இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner
Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts

Monday, 29 June 2009

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு” திருக்குறள் - 396

“மணற்கேணி- 2009”


சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

Feel Good

இன்றைக்கு பதிவுலக்கு வெளியே பதிவுலகைப் பற்றி இருக்கும் ஒரு மறைமுக அறைகூவல், பதிவர்கள் எனப்படும் இணைய எழுத்தாளர்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுத முடியுமா என்பதே. முன்னோடி எழுத்தாளர்கள் முதல் பொதுத்தள ஊடகங்கள் வரை இந்தக் கேள்வியை மறைமுகமாக கேட்டுவருகின்றன மேலும் பதிவர்களின் எழுத்துத் திறன் பற்றி பொதுமக்களிடம் பேசத் தயங்குகின்றன.அது தவிர பொதுமக்களிடையே பதிவுலகம் பற்றிய அறிமுகங்கள் இல்லாததற்கு முதன்மைக் காரணி கணினி மற்றும் இணைய இணைப்பு அனைவரிடம் இல்லை என்பதே. இவை வெளிப்படையான காரணங்கள் என்றாலும், இணையத்தில் எழுதுகிறேன், இணைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பிறரிடம் சொன்னால் அவர்கள் உடனடியாக ஐஆர்சி எனப்படும் இணைய உரையாடியில் வெட்டிப் பேச்சு பேசுவரோ என்றே நினைக்கிறார்கள்.

இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இணையத்தில் வெளியிடப் பட்டக் கட்டுரைகள் இவை என்று பொதுமக்கள் முன்பு அத்தகைய ஆக்கங்களைக் கொண்டு செல்லும் முயற்சி பெரிய அளவில் மேற்கொள்ளப் படவில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. பதிவுலகம் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர இது குறையன்று.

பதிவுலகில் பலரும் மிகவும் சிறப்பாக எழுதுகிறார்கள், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்கள், அவர்களின் எழுத்துகள் பொதுமக்கள் முன் கொண்டு செல்ல பொதுத்தள ஊடகங்களையே நாட வேண்டி இருக்கிறது, அத்தகைய ஊடகங்கள் வெளியிட்டால் அது தன் எழுத்துக்கான பரிசு என்று நினைத்து மகிழும் நிலையில் பதிவர்கள் இருக்கிறோம். ஒருவரது எழுத்து பரவலாக ஏற்கப் படுவது ஊடகங்களைக் சார்ந்தது அல்ல, அது முழுக்க முழுக்க ஒருவரின் எழுத்தின், கருத்தின், எழுத்தாழத்தின் தன்மையைச் சார்ந்தது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும். அன்றாடம் எழுதுகிறோம், ஆழமான கட்டுரைகளை நம்மாலும் எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நாம் சிறந்த எழுத்தாளர் என்கிற உண்மையை நாமே உணர்வோம். அத்தகைய நல்ல வாய்ப்புகளை சிங்கைப் பதிவர்களும், தமிழ்வெளி திரட்டியும் ஏற்படுத்திக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறது.

மணற்கேணி 2009

கிணறு வேண்டும் என எண்ணிய பிறகு வெறும் மணல் தான், ஆழமாக தோண்ட தோண்ட அதனுள் நீர் இருப்பது, சுரப்பதும் நமக்கு தெரியவருகிறது. நம் எழுத்துக்கள் வெறும் எண்ணங்களாலும், நடப்புகளாலும் எழுதப்படுவதைவிட ஒரு குறிக்கோள் அதாவது ஒரு தலைப்பின் கீழ் எண்ணங்களைக் குவித்து தகவல்களைத் திரட்டி சிறப்பான ஆக்கமாக மாற்றும் போது அது ஒரு படைப்பாகப் போற்றப்படும். பதிவர்களை ஊக்குவித்து, பரிசளித்து, பதிவர்களை மற்றும் ஒரு பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல, சிங்கைப் பதிவர்கள் எடுக்கும் சிறு முயற்சியின் முதல் வித்து மணற்கேணி - 2009.

