இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 31 August, 2008

கூகுளில் தமிழ் தேடல் - கொஞ்சம் புத்சு..

இப்போது கூகுளை பயன்படுத்தி தமிழில் தேடுவது மிகவும் சுலபம் மற்றும் மிக நவீனம். கூகுள் இந்திய தளத்திற்கு சென்று தமிழ் மொழியை தேர்ந்தெடுத்து , பின் ஆங்கில எழுத்துக்களை கொண்டு தேடம் போது அதற்குரிய தமிழ் வார்த்தைகளை தேடு பொறி பரிந்துரைக்கிறது. அந்த பரிந்துரைக்கு நேரே அந்த தேடுதலுக்குரிய வார்த்தைக்கு எத்தனை பதில்கள் இருக்கின்றன என்பதையும் காண்பிக்கிறது. முயற்சி பண்ணுங்க.

Monday, 25 August, 2008

கொஞ்சுபவர்கள் அல்லது கெஞ்சுபவர்கள் சார்பில்

ஜோசப் அண்ணாச்சியின் சமீபத்திய பதிவில் உடன்பாடு இல்லாததால் "கொஞ்சுபவர்கள் அல்லது கெஞ்சுபவர்கள்" சார்பில் ஒரு பதில்பதிவு..

//வர வர இது ஒரு வாடிக்கையான வழக்கமாகி கொண்டே போகின்றது. நன்றாக எழுதிக்கொண்டிருக்கையிலேயே திடீர் என விடை பெறுகிறேன் என அறிவிப்பது. உடனே அவரது நண்பர்கள் அனைவரும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள், நீங்கள் எல்லாம் எழுதாவிட்டால் எப்படி என்பது போன்ற பின்னூட்ட கொஞ்சல்கள், கெஞ்சல்கள் செய்வது, பின்பு நீங்கள் எல்லாம் மிகவும் வேண்டிக்கொண்டதால் நான் மீண்டும் பதிவெழுத வருகிறேன் என்பது. ஏன் இதெல்லாம் ? நிஜமா நல்லவனின் விடை பெறுகிறேன் பதிவுக்கு நான் எழுதிய பின்னூட்டம் இதுதான். //
ஜோசப் பால்ராஜ் said...

இப்டியே எல்லாரும் போறேன்னு சொல்றதும், மத்தவங்க அவங்க இல்லீங்க நீங்க எல்லாம் தொடர்ந்து எழுதணும்னு கூப்பிடுறதும் தொடர் கதையா போயிடுச்சு. //
//
அது தான் நட்பு... எந்த ஒரு சராசரி மனிதனும் எளிதில் உணர்ச்சிவசப் படுபவன் தான். இந்த பதிவை எழுத அவருக்கும் உணர்ச்சிபூர்வமான காரணம் எதுவும் இருக்கலாம். அதனால் சட்டென உணர்ச்சிவசப் பட்டு எழுதி இருக்கலாம். அது தவறு என்று புரியவைத்து அவரை மீண்டும் எழுதுங்கள் என்று " கொஞ்சுவது அல்லது கெஞ்சுவது" நண்பர்களின் விருப்பம். அதை "தொடர்கதை" என்று சொல்லி நீங்கள் கொச்சை படுத்தினாலும் பரவாயில்லை. அந்த கொஞ்சலையும் கெஞ்சலையும் மதித்து அவர் மீண்டும் எழுத வருவது நண்பர்களுக்கு அவர் தரும் மரியாதை தானே ஒழிய வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை.

//நீங்க உண்மையிலேயே இனிமே எழுத எதுவும் இல்லைன்னு நினைச்சா நீங்க இனிமே கண்ண மூடிகிட்டு இருக்கப் போறீங்கன்னு அர்த்தம். எதையும் பார்க்க மாட்டீங்க, படிக்க மாட்டீங்கன்னு அர்த்தம். ஏன்னா நாம பார்கிறது, படிக்கிறதுல இருந்துதான் பாதிவுகள் வருது. அப்டித்தான் இருக்கப் போறீங்கன்னா ரொம்ப சந்தோசம் , போயிட்டு வாங்க,//

இது வரை சரிதான்..
//இனிமே எழுதாதீங்க. //
ஆனால் இது எதோ உத்தரவு மாதிரி அல்லவா இருக்கு? :(

//உங்களையெல்லாம் வாங்க வாங்கன்னு கூப்பிடவே கூடாதுங்கிறதுதான் என் கொள்கை.//
நல்ல கொள்கை. மெச்சுகிறோம். யாருக்கும் என்ன மாதிரியான கொள்கை வேணாலும் இருக்கலாம். தவறில்லை. அதே போல் அவருக்கும் கொள்கை இருக்கலாம். விளையாட்டாய் விடைபெறுகிறேன் என்று சொல்லவோ.. அல்லது உணர்ச்சிவசப் பட்டு விடைபெறுகிறேன் என்று பதிவிடவோ அவருக்கும் உரிமை இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

//மத்தவங்க கூப்பிடுறாங்கன்னு எல்லாம் வந்துடாதீங்க. உங்க கொள்கை இனிமே எழுத கூடாதுங்கிறது தானே? அதுல உறுதியா இருங்க. வாழ்த்துக்கள். நாம நல்ல நண்பர்களா இருப்போம் என் மின்னஞ்சல் முகவரி தர்றேன். தொடர்புல இருங்க. ஆனா இனிமே நீங்க எழுதவே வேண்டாம். நாடு ஒன்னும் கெட்டுப் போயிறாது. போயிட்டு வாங்க. நன்றி. இதுவரை நீங்க பதிவுலகத்துக்குச் செஞ்ச சேவைக்கு ரொம்ப நன்றிங்க. வணக்கம்.
என் மின்னஞ்சல் முகவரி: joseph.paulraj@gmail.com.
//

இது நிஜமா நல்லவருக்கு... ரொம்ப நல்ல வரிகள். மத்தவங்க கூப்பிடறாங்கன்னு வந்துடாதிங்கன்னு உங்க ஈமெயில் முகவரி கூட தெரியாத ஜோசப் உரிமையோட சொல்ற மாதிரி.. உங்களோட வாரத்தில் 4 நாட்களாவது பேசும் அளவுக்கு நெருங்கிய நண்பனாக இருக்கும் நான் உரிமையோட சொல்கிறேன். ஒழுங்கு மரியாதையா திரும்ப எழுத வாங்க.

இது ஜோசப் அண்ணாவுக்கு,
அண்ணா அவர் எழுதலைனா நிச்சயம் நாடு ஒன்னும் கெட்டு பொயிறாது. ஏன்னா ஆக்கப் பூர்வமான படைப்புகளை எழுத நீங்க இருக்கிங்களே. அதுவே போதும் நாடு கெட்டு போகாமல் இருக்க. ஆனால் பணிச்சுமையின் காரண்மாக நினைத்த நேரத்தில் தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ பேச முடியாமல் இருக்கும் எங்களை போன்ற மொக்கை பதிவு நண்பர்களுக்கு வலைபதிவு தான் அழகான தொடர்பு கருவி. ஆகவே எங்கள் நட்பு குறையாமல் இருக்கவாவது அவர் திரும்ப பதிவு எழுதியே ஆகனும்... அவரை வர வெண்டாம் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருப்பது போல் தெரியவில்லை. ஏன்னா உங்க கிட்ட அவரோட மின்னஞ்சல் முகவரி கூட இருப்பதாக தெரியவில்லை... ஆனால் நான்க்காள் மின்னஞ்சலில் மட்டும் இல்லாமல் தொலைபேசியிலும் பேசும் அளவுக்கு நல்ல நண்பர்கள். ஆகவே எனக்கு அவரை மீண்டும் எழுத வைக்க உரிமை இருக்கு.

//எழுத ஒன்னுமே இல்லைன்னு சொல்லிட்டு போறவரை எதுக்கு இத்தனை பேரு திரும்ப வாங்கன்னு கூப்பிடனும் ? //
அவர் என்ன மூலப் பொருளை கொண்டு உற்பத்தி செய்யும் இயந்திரமா? மூலப் பொருள் தீர்ந்துவிட்டது.. இனி எதும் தயாரிக்க முடியாது என்று சொல்ல.. இன்று எழுத அவருக்கு ஒன்றும் இல்லாமல் போனாலும் நாளையே அவருக்கு எதாவது எழுத கிடைக்கலாமே.... அதும் இல்லாம இத்தனை பேர் திரும்ப வாங்கன்னு கூப்பிடறத( அதாவது அப்படி கூப்பிடும் எங்களை) கேள்வி கேக்க நீங்க யார்ணே..? //மாரத்தான் ஓட்டப் போட்டி நடக்குது, பல வீரர்கள் ஓடிக்கிட்டு இருக்காங்க. அதுல ஒருத்தரு இனிமே என்னால ஓட முடியாது, ஒடுறதுக்கு என் உடம்புல வலு இல்லன்னு உக்காந்துட்டாருன்னா என்ன செய்ய முடியும்? சரிங்க அப்டி ஓரமா உக்காந்துக்கங்கன்னு தானே சொல்ல முடியும்? இல்ல இல்ல நீங்க கட்டாயம் ஓடியே ஆகணும்னு சொல்லி ஓட முடியாதவர இழுத்துக்கிட்டு வர முடியுமா? //
இது மோசமான வரிகள். முடியாது என்று சொல்பவரை ஊக்கப் படுத்தி ஓட வைக்க வேண்டுமே ஒழிய.. அப்பாடா போட்டியில ஒருத்தன் ஒழிஞ்சான். நமக்கு குறைந்த பட்சம் ஒரு இடமாவது முன்னாடி கிடைக்கும் என்று நினைப்பதை என்னவென்ரு சொல்ல?

