இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 13 November, 2008

இந்த நாய்ங்கள எல்லாம் அம்மணமாக்கி அடிக்கனும் - Adults Only

சென்னை சட்டக் கல்லூரியில் ஜாதி சண்டை அரங்கேறி இருக்கிறது. அந்த ஜாதி வெறிபிடித்த பரதேசிகளின் செயலை பார்க்கும் போது அவமானமாய் இருந்தது.. இந்த கம்மனாட்டி பசங்களா நாளை சட்டத்திற்கு போராடப் போகிறார்கள். ஜாதித் தலைவர்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் அடியாட்களாய் போக வேண்டிய பன்னாடை பரதேசிகள் எல்லாம் சட்டம் பயின்று என்ன மயிறப் புடுங்கப் போகுதுங்க? இதுங்களால ஈடூபாட்டுடன் இந்த படிப்பை படிப்பவர்கள் மீதும் ஒட்டு மொத்தமாய் வெருப்பு வருகிறது. சட்டம் படித்தால் சில நாய்கள் சட்டத்தால் கட்டுபடுத்த முடியாதவர்கள் என்று நினைத்துக் கொள்கின்றன. எதற்கெடுத்தாலும் வன்முறை தான் இவர்களின் வழி. ஜாதி சண்டை போடவா இந்த நாய்களை பெத்து வளர்க்கிறார்கள். இந்த பேமானிகளின் செயல்களை பார்த்து இவர்களை பெற்றவர்கள் எவ்வளவு கலங்கிப் போய் இருப்பார்கள்.. இதுக்காடா உங்களை எலலாம் கடன் வாங்கி கஷ்டப் பட்டு படிக்க வைக்கிறாங்க? இந்தக் கபோதிகள் சாப்பிட போனால் ஹோட்டலில் பணம் கொடுப்பதில்லை.. கேட்டால் வன்முறை.. போலிஸ்காரர்களுடன் எப்போதும் மோதல்.. எந்த பொது விதியையும் கடைபிடிப்பதில்லை.. எப்போதும் ஒரு வெறித்தனம்.. இதுக்காடா சட்டம் படிக்க வரீங்க? ஒவ்வொரு நாயும் கையில் ஆயுதங்களுடன் அடியாட்களை விட கேவலமாக காட்சி அளித்தார்கள்... த்தூ தெறி.. இந்த சொறிநாய்களின் உதவியுடன் தான் நீதி மன்றங்களுக்கு போக வேண்டும் என்பதை நினைக்கையில்.. பேசாமல் தூக்குப் போட்டு தொங்கலாம்..

இந்த வெறிநாய்களை அம்மணமாக்கி அடிபப்தற்கு முன் அப்போது அம்மணமாய் வேடிக்கை பார்த்த காவல் துறை துணிமாட்ட வேண்டும். அங்கே காக்கி சட்டை அணிந்து வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் அம்மாணமகத் தான் தெரிந்தார்கள்.

சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் கொடிய ஆயுதங்களுடன்....
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியவர்கள் கையில் லத்தியுடன் அம்மணமாய்..
சந்தோஷம்டா.. ரொம்ப சந்தோஷம்..

( வன்முறையில் ஈடுபடும் சில சொறி நாய்களின் மீதுள்ள நியாயமான கோபம் தான் இந்த பதிவு.. எல்லா சட்ட மாணவர்களையும் சாடுவது நோக்கமல்ல )

35 Comments:

said...

அண்ணனுக்கு வணக்கம்:-)

said...

நாந்தான் 1ஆம் நம்பர்.

said...

ரொம்ப கோவமா இருப்பிய போலிரூக்கு:-)))

said...

//இந்த வெறிநாய்களை அம்மணமாக்கி அடிபப்தற்கு முன் அப்போது அம்மணமாய் வேடிக்கை பார்த்த காவல் துறை துணிமாட்ட வேண்டும். அங்கே காக்கி சட்டை அணிந்து வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் அம்மாணமகத் தான் தெரிந்தார்கள்.
//

அடிக்கவேண்டாம், அம்மணமாக சென்னை சாலைகளில் ஊர்வலாக அழைத்துச் சென்றாலே போதும் வேடிக்கைப் பார்த்த காவலர்களையும் சேர்த்தே

said...