இந்த ஆண்டுக்கான மணற்கேணி - 2009 போட்டி சூலை 01, 2009 துவங்குகிறது. பதிவர்கள் தங்கள் கருத்தாக்கங்களை போட்டிப் பிரிவுகளுக்கான மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஆகச்டு 15, 2009 23:59:59 (தமிழக நேரம்)க்குள் அனுப்ப வேண்டும். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பதிவு வைத்திருப்பது கட்டாயம் இல்லை என்றாலும் இட்டீடு(விவாதம்) வேண்டி பதிவிடுவதை ஊக்குவிக்க விரும்புகிறோம். இயன்ற வரை தனித்தமிழில் ஆக்கங்களைத் தர முயலுங்கள். முனைப்பிற்கான முயற்சி இது. போட்டி ஆரம்பமாகும் தினத்திற்கு முன்போ அல்லது போட்டி கடைசி தினத்திற்கு பின்போ வரும் கருத்தாய்வுகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ள இயலாது, போட்டிக்கு அனுப்பும் கடைசி நாள் வரை போட்டி கருத்தாய்வு வலைப்பதிவுகளிலே அல்லது எந்த விதத்திலும் எங்கேயும் வெளியாகியிருக்க கூடாது, போட்டி விதிமுறைகள் சூலை 01,2009 அன்று வெளியிடப்படும்...

கருத்தாய்வு போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது, ஒவ்வொரு பிரிவிலும் பல தலைப்புகளின் கீழ் நடைபெறுகிறது, இது தொடர்பான விவரங்களை போட்டி தலைப்புகள் என்ற சுட்டியின் கீழ் காணலாம். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒருவர் என மொத்தம் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்து ஒரு கிழமை(வாரம்) தங்கி சுற்றுபயணம் செய்யலாம்

இணைப்பு தர

மணற்கேணி 2009 பற்றிய விளம்பரத்தை உங்கள் தளங்களில் இட்டு இம்முயற்சியை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்

போட்டி அறிவிப்பை உங்கள் தளத்தில் பதிய இந்த வலைப்பூவின் மேல்பகுதியில் வலது ஓரத்தில் இருக்கும் “ add மணற்கேணி - 2009 widget" என்ற பொத்தானை அமுக்கவும். தானாக உங்கள் தளத்தில் இணைந்துக் கொள்ளும்.


ஹிஹி.. இந்தப் பதிவுக்கும் தமிழ்மணம்ல ஓட்டுப் போடுவீங்களாம்.. :)

Friday, 4 April 2008

ஏப்ரல் மாத PIT போட்டிக்கு

கடந்த வாரம் ஊருக்கு போயிருந்த போது எடுத்தது. இந்த மாத PIT தலைப்புக்கு பொருந்துவது போல் தோன்றியது...








அபப்டியே இங்கயும் பாக்கலாம்.. http://www.flickr.com/photos/sanjaimgandhi/

Saturday, 29 December 2007

நச்சுன்னு 1000 கள்ள வோட்டு, வாங்க வாங்க... குட்டீஸ் டீல்,



நம்ம சர்வேசன் மாமா நச்சுன்னு ஒரு கதை போட்டி வெச்சிருக்காரு.ஏதோ ஐந்து ஆறு கதைதான் போட்டிக்கு வரும்ன்னு நெனச்ச சர்வேசன் மாமா 57 கதை வந்ததுல அரண்டு போயிட்டாரு. முதல் பரிசுக்குண்டான கதையை தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைப்படி தேர்தல் அறிவித்திருக்கிறார்.

இங்குதான் குட்டீஸ் நமக்கு முக்கியத்துவம் வருகிறது.இந்த தேர்தலில் குட்டீஸ் நம்ம வாக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.நாமளே குட்டீஸ் நமக்கு கதைல்லாம் புரியவா போவுது அதுனால நம்ம வோட்டுக்களை வைத்து நாம் நினைக்கும் விஷயங்களை சாதித்துக்கொள்வோம்.

