இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday, 3 January 2008

ஜில்லுனு ஒரு TAG விளையாட்டு.

என் தோழி பொன்னரசி என்னை TAG( இதை எப்படி தமிழ்ல சொல்றது? :( ) செய்து இருக்கிறார். TAG என்பது ஒரு வகையான தொடர் விளையாட்டு. ஒருவர் தன் ப்ளாகில் ஒரு பதிவு எழுதி அதன் இறுதியில் வேறு ஒருவர அல்லது சிலருக்கு அழைப்பு விடுப்பார். அழைப்பு விடுக்கப் பட்டவர் அழைத்தவரின் பதிவுக்கு தொடர்பான அல்லது தொடர்பற்ற ஒரு (மொக்கை) பதிவை தன் வலைப்பூவில் எழுதி ,அதன் முடிவில் தான் விரும்புவருக்கு அழைப்பு விடுப்பார். இப்படி நீண்டுகொண்டே போகும். முதன் முறையாக இந்த ஆட்டத்தில் நானும் கலந்துக் கொள்கிறேன். என் தோழியின் அன்பு :( அழைப்பின் பேரில்.

எனக்கு எப்போதும் புத்தாண்டு சபதம் என்று எதும் இருந்தது இல்லை.நேற்று செய்ய நினைத்ததையே இன்று மறக்கும் கட்சிக்காரன் நான். இதில் எங்க போய் வருஷத்துல முதல் நாள் சபதம் எடுத்து அதை வருடம் முழுவதும் நினைவு வைத்து காப்பாற்றுவதாம். அதுவுமின்றி வாழ்க்கையை போகிற போக்கில் ரசிக்க நினைப்பவன் நான். இதுல என்ன சபதம் வேண்டி கெடக்காம்?.

ஆனால் என் இயல்பு வாழ்க்கையில் சில மாற்றங்கள் தெரிகிறது. இது திட்டமிட்டு வந்ததில்லை. போகிறா போக்கில் ஏற்பட்டது தான். இதற்கும் புது வருஷத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டிவி பார்க்கும் பழக்கத்தை வெகுவாக குறைத்து விட்டேன். எப்போதும் ரிமோட்டில் சேனல்களை மாற்றிக் கொண்டே இருப்பென். உருப்படியாக ஒரு நிகழ்ச்சியையும் இது வரை பார்த்ததில்லை. அப்புறம் எதற்கு வீணாக இதற்கு நேரத்தை செலவிட வேண்டும். அதான் குறைத்துக் கொண்டேன்.

சில மாதங்களுக்கு முன்பு வரை இணையத்திற்கும் தொலை பேசி அரைட்டைகளுக்கும் அதிக நேரம் செலவிட்டேன். இப்போது இவைகளை வெகுவாக குறைத்துக் கொண்டேன். அதற்காக ஏதோ ஆணி புடுங்குதல் அதிகம் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இபோது ஆணி புடுங்கும் விஷயத்தில் சற்று கூடுதல் சுமை தான் என்றாலும் நான் இவ்வளவு நாட்களாக வீணடித்த என் பொன்னான :) நேரத்தை புத்தகங்கள் படிக்க செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். வார இதழ்களில் கூட இந்தியாடுடே தவிர வேறு எதையும் படிக்கும் பழக்கம் இல்லாமல் இருந்த நான் இப்போது வியாபாரம், மார்க்கெட்டிங், பிறருடன் உரையாடும் திறன் , சிக்கலான சவாலான நேரங்களில் சமாளிக்கும் திறன் போன்ற புத்தகங்களுடன் சில வரலாறுப் புத்தகங்களையும் படிக்க அதிக நேரம் செலவிடுகிறேன். இப்போதெல்லம் செய்தி தாள்களையும் முழுதாக படிக்க ஆரம்பித்துள்ளேன். :)

