இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday 29 April, 2009

வாழ்த்துகள் அண்ணாச்சி


நம்ம அண்ணாச்சி வடகரைவேலன் அவர்கள் இன்று (29.04.2009) தன் புது வீட்டில் அன்பான குடும்பத்துடன் காலடி வைத்திருக்கிறார். புது வீட்டில் குடி புகும் அண்ணாச்சிக்கும அவர் தம் குடும்பத்தார்க்கும் மேலும் மேலும் சந்தோஷமும் செல்வமும் பெருகட்டும் என இதயப் பூர்வமாக வாழ்த்துவோம். வாழ்த்துகள் அண்ணாச்சி. போக்குவரத்து நெரிசல், தொழிற்சாலைகள் சத்தம் போன்ற தொல்லைகள் இல்லாமல் அமைதியான இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் 3 படுக்கை அறைகளுடன் 2 மாடிகளில் அமைந்த மிக அழகான இல்லம்.

( இதை மிக சிறிய வீடு என்று சொன்னார்.. பாருங்க மக்களே இது இவங்க ஊர்ல சின்ன வீடாம் .. :) )

நான் , பரிசல்காரன், வெயிலான் , செல்வேந்திரன், ஈரவெங்காயம் சாமிநாதன், சிவகுமரன் ஆகியோர் சென்று விழாவை சிறப்பித்துவிட்டு வந்தோம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :)

Friday 24 April, 2009

பர்ச்சேஸ் போறீங்களா.. கொஞ்சம் பார்த்து போங்க..


எதை திண்ணா பித்தம் தெளியும்னு சொல்ற மாதிரி, என்ன பண்ணா இப்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கலாம் என யோசிக்க வேண்டியதாகிவிட்டது. இந்தக் கட்டுரையில் பர்சேஸ் போகிறவர்களுக்கு சின்ன ஆலோசனை. வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில் எனது நேரடி அனுபவமே இந்த கட்டுரை.

பொதுவாக ஒரு பொருள் வாங்க செல்பவர்கள் ஒரே கடையில் விசாரித்து வாங்கி விடுகிறார்கள். சோம்பேறித்தனமும் பணத்தின் அருமை தெரியாததுமே இதற்கு காரணம். இனியும் அவ்வாறு செய்யாதீர்கள். சில நூறு ரூபாய் அளவில் உள்ள பொருட்கள் என்றால் பரவாயில்லை. 10, 20 ரூபாய்கள் வித்தியாசம் தான் இருக்கும். ஆனால் ஆயிரங்களில் வாங்கும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, ஹோம் தியேட்டர், ஃபர்னிச்சர்கள் போன்ற பொருட்களை வாங்கும் போது ஒரே கடையில் விசாரித்து வாங்கும் பழக்கத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

எதாவது ஒரு கடைக்கு சென்று உங்களுக்கு பிடித்த மாடலை தேர்வு செய்துக் கொண்டு அதற்கான விலையை கேட்டுக் கொள்ளுங்கள். “ நாங்கள் வேறு கடையிலும் விலையை விசாரிக்க விரும்புகிறோம். உங்களை விட குறைவாக இருந்தால் அங்கேயே வாங்கிவிடுவோம். அலல்து நீங்கள் அதைவிட குறைவான விலையில் அல்லது அதே விலையில் கொடுக்க முன்வந்தால் உங்களிடமே வாங்கிக் கொள்கிறோம்” என கண்ணியமாக சொல்லிவிட்டே (இப்படி சொல்லும் போதே அவர்கள் ஓரளவு நியாயமான விலையை சொல்லிவிடுவார்கள்) அல்லது வேறு காரணங்களை சொல்லிவிட்டு வேறு கடைக்கு சென்று விசாரியுங்கள். குறைந்தது 4 கடைகளிலாவது விசாரியுங்கள். அப்போது தான் உண்மை விலை என்னவென்று தெரியும்.

தவறாமல் பெட்டியில் இருக்கும் அதிகபட்ச விலையை (MRP) பார்த்துக் கொள்ளுங்கள். அதை அழித்திருந்தால் வாங்க வேண்டாம். மதிப்புக் கூட்டு வரி (VAT) அமுல்படுத்திய பிறகு பொருட்களின் அடக்க விலைக்கும் அதிகபட்ச விலைக்குமான வேறுபாடு பெரிய அளவில் குறைந்துவிட்டது. அதில் இருந்து சில சதவீதம் கழித்து வாங்கினாலே அது சரியான விலையாகத் தான் இருக்கும்.