நம் பலம் பாருங்க. நம்மகிட்டயே மொத்தம் 11 வோட்டு இருக்கு.இது இல்லாம நாம புடிக்கும் அடத்துல நம்ம அப்பா அம்மா வோட்டும் நாம சொல்றவங்களுக்கே போட வைச்சுட்டாப்போச்சு அதுல ஒரு 20 தேறும். அப்புறம் நம்ம இம்சை மாமா ஸ்டூடண்ட்ஸ்க்கு இம்சை மாமா மேல ரொம்ப மரியாதையாமா. இம்சை மாமாக்கு நம்ம சங்கத்து சிங்கம் பவன் மேல பயம் கலந்த மரியாதையாமா. சோ நம்ம சிங்கம் பவன் சொன்னா இம்சை மாமா ஸ்டூடண்ட்ஸ் 600 பேருக்கும் அவங்க மெயில் ஐடி ய வெச்சு வோட்டு போட தயாரா இருக்காங்க.(அவங்களுக்குள்ளாம் தமிழே தெரியாதாம் அதனாலென்ன? ) நந்து மாமா கதை எழுதுன மேட்டர் தெரிஞ்சு அவரு ப்ரண்ட்ஸ் சொந்தம் பந்தம்லாம் வோட்டுப்போட ரெடியா இருக்காங்க

அப்படி இப்படின்னு ஒரு 1000 வோட்டு ரெடியா இருக்கு. பிசாத்து 45அல்லது50 வோட்டுக்கள்தான் மொத்தத்துக்கே விழுதாம். குட்டீஸ் நாங்க கைய காட்டுனா 1000 வோட்டும் ஒருத்தருக்கே.

வோட்டு தேவைபடரவங்க எங்க டீல் என்னன்னு தெரிய எங்க குட்டீஸ்கார்னர் மெயில் ஐடிக்கு தனியா வந்து பேசவும். பொதுவில் பேசினால் தலைமை தேர்தல் சர்வேஷனர் தேர்தலை நிறுத்தும் அபாயம் இருக்கிறது.

இது ஒரு அரிய வாய்ப்பு குட்டீஸை அணுகி பயனடைவீர்

Friday, 7 December 2007

டிசம்பர் மாத PIT போட்டிக்கு

ரொம்ப கஷ்ட படாம எங்க வீட்டு காம்பௌண்ட் சுத்தியே எடுத்துட்டேன். :-) இந்த பூக்களை எல்லாம் போட்டிக்கு எடுத்துப்பாங்களா தீபா ஆண்டியும் செல்லா அங்கிளும்? :)




Thursday, 6 December 2007

பபாசங்கம் போட்டி - நடந்தது என்ன?



சென்ற மாதம் பபாசங்கத்து தங்கங்கள்( நன்றி : G3 ஆண்ட்டி ) ஒரு போட்டியை அறிவித்து இருந்தார்கள். ஆனால் பாவம் யாருமே அந்த போட்டியில் கலந்துக் கொள்ள முனனும் வரவில்லை... பின்னும் வரவில்லை. யாராவது ஒருவராவது கலந்து கொள்வாரா என எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சங்கத்து தங்கங்கள் ஆள் வைத்து( அடியேன் உட்பட) அந்த போட்டி அறிவிப்பு பதிவுக்கு பின்னூட்டம் போட்டு 27ம் தேதி வரை இழு இழு என்று இழுத்து அந்த பதிவு தமிழ்மணத்தில் தெரிந்துக் கொண்டே இருக்கும் படி பார்த்துக் கொண்டார்கள். அப்படியும் யாரும் போட்டியில் கலந்துக் கொள்ளவில்லை.

பொதுவாக ஒரு போட்டியை அறிவிக்கும் நிறுவனம் மற்றும் அதை சார்ந்தவர்கள் அந்த போட்டியில் கலந்துக் கொள்ளக் கூடாது என்ற விதியையும் மீறி, வேறு வழியே இல்லாமல் சங்கத்து உருப்பினரே ஒரு பதிவை (என்ன கொடுமை சார் இது??) போட வேண்டிய நிலைக்கு வர வேண்டியதாகிவிட்டது. அதற்கடுத்தும் யாரும் போட்டியில் கலந்துக் கொள்ளவில்லை. இதை கண்டு வெறுத்து போன மை ஃப்ரண்ட் அத்தை "சாவடிக்கிறாங்களே என்னைய!!!!!" என்று புலம்பி " போட்டி முடிய இன்னும் நாளே நாள்.. இன்னும் தாமதம் ஆகுல.. வாங்க.. " என்று கெஞ்சும் நிலைக்கு தள்ளப் பட்டது அனைவரும் அறிந்ததே. அப்படியும் யாரும் வரவில்லை.

