஏப்ரல் 2002ல் தமிழக சட்ட்ப் பேரவையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தீர்மானம்.

பிரபாகரனை வீழ்த்த யாராலும் முடியாது.எத்தனை நாட்டு ராணுவம் துணை நின்றாலும் இலங்கை ஜெயிக்க முடியாது.
- இந்தியப் பிரஜை வைகோ முழக்கம்..

Thursday, 9 October, 2008

ஆற்காட்டாரை திட்டுவது மடத்தனம்

முதலில் 3 மணி நேரம் மின் வெட்டு..பிறகு 4 மணி நேரம்.. பிறகு 5 மணி நேரம்.. இப்போது 6.30 மணி நேரம் மின்வெட்டு.. வேறு வழி இல்லை.. சுய தொழில், தொழிற்சாலை விரிவாக்கம், புதிய தொழிற்சாலைகள் என நீங்கள் பாட்டுக்கு பண வெறி பிடித்து ஆடுவதை நிறுத்துங்கள். பிறகு எல்லோருக்கும் 24 மணி நேரம் மின்சாரம் கிடைக்கும். மின் வெட்டு தமிழகத்தில் மட்டுமா இருக்கு? ஆந்திரா , கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரம்.. ஏன் டில்லியில் கூட தினம் ஒரு மணி நேரம் மின் தடை அமலில் இருக்கு. இதற்கெல்லாம் ஆற்காட்டாரா காரணம்? இல்ல... அங்கெல்லாம் திமுக ஆட்சிதான் நடக்கிறதா?..

தமிழகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.. இன்னும் ஆயிரக் கணக்கான கிராமங்களுக்கு மின்சார இணைப்பே கிடையாது.. அவர்களெல்லாம் 24 மணி நேரமும் மின்சாரம் இல்லாமல் வாழ வில்லையா? உங்களால் வெரும் 6.30 மணி நேர மின்வெட்டை தாங்கிக் கொள்ள முடியாதா?

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை பயன் படுத்தக் கூடாது என்று சொல்வதால் இந்த வீணாப் போன தொழில் துறையினர் எதற்கு இப்படி குதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. எதோ தினமும் தொழில் நடந்தால் தான் இவர்களால் சாப்பிடவே முடியும் என்பது போல் கத்துகிறார்கள். எல்லாரும் நகரின் மையப் பகுதியில் ஆடம்பர பங்களாக்களில் வாழ்ந்துக் கொண்டு மின்சாரத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறகு எப்படி தொழிற்சலைக்கு மின்சாரம் கிடைக்கும்?..

இவர்களிடம் இருக்கும் பணவசதிக்கு வாரத்தில் 2 நாட்கள் முழுமையாக மின்சாரம் பயன் படுத்த தடை விதிக்க வேண்டும். இதனால் ஒன்னும் குடி மூழ்கிடாது.

இவர்களைவிட மோசம் இந்த விவசாயிகள். எதற்கெடுத்தாலும் நீலிக் கண்ணீர் விடும் கும்பல். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டும். முழுநேரமும் இலவச மின்சாரம் வழங்குவதால் செலவில்லாமல் நோகாமல் விவசாயம் செய்து கொள்ளை லாபம் பார்த்து தங்கள் பிள்ளைகளை எல்லாம் இஞ்சினியர்களாகவும் டாக்டர்களாகவும் உறுவாக்கி விடுகிறார்கள். பிறகு யார் விவசாயம் பார்ப்பது? நகரத்தில் இருப்பவருக்கெல்லாம் எவன் சோறு போடுவது?.. ஆகவே இவர்களுக்கும் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டும். அதுவும் இலவசமாக வழங்க கூடாது.

இதனால் என்ன ஆச்சி பாருங்க.. எல்லா துறை ஊழியர்களுக்கும் போனஸ் அள்ளி வழங்குகிறார்கள். ஆனால் கடுமையாய் உழைக்கும் மின்சார வாரிய ஊழியர்களுக்கு மிகக் குறைந்த அளவே போனஸ் வழங்க முடியும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பாவம் விவசாயிகளை சும்மா விடாது.

