இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Wednesday, 30 January, 2008

காஃபியில் ஓவியம் வரையும் ரகசியம்!

காஃபி டே மற்றும் பரிஸ்டா போன்ற காஃபி ஷாப்களில் வித விதமான டிசைன்களில் எப்படி காஃபி தயாரிக்கிறார்கள் என்ற ரகசியத்தை கண்டு மகிழுங்கள்.

Friday, 25 January, 2008

English குசும்பன்!

Thursday, 24 January, 2008

ஞானும் எண்ட 50வது பதிவும்!.. ஒரு ஜொள்ளு விடியோவும்

இது என்னோட 50வது பதிவு. எல்லாரும் இது மாதிரி சமயங்கள்ல தங்களோட பழைய பதிவுகள தான் பாப்பாங்க. எதுனா உருப்படியா எழுதி இருக்கோமானு பாக்க. ஆனா நான் அப்டி எல்லாம் எந்த தப்பும் பண்ணல. எனக்கு தெரியாதா என்ன பத்தி? நான் திரும்பி பாக்கற அளவுக்கு ஒரு புண்ணாக்கும் எழுதல.அப்புறம் எதுக்கு அந்த கர்மத்த எல்லாம் பாத்துகிட்டு.:). அதுக்கு பதிலா எனக்கு வந்த பின்னூடங்கள பாத்தேன். மத்தவங்க எனக்கு போட்ட பின்னூட்டங்கள் தான் பாத்தேன். நான் மத்தவங்களுக்கு போட்ட பதில் பின்னூட்டங்கள இல்ல. :)

என்னக் கொடுமை சார் இது? ஒருத்தர் கூட என்ன திட்டல. பதிவர்னா யார்கிட்டயாச்சும் திட்டு வாங்கனுமாம்ல? :(..அப்போ யாருமே என்ன ஒரு பதிவரா மதிக்கவே இல்லை. :(. அதனால் 50வது பதிவாவது மத்தவங்க நம்மள பதிவரா ஏத்துக்கிற மாதிரி இருக்கனும்னு தான் பொங்கல் பண்டிகை பத்தி எழுத நெனச்சத விட்டுட்டு இந்த பதிவு. அதாங்க நெறய திட்டு வாங்கனும். ப்ளீஸ் நல்லா திட்டுங்க. நானும் ப்ளாகர் தான்.. நானும் ப்ளாகர் தான்னு சிலர் மாதிரி சொல்லிக்கனும். :)சிவா மாம்ஸ்.. மொறைக்காதிங்க... உங்களுக்கு போட்டியா வர மாதிரி எந்த ஐடியாவும் இல்லை. இது ஒன்னோட நிப்பாட்டிகிறேன். :)).. யார் யார் எத எத செய்யனுமோ அவங்கவங்க அத செஞ்சா தான் அழகு. :)) எப்படியும் என்னால உருப்படியா எதையும் எழுதி யார்கிட்டயும் திட்டு வாங்கவோ விவாதம் பண்ணவோ முடியாது.அதனால் இது சும்மா திட்டு வாங்க மட்டும். :))

இப்பத்திக்கு அப்பீட்டு.....

Monday, 21 January, 2008

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என் அன்புத் தோழியே!

ஒரு காலத்துல நம்ம நிலா அப்பா நந்து ஆஃபிஸ்க்கு வந்தார்னா உடனே சென்னை ஆன்லைன் அரட்டை பக்கத்தை திறந்து வச்சிப்பார். திரும்ப வீட்டுக்கு போற வரைக்கும் அதுலயே தான் இருப்பார்.எனக்கு தெரிஞ்சி ஒரு காலத்துல அவருக்கு தெரிஞ்ச இரண்டு இணையதளங்கள்... சென்னை ஆன்லைன் மற்றும் ஹாட்மெயில் மட்டும் தான். அவர் வேற எந்த இணையதளத்தையும் பார்த்ததா எனக்கு ஞாபகம் இல்லை. வீட்டுக்கு போய் என்ன கர்மத்த எல்லாம் பார்த்தாரோ... அதெல்லாம் எனக்கு தெரியாது.. :P.

சரி அப்டி என்ன தாண்டா அந்த சென்னை ஆன்லைன்ல இருக்குனு நெனச்சி நானும் அந்த பக்கம் ஒதுங்க ஆரம்பிச்சேன். அப்புறம் தான் அதோட மகிமை புரிஞ்சது. அட அட.. யாஹூ விட்டா சாட் பண்ண வேற இடம் தெரியாம இருந்த நான் சாட் ரூம்னா இப்டி தான் இருக்கனும்னு தெரிஞ்சிகிட்டேன்.உண்மையிலேயே வருத்தப் படாத வாலிபர் சங்கம் அங்க தான் இருந்தது. எனக்கு ரொம்ப அருமையா ஒத்துப்போன கும்பல் அது. அப்புறம் நானும் அதுலயே தவம் கெடந்தென்.:)..ரொம்ப அற்புதமான நண்பர்கள் எல்லாம் கெடைச்சாங்க. எங்க அராஜகம் தாங்காம அந்த சாட் ரூம் மூடி சில ஆண்டுகள் ஆகியும் எங்கள் நட்பு தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.அதில் நந்து அண்ணா பெயர் ஹூண்டாய்:)... என் பெயர் ICQ :). கூகுள் அவ்வளவு பிரபலம் இல்லாத சமயங்களில் நான் ICQ தான் அதிகம் பயன்படுத்தினேன்.I Seek You என்பதன் சுருக்கம் தான் ICQ. என் தோழி பெயர் நிலா.

அப்போது எனக்கு அறிமுகமானவள் தான் என் அன்புத் தோழி நிலா @ ப்ரியா.(இந்த பேரை படித்ததும் உங்களுக்கு ஏதெனும் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல:P ). சென்னை ஆன்லைன் அரட்டை பக்கம் மூடியதும் எங்கள் நட்பு யஹூவில் தொடர்ந்தது.பிறகு தொலைப்பேசியில் குறுஞ்செய்திகளாக, பிறகு தொலப்பேசி அழைப்ப்புகளாக வளர்ந்தது. என்னிடம் " மிகுந்த மரியாதை"யுடன் பேசும் நண்பர்களில் இவளும் ஒருத்தி.:).பிறகு அது ஒரு நாளைக்கு வெறும் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் மட்டும் பேசிக் கொள்ளும் நட்பாக வளர்ந்தது. போன் பில் கட்டியே கடனாளி ஆயிருப்பியேனு எல்லாம் கேக்கப் படாது. எனக்கு ஏர்செல் டூ ஏர்செல் ஃப்ரீமா :). இவளைப் பற்றி எனக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்று சொல்லுமளவுக்கு எனக்கு பிடித்த என் நெருங்கிய தோழி.பின்ன இப்டி மணி கணக்குல பேசினா எப்டி தெரியாம போகும்.....