இப்படி ஒரு அவலநிலைக்கு ஆளாகி விட்டதை எண்னி மனம் நொந்து போன பபாச தங்கங்கள் என்ன கொடுமை சார் இது என்று தலையிலடித்துக் கொண்டு யோசித்து பின் ஏகமனதாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது சங்கத்து செயர்குழுவை கூட்டுவதென்று. இந்த கொடுமையான விஷயம் வெளி உலகத்திற்கு தெரியும் முன் எதாவது செய்தாக வேண்டும் என்று விவாதித்ததில் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

"என்ன கொடுமை சார் இது?" என்று யாரவது தங்கள் பதிவில் தப்பி தவறி சொல்லி இருந்தால் அந்த பதிவை தாங்களே முன்சென்று அதை போட்டிக்கு எடுத்துக் கொண்டு அந்த பதிவரையே வெற்றியாளராக அறிவித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். எப்படியும் வெற்றியாளர் என்று அறிவிப்பதாக சொன்னால் அந்த பதிவரும் தான் அந்த போட்டியில் கலந்து கொண்டதாக வெளியே பீற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அவர்கள் இந்த அரிய முடிவுக்கு வந்தார்கள்.

பிறகு வலை வீசித் தேடியதில் கண்ணில் பட்டது தான் நம்ம குசும்பன் அங்கிளின் "பெண்களை குட்டினால் என்ன ஆகும்? அது தப்பா?"பதிவு. இந்த பதிவுக்கும் போட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். இந்த பதிவின் கடைசியில் எதேச்சையாக " என்ன கொடுமை சார் இது" என்ற டயலாகை சொல்லி இருப்பார். வேறு வழியே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த சங்க தங்கங்களுக்கு இது சொக்கத் தங்கமாய் தெரிய உடனே குசும்பன் அங்கிளை தொடர்பு கொண்டார்கள்.

இது தான் சந்தர்ப்பம் என நினைத்த குசும்பன, இந்த உள்குத்திற்கு சம்மதிக்க வேண்டுமெனில் சில நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஏகப் பட்ட நிபந்தனைகளை விதித்தார். பேச்சு வார்த்தை விரைவில் முடிந்து ஒரு சுபமான முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் "போட்டிக்கு வந்த படைப்புகளில் பரிசு பெற்றவங்கள தேர்ந்‍தெடுத்து இன்னும் ரெண்டு நாள்ள அறிவிப்பு வெளியிடறோம்." என்று அவசரமாக டிசம்பர் 1 அன்று நன்றி சொல்லி அறிவிப்பெல்லாம் கொடுத்து அமர்க்களப் படுத்தினார்கள்.ஆனால் பேச்சுவார்த்டை நீண்டு கொண்டே போனதில் டிசம்பர் 6ம் தேதி தான் உடன்பாடு கையெழுத்தானது. இறுதி செய்யப்பட்ட நிபந்தனைகள் வருமாறு :-

1. பரிசு வழங்குவதற்கு பிரமாண்டமான விழா ஏற்பாடு செய்ய வேண்டும்.
2. தன் தலைவி ஸ்ரேயா கோசல் கைய்யால் விருது வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் வரும் கலக்கல் மன்னர்கள் மாதிரி கோட் அணிய வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.


இதில் முதல் நிபந்தனை பற்றி கவலை இல்லை. இருகவே இருக்கு Youtube. 3வது நிபந்தனை பற்றியும் கவலை இல்லை. குசும்பனே போட்டோஷாப்பில் கோட் மாட்டிக்கொள்வார். 2வது நிபந்தனை பற்றி தான் சங்க தங்கங்களுக்கு பெரும் கலக்கம். இங்கும் குசும்பனே கை கொடுத்துவிடார். இதை அமுக்கி இதில் 2வது படத்தையும் , இதை அமுக்கி இதில் ஸ்ரேயா போட்டியாளரை அறிவிப்பதாக பாவ்லா காட்டும் படத்தையும் பாருங்க.

ஸோ குசும்பன் புண்ணியத்தில் சங்கத்து சிங்கங்கள் ஆறு நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நிம்மதி பெருமூச்சி விட்டுக் கொண்டார்கள்.

