இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday 26 July, 2008

ஆனாலும் கூகுளுக்கு இம்புட்டு நக்கல் இருக்கப்படாது.


வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி , மின்வெட்டை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் பண்றாய்ங்களாமாம். மக்கள் நலனில் சரத்திக்கு எவ்ளோ அக்கறை இருந்தா இதை செய்வார்? இதை போய் இந்த கூகுள் நக்கல் அடிச்சி வச்சிருக்கு பாருங்க. படத்தை பெரிசு பண்ணி பாருங்க புரியும்.

அந்த ஆர்ப்பாட்ட செய்தியை பொழுது போக்கு பிரிவில் வகைபடுத்தி இருக்கு. இதை பார்த்தால் சரத் எவ்ளோ வருத்தப் படுவார். அவரோட மக்கள் நலன் சார்ந்த விஷயம் கூகுளுக்கு பொழுதுபோக்கா தெரியுதா? :))

ஆகவே.. வருங்கால முதல்வரை நக்கல் அடித்த கூகுளை கண்டித்து நாம் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அலைகடலென திருண்டு வாரீர்..வரீர்..வாரீர்..

( இதை நகைச்சுவை பிரிவுல போட்ற போகுது.. :P )

Friday 25 July, 2008

a ப்பார் ஆப்பிள்

நம்ம சிவா மாம்ஸை யாரோ மாட்டிவிட்டதாம் அதே கடுப்பில் அவரும் என்னை மாட்டி விட்டுட்டார். a ப்பார் ஆப்பிள் என்ற தலைப்பில் நான் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை பட்டியலிட வேண்டுமாம்..ஹ்ம்ம்.. உங்க தலை எழுத்து... :)

  1. Gmail - இதுவன்றி இணையத்தில் ஒரு நாளும் செலவளிக்க முடியாது.
  2. Youtube India - NDTV, Google, ப்ரிட்னி, ஷகிரா, ஸ்பைஸ் கேர்ள்ஸ் மற்றும் சிலரின் ஆல்பங்கள் சப்ஸ்க்ரைப் பண்ணி வச்சிருக்கேன். அடிக்கடி பார்த்து ஜொள்ளு விடுவது வழக்கம். :P
  3. Thiraipaadal - அலுவலகத்தில் இருக்கும் போது இதிலிருந்து பாடல்கள் கேட்டுக் கொண்டிருப்பேன். இதில் இல்லாத தமிழ் பாடல்களே இல்லை எனலாம். தனித் தனியாக எல்லா வகையிலும் பிரித்து வைத்திருக்கிறார்கள்.
  4. kumudam Reporter - ஓசியில் பரபரப்பு அரசியல் செய்திகள் படிக்க.
  5. Orkut - நண்பர்களுடன் இணைப்பில் இருக்க.
  6. Download.com - புதிய மென்பொறுள்களை பற்றி அறிய. தேவையான இலவச மென்பொரூள்களை பதிவிறக்க.
  7. imeem - இதன் உறுப்பினர்களின் மெல்லிசைப் பாடல் தொகுப்புகளை கேட்டு ரசிக்க.
  8. Esnips - மாத்தாந்திர வியாபார அறிக்கையை பரிமாறிக் கொள்ள. மின் நூல்கள் படிக்க.
  9. Blogger - சொல்லியாத் தெரியனும்?
  10. SiliconIndia - வியாபாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப செய்திகளுக்கு. வியாபாரத் தொடர்புகளுக்கு.
  11. ZD Net - தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த கருவிகளின் செய்திகளுக்கு.
  12. IOB - நிறுவன வங்கி கணக்கின் தினசரி பரிமாற்றம் பற்றி அறிய.
  13. ICICI Bank - என் வங்கி கணக்கு மற்றும் இணைய வழி பணப் பரிமாற்றத்திற்கு.
  14. HDFC Bank - கடன் அட்டை பயன்பாடு பற்றிய விவரங்களுக்கு.
  15. Wikipedia - பல விஷய்ங்களை பற்றி விவரமாகத் தெரிந்துக் கொள்ள.
  16. IBNLive - சுடச் சுட செய்திகள் மற்றும் விடியோக்களுக்கு.
  17. Yahoo Mail - யாஹூவில் உள்ள ஒரு மெயில் பார்க்க.
  18. MSNIndia- எம் எஸ் என் மெயில் பார்க்க.. மற்றும் அதன் பல பயனுள்ள பிரிவுகளை உபயோகிக்க.
  19. Vodpod - இசை விடியோக்கள் பார்க்க ரசிக்க.
  20. last.fm - நண்பர்களின் இசைத் தொகுப்பை கேட்க. இசைக் கருவிகளின் இசையை கேட்க.
  21. Govt of India - அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய முடிவுகள் பற்றிய விவரத்திற்கு. இதில் பதிவு செய்து வைத்து இருப்பதால் அவ்வப்போது அப்டேட்டும் வந்து கொண்டே இருக்கும்.
  22. maps.live.com - குறிபிட்ட இடங்களின் வழித் தடம் , தூரம் மற்றும் கடக்கும் நேரம் போன்றவற்றை தெரிந்துக் கொள்ள.
  23. Tata Indicom Broadband - இணைய பயன்பாடு பற்றிய விவரம் அறிய. அன்லிமிட்டட் தான். ஆனாலும் எவ்ளோ பயன் படுத்தி இருக்கேன் என்று தெரியனும்ல.. எதுலையும் ஒரு கணக்கு வச்சுக்கோனும்ல. ;)
  24. Buzz18 - பாலிவுட் ஃபிகர்ஸ் பத்தி கிசுகிசு படிகவும் அம்க்க நடக்கிற மேட்டர் தெரிஞ்சிக்கவும்.
  25. Forbes - புள்ளிவிவரங்கள் மற்றும் பலவகையான பட்டியல்கள் பார்க்க.. குறிப்பாக பணக்காரர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் பற்றிய பட்டியல் பார்த்து வயித்தெரிச்சல் படுவதற்கு. :(
  26. linked in - சில பெரும்புள்ளிகளின் தொடர்புக்கு.
  27. Howstuffworks - இது மிகப் பெரிய பொக்கிஷம். ஒவ்வொரு செயலும் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய இங்கு போவதுண்டு.
  28. Dictionary - சில சொற்களை தேடும் போது எப்படியும் இங்கு போயாக வேண்டி இருக்கும்.
அவ்வப்போது பார்க்கும் தளங்கள் இன்னும் நெறைய இருக்கு.... மேல இருக்கும் தளங்கள் எல்லாம் வாரத்தில் ஒருமுறையாவது பார்க்கும் தளங்கள். நான் யாரை TAG பன்றதுனு தெரியலை. ஆர்வம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் பேர் குடுக்கவும். :))