தவணை முறையில் வாங்க விரும்பினால் குறைந்தது 3 நிதி நிறுவங்களின் சேவை பற்றியாவது விசாரியுங்கள். நீங்கள் பொருள் வாங்கும் கடையிலேயே அதற்கான ஆட்கள் இருப்பார்கள். அவர்களிடம் வட்டி விகிதம், டாகுமெண்ட் சார்ஜ் போன்றவற்றை விசாரித்து, எந்த நிறுவனம் நமக்கு சரியாக இருக்கும் என தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.

அதிக விலை உள்ள பொருட்களை இணையத் தளங்கள் மூலம் வாங்குவதை தவிர்க்கவும். அவர்கள் பெரும்பாலும் அதிகபட்ச விலையில் தான் விற்பனை செய்கிறார்கள். செல்போன், கேமரா போன்றவற்றின் விலையை இணையத் தளங்களில் தெரிந்துக் கொண்டு அருகில் இருக்கும் கடைகளில் வாங்குங்கள். இவைகளை பொறுத்தவரையில் இணையத் தளங்களில் தான் ஓரளவு சரியான விலை இருக்கும்.

ஆன்லைனில் வாங்குவதில் சில அசெளகரியங்கள் உள்ளன. வாங்கிய பொருள் சரியாக எப்போது கிடைக்கும் என சொல்ல முடியாது. குறைந்தது 7 நட்கள் ஆகும். Transport Damage இருந்தால் அதை மாற்றுவது கஷ்டம்.

இணையத் தளத்தில் பார்த்த தோற்றத்திலேயே அந்த பொருள் இருக்கும் என்பதை சொல்ல முடியாது. ஷிப்பிங் சார்ஜ் ஃப்ரீ என்று சொல்லிவிட்டு பொருளை டெலிவரி செய்யும் நிறுவனம் நம்மிடம் காசு வாங்க வாய்ப்பிருக்கு. நாம் முன்பே பொருளுக்கான விலையை கிரெடிட் கார்ட் மூலம் கட்டி இருப்போம். ஆகவே இப்போது சில நூறு ரூபாய்க்காக பொருளை வேண்டாம் என சொல்ல முடியாது. தேவை இல்லாத மன உளைச்சலும் செலவும் ஏற்படும். சமீபத்தில் கூட ஒரு நண்பருக்கு இந்த பிரச்சனை வந்தது.

எந்தப் பொருளை வாங்கினாலும் அருகில் இருக்கும் கடைகளிலேயே வாங்குங்கள். அப்போது தான் வாங்கிய பொருளை எடுத்து செல்வதற்கான செலவு குறையும். அதைவிட முக்கியம், சர்வீஸ் வசதி. ஏதேனும் பழுதடைந்தால் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் செண்டருக்கு நீங்களே நேரடியாக அழைப்பதைவிட, அந்தப் பொருளை வாங்கிய கடையிலேயே பழுதைப் பற்றி சொல்லி உங்கள் விலாசம் கொடுத்து விட்டால், அவர்கள் இன்னும் விரைவான சேவைக்கு ஏற்பாடு செய்வார்கள். இதற்கு, அருகில் இருக்கும் கடைகளில் வாங்குவது தான் சிறந்தது.

Exclusive Showroomகளில் பொருட்களை வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கவும். அங்கு வேறு நிறுவனப் பொருட்கள் இருக்காது என்பதால் குறைவான அளவிலேயே வியாபாரம் நடக்கும். ஆகவே சிக்கிய வாடிக்கையாளர்களிடம் தாழித்து விடுவார்கள். அவர்களிடம் விலை விசாரித்துவிட்டு வேறு கடைக்கு வந்து விசாரித்து பாருங்க. பெரிய வித்தியாசம் இருக்கும்.

இந்த ஆலோசனைகளை என் நண்பர்கள் பலருக்கும் சொல்லி இருக்கிறேன். இதன் மூலம் பல நூறு ரூபாய்களில் இருந்து சில ஆயிரங்கள் வரை மிச்சப்படுத்தி இருக்கிறார்கள்.நீங்களும் முயற்சி செய்யுங்கள். சம்பாதிக்கும் பணத்தை சரியாக செலவளியுங்கள்.

இன்றைய தட்ஸ்தமிழ்.காமில் வந்த கட்டுரை

Wednesday 22 April, 2009

ஓ போடாதிங்க.. ஓட்டு போடுங்க..