//எனக்கு என்னமோ நிஜமா நல்லவன் நிஜமான காரணம் எதையும் சொல்லாம வெறுமனே இனிமே எழுத ஒன்னும் இல்லன்னு சொல்லியிருக்காருன்னுதான் தோணுது.//
நல்லா ஜோசியம் பாப்பிங்க போல.. :).. ஏன்ணே.. ஜோசப் அண்ணே.. காரணமே இல்லாம எதுக்குண்ணே சொல்லனும்? ஒரு நையாண்டித்தனமான காரணமாவது இருக்கும்ணே.. நீங்க ஏன்ணே இம்புட்டு அவசரப் பட்டு அவரை துரத்துவதிலேயே குறியாக இருக்கிங்க? :(


// எப்டியிருந்தாலும் எழுத முடியாதுன்னு சொல்றவரப்போய் எதுக்கு மல்லுகட்டனும் ? காரணமே தெளிவா சொல்லாதவருகிட்ட எதுக்கு போயி எல்லாரும் கெஞ்சணும் ? //
அது கெஞ்சறவங்களோட( அதாவது எங்களோட) இஷ்டம்ணே.. அவர் எங்களுகெல்லாம் அந்த அளவுக்கு நல்ல நண்பர். அதனால் கெஞ்சறோம். உங்களுக்கு ஏன் எரியனும்?.. வேணும்னா இந்த மாதிரி நீங்க ஒரு பதிவு போட்டு பாருங்களேன்.. எத்தனை பேர் உங்களை கெஞ்சறாங்கன்னு பாக்கலாம்.. :))

//நேற்று இரவு இந்த பதிவை படித்துவிட்டு நானும் தம்பி விஜய் ஆனந்தும் வலையுரையாடலில் பேசிக் கொண்டிருந்தோம். இப்படி அறிவிப்பதும், கெஞ்சுவதும், திரும்ப வருவதுமான போக்கு அதிகரித்துக் கொண்டே போகின்றது.//
இதனால் உங்களுக்கு எங்கே ஆண்ணா குறைந்துவிட்டது? யார் என்ன அறிவித்தால் உங்களுகென்ன? அது அதிகரித்தே போனாலும் உங்களுகென்ன?.. அந்த மாதிரி பதிவர்கள வசிப்பதை நிறுத்திவிட்டால் போச்சி.. அதற்கு ஏன் தனி பதிவு போடனும்? இதற்கு முன் எத்தனை பேர் இப்படி அறிவித்திருக்கிறார்கள் தெரியுமா? அப்போதெல்லாம் நீங்க எங்கே போனிங்க? ஏன் நிஜமா நல்லவருக்கு மட்டும் ஆப்படிக்க முயற்சி பண்றிங்க? :)

// இது கட்டாயம் தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பிடிக்கும் என்றும் சொன்னார். அதே போல் இன்று சூடாண இடுகைகளில் இடம்பிடித்து விட்டது. //
நீங்க இந்த பதிவை எழுதி இருபப்து கூட சூடாண இடுகையில் இடம்பிடிக்கும் உங்கள் ஆசையாகத் தான் தெரிகிறது.. ஏன்.. நான் உங்களுக்கு எழுதும் இந்த பதிவு கூட சூடாண இடுகையில் வரும்.. அதற்கெல்லாம் என்ன செய்ய முடியும் அண்ணா? அதிகம் பேர் பார்க்கும் பதிவு சூடாண இடுகையில் வரத்தான் செய்யும்.. சூடாண இடுகையில் இடம் பிடித்தாம் விருதோ அல்லது பணமோ தராங்களா? இதை ஏன் கேள்விக்கு உள்ளாக்குகிறீர்கள்?... தமிழ்மணம் சூடான இடுகையில் இடம் பிடிப்பது எபப்டி என்று நான் ஒரு பதிவு போட்டேன். அந்த பதிவில் வெறும் நாங்கு வரிகள் எழுதினேன்.. "இந்த பதிவு சூடான இடுகையில் வரும் பாருங்க" என்பது போல். விஷயமே இல்லாத அந்த பதிவும் சூடாண இடுகையில் வந்தது. அதுக்கு யாருமே எனக்கு பணம் தரலைணே.. எங்களை போன்ற மொக்கை பதிவர்களுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு.. அவ்வளவுதான்.. இதை ஏன் சீரியசா எசுத்துகிறீங்க?

//இப்படி காரணமில்லாமல் நானே போய் வருகிறேன், இனி எழுத மாட்டேன் என்று சொன்னால் யாரும் கெஞ்சக் கூடாது என்பதுதான் என் கருத்து. //

இது உங்கள் கருத்தாக மட்டும் இருக்கும் பட்சத்தில் யாருக்கும் கவலை இல்லை. ஆனால் இது உத்தரவாக மாரும் பட்சத்தில் தான் உங்களை கேள்வி கேக்கத் தோன்றுகிறது.

//தமிழ் மணத்திற்கு : // முதலில் நீங்கள் தமிழ்மணத்தை கேள்வி கேட்பதையே நான் விமர்சிக்க விரும்புகிறேன். நான் தமிழ்மணத்தை பல முறை கேள்வி கேட்டிருக்கிறேன். அவர்களை விமர்சித்து இருக்கிறேன். தமிழ்மணத்தில் என் பதிவை சேர்த்த நாள் முதல் இன்று வரை பல வடிவமைப்புகளை மாற்றியும் தமிழ்மணத்தின் லோகோ என் வலைப்பூவில் இடம் பெற செய்திருக்கிறேன். அவர்கள் என் வலைப்பூவை திரட்டுகிறார்கள் இலவசமாக. அதற்கு பதிலாக நான் அவர்களுக்கு என் வ்லைப்பூவில் இணைபு கொடுத்துள்ளேன். இந்த குறைந்த பட்ச புரிதல் கூட உங்களுக்கு இல்லை. உங்கள் வலைப்பூவை தமிழ்மணம் திரட்டிய போதிலும் நீங்க அவர்களுக்கு இணைப்பு தரவில்லை. ஆனால் "திரட்டி" எனும் திரட்டிக்கு இணைப்பு கொடுத்திருக்கிங்க. அப்படி இருக்கும் போது தமிழ்மணத்தை எப்படி உங்களால் கேள்வி கேட்க முடிகிறது?.. நிஜமா நல்லவரின் பதிவு சூடாண இடுகையில் வருகிற ஒரே காரணத்திற்காகவா? :)

//சூடாண இடுகைகளுக்கான பதிவுகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன ? //
என் சிற்றறிவுக்கு எட்டியவரை அதிகம் பேர் அல்லது அதிகம் முறை பார்க்கப் படும் பதிவு தானாகவே சூடான இடுகைகளில் இடம் பிடிக்கிறது.

//பதிவுகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை வைத்தா? பதிவுக்கு இடப்படும் பின்ன்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்தா? //

பார்ப்பவர்களின் எண்ணிக்கையை வைத்தே என்று நினைக்கிறேன்.

//ஏன் பெரும்பாலும் மொக்கை பதிவுகளே சூடாண இடுகைகளில் இடம்பிடிக்கின்றன? //

மொக்கை பதிவுகள் என்பதற்கு உங்களால் விளக்கம் தர முடியுமா?. . . என்னங்கய்யா ஆளாளுக்கு மொக்கை பதிவு மொக்கை அப்திவு சவுண்டு குடுக்கறிங்க. மொக்கை பதிவுகளால் யார்னா காயப் பட்டிருக்கங்களா? உங்கள மாதிரி ஆக்கப் பூர்வமான பதிவர்களால் தான் மற்றவர்கள் வருத்தப் பட வேண்டி இருக்கு. ( உதாரணம் உங்களின் இந்த பதிவு )சூடான இடுகையில் இடம் பிடிப்பதெல்லாம் மொக்கை பதிவுகள் என்றால் உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்குமே. அதை விட்டு மற்ற " ஆக்கப் பூர்வமான" பதிவுகளை படிக்கலாமே.

//இப்படி மொக்கை பதிவுகளே பெரும்பாலும் சூடாண இடுகைகளில் இடம்பிடித்துக்கொண்டிருந்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா?//

அண்ணே.. இப்போ எல்லாம் வலைப்பூக்கள் நட்பை வளர்க்கும் இடமாக மாறிவிட்டது. ஆகவே அதிக நண்பர்களை வைத்திருப்பவரின் பதிவுகள் அதிகம் பேரால் பார்க்கப் படுகிறது.. அது சூடாண இடுகையில் வந்து தொலைத்துவிடுகிறது. இது உங்க வெயித்தெரிச்சலை சம்பாதித்துவிகிறது. பேசாம தமிழ்மணத்திற்கு ஒரு கடிதம் எழுதி சூடாண இடுகையை எடுக்க சொல்லுங்க.. இனியாவது உங்க டென்ஷன் கொறையட்டும். இதுல தவறான முன்னுதாரணத்துகெல்லாம் ஒரு வேலையும் இல்லை. உங்களால இதில் இடம்பிடிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் தான் தெரிகிறது... தயவு செய்து "வழக்கம் போல்" ஆக்கப் புர்வமான பதிவுகள் மட்டும் எழுத முயற்சி பண்ணுங்க. பதிவு எண்ணிக்கைல ஒன்னு கூடனும்னு எங்கள மாதிரி நீங்களும் மொக்கை போடாமல் இருந்தால் சந்தோஷபடுவேன்.

இப்படிக்கு
வழக்கம் போல் உங்கள் நண்பன்.


பிகு : ஜோசப் அண்ணாவுக்கு பதில் பதிவு எழுத நீ யாருடா என்று கேட்கும் நல்ல உள்ளங்களுக்கு .... நாளைக்கு நானும் விடை பெறுகிறேன்.. வடை சுடுகிறேனு ஒரு பதிவு போடுவேன். அப்போ யாரும் எனக்கு ரிவீட்டு அடிக்க கூடாது இல்ல.. அதான் இப்போவே கொஞ்சம் உஷாரு ஆய்க்கிறேன்..

---விரைவில் எதிர்பாருங்கள்....
........வாருங்கள் ஆயில்யனை வழியனுப்பிவிட்டு அவருக்கு பின்னூட்டம் போடுபவர்களை கேள்வி கேப்போம்............

எவன்டா என் தலைவனை உசுப்பேத்தி விட்டவன்?