.. திட்ட விரும்புபவர்கள் டபுள்யூ டபுள்யூ டபுள்யூ டாட் மங்களூர்சிவா டாட் காமிற்கு கெட்ட வார்த்தையில் திட்டி அனுப்புங்க....:P

நான் அழைப்பது ( புதியவர்களை ஊக்குவிப்போம்..)
1.பொடிப்பொண்ணு
2.ராப்
3. ராமலக்ஷ்மி

Thursday 24 July, 2008

கூகுள் செய்திகள் தமிழில்


நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூகுள் தமிழ் செய்திகள் இப்போது வெளிவந்துவிட்டது.ஆங்கிலத்தில் உள்ள அதே பிரிவுகளுடனும் அதே மேலதிக வசதிகளுடனும் இருக்கிறது. தமிழ் செய்திகளுக்கான முக்கியமான தளங்கள் அனைத்திலும் இருந்து செய்திகள் திரட்டப் படுகிறது. இலங்கை சம்பந்தப் பட்ட செய்திகளுக்கு தனி பிரிவும் இருக்கிறது. ம்ஏலும் நமக்கு விருப்பமான தலைப்புகளை சேர்த்துக் கொள்ளவும் முடிகிறது. இதன் மூலம் அந்த தலைப்பிலான செய்திகளை தனிப் பிரிவாக படிக்கலாம்.


கூகுள் 3D அரட்டைக்கு புதியதாக Lively என்ற சேவையை அறிமுகப் படுத்தி இருக்கிறது. கூகுள் கணக்கை வைத்து உள்ளே சென்று நமக்கென மிக அழகாக நம் கற்பனைக்கேற்ற வகையில் அரட்டை அறையை உறுவாக்கி அதில் நம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்...

Wednesday 23 July, 2008

மாயாவதி+பிரகாஷ் காரட்+வடிவேலு



மாயாவதி + சந்திரபாபுநாய்டு + வடிவேலு என்றும் சொல்லலாம்.. ஆனால் சந்திரபாபு நாய்டு பரவாயில்ல... உசுப்பேத்திவிட்ட கைய்யோடு எஸ்கேப் ஆனவர் பிரகாஷ் காரட் தான்... :))

Sunday 20 July, 2008

அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து தொலைங்க


அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு வரி செய்தி :

நாட்டின் மின் தேவையை சமாளிப்பதே.
இன்று நாட்டின் மின்சார உற்பத்தி எந்த நிலையில் இருக்கு என்று எல்லோருக்கும் தெரியும். தமிழக அரசு தினமும் மின் வெட்டை அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் இதே நிலைமை தான். அவ்வளவு பற்றாக்குறை. காரணம்.. மின் உற்பத்திக்கான ஆதாரங்கள் குறைந்துகொண்டே வருவது தான். நிலக்கரி இருப்பும் குறைந்து கொண்டே வருகிறது. எவ்வளவு காலத்திற்கு தான் வெட்டி எடுக்க முடியும். இருக்கும் வரை தான். இன்னும் சில ஆண்டுகளே நிலக்கரி கிடைக்கும். பிறகு என்ன செய்வது?

காங்கிரஸ் அரசாங்கத்தின் "கையாகாத்தனத்தால்" , "தவறான ஆட்சி முறையால்" பருவ நிலைகளும் மாறிவிட்டது. சரியான மழை இல்லை. நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. ஆக.. நீர் மின்சார உற்பத்தியும் குறைந்து விட்டது.

எனவே மாற்று வழியை தேடித் தானே ஆக வேண்டும்?. அந்த மாற்று வழி தான் அணு மின்சாரம். ஆனால் அதை தயாரிக்க போதுமான அளவு மூலப் பொருள் (தோரியம்) நம்மிடம் இல்லை. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப் போகும் அணு சக்தி ஒப்பந்த்ததின் மூலம் நமக்கு அது கிடைக்கும். இதன் மூலம் நம் மின்சாரத் தேவையை ஓரளவாவது பூர்த்தி செய்யலாம். இல்லை எனில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா இருளில் மூழ்கும் என்பது உறுதி.

இந்த ஒப்பந்தத்தை எதிர்பவர்கள் சொல்லும் ஒரே காரணம் "அமெரிகா நம் அணு உலைகலை கண்காணிக்கும். நாம் அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட முடியாது. நாம் அணு குண்டு தயாரிக்க அமெரிக்கா தடை விதிக்கும்" என்பது தான். இது பயங்கரமாய் சிரிப்பை வரவழைக்கிறது. இன்றைய நிலையில் இந்தியாவை எந்த உலக நாடும் கட்டுபடுத்த முடியாது. அமெரிக்காவிடமிருந்து வாங்கும் தோரியத்தை நாம் அணு குண்டு தயாரிக்க உபயோகப் படுத்திவிடக் கூடாது என்று தான் அவர்கள் கண்காணிப்பார்கள். அப்படியே நாம் அனுகுண்டு சோதனை நடத்தினால் இந்த ஒப்பந்தம் ரத்தாகும் அவ்வளவு தான்.

அதுவும் எல்லா அணு உலைகளிலும் அவர்களுக்கு அனுமதி இல்லை. சிவில் மற்றும் இராணுவப் பயன்பாட்டிற்கென இரண்டு வகையாக நம் அணு உலைகள் பிரிக்கப் படும். மின்சாரத்திற்கு பயன்படுத்தப் படும் அணு உலைகளை தான் சர்வதேச அணுசக்திக் கழகம் கண்காணிக்கும். இராணுவ பயன்பாட்டிற்கான அணு உலைகளில் நாம் என்ன செய்தாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது.

