இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Sunday 21 December, 2008

ஈழத் தமிழர்களுக்கு மட்டும்.. இந்தியத் தமிழர்களுக்கு இல்லை..

அத்திரி என்ற பதிவர் பின்னூட்டங்களை மட்டுமே படித்து , நான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவன் என்பதை முன்பு நம்பிவிட்டதாகவும் இப்போது அது பொய் என தெரிந்துக் கொண்டது போலவும் ஒரு பதிவை போட்டிருக்கிறார். பின்னூட்டத்தில் ஒரு ஈழத் தமிழரும் என்னைப் போன்ற ஐந்தறிவுகளை பற்றி சிலாகித்து புலம்பி இருக்கிறார். :)

நீங்கள் எல்லாம் நம்ப வேண்டும் என்ற எந்த அவசியமும் எனக்கில்லை. நீங்கள் நம்புவதால் எனக்கு பயன் என்ன ? இழப்பு தான் என்ன?. இப்போதும் சொல்கிறேன். காஷ்மீரின் நிலை வேறு. ஈழத்தின் நிலை வேறு. காஷ்மிர் பிரிவினையை எதிர்த்தாலும் தனி ஈழத்தை ஆதரிக்கிறேன். காஷ்மிர் மக்களுக்கு இந்தியா எந்த குறையும் வைக்கவில்லை. மாறாக சிறப்பு அந்தஸ்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் நிலை அப்படி இல்லை. அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப் படுவது நிஜம். அதனால் தனி ஈழத்தை ஆதரிக்கிறேன்.

ஆனால் என்னக் காரணத்திற்காகவும் பயங்கரவாதிகளை ஆதரிக்க முடியாது. ராஜிவ் படுகொலை, சக ஈழப் போராளித் தலைவர்கள் படுகொலை என அவர்கள் எவ்வளவோ பாதகங்களை செய்திருக்கிறார்கள். புலிகளை எதிர்ப்பதால் நான் உங்களுக்கு எதிரியாய் தெரிந்தால் அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என்னை எதிரியாய் நினைப்பவர்களின் நட்புக்கு நான் ஏங்கவும் இல்லை. நான் மட்டுமில்லை.. வேறு எந்த காங்கிரஸ்காரருமே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தான் பேசுகிறோமோ ஒழிய, இதுவரையில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. காங்கிரசை பிடிக்காத சில தமிழக “ நல்ல “ உள்ளங்கள் தான் காங்கிரஸ், ஈழத் தமிழர்களுக்கு எதிரனவர்கள் போல் சித்தரிக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் “சிலரும்” அதை நம்பி சமயங்களில் உளறி வைக்கிறாகள். அதை பற்றி எல்லாம் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. நாங்க என்ன சீசன் அரசியலா செய்கிறோம்? :))))

நானும் இந்த விஷயத்தை பேசாம விடனும்னு தான் நினைக்கிறேன். ஆனால் பின்னூட்ட பெரியசாமிகள் தொல்லை தாங்கலைடா நாராயணா. பதிவு எதை பற்றி இருந்தாலும் இவர்கள் தனி ஆவர்த்தனம் பாட ஆரம்பிச்சிடறானுங்க. நான் என்ன செய்வது? வீட்டை திறந்து வைத்திருந்தால் விருந்தினர்கள் மட்டும் நுழைவார்கள் என்று நினைத்திருந்தேன். இதுவரையில் அப்படித்தான் இருந்தது. சில வேளைகளில் விருந்தினர்களுடன் சேர்ந்து சில தெருநாய்களும் நுழைந்துவிடுகின்றனவே. :(

( இந்தப் பதிவிற்கும் சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்கள் வரும்.. பாருங்க.. :)) )

14 Comments:

said...

தோழரே வணக்கம்,

எனக்கும் விடுதலைப்புலிகளை முதலில் பிடிக்காமல்தான் இருந்தது.. சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் பயந்துதான் மக்கள் அகதிகளாக வாழ்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை..

