இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Wednesday, 26 November, 2008

செல்லம்.. ஐ லவ் யூ டி..

கல்யாணம் முடிந்து சொந்த பந்தங்களின் விருந்து, ஊர்சுத்தல் எல்லாம் முடிந்து வந்துவிட்டோம். இன்று நாங்கள் இருவர் மட்டுமே இருக்கும் முதல் நாள். வித்தியாசமான உணர்வு.. உறக்கம் இன்ஸ்டால்மெண்டில் தான் வந்தது. ஒருவழியாய் விடியல் வந்துவிட்டது.. மெதுவாக போர்வை விலக்கி மொபைலில் நேரம் பார்க்கிறேன்.. ஆஹா மணி 6.30..


என்ன இவள்.. என்னை விட மோசமான்வளா இருப்பாள் போல.. இன்னும் எந்திரிக்கலையா.. எழுப்பலாமா.. இல்லை.. இன்று தான் இருவரும் தனியாய் ஆரம்பிக்கும் முதல் நாள்.. அவள் விருப்பத்திற்கு இருக்கட்டும்.. மெதுவாய் விழிக்கட்டும்.. ஹ்ம்ம்ம்.. இல்லை.. எழுப்பலாம்... அவள் கையால் இன்று ஒரு அதிகாலை காபி குடிக்கலாம்.. வேறு வழி இல்லை.. எழுப்பி விட வேண்டியது தான்..

அட.. போர்வை காலியாய் இருக்கே.. முன்னாடியே எழுந்திட்டா போல.. டேய் உனக்கு இப்படி ஒரு பொறுப்பான பொண்டாட்டியா? இருக்காதே.. தப்பாச்ச்சே.. சரி.. விதி வலியது.. நமக்கும் இப்டி வந்திருக்கு போல..

படுக்கை அறைக் கதவு லேசாய் திறந்து இருக்கு.. எங்கிருந்தோ லைட்டா வெளிச்சம் வருதே.. அட.. ஹாலில் லைட் எரியுது.. வீட்டை கூட்டி பெருக்கிட்டு இருக்கா.. அடியேய் கிராதகி.. எனக்கு டஸ்ட் அலர்ஜிடி.. இங்கயும் கூட்டல் பெருக்கலை பண்ணாதே.. இந்த அறை தவிர மற்றவை மட்டும் பெருக்கு.. ஹ்ம்ம்.. நான் மனசுல நெனைக்கிறது அவளுக்கு கேட்கவா போகுது.. கொஞ்ச நேரம் ஆய்டிச்சி.. ஆஹா.. நிஜமாவே இந்த அறை கூட்ட வரலை.. செல்லம் ஐ லவ் யூ டி..

எதோ கமகமன்னு வாசம் வருதே.. குளிச்சிட்டு தலை நிறைய பூ வச்சிருப்பாளோ.. ஹ்ம்ம்.. இருக்கும்.. இருக்கும்..வாசம் இப்போ அதிகமாய் வருதே.. ஆமாம்.. என்னை நோக்கித் தான் வரா.. அச்சச்சோ.. இந்த நேரத்துலையே எனனை எழுப்ப ட்ரை பண்ணுவாளோ.. முதல் நாளே எப்படி எரிஞ்சி விழறது.. அதுககாக நல்லவன் மாதிரி நடிச்சி எழுந்திட்டாலும் தினமும் இவ்ளோ சீக்கிறம் எழுப்ப ஆரம்பிச்சிடுவாளே..

சரி .. என்னதான் பண்றான்னு பார்ப்போம்.. அய்யோ.. பக்கத்துல வந்துட்டா.. டேய் கண்ணை மூடிக்கோ.. ஹ்ம்ம்.. ஆச்சு.. அச்சச்சோ இதென்ன கலாட்டா காலைத் தொட்டு கும்பிடறாளே.. ஆஹா.. இந்தக் காலத்துல இப்படி ஒரு பொண்ணா.. டேய்... நீ உனக்கே தெரியாம எதுனா புண்ணியம் பண்ணி இருக்கியாடா?.. அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லையே.. சரி.. மறுபடியும் விதி வலியது..!
ஹாலின் வெளிச்சத்தை கடன் வாங்கி இருப்பதால் இங்க தெளிவா எதுவும் பார்க்க முடியாது.. அதனால கொஞ்சமா கண் திறந்திருப்பது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை.. அட.. என்னடா இவ.. இப்போ எதுக்கு முன்னாடி வரா.. அடேய் உஷாரா இரு.. கழுத்தை நெறிக்க போறா.. இல்லை தலையணை வச்சி மூச்சி முட்ட வச்சி போட்டுத் தள்ளிடுவாளோ.. காலைத் தொட்டு கும்பிடறதை எலலாம் பார்த்தா கொஞ்சம் பயமா இருக்கே.. ச்சே..ச்சே.. அப்டி எல்லாம் இருக்காது.. பார்க்க கொஞ்சூண்டு நல்ல புள்ளயாத்தான் இருககா..