தேர்தல் நெருங்கிவிட்டது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள். வேட்பு மணுத் தாக்கலும் தமிழகத்தில் தொடங்கிவிட்டது. பெரும்பாலானவர்களுக்கு யாருக்கும் ஓட்டுப் போடுவதில் விருப்பம் இல்லை போலும். அதனால் 49ஓ விதியை பயன்படுத்தப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இது பல தவறான செயல்கள் தொடர்வதற்கும் நல்ல விஷயங்கள் நடக்காமலே போவதற்கும் தான் வழிவகுக்கும் என்பது என் அபிப்ராயம்.

49ஓ விதியை பயன்படுத்த நினைப்பதற்கு காரணம், அரசியல் கட்சிகள் அறிவிக்கும் வேபாளர்களின் மேல் நம்பிக்கை இல்லாமல் தானே. எல்லாத் தொகுதியிலுமே பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருப்பார்கள். அதில் பாதிப் பேர் சுயேட்சை வேட்பாளர்களாக இருப்பார்கள். அவர்களில் நிச்சயம் ஒருவராவது நாம் எதிர்பார்க்கும் தகுதியுடன் இருப்பார். அதாவது, நன்கு படித்தவராகவும், அந்த பகுதியின் மக்கள் நலனிலும் வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்டவராகவும், எளிமையானவராகவும், எளிதில் அனுகக்கூடியவராகவும் இருப்பார். அவருக்கு உங்கள் வாக்கை பதிவு செய்யலாமே.

நீங்கள் ஒரு சுயேட்சைக்கு வாக்களிப்பதன் மூலம் அவருக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று மட்டும் காட்டுவதில்லை, களத்தில் நிற்கும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் உங்கள் வாக்கை பதிவு செய்திருக்கிறீர்கள் என காட்ட முடியும். அதன் மூலம் வரும்காலத்தில் அரசியல் கட்சிகளும் தற்போது அதிக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரைப் போன்ற தகுதியில் இருப்பவருக்கு வாய்ப்பளிக்க முன்வருவார்கள். இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்ல, அவ்வாறு செய்வதன் மூலம் மேலும் பல நல்லவர்கள், அதாவது நாம் எதிர்பார்ப்பது போன்ற தகுதி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவார்கள். அவர்கள் மூலம் இந்த தேசத்தின் தலை எழுத்தையே மாற்ற முடியும். அதை விட்டு 49ஓ விதியை பயன்படுத்தி ஒட்டு மொத்தமாக வாக்களிப்பதை புறக்கணித்தால் நம் விருப்பம் என்ன என்பதை எப்படி உணர்த்த முடியும்? நாம் எது போன்ற வேட்பாளரை விரும்புகிறோம் என்பதை எப்படி வெளிப்படுத்த முடியும்?.

ஆகவே, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருக்கும் எதாவது ஒரு வேட்பாளருக்கு வாக்களித்து உங்கள் ஜனநாயகக் கடமையை செய்யுங்கள். 49ஓ விதியை பயன்படுத்துவதற்கு முன் நன்றாக யோசியுங்கள். முடிந்தால் தவிர்க்கப் பாருங்கள்.

டிஸ்கி : தட்ஸ்தமிழுக்காக எழுதிய கட்டுரை.

அங்கே வாசிக்க

Tuesday 21 April, 2009

Deekshitha - என் அக்கா மகள்



















Monday 20 April, 2009

Virus Found

கோவையில் நடந்த விஜய் டிவியின் இசைமழை நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அண்ணாச்சி தன் புது போனை என்னிடம் கொடுக்கிறார். சமீபத்தில் வாங்கியது.

“ அண்ணாச்சி.. போன் சும்மா கும்முனு இருக்கு.. சார்ஜ் ரொம்ப நேரம் இருக்குதா?”
அதற்காகத் தான் அதை வாங்கப் போவதாக சொல்லி இருந்தார்.

“ ஹ்ம்ம்.. அதெல்லாம் ஓகே.. அதுக்காக தான இதை வாங்கறதா சொன்னேன்”

“அட.. ஸ்க்ரீன் கலக்குதே.. இந்த கடிகாரம் ரொம்ப அழகா இருக்கு அண்ணாச்சி.. என் போன்ல இல்ல பாருங்க.. :( “

“ இது தேர்ட் பார்ட்டி ப்ரோக்ராம்பா.. ”

அருகில் இருந்த வெயிலானை காட்டி
“ இவர்கிட்ட இருந்து தான் எனக்கு கெடைச்சது.. இரு உனக்கும் அனுப்பறேன்..”