தொண்ணுறுகளில் இருந்தே விடுதலைப்புலிகள் தங்களை முன்னிறுத்த பல கொலைகள் செய்து உள்ளனர்..அதில் பல கொடுரமாகவும் இருந்துள்ளதை நாம் அறிவோம் (இலங்கையில்)..

காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் விடுதலைப்புலிகளை மிகத் தீவிரமாக ஆதரித்து வளர்த்து விட்டது அதன் பலனை அவர்கள் அடைந்தே தீர்வார்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை..தமிழில் ஒரு பழமொழி உண்டு '' வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்''..இதற்கு காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் விதி விளக்கா என்ன?..

விடுதலைப்புலிகள் மட்டும் இலங்கையின் வரலாறுகளை தேடித் தேடி படிக்கும் பொழுது புலிகள் மட்டுமே இந்தியாவிற்கு நண்பர்கள் (தமிழர்கள்) என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை (ஆனால் ராஜீவ் காந்தியோடு தமிழர்கள் இறந்தது மட்டும் வலியை ஏற்படுத்துகிறது)..ராஜீவ் காந்தியோட படுகொலையை திரும்ப விசாரணை செய்ய காங்கிரஸ் கட்சி ஏன் தயங்குகிறது..உலகத்திலேயே முதல்தர பாதுகாப்பு கொடுக்கப்பட்ட முன்னால் பாரத பிரதமர் எப்படி இந்த சம்பவத்தில் சிக்கினார்..

உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், நாம் எல்லாம் எதற்காக வருத்தப்படுகிறோம் என்றால் இந்தியாவின் மிகவும் இளமையான தலைவரை இழந்து விட்டோம் என்ற ஒரே காரணத்தினால் தானே தவிர வேறொன்றுமில்லை..ஆனால் ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருக்க கொஞ்சமும் தகுதி இல்லாதவர் என்பதை 1989 தேர்தல் தீர்மானித்தது..எதற்காக யாரும் போக வேண்டாம் என்று எச்சரித்த பின்பும் தமிழ் நாட்டிற்கு வந்தார்..ஏனெனில் குற்ற உணர்ச்சி இலங்கையில் அவர் செய்த தவறை தமிழர்கள் மன்னிபாருகள் என்பதற்காகவே இங்க வந்தார்..அவர்கூட ஒரு காங்கிரஸ் காரரும், கூட்டணிக் கட்சிகாரர்கள் யாருமே இறக்கவில்லை என்பதுதான் அனைவரின் கேள்வி..

நான் முதலில் புலிகளை பல காரணத்திற்காக பிடிக்கவில்லை..ஆனால் இப்போது அவர்களை தவிர வேறு எவரும் ஈழத்தை அடைய முடியாது..ஈழத்தின் வரலாற்றில் பிரபாகரன் என்ற தனி மனிதன் இந்தியாவால் பல ஏமாற்றங்கள், போர் மற்றும் துரோகம் என்று பல நிலைகளில் விழுந்து விழுந்து எழுந்து தனது லட்சியத்தை நோக்கி மீண்டும் இந்தியாவை நம்பியே இருக்கிறார் என்பது இந்த மாவீரர் நாளில் கூட சொல்லி இருந்தார்..

கட்சி, மதம், மொழி, இனம் என்ற எல்லா நிலைகளிலிருந்து வெளியில் வந்து மனிதன் என்கிற ஆறறிவு உயிரினமா பாருங்கள்..ஈழம் இனிக்கும் ...இன்னும் நிறைய சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன் தேவையில்லை...

தோழமையுடன்

முகமது பாருக்

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைபவன் )

said...

மாம்ஸ் FYI அக்டோபர் 24ஆம் தேதி 2008 ஆம் வருடம் ஒரு நல்லவர் போஸ்ட் போட்டு இருந்தார்...

அதை அப்படியே இங்கு காப்பி பேஸ்ட் செய்கிறேன்!