பக்கம் வந்துட்டா.. கண்ணை மூடிக்கிறேன்.. என்ன செய்யப் போறா இப்போ..

ஹய்ய்ய்ய்ய்ய்யோ...என்னால நம்பவே முடியலை... உதட்டில் இவ்வளவு அழகான முத்தமா? அடியேய் என் அழகான அப்பாவியே.. காலையிலேயே ரொமான்ஸா.. வேணாம்டி.. இதுக்கு மேல தாங்க மாட்டேன்.. போய்டு.. சொல்லவும் முடியவில்லையே.. இதெல்லாம் திருட்டு தனமா இல்ல ரசிச்சிட்டு இருக்கேன்... அப்பாடா.. போய்ட்டா..

எங்க போறா.. அடடே நேரா சமயலறைக்கு தான் போறா.. இன்னைக்கு என்ன செய்வா.. சிம்பிளா தோசை இட்லின்னு முடிச்சிடுவாளா.. இல்லை.. புருஷனை அசத்த முதல் சமையலே கலக்கலா செய்வாளா?.. டேய்.. இரு..இரு.. கற்பனையில மிதக்காத.. உன் பொண்டாட்டிக்கு மொதல்ல சமையல் தெரியும்னு உனக்கு தெரியுமா? ஓவரா அலட்டிக்காதடா டேய்.. அட ஆமால்ல.. இல்ல.. எதும் தெரியாம எதுக்கு அங்க போகப் போறா.. அட்லீஸ்ட் ஒரு காப்பியாவது போடத் தெரியாதா?

என்னவோ உருட்டறா.. எதையோ தேடறா போல.. என்ன இது.. இந்த நேரத்துல லேசா தூக்கம் வருது.. சரி.. அவ சமைக்கட்டும்.. அலாரம் அடிக்கிறவரை நாம கொஞ்சம் தூங்குவோம்.. அடடா..தூங்க விட மாட்டா போல.. காப்பி வாசம் கமகமன்னு வருதே.. பேஷ் பேஷ் இத இதத் தான் நான் எதிர்பார்த்தேன்.. ஆஹா அடேய் நல்லவனே.. நீ இப்படி அநியாயத்துக்கு குடுத்து வச்சவனா இருக்கியேடா.. நீ கெட்டவன்னு நீயே தான் ஊர் பூராவும் சொல்லிட்டு திரியற.. ஆனா நீ ரொம்ப நல்லவண்டா.. இல்லைனா உனக்கு இப்படி ஒரு பொண்டாட்டி கெடைப்பாளா?.. சரி சரி.. நீயே கண்ணு வைககாத..

இன்னைக்கு ஒரு கப் காப்பி சேர்த்து குடிக்கனும்.. வாசமே இப்படி இருக்கே.. குடிச்சா இன்னும் சுவையா இருக்கும் போல இருக்கே... இதை எப்டி பாராட்டறது.. ஹ்ம்ம்ம்ம்...சரி 2 கப் காப்பி குடிச்சி முடிக்கிற வரைக்கும் எதுனா புதுசா யோசிச்சி பாராட்டலாம்.. அவ காப்பி போட்டு அசத்தற மாதிரி நான் பாராட்டி அசத்திடறேன்...

பக்கம் வந்து எனனை எழுப்பப் போறா.. நானும் ஒன்னும் தெரியாதவன் மாதிரி எந்திரிக்கப் போறேன்..

அட ச்ச.. அதுக்குள்ள இந்த அலாரம் வேற.. ம்ம்ம்.. அலாரம் ஆஃப் பண்ணறேன்..

"என்னங்க இது.. இந்த நேரத்துக்கு போய் அலாரம் வச்சி எந்திரிக்கிறிங்க?"

"அதுவா.. தினமும் 7 மணிக்கு அலாரம் வச்சி பழக்கம் ஆய்டிச்சி கண்ணா..அதான்"

" இனி இந்த நேரத்துல எல்லாம் அலாரம் வைக்காதிங்க.. அப்டி வைக்கிறதா இருந்தா 8 மணிக்கு அலாரம் வைங்க.."

போர்வையை இன்னும் நல்லா இழுத்து போத்திகிட்டா..

92 Comments:

said...

Modhal boni :)

said...

Sanjai.. kalyaana saapadu podarennnu sollitu ippadi sollama kollama kalyaanam panni mudichittu posta podareengalae.. anyway belated wishes ungalukku :) Aazhndha anudhaabangal unga ammanikku :P

said...

Sattu puttunu ezhundhoma poi kaapiya pottutu vandhu ammanikku kuduthomannu illama ennadhidhu chinnapullathanama kanavellam kandukittu?

said...

