இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Tuesday, 9 December 2008

Google SMS - பேஷ் பேஷ் - Dont Miss it.

நம்மில் பெரும்பாலோர் கூகிளின் பரம ரசிகர்கள் தான். கூகுளின் ஒவ்வொரு சேவையும் செம கலக்கலா இருக்கும். உதாரணம் சொல்லி பதிவை பெரிசாக்க விரும்பலை.

இப்போ கூகுள் குறுஞ்செய்தி சேவையை அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள். குறுஞ்செய்தி என்றால் அடுத்தவர் கைப்பேசிக்கு செய்தி அனுப்பும் மொக்கை சேவை இல்லை.. நமக்கு மிகவும் பயனுள்ள சேவை இது. இதற்காக சிறப்புக் கட்டணங்கள் எதுவும் இல்லை. நாம் வேறு கைப்பேசிக்கு செய்தி அனுப்ப ஆகும் கட்டணம் தான் இதற்கும். கூகுள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. என்னைப் போன்ற அளவில்லா இலவச குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருப்பவர்களுக்கு இன்னும் சவுகர்யமே.. :)

தேர்தல் பற்றிய செய்தி வேண்டுமெனில் news delhi election என்று அனுப்பினால் அடுத்த சில நொடிகளில் டில்லி தேர்தல் பற்றிய தலைப்பு செய்திகள் கிடைக்கிறது.

dlf stock என்று அனுப்பினால் அந்த பங்கின் தற்போதைய விலை கிடைக்கிறது.

கிரிக்கெட்( CRICKET india ) , ராசிபலன் (horoscope september 7), பண பரிமாற்ற மதிப்பு(5000 inr in usd) , விமான நிலவரம் ( it302), ரயில் முன்பதிவு விவரம்( pnr number), வானிலை( weather chennai), கால்குலேட்டர் (5+2*2, half cup in teaspoon, 70F in C, 1 dollar in INR, 3 USD in INR ), மொழிபெயர்ப்பு வசதி(translate hello in french), சில வார்த்தைகளுக்கான விரிவாக்கம் அல்லது சுருக்க விவரம்( define tamil ) , உள்ளூர் வணிக சேவைகள்(parotta chennai :)) ) பற்றிய விவரம் என அத்தனை வசதிகளும் அசத்தலாக இருக்கிறது.

trains morappur to coimbatore என்று செய்தி அனுப்பினால் அடுத்த நொடி மொரப்பூரிலிருந்து கோவை செல்லும் ரயில்களின் பட்டியல் ரயில் எண் உட்பட கிடைக்கிறது. அதில் இருக்கும் வரிசை எண்ணை திரும்ப அனுப்பினால் அந்த குறிப்பிட்ட ரயில் புறப்படும் நேரம் சேரும் நேரம் எல்லாம் கிடைக்கிறது.

movies coimbatore என்று அனுப்பினால் கோவையில் பிரபல தியேட்டர்களின் திரைப்படங்கள் பட்டியல் கிடைக்கிறதும். அதன் வரிசை எண்ணை திரும்ப அனுப்பினால் அந்த படம் எந்த தியேட்டரில் போட்டிருக்காங்க அதன் முகவரி தொலைப்பேசி எண் எல்லாம் கிடைக்கிறது.

population of coimbatore என்று அனுப்பினால் கோவயில் மக்கள் தொகை கிடைக்கிறது. இது போல் gdp of pakistan, states of china என்று தேவையான எல்லாம் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

”capital of ethiyopiaஎன்று கேட்டால் , அடேய் தடியா உன்னை எல்லாம் என்னன்னுடா பெத்தாங்க.. எண்டா தப்பா டைப் பண்ணி என் உயிர வாங்குற என்று அசிங்க படுத்துவதில்லை.. ப்ரதர்
Did you mean 'capital of ETHIOPIA'?

Q&A:
Ethiopia
Capital: Addis Ababa
Source: www.britannica.com/eb/article-9344092/Ethiopia - என்று பொறுமையாய் விவரம் தருகிறது..

மேலும் தகவலுக்கு http://www.google.co.in/mobile/default/sms/ .

சேவைக்கான எண்
9-77-33-00000 . +91 அல்லது 0 எதுவும் சேர்க்கத் தேவை இல்லை. உள்ளூர் எண்ணாகவே செயல்படுகிறது.

....என் மொபைலில் “A" என்று பதிவு செய்து வைத்துவிட்டேன். இனி பொழுதுபோக்கே இது தான்.. :))

35 Comments:

Poornima Saravana kumar said...

me the 1st

Poornima Saravana kumar said...

படிச்சுட்டு வாரேன்:))

Poornima Saravana kumar said...

Thanks for your information:))

Poornima Saravana kumar said...

//”capital of ethiyopia” என்று கேட்டால் , அடேய் தடியா உன்னை எல்லாம் என்னன்னுடா பெத்தாங்க.. எண்டா தப்பா டைப் பண்ணி என் உயிர வாங்குற என்று அசிங்க படுத்துவதில்லை.. ப்ரதர்
//

அப்போ சிஸ்டர்?????????????????????
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Anonymous said...

me the 5th

Anonymous said...