அவள் படிப்பு, அவள் நண்பர்கள், அவள் காதல், அவள் காதலன் , அவள் குடும்பம் , அவள் காதலன் குடும்பம், அதில் ஏற்பட்ட ப்ரச்சனைகள், உடல் எடை குறைக்க கடைபிடிக்கும் உணவு பழக்கங்கள், ஜிம்மில் எடுத்துக் கொண்ட பயிற்சிகள், அவள் காதலனை கைபிடிக்க பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், அவள் அம்மாவுடன் போடும் சண்டைகள்... இப்படி அவள் என்னுடன் பகிர்ந்துக் கொள்ளாத விஷயங்களே இல்லை. பல சமயங்களில் அவள் அம்மவுக்கும் அவளுக்கும் நடக்கும் சண்டைகளுக்கு நான் தான் நாட்டாமை:). அவள் அம்மா என்னையும் அவர் மகன் மாதிரி நினைத்து ரொம்ப பாசமா பேசுவாங்க. அவங்க அக்கா, அக்கா பசங்க எல்லாரும் இப்போ என் நண்பர்கள்.:). ஆனால் இன்றுவரை அவளை நான் நேரில் பார்த்ததில்லை.அவள் நிச்சயதார்த்தத்திற்கு அழைத்தாள். நேரம் இல்லாததால் போக முடியவில்லை. போட்டோ மட்டும் பார்த்திருக்கேன்.

ஆனால் அவள் என்னை நேரில் பார்த்திருக்கிறாள். :)
ஒரு நாள் வழக்கம் போல அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது திருமணதிற்கு நகைகள் வாங்க சென்னை செல்வதாக சொன்னாள். எந்த ரயிலில் செல்வது என்பது இன்னும் முடிவாகவில்லை என்று சொன்னதால் நானும் அதை பெரிதாக கண்டுக்கொள்ள வில்லை. ஏன்னா எனக்கு அப்போ ஊருக்கு போற ப்ளான் எதுவும் இல்லை.இருந்தால் நானும் அந்த ரயிலிலேயே செல்ல ப்ளான் பண்ணி இருப்பேன். அதனால் அவள் பயணத்தை பற்றி மறந்தேவிட்டேன். அடுத்து வந்த ஒரு ஞாயிற்றுகிழமையில் நான் கோவை எக்ஸ்ப்ரஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். சேலம் வரை உக்காந்துட்டு தான் இருந்தேன். நமக்கு ரிசர்வ் பண்ணி எல்லாம் பயணம் பண்ணி பழக்கம் இல்லை( ஆனாலும் ரிசர்வ்ட் கோச்ல தான் ஏறுவோம்ல.) ... அதனால் ஈரோடு அல்லது சேலம் வரை தான் உட்கார இடம் கிடைக்கும். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் எழுந்துகொள்வதும் பிறகு யாரும் உட்காராத இடம் பார்த்து உக்காருவதும் நம் பொழப்பு. அன்றும் சேலத்தில் அது போல் எழுந்து நின்றுக்கொண்டேன். அந்த கோச் ஃபுல் ஆய்ட்டதால நின்றுகொண்டு வந்தேன்.

கண்ணை மூடிக் கொண்டே SMS டைப் செய்யும் அளவுக்கு SMS அரட்டை அடிப்பவன் என்பதால் பயணத்தில் இருக்கும் போது அவ்வப்போது மொபைலை எடுத்துப் பார்ப்பது வழக்கம். ஆனால் அன்று நான் நின்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த சீட்டில் ஒரு குட்டி பாப்பா செய்துக் கொண்டிருந்த சேஷ்ட்டைகளை ரசித்துக் கொண்டு இருந்ததால மொபைலை மறந்துட்டேன்.( பக்கத்தில் இருந்த ஃபிகர நான் பார்க்கல :P ). எங்க ஊர் வந்ததும் என் பேக் எடுத்துக்கிட்டு இறங்கறதுக்கு சில நொடிகள் முன்பு மொபைலை எடுத்துப் பார்த்தால் நிலா@ப்ரியா மெஸேஜ்..... டேய் நாயே ஸ்டெப்ஸ் பக்கத்துல நிக்காதே. விழுத்து சாகப் போற. இன்னொரு மெஸேஜ்: ஐயாவுக்கு காஃபி குடிக்கிற பழக்கம் எல்லாம் இருக்கோ... இன்னொன்னு : லூசு பயலே ரயில்ல எதயும் குடிக்காத. வயித்தால போகப் போகுது.எதும் சுத்தமா இருக்காது... . எனக்கு செம ஷாக். மெஸேஜ் படிச்சி முடிக்கவும் ரயில் நிக்கவும் சரியா இருந்தது. திரும்பி பார்க்க கூட நேரம் இல்லை. கீழே இறங்கியதும் அவளை அழைத்தேன். போன் எடுத்ததும் கெக்கெ பிக்கெனு நான் ஸ்டாப் சிரிப்பு. "சஞ்சய் நான் உன்ன பாத்துட்டனே..." எனக்கு செம கோவம்.. இது வரைக்கும் நேர்ல பார்த்ததில்லை.ஒரு மணி நேரமா என்ன பார்த்திருக்கா. பக்கம் வந்து பேசவே இலை. கேட்டா சும்ம ஒரு சர்ப்ரைஸ் தாண்டா.. நான் அனுப்பின மெஸேஜ் பார்த்து நீ கண்டுபிடிபப்னு நெனச்சேன். நீ மொபைல் பாக்காம எந்த பொண்ண பாத்து ஜொள்ளு விட்டிருந்தியோ.. நான் என்ன பண்றதுனு கேக்கறா.:(. ஏண்டி எதுக்கு தான் சர்ப்ரைஸ் குடுக்கறதுனு ஒரு விவஸ்தை இல்லயா.? அப்புறம் என்ன அடுத்த ஒரு வாரம் சண்டை தான்.:).. அப்புறம் அவங்க அம்மா தான் சமாதானம் பண்ணி வச்சாங்க. எனக்கு கேக்கற மாதிரி அவள நல்லா திட்னாங்க. அதனால திரும்ப பேச ஆரம்பிச்சிட்டோம்.

இதுல என்ன கொடுமைனா நான் சேலம் வரைக்கும் எந்த சீட்ல உக்காந்துட்டு வந்தேனே அதுக்கு எதிர் சீட் தான் அவ ரிசர்வ் பண்ணி வச்சிருந்து இருக்கா.அவளும் அவங்க பெரியம்மாவும் வந்திருக்காங்க. அவங்க அம்மா வந்திருந்தா இந்த கொடுமை நடந்திருக்காது:(.அவ உக்காந்திருந்த இடத்திற்கு மேல தான் என் பை வைத்திருந்தேன். பை எடுக்கும் வரை பார்த்திருக்கா.பாவி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. சரி என்ன பன்றது உண்மையான அன்புக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு விஷயமா என்ன?

....அதாகப் பட்டது மக்களே இந்த ராட்சஷிக்கு வர ஞாயிற்றுக்கிழமை டும்..டும்..டும்...ஒரு அப்பாவி பைய்யனின் வாழ்க்கை வீணாகப் போகிறது... பாவம் அந்த பையன் இந்த பிசாசுகிட்ட மாட்டிகிட்டு என்ன கொடுமை எல்லாம் அனுபவிக்கப் போகிறானோ? :P...

....இவர்கள் வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற்று நலமாகவும் சந்தோஷமாகவும் மணவாழ்க்கை வாழ வாழ்த்துவோம்....