இது போன்ற ஒரு நல்ல அண்ணி கிடைக்க வாழ்த்துக்கள் அண்ணே!

said...

gn unga pinutangal (modha boni thavira) ellathukum repeetikaren.


:))))))))))))))))))

Anonymous said...

//தமிழ் பிரியன் said...
இது போன்ற ஒரு நல்ல அண்ணி கிடைக்க வாழ்த்துக்கள் அண்ணே!

//
அவ்வண்ணமே வாழ்த்துகிறேன்.

Anonymous said...

நான் ஊருக்கு வர்ற சமயமாப்பாத்து கலியாணம் வைங்க.

Anonymous said...

// இனி இந்த நேரத்துல எல்லாம் அலாரம் வைக்காதிங்க.. அப்டி வைக்கிறதா இருந்தா 8 மணிக்கு அலாரம் வைங்க.."
//

அட முன் தூங்கி பின் எழுவோர் சங்கத்து ஆட்கள்

said...

ஓவர் கணவு உடம்புக்கு ஆகாது மாம்ஸ்!!!

அதுல்கலாம் சொன்ன கணவு வேற!!! இதுல நீங்க சொல்லி இருப்பது போல்
.0000001% நடந்தாலே நீங்க அதிஷ்டம் செஞ்சவர்தான்:)))

said...

//என்னவோ உருட்டறா.. எதையோ தேடறா போல.. என்ன இது.. இந்த நேரத்துல லேசா தூக்கம் வருது..//

உருட்டு கட்டையதான்!

said...

// இதெல்லாம் திருட்டு தனமா இல்ல ரசிச்சிட்டு இருக்கேன்... அப்பாடா.. போய்ட்டா..//

எப்பதான் இந்த புத்தி போக போவுதோ!!!

said...

இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் கட்டிகிட்டிங்களே. சரி போனா போகுது.

BEST WISHES FOR YOUR HAPPPY MARRIED LIFE

said...

மாம்ஸ் முதல் கமெண்ட் முழுசா கணவை மட்டும் படிச்சுட்டு போட்டது அதனால வாபஸ் வாங்கிக்கிறேன்!

said...

ஆசை இருக்கு தாசில் பண்ண,
அதிர்ஷ்டம் இருக்கு.......

said...

ஹிஹிஹிஹி.. மைக் டெஸ்டிங்...

said...

எந்த பொண்ணு பாவம் பண்ணிச்சோ. அந்த பொண்ணுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்:((

said...

:)

said...

ஐய்யா பொடியனுக்கு கல்யாணம் ஆனதை தெரிவிக்காததால் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.ஹி,ஹி,ஹி.

said...

அப்துல் கலாம் சொன்னதை அப்படியே ஃபாலோ பண்னுறீங்க!

வாழ்த்துக்கள்!

நேத்து சமையல் போஸ்டு! இன்னிக்கு இது!

ம்ம்ம்ம்.புரியுது!புரியுது!

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

சீக்கிரமே பிராப்திரஸ்து!

said...

//மாம்ஸ் முதல் கமெண்ட் முழுசா கணவை மட்டும் படிச்சுட்டு போட்டது அதனால வாபஸ் வாங்கிக்கிறேன்!
//

G3 போட்ட கமெண்டை நீங்க எப்படி வாபஸ் வாங்க முடியும் குசும்பன்?

said...

சூப்பருங்க.. கடைசி வரி படிக்கிற வரைக்கும் எதோஇருக்குனு தோனுச்சு என்னனு பிடிபடல..

said...

//சூப்பருங்க.. கடைசி வரி படிக்கிற வரைக்கும் எதோஇருக்குனு தோனுச்சு என்னனு பிடிபடல..
//


ஏதோ = ஆப்பு !?

said...

இது உங்களுக்கு கிடைச்ச அனுபவமா ? இல்ல உங்க எதிர்பார்ப்பா? இது எந்த வகைல சேர்த்தி? பெண்களுக்கும் நல்ல கணவன்(எட்டு மணி வரை இழுத்துப் போர்த்தி தூங்கினாக் கூட அட்லீஸ்ட் வெங்காயமாச்சும் நறுக்கித் தந்தா தான் நல்ல கணவன் பட்டம் கிடைக்கும்) ஆசை உண்டு .எப்படியோ கனவு மெய்ப்படட்டும் பொடியனாரே!!!

said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

சீக்கிரமே விவாக பிராப்திரஸ்து!

said...

மாமா தினைக்கும் ஒழுங்கா பல்லு வெளக்கினா இது மாதிரி கெட்ட கெட்ட கனெவெல்லாம் வராதாம்!!

said...

அனானி அதர் ஆப்சனை திறந்துவிடாததற்கு தொழிலதிபர் நந்து சார்பில் என் கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்.

said...

//
குசும்பன் said...

அதுல்கலாம் சொன்ன கணவு வேற!!!
//

ரிப்பீட்டு

said...