ப்ளீஸ்.. ப்ளீஸ்.. முழுசா பாருங்க... என் தலைவனின் உணர்வில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்... என் தலைவனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ப்ளீஸ்...நன்றி : சின்னக்குட்டி

Saturday, 23 August, 2008

அய்யோ... அய்யோ...அய்யோ...

ஜூனியர் விகடனில் குசும்பன்


வாழ்த்துக்கள் குசும்பன்... நல்ல முயற்சிகளுக்கு இது அங்கீகாரம்... தான் மட்டும் போட்டோ குசும்பு பண்ணுவதோடு இல்லாமல் தன்னை போலவே பல போட்டோ குசும்பர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் குசும்பனுக்கு பாராட்டுக்கள்... இன்னும் கலக்கு மாமா.. :)

Monday, 18 August, 2008

சோறு திங்கத் தெரியுதுல.. அப்போ இதையும் தெரிஞ்சிக்கோங்க

கடந்த பொங்கலுக்கு எங்க சித்தப்பா ஆதித்யனுக்கும் இனியாவுக்கும் ( வலது பக்க போட்டோல இருக்காங்க பாருங்க ) இது நெல்லு, இது கரும்பு, இது மஞ்சள்னு (இங்கிலிபீச்ல தான்) சொல்லிகிட்டு வந்தாரு. (அந்த குட்டிபசங்க பொறந்து வளர்ந்துட்டு இருக்கிறது சென்னைல தான். பண்டிகைகளுக்கு மட்டுமே எங்க வீட்டுக்கு வருவாங்க.).
அப்போ எங்கப்பா சொன்னாரு " இவங்களுக்கு அதிர்ஷடம் இருக்குடா.. இத எல்லாம் நேர்ல பாக்கிற குடுப்பனையாச்சும் இருக்கு. இவங்க பசங்களுக்கு இதை எல்லாம் இவங்க எதுனா மியூசியத்துல தான் காமிப்பாங்க".. விவசாயத்தின் நிலை இது தான். :(

அப்போ இருந்து ஒவ்வொரு மாதமும் ஊருக்கு போகும் போது தொட்டத்துல இருக்கிற பயிர்களை படமா புடிச்சி தள்றேன். :))... அதுல இருந்து ஒரு பாடம்... :)

எல்லோரும் அரிசிசோறு சாப்பிடறிங்களே.. அந்த அரிசி எபப்டி விளையுதுனு தெரியுமா?. கிராமத்து மக்களுக்கு நல்லா தெரியும். நகரத்திலேயே பிறந்த வளர்ந்தவர்களுக்கு?.. தெரியாது இல்ல.. ;).. இதோ இப்போ தெரிஞ்சிக்கலாம்.:)

முதலில் எவ்வளவு பரப்பளவில் நெல் பயிரவேண்டும் என்பதை முடிவு செய்துக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கு தேவையான விதை நெல்லை எடுத்து ஒரு கோணிப்பையில் போட்டு அதை தண்ணீர் தொட்டியில் ஊற வைக்கவேண்டும். ஊற வைத்த சில தினங்களில் அந்த நெல்மணிகள் முளைவிட ஆரம்பிக்கும். நெல்லை ஊறவைத்தவுடன் அதை விதைப்பதற்கு தேவையான அளவில் நிலத்தை உழுது அதை சேறாக்கி சேறை சமன்படுத்தி தயாராய் வைக்க வேண்டும்...

இந்த படத்தில் சாதாரனமாக உழுகிறார். இதே வயலில் நன்றாக நீர் நிரப்பி உழுதால் அந்த வயல் சேறாகி விடும். அதற்கு "ஜாடை" வைப்பது என்று சொல்வோம். நாங்க எல்லாம் இதில் தான் ஏர் ஓட்டக் கற்றுக்கொள்வோம். ஏன்னா ஜாடை வைப்பதில் வயலை நன்றாக சேறாக வேண்டும் என்பது தான் நோக்கம். அதில் சீராக ஏர் ஓட்ட( உழுதல்) வேண்டும் என்று அவசியம் இல்லை. முதலில் கற்றுகொள்ளும் போது நேராக உழ முடியாது. கலப்பையின் கைப்பிடிக்கு "மோழி" என்று பெயர். மோழியை சரியாக பிடிக்க வில்லை என்றால் நேராக உழ முடியாது. எருதின் கால்கள் சேதமாகவும் வாய்ப்பு இருக்கு. முதலில் ஒரு அனுபவசாலியுடன் சேர்ந்து மோழியை பிடித்து தான் பழக வேண்டும். நெல் பயிர் தவிர மற்ற பயிர்கள் அனைத்திற்கும் நேராக உழ வேண்டும். அதில் பாத்தி கட்டுதல் , வாய்க்கால் போடுதல் என சில வேலைகள் இருக்கும்.
( ஏர் உழுவதற்கு பொதுவாக எருதுகள் தான் பயன்படுத்துவார்கள். இப்போது எருதுகள் பார்ப்பது அரிதாகிவிட்டது. மேலே உள்ள படத்தில் இருப்பது எருதுகள் அல்ல. பசுமாடுகள். பசுமாடுகளுக்கு எருதுகள் போல் வலிமை கிடையாது. இப்போது எருதுகள் இல்லாததால் பசுமாடுகள் பயன்படுத்துகிறார்கள். பசுமாடுகளை பழக்கப் படுத்துவது படு சிரமமான காரியம். இப்போது 99% ட்ராக்டர்கள் தான் உழுவதற்கு பயன்படுத்துகிறார்கள்.).... ச்சோ..ச்சோ என்றால் இடது எருதும், பா..பா என்றால் வலது எருதும் நமக்கு கட்டுபடும். :))... இதற்கு சில வாய் சுழிப்பு மூலம் வரும் ஓசைகளும் இருக்கு. :)).. எல்லாம் ஒரே பவாய் போட்டால் பதிவு பெரிதாகிவிடும். தனி பதிவாய் போடுகிறேன்.


(நெல் விதைத்தான் இப்படி தான் அடர்த்தியாக வளரும்.)
நெல்மணிகள் முளைவிட்ட உடன் அவைகளை எடுத்து சேறாக்கிய வயலில் விதைக்க வேண்டும். அடர்த்தியாக விதைக்க வேண்டும். பெரும்பாலும் விதை நெல் சரியான அளவில் இருக்கும். சில சமயங்களில் கொஞ்சம் மிச்சமாகி விடும். அதை பரவலாக அந்த வயலிலேயே தூவி விடலாம். அதற்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 20 முதல் 25 நாட்களில் நன்றாக நெல் பயிர் வளர்ந்துவிடும். விதைபயிர் வளர்ந்துக் கொண்டு இருக்கும் போதே அந்த பயிர் நடுவதற்கு தேவையான பரப்பளவில் ஜாடை வைக்க வேண்டும். அதாவது வயலில் நீர் நிரப்பி, அதில் எருது அல்லது ட்ராக்டர் ( இதற்கு இரும்பினால் ஆன உயரமான சக்கரங்கள் ட்ராக்டரின் பின் சக்கரமாக பயன்படுத்த வேண்டும்) மூலம் உழுது நங்உ சேறாக்க வேண்டும். அதில் "எரு"( மக்கிய சாணம்), சில வகை இழை தலைகள் போட்டு அதன் மீது மீண்டும் ட்ராக்டர் மூலம் நசுங்க வைத்து சேறுடன் கலக்க செய்ய வேண்டும்.

அது முடிந்ததும் வயல் ஓரத்தில் இருக்கும் வரப்பை கேக் வெட்டுவதை போல மண்வெட்டியால் வெட்டியால் வெட்டி சரி செய்ய வேண்டும். வரப்பு தகறாரு கேள்வி பட்டிருப்பீங்க இல்ல. அது இதனால் தான் ஆரம்பிக்கும். :))... ஒவ்வொரு முறை வெரப்பை வெட்டும் போதும் அதன் தடினன் குறந்துக் கொண்டே வரும். அதனை ஒட்டிய வயலுக்கு சொந்த காரர் அவர் பகுதியில் வெட்டிக் கொண்டே இருப்பார். இந்த பக்கம் இருப்பவர் இவர் வசதிக்கு வெட்டி கொண்டே வருவார். ஒரு குறிபிட்ட சாகுபடிக்கு பிறகு வரப்பு மிகக் குறுகியதாகிவிடும். அதன் மீது நடப்பதற்கு கூட இடமில்லாமல் போய்விடும். அப்போது தான் வரப்பு தகறாரு வரும். :P... எங்க ஊரில் மண்வெட்டிக்கு "சனுக்கை" என்று பெயர். வரப்பு வெட்டுவதற்கு "அண்டை வெட்டுதல் அல்லது அண்டை கழித்தல்" என்று பெயர்.

பிறகு ஜாடையை "பரம்பு" ( T யை தலைகீழாக கவிழ்த்த மாதிரி ஒரு கருவி. மரத்தால் ஆனது) கொண்டு எருது அல்லது ட்ராக்டரில் இணைத்து சேறை சமன் படுத்த வேண்டும். மேடு பள்ளாம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போது தான் நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும்.