சமீபத்தில் நான் மிகவும் சிரத்தை எடுத்து வாங்கிய புத்தகம் " A Yen for Yen - Cashing big on dreams". கஷ்டபட்டு தேடி ரெடிஃப்.காமில் பிடித்து வாங்கினேன். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வந்தது. இன்னும் படிககவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திர்கு முன்பு உள்ள பொன்மொழிகளில் சிலவற்றையும் அத்தியாயங்களுகு பின்பு இருக்கும் நீதியையும் படித்தேன். சும்மா நச்சினு இருக்கு. புத்தகத்தின் மீது ஆர்வமும் அதிகமாகி இருக்கிறது. இந்த புத்தகத்தை வாங்க காரணம் பொன்னரசி தான். இந்த புத்தகத்தை படிக்கும் போது என் நினைவு வந்ததாம். நான் இதை படித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாள்:).( குட்டிப் பெண் தான் என்பதால் அவள் என்று சொன்னாலும் கோபித்துக் கொள்ள மாட்டாள்.) இணையத்தில் இதன் விலை அநியாயத்துக்கு இருந்ததால் தன்னிடம் உள்ள புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன் என்றும் அதை பத்திரமாக திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றும் எனக்கு சுத்தமாக பிடிக்காத நிபந்தனையை விதித்தாள். ஆகவே உன் சகவாசமே வேண்டாம் என்று சொல்லி நானே இனணயத்தில் பிடித்து வாங்கி விட்டேன் :)).

எனக்குத் தெரிந்த புத்திசாலிகள் சிலர் (இந்த பொன்னரசியையும் சேர்த்து தான் ) சரியான புத்தகப் புழுக்கள். இவர்களின் புத்திசாலித் தனத்திறகு இது தான் காரணமாக இருக்கும் என்று (தப்பு) கணக்கு போட்டு நானும் படிக்க ஆரம்பித்துவிட்டேன். புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல். சூடு போட்டுக் கொண்டால் மட்டும் பூனை புலி ஆகிவிடாது என்று தெரியும். என்ன பன்றது.. எல்லாம் ஒரு வெளம்பரம்தேன்.. :)

மீண்டும் சொல்கிறென்.. புத்தாண்டிர்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த பழக்கத்தை சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்டுவிட்டேன். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திவிடுவேன். :)

மொக்கை முடிந்தது.
இதைத் தொடர நான் சில நல்ல உள்ளங்களை அழைக்கிறேன்.:)
Minerva
விஷ்ணு
இம்சை
மை ஃப்ரண்ட்
ரசிகன்
குசும்பன்

இவங்க எல்லாரும் எதாவது மொக்கை போட்டே. இது வேண்டுகோள் இல்லை.. கட்டளை.. :))

30 Comments:

MyFriend said...

அவ்வ்வ்வ்.. முடியல.. தேக்-ஆ? அது எப்படி செய்யுறது அங்கிள்? :-)

Anonymous said...

புரியல, என்னோட புத்தாண்டு சபதம் என்ன அப்படின்னு சொல்லனுமா...

Ponnarasi Kothandaraman said...

Apdi podunga...Arumayana pathivu! :)

நந்து f/o நிலா said...

//சமீபத்தில் நான் மிகவும் சிரத்தை எடுத்து வாங்கிய புத்தகம் " A Yen for Yen - Cashing big on dreams". //

நேர்ல என்ன பாக்கும் போது புத்தகத்த பாக்காம புத்தகத்தோட பேர மட்டும் என்கிட்ட கரெக்டா சொல்லிடு பாக்கலாம்..

..... முடியலடா :(

Sanjai Gandhi said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

அவ்வ்வ்வ்.. முடியல.. தேக்-ஆ? அது எப்படி செய்யுறது அங்கிள்? :-)//

சொல்ற பேச்ச கேக்கலைனா அடி இடி மாதிரி விழும்.. சொல்லிட்டேன்.. :))

Sanjai Gandhi said...

//இம்சை said...

புரியல, என்னோட புத்தாண்டு சபதம் என்ன அப்படின்னு சொல்லனுமா...//

இதுக்கு தான் பதிவ படிச்சிட்டு கமெண்ட் போடனும்னு சொல்றது.. பேசாம இனி பதிவ படிசிட்டு தான் பின்னூட்டம் போடுவேன்னு சபதம் எடுங்க.. :)

நான் என் சபதம் பத்தியா சொல்லி இருக்கேன்.. சும்மா மொக்கை தான். :)

Sanjai Gandhi said...

//Ponnarasi Kothandaraman said...