இவர்களால் இந்தியா முன்னேறாது.சட்டதின்மூலம்(?!),இது போன்ற காவாலிகளின் "புட்டத்தை" காலி செய்யவேண்டும்.

said...

கல்லுரி நிர்வாகம் என்ன பண்ணிக்கொண்டுருந்தது,அவர்களை ஆரம்பத்திலே கிள்ளியிருக்க வேண்டாமா?

said...

கருத்து கந்தசாமியின் கருத்தை கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்...

said...

ஆனா அதுக்கப்புறம் பத்து பக்கத்துக்கு அம்மணமாக அழைத்து செல்வது நியாயமா அப்படீன்னு ஒரு கருத்து பதிவு எதுவும் யாரும் எழுதக்கூடாதுன்னு சொல்லிருங்க முதல்லே...

said...

டென்ஷன் வேண்டாம்...ரிலாக்ஸ்...!!!

said...

என்னுடைய பதிவை தான் திட்டறீங்களோன்னு ஒரு நிமிசம் பயந்துட்டேன்...

டவுசரை புடிச்சிக்கிட்டேதான் இந்த பதிவை ஓப்பன் செய்தேன்..

said...

நான் ஆயுதங்களோடு வரவில்லை, என்ன விட்டுருங்கோ

said...

maapla! naan elutha ninaiththa pathiva nee eluthitta.

said...

super'a soninga na... antha police karangala vedunga avanga arasiyalvathien kaikuli nainga.... neenga sonna mari police ulla poi irunthal 'kallurikul aththu meri nulaintha arajaga police'ai kaithu sei' nu oru PCR case ai antha police maela poduvanaga...naalaieram sambhalatha nambhi iruntha avan kudumbham nadu thaeruvuku varum....ithalam oru pakkam irunthalum anga iruntha police,police'a illama oru eeram ulla manushana athai thaduthu irukanum...so athukgaga ammanama vedalam... padika vantha intha naikaluku puthi enga pochi??? thappa paesi irutha mannikavum annan,akka margalae...

said...

அரசியலும் சாதியும் மட்டும் தான் சட்டம் என்கிற தவறான புரிதல் இன்றைய இளைய தலைமுறை மாணவர்களுக்கு. பின்னாளில் இவர்கள்தான் வழக்கறிஞர்கள், நீதிபதிகள். ஏன் சிலர் அரசியல் வாதியாவதற்கு பால பாடம் கற்றுக் கொள்வதே சட்டக் கல்லூரிதான்.(இதில் அவர்கள் பெருமைப் பட்டுக் கொள்வது, நான் மெட்ராஸ் லா காலேஜுல படிச்சேன் என்று) எங்கு போய் முடியுமோ?

said...

மனசில் இருந்தத அப்படியே சென்ஸார் பண்ணாம போட்டு தாக்கியிருக்கீங்க....
இந்த நாடு போற போக்கில எவன் திருந்தப்போறான்..?
ஹூம்.

said...

அதுவும் அந்த பிங்க் பனியன் போட்டிருந்த ஒரு பன்னாடைதான் ரெண்டுபேரையும் மாறி மாறி அடிச்சான். அவன் என் கைல சிக்கினான்னா, கண்ணுலயும், அதுலயும் ஈயத்தைக் காச்சு ஊத்துவேன்.

said...

என் பதிவு படிச்சுட்டு சஞ்சய் மாதிரி கோவமா எழுத வர்லன்னு கும்க்கி சொன்னாரு. அதான் வந்தேன். சரிதான்.

Anonymous said...

//சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் கொடிய ஆயுதங்களுடன்....//

கேவலமா இருக்கு. என்ன பண்ணறது

said...

:(

said...