அப்படியே நாம் அணுகுண்டு வெடித்து அமெரிக்கா நமக்கு அணு சப்ளையை நிறுத்திக் கொண்டாலும் கவலை இல்லை. அணுகுண்டு சோதனைக்கான நேரம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அது வரையில் அவர்கள் அளிக்கும் தோரியத்தை பயன்படுத்திக் கொள்ளளாமே. கிடைக்கும் வரை லாபம் தானே.

அணு குண்டு சோதனை நடத்தினால் ஒப்பந்தம் ரத்தாகும் என்று தான் விதிகள் உள்ளதே ஒழிய நாம் அணு குண்டு சோதனை நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை. அப்படியே நாம் அணுகுண்டு ஆராய்ச்சி நடத்தினாலும் யாராலும் அதை கண்டுபிடிக்க முடியாது. கடந்த முறை அணுகுண்டு சோதனை நடத்தி முடித்து புத்தர் சிரித்தார் என்று அறிவித்த பின் தான் உலக நாடுகளுக்கு தெரிந்தது.

ஆகவே நம் மின் தேவையை உணர்ந்து தேவை இல்லாத குழப்பங்களை தவிர்த்து அனைவரும் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் டி.ராஜா : நாங்கள் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிக்கவில்லை. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை தான் எதிர்க்கிறோம்." ஹாஹா.. என்ன கொடுமையான கொள்கை இது?..

Friday 18 July, 2008

அட என்னாச்சிங்க இந்த தமிழ்மணத்துக்கு..

அட என்னாச்சிங்க இந்த தமிழ்மணத்துக்கு?..நான் அப்டி என்னங்க பெரிசா எழுதி கிழிச்சிட்டேன்.. நான் என்ன எழுதினாலும் இப்போ எல்லாம் என் பதிவுகள் சூடாண இடுகைல வந்துடுது.. பாருங்க இந்த பதிவு கூட சூடாண இடுகைகள்ல வரும். :D

Thursday 17 July, 2008

கோவை பதிவர் சந்திப்பு - படங்களுடன் ஃபுல் கவரேஜ்

[படம் : திரு.வின்செண்ட், திரு. குப்புசாமி, திரு.ஞானவெடியான்]
காலை 10 மணிக்கு 2 நிமிடம் முன்பாகவே சென்றுவிட்டேன். தமிழ்பயணி சிவாவும் மஞ்சூர் ராசாவும் எல்லா ஏற்பாடுகளும் முடிச்சி தயாரா இருந்தாங்க. ஞானவெட்டியான் ஐயாவும் குப்புசாமி ஐயா 2 பேரும் உக்காந்துட்டு இருந்தாங்க. அவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு காபி குடித்து முடித்து வருபவர்களுகெல்லாம் போன் பண்ணி பேசிக் கொண்டே நேரம் போய்க் கொண்டிருந்தது. பிறகு செல்லா வந்தார். வந்ததும் ரொம்ப டல்லா உக்காந்திருந்தார்.. பத்திரிக்கைகாரர் மாதிரி ஒரு பை வைத்திருந்தார். அதிலிருந்து ஒரு ஒலிப்பதிவு கருவி எடுத்தார். வெளிநாட்டு நண்பர் அனுப்பியதா சொன்னார். அப்போது தான் பயன்படுத்த எடுத்தார் போல. அதில் உள்ள 4 பொத்தான்களையே வெகு நேரம் தேடிக் கொண்டிருந்தார். :)

சிறிது நேரத்தில் தொட்டராய ஸ்வாமி வந்து அடக்க ஒடுக்கமாய் அமைதியாக உக்கந்தார். கொஞ்ச நேரத்தின் சுப்பையா வாத்தியும் கோவை ரவியும் வந்தார்கள். வாத்தி கைய்யில் 3 சால்வைகளும் , கொஞ்சம் சாக்லேட்டுகளும், ஏகப்பட்ட சாமி படங்களும் கொண்டுவந்திருந்தார். சாக்லேட்டுகளை பொறுப்பாக சிவாவிடம் கொடுத்துவிட்டு சாமி படங்களை எல்லோருக்கும் கொடுக்க சொல்லி என்னிடம் கொடுத்தார்.. கடைசி வரையில் யாருக்கும் தரவில்லை என்பது வாத்தியாருக்கு தெரியாது. யாரும் சொல்லிடாதிங்க. :).. சற்று நேரத்தில் புரவி ராம் மற்றும் சிலர் வந்து சேர்ந்தார்கள். இடைஇடையே காபியும் வடையும் ஜூஸும் வந்தது... நன்றி திரு மற்றும் திருமது. மஞ்சூர் ராசா.

