இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Monday 21 January, 2008

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என் அன்புத் தோழியே!

ஒரு காலத்துல நம்ம நிலா அப்பா நந்து ஆஃபிஸ்க்கு வந்தார்னா உடனே சென்னை ஆன்லைன் அரட்டை பக்கத்தை திறந்து வச்சிப்பார். திரும்ப வீட்டுக்கு போற வரைக்கும் அதுலயே தான் இருப்பார்.எனக்கு தெரிஞ்சி ஒரு காலத்துல அவருக்கு தெரிஞ்ச இரண்டு இணையதளங்கள்... சென்னை ஆன்லைன் மற்றும் ஹாட்மெயில் மட்டும் தான். அவர் வேற எந்த இணையதளத்தையும் பார்த்ததா எனக்கு ஞாபகம் இல்லை. வீட்டுக்கு போய் என்ன கர்மத்த எல்லாம் பார்த்தாரோ... அதெல்லாம் எனக்கு தெரியாது.. :P.

சரி அப்டி என்ன தாண்டா அந்த சென்னை ஆன்லைன்ல இருக்குனு நெனச்சி நானும் அந்த பக்கம் ஒதுங்க ஆரம்பிச்சேன். அப்புறம் தான் அதோட மகிமை புரிஞ்சது. அட அட.. யாஹூ விட்டா சாட் பண்ண வேற இடம் தெரியாம இருந்த நான் சாட் ரூம்னா இப்டி தான் இருக்கனும்னு தெரிஞ்சிகிட்டேன்.உண்மையிலேயே வருத்தப் படாத வாலிபர் சங்கம் அங்க தான் இருந்தது. எனக்கு ரொம்ப அருமையா ஒத்துப்போன கும்பல் அது. அப்புறம் நானும் அதுலயே தவம் கெடந்தென்.:)..ரொம்ப அற்புதமான நண்பர்கள் எல்லாம் கெடைச்சாங்க. எங்க அராஜகம் தாங்காம அந்த சாட் ரூம் மூடி சில ஆண்டுகள் ஆகியும் எங்கள் நட்பு தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.அதில் நந்து அண்ணா பெயர் ஹூண்டாய்:)... என் பெயர் ICQ :). கூகுள் அவ்வளவு பிரபலம் இல்லாத சமயங்களில் நான் ICQ தான் அதிகம் பயன்படுத்தினேன்.I Seek You என்பதன் சுருக்கம் தான் ICQ. என் தோழி பெயர் நிலா.

அப்போது எனக்கு அறிமுகமானவள் தான் என் அன்புத் தோழி நிலா @ ப்ரியா.(இந்த பேரை படித்ததும் உங்களுக்கு ஏதெனும் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல:P ). சென்னை ஆன்லைன் அரட்டை பக்கம் மூடியதும் எங்கள் நட்பு யஹூவில் தொடர்ந்தது.பிறகு தொலைப்பேசியில் குறுஞ்செய்திகளாக, பிறகு தொலப்பேசி அழைப்ப்புகளாக வளர்ந்தது. என்னிடம் " மிகுந்த மரியாதை"யுடன் பேசும் நண்பர்களில் இவளும் ஒருத்தி.:).பிறகு அது ஒரு நாளைக்கு வெறும் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் மட்டும் பேசிக் கொள்ளும் நட்பாக வளர்ந்தது. போன் பில் கட்டியே கடனாளி ஆயிருப்பியேனு எல்லாம் கேக்கப் படாது. எனக்கு ஏர்செல் டூ ஏர்செல் ஃப்ரீமா :). இவளைப் பற்றி எனக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்று சொல்லுமளவுக்கு எனக்கு பிடித்த என் நெருங்கிய தோழி.பின்ன இப்டி மணி கணக்குல பேசினா எப்டி தெரியாம போகும்.....