“ ஓ.. அப்டியா.. உடனே அனுப்புங்க.. ரொம்ப நல்லா இருக்கு”

“உன்னோட போன் 6200வா?”

“ இல்லை அண்ணாச்சி.. 6233”

“ அட.. ப்ளூ டூத் ஆன் பண்ணுப்பா.. அப்போ தான் அனுப்ப முடியும்”

“ அதெல்லாம் அப்போவே ஆன் பண்ணிட்டேன் அண்ணாச்சி”

“ உன்னோட போன் பேர் இதுல தெரியலையே”

என் போன் பெயர் அதில் இருப்பதை நான் முன்பே பார்த்துவிட்டேன். ஆனால் எதுவும் அவரிடம் சொல்லவில்லை. அண்ணாச்சி திரும்பவும் முயற்சிக்கிறார். திரும்ப திரும்ப முயற்ச்சிக்கிறார்.

“ அட போய்யா.. இதுல உன் போன் பேர் வரலை.. “

இதுக்கு மேல விட்டா அந்த ப்ரோக்ராம் நமக்கு கிடைக்காம போய்டும்னு நினைச்சி...

அவர் போனில் தெரிந்த ஒரு வாசகத்தை காட்டி “ ஹிஹி.. அண்ணாச்சி அதான் என்னோட போன்.. தைரியமாக அனுப்புங்க..:)))) “

“அடப்பாவி... #$%$#%^&%^%%$#$%%#.. நான் கூட என்னோட போன்ல வைரஸ் இருக்கும் போல.. இப்போ ஆஃப் பண்ணி பாக்கெட்ல போட்டு நாளைக்கு அந்த மொபைல் கடைக்கு போய் , என்னய்யா புது மொபைல்ல வைரஸ் இருக்குன்னு சண்டை போட்டிருப்பேன். வாங்கி ஒரு வாரம் கூட ஆகலை. அதுக்குள்ள வைரஸ் வந்துடிச்சேன்னு பயந்து போய்ட்டேன்.. ஆளைபாரு..”

அருகில் இதை கேட்டுக் கொண்டிருந்த சுரேகா சிரித்து முடிப்பதற்கு நீண்ட நேரம் ஆச்சி.. :)

என் மொபைல் ப்ளூ டூத் பெயர் : Virus Found என்று வைத்திருக்கிறேன்.
அவ்வப்போது பயணங்களில் இருக்கும் போது அருகில் ப்ளூடூத் மூலம் யாராவது ரொம்ப அலும்பு பண்ணிக் கொண்டிருந்தால் என் மொபைலில் ப்ளூடூத் ஆன் பண்ணிவிடுவேன். அடுத்து நடப்பதை பார்க்க ரசிக்க ஆயிரம் ஜென்மம் வேண்டும்.. :))

அஸ்கி புஸ்கி : இது ஒரு பழிவாங்கும் பதிவு அல்ல. :)

Thursday 16 April, 2009

குசும்பனின் குதூகலம் தொடரட்டும்

குசும்பா, உன் வாய்க்கொழுப்பை எல்லாம் வண்டியிலேயே விட்டு விட்டு வீட்டிற்குள் நுழைந்து இப்படி கையைக் கட்டி நடித்தே ஒரு வருடம் கடந்துவிட்டாய். இந்த ஓராண்டை விட இன்னும் அதிக மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீ இன்னும் நூறாண்டுகள் கடக்க எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். குசும்பனுக்கும் சகோதரி மஞ்சுவிற்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்...!

Wednesday 1 April, 2009

Happy Birthday Nithya @ பொடிப்பொண்ணு

நம் சகப்பதிவரும் விஜய டிஆரின் வலையுலக சிஷ்யயையுமான பொடிபொண்ணு நித்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஏப்ரல் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரு விஷேஷக் காரணத்துக்காக கொண்டாடுவதன் காரணம் புரிகிறதா? :)). அரசாங்க பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பட்ட மேல்படிப்புகளுக்கான தேர்வுகள் எழுதுவதில் விரைவில் 1000வது தேர்வை நெருங்கிக் கொண்டிருப்பதற்கும் வாழ்த்துக்கள். :))

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நித்யா. வாழ்க வளமுடன்..:)

Tamiler This Week