மதம் பிடிச்ச யானை கள் சில கையில கிடைச்ச பாகனை போட்டு மிதிக்கற மாதிரிதான் இருந்தது அந்த காட்சி...
எப்படி வருகிறது இப்படியான வன் முறைக்குரிய மனம்...

said...

இந்த நாய்களை முதலில் கல்லுரியயை விட்டு டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
போலீஸ்காரர்களை நினைத்தாள் ஒருபுறம் பாவமாக இருக்கிறது மறுபுறம் கேவலம்த இருக்கிறது அதிலும் கண்ணாடி அணிந்து கொண்டிருந்த அந்த மேலதிகாரி நக்கல் புன்னகையுடன் வேறு செல் போனில் பேசி கொண்டிருந்தது டி.வி. இல் பார்த்த அனைவருக்கும் மனதை பதறவைத்தது.

கருணாநிதி இனிமேலும் காவல்துறை என்னிடம் பத்திரமாய் உள்ளது என்று சொல்லிகொண்டிருப்பது அவரை பைத்தியம் என்று சொல்லவைதுவிடும்.

இவர் முதல்வர் ஆகும் போதெல்லாம் இப்படி ரவடிகள் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறதே! இப்படி தமிழக மக்கள் பார்த்து கொண்டு சும்மா இருப்பார்கள் என்று நினைத்தால் அது கருனநிதியயையும், அவரது குடும்பம், கட்சி அனைத்தையும் மக்கள் நிராகரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

said...

நானும் ஒரு பதிவு பதிஞ்சி வச்சிருக்கேன்.... வந்து உங்க கருத்தை சொல்லுங்க.....

said...

Intha payalukalukku ellam padikka arasaangam panam selavalikkuthe ..athu thaan vetkam......

said...

ஒரு சம்பவத்தை டிவியில் பார்த்துவிட்டோமென்ற ஒரே தகுதிக்காக தரக்குறைவான இதுபோன்ற பதிவுகளை எழுதுவது தவறு. ஒவ்வொரு பிரச்சினையின் அரசியலையும் புரிந்துகொண்டு எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்று மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்!

said...

பதிவு ரொம்பவே சூடு. இந்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இதே வேலையாப் போச்சு. போலீஸ் மீது கொஞ்சம் தவறு இருந்தாலும், இந்தளவுக்கு அவர்கள் தலை உருட்டப்படுவதில் நியாயம் இல்லை என்று நினைக்கிற்றேன். போலீஸ் தலையிட்டா அய்யோ மாணவர்கள் மீது தடியடி, கொலைவெறித் தாக்குதல்னு ஒப்பாரி வைக்கவேண்டியது. இல்லைன்னா வேடிக்கை பார்த்தாங்கன்னு கூவ வேண்டியது.

said...

இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத்/பதிவுகளை தவிர்ப்பது நல்லது நண்பரே...

இவர்களுக்கும் உங்களுக்கும் பின்பு வித்தியாசம் இல்லாமல் போய்விடும்..

said...

//லக்கிலுக் said...
ஒரு சம்பவத்தை டிவியில் பார்த்துவிட்டோமென்ற ஒரே தகுதிக்காக தரக்குறைவான இதுபோன்ற பதிவுகளை எழுதுவது தவறு. ஒவ்வொரு பிரச்சினையின் அரசியலையும் புரிந்துகொண்டு எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்று மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்!
//

இப்படியும் சில மனிதர்கள்.

இதே சம்பவம் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது நடந்திருந்தால் எப்படியெல்லாம் சாமியாடி இருப்பார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

உளவுதுறை தகவல், போலீஸ், ஆட்சி, அதிகாரம் எல்லாம் இருந்தும் கேவலம் ஒரு கல்லூரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாத அரசை வக்காலத்து வாங்க கூட இங்கே ஆட்கள் இருக்கிறார்களே. இது அந்த சம்பவத்தை விட கொடுமையானது.