பிறகு முதலில் விதைத்து பயிரான நெல் பயிர்களை பிடுங்கி அதை சிறு சிறு கத்தையாக கட்ட வேண்டும். அதை கட்டுவதற்கு வாழை நார் உபயோகிப்போம். கத்தையாக கட்டிய இந்த பயிர்களை கொண்டு சென்று பயிர் நடுவதற்காக உருவாக்கிய வயல்களில் சீரான இடைவெளியில் வீசிவிட வேண்டும். பிறகு ஆட்கள்( பெரும்பாலும் பெண்கள், ஆர்வக் கோளாரில் சில சமயங்களில் நானும்:) அந்த ஜாடையில் இறங்கி ஆளுக்கு ஒன்று அல்லது ஒன்னரை மீட்டர் இடைவெளியில் இடம் பிடித்துக் கொண்டு பயிர் நட ஆரம்பிப்பார்கள். பயிர் நடும் முறை கிணற்று பாசனம் செய்யும் இடங்களில் ஒரு மாதிரியும் ஆற்று பாசனங்கள் இருக்கும் இடங்களில் ஒரு மாதிரியும் இருக்கும். எங்க பகுதியில் கிணற்று பாசனம் மட்டுமே . ஆகவே அடர்த்தியாக நடுவார்கள். ஆற்று பாசனம் இருக்கும் இடங்களில் அதிக இடைவெளியில் நடுவார்கள். பரிர் நடும் போது காலால் ஏற்படும் குழிகளை கைய்யால் சமன் படுத்திக் கொண்டே வருவார்கள். இல்லை எனில் அந்த குழிகளுக்கும் சேர்த்து தேவை இல்லாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் பற்றாக் குறை காலங்களில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பயிர் சற்று வளரும் வரை மிதமான அளவே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழை வந்து விட்டால் வயல் முழுதும் நிரம்பிவிடும். அப்போது வரப்பில் சிறிய உடைப்பு உண்டாக்கி தேவையில்லாத தண்னீரை வெளியேற்ற வேண்டும். இல்லை எனில் பயிர் முழுதும் நீரில் மூழ்கி சூரிய ஒளி இல்லாமல் அழுகி விடும். அதாவது செத்துவிடும்.

வயலில் பயிர் நட்டு 40 அல்லது 45 நாட்களில் இந்த படத்தில் உள்ளது போல் வளர்ந்திருக்கும். இந்த கால கடங்களில் பயிரை பூச்சிகள் தாக்கும். எனவே பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்க வேண்டும். அவ்வப்போது யூரியா, உரம் போன்றவற்றை இட வேண்டும். பூச்சிகொல்லி மருந்தடிக்கும் முறை பற்றி தனி பதிவு போடுகிறேன்.
இந்த படத்தில் வெள்ளையாக தெரிவது ட்யூப்லைட்டுகள். கொக்குகளிடம் இருந்து பயிரை காக்க இந்த தந்திரம். வெயிலின் இது மின்னுவதால் அவைகள் பயத்தில் வராது. இல்லை என்றால் பெரும் படைகளாக வந்து பயிரை மிதித்து நாசம் செய்துவிடும். நெல் கதிர்கள் உறுவாக ஆரம்பித்ததும் குருவிகளின் வேட்டையிலிருந்து காக்க வயல்களின் குறுக்கே கயிறுகள் கட்டி அதில் சிரு சிறு மணிகள் தொங்க விடுவோம். குருவிகள் அந்த கயிறின் மீது அமர்ந்தால் கயிறின் அசைவில் அந்த மணி ஒலி எழுப்பும். உடனே குருவிகள் பறந்துவிடும்.

மணிகளுக்கு பதில் ஆடியோ கேசட்டுகளில் உள்ள டேப்பை எடுத்து வயல்களின் குறுக்கே கட்டிவிடுவோம். காற்றில் அவைகளில் வித்தியாசமான பயமுருத்தும் வகையிலான ஒலி கிடைக்கும். இதனால் குருவிகள் வராது. இப்படியும் நெல்லை காக்கலாம். இன்னும் சிலர் பெரிய தகர டின்களை வைத்து குருவிகள் வரும் போது அதை பலமாக அடித்து அவற்றை விரட்டுவார்கள். "கவட்டை" எனும் கல் எறியும் கருவி மூலமும் குருவி விரட்டலாம்.

கவட்டை - -----( )------ கைகள் இரண்டையும் கோர்த்துக்கொண்டு உள்ளங்கையை குவித்துக் கொண்டால் ஒரு ஷேப் கிடைக்கும்ல.. அதன் இரண்டு முனைகளையும் கயிற்றால் நம் கையின் நீளத்துக்கு கட்டிகொண்டால் எப்படி இருக்குமோ அது தான் கவட்டை. உள்ளங்கை போன்ற பகுதியில் சில சிறு கற்களை வைத்து கயிற்றின் 2 முனைகளையும் ஒரு கைய்யில் பிடித்துக் கொண்டு வேகமாக சுழற்றி பின் ஒரு முனையை மற்றும் விட வேண்டும். அதில் இருக்கும் கற்கள் அனைத்தும் பல திசைகளில் தூரமாக சென்று விழும். இதனால் குருவிகள் பறந்துவிடும்.

60 முதல் 70 நாட்களுக்குள் இந்த நிலை வந்துவிடும். நெல்மணிகள் பழுப்பு நிறம் வர ஆரம்பித்துவிடும். 3 மாதம் முடியும் போது அருவடைக்கு தயாராய் இருக்கும். பல் சக்கறம் போன்ற அமைப்புடன் இருக்கும் சிறு சிரு அரிவாள்கள் கொண்டு தரையிலிருந்து நான்கு அல்லது 5 அங்குல உயரத்தில் பயிர்களை அறுக்க வேண்டும். கதிர் அறுப்பதற்காகவே ஸ்பெஷலாக சாணை பிடிப்பார்கள். அப்போது தான் ஒரே வீச்சில் அறுக்க முடியும். பயிர் நடுவதற்கு எப்படி சீரான இடைவெளியில் ஆட்கள் நடுவார்களோ அதே மாதிரி தான் இதையும் செய்வார்கள். அறுவடைக்கு தயாராய் இருக்கும் நெல் பயிர் "தாள்" என்று அழைக்கப் படும். அவைகளை அறுத்து கத்தைகளாக கட்டுவது "சுமை" கட்டுவது என்று சொல்வோம். ஒவ்வொரு வயலிலும் எத்தனை சுமை என்பது எண்ணப் படும் . அதை வைத்தே எத்தனை மூட்டை நெல் கிடைக்கும் என்பதை கணிக்கலாம். பிறகு இந்த சுமைகளை மாட்டு வண்டியில் அல்லது ட்ராக்டரில் ஏற்றி களத்திற்கு கொண்டு செல்வோம். களம் என்பது கதிர் அடிகக்வும், தாணியங்களை உலர்த்தவும் ( காய வைக்க) பிரத்தியேகமாக தயாரிக்கப் படும் இடம்.
இது கதிர் அறுத்த நெல் வயல்.

கதிர் அடிக்கும் முறை -
பழையது : சுமைகளை பிரித்து நெல்மணிகள் மேல்நோக்கி இருக்குமாறு களத்தில் வட்ட வடிவில் அடுக்க வேண்டும். அதன் மீது 2 அல்லது 3 ஜோடி எருதுகளைக் கொண்டு மிதிக்க வைக்க வேண்டும் . இதன் மூலம் 95 சதவீத நெல் மணிகள் உதிர்ந்துவிடும். மிச்சம் மீதி இருப்பதை மனித சக்தி மூலம் பிரித்தெடுக்கனும். அதற்கு ஆடுகள் அடைக்க பயன்படும் பட்டிகள் கட்ட பயன்படுத்தப் படும் பிளந்த மூங்கில்களால் பின்னப் பட்ட "படல்கள்" பயன்படுத்தப் படும். அந்த படல்களை 2 ஊன்றுகோல்கள் மூல சாய்வாக நிற்க வைத்து அதன் மீது நெற்பயிர்களை சிறு சிறு கத்தைகளாக எடுத்து ஓங்கி அடிக்க வேண்டும். இப்போது மிச்சம் மீதி ஒட்டி இருந்த நெல்மணிகளும் உதிர்ந்துவிடும். பிறகு வைக்கோலை மட்டும் எடுத்து காலி வயல்கள் அல்லது காலி இடத்தில் பரவலாக போட்டு உலர்த்த வேண்டும். பிறகு கீழே இருக்கும் நெல்களை முறங்களில் அள்ளி உயரமாக பிடித்துக் கொண்டு லேசாக அசைத்தவாறே நெல்மணிகள் கீழே விழுமாறு செய்ய வேண்டும். இதற்கு லேசான காற்றாவது வீச வேண்டும். அப்போது தான் பதர்கள் காற்றில் பறந்து சற்று தூரமாக விழும். நல்ல மணிகள் மட்டும் கீழே ஓரிடத்தில் விழும். இதை பலர் செய்ய வேண்டும். நெல்லை அள்ளி வேகமாக வீசுவதன் மூலமும் இதை செய்யலாம். பிறகு அவற்றை கோணிப்பைகளில் கட்டி சேமிக்க வேண்டியது தான். நெல்லின் அளவை பொறுத்து விற்பதும் வீட்டிலேயே வைபப்தும் முடிவு செய்யப் படும்.

புதிய முறை : கதிர் அடிக்கும் இயந்திரத்தின் மெல் பகுதியில் நெல்பயிரை எந்திரத்திர்குல் செலுத்தும் பகுதி இருக்கும். அந்த இடத்தில் உட்கார்ந்துக் கொண்டு நெல்மனிகள் முன்புறம் இருக்கும் வகையில் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செலுத்த வேண்டும். கீழே இருந்து ஒருவர் சுமைகளை எடுத்துக் கொடுக்க வேண்டும். அருகில் இருந்து ஒருவர் சுமைகளை கட்டி இருக்கும் நார்களை அறுத்து விடுவார். உள்ளே சென்ற நெல்பயிர் கதிர்கள் தனியாக எந்திரத்தின் பக்கவாட்டில் உள்ள சிறு பகுதிவழியாக நெல்மணிகளாகவும் பின்புறம் உள்ள பெரிய பகுதி வழியாக வைக்கோலும் பதர்களும் வரும். நெல்மணிகளை சிறு சிறு பாத்திரங்கள் கொண்டு சேமித்து அவற்றை கோணிப் பையில் அல்லது வீட்டின் ஒரு பகுதியில் போட வேண்டும். பின் பகுதியில் ஒரு கயிற்றுக் கட்டில் இனைக்கப் பட்டிருக்கும். அதன் மீது தான் வைக்கோல் வெளியேறும். அங்கே 2 பக்கமும் 2 பேர் நின்றுகொண்டு வரும் வைக்கோலை அலசி அலசி வீசுவார்கள். ஏனென்றால் வைக்கோலுடன் ஒட்டிகொண்டு வரும் நெல்களை மற்றும் ம்பதர்கள் கயிற்றுக் கட்டிலுக்கு கீல் விழச் செய்வது தான் நோக்கம். பதர்கள் மாடுகளுக்கு தவிடு அரைக்க உதவும். இனி யாரையும் பதர்களே என திட்டாதிர்கள். பதர்களும் பயன்படும். :) இந்த வகையில் கதிர் அடிக்க .. சுமைகளை கொடுக்க ஒருவர், அவற்றின் கட்டுகளை அறுக்க ஒருவர், சுமைகளை உள்ளே அனுப்ப ஒருவர், நெல்மணிகளை அள்ள ஒருவர், கோனிப்பை பிடிக்க ஒருவர், வைகோலை அலச இருவர், அலசிய வைக்கோலை காலி இடங்களுக்கு இழுத்து செல்ல இருவர் ( கை வலி உயிர் போகும்), அவற்றை பரவலாக பரப்ப ஒருவர் அல்லது இருவர் என குறைந்தது 10 பேர் வெண்டும். இற்கு கூலிக்கு ஆள் வருவது அரிது. ரொம்பவே கொடுமையான காரியம் இது. எனவே எங்களுக்கு இந்த வேலைக்கு வரவங்களுக்கு , அவங்க கதிர் அடிக்கும் போது நான் போய் செய்ய வேண்டும். இதே போல் ஷேர் பண்ணிப்போம். இதர்கு "மொய்" ஆள் என்று பெயர் :).அதாவது பரஸ்பர உதவி. இந்த மொய் ஆள் மேட்டர் எல்லா தோட்ட வேலைகளிலும் இருக்கும்.