Friday, 16 November 2007

இந்த காலத்து குட்டீஸ் - பதில்

டியர் அமாஸ்..( அத்தைஸ் and மாமாஸ்)
என்னோட இந்த காலத்துக் குட்டீஸ் - ஒரு போட்டி மாதிரி பதிவுக்கு கிடைத்த அமோக:( ஆதரவையும் வரலாறு:( அஜித் படம் இல்ல) காணாத வரவேற்பையும் கண்டு சொல்லவொண்ணா ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். (கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...) அந்த ஆனந்தத்தில் இருந்து கொஞ்சம் என்னை விடுவித்துக் கொண்டு பதிலை சொல்லி விடுகிறேன். இன்றும் சொல்லவில்லை என்றால் ஜெஸிக்கா அத்தை என்னைக் கொன்றுவிடுவார். :P .


காட்சி 1 : அவங்க வீட்ல ஒரு குட்டி பையன்( நம்ம சங்கத்து ஆள் ) இருக்கான்.. நம்ம நிலா மாதிரி கொஞ்சம் வாலு. கொஞ்ச நாள் முன்னாடி அவர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்திருக்கு. அது அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை பற்றிய அழைப்பு. இவர் எதிரில் இருப்பவருடன் மிகுந்த கோபத்துடன் பேசி இருந்திருக்கார். அப்போது அருகில் இருந்த அவர் மகன், அப்பா நான் பேசறேன்.. நான் பேசறேன்.. என்று தொந்தரவு செய்திருக்கான். இவர் இருந்த டென்ஷனில், பேசிட்டிருக்கேன்ல எதுக்குடா தொந்தரவு பன்ற என்று அவர் மகனை அடித்துவிட்டாராம். அவனும் அழுதுகொண்டே சென்று விட்டானாம்.

காட்சி 2 ( போட்டிக்கானது): அடுத்த 2 மணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்து மீண்டும் தொ.அழைப்பு வந்திருக்கு. அந்த டீலர் மாமா வேறு அறையில் இருந்தாராம். அப்போது நம்ம சங்கத்து ஆள் தொலைபேசி அருகில் இருந்தானாம்.

அடுத்து அங்க நடந்தது:

அந்த டீலர் மாமா வருவதற்குள் நம்ம சங்கத்து ஆள் போனை எடுத்து பேச ஆரம்பித்துவிட்டார். டீலர் மாமா அங்கு வந்து நம்ம ஆளிடம் போனை கேட்டிருக்கார். அதற்கு நம்ம ஆள் சொன்ன பதில் " இப்போ நான் பேசிட்டிருக்கேன்ல.. எதுக்கு தொந்தரவு பன்றிங்க.. அடிச்சிடுவேன் போங்க".
( அந்த டீலர் மாமா அழுது கொண்டே எல்லாம் போய்விட வில்லை.. மகனின் சாதுரியத்தயும் வால் தனத்தையும் நினைத்து அவன் தலையில் லேசாக தட்டி போனை வாங்கி பேசினாராம்.:-) இதில் கற்பனை எதும் இல்லை. அவர் சொன்னதை அப்படியே இங்கு சொல்லிவிட்டேன்.)

அதான் தலைப்பிலே சொல்லி இருக்கேன்ல.. இந்த காலத்துக் குட்டீஸ்னு.. சட்டுடு புரிஞ்சிக்க வேணாமா? :) . உங்க வீட்லயும் இது மாதிரி குட்டீஸ் வால்த் தனம் எதும் நீங்க ரசிச்சி இருந்தா kuttiescorner@gmail.com க்கு அனுப்பி வைங்க.. நிலா(அப்பா) அத படிச்சிட்டு குட்டீஸ்கார்னர்ல போடுவார். நீங்க ரசிச்சத நாங்களும் ரசிக்கிறோமே.. ரெடி..ஸ்டார்ட்... அனுப்பிடு சீசே... :)

Tuesday, 13 November 2007

இந்த காலத்து குட்டீஸ்... ஒரு போட்டி மாதிரி!