//கொஞ்சநாளாவே தமிழ் பதிவர்கள் ஆளாளுக்கு எதயாவது புறக்கணிக்கிறாங்க. .....நாமளும் நம்ம பங்குக்கு எதையாவது புறக்கணிக்கனுமே..

அதனால இனி சர்ச்சைக்குறிய பரபரப்பான பதிவுகளை இந்த வலைப்பூவில் எழுதுவதை புறக்கணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அப்பப்போ வேற எதுனா பரபரப்பு பதிவுகளுக்கு போய் கபடி ஆடிக்கலாம். இங்கு வேண்டாம்.//

இதை எழுதிய நல்லவர் யாருன்னு தெரியுமா மாம்ஸ்! ரொம்ப நாள் கழிச்சு பழய பதிவு எல்லாம் படிக்கலாம் என்று பின்னோக்கி போனால்:(((

அளவில்லா சோகத்தோடு
குசும்பன்

said...

குசும்பன் மாம்ஸ்...

என்ன செய்வது? என்னால் சொரணை கெட்டத் தனமா இருக்க முடியவில்லை.

said...

.. வேறு எந்த காங்கிரஸ்காரருமே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தான் பேசுகிறோமோ ஒழிய, இதுவரையில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. காங்கிரசை பிடிக்காத சில தமிழக “ நல்ல “ உள்ளங்கள் தான் காங்கிரஸ், ஈழத் தமிழர்களுக்கு எதிரனவர்கள் போல் சித்தரிக்கிறார்கள்.


====================
நண்பரே எனது சிங்கள நண்பன்கூட உங்களையே போலத்தான், தாம் தமிழர்களுக்கு எதிரானவர்களே இல்லையாம் புலிகளுக்கு மட்டும்தானாம் என்று உண்மை சொல்கின்றார்கள். நான் அவர்கள் உள்ளத்துக்குள்ளேயே இன்னும் ஆழத்தில் இருக்கும் உண்மையைச் சொல்வேன் நண்பரே புலிகள்கூட உங்களின் உண்மையான பகைவர்கள் இல்லை தமிழீழத்தை பெறும் முயற்சிதான் உங்களது உண்மையான பகை அதன் பயன்தான் இன்று புலிமேல் கொண்ட பகை. இதுவேதான் உங்கள் கூட்டத்தின் பகைக்கும் ஒரேகாரணம் நண்பரே.
ஒருவனை அழிவின் விளிம்புவரைக்கும் தள்ளுபவன் தானே பொறுப்பெடுக்க வேண்டும் பதிலுக்கு அவன் என்ன பாவம் செய்தாலும். புலிகளை அடியோடு அழிக்கும் முயற்சியில் இலங்கை, இந்தியா இரண்டும் இறங்கியது என்பது உலகப் பரமரகசியமான விடையம் அல்லவே. வெறும்கை ஆயுததாரியை பறக்கும் பீரங்கைவண்டிகளோடு மோதுகின்ற அரசபோர்நெறி அவர்களுக்கு யுத்த நெறி போதிப்பது அருவருப்பான விடையம் அல்லவா?

said...

//தமிழீழத்தை பெறும் முயற்சிதான் உங்களது உண்மையான பகை//

சும்மா எதாவது குற்றம் சொல்ல வேண்டுமே என்று நீங்கள் சொல்வதால் இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை தேவன்..

ஒருவேளை தனிஈழம் பெறும் முயற்சிக்கு நான் எதிரானவனாக இருந்தால் அதை ஏன் மறைக்க வேண்டும்? அதற்கு என்ன அவசியம் இருக்க முடியும் சொல்லுங்கள்? தனி ஈழம் மலர்ந்தால் அது இந்திய நலனுக்கு எந்த விதத்தில் எதிராய் இருக்கும் என்று சொன்னால் , அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் ஒருவேளை எதிர்த்தாலும் எதிர்ப்பேன்.
இப்போது வரை எனக்கு அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை, வெண்டுமானால் நீங்கள் சொல்லுங்கள்.