பழைய முறையோ புதிய முறையோ... எதுவயினும் வெயில் அடிக்கும் போது செய்ய மாட்டோம். இரவிலும் இளங்காலை வேளையிலுமே செய்வோம். இது உடலை கிழிக்கும் செயல் என்பதால் வெயிலில் செய்தால் எரிச்சல் தாங்க முடியாது. இதை முடித்தவுடன் குளிர்ந்த நீரில் கண்டிப்பாக குளிக்க வேண்டும். அது கடுமையான குளிர்காலமாக இருப்பினும். இரவு 1 மணி 2 மணி வரையிலும் கூட இதை செய்ய வேண்டி இருக்கும்.

... இப்போது பழைய முறை முற்றிலும் அழிந்துவிட்டது. புதிய முறை மட்டுமே இருக்கு...

அப்பாலிக்கா இன்னா... நெல்லை அரவை மில்களுக்கு கொண்டு போய் அரைத்து கிடைக்கும் அரிசியை நாமும் தவிடை மாடுகளும் பங்கு போட்டுக்க வேண்டியது தான். :))


குறிப்பு : இந்த பதிவில் சாகுபடி முறை ஓரளவுக்கு சரியாக இருந்தாலும் இதில் குறிபிட்டிருக்கும் வளர்ச்சி காலங்கள் ஒவ்வொரு ரகத்திர்கும் ஒரு மாதிரி மாறும். சில ரகங்கள் 3 மாதத்தில் மகசூல் குடுக்கும். சிலது 4 மாதம் சிலது 5 மாதம் என மாறுபடும். இப்போது நாற்று நட, கதிர் அறுக்க, கதிர் அடிக்க எல்லாவற்றும் எந்திரம் வந்தாச்சி.
................க்ளாஸ் ஓவர்.. எல்லாரும் ஊட்டுக்கு போங்கோ.. :))


பெரிய பதிவாதலால் வழக்கம் போல் எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும். :).. ஏர் ஓட்டும் முதல் படம் பக்கத்து வயலில் எடுத்தது. மற்ற்வை எங்க வயல்கள். இதில் விவரித்திருக்கும் அனைத்து வேலையும் செய்திருக்கிறேன். எல்லாம் என் அனுபவமே பழய முறை கதிர் அடித்தல் உட்பட. ஆனால் இவை எலலாம் விட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் கொஞ்சம் மங்கலான நினைவுகள் தான். அந்த மங்கலான நினைவும் மங்கி போவதற்கு முன் பிரதி எடுத்துவைக்கும் ஒரு சின்ன முயற்சியே இது. :)

....இதை 100வது பதிவாக போட நினைத்தேன். ஹ்ம்ம்ம்.. எங்கே விடறாங்க.. தேடி வந்து வம்பிழுத்து ஒரு கேவலமான பதிவை 100வது பதிவாக்கிட்டானுங்க. :(

Sunday, 17 August, 2008

சத்யம் - விமர்சனம் + இத்யாதிகள்

சாப்பிடும் போதே பசங்க கிட்ட கேட்டுகிட்டேன். சத்யம் படம் எந்தெந்த தியேட்டர்ல போடறாங்கனு. யமுனா , கவிதால போட்டிருக்காங்க.. யமுனால டிக்கெட் கெடைக்காது( இந்த படத்துக்கு? ) அதனால கவித போங்கன்னு சொன்னாங்க. இந்த 2 தியேட்டர்லையும் படம் பாக்கறதுக்கு பதில் நான் ஊட்டுக்கு கவுந்தடிச்சி படுத்துடுவேன் ராசாக்களானு சொல்லி படம் பாக்கும் திட்டத்திஅ கைவிட முயற்சித்த கடைசி வினாடியில் சென்ட்ரல்ல போட்டிருக்கங்க பாருங்கனு சொன்னாங்க. அப்போ சரி பாத்துட வேண்டியது தான். சென்ட்ரல் தியேட்டர் ரொம்ப நல்லா இருக்கும்.

தியேட்டர் போனதும் கவுண்டரை பார்த்தா ஒரு பயலும் இல்லை. ஆஹா இன்ஹ படத்துக்கு டிக்கெட் இல்லையா? என்ன கொடுமை குசும்பா என்று நினைத்துக் கொண்டே கவுந்தரை நெருங்கி அங்கிருந்த ஒரு பணியாளரிடம் டிக்கெட் இருக்கான்னு கேட்டேன். இல்லை சார் முடிஞ்சதுனு சொன்னான். பாம்பு புத்துகுள்ள இல்லைனா அத புடிச்சி பொட்டியில அடைச்சி வச்சிருப்பாங்கனு எனக்கு தெரியாதா?.. பசங்க கிட்ட கெடைக்குமானு கேட்டேன். வெவரமான பையனா இருப்பான்(ஹிஹி) போலனு நெனைச்சிருப்பார் போல. ஓரம்கட்டினார். அண்ணே எனக்கு மெஜஸ்டிக் இல்லைனா ராக்கர்ஸ் வேணும்னு சொன்னேன். உடனே மெஜஸ்டிக் ஒன்னு குடுத்தார். 30 ரூபாய் தரை டிக்கெட்டை 200 ரூபாய்க்கு விப்பானுங்களே 75 ரூபாய் டிக்கெட்க்கு எவ்ளோ புடுங்க போறானோ .. இன்னைக்கு என் பர்ஸ் காலினு நெனைச்சேன். ஆனா ரொம்ப நல்லவர் போல.. அல்லது ப்லாக்ல கூட வாங்க ஆளில்லை போல.. 100 ரூபாய் தான் வாங்கினார். சரினு பைக்கை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு வந்து ஏசியில் உக்காந்து யோசிச்சதில் ......

 • திருட்டு விசிடி பாக்காதிங்க.. இணையத்தில் பாக்காதிங்க.. சினிமா என்பது பலரில் உழைப்பிலும் வியர்வையிலும் உருவாகிறது. இப்படி பார்ப்பதால் பலரில் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.. என்றேல்லாம் சொல்லி புலம்பும் சினிமா தோட்டத்து காவல்காரர்களே.. ப்ளாக்கில் டிக்கட் விற்பதை நிறுத்தினாலே நங்கள் திருட்டு விசிடி அல்லது இணையத்தை நாட மாட்டோம் என்பது ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை?
 • ப்ளாக்கில் டிக்கெட் விற்பவர்கள் யாரோ மூன்றாம் மனிதர்கள் அல்ல.பேராசை பிடித்த தியேடர்காரர்களின் ஊழியர்கள் தான்.
 • பல தியேட்டர்களில் படம் வெளிவந்து சில வாரங்களுக்கு கவுந்தரில் டிக்கெட் கொடுப்பதே இல்லை. அவர்கள் ஆட்களை வைத்தே ப்ளாக்கில் விற்கிறார்கள்.
 • 30 ரூபாய் டிக்கெட் 100 ரூபாய்க்கு மேல், 60 ரூபாய் டிக்கெட் 150 முதல் 200 ரூபாய்.. சில படங்களுக்கு 300 ரூபாய்க்கு மேல்...
 • படம் புடிக்கும் உங்களுக்கு மட்டும் தான் காசின் அருமை தெரியுமா? நீங்கள் மட்டும் தான் கஷ்டபட்டு சம்பாதிகிறிங்களா? நாங்க எல்லாம் கொள்ளை அடித்தா சினிமா பார்க்க வருகிறோம்.
 • நடிப்பு என்றால் என்ன என்றே கேள்விப் பட்டிராத பதுமைகளை மனித பொம்மைகளை அழைத்து வந்து அவர்களின் உடலின் அங்கங்களை மட்டுமே காட்டுவதற்கு கோடிகளில் சம்பளம் குடுப்பதை நிறுத்துங்கள். பன்ச் டயலாக் பேசியும் மரத்தை சுத்தி பாட்டு பாடியும் ( அதுவும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மரங்கள்) மேக்கப்பில் முகத்தை அழகாக்கி இடுப்பில் கயிறு கட்டி தாவி தாவி சண்டையிடும் நடிகர்களுக்கு கோடிகளில் குளிப்பாட்டுவதை நிறுத்துங்கள்.
 • இதை எல்லாம் குறைத்தால் திரை அரங்கிற்கு குறைந்த விலையில் படங்களை விற்கலாம். அவர்களும் நியாயமான விலையில் டிக்கெட் விற்பார்கள். மக்களும் நியாயமான விலை குடுத்து சினிமா பார்க்க வருவார்கள்.
 • நீங்கள் செய்யும் இந்த மொள்ளமாறித் தனங்களுக்கு நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை தண்டமாக வாரி இரைத்து தியேடருக்கு வந்து உங்களை ஆராதிக்க வேண்டுமா?
 • அப்படியே போனாலும் ஒழுங்காவா படம் எடுக்கிறிங்க? அரசியல்வாதிகள் மேடைகளில் அரசியல் எதிரிகளை திட்ற மாதிர் இவனுங்க சினிமா போட்டியாளர்களை சினிமாவில் திட்டிகிட்டு இருக்கானுங்க. அதை நாங்க காசு குடுத்து கேக்கனுமாம். கருமாந்திரம் புடிச்சவனுங்களா..
 • இனி எவனாச்சும் திருட்டு விசிடில பாக்காதிங்க.. இணையத்துல பாக்காதிங்கனு சொல்லிப் பார்ருங்க.. ரஜினி கிட்ட சொல்லி உதைக்க சொல்றேன்.
சரி.. இந்த பதிவு சத்யம் படம் விமர்சனம்னு தானே சொன்ன.. அது எங்கடா?..
விஜய் டிவில நம்ம சிசூசா சிம்பு ஒரு நடன ஜோடிங்க கிட்ட கேட்ப்பார்.. இந்த செருப்பு எந்த கடைல வாங்கினிங்க? கர்ச்சீப் எங்க திருடிங்க.. இப்டி எல்லாம்.. அப்போ தீதி பாட்டி குறுகிட்டு கேப்பாங்க.. சிம்பு.. இவங்க டான்ஸ் பத்தீஈஈஈ...
சிசூசா சொல்வார் " என்ன சொல்றதுன்னே தெரியலைங்க.. அதான் இப்டி பேசிட்டு இருக்கேன்னு"..