அவள் படிப்பு, அவள் நண்பர்கள், அவள் காதல், அவள் காதலன் , அவள் குடும்பம் , அவள் காதலன் குடும்பம், அதில் ஏற்பட்ட ப்ரச்சனைகள், உடல் எடை குறைக்க கடைபிடிக்கும் உணவு பழக்கங்கள், ஜிம்மில் எடுத்துக் கொண்ட பயிற்சிகள், அவள் காதலனை கைபிடிக்க பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், அவள் அம்மாவுடன் போடும் சண்டைகள்... இப்படி அவள் என்னுடன் பகிர்ந்துக் கொள்ளாத விஷயங்களே இல்லை. பல சமயங்களில் அவள் அம்மவுக்கும் அவளுக்கும் நடக்கும் சண்டைகளுக்கு நான் தான் நாட்டாமை:). அவள் அம்மா என்னையும் அவர் மகன் மாதிரி நினைத்து ரொம்ப பாசமா பேசுவாங்க. அவங்க அக்கா, அக்கா பசங்க எல்லாரும் இப்போ என் நண்பர்கள்.:). ஆனால் இன்றுவரை அவளை நான் நேரில் பார்த்ததில்லை.அவள் நிச்சயதார்த்தத்திற்கு அழைத்தாள். நேரம் இல்லாததால் போக முடியவில்லை. போட்டோ மட்டும் பார்த்திருக்கேன்.

ஆனால் அவள் என்னை நேரில் பார்த்திருக்கிறாள். :)
ஒரு நாள் வழக்கம் போல அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது திருமணதிற்கு நகைகள் வாங்க சென்னை செல்வதாக சொன்னாள். எந்த ரயிலில் செல்வது என்பது இன்னும் முடிவாகவில்லை என்று சொன்னதால் நானும் அதை பெரிதாக கண்டுக்கொள்ள வில்லை. ஏன்னா எனக்கு அப்போ ஊருக்கு போற ப்ளான் எதுவும் இல்லை.இருந்தால் நானும் அந்த ரயிலிலேயே செல்ல ப்ளான் பண்ணி இருப்பேன். அதனால் அவள் பயணத்தை பற்றி மறந்தேவிட்டேன். அடுத்து வந்த ஒரு ஞாயிற்றுகிழமையில் நான் கோவை எக்ஸ்ப்ரஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். சேலம் வரை உக்காந்துட்டு தான் இருந்தேன். நமக்கு ரிசர்வ் பண்ணி எல்லாம் பயணம் பண்ணி பழக்கம் இல்லை( ஆனாலும் ரிசர்வ்ட் கோச்ல தான் ஏறுவோம்ல.) ... அதனால் ஈரோடு அல்லது சேலம் வரை தான் உட்கார இடம் கிடைக்கும். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் எழுந்துகொள்வதும் பிறகு யாரும் உட்காராத இடம் பார்த்து உக்காருவதும் நம் பொழப்பு. அன்றும் சேலத்தில் அது போல் எழுந்து நின்றுக்கொண்டேன். அந்த கோச் ஃபுல் ஆய்ட்டதால நின்றுகொண்டு வந்தேன்.

கண்ணை மூடிக் கொண்டே SMS டைப் செய்யும் அளவுக்கு SMS அரட்டை அடிப்பவன் என்பதால் பயணத்தில் இருக்கும் போது அவ்வப்போது மொபைலை எடுத்துப் பார்ப்பது வழக்கம். ஆனால் அன்று நான் நின்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த சீட்டில் ஒரு குட்டி பாப்பா செய்துக் கொண்டிருந்த சேஷ்ட்டைகளை ரசித்துக் கொண்டு இருந்ததால மொபைலை மறந்துட்டேன்.( பக்கத்தில் இருந்த ஃபிகர நான் பார்க்கல :P ). எங்க ஊர் வந்ததும் என் பேக் எடுத்துக்கிட்டு இறங்கறதுக்கு சில நொடிகள் முன்பு மொபைலை எடுத்துப் பார்த்தால் நிலா@ப்ரியா மெஸேஜ்..... டேய் நாயே ஸ்டெப்ஸ் பக்கத்துல நிக்காதே. விழுத்து சாகப் போற. இன்னொரு மெஸேஜ்: ஐயாவுக்கு காஃபி குடிக்கிற பழக்கம் எல்லாம் இருக்கோ... இன்னொன்னு : லூசு பயலே ரயில்ல எதயும் குடிக்காத. வயித்தால போகப் போகுது.எதும் சுத்தமா இருக்காது... . எனக்கு செம ஷாக். மெஸேஜ் படிச்சி முடிக்கவும் ரயில் நிக்கவும் சரியா இருந்தது. திரும்பி பார்க்க கூட நேரம் இல்லை. கீழே இறங்கியதும் அவளை அழைத்தேன். போன் எடுத்ததும் கெக்கெ பிக்கெனு நான் ஸ்டாப் சிரிப்பு. "சஞ்சய் நான் உன்ன பாத்துட்டனே..." எனக்கு செம கோவம்.. இது வரைக்கும் நேர்ல பார்த்ததில்லை.ஒரு மணி நேரமா என்ன பார்த்திருக்கா. பக்கம் வந்து பேசவே இலை. கேட்டா சும்ம ஒரு சர்ப்ரைஸ் தாண்டா.. நான் அனுப்பின மெஸேஜ் பார்த்து நீ கண்டுபிடிபப்னு நெனச்சேன். நீ மொபைல் பாக்காம எந்த பொண்ண பாத்து ஜொள்ளு விட்டிருந்தியோ.. நான் என்ன பண்றதுனு கேக்கறா.:(. ஏண்டி எதுக்கு தான் சர்ப்ரைஸ் குடுக்கறதுனு ஒரு விவஸ்தை இல்லயா.? அப்புறம் என்ன அடுத்த ஒரு வாரம் சண்டை தான்.:).. அப்புறம் அவங்க அம்மா தான் சமாதானம் பண்ணி வச்சாங்க. எனக்கு கேக்கற மாதிரி அவள நல்லா திட்னாங்க. அதனால திரும்ப பேச ஆரம்பிச்சிட்டோம்.