பிறகு இந்த சொகுசு வாழ்க்கை வாழும் நடுத்தர குடும்ப கூட்டம்.. இரவில் மின் தடையால் இவர்களால் தூங்க முடியவில்லையாம். கொசுக் கடிக்கிறதாம். மக்களுக்காக எவ்வளவோ போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்ற அரசியல் தலைவர்களுகெல்லாம் சிறையில் ஏசி வசதியா செய்துக் கொடுக்கிறார்கள். அவர்களெல்லாம் கொசுக் கடியில் இருக்கவில்லையா?.. அரசியல் தலைவர்களே தாங்கிக் கொள்கிறார்கள். ஒண்டுக் குடித்தனத்தில் வாடகை வீட்டில் வாழும் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாதா? அட அதை கூட விடுங்க.. அந்த காலத்தில் எல்லாம் எல்லோர் வீட்டிலும் மின்சாரம் இருந்ததா?.. இல்லை ஃபேனும் ஏசியும் தான் இருந்ததா? உங்க தாத்தா பாட்டிகளெல்லாம் வாழவில்லையா? உங்களுக்கு மட்டும் என்ன சுகபோக வாழ்க்கை வேண்டி இருக்கு...

கோவிலுக்குள் செருப்பு போடாமல் போக ஒரே காரணம்.. அங்கு ஏழை பணக்காரன் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என எல்லோரும் சமமாய் இருக்கவேண்டும் என்பதால் தான். அதே போல் தான் இரவு நேர மின்வெட்டும். இதனால் சேரியில் வாழ்பவனும் மாட மாளிகையில் வாழ்பவனும் ஒன்றாகிவிடுகிறார்கள்.

இந்த உயரிய சிந்தனையை புரிந்துக் கொள்ள முடியாத கும்பல் ஆற்காட்டாரையும் திமுக ஆட்சியையும் குறை சொல்லித் திரிகிறது.

இலவசமா டிவி குடுக்கிறாங்கனு தெரிஞ்சதும் கட்சி பாகுபாடு இல்லாம வீட்டுக்கு 4 போலி ரேஷன் கார்டு தயாரிச்சு கார்டுக்கு ஒரு கலர் டிவி வாங்கி ஒரே ரூம்ல 2 டிவி வச்சி ஆளுக்கொரு நிகழ்ச்சி பாக்கறிங்களே.. அதுகெல்லாம் எங்க இருந்து வருது கரண்டு.. இப்படி அநியாயமா மின்சாரத்த வீணாக்குவதோடு மட்டும் இல்லாம ஆற்காட்டாரை கொற வேற சொல்லுவியளோ?

இனியாவது உங்க முட்டள் தனமான புலம்பலை நிறுத்துங்க. அவ்ளோ தான்.

Monday, 6 October, 2008

பெண்கள் வெட்கப்படுவது எப்போது? Not Adults Only

ஒரு பெண் தங்க நகை கடைக்கு முதல் முறை செல்லும் போது இருக்கும் கூச்சத்தை விட, அப்படி செல்லாத பெண்கள் ஒவ்வொரு முறையும் கவரிங் நகை வாங்கப் போகும் போது இருக்கும் கூச்சம் பெரியது என்றே நினைக்கிறேன். நகைக்கடையில் வாங்கும் போது தன்னைவிட கூடுதல் எடையில் வாங்குபவர்களை பார்த்து கூச்சப் படுவார்கள்.

நம் இந்தியாவில் கவரிங் நகை கிடைக்கும் இடம் பெரும்பாலும் பேன்ஸி ஸ்டோர்கள்( Fancy Store ) தான், வீட்டின் அருகில் இருக்கும் கவரிங் நகை கடை, பாத்திரக் கடைகளில் கூட கிடைக்கும். ஆனாலும் தெரிந்த இடம் என்பதால் அங்கு வாங்க பலருக்கும் தயக்கம் இருக்கும்.