என்ன சொல்றதுன்னு தெரியல :(( :))))))))))))))))))))))))))))))

said...

அண்ணா நீ கதை எழுதுவீங்களா.. அதுவும் இப்படி நல்லா எழுதுறீங்க.. ஆஹா... அண்ணா u r simply the gr8.

சரி அது இருக்கட்டும்... யாரு அந்த அண்ணி? இந்த தங்கச்சிக்கு தெரியாம அப்படி யாராச்சு இருந்தா இப்பவே சொல்லிபுடுங்க.. நானா கண்டுபுடிச்சு தெரியுற நிலைமை வந்தா.. அம்புட்டு தான்... சரியான கோபம் வந்துடும்!:)

said...

இதுக்கு பேரு தான் சார்ட் ஸ்டோரியா?

said...

இந்த மாதிரி தான் டெய்லி எங்களுக்கு கனவு வருமே!

said...

ஆனாலும் இந்த கதையில உங்க உள்: மனசு ஆசை தெரியுது!

நடக்காதுடி
உன் திட்டம் பலிக்கவே பலிகாது!

நீங்க தான் தினமும் காப்பி போட்டு எழுப்பனும்

said...

ஆரம்பிக்கும் போதே தெரியும் இது கனவுதான்னு, அப்புறம் அவங்க கூட்டி, பெருக்கும் போது கன்பர்ம் ஆகிடுச்சு இது கனவுதான்னு.

நீங்க்தான் அலாரம் அது இதுன்னு வெச்சு ஓவர் அலம்பல் பண்ணீட்டீங்க
என்ன பண்ற்து.

விதி வலிய்யது.

said...

இந்த மாதிரி தான் டெய்லி எங்களுக்கு கனவு வருமே!

உங்களுக்கு மட்டுமில்லீங்கண்ணா
எங்களுக்குந்தான்.

said...

குசும்பன் said...
ஓவர் கன‌வு உடம்புக்கு ஆகாது மாம்ஸ்!!!
இதுல நீங்க சொல்லி இருப்பது போல்
.0000001% நடந்தாலே நீங்க அதிஷ்டம் செஞ்சவர்தான்// ஹிஹி.. ரிபீட்டு.! அப்பிடியே குசும்ப‌னுக்கும் ஒரு க‌மென்ட் : சிக்ஸ் சிக்மாவையெல்லாம் தாண்டி போய்க்கிட்டிருக்கீங்க‌ப்பு..

said...

துளசி கோபால் said...
ஆசை இருக்கு தாசில் பண்ண,
அதிர்ஷ்டம் இருக்கு.......//

குசும்பன் said...
//என்னவோ உருட்டறா.. எதையோ தேடறா போல.. என்ன இது.. இந்த நேரத்துல லேசா தூக்கம் வருது..//

உருட்டு கட்டையதான்!//

மங்களூர் சிவா said...
மாமா தினைக்கும் ஒழுங்கா பல்லு வெளக்கினா இது மாதிரி கெட்ட கெட்ட கனெவெல்லாம் வராதாம்!!//


ROTFL க‌மென்ட்ஸ்..! சிரித்து ம‌கிழ்ந்தேன்.

Anonymous said...

நெனப்பு பொழப்ப கெடுக்கும்...கிகிகிகி

said...

//தமிழ் பிரியன் said...
இது போன்ற ஒரு நல்ல அண்ணி கிடைக்க வாழ்த்துக்கள் அண்ணே!

//
அவ்வண்ணமே வாழ்த்துகிறேன்.

said...

hahahaha....great fun!!!!
anbudan aruna

said...

:-))))))))

said...

nenappuuuuu:-)))))

said...

பொடியா

சீக்கிரமே சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து !!

அப்பத்தான் இந்தக் கனவெல்லாம் நெஜமாகும் - கல்யாண ஆசை வந்திடிச்சி - ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

//Sanjai.. kalyaana saapadu podarennnu sollitu ippadi sollama kollama kalyaanam panni mudichittu posta podareengalae.. anyway belated wishes ungalukku :)//

ரிப்பீட்டு ......!!!!!!!!

said...

// பொடியா

சீக்கிரமே சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து !!

அப்பத்தான் இந்தக் கனவெல்லாம் நெஜமாகும் - கல்யாண ஆசை வந்திடிச்சி - ம்ம்ம்ம்ம்ம்ம்//

ரிப்பீட்டூ!!!!!!!!!!

said...

me the 45TH:):):)

said...

//ஆசை இருக்கு தாசில் பண்ண,
அதிர்ஷ்டம் இருக்கு.......//

வழிமொழிகிறேன்:):):)

said...

//இதுல நீங்க சொல்லி இருப்பது போல்
.0000001% நடந்தாலே நீங்க அதிஷ்டம் செஞ்சவர்தான்:)))//

எது கல்யாணமா?:):):)

said...