[படம் : தொட்டராயஸ்வாமி, ஓசை செல்லா, சுப்பைய்யா வாத்தியார், கோவை ரவி]
... வாத்தியார் படலம் : வந்த உடன் " எனக்கு டைம் இல்ல.. உடனே கிளம்பிடுவேன்..உண்மை தமிழன் என்னை பத்தி 8 பக்கத்துக்கு எழுதி இருக்கார் போய் பாருங்க.. வாத்தியார் பேச ஆரம்பிச்சார்னா நிறுத்த மாட்டார்னு சொல்லி எழுதி இருக்கார்.. எல்லாரும் போய் படிங்க" என்று சொல்லிக் கொண்டே இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தார்... காபி கொடுத்தோம்... எனக்கு நேரம் இல்லை உடனே கிளம்பனும் என்று சொல்லிவிட்டு எதோ சொல்லிக் கொண்டே குடித்தார்.. பிறகு இன்னும் எதோ சொல்லிக் கொண்டே இருந்தார்.. கொஞ்ச நேரத்தில் வடை குடுத்தோம்.. 10 நிமிஷத்தில் நால் கிலம்ப வேண்டும் என்று எதோ சொல்லிக் கொண்டே சாப்பிட்டார்... கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிடறேன் என்று ஒரு 2 வரி ஜோக்கை எப்படி பில்டப் பண்ணி பெரிய ஜோக்காக மாத்தினார் என்று 30 நிமிடம் சொன்னார்... ரொம்ப அவசர வேலை இருக்கு என்று சொல்லிக் கொண்டே எழுந்து தமிழ்மணம் பற்றி சில மணி நேரங்கள் பேசினார்.. நாம 3 மணி நேரம் 3 மணி நேரம் யோசிச்சி எழுதறது சில வினாடிகளில் காணாமல் போய்விடுகிறது... அதனால 150 பதிவுகள் முகப்பில் தெரியற மாதிரி ஸ்க்ரோலிங் வசதி குடுக்க வேண்டும் என்று எல்லாரும் சேர்ந்து தமிழ்மணத்துக்கு கடிதம் எழுத வேண்டும் என்று சொன்னார்.. பிறகு ஜூஸ் குடுத்தோம்.. எனக்கு இதுகெல்லாம் நேரமில்லை நான் போயாகனும் என்று சொல்லிக் கொண்டே ஜூஸ் குடித்துக் கொண்டே பேசிக் கொண்டே உக்காந்துக் கொண்டார்.. தான் சம்பாதிக்க பதிவெழுதவில்லை என்றும் சம்பாதித்துக் கொண்டு தான் பதிவெழுதுவதாகவும் சொல்லிக் கொண்டே கூகுள் ஆட்சென்ஸ் பத்தி பேசினார்.. வெறும் 2 கோடி பேர் மட்டும் பேசும் மொழியை கூட ஆட்சென்ஸ் சப்போர்ட் செய்வதாகவும் தமிழ் மொழியை சப்போர்ட் செய்வதில்லை என்றும் பேசிக் கொண்டே இருந்தார்.. மீண்டும் கடைசியாய் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்வதாக சொல்லிவிட்டு.. கூகுளுக்கு இது தொடர்பாய் அனைவரும் ஈமெயில் அனுப்ப வேண்டும் என்று சொன்னார்... ஐய்யா.. நீங்களே அதை எழுதி எங்களுக்கு அனுப்புங்க.. அதை நாங்க ஃபார்வர்ட் செய்கிறோம் என்று சொல்லி எஸ்கேப் ஆய்ட்டோம்.. :)).... இன்னும் எதேதோ பேசிக் கொண்டே இருந்தார்.. எனக்கொரு சந்தேகம்... "சுப்பைய்யா வாத்தியாருக்கு மூச்சு விடும் பழக்கம் இருக்கா?" :P..

தான் வாத்தியாரான / ஆக்கப்பட்ட கதையை சொன்னார்... அது மக்களால் கொடுக்கப் பட்ட பட்டம் என்பதாலும் தனக்கு பிடித்திருந்தது என்பதாலும் அதை வைத்துக் கொண்டதாக சொன்னார்... எம்ஜிஆருக்கு பிறகு சுப்பைய்யா வாத்தியாருக்கு தான் இந்த பட்டம் கொடுத்திருப்பதாக யாரோ ஒரு புண்ணியவான் அடித்துவிட்டார்...

கொண்டுவந்த சால்வையை முதலில் ஓசை செல்லாவுக்கு அணிவித்தார். சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்ததற்கு போட வேண்டியதாம். அப்போது வேறு யாருக்கோ போட்டுவிட்டதால், இந்த வருடம் அவருக்கு போடுகிறாராம்.. பழய கடனை செலுத்திவிட்டதாக சொல்லிக் கொண்டார். :).. மொத்தம் 10 பேருக்கு சால்வை அணிவிக்க வேண்டுமாம். மீதம் 9 பேர் கிடைக்கும் வரை பதிவர் சந்திப்பு தொடந்து வருவேன் என்று பயமுறுத்தினார். பயம் எதற்கென்றால்.. அவருக்கு வயசாகிட்டே போகுது இல்ல.. அதனால் இது மாதிரி தொடந்து வந்துட்டு இருந்தா ஒடம்பு என்ன ஆடறது.. அந்த அக்கறையில தான் சொல்றேன். அதனால சீக்கிறமே அந்த 9 பேர் கிடைக்க பிரார்த்திப்போம். :P.... எல்லாம் முடிந்து ஒருவழியாக கோவை ரவி சாரை தளிக் கொண்டு வாத்தியார் நடைஅயி கட்டினார்.. கிளம்பும் போது குலாப் ஜாமுன் கொடுத்தோம். அதை சாப்பிட மறுத்துவிட்டார்... காரணம் கேட்டதற்கு தனக்கு சர்க்கரை எல்லாம் இல்லை.. இனிப்பு சாப்பிட்டால் வெய்ட் போட்டுவிடுவார் என்று டாக்டர் சொன்னாராம்... யாருங்க அந்த மன்சாட்சி இல்லாத டாக்டர்.. :(.. இதுக்கு மேல என்ன வெய்ட் போட்ற முடியும்? :)

கோவை ரவி அவர்கள், தான் பாடகர் SPBயின் நெருங்கிய நண்பர் என்றும் அவர் மீதுள்ள பிரியத்தால் அவர் பாடல்களை தொகுத்து வழங்கி கொண்டிருந்ததாகவும் சொன்னார். SPB கோவை பக்கம் கட்சேரிக்கு வந்தால் இவரை உடன் அழைத்து செல்வார் என்று வாத்தியார் சொன்னார்..
[பரிசல்காரன், ஸ்ரீநிவாசன் பால் ஜோசப், கிரி, கார்த்திக், தியாகு]
ஆரம்பத்திலே அறிமுகப் படலம் முடிந்தாலும் கடைசியாய் வந்த திருப்பூர் தியாகு அறிமுகம் செய்துகொண்டார். முன்னதாக பரிசல்காரன் வெயிலானோடு வந்தார்.. ஸ்ரீ அவர் நண்பர் வினோதோடு வந்தார்... எல்லோரும் ஞான வெட்டியான் ஐயாவுடன் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அவர் 30க்கும் மேற்பட்ட வலைப்பூவில் ஒரு காலத்தில் எழுதினாராம். நிறைய பழமையான நூல்களை சேகரித்து அதை பற்றி வலையேற்றி வைத்திருக்கிறாராம்.
[திரு.சுப்பைய்யா, திரு.கோவை ரவி, திரு.வடகரை வேலன்]
ஸ்ரீபால் தன் நிறுவனம் பற்றி சொன்னார்.. தமிழ்விக்கி என்ற தன் முயற்சியை பற்றி விளக்கினார். விருப்பம் உள்ளவர்கள் அதில் பங்கேற்கலாம் என்றார்... விக்கி தமிழ் மொழிக்கு சரியானது இல்லை என்றும் 1992ல் இருந்தே தான் அதில் பங்கேற்றதாகவும் வழக்கம் போல் தன் நண்பி ஏஞ்செலா என்பவர் அதில் இயக்குநராக இருப்பதாகவும் அவர் தன் தொடர்பில் இருந்தார் என்றும் அடக்கத்துடன் சொல்லிக் கொண்டார்.