இந்த
பதிவை முடிக்கும் போது இந்த தோழியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி :
1.கல்வி
2.அறிவு
3.ஆயுள்
4.ஆற்றல்
5.இளமை
6.துணிவு
7.பெருமை
8.பொன்
9.பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்லொழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி
என்னும் 16 செல்வங்களையும்ம் பெற்று பெருவாழ்வு வாழ்க! :)

.....ரிப்பீட்டேய்....
..இந்த தலைப்பு வைத்த பின்பு தான் இந்த செய்தி வந்தது.. என்ன ஆச்சர்யம்?! :)

ஆஃப் தி ரெக்கார்ட் : இவளிடம் பேசும் போது நந்து அண்ணா ஒரு காலத்தில் இவளை விரும்பியதாகவும் ...நிலா குட்டிக்கு இவள் நினைவாகத் தான் அந்த பெயரை வைத்ததாக சொல்லிவிட்டேன். அவளிடம் பேசி முடித்தவுடன் நம்ம அண்ணாச்சிகிட்டயும் இத சொல்லிட்டேன். கொஞ்சம் உசுப்பேத்தி விட்டாளே ஒரு வழி ஆகிவிடும் ஆள் இவள். ஆகவே உடனே நந்து அண்ணாவுக்கு கால் பண்ணிட்டு இத கேட்டுட்டா. நம்ம ஆள் வெரும் வாய மென்னுட்டு இருக்கிறவர். அவள் கிடைத்தால் .. சொல்லவா வேணும்... நான் சொன்னது நிஜம் என்று சொனன்தோடு இல்லாமல் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டையலாக் வேற அள்ளி விட்டிருக்கிறார். யாரயாச்சும் உசுப்பேத்திவிட்டு ஒடம்ப ரணகளமாக்கிப் பாக்கறது எங்களுக்கு கை வந்த கலை.. :P...அவளுக்கு தலை கால் புரியவில்லை. அன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு என்னை சரியா தூங்க கூட விடல. நடு ராத்திரி கால் பண்ணி இதா பத்தி சொல்லி உணர்ச்சிவசப் பட்டு பேசுவாள். டேய்_____ நிஜமாவே நந்து என்ன லவ் பண்ணானா?( இவங்க 2 பேரும் மச்சான்னு சொல்லி தான் பேசிப்பங்க... இப்போ தலைவர் யார்க்கிட்டயும் அவ்வளவா பேசிக்கிறதில்லைனு நிலா பாப்பா சொல்லிச்சி:)..)...உன்கிட்ட வேற என்னடா சொன்னான் என்ற ரீதியில் செமையா டார்ச்சர் குடுக்க ஆரம்பிச்சிட்டா. இந்த இம்சை தாங்க முடியாம ... அட தண்டக் கர்மமே.. நீ என்ன பொறக்கும் போதே லூஸா இல்லை அப்டி வளத்துட்டாங்களா?.. சும்ம உன்ன வெறுப்பேத்த தான் 2 பேரும் ப்ளான் பண்ணி அப்டி சொன்னோம். அவர் பொண்ணுக்கு நல்ல தமிழ் பேர் வைக்கனும்னு நெனச்சி தான் அந்த பேர் வச்சார். உனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற"
உண்மை"யை சொல்லி.. அன்று உலகத்தில் இருந்த அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் திட்டு வாங்கியது தனிக் கதை. :P

Sunday, 20 January, 2008

சபதம் TAG

அட..அட..அட.. யார்தான் இந்த சங்கிலி விளயாட்ட கண்டுபிடிச்சங்களோ தெரியல.. ஆளாளுக்கு டேக் பண்ணி வைக்கிறாய்ங்கபா.. ஒருதரவே பல பேர் டேக் பண்ணா என்ன தான் பன்றது? குட்டிப்பெண் பொன்னரசி என்ன டேக் பண்ணி இருந்தாள். அதுக்கு ஒரு பதிவு போட்டு வச்சேன். அதோட நிறுத்தி இருக்கலாம். மொக்கை போட சொல்லி நான் 4 பேர டேக் பண்ணேன். திட்டிக்கிட்டே அதுக்கு 4 பேரும் பதிவு போட்டாய்ங்க. நம்ம இம்ம்சை திட்னதோட விடல. பழிக்கு பழி எடுத்துட்டார். பதிலுக்கு என்னைய டேக் பண்ணார். சாதரனாமாவா பண்ணார்?.. சீரியஸா ஒரு பதிவு போடனும்னு சொல்லிட்டார். தெரியாமத் தான் கெக்கறேன். சீரியஸ்க்கும் நமக்கும் என்ன சாமி சம்பந்தம்.? :(... சரின்னு கஷ்ட்டப் பட்டு ஒரு சீரியஸ் பதிவு போட்டேன். அப்பாடா இம்சைக்கும் ஒரு பதிவு போட்டாச்சினு நிம்மதி பெரு மூச்சி விட்டா அதுக்குள்ள நம்ம புதுவைத் தென்றல் புத்தாண்டு சபதம் பத்தி ஒரு பதிவு போட சொல்லிட்டாங்க. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பாடா.. இப்போவே கண்ணக் கட்டுதே. :(.. பொன்னரசி என்ன டேக் பண்ணதே சபதம் பத்தி பதிவெழுத தான்... அப்டி ஒன்னும் எனக்கு தெரியாததால தான் அத மொக்கை பதிவா மாத்தினேன். இப்போ என்னத்த சபதம் பத்த்ஹி எழுதறது.

இதுல என்ன கொடுமைனா அவங்க சபதம் என்னன்னு கலா அக்கா அவங்க பதிவுல சொல்லவே இல்லை. வேணும்னா சபதம் எதும் எடுத்துகிறது இல்லைனு சபதம் எடுக்கலாம்னு சொல்லி சமாளிச்சிட்டாங்க. ஆனா நான் அப்டி இல்லை. இது வரைக்கும் சபதம் எதும் எடுத்தது இல்லை. இப்போ சீ்ரியஸா ஒரு சபதம் எடுக்க போறேன். இனி ஒவ்வொரு புத்தாண்டுக்கும் என் ப்ளாக் 2 மாசம் லீவ் விடப் போறேன். அப்போ தான இந்த டேக்ல இருந்து தப்பிக்கலாம். லீவ் விடறது தான் என் சபதம். :)

இப்போ நானும் 3 பேரை டேக் பன்றேன்..
1. கும்மி
2.மொக்கை
3.அனானி

:)...

I know that you believe you understand what you think I said, but I'm not sure you realize that what you heard is not what I meant. - Robert McCloskey quotes
இப்பத்திக்கு அப்பீட்டு.....

என் முதல் குரல் பதிவு!

இந்த ஒடம்பு எவ்ளோ அடி தாங்கும்னு பாத்து அடிங்க சாமியோவ் :P... அப்புறம் வீணா கொலக் கேசு ஆய்டப் போகுது ..:) புள்ள குட்டிகள பக்கத்துல வச்சிகிட்டு இத கேக்காதிங்க அப்பு... பயந்து போய் வீட்ட விட்டு ஓடிடப் போவுதுங்க.. :)

TestVoiceforBlog.m...

Saturday, 19 January, 2008

மார்க்கெட்டிங்கும் பதிவர்களும்!