//தினைக்கும் ஒழுங்கா பல்லு வெளக்கினா இது மாதிரி கெட்ட கெட்ட கனெவெல்லாம் வராதாம்!!
//

:):):)

said...

http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=37102&br=medium&id=3142&page=movies

இந்தப் பதிவப் படிச்சா இந்தப் பாட்டுதான் ஞாபகம் வருது:):):)

said...

me the 50th:):):)

said...

அசத்தலா போச்சு தலை

said...

பழைய காலத்து தமிழ் சினிமாவைப் பாத்துட்டு என் கேரளத் தோழியின் கணவர் சொன்னாராம்..தமிழ்ப் பெண்கள் அத்தனை பேரும் காலைல கணவன் காலத் தொட்டுக் கும்பிட்டு மாங்கல்யத்தக் கண்ல் ஒத்திப்பாங்கான்னு..அதை நெஜம்னு நம்பிட்டு என்னை வேற கேட்டாங்க அவங்க...எப்டி இது தினம் முடியுதுன்னு..

இதப் படிச்சது அது நினைவுக்கு வந்துருச்சு...

said...

நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

said...

கலக்கல் சஞ்சய்.

ப்ரொபைல போட்டோதான் கொஞ்சம்...
:)

said...

கனவு காணும் வாழ்க்கை யாவும்.... கிகிகி

சஞ்சய், பழைய தமிழ் படங்கள் எல்லாம் பாத்து ரொம்ப கெட்டு போயிருக்கீங்க :)

said...

நெஞ்சு பொறுக்கலயே...

said...

G3..
முதல் போணிக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.. :)

//anyway belated wishes ungalukku :) Aazhndha anudhaabangal unga ammanikku :P//

ஏன் ஏன் ஏன் இந்த கொல வெறி? :(

//Sattu puttunu ezhundhoma poi kaapiya pottutu vandhu ammanikku kuduthomannu illama ennadhidhu chinnapullathanama kanavellam kandukittu?//

உங்களை கட்டிக்க போறவரை நினைச்சேன்.. அழுகாச்சி அழுகாச்சியா வருது.. :))

said...

தமிழ்பிரியன்.. நீங்க இவ்ளோ நல்லவரா? :)

-------------

புதுகைத் தென்றல் அக்கா.. ரொம்ப சந்தோஷமா இப்போ? :(

said...

// சின்ன அம்மிணி said...

நான் ஊருக்கு வர்ற சமயமாப்பாத்து கலியாணம் வைங்க.//

ஹிஹி.. வரும்போது ஒரு பொண்ணையும் நியூசியில இருந்து கூட்டிட்டு வாங்க.. உங்க ஆசையை நிறைவேத்திடறேன்.. :))

//அட முன் தூங்கி பின் எழுவோர் சங்கத்து ஆட்கள்//
நீங்களும் அந்த சங்கமாக்கா? :)

said...

// குசும்பன் said...

// இதெல்லாம் திருட்டு தனமா இல்ல ரசிச்சிட்டு இருக்கேன்... அப்பாடா.. போய்ட்டா..//

எப்பதான் இந்த புத்தி போக போவுதோ!!!//

ஹிஹி.. உங்க கூட தான இன்னும் பழகிட்டு இருக்கேன். :)

// மாம்ஸ் முதல் கமெண்ட் முழுசா கணவை மட்டும் படிச்சுட்டு போட்டது அதனால வாபஸ் வாங்கிக்கிறேன்!//

ஹிஹி.. முந்திரிக்கொட்டை :)
மாம்ஸ்.. உங்களுக்கு இப்டி கனவு வருமா? :))

said...

//தாரணி பிரியா said...

இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் கட்டிகிட்டிங்களே. சரி போனா போகுது.

BEST WISHES FOR YOUR HAPPPY MARRIED LIFE//

அப்பாடா.. கல்யாண சாப்பாடு மிச்சம்.. :))

said...

//துளசி கோபால் said...

ஆசை இருக்கு தாசில் பண்ண,
அதிர்ஷ்டம் இருக்கு.......//

இவ்ளோ வந்தாச்சி.. அப்டியே முழுசா சொல்லிடுங்கம்மா :)

ஆசை இருக்கு கலெக்டர் ஆக.. அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.. இதான சொல்ல வந்தது.. :))

நாங்கள்ளாம் பிறவி மானம்கெட்டவங்க.. எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லிடுங்க.. :))

said...

// லெனின் பொன்னுசாமி said...

ஹிஹிஹிஹி.. மைக் டெஸ்டிங்...//

நல்ல வேளை லெனின்.. நீங்களாவது சேதாரமில்லாம டெஸ்டிங்கோட முடிச்சிட்டிங்க.. உங்க பாசத்துக்கு ரொம்ப நன்றி சாரே..:)

said...