அறிமுகமில்லாத பேன்சி ஸ்டோர் எங்கிருக்கிறது என்று பார்பார்கள், அதன் பிறகு அந்த கடையில் யாராவது வளையல், ரிப்பன் வாங்க நிற்கிறார்களா என்று பார்ப்பார்கள், அதன் பிறகு யாரும் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டு கடைக்கு அருகில் சென்றால் எதிர்பாராத அதிர்ச்சியாக அங்கு ஒரு ஆண் பணியாளர் இருப்பார். அவ்வளவுதான் அடுத்த கடைக்கு நடையைக் கட்டிவிடுவார்கள். இமேஜ் டேமேஜ் ஆய்டுமாம். அங்கு பெண் பணியாளர் இருந்தால் மட்டுமே வாங்குவார்கள், அவர் தரும் வரைக்கும் யாரும் கடைக்கு வேறு எதாவது வாங்க வந்துவிடுவார்களோ என்று திரும்பி திரும்பி பார்த்துக் கொள்வார்கள். தப்பித் தவறி ப்ராண்ட் பெயரைக் கடையில் இருக்கும் பெண் கேட்டுவிட்டால் அதற்கும் கூச்சம் வந்துவிடும், அதற்கெனவே சுறுக்கமான இரண்டு எழுத்து பெயர் இருக்கும் (KC - Kalyani Covering ...) அதை சற்று தயக்கத்துடனே சொல்லி வாங்குவதற்குள் மூச்சு வாங்குவார்கள், இந்த லட்சணத்தில் பல வகைக் கற்கள் பதித்து, ராசிக் கல் பதித்தது, புது டிசைன் என்கிற வகைகளெல்லாம் வேறு இருக்கும், அதை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் விலை அதிகமாக இருக்கும் என்பதால் சொல்லிக் கேட்கவும் பலருக்கு தயக்கமாகவே இருக்கும்.

தோழியின் பேன்சி ஸ்டோருக்கு செல்லும் போது இந்த காட்சிகளையெல்லாம் கவனித்து வந்திருக்கிறேன். அங்கே சிங்கையில் யாரும் அவ்வளவு கூச்சப் படுவது போல் தெரியவில்லை. பெரிய நகைக் கடைகளில் தங்க நகைகளுடன் சேர்த்து இடையிடையே போட்டுக்கொள்ள தேவையான அளவு அதனையும் சேர்த்து வாங்குவார்கள். பெரும்பாலும் ஆண்கள் தான் பில் போட்டுத் தருவார்கள். சிங்கை முணியாண்டி விலாஸில் (பெரும்பாலும் இந்தியர்கள் செல்லும் கடை) தரைத்தளத்திலேயே விதவிதமான கவரிங் நகைகள் வைத்திருக்கும் ஒரு பகுதி இருக்கும், யாராவது ஒரு பெண் அங்கு தைரியமாக நின்றாலே அவரை பலரும் ஒரு முறையேனும் முகத்தைப் பார்த்துவிட்டுச் செல்வார்கள்.

கவரிங் நகை வாங்கப் போகும் போது இருக்கும் கூச்சம் தேவையற்றதாகவே தெரிகிறது. கவரிங் வாங்குவதற்கு இவ்வளவு தயக்கம் காட்டுவதால் தான் தங்கத்தின் விலை இந்த அளவு உயர்ந்து நிற்கிறது. அங்கே வெளிநாட்டில் எக்ஸ்க்ளூசிவ் கவரிங் நகைக் கடைகள் ஒரு சில இடங்களில் இருக்கும், அதனுள் சென்று வருபவர்கள் எவரைப் பார்த்தாலும் திருமணம் ஆனவர்களாகவே தெரிவார்கள். கல்யாணத்திற்கு பெற்ரோர் போட்ட நகை எலலால் சேட்டுக் கடையில் இருக்கும். வட்டிக் கடையில் அடகு வைத்தவர்களுக்கு மாற்று வடிகால், அது சரியா ? தவறா ? என்பது தனிமனித மனம் தொடர்புடையது. இருந்தாலும் கண்டிப்பாக அவற்றை யாராலும் கண்டு பிடிக்க முடியாது.

பெரும்பாலும் புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு கவரிங் நகை வாங்கச் செல்லும் போது தயக்கமும், கூச்சமும் இருக்கும், அதைத் தவிர்க்க,

'அடகு வைத்த' பெண்களுக்குத்தானே கவரிங் நகை தேவை, வாங்கும் போது 'என்னால் தங்கமும் வாங்க முடியும்' என்ற நினைப்பின் உற்சாகம் இருந்தால் கவரிங் நகை வாங்கப் போகும் போது கூச்சம் கண்டிப்பாக வராது ! :)