இப்போ என் நிலைமையும் தான்.. :)
ப்ளாக்ல டிக்கெட் வாங்கிட்டு தியேட்டர்ல போய் உக்காந்தா.. அடங்கொய்யால.. பாதி சீட்டு காலி.. இதுல பக்கத்துல ஒரு இம்சை கும்பல்... சர் நாங்க ஒன்னா வந்திருக்கோம். 2 சீட் மட்டும் வேற எடத்துல தான் கிடைச்சது. நீங்க அங்க போய் உக்காந்துக்கிறிங்களா என்று.. ஏண்டா டேய் தியேட்டருக்கு சினிமா பாக்க வரிங்களா இல்ல சோறு திங்க வரீங்களாடா? ஒன்னாவே உக்காந்து என்னடா புடுங்க போறிங்க..:(... அப்புறம் என்ன பண்ணி தொலையறது... அந்த கும்பல்ல பாதி பேர் பொண்ணுங்க.. போய் தானே ஆகனும்.. அட தாய்குலத்துக்கு மரியாதைங்க..

 • விஷாலை போலிஸ் உடையில் பார்க்க பல்லி போலிஸ் உடை போட்ட மாதிரி இருந்தது.
 • போலிஸ் உடை மட்டும் என்று இல்லாமல் எந்த உடையுமே அவருக்கு பொருத்தமா இல்லை.. காஸ்ட்யூம் டிசைன் செம சொதப்பல்...
 • ஒரு பாடலில் யார் குறைவான ஆடை உடுத்துவது என்று விஷாலுக்கும் நயனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
 • ஒவ்வொரு ஃப்ரேமிலும் யாரையாவது பந்தாடிக் கொண்டே இருக்கிறார் புரட்சிதளபதி விஷால்.
 • நயன் முன்புறம் பார்ப்பதை விட பின்புறத்தில் பார்க்க அழகாக இருக்கிறார். (என்னாது எப்டி பார்த்தாலும் ஒன்னு தானா.. குசும்பா .. கல்யாணம் ஆகியும் திருந்தலையா நீங்க? :P)
 • அந்த குட்டி பசங்கள எதுக்கு நடிக்க வச்சாங்கனு தெரியலை. அந்த சீன்களையும் பு.த.வுக்கே கொடுத்திருந்தால் பாவம் ஆசை தீர இன்னும் யாரையாவது பந்தாடி இருபபார்.
 • பாடல்கள் அனைத்தும் வலுக்கட்டாயமாக் திணிக்கப் பட்டிருக்கு. அதுவும் அந்த முதல் பாடல்... எந்த காரணமும் இல்லாமல் ஒரு டூயட். கர்மம்.. கர்மம்..
 • சிறையில் வில்லன் கம் எக்ஸ் போலிஸ்காரருடன் பேசும் போதும் க்ளைமாக்ஸில் இரண்டு வில்லைன்கள் தலையிலும் துப்பாக்கி வைத்துக் கொண்டு பேசும் போதும் "நின்று கொண்டே ஆய் போகிறமாதிரி" தெரிகிறார். :)
 • புரட்சிதளபதி கழுத்துக்கு கீழ் எடுத்திருக்கு சிரத்தையை சற்று முகபாவணைக்கும் எடுத்திருக்கலாம்.
 • முதல் காட்சியிலேயே " நான் பொறுக்கி இல்லை.. போலிஸ்" என்று விக்ரமை வம்புக்கு இழுக்கிறார்.
 • முதல்வரை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் போதும் மந்திரிகள் பவ்யமாய் இடுப்பில் துண்டை கட்டிகொண்டு அவரை இதய தெய்வமே என்று அழைக்கும் போது ஏனோ யாரோ மனதில் வந்து போகிறார்கள்.
 • முதல் காட்சியிலும் கடைசிகாட்சியிலும் பறந்து குருவி விஜயை மிஞ்சி இருக்கிறார்.
 • பனியனோடு நயன் கட்டிலில் உருளும் காட்சி நன்றாக இருப்பதாக சொல்லி எனக்கு டிக்கெட்டுக்கு100 + பாப்கார்னுக்கு 20 ரூபாய் செலவு வைத்த லக்கி ஒழிக. அப்டி ப்ரமாதமா எதும் இல்லை.
 • இந்த சோதாப் பயலை NCC பசங்க கூட கம்பேர் பண்ணதுக்கு லக்கிக்கு ஒழிக நெ2.

நயன்: என்னாது.. விஷாலை ஹீரோயினா போட்டிருக்கலாமா? மைண்ட் யுவர் டங் மிஸ்டர். மங்களூர் சிவா.

Friday, 15 August, 2008

101. கோவை புத்தகத் திருவிழா 2008

மாலை 4 மணிக்கு புத்தகத் திருவிழா வளாகத்திற்கு போனேன். பைக் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு அதர்கான ரசீது கேட்டால் 10 ரூபாய் கேட்டார்கள். என்னய்யா இப்படி அநியாயம் பண்றிங்கனு கேட்டா.. நாங்க என்ன சார் பண்றது. சம்பளத்துக்கு வேலை பாக்கிறோம். மொதலாளி சொல்றத செய்றோம்னு செண்டிமெண்டலா டச் பண்ணதால அவங்கள உயிரோட விட்டேன். :)... 10 ரூவாய்க்கு ஒரு கொலையா? என்னடா அக்கிரமமா இருக்குனு யாரும் கேக்காதிங்க. எல்லாம் ஒரு பில்டப்பு தான். :))

உள்ளே நுழைவதற்கு முன்பு மிளகாய் பஜ்ஜி மற்றும் பானிப்பூரி கடைகள் பக்கம் பார்வை தானாகவே போனது. சரி வரும் போது கவனித்துக் கொள்ளலாம் என்று ஸ்டால்களுக்குள் நுழைந்தேன். முதல் ஸ்டாலில் நுழைந்த சில நொடிகளிலேயே ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. "அவன் - அது = அவன்" என்ற நண்பர் எஸ். பாலபாரதியின் புதிய புத்தகம். நவீன கதைகளை படிப்பதில் ஆர்வம் இல்லாதால் அதை வாங்கவில்லை. 4 மணி முதல் 7 மணி வரை கிட்டத் தட்ட அனைத்து ஸ்டால்களுக்குமே போனேன். கால் மற்ரும் இடுப்பு செம வலி. அப்புறம் தான் வெளியே வந்தேன்.