இதுல என்ன கொடுமைனா நான் சேலம் வரைக்கும் எந்த சீட்ல உக்காந்துட்டு வந்தேனே அதுக்கு எதிர் சீட் தான் அவ ரிசர்வ் பண்ணி வச்சிருந்து இருக்கா.அவளும் அவங்க பெரியம்மாவும் வந்திருக்காங்க. அவங்க அம்மா வந்திருந்தா இந்த கொடுமை நடந்திருக்காது:(.அவ உக்காந்திருந்த இடத்திற்கு மேல தான் என் பை வைத்திருந்தேன். பை எடுக்கும் வரை பார்த்திருக்கா.பாவி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. சரி என்ன பன்றது உண்மையான அன்புக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு விஷயமா என்ன?

....அதாகப் பட்டது மக்களே இந்த ராட்சஷிக்கு வர ஞாயிற்றுக்கிழமை டும்..டும்..டும்...ஒரு அப்பாவி பைய்யனின் வாழ்க்கை வீணாகப் போகிறது... பாவம் அந்த பையன் இந்த பிசாசுகிட்ட மாட்டிகிட்டு என்ன கொடுமை எல்லாம் அனுபவிக்கப் போகிறானோ? :P...

....இவர்கள் வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற்று நலமாகவும் சந்தோஷமாகவும் மணவாழ்க்கை வாழ வாழ்த்துவோம்....

இந்த
பதிவை முடிக்கும் போது இந்த தோழியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி :
1.கல்வி
2.அறிவு
3.ஆயுள்
4.ஆற்றல்
5.இளமை
6.துணிவு
7.பெருமை
8.பொன்
9.பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்லொழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி
என்னும் 16 செல்வங்களையும்ம் பெற்று பெருவாழ்வு வாழ்க! :)

.....ரிப்பீட்டேய்....
..இந்த தலைப்பு வைத்த பின்பு தான் இந்த செய்தி வந்தது.. என்ன ஆச்சர்யம்?! :)