செய்திகளை முந்தித்தரும் சஞ்சய் வாழ்க

வால்பையன் said...

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

ALIF AHAMED said...

இந்தியாவுக்கு மட்டுமா..?

ராஜ நடராஜன் said...

நான்:"ஹலோ! சஞ்சய் ராமசாமிங்களா?"

போனில் குரல்: "இல்லைங்க!நான் பொடியன் சஞ்சய்ங்க"

போனின் குரல்:கிர்...கிர்ர்..கீ...கீ...

நான்:ஹலோ!ஹலோ!ஹ.....லோ

(என்னோட செல்பேசி உபயோகம் இது)

அமுதா said...

தகவலுக்கு நன்றி

வெங்கட்ராமன் said...

என் மொபைல்ல SMSக்கு 50 காசு தான்

chennai rain ன்னு மெசஜ் அனுப்பினேன் 1.50 காசு காலி ஆகிடுச்சு. Rain Tree Hotel, chennai முகவரி வருது.

என்னமோ போங்க. . .

வால்பையன் said...

//என் மொபைல்ல SMSக்கு 50 காசு தான்

chennai rain ன்னு மெசஜ் அனுப்பினேன் 1.50 காசு காலி ஆகிடுச்சு. Rain Tree Hotel, chennai முகவரி வருது.//

மீ த எஸ்கேப்பு

Sanjai Gandhi said...

// PoornimaSaran said...

me the 1st//

என்னா ஒரு வில்லத் தனம்.. இப்படி எல்லாம் மிரட்டி மீ த ஃபர்ஸ்ட் போடக் கூடாது.. எங்க தலைவி ராப் மாதிரி சொல்லாம கொள்ளாம வந்து மீ த ராப் போடனும்.. :))

Sanjai Gandhi said...

// PoornimaSaran said...

Thanks for your information:))//

வெல்கம் சொர்ணாக்கா.. சாரி.. பூர்ணாக்கா.. :)

Sanjai Gandhi said...

// PoornimaSaran said...

//”capital of ethiyopia” என்று கேட்டால் , அடேய் தடியா உன்னை எல்லாம் என்னன்னுடா பெத்தாங்க.. எண்டா தப்பா டைப் பண்ணி என் உயிர வாங்குற என்று அசிங்க படுத்துவதில்லை.. ப்ரதர்
//

அப்போ சிஸ்டர்?????????????????????
???????????????????????????????????????????????????????????????????//

சிஸ்டர் சொல்ல தான் இந்த ப்ரதர் இருக்கேனே.. கூகுள் எதுக்கு..? :)

ஆதவன் said...

வணக்கம்

நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

Raaji said...

free service nnu yemathi yen mobile la 1 rupee waste panna sanjaikku yenna panishment kudukkalam?.yaaravathu sollungalen;-)))

Poornima Saravana kumar said...

// பொடியன்-|-SanJai said...
// PoornimaSaran said...

Thanks for your information:))//

வெல்கம் சொர்ணாக்கா.. சாரி.. பூர்ணாக்கா.. :)

//
This is too much:(

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்ல செய்தி..

News Delhi Election என்றுதான் போடவேண்டுமா அல்லது News Madhya Pradesh Election என்று போட்டாலும் வருமா :)

அன்புடன் அருணா said...

என்னப்பா சஞ்சய்...நீங்க போட்ட பதிவுதானா??? Tank Uப்பா உருப்படியான தகவலுக்கு...
அன்புடன் அருணா

rapp said...

//ethiyopia//

எதையோ அப்புனாங்களா, யாரு, யார் மேல?:):):)

rapp said...

நீங்க ஏன் பிரெஞ்சுல அல்லோ சொல்லணும்,
//சில வார்த்தைகளுக்கான விரிவாக்கம் அல்லது சுருக்க விவரம்( define tamil )//

ஏன் காலேஜ் பொண்ணுங்க கோட்வேர்ட்சை டீகோட் பண்ணனுமா?:):):) அது வேணாம், உங்க நல்லத்துக்குத்தா சொல்றேன். விட்டிருங்க:):):) உங்கள அவங்க திட்டறது புரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க:):):)

//உள்ளூர் வணிக சேவைகள்(parotta chennai :)) )//

சஞ்சய் அண்ணே தொழிலதிபர்னா இப்டித்தாண்ணே இருக்கணும்:):):)

rapp said...

//சிஸ்டர் சொல்ல தான் இந்த ப்ரதர் இருக்கேனே//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்ன சொல்ல வரீங்க? உங்கள பாத்து எந்தப் பொண்ணுமே பிரதர்னு சொன்னதில்லைன்னா:):):) அதுக்கும் ஒரு குடுப்பினை வேணும்:):):)

rapp said...

//chennai rain ன்னு மெசஜ் அனுப்பினேன் 1.50 காசு காலி ஆகிடுச்சு. Rain Tree Hotel, chennai முகவரி வருது//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதுக்கென்ன சொல்றீங்க?

rapp said...

me the 25TH:):):)

http://urupudaathathu.blogspot.com/ said...