If you're attacking your market from multiple positions and your competition isn't, you have all the advantage and it will show up in your increased success and income. - Jay Abraham

மார்க்கெட்டிங் என்பது இப்போது எல்லோருக்குமே... தனி மனிதனுக்கு கூட தேவையான் ஒரு சமாச்சாரம் ஆய்டிச்சி. பூக்கடைக்கு கூட விளம்பரம் தேவைபடும் காலம் இது. விளம்பரம் என்பது மார்க்கெட்டிங்கின் முக்கியமான அங்கம். மார்க்கெட்டிங்கின் இதயம் என்று கூட சொல்லலாம். அதென்ன பூக்கடைக்கு கூட விளம்பரம்? அங்கும் பூவை விற்கத் தானே செய்கிறார்கள். அதற்கும் விளம்பரம் தேவை தானே. அதில் என்ன ஆச்சர்யம் என்கிறிற்களா? . பூக்கடையில் தான் பூ வாசம் வருமே. அதை வைத்து வாடிக்கயாளர்கள் வரமாட்டர்களா. அதெல்லாம் தெருவுக்கு ஒரு பூக்கடை இருக்கும் போது தான் தேடி வந்த கதை எல்லாம். இப்போ தீப்பெட்டியை வரிசையாய் அடுக்கி வைத்த மாதிரி ஒரே இடத்தில் பல கடைகள் இருக்கும் போது கஸ்டமரை தங்கள் கடைக்கு வர வைக்க அவசியம் விளம்பரம் என்னும் மார்க்கெட்டிங் தேவை தானே. அதுவுமின்றி பாலித்தின் பேப்பரில் பூக்களை அடைத்து பொக்கேவாக விற்கும் இந்த காலத்தில் வாசம் எங்கே வீசுகிறது? ஆகவே மார்க்கெட்டிங் அவசியம் தான். இப்போது எல்லாம் பெண்கள் கூட கூந்தலுக்கு மணம் வீச பூ வைப்பதில்லை. போட்டிருக்கும் உடைக்கு மேட்ச்சிங்காகத் தான் பூ வைக்கிறார்கள். அதனால் ஏகப்பட்ட கலப்பின மலர்கள் வந்துவிட்டன. அதில் வாசமும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை. எவண்டா கண்டுபிடிச்சான் இந்த மேட்ச்சிங்க?

மார்க்கெட்டிங் என்பது எதோ கோட்டு சூட்டு போட்டுகிட்டு ஏசி ரூம்ல பெரிய திரைல ஒரு மடிக்கணினியை இணைச்சு புரியாதை வார்த்தைகளை திரையில் காட்டி புது புது திட்டம் போட்டு விற்பனையை பெருக்கும் யுக்தியை விளக்கும் ஒரு ஸ்மார்ட்டான ஆசாமிக்கு சொந்தமானதுனு நெனைக்கிரிங்களா? அதான் இல்லை. விற்பனை அல்லது சேவை துறைக்கு மட்டுமில்லை... நம் தினசரி நடவடிகைகளுக்கும் அத்தியாவசியமானது தான். தம் தினசரி நடவடிகைகளில் மார்க்கெட்டிங்கை உபயோகிக்காதவர்களே இருக்க முடியாது. சிலர் இதை தெரிந்து செய்கிறார்கள். சிலர் தெரியாமலே செய்கிறார்கள். என்ன தலை சுத்துதா? இதோ வந்துட்டேன்..

சிலர் தங்களை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என திட்டம் போட்டு மார்க்கெட்டிங் செய்வார்கள்.ஏனெனில் அவர்கள் தங்கள் ஸ்டைலில் தங்களிடம் உள்ள திறமையை வெளிப்படுத்துகிறார்கள். அது அனவருக்கும் தெரியவேண்டும் என நினைக்கிறார்கள்.தான் செய்வதை அனைவரும் கவனிக்க வேண்டும் என் நினைக்காதவர்கள் உலகில் இருக்கவே முடியாது.புகழை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா என்ன?
உதாரணத்திற்கு நம் ப்ளாகர்களை எடுத்துக் கொள்ளுங்கள். பலர் பல ஆண்டுகாலமாக எழுதுவார்கள். அவர்களை பெருமாலானோருக்கு தெரியாது. ஆனால் சிலர் வந்த வேகத்திலேயே பலராலும் கவனிக்கப் படுவார்கள்.கவனிக்கப் படாதவர்களை சொன்னால் அவர்கள் மனம் புண்படலாம். ஆகவே அவர்களை விட்டு விடுவோம். வெகு விரைவில் கவனிக்கப் பட்டவர்களில் ஒருவர் நம் அண்ணாச்சி நந்தகுமார்.அவர் விவரமாக அவருக்கு வைத்துக் கொண்ட பெயர் நந்துf/oநிலா. ஏனெனில் நிலா தமிழ்மணத்தில் பெரும்பாலானோர் அறிந்த ஒரு பெயர். ஆகவே அதை வைத்துக் கொண்டு பதிவு எழுத வந்ததும் அவரும் தெரிந்த முகமாகவே பலருக்கும் தெரிந்தார். இந்த பெயர் வைக்கும் மார்க்கெட்டிங் உத்தி அவரை பிரபல(?!) பதிவராக :) ஆக்கியது.

தனித்தன்மையை வெளிப்படுத்துவதும் மார்க்கெட்டிங்கின் ஒரு அங்கம் தான்.உதாரணத்திற்கு....டிவி ஒரு பொதுவான தொழில்நுட்பத்தில் தான் செயல்படுகிறது. எனவே அதை தயாரிக்கும் எல்லா நிறுவனக்களும் அதற்கு பொதுவாகவே டிவி என்று பெயரிட்டே விற்கலாம். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு பெயருடன் தங்கள் டிவியை விற்கிறார்கள். காரணம்...தொழில்நுட்பமாக பொதுவானதாக இருந்தாலும் அதில் பயன்படுத்தப்படும் சில பாகங்கள், வடிவமைப்பு மற்றும் மென்பொருட்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சிறிதளவேனும் மாறுபடும்.ஆகவே தான் தனித் தனிப் பெயர். ஒவ்வொரு நிறுவனமும் தயாரிக்கும் டிவிக்கு பல மாடல்கள் இருக்கும் அவற்றிற்கு தனி தனி பெயர்கள் இருக்கும். பெயரை வைத்தே அதன் தரம் மற்றும் தனித் தன்மையை கண்டுபிடித்துவிடலாம். வாடிக்கையாளர் கடைக்கு போகும் போது டிவி வேண்டும் என்று கேட்பதில்லை. எல்ஜி, சாம்ச்ங், சோனி, ஓனிடா என்று பெயர் சொல்ல்லித் தான் கேட்க்கிறார்கள்.இதற்கு காரணம் அந்த நிறுவனங்களின் மார்க்கெட்டிங் உத்தி தான்.இப்படி தனித் தனி பெயர்கள் இல்லாமல் பொதுவாக டிவி என்று மட்டும் இருந்தால் ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்பம் வேறு நிறுவனத்தின் டிவி விற்பனையை அதிகப் படுத்திவிடும்.