 • நண்பர் பாலபாரதி, சிறில் அலெக்ஸ், லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் ஜெயபாரதன் ஐயா போன்ற நமக்கு தெரிந்தவர்கள் புத்தகங்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது. இந்த மாதிரி ஜாம்பவான்களுடன் பழகும் வாய்பை குடுத்த இணையத்திற்கு வந்தனம்.
 • புத்தகங்களை பார்த்த அனைவருமே புத்தகத்தை தோராயமாக விரித்து சில வரிகளை படித்து/பார்த்தவுடன் மறக்காமல் புத்தகத்தின் விலையை பார்த்தார்கள்/பார்த்தோம். அப்படி பார்த்தவுடன் புத்தகத்தை அவசர அவசரமாக எடுத்த இடத்திலேயே வைத்தார்கள்/வைத்தோம். :)
 • சில புத்தகங்களில் அலங்கார வேலைகள் ரொம்ப தூக்கலாக இருந்தது. அதற்கும் சேர்த்து அநியாய விலை போட்டிருந்தார்கள். அந்த வகையை பார்த்து பெரும்பாலானோர் அபப்டியே வைத்து விட்டார்கள். குறிப்பாக பா.விஜய் கவிதை புத்தகங்கள். கல்லூரி மாணவர்களின் ஆட்டோகிராஃப் நோட்டுகள் மாதிரி இருந்தது. அதனால் விலையும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. படைப்புகளை மட்டுமே சந்தை படுத்தினால் நன்றாகவே வியாபாரம் இருக்கும். தேவை இல்லாத அலங்காரங்கள் செய்தால் அடக்க விலை அதிகமாகிவிடும். அதனால் புத்தகத்தின் விலையும் அதிகரிக்க வேண்டி இருக்கும். நமக்கு தேவை நல்ல படைப்புகள் தான். அலங்காரங்கள் இல்லை. படைப்புகளுக்கு தான் விலை குடுக்க முடியுமே தவிர அலங்காரங்களுக்கு இல்லை.வெளியீட்டளர்களும் படைப்பாளிகளும் கவனிக்க வேண்டும்.
 • ஒன்னுக்கடிப்பது எபப்டி?.. 30 நாட்களில் குழந்தைக்கு ஜெட்டி போட கற்ற்க் கொள்ளலாம் என்பது போன்ற புத்தகங்கள் ஏராளமாக இருந்தது. ஆனால் வலைப்பதிவது எப்படி என்று ஒரு புத்தகமும் இல்லை. புத்தக வெளியீட்டாளர்கள் கவனிக்க.
 • வழக்கம் போல எல்லா புத்தகத் திருவிழாவிலும் இருப்பது போல கம்யூனிசக் கொள்கை பரப்பும் புத்தகங்கள் அதிகமாகவே இருந்தது. அதே சில பக்க 10 ரூபாய் சிறு புத்தககங்கள்.. அதே வழக்கமான தவறான தகவல்கள் மற்றும் தவறான புள்ளி விவரங்களுடன். இந்த முறை அணு ஒப்பந்தம் பற்றிய புத்தகங்களை காம்ரேடுகள் சற்று அதிகமாகவே எழுதிக் குவித்திருந்தார்கள்.
 • இந்த வகை புத்தகம் தான் வாங்க வேண்டும் என்று எந்த முடிவுடனும் போகவில்லை. புத்தகங்களை பார்த்து முடிவு செய்துகொள்ளலாம் என்று சென்றுவிட்டேன். எனக்கு பிடித்தமாதிரி மிகக் குறைவாகவே இருந்தது. குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் மேலும் கவிதைகள் மற்றும் கதைகளே அதிகம் ஆக்கிரமித்து இருந்தது.
 • அபூர்வமான விஷயங்கள் பற்றியோ பழங்கால உண்மையான வீர வரலாற்று சம்பவங்களோ அவ்வளவாக இல்லை. கல்கி , சாண்டில்யன் படைப்புகள் மற்றும் அன்மிக புத்தகங்கள் ஓரளவுக்கு இருந்தது.
 • சர்வோதய பதிப்பகம் 27 ரூபாய்க்கு காந்தியின் சத்திய சோதனையும், 36 ரூபாய்க்கு அப்துல்கலாமின் அக்னி சிறகுகளும் விற்கிறார்கள்.
 • மக்கள் தொலைகாட்சியின் " அழகின் சிரிப்பு" டிவிடி வாங்கியதற்கு இன்றைய தமிழ் ஓசை இலவசமாக குடுத்தார்கள்.
 • பழங்கால வீர வரலாற்று கதைகள் படிபப்தில் ஆர்வம் இருப்பதால் பர்த்திபன் கனவு புத்தகத்தை வாங்கலாம் என்று அதை எடுத்து தோரயமாக பிரித்தேன். அதில் 2 வரிகள் படித்ததும் அடுத்த நிகழ்வுகள் தானாய் நினைவுக்கு வந்தது. இந்த கதைகளெல்லாம் வார இதழ்களில் தொடராக வரும் போது படித்திருக்கிறேன். இப்போது இந்தியா டுடே தவிர வேற எந்த வார இதழ்களுமே படிப்பதில்லை. எல்லாம் ஒரே சினிமா மற்றும் கல்லூரி மாணவிகள் மயம்.
 • பார்த்திபன் கனவு புத்தகத்தை நான் புரட்டியதை பார்த்த ஒருவர் " சார் இது அரசியல் புத்தகமா " என்று கேட்டார். இல்லீங்க அந்த காலத்து ராஜாக்கள் கதைங்க என்றேன். அடுத்து பதில் எதுவும் சொல்லாமல் ஒரு புத்தகத்தை ( பார்த்திபன் கனவுதான்) எடுத்து சென்று பணம் குடுத்தார். அடப்பாவிகளா.. :))
 • ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்கள் இருந்த ஒரு ஸ்டாலில் புத்தகங்கள் பார்த்துக் கொண்டிருந்த போது( தமிழ் தான்) அருகில் ஆங்கில புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் 2 ஆண்களும் ஆங்கிலத்தில் பீட்டர் விட்டுக் கொண்டிருந்தார்கள். சரி.. வேறு வேறு மாநிலத்தவர்களாக இருப்பார்கள் போல என்று நினைத்தேன். ஆனால் சிறிது நேரத்திலேயே ஹிந்தியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். பிறகு ஆங்கிலம். யாருய்யா சொன்னது 2 தமிழனுங்க பாத்துகிட்டா தான் தமிழை மறந்து ஆங்கிலத்தில் பேசுவார்கள். மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம் அவங்க மொழியில தான் பேசிக்கிறாங்கனு.. எல்லா ஊர் பய புள்ளைகளும் ஒரே மாதிரி தானுங்க. :)..
 • அந்த பொண்ணு கடைசியா சொன்ன ஒரு வசனம் " I dont find my kind of books yaar".. ங்கொக்கா மக்கா.. நாட்ல என்னய விட மோசமானவங்க நெறய பேரு சுத்திட்டு இருக்காங்கய்யா. :))
 • நல்ல வேளையா 4 மணிக்கே போனதால பொறுமையா எல்லா ஸ்டால்களும் பார்த்தேன். 6.30 மணிக்கு மேல கூட்டம் ரொம்ப ஜாஸ்தி ஆய்டிச்சி. அந்த கூட்டத்துல போய் இருந்தா ஒன்னும் ஒழுங்கா பார்த்திருக முடியாது. கோவை ஃபிகர்ஸ மட்டும் தான் பார்த்திருக முடியும். சினிமா போற மாதிரி நெறய குஜ்லீஸ் கூட்டம் கூட்டமா வந்திருந்தாங்க.
 • சில ஃபிகர்ஸ் கைல பா.விஜய், நா.முத்துகுமார், வைரமுத்து, மு.மேத்தா, ஷிட்னி ஷெல்டன் மற்றும் சில பேர் தெரியாத வெள்ளக்கார எழுத்தாளருங்க ஊஞ்சலாடிட்டு இருந்தாங்க.
 • பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு , கடல் புறா மற்றும் சில அரசியல் சம்பந்தமான புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். புத்தகத் திருவிழா முடிவதற்குள் வாங்க வேண்டும்.
 • சில புத்தகங்களை பார்க்கும் போது அதன் நம்பகத் தன்மை யோசிக்க வைக்கிறது. அதில் நடுநிலையான உண்மையான தகவல்களுக்கு பதில் ஒரு தலை பட்சமான தகவல்கள் இருக்குமோ என்ற எண்ணம் உருவாகிறது. குறிப்பாக அமெரிக்கா, விடுதலை புலிகள், தமிழீழம், சில நாட்டு உளவு அமைப்புகள் போன்றவை சம்பந்தமான புத்தகங்களின் நம்பகத் தன்மை யோசிக வைக்கிறது. காரணம் அவர்கள் ரெஃபர் செய்திருக்கும் நபர்கள் அல்லது இணையதளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் ஒரு தலைபட்சமானவர்களாக/மானவைகளாக அறியபட்டவர்கள்/பட்டவைகள்.
நான் வாங்கிய புத்தகங்கள்:
 • மஹாத்மா காந்தியின் சுய சரிதை
 • அட்லாண்டிக்கின் பெர்முதா முக்கோணமும் ஆழ்கடல் மர்மங்களும்
 • ஃப்ராய்ட்
 • நாஸ்டர்டாம்ஸ் சொன்னார்.. நடந்தது
 • இந்தியப்பெண் சோனியா காந்தி
 • அழகின் சிரிப்பு - பனை, பூ, ஏரி மற்றும் மலை பற்றிய காட்சிகவிதைகள் டிவிடி.
முடித்துவிட்டு வெளியே வந்து மிள்காய் பஜ்ஜி மற்றும் பானி பூரி ஏரியா வந்தால் உட்கார்ந்து சாப்பிட இடமில்லை. அவ்வளவு கூட்டம். 3 மணி நேரம் அன்ன நடை நடந்ததால் கால்/இடுப்பு வலி. ஆகவே மேலும் நின்றுகொண்டு சாப்பிட வாய்ப்பே இல்லை. வீட்டுக்கு கிளம்பி வந்து இந்த பதிவு போட்டாச்சி. :))

Wednesday, 13 August, 2008

பதிவர் பெயரிலியின் பித்தலாட்டம்.

பெயரிலி என்ற பதிவர் என்னை பற்றி எதோ தவறான பின்னூட்டம் போட்டிருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பதிவில் இதெல்லாம் சகஜமப்பா என்று விட்டுவிட்டேன். சமீபத்தில் தமிழ்மணம் திறந்த போது அவர் பதிவு ஒன்று முகப்பில் தெரிந்தது. அப்போது நண்பர் சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அவர் பதிவிற்கு சென்று பார்த்தேன். நல்ல வேளையாக அவர் பதிவில் தேடும் வசதியை வைத்திருக்கிறார். அதை பயன்படுத்தி என்னை பற்றிய பின்னூட்டத்தை கண்டுபிடித்தேன். படித்ததும் பயங்கர அதிர்ச்சி. ரொம்ப தரக் குறைவான வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார்.

அவர் பின்னூட்டம் 1 :
//Blogger -/பெயரிலி. said...

சஞ்சய் என்ற wannabe 15-sec பதிலே
போட்டபின்னூட்டம்

=================
சஞ்சய்
வேண்டுமானால், தமிழ்மணத்துக்கு நீக்கும்படி ஓர் அஞ்சலைப் போடுங்கள். உங்கள் பதிவினை நீக்கிவிடலாம்.உங்களுக்குத் தொல்லையில்லாமல், தமிழ்மணத்துக்கும் தொல்லையில்லாமல் நீக்கிவிடலாம். நீங்கள் எவர் ஆணையையோ ஏற்கும் தமிழ்மணத்தின் ஆணையை ஏற்கத்தேவையில்லை.
எவ்வளவு விரைவிலே கீழ்க்கண்ட
admin@thamizmaNam.com முகவரிக்கு நீக்கும்படி கேட்டு அஞ்சலை அனுப்புகின்றீர்களோ அவ்வளவு விரைவாக நீக்கிவிடலாம்.