தங்களின் கனிவான கவனத்திற்கு நானும் (naan )morappur தான்..( பிறந்தது )

உண்மைத்தமிழன் said...

பொடியன் என்கிற சஞ்சய் என்கிற மொக்கை மன்னின் வீட்டு முகவரியை கூகுள் கொடுக்குமா..?

கொடுத்தால்தான் அது சேவை..

தாரணி பிரியா said...

//குறுஞ்செய்தி என்றால் அடுத்தவர் கைப்பேசிக்கு செய்தி அனுப்பும் மொக்கை சேவை இல்லை//

அதுக்குதான் நீங்க இருக்கிங்களே அப்புறம் கூகுள் எதுக்கு இதை செய்யணும்?

தாரணி பிரியா said...

// ராசிபலன் (horoscope september 7), //
ரொம்ப முக்கியம். தினகரன்ல படிச்சதுக்கே இன்னும் முடியாம இருக்கு. இதுல்ல மொபைல்ல வேற படிக்கணுமா?

விலெகா said...

ரொம்ப! நல்ல விசயமா இருந்துச்சுங்க:))

விலெகா said...

ரொம்ப! நல்ல விசயமா இருந்துச்சுங்க:))

பொடிப்பொண்ணு said...

Good one!

Sanjai Gandhi said...

சின்ன அம்மணி அக்கா : போட்டி பலமாய்டிச்சிக்கா.. பதிவெழுத மேட்டர் இல்லைனா பாதிப் பேரு செய்தி சொல்ல ஆரம்பிச்சிடறாங்க.. அதுலையும் போட்டி பலமாய்டிச்சி :))
--------------------------
நலல தகவலா இருந்தா சந்தோசம் வால் :)
--------------------------
மின்னுது மின்னல் : அமெரிக்காவுக்கும் இருக்கே :)
--------------------------
ராஜ நடராஜன் : சப்தமா சொல்லாதிங்க.. உங்க நெட்வெர்க்ல உங்க இணைப்பை கட் பண்ணிட போறாங்க.. இப்டிஒ இருந்தா எப்டி செல்போன் கம்பனி ஓனர் பொழைக்கிறதாம் :)
--------------------------
வாங்க அமுதா.. நன்றி :)
--------------------------
வெங்கட்ராமன் : கூகுள் மெல கேஸ் போட்டு 1.50 நஷ்ட ஈடு வாங்கிடலாம் விடுங்க.. கேஸ் செலவுக்கு 50000 ரூபாய் அனுப்பி வைங்க :)
--------------------------
வால் : எஸ்கேப் ஆய்ட்டிங்களா? :)
--------------------------
ராஜி : உங்கள யார் ராசிபலன் எல்லாம் பாக்க சொன்னது? அதும் அடுத்தவங்க ராசிபலன்.. :)))
--------------------------
ஜ்யோவரம் சுந்தர் : இப்டி எல்லாம் தப்பா உபயோகிக்க கூடாது.. எலெக்‌ஷன் ந்யூஸ் ராஜ்ஸ்தான், மிசோரம்னு குடுங்க :))
--------------------------

Sanjai Gandhi said...

அருணாக்கா : தம்பி உருப்படியா ஒன்னும் எழுத மாட்டான்னு முடிவே பண்ணிட்டிங்களா? :)
--------------------------
ராப் : புரோட்டா திங்கறதுக்கும் தொழிலதிருக்கும் இன்னாக்கா சம்பந்தம் ? :)
அட நீங்க வேற ராப் .. என்னை எல்லோருமே ப்ரதர்னு தான் கூப்டறாங்க :)
//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதுக்கென்ன சொல்றீங்க?//

கேஸ் போடலாம்னு சொல்றேன்.. :))
--------------------------

Sanjai Gandhi said...

அணிமா : மொரப்பூரா? மேலும் விவரங்கள் வேண்டுமே.. :)

ஆனா அதுக்காக உங்களுக்கு 1.50 சார்ஜ் ஆகாதுன்னு சொல்ல முடியாது.. :)
----------------
உ.தமிழன் அண்ணாச்சி : அதுக்கு ஏன் கூகுள்? என்னை கேட்டாலே சொல்லிடுவேனே.. :)
----------------
தாரணி அக்கா : மொக்கை மெசேஜ் பத்தி எல்லாம் நீங்க பேசக் கூடாது.. :))

உங்கள யாரு தினகரன்ல என் ராசிபலன் படிக்க சொன்னது.. படிச்சிட்டு பொறுபபா ஒரு பொண்ணு பார்த்த மாதிரி :(
----------------
விலெகா : நீங்களாவது நல்லா பாராட்டினிங்களே.. நன்றிங்க :)
----------------
பொடிபொண்ணு : ரொம்ப நல்லவ மாதிரி கமெண்ட் போட்டிருக்கு.. ஒடம்பு சரி இல்லையா கண்ணு? :))

Tamiler This Week