இந்த மார்க்கெட்டிங் உத்தியை பதிவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் பாருங்கள். ஒரே பெயரில் பல பதிவர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் பெயருடன் ஏதேனும் ஒரு வார்த்தையை சேர்த்து வைத்திருப்பார்கள். உதாரணமாக சிவா என்ற பெயரில் 3 ( எனக்கு தெரிந்து)பிரபல பதிவர்கள் இருக்கிறார்கள். மங்களூர் சிவா, நெல்லை சிவா, நாகை சிவா . இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி எழுத்து நடை இருக்கு.நாகை சிவா ஒரு மாதிரி எழுதுவார். நெல்லை சீவா வேறு மாதிரி எழுதுவார். மங்களூர்சிவா "ஒரு மாதிரி":P எழுதுவார். இவர்கள் பெயருக்கு முன்னால் தங்கள் ஊரின் பெயரை வைத்துள்ளதால் தான் ஒருவரின் பதிவுக்கு கிடைக்க வேண்டிய பலன் அல்லது பாராட்டு இன்னொரு பதிவருக்கு போகாமல் உரியவாருக்கு போய் சேருகிறது.மங்கை என்ற பெயரில் கூட 2 பதிவார்கள் இருக்கிறார்கள். ஒருவர் தமிழில் பெயர் வைத்திருக்கிறார். இன்னொருவர் ஆங்கிலத்தில்.இது தான் தயாரிப்புக்கு தனி தனி பெயர் வைக்கும் மார்க்கெட்டிங் உத்தி. ஒரே நிறுவனம் பல மாடல்களில் தனி தனி சிறப்பம்சங்களுடன் தயாரிப்பை வெளியிடுவது போல், பலர் ஒரே பதிவில் எல்லாவற்றை பற்றியும் எழுதாமல் ஒவ்வொரு விதமான பதிவுகளுக்கும் தனித் தனி வலைப்பூக்கள் வைத்திருக்கிறார்கள(ஹிஹி.. மீ டூ..). இதற்கு உதாரணம் சொன்னால் ப்ளாகர் சர்வர் போதாது.

இன்னும் சிலர் தங்கள் பதிவுக்கு மார்க்கெட்டிங் செய்யும் விதமே வேறு. பதிவில் பொருளடக்கத்திற்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் பிறரை கவரும் விதத்தில் இருக்கும். சிலர் பதிவு எழுதுவதை விட தலைப்புக்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.( பார்க்க :ஆட்களை திரட்ட பிரியாணி பொட்டலம் வேண்டாம்.)

இன்னும் சிலர் தங்கள் பதிவை மார்க்கெட்டிங் செய்ய ஜிமெயில் மற்றும் யாஹூ ஸ்டேட்டஸ் செய்திகளை பயன்படுத்துவார்கள்.மங்களூர் சிவா மாமா வலைச்சரத்துக்கு ஆள் சேர்ப்பது, மை ஃப்ரண்ட் தேன்கிண்ணத்த பாப்புலர் ஆக்கினது எல்லாம் இந்த வகை மார்க்கெட்டிங் தான்.:)

இன்னும் சிலர் புரியாத( என் பதிவுகள் மாதிரி:P) அல்லது மொக்கை(இதுவும் என்னை மாதிரி:P) பதிவுகளுக்கு எல்லாம் சென்று சம்பந்தமே இல்லாமல மிக வித்தியாசமாய் பின்னூட்டம் போடுவார்கள். குறைந்த பட்சம் வெறும் சிரிப்பானையாவது போட்டு வைப்பார்கள். அப்போது தான் தன்னை பலரும் அடையாளம் கண்டுகொண்டு.. இவர் ரொம்ப ஆக்டிவான பதிவராக இருப்பார் போல.. என்று நினைத்து இவர்கள் பதி்வுக்கும் வருவார்கள்.இதுதான் மார்க்கெட்டிங்.

நம்ம புதுகைதென்றல் மாதிரி பதிவு போட்டதும் எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பி தெரியப் படுத்தறது, சிவா மாமா மாதிரி ஆன்லைன்ல இருக்கிற எல்லார்க்கும் சாட் மூலமா லின்க் அனுப்பி தெரியபடுத்தறது எல்லாமே மார்க்கெட்டிங் தான்.

அப்புறம் மின்னஞ்சல் சிக்னேச்சர் பகுதியிம் ப்ளாக் முகவரி இணைத்து அனுப்புவது, யாரோ கஷ்ட்டப் பட்டு யோசிச்சு எல்லாரும் ரசிக்கிற மாதிரி அழகுப்படுத்தி இணையத்துல போட்டு வைக்கிற புகைப்படம் வகையறா ஃபார்வர்ட் அஞ்சல்களில் கஞ்சமும் கூச்ச நாச்சமில்லாமல் அதில் உள்ள சுட்டியை நீக்கிட்டு நம்ம ப்ளாக் சுட்டியை பதிவு பன்றது எல்லாம் மார்க்கெட்டிங் தான். ;)

யாராவது ஒரு திரட்டியில மட்டும் பதிவு பண்ணி இருக்கங்களா சொல்லுங்க. ஊர்ல இருக்கிற எல்லா திரட்டியிலும் பதிவு பண்ணி வச்சிருக்கங்க. அதில்லாம சர்ச் எஞ்சின்லயும் பதிவு பண்ணி வச்சிருக்காங்க. இதெல்லாம் எதுக்கு தங்களோட வாசகர் வட்டத்த அதிகரிக்க தான்.

ஹிஹி.. என்னடா இது எந்த கர்மத்த பண்ணாலும் இந்த மூதேவி வந்து மார்க்கெடிங்னு கத விடுதேனு திட்றது கெக்குது. என பன்றது மார்க்கெட்டிங் நம்ம வாழ்க்கைல பிரிக்க முடியாத அங்கமாய்டிச்சே. :)

தங்களோட தயாரிப்புகளை எல்லாருக்கும் கொண்டு சேர்க்க நிறுவங்கள் மார்க்கெட்டிங் செய்வது போல தங்களோட கருத்துக்கள் அல்லது மொக்கைகள் எல்லாருக்கும் போய் சேர்வதற்காக நாம் செய்வதும் மார்க்கெட்டிங் தான். :)

If you do build a great experience, customers tell each other about that. Word of mouth is very powerful. - Jeff Bezos

இப்பத்திக்கு அப்பீட்டு......
....... இது கத்துக்குட்டிக்கான பதிவு. தமிழ்மணம் திரட்டும் வரை இங்கும் வெளியிடப்படும்...........

TATA nano - வெளிவராத அரிய புகப்படங்கள்.