குப்புசாமி ஐயா தன் கட்டுரைகளை போட்டுக் கொண்டு படத்தை மட்டும் யாரோ ஒருவர் மாற்றி போட்டுவிட்டதாக சொன்னார்.. ஞானவெட்டியான் ஐயா ஏராளமான பக்கங்களை விக்கிபீடியாவின் தமிழ் பக்கங்களில் உறுவாக்கித் தந்ததாகவும் பிறகு தன் கட்டுரைகள் எல்லாம் தவறு என்றும் அதற்கு எல்லாம் ஆதாரம் கேட்ட்க் கொண்டிருந்ததால் , ஆதாரம் திரட்ட தான் வாழ் நாள் முழுதும் பத்தாது என்பதான் அதிலிருந்து விலகி விட்டதாகவும் கூறினார். மனிதர் அநியாயத்துக்கு விஷய ஞானமுள்ளாவர். இவருக்கு ஞானவெட்டியான் என்ற பட்டத்தை மாபொசி அவர்கள் அளித்தாராம்.

இடையே வடகரை வேலன் .tk முகவரி பற்றிய சந்தேகத்தை கேட்டார்.. நந்து அண்ணா போன்றவர்கள் அதை பயன்படுத்துவதாகவும் அதை பற்றி தெரிந்துகொள்ளாவும் கேட்டார்.. அதை பயன்படுத்துவது ஆபத்து என்றும் அதில் ஆபத்தான நிரலிகள் எழுதப் பட்டிருக்கும் என்றும் சொல்லி குண்டை தூக்கி போட்டார்.. உடனே செல்லா அதை எதிர்த்து வாதிட்டார்.. அமெரிக்கா.. டிஎனெஸ், செக்யூரிட்டி.. வழக்கம் போல் அதிலும் தன் நண்பர்கள் இருப்பதாக வாதிட்டார்.. ஸ்ரீ கொஞ்சம் குழப்பியது உண்மை தான்.. குறிபிட்ட நிறுவனம் வழங்கும் இலவச .tk முகவரி மட்டுமே ஆபத்தானது என்று சொல்வதற்கு பதில் மொத்த .tk முகவரியும் ஆபத்தானது என்று குழப்பிவிட்டார்.. எனக்கு கொஞ்சம் தெரிந்த விஷயம் என்பதால் இதை சொல்லி ஒரு வழியாக விவாதத்தை முடித்து வைத்தேன்..

செல்லாவிற்கு வாத்தியார் சால்வை அணிவிக்கிறார்.
[புரவி ராம் அறிமுகம் செய்துக் கொள்கிறார்]
லதானந்த் படலம் : சுப்பைய்யா வாத்தியார் சென்றதும் லதானந்த் சார் பேச ஆரம்பித்தார்... தான் எதையும் ஜாக்கி வைத்து தூக்க பதிவெழுத வரவில்லை என்றார். சொந்த பந்தம் சுக துங்கங்களை விட்டு வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் இணையம் பக்கம் வரும் 10 நிமிடங்களை( நிஜமாவா? :P ) ஜாலியாக கழிக்க வேண்டும் என்று எழுதுகிறாராம். திருக்குறளுக்கு சென்னை பாஷையில் விளக்க உரை எழுதி அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததாம். பிறகு சில தமிழார்வலர்களின் எதிர்ப்பால் இவரிடம் சொல்லிவிட்டு பாதியில் ஆனந்தவிகடன் நிறுத்திவிட்டதாம். பிறகு பாக்யாவில் எதோ அடல்ட் ஒன்லி தொடர் எழுதினாராம். அதற்கும் பெண்கள் அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதியில் நிறுத்திவிட்டார்களாம். பிறகு எதோ குழந்தைகள் தொடர் எழுதி அதை வெற்றிகரமாக தொடர்ந்தாராம். பல பத்திரிக்கைகளுக்கும் சிறுகதைகள் எழுதி இருக்கிறாராம். பத்திரிக்கை வட்டாரத்தில் பல நண்பர்கள் இருப்பதாக சொன்னார்.

தான் எழுதும் விதத்தை பார்த்து யாரோ ஒருவர் சண்டைக்கு வந்ததாகவும், விவாதிக்க தயாரா என்று அவர் கேட்டதற்கு தான் அதற்கெல்லாம் தயார் இல்லை என்றும் சொல்லிவிட்டாராம். புத்திசாலி.. இல்லை என்றால் அவர் நேரத்தை வீணடித்து இருப்பார். அதற்கு காரணம் அவர் மீதுள்ள ஆதங்கம் தான் ( வயித்தெரிச்சலை இபப்டியும் நாகரிகமாக சொல்லலாம் என்றார்) என்றும் " என்னடா நாம பல வருஷங்களா எழுதியும் கிடைக்காத புகழ் இவருக்கு வந்த உடன் கிடைத்து விட்டதே என்று நினைத்து சிலர் இபப்டி நடந்துக் கொள்கிறார்களாம். அதை பற்றி எல்லாம் கவலை படாமல் நந்து, ரவி போன்ற ரசிகர்கள் கடிதங்கள் எழுதி தன்னை உற்சாகப் படுத்துவதாகவும் இன்னும் இருக்கும் ஏராளமான ரசிகர்களுக்காக தான் எழுதுவதாகவும் சொன்னார்.. மனிதர் ரொம்பவே வெளிப்படையாக பேசுகிறார்..