// Vidhya C said...

எந்த பொண்ணு பாவம் பண்ணிச்சோ. அந்த பொண்ணுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்:((//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
மம்மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.. :(

சஞ்சய்கிட்ட சொல்லி வைக்கிறேன் உங்களை கவனிக்க சொல்லி.. :)

said...

// ஜெகதீசன் said...

:)//

எதுவா இருந்தாலும் சபைல சொல்லுங்கய்யா.. எதுக்கு இப்டி வில்லத் தனமான சிரிப்பு? :)

// விலெகா said...

ஐய்யா பொடியனுக்கு கல்யாணம் ஆனதை தெரிவிக்காததால் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.ஹி,ஹி,ஹி.//

நல்லா கெளப்பறாங்கய்யா வயித்தெரிச்சலை..அவ்வ்வ்வ்வ்வ் :((

said...

நன்றி சிபி அண்ணாச்சி.. உங்க சாபம் பலிக்கிதா பாக்கலாம்.. :))

-------

//G3 போட்ட கமெண்டை நீங்க எப்படி வாபஸ் வாங்க முடியும் குசும்பன்?//

அதான.. :)

said...

//முரளி said...

சூப்பருங்க.. கடைசி வரி படிக்கிற வரைக்கும் எதோஇருக்குனு தோனுச்சு என்னனு பிடிபடல..//

நன்றி முரளி.. நீங்க மட்டும் தான் நல்லவரு.. மத்தவங்க எல்லாம் என் அறிவு பார்த்து பொறாமை பட்டு கிண்டல் பண்றாங்க. :))

said...

// மிஸஸ்.டவுட் said...

இது உங்களுக்கு கிடைச்ச அனுபவமா ? இல்ல உங்க எதிர்பார்ப்பா? இது எந்த வகைல சேர்த்தி? பெண்களுக்கும் நல்ல கணவன்(எட்டு மணி வரை இழுத்துப் போர்த்தி தூங்கினாக் கூட அட்லீஸ்ட் வெங்காயமாச்சும் நறுக்கித் தந்தா தான் நல்ல கணவன் பட்டம் கிடைக்கும்) ஆசை உண்டு .எப்படியோ கனவு மெய்ப்படட்டும் பொடியனாரே!!!//

வாங்க அட்வைஸ் அம்புஜம்.. :) வெங்காயம் சேர்த்து சமைக்கிறது பிடிக்காத பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறேன்.. :)

said...

// மங்களூர் சிவா said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

சீக்கிரமே விவாக பிராப்திரஸ்து!//

ஏம் மாமா இந்த கொலை வெறி? சோகத்த சொல்லி அழ கம்பனிக்கு நாள் இல்லையா? காண்டாக்ட் மிஸ்டர். குசும்பன். :))

---------

// மங்களூர் சிவா said...

மாமா தினைக்கும் ஒழுங்கா பல்லு வெளக்கினா இது மாதிரி கெட்ட கெட்ட கனெவெல்லாம் வராதாம்!!//

அதுக்கு இந்த கனவே பெட்டர் போங்க... பல்லு வெளக்கனுமாம்ல பல்லு.. :)
-----------

//அனானி அதர் ஆப்சனை திறந்துவிடாததற்கு தொழிலதிபர் நந்து சார்பில் என் கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்.//

அட்ரசோட வரும்போதே இந்த சாத்து சாத்தறிங்க.. உங்களை எல்லாம் அனானியா உள்ள விட்டா சேதாரம் தாஜ் ஹோட்டலைவிட ஜாஸ்தியா இல்ல இருக்கும்.. :)

////
குசும்பன் said...

அதுல்கலாம் சொன்ன கணவு வேற!!!
//

ரிப்பீட்டு//

அது சரி.. 2 அனுபவசாலிகள் சொன்னா சரியாத் தான் இருக்கும்.. :)

said...

// ஸ்ரீமதி said...

என்ன சொல்றதுன்னு தெரியல :(( :))))))))))))))))))))))))))))))//
ஏன் தங்கச்சி.. அண்ணன் கதை எழுதற திறமை பார்த்து சந்தோஷத்துல பேச்சி வரலையா? :))
...ஆமா.. அந்த சோக ஸ்மைலி எதுக்கு? க்ராதகி... :(

said...

//Thamizhmaangani said...