நான் என்ன ஓட்டு பெறும் நிலையில் உள்ள அரசியல்வாதியா மறைத்து பேசுவதர்கு. மனதில் இருப்பதை தான் சொல்கிறேன். நீங்கள் இதை நம்ப வேண்டும் என்று நான் எப்போதுமே எதிர்பர்ர்க்கவில்லையே. அது எனக்கு தேவை இல்லாததும் கூட.

காங்கிரஸ்காரன் என்றால் ஈழ்த் தமிழர்க்கு எதிரி தான் என்ற முன் முடிவோடு இருப்பவர்களுக்கு நான் என சொல்ல? அபப்டியே நினைத்துக் கொள்ளுங்களேன்.

said...

நண்பரே ஈழத்தமிழருக்கு உடன்பாடான சக்தி ஒன்று என்றால் எது அவர்கள் விருப்பமோ அதர்க்கு தோளைத்தருவது அல்லாமல் அவர்களின் விரோதமான காரியங்களுக்கு கொடிபிடிப்பவர்களாய் இருப்பார்களா?
காங்கிரஸார் ஈழத்தமிழரை ஆதரிப்பது என்று சொல்வதும் சிங்கள ஆரசும் அதையே சொல்வதும் அட்சரம் பிரகாத பம்மாத்து. ஈழத்தவர்களாகிய எங்களின் விருப்பத்துக்கு தடையாய உங்கள் மொத்த சக்தியை செலவு செய்துகொண்டு ஏன் இப்படி படம் காட்டுவான்.
நான் சொல்கின்ற கூற்றை நீங்கள் உண்மை இல்லாமல் ஆக்குவதர்க்கு உங்கள் வாதம் ஈழத்தவர்கள் புலியை ஆதரிக்க வில்லை என்ற ஒன்றைத்தான் சொல்ல முடியும் அது ஒன்று உண்மையானால் மட்டுமே காங்கிரஸாரின் பச்சைப் பாதகம் காப்பாற்றப்பட முடியும்.
புலியை எதிர்ப்பவர்களுக்கு எல்லாம் இதை விட்டால் தமது கொள்கையை நியாயப்படுத்த வேறு வழியே இல்லை.
இதைத்தான் நீங்களும் சொல்ல வருகின்றீர்களா?
சிங்கள அரசு 35 வருடங்களாக சொல்லி வருவது இந்தியா 15 வருடங்களாக சொல்லிவருவது
அந்த முன்னுக்குள்ள 10 வருடமும் ஏன் தீர்மானத்தில் இருநாடுகளுக்கும் வேற்றுமை இருந்ததோ அதே காரணம்தான் மீதிகாலத்தில் ஒற்றுமையான தீர்மானம் இருப்பதர்க்கும் காரணம் என்று குழந்தைக்கும் புரியும்.

said...

நண்பரே நான் ஏற்கனவே கேட்ட கேள்வி ஒன்றிற்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. ம்... என்ன அதற்கு என்ன விடை தெரியாதா??? அது சரி தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போது இந்தியாவின் விமான நிலையத்தில் குண்டு வைத்தார்கள் என்று கூற முடியுமா??? அவரக்ள் குண்டு வைத்ததற்கான ஆதாரங்கள் ஏதாவது தங்களிடம் உள்ளனவா??? அவற்றை ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியுமா??? வரலாறு தெரியாத நீங்கள் எப்படி என்றாலும் உங்கள் இஷ்டத்திற்குத் தமிழர் போராட்டம் பற்றிப் பொய்ப் பிரச்சாரம் செய்யலாம். அதனை நம்பி தமிழ் நாட்டுத் தமிழர்கள் அனைவரும் ஏமாற வேண்டும்??? தமிழரை வெறுக்க வேண்டும்??? அது தானே உங்கள் உள் நோக்கம்?? அதனை நேரடியாகவே சொல்லி விட வேண்டியது தானே??? அதற்கு ஏன் இந்த பில்டப்???

said...

பொடியன்-|-SanJai @ 9:25 PM // மெல்போர்ன் கமல் said...