Apdi podunga...Arumayana pathivu! // வாம்மா மின்னல்.. உன்ன குட்டி பெண் அப்டினு சொன்னா அருமையான பதிவா? :(

இல்லைனா இஷ்டத்துக்கு திட்ட வேண்டியது. நீ சொன்னத கேட்டு எவ்ளோ சமத்தா நான் ஒரு பதிவு போட்டிருக்கேன். அதே மாதிரி இனிமேலாவது என் பேச்ச நீயும் கேளு. அத விட முக்கியம் சும்மா எப்போ பாத்தாலும் க்ஃப்ட்ஃப்க், அச்ட்ச்க்ஷ்ழ், க்ஷச்ரெர் இப்டி எல்லாம் திட்டறத நிறுத்திக்கோ. இல்லைனா உங்க அண்ணி வீட்டுக்கு நீ வரும் போது எங்க ஊரு பசங்கள வச்சி உங்க கார் மேல கல் வீச சொல்ல வேண்டி இருக்கும். :)))

மங்களூர் சிவா said...

//
நந்து f/o நிலா said...
//சமீபத்தில் நான் மிகவும் சிரத்தை எடுத்து வாங்கிய புத்தகம் " A Yen for Yen - Cashing big on dreams". //

நேர்ல என்ன பாக்கும் போது புத்தகத்த பாக்காம புத்தகத்தோட பேர மட்டும் என்கிட்ட கரெக்டா சொல்லிடு பாக்கலாம்..

..... முடியலடா :(

//
:-))))))))))))))))
:-)))))))))))))))
repeat
repeat
repeat
repeat
repeat

Sanjai Gandhi said...

//நந்து f/o நிலா said...

//சமீபத்தில் நான் மிகவும் சிரத்தை எடுத்து வாங்கிய புத்தகம் " A Yen for Yen - Cashing big on dreams". //

நேர்ல என்ன பாக்கும் போது புத்தகத்த பாக்காம புத்தகத்தோட பேர மட்டும் என்கிட்ட கரெக்டா சொல்லிடு பாக்கலாம்..

..... முடியலடா :(// இதோ.. ஒரு அறிவாளி உருவாகிறான் என்பதற்கான வயிததெறிச்சலுடன் கூடிய ஆதாரம். ;).

அண்ணாத்தே..இதுக்கே இப்டினா அடுத்த வாட்டி ஆஃபிஸ் வரும்போது என் ஷெல்ஃப் பாருங்க. சும்மா ஆடிப் போய்டுவீங்க. உங்கள எல்லாம் விட்டு வந்ததும் நாங்க திருந்திட்டோம்ல.. :)))

Sanjai Gandhi said...

//மங்களூர் சிவா said...

//
நந்து f/o நிலா said...
//சமீபத்தில் நான் மிகவும் சிரத்தை எடுத்து வாங்கிய புத்தகம் " A Yen for Yen - Cashing big on dreams". //

நேர்ல என்ன பாக்கும் போது புத்தகத்த பாக்காம புத்தகத்தோட பேர மட்டும் என்கிட்ட கரெக்டா சொல்லிடு பாக்கலாம்..

..... முடியலடா :(

//
:-))))))))))))))))
:-)))))))))))))))
repeat
repeat
repeat
repeat
repeat//
இதோ ஒரு அறிவாளி உருவாகிறான் என்பதற்கான நம்பத் தகுந்த ஆதாரம் நெ.2 ;))

மங்களூர் சிவா said...

//
SanJai said...
இதோ ஒரு அறிவாளி உருவாகிறான் என்பதற்கான நம்பத் தகுந்த ஆதாரம் நெ.2 ;))
//
ஹலோ நான் இந்த பேஜ்க்கு வந்தா நீங்க அறிவாளியா ஆகுறதா அர்த்தமா என்ன கொடுமை பேபிபவன் இது!!

Sanjai Gandhi said...

//நந்து f/o நிலா said...

//சமீபத்தில் நான் மிகவும் சிரத்தை எடுத்து வாங்கிய புத்தகம் " A Yen for Yen - Cashing big on dreams". //

நேர்ல என்ன பாக்கும் போது புத்தகத்த பாக்காம புத்தகத்தோட பேர மட்டும் என்கிட்ட கரெக்டா சொல்லிடு பாக்கலாம்..

..... முடியலடா :(//

யாரங்கே....ஒரு கோவா டிக்கெட் கேன்ன்ன்ன்ன்ன்ன்ன்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((

Sanjai Gandhi said...

//மங்களூர் சிவா said...