அண்ணா நீ கதை எழுதுவீங்களா.. அதுவும் இப்படி நல்லா எழுதுறீங்க.. ஆஹா... அண்ணா u r simply the gr8.//

ரொம்ப நன்றி தங்கச்சி.. அண்ணன் திறமை உனக்காவது புரிஞ்சதே..:)

//சரி அது இருக்கட்டும்... யாரு அந்த அண்ணி? //
தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? :)

//இந்த தங்கச்சிக்கு தெரியாம அப்படி யாராச்சு இருந்தா இப்பவே சொல்லிபுடுங்க.. நானா கண்டுபுடிச்சு தெரியுற நிலைமை வந்தா.. அம்புட்டு தான்... சரியான கோபம் வந்துடும்!:)//

இப்டி எல்லாம் சொல்லி உனக்கு குடுத்த வேலையில இருந்து எஸ்கேப் ஆகலாம்னு பாக்கறையா? சட்டு புட்டுனு அண்ணனுக்கு சிங்கைல ஒரு பொண்ணு பாரு.. :))

said...

//வால்பையன் said...

இதுக்கு பேரு தான் சார்ட் ஸ்டோரியா?//

பின்ன.. இல்லையா? :)

//இந்த மாதிரி தான் டெய்லி எங்களுக்கு கனவு வருமே!//
ஹிஹி.. நல்லா தெரியுமே.. :)

//ஆனாலும் இந்த கதையில உங்க உள்: மனசு ஆசை தெரியுது!

நடக்காதுடி
உன் திட்டம் பலிக்கவே பலிகாது!

நீங்க தான் தினமும் காப்பி போட்டு எழுப்பனும்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இப்டி எல்லாம் பயமுறுத்தினா எப்படி வாலு? :(

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆரம்பிக்கும் போதே தெரியும் இது கனவுதான்னு, அப்புறம் அவங்க கூட்டி, பெருக்கும் போது கன்பர்ம் ஆகிடுச்சு இது கனவுதான்னு.//

வீட்டு நிலவரம் ரொம்ப நல்லாவே தெரியுது.. நடக்கட்டும் நடக்கட்டும்.. :))

( எப்டி பெருக்குறாருன்னாவது பாத்திருக்கிங்களா? )

//நீங்க்தான் அலாரம் அது இதுன்னு வெச்சு ஓவர் அலம்பல் பண்ணீட்டீங்க
என்ன பண்ற்து.

விதி வலிய்யது.//

:))

said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த மாதிரி தான் டெய்லி எங்களுக்கு கனவு வருமே!

உங்களுக்கு மட்டுமில்லீங்கண்ணா
எங்களுக்குந்தான்.//

அது சரி.. நடக்காத மேட்டர் தான கனவா வரும்? :)

said...

// தாமிரா said...

குசும்பன் said...
ஓவர் கன‌வு உடம்புக்கு ஆகாது மாம்ஸ்!!!
இதுல நீங்க சொல்லி இருப்பது போல்
.0000001% நடந்தாலே நீங்க அதிஷ்டம் செஞ்சவர்தான்// ஹிஹி.. ரிபீட்டு.! அப்பிடியே குசும்ப‌னுக்கும் ஒரு க‌மென்ட் : சிக்ஸ் சிக்மாவையெல்லாம் தாண்டி போய்க்கிட்டிருக்கீங்க‌ப்பு..//

இத பாருங்கய்யா நல்லவரு.. ரமா அக்கா இல்லைனா ஒரு எலி புடிக்க கூட தெரியாது இவருக்கு.. என்னவோ ஊட்டு வேலை எல்லாம் இழுத்து போட்டு செய்யற மாதிரி வந்து உடான்ஸ் உடறாரு.. :)

said...

//Thooya said...

நெனப்பு பொழப்ப கெடுக்கும்...கிகிகிகி//

ஏன் தூயா.. ஒடம்பு கிடம்பு சரி இல்லையா? ரொம்ப கம்மியா சிரிக்கிற? :))

said...

பிசி..
//அவ்வண்ணமே வாழ்த்துகிறேன்.//
நாடு பூராவும் நல்லவங்க பரவிக் கெடக்கறாய்ங்கய்யா.. :))

//அன்புடன் அருணா said...

hahahaha....great fun!!!!
anbudan aruna//
என்னாது ஃபன்னா? அக்கா .. அங்கயும் இதெ நிலைமை தானா? :))

said...

//அதிஷா said...

:-))))))))//

ஹலோ இன்னா மேன் சிரிப்பு.. உங்களுக்கு இப்டி தான் கனவு வரும்.. :))

// ராஜி said...

nenappuuuuu:-)))))//
வரும் காலத்துல உங்க வீட்லையும் இப்டி கனவு தான் வருமோ? :))

said...

// cheena (சீனா) said...

பொடியா

சீக்கிரமே சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து !!

அப்பத்தான் இந்தக் கனவெல்லாம் நெஜமாகும் - கல்யாண ஆசை வந்திடிச்சி - ம்ம்ம்ம்ம்ம்ம்//

எல்லாரும் கதை எழுதறாங்களேன்னு நானும் ஒரு கதை எழுதினது குற்றமா? என்ன கொடுமை சீனா சார் இது? :))

said...

// Podiponnu - பொடிப் பொண்ணு said...

// பொடியா

சீக்கிரமே சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து !!