நல்லாத்தான் சொல்லுறியள் சாத்திரியார். ஆனால் உந்த ஜந்தறிவு படைச்ச ஜீவன்களுக்கு அது எப்பிடி விளங்கப் போகுது??//
கமல் , விமான நிலையத்தில் குண்டு வைத்தது புலிகள் தான் என்று நான் நினைத்தேன். ஆனால் அது இலங்கயில் வேறு இயக்கம் என கொழுவி வந்து சொல்லும் வரை உங்களால் அதற்கு விளக்கம் தரமுடியவில்லை. சென்னை விமான நிலையத்தில் குண்டு வைதார்களா? என ஓரறிவு கூட இல்லாத ஜந்துவாய் ஆச்சார்யப் பட்ட நீங்கள் ஐந்தறிவுகள் பற்றி கேள்வி எழுப்ப அருகதை அற்றவர்.//

உங்களுக்குத் தமிழ் தெரியாதா?? நீங்கள் கூறினீர்கள். விமான நிலையத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்று. அதற்கு நான் உங்களிடம் கேட்ட கேள்வி தான் புலிகள் எப்போது எந்த விமான நிலையத்தில் குண்டு வைத்தார்கள் என்று??? அதற்குப் பதில் சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. அதற்கே பதில் சொல்லத் தெரியாத நீங்கள் அந்தக் கேள்விக்கான விடையை உங்களிடம் கேட்கும் போது அதற்கு விடை சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. இப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைத்துத் தலை குத்துக்கரணம் அடிப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை.

இப்போது சொல்லுங்கள் தமிழர் போராடம் பற்றி ஒன்றும் தெரியாமல் கதைக்க்கும் நீங்களா??? நாங்களா போராட்டம் பற்றிக் கதைக்க அருகதையற்றவர்???

said...

மெல்போர்ன் கமல் said...
19 December, 2008 9:27 AM
பொடியன்-|-SanJai said...
//தமிழர்களைப் புரிந்து கொள்ளாது, அவர்களது போராட்டத்தைக் கொச்சைப் படுத்திப் பதிவு எழுதும் நீங்கள்//

பொடியன்-|-SanJai said...
கமல், தமிழர்களின் போராட்டத்தை கொச்சை படுத்துபவர்களை தான் நான் குறை சொல்லி இருக்கிறேன். இந்த பதிவில் தமிழர்களின் போராட்டத்தை கொச்சை படுத்தி எழுதி இருக்கும் வார்த்தைகளை எடுத்துக் காட்ட முடியுமா? உடனே திருத்திக் கொள்கிறேன்.
''என் பாஷையில் பயங்கரவாதம் என்பது, என் நாட்டுத் தலைவரை வெளிநாட்டு இயக்கம் கொல்வது, என் நாட்டில் வைத்து வெளிநாட்டு விருந்தினர்களை கொல்வது ( பெயர் வேண்டுமா? ), என் நாட்டு விமான நிலையத்தில் குண்டு வைப்பது ஆகியவை தான். இவை அனைத்தையும் பயங்கரவாத விடுதலைபுலிகள் செய்திருக்கிறார்கள்.. உங்களால் மறுக்க முடியுமா?. எனக்கு என் தாய்நாட்டிற்கு பிறகுதான் மற்ற நாடெல்லாம்.//


மெல்போர்ன் கமல் said...
என் பாஷையில் பயங்கரவாதம் என்பது, என் நாட்டுத் தலைவரை வெளிநாட்டு இயக்கம் கொல்வது, என் நாட்டில் வைத்து வெளிநாட்டு விருந்தினர்களை கொல்வது ( பெயர் வேண்டுமா? ), என் நாட்டு விமான நிலையத்தில் குண்டு வைப்பது ஆகியவை தான். இவை அனைத்தையும் பயங்கரவாத விடுதலைபுலிகள் செய்திருக்கிறார்கள்.. உங்களால் மறுக்க முடியுமா?. எனக்கு என் தாய்நாட்டிற்கு பிறகுதான் மற்ற நாடெல்லாம்.//

உங்கள் நாட்டு விமான நிலையத்தில் விடுதலைப் புலிகள் எப்போது குண்டு வைத்தார்கள் என்று கூற முடியுமா??? உங்கள் நாட்டு அமைதிப் படையினர் எங்கள் நாட்டில் செய்த நாசகார வேலைகளுக்கு நாங்கள் என்ன பெய்ர் கூற முடியும்????
//
மெல்போர்ன் கமல் said...
வால்பையன் said...
நல்ல ஆரோக்கியமான விவாதத்தை எதிபார்க்கிறேன்!