********

மங்களூரு: மங்களூரில், கவரிங் நகை வாங்கினால், "லாந்தர் விளக்கு' பரிசாக வழங்கப்படுகிறது. மக்களிடம் கவரிங் நகை பயன்படுத்தும் பழக்கத்தை அதிகரிக்க, வித்தியசமான பிரசார முறைகளை, கல்யானி கவரிங் கார்பரேஷன் (க.க.கா.,) என்ற கவரிங் நகை நிறுவனம், கையாண்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த ஆண்டு, கவரிங் நகை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை அறிய, சர்வே நடத்தியது. அதில், கடைக்கு சென்று கவரிங் நகை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுவது தெரிய வந்தது. கவரிங் நகையை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. - இது மங்களூர் டைம்ஸ் செய்தி

இந்த திட்டம் தமிழ் நாட்டிலும் செயல்படுத்தப்பட்டால் நல்லது, தமிழக மக்கள் தான் மின்சாரம் இல்லாமல் கும்மிருட்டில் அவதிக்குள்ளாகுறார்கள். :)

...........இந்த பதிவுக்கும் ”அந்த” பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

Thursday, 2 October, 2008

நோ கல்யாணம் - தொட்டில் - தேன்மொழி


இன்னும் கல்யாணத்துக்கு வழியக் காணொமாம்.. இந்த நெலமைல தொட்டில் கட்டி பொறக்கப் போற புள்ளைக்கு தேன்மொழினு பேர் வச்சானாம்/ளாம்... அப்படினு தலைப்பு வைக்க ப்ளாகர் எடம் கொடுத்தாலும் மனசு எடம் குடுக்கலீங்க. அதனால சுருக்கெழுத்து பாணியில தலைப்பு.

அதாகப் பட்டது மகா ஜனங்களே.. நம்ம ஊர்ல இன்னும் 3G தொழில்நுட்பத்தை பயன் படுத்த லைசென்சே குடுக்கலை.. ஆனா நெறய பேர் அந்த தொழில்நுட்ப்பத்தோட போன் வாங்கி வச்சிட்டு திரியறாங்க.. காரணம் கேட்டா.. “அதனால என்ன? எப்டியும் அந்த தொழில்நுட்பம் சீக்கிறமே வரத் தானே போகுது.. அதனால இப்போவே வாங்கி வச்சி சீன் போடறோம்” அப்டினு சொல்றாங்க... என்னக் கொடுமை பாருங்க...

அது சரி.. அதனால் உனகென்னடா காண்டுனு கேக்கறிங்களே.. இப்போ அந்த சீன் கும்பல்ல நானும் சேந்துட்டேன்ல.. :)

டேய் டேய்.. அடங்குடா நாதாரி.. அவனவன் 35000 ரூபாய் குடுத்து ஆப்பிள் ஐபோன் வாங்கி வச்சிகிட்டு கமுக்கமா இருக்கானுங்க.. நீ வெறும் 7000 ரூபாய் குடுத்து நோக்கியா 6233 வாங்கி வச்சிட்டு இந்த அலப்பறையா? தூத்தெறி...

ஹிஹி.. எல்லாம் ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்....
என்னாது....?
வெளம்பரங்க.. வெளம்பரம்ம்ம்ம்....

ஹ்ம்ம்ம்.. இதெல்லாம் எங்க போய் திருந்தப் போகுது...

அஸ்கிபுஸ்கி : 3ஜி என்றாலே 25000 , 35000 ரூபாய்க்கு தான் போன் கிடைக்கும் என்றுதான் பலரும் நினைத்திருக்கிறோம்.. ஆனால் நோக்கியாவில் 6233 என்ற மாடல் 7100 ரூபாய்க்கு கிடைக்கிறது. 2ஜிபி மெமரி கார்ட் போட்டுக்கலாம். எம்பி3, FM வசதிகள் இருக்கு. மிகத் துல்லியமான இசை. அதிக விலை போன்களைப் போன்று காபி பேஸ்ட் வசதி கூட இருக்கு...

3ஜி தொழில்நுட்பத்திற்கு அனுமதி அளித்ததும் அந்த தொழிநுட்ப போன்களின் தேவை அதிகமாகிவிடும். அப்போது குறைந்த விலையில் விர்பதற்காக நிச்சயம் பரவலாக தரம் குறைந்த அல்லது வசதிகள் குறைந்த போன்களையே அனைத்து நிறுவங்களும் வழங்கும். அதற்கு முன் இதை வாங்கிவது கொஞ்சம் நல்லதாகவே படுகிறது. எல்லாம் மின்னணு சாதன நுகர்வோர் துறையின் அனுபவம் தான்.... :)

Tamiler This Week