இவர் எழுத்துக்கள் கொஞ்ச ஏடாகூடமாக இருந்தாலும் இவர் அப்பா மற்றும் தாத்தா ஆகியோர் இலக்கிய வட்டாரத்தில் மிகவும் புகழ் பெற்று இருந்திருக்கிறார்கள். சொந்தமாக புத்தகம் மற்றும் அச்சகம் கூட நடத்தினார்களாம். தான் வலைப்பூ எழுத வந்த கதையை ரொம்ப சுவாரஸ்யமாக சொன்னார். அவர் திருக்குறளுக்கு சென்னை பாஷையில் எழுதியதற்கு7 ஒரு சாம்பிள் எடுத்து விட்டார்.. செம ரகளையாக இருந்தது... அதை தன் வலைப்பூவில் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கொஞ்ச நேரம் இருந்துவிட்டு மதிய உணவு வேளையில் "அதி முக்கியமான" பணி இருப்பதாக சொல்லி ஜூட் விட்டார். :))..

மதிய உணவுக்கு கொஞ்ச நேரம் முன்பிருந்தே " மானமார் வைவார்.. ஊட்டுக்கு போகனும்... வழி விடுங்க" என கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார் வடகரைவேலன். ஆனால் லதானந்த் சார் கூட சேர்ந்து எதோ ஒரு ரெஸ்ட் ஹவுசில் ஜோதியில் ஐக்கியமாகியது தனிக் கதை.. :P
ஒருவழியாக உணவு உண்டதும் வெயிலானும் பரிசல்காரனும் வீட்டுக்கு போக நேரம் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு லதானந்த் சார் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டார்கள். நல்லா இருங்கய்யா... :)
[தியாகு, ஸ்வீட் சுரேஷ்]
நீண்ட நேர விவாதங்களுக்கு பிறகு ஸ்ரீபால் மற்றும் அவர் நண்பர் வினோத் ரயிலுக்கு நேரமாகிவிட்டதான் புறப்பட்டார்கள். அதன் பிறகு தியாகு, அவர் உறவினர் கருவேல் பாண்டியன் மற்றும் ஞானவெட்டியான் ஆகியோர் ஆண்மீகத்தையும் அரிவியலையும் கடித்துக் குதறிக் கொண்டிருந்தார்கள். இடைஇடையே வென்செண்ட் சார் விவசாயம் மற்றும் மர வளர்ப்பு பற்றி உபயோகமான தகவல்களை பரிமாறிக் கொண்டார். பிறகு கார்த்திக் அடுத்த நாள் சென்னைக்கு கல்லூரிக்கு போக வேண்டும் என்பதால் புறப்பட்டார்.
தொட்டராயஸ்வாமி PDF பற்றிய தன் சந்தேகங்களை கேட்டார், அதற்கு தமிழ்பயணி சிவா தெளிவாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். அடிக்கடி தியாகு விலைவாசி, கம்யூனிசம், பெரியாரிசம் என்று புலம்பித் தள்ளினார். நம் கல்வி முறை எதிர்த்துக் கேள்வி கேட்க கற்ரு தரவில்லை என்றும் போராடுபவர்களை உறுவாக்கவில்லை என்றும் 100 முறைக்கு மேல் சொல்லிக் கொண்டே இருந்தார். அதற்கு எவ்வளவு விளக்கம் தந்தாலும் மறுபடியும் அதே பல்லவியை பாடிக் கொண்டிருந்தார். கடைசியாக வந்து சேர்ந்த சேலம் சுரேஷ் விவசாயத்தில் தான் மெற்கொள்ள உள்ள செயல்களையும் லட்சியத்தையும் பகிர்ந்து கொண்டார். அவரிடம் மரவளர்ப்பு பற்றி வின்செண்ட் சார் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு " விவாசய நிலங்கள் முழுக்க மரம் வைத்துவிட்டால் சோத்துக்கு எங்க சார் போறது" என்று கேட்டார்.. யோசிக்க வேண்டிய விஷயம் தான். அவர் விவசாயத்தில் தோற்றுக் கொண்டே வருவதாக சொன்னதும், அதற்கு நான் சொன்ன சில யோசனைகளை ஏற்றுக் கொண்டு அதை செயல்படுத்துவதாக சொனனார்.. எங்களுக்கு விவசாயம் பண்ணத் தெரியும்ல :))...

மஞ்சூர் ராசா தன் பழய கோவை நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நீர் வீணாதல், எரிபொருள் வீணாதல், சுற்ற்ச்சூழல் என்று பல விஷய்ங்கள் விவாதத்தித்து ஒருவழியாக 5 மணிக்கு மேல சந்திப்பு முடிந்தது. இறுதியாக வின்செண்ட் சார் தான் கொண்டு வந்த "சர்க்கரை நோய் தீர்க்கும்/குறைக்கும்" சில மூலிகை செடிகளை எல்லோருக்கும் கொடுத்தார்.உண்ட மயக்கதில் மட்டையான ஓசை செல்லா.. காய்ச்சல் என்று காரணம் சொன்னார்.. நம்பிட்டோம்ல. :P

.. அம்மாடி.. கை வலிக்கிது... இதுக்கு மேல "சுருக்கமா" என்னால சொல்ல முடியலை.. ஆளை விடுங்க சாமிகளா.. :)).. 4 வரி எழுதினாலே 4000 எழுத்துப் பிழை இருக்கும்.. இதுல எவ்வளவு இருக்கோ.. பொறுத்தருளும் மகா ஜனங்களே.. :))

உங்கள் பதிவு தமிழ்மணம் சூடான இடுகையில் வர வேண்டுமா?

Wednesday 16 July, 2008

தமிழ்மணம் யார் ஆணையை ஏற்கும்?