இந்த மாதிரி சம்பவங்கள் நிகழும் போது கூட தங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு காயம் ஏற்படாமல் பேசும் இவர்களுக்கு தமிழக அரசியலிலும், அந்த கட்சியிலும் பெரிய எதிர்காலம் இருக்கிறது.

said...

//Vidhya C said...
போலீஸ் மீது கொஞ்சம் தவறு இருந்தாலும், இந்தளவுக்கு அவர்கள் தலை உருட்டப்படுவதில் நியாயம் இல்லை என்று நினைக்கிற்றேன். போலீஸ் தலையிட்டா அய்யோ மாணவர்கள் மீது தடியடி, கொலைவெறித் தாக்குதல்னு ஒப்பாரி வைக்கவேண்டியது. இல்லைன்னா வேடிக்கை பார்த்தாங்கன்னு கூவ வேண்டியது.//

இந்த சம்பவம் தற்செயலாக நடந்து அல்ல. கொலை வெறி தாக்குதலை இவர்கள் நடத்த போகிறார்கள் என்பது இவர்களுக்கும் முன்பே தெரியும் என்னும் பட்சத்தில் இந்த சம்பவத்தை நிகழாமல் தடுத்திருக்க வேண்டும் இவர்கள்.

said...

//தமிழன்...(கறுப்பி...) said...
மதம் பிடிச்ச யானை கள் சில கையில கிடைச்ச பாகனை போட்டு மிதிக்கற மாதிரிதான் இருந்தது அந்த காட்சி...
எப்படி வருகிறது இப்படியான வன் முறைக்குரிய மனம்...
///

எல்லாம் இந்த பாழாபோன சினிமாவை பாத்து தான். இப்ப வர படத்தில எல்லா நாயும் கையில அருவாள எடுத்துட்டு திறியிது. முக்கால் வாசி படத்தில ஹீரோ ரவுடியாதான் வரான், நாமளும் கை தட்டி விசில் அடிச்சு பாக்குறோம்.

said...

மாப்ள, இன்னும் மோசமான அச்சிலேற்றமுடியாத வார்த்தைகள் தான் எனக்கு இதப்பத்தி நினைக்கிறப்ப வருது. இதவிடக் கேவலம் ஒன்னும் நடக்க முடியாது.
நாடு எங்கய்யா போகுது? என்ன தான் நடக்குது? மனிதாபிமானம் எங்கயா போச்சு நம்ம நாட்டுல?

said...

விலெகா மாமாவுக்கு வணக்கம் :)

said...

//அடிக்கவேண்டாம், அம்மணமாக சென்னை சாலைகளில் ஊர்வலாக அழைத்துச் சென்றாலே போதும் வேடிக்கைப் பார்த்த காவலர்களையும் சேர்த்தே//

அப்டி தான் பண்ணி இருக்கனும் கோவிஜி.

said...

முதல் முறை இங்கே... இந்த கோவம் ரொம்ப சரி... பாத்தப்ப பத்திக்கிட்டு வந்துச்சு...

//சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் கொடிய ஆயுதங்களுடன்....
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியவர்கள் கையில் லத்தியுடன் அம்மணமாய்..
சந்தோஷம்டா.. ரொம்ப சந்தோஷம்..//

ஒன்னும் சொல்ல தெரியல... இந்த வெற்ப நம்ம யார் மேல பொய் காட்றது...?

said...

சந்தோஷம்யா.. ரொம்ப சந்தோஷம்..

said...

இதே போல் போன தடவை போலீஸ் சட்ட கல்லூரியில் நுழைந்து அடித்த பொழுது ஜெயா டி.வி.யில் 'காவல்துறையினரின் வெறிச்செயல்' என்று திரும்ப திரும்ப போட்டுக் காட்டியது. இந்த முறை தலையிடலையேனு திட்டு. காவல்துறை என்ன தான் செய்யமுடியும்? ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும் ஒவ்வொரு அரசாங்கமும் தங்கள் சார்பாக, தன்னிச்சையாக செயல்படாதவறு காவல்துறையை வைத்துக்கொள்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Tamiler This Week