இந்த புகைப்டங்கள் இதுவரை எந்த ஊடகத்திலும் அல்லது விளம்பரங்களிலும் வந்ததில்லை. முதன்முதலில் இங்கு தான் பிரசுரிக்கப்படுகிறது. என்ன மக்களே! படங்களை பார்த்து ரசிச்சிங்களா?.இது ஏன் இன்னும் வேற எந்த ஊடகத்திலும் வரலைனாக்கா... இது போன வாரம் புது டில்லியில் நடந்த ஆட்டோஎக்ஸ்போ2008 ல கலந்துகிட்ட எங்க பார்ட்னர் எடுத்த போட்டோஸ். இப்போ தான் வலையேத்தறேன். :P

Friday, 18 January, 2008

உங்கள அறுக்க ஒரு புது ப்ளாக்

நம்ம சிவா மாமா வலைச்சரத்துல எதாச்சும் உருப்படியா (?!) எழுதனுமே அப்டினு நெனச்சி ஹிண்டு ஆஃபிஸ்க்கு லீவ் போட்டுட்டு கண்ணுல வெளக்கெண்ணை (வேற எண்ணெயே கெடைக்காதா?:( ) விட்டுக்கிட்டு தமிழ் பதிவுகள் எல்லாத்தயும் வாழ்க்கைல முதல் முறையா( இவ்ளோ நாளா எதயும் படிக்காம் தான பின்னூட்டிட்டு இருந்தார். :) படிச்சதுல கண்ணு கொ்ஞ்சம் டிம் ஆய்ட்டதால பவர் க்ளாஸ் வாங்க கண் கண்ணாடி கடைக்கு போனார்.அந்த கடையில் முதலில் வாங்க வரும் கஸ்டமருக்கு நஷ்டம் ஆனாலும் பரவா இல்லை என்று கண்ணாடியை விற்று விடுவார்கள். எந்த காரணத்தைக் கொண்டும் முதல் கஸ்டமரை வெருங்கைய்யொடு அனுப்ப மாட்டார்கள். சிவா மாமாவை பார்த்ததும் கடைக்காரருக்கு ரொம்ப சந்தோஷம். காலைல மொத போணி. பெரிய ஆள் சிக்கிட்டார். இன்னைக்கு லம்பா ஒரு அமோண்ட்டு பாத்துடால்ம்டானு நெனச்சிக்கிட்டார்.....( பின்ன Leon Wilson எழுதின The Business of Share Trading புத்தகத்தை கைல வச்சிருந்தா வேற என்ன தான் நெனைக்க முடியும்? :P ).....

அங்க கடைக்காரர் அவருக்கு ஒரு கண்ணாடி எடுத்து காட்டினார்.
அப்போ கடைக்காரருக்கும் சிவா மாம்ஸுக்கும் நடந்த உரையாடல் ,

சிவா மாம்ஸ் : அந்த கண்ணாடி வெல என்ன?
கடைக்காரர் : 2500 ரூபாய்ங்க சார்.
சிமா: அவ்ளொ வெலை எல்லாம் கட்டுபடி ஆகதுங்க. வேற காட்டுங்க.
ககா : இது பாருங்க சார் ( வேற ஒன்னு காட்டறார்)
சிமா : இது என்ன வெல?
ககா: 2000 ரூபாய் சார்.
சிமா : அவ்ளோ வெலை எல்லாம் குடுத்து என்னால வாங்க முடியாதுங்க. அத விட கொஞ்சம் கம்மி ரேட்ல ஒன்னு காட்டுங்க.
ககா: இத பாருங்க சார்.
சிமா: இது வெலை என்ன?
ககா: 1500 ரூபாய் சார்.
சிமா : இல்லிங்க இது கொஞ்சம் " காஸ்ட்லி". இன்னும் கம்மி ரேட்ல காட்டுங்க.
ககா: இது பாரு( மரியாதை:P)
சிமா: ரேட்?
ககா: 500 ரூபாய்
சிமா: இப்போ என்கிட்ட இவ்ளோ பணம் இல்லைங்க. இத விட கம்மி ரேட்.
ககா: ( கடுப்பாகி ) இது பாருப்பா 150 ரூபாய் தான்.
சிமா: இது கூட கொஞ்சம் ஜாஸ்தி தானுங்க.
ககா: இது பாத்து தொலை 50 ரூபாய் தான்.
சிமா: அய்யோ இதுவும் காஸ்ட்லி தானுங்க. வேற காட்டுங்க.
ககா: (செம கடுப்பாகிறார்) யோவ் இந்தாய்யா இத வச்சிக்கோ. காசும் வேணாம் ஒன்னும் வேணாம்.எடத்த காலி பண்ணு. காலங்காத்தால $%^%&^$#@.
... சிவா மாம்ஸ் அத வாங்காம அப்டியே நிக்கறார்.....
ககா: இன்னும் என்னய்யா யோசிக்கிற. அதான் ஃப்ரீயா தறேன்னு சொல்லிட்டேனே.


சிமா: எல்லாம் சரி தான். இத வாங்கிட்டு போறதுல ஒன்னும் ப்ரச்சனை இல்ல. என் அண்ணனுக்கும் ஒன்னு வேணும் . அவருக்கும் ஒன்னு குடுத்திங்கனா சந்தோஷமா வாங்கிட்டு போய்டுவேன்.
(கடைக்காரர் என்ன ஆனார் என்பதை சொல்ல வேண்டியதில்லை என் நினைக்கிறேன்.:P)

........ The End........

அதாகப் பட்டது எனதருமை வலை வாழ் மக்களே! எதுனா ஃப்ரீயா கெடைச்சதுனா எனக்கும் என் தம்பிக்கும் மட்டுமில்ல எங்க ஊட்ல கீர எல்லார்க்கும் ஒன்னு குடுங்கனு கேட்டு வாங்கறது நம்ம கல்ச்சர் :P. அப்டி இருக்கும் போது கூகுள் ஃப்ரீயா ப்ளாக் எழுத எடம் குடுக்கும் போது ஒரு ப்ளாகோட நிறுதிக்க நம்ம கல்ச்சர் எடம் குடுக்கல. அதானால் இதை வழக்கமான மொக்கைக்கு வச்சிகிட்டு எனகு ரொம்ப பிடிச்ச என்ன வாழவைக்கும் மார்க்கெட்டிங் மற்றும் அதுக்கு தொடர்புடைய சமாச்சாரங்கள பத்தி எழுத கத்துக்குட்டி என்று ஒரு வலைப்பூவையும் ஆரம்பிச்சிருக்கேன். உங்கள் மேலான ஆதரவை நல்குகிறேன்.:))
அங்கும் கும்மி அடிக்கலாம். ஆனா அது யாருக்கவது உபயோகமாவோ சிந்திக்கும் விதமாவோ இருக்கோனும். :) கும்மில என்னத்தடா சிந்திக்கற மாதிரி கும்மி என்று கேக்கறிங்களா?.. எல்லாராலும் கும்மி அடிக்க முடியாது.கும்மி அடிக்க கற்பனை வேணும். அப்டியே நம்ம ஐன்ஸ்டீன் என்ன சொல்றார்னு பாருங்க..
"Imagination is more important than knowledge. For knowledge is limited, whereas imagination embraces the entire world, stimulating progress, giving birth to evolution." ஸோ .. நல்லா அறிவுபூர்வமா கும்முங்கோ. :)

Thursday, 17 January, 2008

உடனே விஜய் டிவி பாருங்க. 17.01.2008 - இரவு 9 மணி

விஜய் டிவியில் தமிழகத்தின் பிரபலங்கள், சில துறைகளின் வல்லுனர்கள் விவாதம் செய்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தவர்கள் பாருங்கள்.

Sunday, 13 January, 2008

அனைவருக்கும் உழவர் தின மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

இது சினிமா பொங்கல் இல்ல. நிஜப் பொங்கல்.
பொங்கல் பண்டிகை வந்தா இவங்களுக்குத் தான் முதல் மரியாதை. :)

அனைவருக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள். உழவு செழிக்கட்டும்.. வளம் கொழிக்கட்டும்.. அனைவருக்கும் உணவு கிடைக்கட்டும்.. உழவுக்கும் உழவர்க்கும் மரியாதை செலுத்துவோம். நாளை கிளம்புகிறேன் என் மண்ணுக்கு மரியாதை செலுத்த.