தமிழச்சிக்கு வேண்டுமானால் தமிழ்மணத்தைக் குறித்து தமிழக முதல்வர், கொளத்தூர் மணி, கி. வீரமணி போன்றவர்களிடம் புகார் செய்து தனது காரியத்தை சாதிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால் தமிழ்மணத்திற்கு இவர்களின் ஆலோசனைகளைக் கேட்கவோ, இன்னும் மன்மோகன்சிங், ஜார்ஜ் புஷ், நிக்கலா சர்கோசி போன்ற உலக மகாத் தலைவர்களின் ஆணைகளை ஏற்கவோ வேண்டிய அவசியம் இல்லை (ஆகவே யாரும் இவர்களுக்கும் கடிதம் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம்).

..... சொன்னவர் : திரு.மு. சுந்தரமூர்த்தி ( தமிழ்மணம் நிர்வாகிகளுல் ஒருவர் போலும் )

... அபப்டியானால் தமிழ்மணம் யார் ஆணையை ஏற்கும்? தமிழ்மணம் எந்த நாட்டு சட்டங்களுக்கு கட்டுபடும்?

சிறு மலர்களுக்கு கண்ணீர் அஞ்சலி


ஜூலை 16, 2004ல் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிர் நீத்த சின்னஞ்சிறு மலர்களுக்கு நினைவஞ்சலி.

Sunday 13 July, 2008

கோவை இணைய நண்பர்கள் சந்திப்பு இனிதே முடிந்தது.

காலையில் இருந்து மாலை வரை காஃபி( எத்தனை முறை என்று நினைவில்லை), வடை( எத்தனை தட்டு காலி ஆகி இருக்கும் என்று நினைவில்லை ), ஜூஸ், குலாப் ஜாமூன், தக்காளிசாதம், லெமன் சாதம், தயிர்சாதம் ஆகியவற்றை அன்போடு தந்து உபசரித்த திரு மற்றும் திருமதி. மஞ்சூர் ராசா, திருமதி மஞ்சூர் ராசாவின் சகோதரி மற்றும் அவர் கணவர் மற்றும் அவர் உறவினர் ஆகியோருக்கு எங்களின் இதயம் கனிந்த நன்றிகள்.

***************

சந்திப்பில் கலந்து கொண்டு சிறபித்தவர்கள் :-
.... சுப்பையா வாத்தியார் கிளம்பறேன் கிளம்பறேன் என்று சொல்லிக் கொண்டே சில மணி நேரங்கள் தனது "சிற்றுரை"யை ஆற்றியது, லதானந்த் அவர்கள் "ஜாக்கி" வைத்து எதையும் தூக்கி நிறுத்த தான் பதிவு எழுதவில்லை என்று விளக்கியது, அபாயகரமான ஒரு இலவச இணைய சேவை பற்றி ஸ்ரீபால் ஜோசப் சொன்னது, நான் வீட்டுக்கு போகனும் மாமனார் வைவார் என்று வடகரைவேலன் புலம்பியது, தொட்டராயஸ்வாமி தன் விடாமுயற்சியை பற்றி சொன்னது, ஞானவெட்டியான் அவர்கள் தான் எங்கு இருக்கிறேன் என்றே தெரியவில்லை என்று ஆன்மீகம் பேசியது, கடவுள் இல்லை என்று செம்மலர் தியாகு சிலரிடம் வாக்குவாதம் செய்தது, வின்செண்ட் அவர்கள் மற்றும் குப்புசாமி அவர்கள் மூலிகை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு பற்றிய தங்களின் முயற்சிகளை பகிர்ந்து கொண்டது, பதிவுகளை PDF ஆவணமாக மாற்றுவது பற்றி தமிழ்பயணி சிவா சொன்னது, புரவி ராம், ஓசை செல்லா ஆகியோரின் பங்களிப்பு என பல விஷயங்களை முடிந்த வரையில் கொஞ்சம் விரிவாக பின்னர் பதிவிடுகிறேன்.

பல உருப்படியான விஷயங்களை கற்றுக் கொண்ட மிக நல்ல சந்திப்பு.
சந்திப்பு பற்றிய செய்தியை வெளியிட்ட திரட்டி.காம் திரட்டிக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

Saturday 12 July, 2008

கோவை இணைய நண்பர்கள் சந்திப்பிற்கான இடம்

ஜூலை 13ம் தேதி கோவையில் நடைபெறும் இணையநண்பர்கள் சந்திப்புக்கு வர வேண்டிய முகவரி:

திரு. மஞ்சூர் ராசா இல்லம்
42, சீனிவாசா நகர்,
கவுண்டம்பாளையம்.
கோயம்புத்தூர்.

நேரம் : காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை.

.... மேட்டுபாளையம் ரோட்டில் துடியலூர் நோக்கி செலும்போது கவுண்டம்பாளையம் சிக்னலில் ஒரு "U" வளைவு எடுத்துக் கொண்ட உடன் இடது புறம் பார்த்தால் திமுக இளைஞர் அணி என்ற அறிவிப்புடன் ஒரு பழைய கட்டிடம் இருக்கும். அதை ஒட்டி கொஞ்சம் கீழிறங்கியவாறு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றதும் வலது புறம் "மஞ்சூர் இல்லம்" என்ற பெயரில் இரண்டு மாடி வீடு இருக்கும். அதன் மேல் தளத்தில் சந்திப்பு நடைபெறும்....

வருவதாக உறுதி அளித்துள்ளவர்கள்:

  • மஞ்சூர் ராஜா
  • தமிழ்பயணி சிவா
  • லதானந்த் மற்றும் அவர் நண்பர்கள்
  • ஓசை செல்லா
  • திருப்பூர் தியாகு
  • புரவி ராம்
  • ஞானவெட்டியான்
  • காசி
  • சுரேஷ்
  • காயத்ரி
  • கனகராஜ்
  • ஜெயபிரகாஷ்
  • நாமக்கல் சிபி
  • கார்த்திக்
  • புதுகை பாண்டி
  • வடகரை வேலன்
  • பரிசில்காரன்
  • கூடுதுறை
  • வெயிலான்
  • கிரி
மேலும் வருபவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்.