ஆஃப் தி ரெக்கார்ட் : இவளிடம் பேசும் போது நந்து அண்ணா ஒரு காலத்தில் இவளை விரும்பியதாகவும் ...நிலா குட்டிக்கு இவள் நினைவாகத் தான் அந்த பெயரை வைத்ததாக சொல்லிவிட்டேன். அவளிடம் பேசி முடித்தவுடன் நம்ம அண்ணாச்சிகிட்டயும் இத சொல்லிட்டேன். கொஞ்சம் உசுப்பேத்தி விட்டாளே ஒரு வழி ஆகிவிடும் ஆள் இவள். ஆகவே உடனே நந்து அண்ணாவுக்கு கால் பண்ணிட்டு இத கேட்டுட்டா. நம்ம ஆள் வெரும் வாய மென்னுட்டு இருக்கிறவர். அவள் கிடைத்தால் .. சொல்லவா வேணும்... நான் சொன்னது நிஜம் என்று சொனன்தோடு இல்லாமல் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டையலாக் வேற அள்ளி விட்டிருக்கிறார். யாரயாச்சும் உசுப்பேத்திவிட்டு ஒடம்ப ரணகளமாக்கிப் பாக்கறது எங்களுக்கு கை வந்த கலை.. :P...அவளுக்கு தலை கால் புரியவில்லை. அன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு என்னை சரியா தூங்க கூட விடல. நடு ராத்திரி கால் பண்ணி இதா பத்தி சொல்லி உணர்ச்சிவசப் பட்டு பேசுவாள். டேய்_____ நிஜமாவே நந்து என்ன லவ் பண்ணானா?( இவங்க 2 பேரும் மச்சான்னு சொல்லி தான் பேசிப்பங்க... இப்போ தலைவர் யார்க்கிட்டயும் அவ்வளவா பேசிக்கிறதில்லைனு நிலா பாப்பா சொல்லிச்சி:)..)...உன்கிட்ட வேற என்னடா சொன்னான் என்ற ரீதியில் செமையா டார்ச்சர் குடுக்க ஆரம்பிச்சிட்டா. இந்த இம்சை தாங்க முடியாம ... அட தண்டக் கர்மமே.. நீ என்ன பொறக்கும் போதே லூஸா இல்லை அப்டி வளத்துட்டாங்களா?.. சும்ம உன்ன வெறுப்பேத்த தான் 2 பேரும் ப்ளான் பண்ணி அப்டி சொன்னோம். அவர் பொண்ணுக்கு நல்ல தமிழ் பேர் வைக்கனும்னு நெனச்சி தான் அந்த பேர் வச்சார். உனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற"
உண்மை"யை சொல்லி.. அன்று உலகத்தில் இருந்த அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் திட்டு வாங்கியது தனிக் கதை. :P

24 Comments:

said...

அட.. ஒருத்தரும் இத படிக்கலையா? :(

said...

//
SanJai said...
அட.. ஒருத்தரும் இத படிக்கலையா? :(
//
இந்த கமெண்ட படிச்சிட்டேன்!

said...

//
ஒரு காலத்துல நம்ம நிலா அப்பா நந்து ஆஃபிஸ்க்கு வந்தார்னா உடனே சென்னை ஆன்லைன் அரட்டை பக்கத்தை திறந்து வச்சிப்பார். திரும்ப வீட்டுக்கு போற வரைக்கும்
//
இப்ப தமிழ்மணம்

ஸோ எப்பவும் ஆபீஸ்ல வேலை பாக்கிறதில்ல எங்களை மாதிரியே!!!

said...

//
வீட்டுக்கு போய் என்ன கர்மத்த எல்லாம் பார்த்தாரோ... அதெல்லாம் எனக்கு தெரியாது..
//
கேட்டு சொன்னா ச்சின்ன பசங்களுக்கு யூஸ் புல்லா இருக்கும்ல!!

said...

//
எங்க அராஜகம் தாங்காம அந்த சாட் ரூம் மூடி சில ஆண்டுகள் ஆகியும் எங்கள் நட்பு தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது
//
ஸோ தமிழ் மணத்த இழுத்து மூடி பூட்டு போட போறீங்க அதுதானே சொல்ல வற்றீங்க!!

said...

//
அதில் நந்து அண்ணா பெயர் ஹூண்டாய்:)...
//
சாதா ஹூண்டாயா இல்ல
ஹூண்டாய் சாண்ட்ரோவா??

said...

//
என் தோழி பெயர் நிலா.
//
பேர் ரொம்பா சின்னதா இருக்கு!!
இருக்கட்டும்

said...

//
நிலா @ ப்ரியா
இந்த பேரை படித்ததும் உங்களுக்கு ஏதெனும் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல
//
ஒரு -----ம் தோணலை!!
:((

said...

//
என்னிடம் " மிகுந்த மரியாதை"யுடன் பேசும் நண்பர்களில் இவளும் ஒருத்தி.
//
எப்பிடி பொறுக்கி நாயே பன்னி இப்பிடியா!?!?!

ச்சும்மா ஜோக்கு நோ ரென்சன்

said...

சரி ரொம்பா டயர்ட் ஆயிட்டேன் அப்பாலிக்கா வரேன்
வர்ட்டா!?!?

said...