Thursday, 10 January, 2008

சாம்பலான மலர்கள். Serious TAG

இந்த வருஷம் தொடர் விளையாட்டுக்கு பதிவு எழுதியே ப்ளாக் நிரம்பிடும் போல. போன வாரம் தான் பொன்னரசி புண்ணியத்துல ஒரு மொக்கை பதிவு போட்டேன். அதுக்குள்ள நம்ம இம்சை சீரியஸ் பதிவு போட சொல்லி இம்சை குடுக்கிறார்.

//சீரியஸ் பதிவு போட நான் அழைக்கும்(Tagged) மொக்கை நண்பர்கள் குசும்பன், மங்களுர் சிவா, ரசிகன், பொடியன் (அ) சஞ்சய், & மைபிரண்டு.//
...... ஏனுங்ணா.. சீரியஸ்க்கும் எங்களுக்கும் என்னங்ணா சம்பந்தம்? :P.. அதுவும் பாருங்க.. மொக்கை போடறவங்கள மட்டும் மாட்டி விட்டிருக்கார். ம்ம்ம்ம்.. நல்லா இருங்க. :)

சரி நம்ம மொக்கையை தொடர்ந்தவராச்சே. ஏதோ நம்மளால முடிஞ்சத நாமளும் செய்வோம்.என்னால் மறக்க முடியாத சம்பவமும் அதனை தொடர்ந்து மாறிய மனமும். தூக்கு தண்டனை என்பது சட்டத்தின் உதவியுடன் நடத்தப் படும் கொலை என்ற எண்ணம் கொண்டிருந்த நான், சில மனித மிருகங்கள் தூக்கிலிட்டுக் கொல்லப் பட வேண்டியவர்களே என்று நினைக்கத் தொடங்கிய தருணம் அது.
தருமபுரியில் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் கல்லூரியின் அருகில் தான் அந்த துயரம் நிகழ்ந்தது. கோவை விவசாயக் கல்லூரி மாணவிகள் சில காட்டு மிராண்டிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப் பட்டார்கள். செய்தி அறிந்து நாங்கள் வந்து சேருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. அந்த காட்டு மிராண்டிகள் எதுவும் எங்கள் கையில் அகப் படாமல் தப்பித்துவிட்டது. பேருந்தின் பின் படிகளில் ஒருவர் மீது ஒருவராக அந்த 3 தோழிகளும் கருகிபோய் இருந்தார்கள். என் வாழ்க்கையில் நான் கண்ணீர் விட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய சில தருணங்களில் இதுவும் ஒன்று.

அருகில் தீக்காயங்களுடன் சில மாணவிகள் அழுதுக் கொண்டிருந்தார்கள். அந்த மிருகங்கள் கையில் கிடைத்தால் பிய்த்து எரிந்துவிடும் கோபத்தில் சில மாணவர்கள். அதில் என் நெருங்கிய நண்பனும் ஒருவன். அவன் வகுப்புத் தோழிகள் தான் அந்த மாணவிகள். என்னுடன் பள்ளியில் படித்தவன். அந்த மாணவிகள் 3 பேரும் நன்றாகப் படிப்பவர்க்ளாம். அதில் ஒரு மாணவிக்கு IAS Officer ஆக வேண்டும் என்பது கனவாம். அதற்காக தன்னை தயார் செய்துக் கொண்டிருந்தாராம். அந்த கனவும் தீயோடு கருகி போனது எவ்வளவு பெரிய கொடுமை?.
அந்த சம்பவத்திற்கு காரணமான கொடியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டவாறே( சாலை மறியல் செய்வதை இப்போது வெறுக்கிறேன்) நானும் சில நண்பர்களும் மாவட்ட ஆட்சித் தலைவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சில மாணவ நண்பர்கள் ஆத்திரப் பட்டு ஆட்சியரின் கார் கண்ணாடியை உடைத்து விட்டார்கள். அதை தொடர்ந்து எங்கள் மீது தடியடி நடத்தப் பட்டது. பிறகு அது கலவரமாக மாறி கண்ணீர் புகையுடன் துப்பாக்கி சூடு நடத்தப் பட்டது. என் தோல் பட்டையிலும் ரப்பர் குண்டு பாய்ந்தது. இரவு வரை இந்த கலவரம் நீண்டது.

பிறகு அரசு பொது மருத்துவமனையின் பின் புற வழியாக சென்று தீக்காயம் அடைந்த மாணவிகள் சிகிச்சை பெற்ற வார்டுக்கு சென்று என் நண்பனுக்கும் அவன் தோழர்கள் மற்றும் தோழிகளுக்கும் தேவையான உதவிகளை செய்து அவர்கள் பையூர் விவசாய ஆராய்ச்சி நிலையம் செல்லும் வரை இருந்து இரவு 1 மணிக்கு மேல் அதே பின் புற வழியாகவே வெளியேறி அருகில் இருந்த ரயில் தண்டவாளத்திலேயே நடந்து சென்று ஹாஸ்டல் போய் சேர்ந்தேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சில சம்பவங்களில் ஒன்று.

இந்த சம்பவத்திற்கு பிறகு தான் உயிர்களின் மதிப்பு தெரியாமல் கொல்லும் இந்த மிரு்கங்களை சட்டத்தின் உதவியுடன் கொல்வதில் தவறில்லை என்ற எண்ணம் வந்தது.

Sunday, 6 January, 2008

Sunday Special - PIT போட்டிக்கு.

போட்டோஷாப்பில் அழகுபடுத்த நேரம் இல்லாததான் பிக்காஸாவின் உதவியை மட்டும் நாடி ஏதோ என்னால முடிஞ்சது.. :))
நாங்களும் படிப்போம்ல.. :)
அட.. காலை நேர சூரிய ஒளியில எடுத்தா நல்லாத் தான் கீதுங்க :) எங்க Chairக்கு இத்தனை கலர்களா? :)
ஹிஹி.. ஸ்டார் ஹோட்டல் இல்லீங்கோ.. எங்க வீட்டு ஷவர் தான்.. :) எவ்ளோ அழகா வச்சிருக்கேன் பாருங்க... நான் பொறுப்பான பேச்சிலர் தான? :)
நாங்க எல்லாம் நெருப்பதான் காலைல எழுந்ததும் குடிப்போமாக்கும்.. :P
சாம்சங் ஓசியில குடுத்த ரியோ மக் இல்ல.. இதுக்கும் என்கிட்ட காசு வாங்கிட்டாய்ங்க :(
நெருப்பு குழம்பு.. இது மேல தான் நான் தினமும் உக்காத்து வேல பாக்கறேன்.. சிங்கம்ல.. :P
என் வாட்ச் பாத்து டிவி டைம் சொல்லுது.. :).. என் வாட்ச் தான் கவுந்துடிச்சோ? :P
எல்லாம் பிகாஸா வேலை :)
அண்டா குண்டா இல்ல.. கண்ணாடி டம்ப்ளர் தான்.
மஞ்சா தண்ணி :).. ஆனா யாரு மேல ஊத்தறதுனு தான் தெரியல :(

டிஸ்கி: யார் கண்ணு வச்சாங்கன்னு தெரியல :(. திடிர்னு படங்கள் எல்லாம் மறைஞ்சிடிச்சி. அதனால இது 2வது முறையா அப்லோட் பண்ணேன். பாதி படங்கள இப்பொ விட்டுட்டேன். எல்லாரும் சொன்ன மாதிரி இந்தியாடுடே மேல வந்திடிச்சி. இப்போ இத PIT க்கு சொல்லி அனுப்பினா சர்வேசன் கெட்ட வார்த்தைல திட்ட போறார். :P

Thursday, 3 January, 2008

ஜில்லுனு ஒரு TAG விளையாட்டு.