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

மஞ்சூர் ராசா : 9442461246

தமிழ் பயணி சிவா: 9894790836

சஞ்சய் : 9842877208


அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

Tuesday 8 July, 2008

உன் ஆத்மா சாந்தி அடையட்டும் நண்பா

அடேய் பாவி..
என்ன காரியமடா செய்தாய் நீ?.
எப்படியடா உனக்கு மனம் வந்தது..
இவ்வளவு சீக்கிறம் எங்களை பிரிய?..
நம் பாசப் பிணைப்பு உடையாமல் தானேயடா இருந்தது
பத்தாண்டுகளுக்கும் மேலும்..
இப்போது என் குரலும் உடைந்து விட்டதே உன்னால்..
நாம் விவாதிக்காத விஷயம் ஏதும் உண்டா?
ஓ.. இனி எதுவும் இல்லையே..
எதற்கு இவர்களுடன் என்று நினைத்துவிட்டாயா?
பாவி.. நாங்கள் என்னடா பாவம் செய்தோம்?
சில தினங்கள் முன்பு
நாம் கடைசியாய் பேசும் வரை
நீயும் சிரித்துக் கொண்டு
என்னையும் சிரிக்க வைத்துக் கொண்டுதானேயடா இருந்தாய்..
இப்போது ஏனடா அழ விடுகிறாய்...

என் உயிர் தோழனே இளங்கோவடிகள்...
இதோ புறபட்டுவிட்டேன்..
உனை கெஞ்சி கேட்கிறேன்..
இப்போதும் அவரசப் பட்டுவிடாதே...
உன் முகத்தை கடைசியாய் பார்க்க விடு..

என்றும் உன் நினைவில்
கண்ணீருடன்
உன் நண்பன்.

Sunday 6 July, 2008

அணுப்பாவை தமிழரசியை நான் சைட் அடிக்கக் கூடாதாம்... ஓசை செல்லா மிரட்டல்.

என்னையும் அன் "பாசமிகு" சக பதிவர் தமிழரசியையும் வைத்து காமெடி பண்ண ட்ரை பண்ணும் ஓசை செல்லாவின் முயற்சியை நான் மனதார வரவேற்கிறேன்..



மக்களே சொல்லுங்க.. தமிழரசியை சைட் அடிக்க கூடாதா?:)). இப்போ எல்லாம் நான் அவங்க பதிவு பக்கமே போறதில்ல. என்னை ஏன் சாமி வம்புக்கு இழுக்கறிங்க?..:(

ஓசை செல்லாவின் மிரட்டலில் தமிழரசிக்கு உடன்பாடு இருக்கிறதா என்று தமிழரசியே தெளிவுபடுத்த வேண்டும்.:P

Wednesday 2 July, 2008

வலை நண்பர்கள் சந்திப்பு - கோவை

அன்பு தாய்மார்களே.. அருமை பெரியோர்களே.. இனிய (என்னை மாதிரி) குழந்தைகளே.. எல்லார்க்கும் வணக்கம்யா.. கடந்த சனி இரவு ஒரு சிறிய வலை நண்பர்கள் சந்திப்பு நடத்தினோம்யா.. அதுல நம்ம முத்தமிழ் மஞ்சூர் ராஜாவும் அண்ணன் தமிழ்பயணி சிவாவும், "நாயகன்" ஓசை செல்லாவும் என்னை மாதிரி பொடியனும் இன்னும் சில நண்பர்களும் சந்திச்சிக்கிட்டோம்யா.. அதுல எனக்கு முன்னாடி சொன்ன பெரிய மனுஷங்க எல்லாம் ஒன்னு கூடி இந்த மாதம் அதாவது சூலை 13, 2008 ஞாயித்துக் கெழம ஒரு பெரிய வலை நண்பர்கள் சந்திப்பு வைக்காலாம்னு முடிவு பண்ணி இருக்காங்கய்யா...

தருமபுரி, சேலம் , நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர் இன்னும் பக்கத்துல அல்லது தூரத்துல இருந்து யாரெல்லாம் வர முடியுமோ எல்லாரும் வாங்கய்யா.. வந்து பழகுங்கய்யா... பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுங்கய்யா.. இல்லைனா பதிவ படிச்சிட்டு வேற யாராவது வர மாதிரி இருந்தா அவங்க கிட்ட சொல்லுங்கய்யா..

கோவையில் எங்கு சந்திக்கலாம் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை.. எத்தனை பேர் வருவீங்கனு தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி இடம் முடிவு செய்யனும். அதனால் தயவு செய்து வருபவர்கள் வரும் ஞாயிறுக்குள்ள சொல்லிடுங்க சாமியோவ்.. உங்களுக்கு புண்ணியமா போவும்... அப்பால வந்து போண்டா பத்தலை, வடை எனக்கு வரலை, சின்ன டம்ப்ளர்ல தான் டீ குடுத்தாங்கனு பதிவு போட்டு மானத்த வாங்காதிங்க..:)) சொல்லிட்டேன்...

.... புதியதாக வந்து தமிழ்மணத்தை கலக்கும் தங்க தமிழரசி வர விருப்பம் தெரிவித்துள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... அம்மணியின் வருகையால் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்த பிறகே அனைவரும் அனுமதிக்கப் படுவர் என்பதால் யாரும் பயங்கர ஆயுதங்களுடன் வர வேண்டாம் என வேண்டுகிறேன். வருகிறவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது... செல்லா தலைமையிலான கமாண்டோ படையும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும். :P...

சரி மேட்டர்க்கு வரேன்...
.... வர விருப்பம் உள்ள நண்பர்கள்/நண்பிகள் தயவு செய்து வருகிற 8ம் தேதிக்குள் தெரியபடுத்துங்கள்....
sanjaigandhi@msn.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்கள்.
அல்லது அழையுங்கள் 9842877208...

பின்னூட்டம் மூலமாகவும் தெரிவிக்கலாம்..

எவ்வளவு பேர் வருகிறீர்கள் என்பதை பொறுத்து இடம் தேர்வு செய்து 10.07.2008 தேதிக்குள் தெரிவிக்கிறோம்...

அலைகடலெனத் திரண்டு வாரீர்.. ஆதரவு தாரீர்... :)

Tamiler This Week