இல்லை, இப்படியாக பரபரப்புக்கு எங்கவீட்டுக்கோழியும் முட்டைபோடும், எங்க வூட்டுக்காரரும் நெட்டுல ப்ளாக்கு வாங்கியீருக்கார் ரேஞ்சுல உங்கள் இருப்பைக் காட்ட விரும்பினால், அதை இந்த லெவலுல இதே கிண்டலுடன் அனுமதிக்க தமிழ்மணம் எவரின் ஆணையையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.

இதைப் போடாவிட்டாலும் பரவாயில்லை. என்பதிவிலே பின்னூட்டி வைத்துக்கொள்கிறேன்.

Wed Jul 16, 07:18:00 AM 2008//

இந்த பதிவர் இப்படி ஒரு பின்னூட்டமே எனக்கு போடவில்லை. அபப்டி போட்டிருந்தால் அது தானாகவே பிரசுரம் ஆகி இருக்கும். என்னால் தடுத்திருக்க முடியாது. ஏனென்றால் நான் மட்டுறுத்தலை நீக்கி பல மாதங்கள் ஆகிறது.

//எவ்வளவு விரைவிலே கீழ்க்கண்ட
admin@thamizmaNam.com முகவரிக்கு நீக்கும்படி கேட்டு அஞ்சலை அனுப்புகின்றீர்களோ அவ்வளவு விரைவாக நீக்கிவிடலாம்
//

இதை சொல்ல இவர் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் இவர் யாரென்றே எனக்கு தெரியாது. இதர்கு முன் இவர் பதிவுகள் எதையும் நான் படித்ததும் இல்லை. இவரை பற்றி நான் கேள்விப்பட்டதும் இல்லை. இவர் யாராக இருந்து தொலைத்தாலும், நான் தமிழ்மணத்தில் தான் என் பதிவுகளை இணைத்துள்ளேன். நான் எழுதிய அந்த குறிபிட்ட பதிவு தமிழ்மணத்திற்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால் , அதை எழுதிய நான் தமிழ்மணத்தை பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்மணம் முடிவு செய்தால் அதை அதிகாரப் பூர்வமாக தமிழ்மணம் அல்லது அதன் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் அறிவிக்கட்டும். அந்த அறிவிப்பை கண்ட அடுத்த வினாடி என் வலைப்பூக்களை விலக்க சொல்லும் வேண்டுகோள் அவர்களுக்கு போகும். நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்பவன். எங்களுக்கு தன்மானத்தை விட பெரியது எதுவும் இல்லை. நான் என் வலைப்பூவை தமிழ்மணத்தில் இணைத்திருக்கும் போது அவர்கள் தான் இந்த கோரிக்கையை வைக்க வேண்டும். கண்ட கண்ட அனாமதேயங்களுகெல்லாம் இதை சொல்லும் உரிமை கிடையாது...

தமிழ்மணம் என்பது ஒரு திரட்டி. வலைத்தளம் இல்லை. அதன் வேலை அதில் இணைக்கப்பட்டுள்ள பதிவுகள திரட்டுவது மட்டும் தான். தமிழ்மணம், தனக்கென சொந்தமான ஆக்கங்களால்/படைப்புகளால் செயல்படும் வலைத்தளம் அல்ல. அதன் வளர்ச்சியே அதில் இணைக்கப்பட்டுள்ள வலைப்பூக்களால் தான். ஆகவே அந்த வலைப்பூக்களுக்கு சொந்தமானவர்கள் தமிழ்மணத்தின் செயல்பாடுகள் அல்லது கொள்கைகளில் குறை இருப்பதாக தெரிந்தால் சுட்டிக்காட்டும் அல்லது தட்டிகேட்கும் உரிமை பெற்றவர்கள் தான். நான் தமிழ்மணத்தில் இணைந்த பின்பு ஆங்கிலத்தில் எழுதி இருந்த சில நண்பர்களை தமிழில் எழுதவைத்து தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறேன். ஆகவே கேள்வி கேக்கவும் எனக்கு உரிமை இருக்கிறது. இணையத்தில் நாம் பயன்படுத்தும் பல சேவைகளில் குறை இருப்பின் அந்த சேவை அளிப்பவரை விமர்சிக்கிறோம். கேள்வி கேட்கிறோம். யாரும் வெளியே போ என்று சொன்னதில்லை. யாஹூ, கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் உட்பட. :)..

பின்னூட்டம் 2 :

//Blogger -/பெயரிலி. said...

இவ்ளோதான், இந்த போலித்தனமான சஞ்சய் வீரம்;
மேலே போட என் பின்னூட்டத்தினை விடவில்லை; ஆனால், அதற்குப் பிறகு நான் அநாமதேயமாக காப்பரேட் குறித்துப் போட்ட பின்னூட்டத்தினை விட்டிருக்கிறார்.
நாளைக்கு காலவரிசைப்படி, நான் போட்ட பின்னூட்டம் பொருந்தி அங்கே இருந்தால், அவருடைய நான் அனுமதித்தேனே க்ளெய்ம் சரியென்று படாமலிருக்க எதற்கும் ஒரு திரைச்சொட்டு இப்போது எடுத்திருக்கிறேன். வர வர எவரையுமே நம்பமுடிவதில்லை

அது இங்கே

Wed Jul 16, 07:36:00 AM 2008//


அட அனாமதேயமே... மூளை என்ற ஒரு வஸ்து இருக்கா உமக்கு?. நீங்க மேலே சொல்லி இருக்கிற பின்னூட்டமே எனக்கு வரலையே. அப்புறம் எங்க போயி உங்க பின்னூட்டத்த விடறது?.. எனக்கு நீங்க அந்த பின்னூட்டம் போட்டிருந்தா தானாகவே பிரசுரமாகி இருக்கும். ஏனெனில் முன்பே சொன்ன மாதிரி நான் பின்னூட்டம் மட்டுறுதல் செய்வதில்லை.உங்களுக்கு முன்பு தமிழ்மணத்தின் நிர்வாகிகளுல் ஒருவரான திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் போட்ட பின்னூட்டம் பாருங்க. அடுத்து உங்கஅனாமதேய பின்னூட்டம் பாருங்க.கீழே ஆதாரம்....பொதுவாக மட்டுறுத்தல் இல்லாத பின்னூட்டங்களுக்குத் தான் மின்னஞ்சலாக வரும் நேரமும் பின்னூட்டம் இட்ட நேரமும் ஒன்றாக இருக்கும். மட்டுறுத்தல் செய்யப்படும் பின்னூட்டங்களில் நேரம் மாறி இருக்கும். அதாவது பின்னூட்டம் இட்ட நேரத்திற்கு பிந்தைய நேரமே மின்னஞ்சல் வந்த நேரமாக இருக்கும்.மட்டுறுத்தல் செய்யப்படும் பின்னூட்டங்களில் பின்னூட்டமிட்ட நேரமும் மின்னஞ்சல் வந்த நேரமும் வேறு வேறாக இருக்கும். பின்னூட்டம் இடுவதற்கும் அதை மட்டுறுத்தி வெளிவருவதற்கும் மிக குறந்த பட்ச நேர வித்தியாசமாக இருக்கும்.

இதில் எதற்காக திரு. சுந்தரமூர்த்தி அவர்களின் பின்னூட்டமும் போட்டிருக்கிறேன் என்றால், ஒருவேளை உங்களின் அனாமதேய பின்னூட்டம் வரும் போது மட்டுறுத்தல் நீக்கி இருக்கலாம் என்று நீங்கள் கூறுகெட்ட தனமாக வாதிடக் கூடும். அதற்கு தான்.

//நாளைக்கு காலவரிசைப்படி, நான் போட்ட பின்னூட்டம் பொருந்தி அங்கே இருந்தால், அவருடைய நான் அனுமதித்தேனே க்ளெய்ம் சரியென்று படாமலிருக்க எதற்கும் ஒரு திரைச்சொட்டு இப்போது எடுத்திருக்கிறேன். வர வர எவரையுமே நம்பமுடிவதில்லை

அது இங்கே//

இதை திரும்ப திரும்ப படித்து சிரித்துக்கொண்டிருந்தேன். :)))... போடாத பின்னூட்டத்திற்கு திரைசொட்டு எடுத்தாராம்ல திரை சொட்டு.. :))


//இவ்ளோதான், இந்த போலித்தனமான சஞ்சய் வீரம்//

யார் போலி என்று இப்போது எல்லோரும் அறிந்திருப்பார்கள்.:)) மேலும் என் வீரத்தை பற்றி இந்த அனாமதேயம் பேசி இருக்கிறது, இதனிடன் என் வீரத்தை நிரூபிக்க நான் தயார். இந்த அனாமதேயம் தயாரா என்பதை அறிய ஆவல். :))

Monday, 11 August, 2008

Best Languages Blog of month for July 2008.. By LinQ.


அட என்ன கொடுமைங்க இது? நானே என் ப்ளாக் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆகுது. எங்க வீட்டு குட்டிபசங்க ஃபோட்டோ சேக்கறதுக்காக இன்னைக்கு என் வலைப்பூ பக்கம் வந்தேன். linQ பட்டைல எதோ மாறுவது போல் இருந்தது. என்னடானு பாத்தாக்கா "Best Languages Blog of month for July 2008" என்று இருந்தது. அதை அமுக்கிட்டு போனாக்கா அட ஆமாங்க .. வவாசங்கம் மற்றும் கோவியாருக்கு நடுவில் என்னோட வலைப்பூவையும் மொழிப் பிரிவில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வலைப்பூவாக தேர்ந்தெடுத்திருக்காங்க. அல்லாரும் ஜோரா ஒருக்கா கை தட்டுங்க. :))

நம்ம தலைங்க மங்களூர் சிவா 11வது ரேங்குடனும், கோவியார் 15வது இடத்திலும், லக்கியார் 16வது இடத்திலும் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்கள். ;))

ஹைய்யா...இந்த மாச கணக்குல பதிவு போட ஒரு மேட்டர் கிடைச்சிருச்சி.... :))

Tamiler This Week