அப்பத்தான் இந்தக் கனவெல்லாம் நெஜமாகும் - கல்யாண ஆசை வந்திடிச்சி - ம்ம்ம்ம்ம்ம்ம்//

ரிப்பீட்டூ!!!!!!!!!!//

வாம்மா நல்லவளே.. உன் பங்குக்கு நீயுமா? நல்லா இரு தாயே.. ;)

said...

//rapp said...

//இதுல நீங்க சொல்லி இருப்பது போல்
.0000001% நடந்தாலே நீங்க அதிஷ்டம் செஞ்சவர்தான்:)))//

எது கல்யாணமா?:):):)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. கொழுப்பு.. :(

//http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=37102&br=medium&id=3142&page=movies

இந்தப் பதிவப் படிச்சா இந்தப் பாட்டுதான் ஞாபகம் வருது:):):)//

நேர்ல மாட்டாமலா போய்டுவீங்க? உங்க மாமியார் இப்போ இருக்கிற மாதிரியே எப்போவும் பாசமா இருக்கட்டும்.. :))

said...

//முரளிகண்ணன் said...

அசத்தலா போச்சு தலை//
நொம்ப நன்றி முரளிகண்ணன். :)

said...

//பாச மலர் said...

பழைய காலத்து தமிழ் சினிமாவைப் பாத்துட்டு என் கேரளத் தோழியின் கணவர் சொன்னாராம்..தமிழ்ப் பெண்கள் அத்தனை பேரும் காலைல கணவன் காலத் தொட்டுக் கும்பிட்டு மாங்கல்யத்தக் கண்ல் ஒத்திப்பாங்கான்னு..அதை நெஜம்னு நம்பிட்டு என்னை வேற கேட்டாங்க அவங்க...எப்டி இது தினம் முடியுதுன்னு..

இதப் படிச்சது அது நினைவுக்கு வந்துருச்சு...//

இதெல்லாம் எந்த காலத்துலையுமே நடந்திருக்காதா அக்கா? :)

said...

//Chuttiarun said...

நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com///

பார்த்தேன் அருண்.. நல்லா தான் இருக்கு.. வாழ்த்துக்கள்!.

said...

// Karthik said...

கலக்கல் சஞ்சய்.
//

நன்றி கார்த்திக்.. :)

// ப்ரொபைல போட்டோதான் கொஞ்சம்...
:)//

பொறாமை புடிச்சவங்கய்யா.. :))

said...

//பிரேம்குமார் said...

கனவு காணும் வாழ்க்கை யாவும்.... கிகிகி

சஞ்சய், பழைய தமிழ் படங்கள் எல்லாம் பாத்து ரொம்ப கெட்டு போயிருக்கீங்க :)//

அதான் கனவுன்னு சொல்லியாச்சே.. இன்னும் ஏன் போட்டு தாக்கறிங்க ப்ரேம். :)

said...

//ஆட்காட்டி said...

நெஞ்சு பொறுக்கலயே...//

புரியுது ஆட்காட்டி.. அடுத்த ஜன்மத்துலையாவது நெஞ்சு பொறுக்கட்டும்.. :))

said...

:))))))))))))))))))))))

said...

கதைய பாதிலயே முடிச்சிட்டீங்களா பொடியன்? அலாரம் அடிச்சி.. அப்றம் நீங்க எழுந்து அறையெல்லாம் கூட்டி பெருக்கி.. காபி போட்டு.. சமையல் கூட செஞ்சீங்களே? அதையெல்லாம் ஏன் விட்டுட்டீங்க?

said...

// 26 November, 2008 12:43 PM
நாமக்கல் சிபி said...

//மாம்ஸ் முதல் கமெண்ட் முழுசா கணவை மட்டும் படிச்சுட்டு போட்டது அதனால வாபஸ் வாங்கிக்கிறேன்!
//

G3 போட்ட கமெண்டை நீங்க எப்படி வாபஸ் வாங்க முடியும் குசும்பன்?
//


கலக்கறீங்க அண்ணே! :)))))

said...

இப்படியே எல்லாரும் பயமுறுத்திட்டு இருந்தா நாங்க எப்படி தான் கல்யாணம் பண்ணறது......

said...

//காயத்ரி said...

கதைய பாதிலயே முடிச்சிட்டீங்களா பொடியன்? அலாரம் அடிச்சி.. அப்றம் நீங்க எழுந்து அறையெல்லாம் கூட்டி பெருக்கி.. காபி போட்டு.. சமையல் கூட செஞ்சீங்களே? அதையெல்லாம் ஏன் விட்டுட்டீங்க//

வாம்மா மின்னல்.. 2 நாளைக்கு முன்னாடி இந்த கமெண்ட் போட்டிருக்கனும்.. பழி வாங்கி இருப்பேன்.. தப்பிச்சிட்ட.. :))

Tamiler This Week