விடுதலைபுலிகள் வேண்டாம் என சொல்லும் சில ஈழதமிழர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கமலின் பதில் என்ன?
ஈழதமிழர்களுக்கு தனி நாடே சரியானது என்று நம்பும் பட்சத்தில் அதை உலக நாடுகளுக்கு எடுத்து சொல்லும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது.

உலக நாடுகள் விடுதலைபுலிகளை தடை செய்யும் அளவுக்கு எடுத்து சென்றது யார்? ஏன்?//

இந்தளவு வரலாறுகளையும் தெரியாதவர்களாய் இருந்து கொண்டு ஈழம் பற்றிப் பதிவு எழுத உங்களுக்கு என்ன அருகதை உள்ளது நண்பர்களே???

இவை தான் நான் உங்கள் பதிவில் போட்ட பின்னூட்டங்கள். இப்போது சொல்லுங்கள் நண்பர்களே??? விமானத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்பது பற்றிப் பொய் கூறும் பதிவரா??? நான அதற்கான விடையை ஆதார பூர்வமாக விளக்க வேண்டும்????

உங்களுக்குத் தமிழ் தெரியாதா?? நீங்கள் கூறினீர்கள். விமான நிலையத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்று. அதற்கு நான் உங்களிடம் கேட்ட கேள்வி தான் புலிகள் எப்போது எந்த விமான நிலையத்தில் குண்டு வைத்தார்கள் என்று??? அதற்குப் பதில் சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. அதற்கே பதில் சொல்லத் தெரியாத நீங்கள் அந்தக் கேள்விக்கான விடையை உங்களிடம் கேட்கும் போது அதற்கு விடை சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. இப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைத்துத் தலை குத்துக்கரணம் அடிப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. இப்போது சொல்லுங்கள் தமிழர் போராடம் பற்றி ஒன்றும் தெரியாமல் கதைக்க்கும் நீங்களா??? நாங்களா போராட்டம் பற்றிக் கதைக்க அருகதையற்றவர்???

இவை தான் நான் உங்கள் பதிவில் போட்ட பின்னூட்டங்கள். இப்போது சொல்லுங்கள் நண்பர்களே??? விமானத்தில் புலிகள் குண்டு வைத்தார்கள் என்பது பற்றிப் பொய் கூறும் பதிவரா??? நானா அதற்கான விடையை ஆதார பூர்வமாக விளக்க வேண்டும்????

said...

//இந்தப் பதிவிற்கும் சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்கள் வரும்.. பாருங்க..//

அங்கிள் கோவையில மழையாமே!

இந்த டெஸ்ட் மேச்சில இந்தியா ஜெயிக்கும்னு நம்புறிங்களா?

said...

//இந்தப் பதிவிற்கும் சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்கள் வரும்.. பாருங்க..//

அப்புறம் சஞ்சய் மாம்ஸ் செளக்கியமா???

said...

//அத்திரி என்ற பதிவர் பின்னூட்டங்களை மட்டுமே படித்து , நான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவன் என்பதை முன்பு நம்பிவிட்டதாகவும் இப்போது அது பொய் என தெரிந்துக் கொண்டது போலவும் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.//

??????????????????????????????????

said...

வால் & மங்களூர் மாம்ஸ்.. கிகிகி.. :)

said...

அத்திரி, மன்னிக்கனும்..

சாத்திரின்னு போடறதுக்கு பதில் அத்திரின்னு போட்டுட்டேன். மாத்திடறேன். :(

Tamiler This Week