//இப்ப தமிழ்மணம்

ஸோ எப்பவும் ஆபீஸ்ல வேலை பாக்கிறதில்ல எங்களை மாதிரியே!!!//
ஸாரி.. நம்மள மாதிரி! :P

----------
//கேட்டு சொன்னா ச்சின்ன பசங்களுக்கு யூஸ் புல்லா இருக்கும்ல!!//

கேட்டேனே!.. சின்ன பசங்களுக்கு இதெல்லாம் எதுக்குனு கேக்கறார் :(

----------
//ஸோ தமிழ் மணத்த இழுத்து மூடி பூட்டு போட போறீங்க அதுதானே சொல்ல வற்றீங்க!!//

இப்போ யார் தமிழ்மணம் பாக்கறாங்க.. எல்லாம் கூகுள் ரீடர் தான்.

-------------
//ஒரு -----ம் தோணலை!!
:((//

இப்டி எல்லாம் புரியாத மாதிரி நடிச்சா..அந்த பேருக்கும் ஒருத்தருக்கும் சம்பந்தம் இருக்குனு சொல்லிடுவேனாக்கும்.. :P
--------
//எப்பிடி பொறுக்கி நாயே பன்னி இப்பிடியா!?!?!

ச்சும்மா ஜோக்கு நோ ரென்சன்//

ச்சி..ச்சி.. இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப நாகரிகமான வார்த்தைகள். :P

--------
//சரி ரொம்பா டயர்ட் ஆயிட்டேன் அப்பாலிக்கா வரேன்
வர்ட்டா!?!//

இதுக்கேவா? :((

said...

//மங்களூர் சிவா said...
//
SanJai said...
அட.. ஒருத்தரும் இத படிக்கலையா? :(
//
இந்த கமெண்ட படிச்சிட்டேன்!
//

ரிப்பீட்டேய்.. :-)))

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

//மங்களூர் சிவா said...
//
SanJai said...
அட.. ஒருத்தரும் இத படிக்கலையா? :(
//
இந்த கமெண்ட படிச்சிட்டேன்!
//

ரிப்பீட்டேய்.. :-)))//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

said...

//.:: மை ஃபிரண்ட் ::.
//மங்களூர் சிவா said...
//
SanJai said...
அட.. ஒருத்தரும் இத படிக்கலையா? :(
//
இந்த கமெண்ட படிச்சிட்டேன்!
//

postaiyum padichean ... commentayum padichitean....

said...

//நமக்கு ரிசர்வ் பண்ணி எல்லாம் பயணம் பண்ணி பழக்கம் இல்லை( ஆனாலும் ரிசர்வ்ட் கோச்ல தான் ஏறுவோம்ல.)// ஆ்ஹா யாருப அங்க நமல மதிரி

said...

//டேய் நாயே ஸ்டெப்ஸ் பக்கத்துல நிக்காதே// நல்ல மறியாதை. :D

said...

convey my regards and best wishes to your friend on her marriage.

said...

//Kuttibalu said...
postaiyum padichean ... commentayum padichitean....//

என்ன இது கெட்ட்ப் பழக்கம்? போஸ்ட் படிக்கிறது? :P.. சரி இல்ல குட்டி.. :)
---------
//ஆ்ஹா யாருப அங்க நமல மதிரி//
ஹிஹி.. நானே தான்.. :P

---------
////டேய் நாயே ஸ்டெப்ஸ் பக்கத்துல நிக்காதே// நல்ல மறியாதை. :D//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

-----------
//convey my regards and best wishes to your friend on her marriage//

சொல்லிட்டா போச்சி... :)

said...

வாழ்த்துக்கள்...
1.கல்வி
2.அறிவு
3.ஆயுள்
4.ஆற்றல்
5.இளமை
6.துணிவு
7.பெருமை
8.பொன்
9.பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்லொழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி
என்னும் 16 செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்...

said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க!

49வது பதிவையே திரும்பிப்பாக்கவச்ச நல்ல பதிவா போட்டிருக்கலாமே?

உங்கள் தோழிக்கு மண வாழ்த்துக்கள்!

said...

ஏதோ வயத்தெரிச்சலில் வாழ்த்து சொல்றாப்போல இருக்கே :-))

சென்னை ஆன் லைனில் எல்லாம் லூசுங்களா சாட் பண்ணுமே, ஓ அவங்க தானா நீங்கலாம்! :-))

நானெல்லாம் யாஹூ சாட் கிங்க்!

said...