ஆளாளுக்கு அவங்க பிளாக்ல ஒரு போட்டி நடத்துறாங்களே.. நாமளும் எதுனா ட்ரை பண்ணலாம்னு யோசிச்சிட்டிருந்தப்ப தான்( நம்ப மாட்டிங்களே) இந்த போட்டிக்கான ?! கரு (ஹிஹி.. அப்டி தான சொல்லனும்..) கிடைச்சது.

இத குட்டீஸ் கார்னர்ல தான் போடலாம்னு இருந்தேன். நான் மை ப்ரண்ட் ஆண்ட்டியின் சமீபத்திய பதிவுக்கு போய் அவர் குட்டீஸ் கார்னரில் வெட்டியாய் எடத்த அடச்சிகிட்டு அவர் பிளாக்ல மட்டும் பதிவு போடறத பத்தி போட்ட ஒரு பின்னூட்டத்துக்கு எனக்கு ஜிடாக்கில் வந்து பதில் சொன்னார். அதான் அங்க நீங்க எல்லாரும் ஒரு நாளைக்கு 4 பதிவு போடறிங்களே. எங்க ஈ ஒட்டிட்டிருக்கோ அங்க எல்லாம் போஸ்ட் போட்டு கடமையைய் தவறாமல் செய்யறேன்னு சொன்னாங்க.( அப்பாடா போட்டு குடுத்தாச்சி:P ). அப்போ தான் எனக்கும் லேசா உறைச்சது. நாம கூட பொடியன் என்ற பேர்ல ஒரு பிளாக் ஆரம்பிச்சி அப்புறம் குட்டீஸ் கார்னர் ஆரம்பிச்சதும் அத மறந்துட்டோமே என்று.
அதான் இந்த பதிவ இங்கன போட்டுறலாம்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப டேங்ஸ் ஆண்ட்டி:P.
இதோ விஷயத்துக்கு வாரேன்..:)

இன்னிக்கு சாயங்காலம் என்னோட டீலர் மாமா ஒருத்தர பார்க்க போயிருந்தேன். நான் பொதுவா எங்க டீலர்ஸ்கிட்ட பிஸினஸ் பேசரத விட வெட்டிகதை பேசறது தான் அதிகமா இருக்கும்( அந்த கம்பெனி எங்க போய் உருப்படப் போகுதுனு தான மனசுக்குள்ள திட்றிங்க ). இன்னைக்கு எதேதோ( தப்பா எதும் இல்லீங்கோ:P ) பேசிட்டிருக்கும் போது அவங்க வீட்ல நடந்த ஒரு கலாட்டவ பத்தி சொன்னார்.

அவங்க வீட்ல ஒரு குட்டி பையன்( நம்ம சங்கத்து ஆள் ) இருக்கான்.. நம்ம நிலா மாதிரி கொஞ்சம் வாலு. கொஞ்ச நாள் முன்னாடி அவர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்திருக்கு. அது அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை பற்றிய அழைப்பு. இவர் எதிரில் இருப்பவருடன் மிகுந்த கோபத்துடன் பேசி இருந்திருக்கார். அப்போது அருகில் இருந்த அவர் மகன், அப்பா நான் பேசறேன்.. நான் பேசறேன்.. என்று தொந்தரவு செய்திருக்கான். இவர் இருந்த டென்ஷனில், பேசிட்டிருக்கேன்ல எதுக்குடா தொந்தரவு பன்ற என்று அவர் மகனை அடித்துவிட்டாராம். அவனும் அழுதுகொண்டே சென்று விட்டானாம்.

அடுத்த 2 மணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்து மீண்டும் தொ.அழைப்பு வந்திருக்கு. அந்த டீலர் மாமா வேறு அறையில் இருந்தாராம். அப்போது நம்ம சங்கத்து ஆள் தொலைபேசி அருகில் இருந்தானாம்.

போட்டி !? : இப்போது அங்கு என்ன நடந்திருக்கும்?

சரியான பதிலை சொல்பவர்களுக்கு குட்டீஸ் கார்னரில் ஒரு வாரம் ஸ்டார் அந்தஸ்து வழங்கப் படும். ( தமிழ்மணத்துக்கே நாங்க இப்போ போட்டியாக்கும்:P ).

~போட்டி வெள்ளிக்கிழமை மதியம் இந்திய நேரப் படி முடிவடையும்.~

Tamiler This Week