என் தோழி பொன்னரசி என்னை TAG( இதை எப்படி தமிழ்ல சொல்றது? :( ) செய்து இருக்கிறார். TAG என்பது ஒரு வகையான தொடர் விளையாட்டு. ஒருவர் தன் ப்ளாகில் ஒரு பதிவு எழுதி அதன் இறுதியில் வேறு ஒருவர அல்லது சிலருக்கு அழைப்பு விடுப்பார். அழைப்பு விடுக்கப் பட்டவர் அழைத்தவரின் பதிவுக்கு தொடர்பான அல்லது தொடர்பற்ற ஒரு (மொக்கை) பதிவை தன் வலைப்பூவில் எழுதி ,அதன் முடிவில் தான் விரும்புவருக்கு அழைப்பு விடுப்பார். இப்படி நீண்டுகொண்டே போகும். முதன் முறையாக இந்த ஆட்டத்தில் நானும் கலந்துக் கொள்கிறேன். என் தோழியின் அன்பு :( அழைப்பின் பேரில்.

எனக்கு எப்போதும் புத்தாண்டு சபதம் என்று எதும் இருந்தது இல்லை.நேற்று செய்ய நினைத்ததையே இன்று மறக்கும் கட்சிக்காரன் நான். இதில் எங்க போய் வருஷத்துல முதல் நாள் சபதம் எடுத்து அதை வருடம் முழுவதும் நினைவு வைத்து காப்பாற்றுவதாம். அதுவுமின்றி வாழ்க்கையை போகிற போக்கில் ரசிக்க நினைப்பவன் நான். இதுல என்ன சபதம் வேண்டி கெடக்காம்?.

ஆனால் என் இயல்பு வாழ்க்கையில் சில மாற்றங்கள் தெரிகிறது. இது திட்டமிட்டு வந்ததில்லை. போகிறா போக்கில் ஏற்பட்டது தான். இதற்கும் புது வருஷத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டிவி பார்க்கும் பழக்கத்தை வெகுவாக குறைத்து விட்டேன். எப்போதும் ரிமோட்டில் சேனல்களை மாற்றிக் கொண்டே இருப்பென். உருப்படியாக ஒரு நிகழ்ச்சியையும் இது வரை பார்த்ததில்லை. அப்புறம் எதற்கு வீணாக இதற்கு நேரத்தை செலவிட வேண்டும். அதான் குறைத்துக் கொண்டேன்.

சில மாதங்களுக்கு முன்பு வரை இணையத்திற்கும் தொலை பேசி அரைட்டைகளுக்கும் அதிக நேரம் செலவிட்டேன். இப்போது இவைகளை வெகுவாக குறைத்துக் கொண்டேன். அதற்காக ஏதோ ஆணி புடுங்குதல் அதிகம் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இபோது ஆணி புடுங்கும் விஷயத்தில் சற்று கூடுதல் சுமை தான் என்றாலும் நான் இவ்வளவு நாட்களாக வீணடித்த என் பொன்னான :) நேரத்தை புத்தகங்கள் படிக்க செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். வார இதழ்களில் கூட இந்தியாடுடே தவிர வேறு எதையும் படிக்கும் பழக்கம் இல்லாமல் இருந்த நான் இப்போது வியாபாரம், மார்க்கெட்டிங், பிறருடன் உரையாடும் திறன் , சிக்கலான சவாலான நேரங்களில் சமாளிக்கும் திறன் போன்ற புத்தகங்களுடன் சில வரலாறுப் புத்தகங்களையும் படிக்க அதிக நேரம் செலவிடுகிறேன். இப்போதெல்லம் செய்தி தாள்களையும் முழுதாக படிக்க ஆரம்பித்துள்ளேன். :)

சமீபத்தில் நான் மிகவும் சிரத்தை எடுத்து வாங்கிய புத்தகம் " A Yen for Yen - Cashing big on dreams". கஷ்டபட்டு தேடி ரெடிஃப்.காமில் பிடித்து வாங்கினேன். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வந்தது. இன்னும் படிககவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திர்கு முன்பு உள்ள பொன்மொழிகளில் சிலவற்றையும் அத்தியாயங்களுகு பின்பு இருக்கும் நீதியையும் படித்தேன். சும்மா நச்சினு இருக்கு. புத்தகத்தின் மீது ஆர்வமும் அதிகமாகி இருக்கிறது. இந்த புத்தகத்தை வாங்க காரணம் பொன்னரசி தான். இந்த புத்தகத்தை படிக்கும் போது என் நினைவு வந்ததாம். நான் இதை படித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாள்:).( குட்டிப் பெண் தான் என்பதால் அவள் என்று சொன்னாலும் கோபித்துக் கொள்ள மாட்டாள்.) இணையத்தில் இதன் விலை அநியாயத்துக்கு இருந்ததால் தன்னிடம் உள்ள புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன் என்றும் அதை பத்திரமாக திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றும் எனக்கு சுத்தமாக பிடிக்காத நிபந்தனையை விதித்தாள். ஆகவே உன் சகவாசமே வேண்டாம் என்று சொல்லி நானே இனணயத்தில் பிடித்து வாங்கி விட்டேன் :)).

எனக்குத் தெரிந்த புத்திசாலிகள் சிலர் (இந்த பொன்னரசியையும் சேர்த்து தான் ) சரியான புத்தகப் புழுக்கள். இவர்களின் புத்திசாலித் தனத்திறகு இது தான் காரணமாக இருக்கும் என்று (தப்பு) கணக்கு போட்டு நானும் படிக்க ஆரம்பித்துவிட்டேன். புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல். சூடு போட்டுக் கொண்டால் மட்டும் பூனை புலி ஆகிவிடாது என்று தெரியும். என்ன பன்றது.. எல்லாம் ஒரு வெளம்பரம்தேன்.. :)

மீண்டும் சொல்கிறென்.. புத்தாண்டிர்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த பழக்கத்தை சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்டுவிட்டேன். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திவிடுவேன். :)

மொக்கை முடிந்தது.
இதைத் தொடர நான் சில நல்ல உள்ளங்களை அழைக்கிறேன்.:)
Minerva
விஷ்ணு
இம்சை
மை ஃப்ரண்ட்
ரசிகன்
குசும்பன்

இவங்க எல்லாரும் எதாவது மொக்கை போட்டே. இது வேண்டுகோள் இல்லை.. கட்டளை.. :))

Tuesday, 1 January, 2008

HAVE A GREAT 2008

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :-))
I WISH YOU ALL VERY JOYFUL AND SUCCESSFUL 2008... SPEAK WITH SMILE.. IT COSTS NOTHING... :-)


With Love
SanjaiGandhi

Tamiler This Week