பிளாக்கர் படுத்துது

திரும்ப எழுதுறேன்

இது என்ன - மொக்கையா - கும்மியா - நகைச்சுவையா - நக்கலா - நையாண்டியா - மலரும் நினைவுகளா - குசும்பா - கலாய்ப்பா - குழி தோண்டுறதா - கடல போடுறதா - டீசண்ட் பதிவா - ஒரு புண்ணாக்கும் புரிலே -

ஆமா இப்ப என்னெ சொல்ல வரே நீ
நிலா என்ற பிரியாவை பாத்தெதே இல்லியா - ஏர் டு ஏர் தானா - மொக்க குறுஞ்செய்திலேயே வாழ்க்கை ஓடிடிச்சா - ம்ம்ம்

ஆமா - சசிக்குத் தெரியுமா நிலா பேர் வைச்ச ரகசியம் - குடும்பத்துலே குழப்பத்தெ வெளச்சாச்சா ? ம்ம்ம் - நிலா பாப்பா - அப்பா கிட்டெ சொல்லு - இந்த பொடிசுக சகவாசம் எல்லாம் வேணாமுன்னு

மனப்பூர்வமாக

இவர்கள் வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற்று நலமாகவும் சந்தோஷமாகவும் மணவாழ்க்கை வாழ வாழ்த்துவோம்.... வாழ்த்துகிறோம்

said...

// சுரேகா.. said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க!

49வது பதிவையே திரும்பிப்பாக்கவச்ச நல்ல பதிவா போட்டிருக்கலாமே?

உங்கள் தோழிக்கு மண வாழ்த்துக்கள்//

வாங்க சுரேகா! இத நல்ல பதிவுன்னா சொல்றிங்க. இது எதும் உசுப்பி விடும் வேலை இல்லையே? :) நன்றி.

தோழியை வாழ்த்தியதற்க்கும் நன்றி. :)

-----------
//வவ்வால் said...

ஏதோ வயத்தெரிச்சலில் வாழ்த்து சொல்றாப்போல இருக்கே :-))//

கொரங்கு புத்தி வவ்வால் உங்களுக்கு :). எதயும் நல்ல கோணத்துல பாக்க தெரியல. :)

// சென்னை ஆன் லைனில் எல்லாம் லூசுங்களா சாட் பண்ணுமே, ஓ அவங்க தானா நீங்கலாம்! :-))

நானெல்லாம் யாஹூ சாட் கிங்க்!//

அட இந்த பொண்ணுங்க பேர சாட் ரூம்ல பாத்ததும் ASL னு கேட்டு நாக்க தொங்க போட்டு ( அட அதாங்க இந்த சிம்பல் P ) அலைவிங்களே அந்த அலைஞ்சான் கோஷ்டியா நீங்க? :)))

said...

//cheena (சீனா) said...

பிளாக்கர் படுத்துது

திரும்ப எழுதுறேன்

இது என்ன - மொக்கையா - கும்மியா - நகைச்சுவையா - நக்கலா - நையாண்டியா - மலரும் நினைவுகளா - குசும்பா - கலாய்ப்பா - குழி தோண்டுறதா - கடல போடுறதா - டீசண்ட் பதிவா - ஒரு புண்ணாக்கும் புரிலே -
//

ஆஹா.. இந்த பதிவ படிச்சா இவ்ளோ சமாச்சாரம் ஞாபகம் வருதா? பலே பலே.. :)

// ஆமா இப்ப என்னெ சொல்ல வரே நீ
நிலா என்ற பிரியாவை பாத்தெதே இல்லியா - ஏர் டு ஏர் தானா - மொக்க குறுஞ்செய்திலேயே வாழ்க்கை ஓடிடிச்சா - ம்ம்ம்
//

ம்ம்ம்ம்ம்ம்ம்.. :(

// ஆமா - சசிக்குத் தெரியுமா நிலா பேர் வைச்ச ரகசியம் - குடும்பத்துலே குழப்பத்தெ வௌச்சாச்சா ? ம்ம்ம் - நிலா பாப்பா - அப்பா கிட்டெ சொல்லு
//

ஹிஹி.. இதெல்லாம் சுட சுட போட்டு குடுத்துட்டோம்ல.. :))

// - இந்த பொடிசுக சகவாசம் எல்லாம் வேணாமுன்னு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;((

// மனப்பூர்வமாக

இவர்கள் வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற்று நலமாகவும் சந்தோஷமாகவும் மணவாழ்க்கை வாழ வாழ்த்துவோம்.... வாழ்த்துகிறோம//

நாளைக்கு சொல்லிடறேன். நன்றி. :)

Tamiler This Week