//
SanJai said...
இதோ ஒரு அறிவாளி உருவாகிறான் என்பதற்கான நம்பத் தகுந்த ஆதாரம் நெ.2 ;))
//
ஹலோ நான் இந்த பேஜ்க்கு வந்தா நீங்க அறிவாளியா ஆகுறதா அர்த்தமா என்ன கொடுமை பேபிபவன் இது!!
//
இந்த பேஜ்க்கு வந்தா இல்ல மாமு.. சிலருடன் :) சேர்ந்து பொறாமையில் பொங்கினால் :)))

ரசிகன் said...

//சஞ்ஜய்யின் அன்புக்கட்டளைக்கு இணக்க.. இந்த இன்ஸ்டண்ட் மொக்கை...//

http://rasigan111.blogspot.com/2008/01/tag.html

ரசிகன் said...

அவ்வ்வ்வ்..... நீங்க டாக்கு குடுத்தவிங்களுக்கும் மறுபடியும் குடுத்திருக்கேன்...

பரவாயில்லை ஸ்டாங்கா 2 அழைப்பு அனுப்பனதா இருக்கட்டுமே :P

Anonymous said...

Tag-க்கு நன்றி, 'பா.
Will reply asap, ya.

இதமான post, ரசித்தேன். :)
Happy reading!

Do take care & Wishes,
minerva*

Sanjai Gandhi said...

// minervanmuse said...

Tag-க்கு நன்றி, 'பா.
Will reply asap, ya.//

Hope u kno dat i m waitin 4 it :)

//இதமான post, ரசித்தேன். :)
Happy reading!//

Thank u so much Mins :) thanks for ur complements using tamil words.. :P ...keep visiting my space frequently..

// Do take care & Wishes,
minerva*//

thank u ons again

Sanjai Gandhi said...

//ரசிகன் said...

அவ்வ்வ்வ்..... நீங்க டாக்கு குடுத்தவிங்களுக்கும் மறுபடியும் குடுத்திருக்கேன்...

பரவாயில்லை ஸ்டாங்கா 2 அழைப்பு அனுப்பனதா இருக்கட்டுமே :P//
இதெல்லாம் டூ மச்... இதுக்கு தான் நான் சிவா மாம்ஸ் நந்து அண்ணா இவங்கள எல்லாம் TAG பண்ணாம விட்டேன். Already they have been Tagged :). இதுல சிவா மாம்ஸ் தான் பாவம். தூங்க விடாம எல்லாரும் TAG பன்றாய்ங்க :P...

மங்களூர் சிவா said...

நாங்களும்போடுவோம்ல TAG மொக்கை

Sanjai Gandhi said...

//மங்களூர் சிவா said...

நாங்களும்போடுவோம்ல TAG மொக்கை //

நாங்களும் போட்டுட்டோம்ல.. (மொக்கை) COMMENT :)

cheena (சீனா) said...

சஞ்சய் தான் இதுக்கெல்லாம் காரணமா - ரசிகன் வேற என்ன TAG பண்ணிட்டார் - யோசீக்கிறேன் - எழுதணுமே

Sanjai Gandhi said...

//cheena (சீனா) said...

சஞ்சய் தான் இதுக்கெல்லாம் காரணமா - ரசிகன் வேற என்ன TAG பண்ணிட்டார் - யோசீக்கிறேன் - எழுதணும//

நானே உங்கள TAG பண்ண நெனச்சேன்.. ஆனா உங்களுக்கு மொக்கை போடத் தெரியாதுனு நெனச்சி விட்டுட்டேன். :)

Anonymous said...

Okay, i've replied to your tag, 'pa. :)
Anyway, thought i'd just share an amusing quote for the humour-(and of late, book-) lover too:

Outside of a dog, a book is a man's best friend.
Inside of a dog it's too dark to read.

~ Groucho Marx


Do take care & Happy reading,
minerva*

பாச மலர் / Paasa Malar said...

ஓ...நீங்கள் ஆரம்பித்து, ரசிகன் தொடர்ந்து, சீனா சார் மூலம் நானும் இந்த tag இல்..பிடியுங்கள் ஒரு நன்றி..ஆமாம், ஏன் திடீர்னு பெயர் மாற்றம்?

Sanjai Gandhi said...

@ Minerva..

Thank u so much Mins..
hmm.. i m just on the way to ur space..:P and thanks 4 ur wit too :))
Enga pudichinga? romba nalla iruku..

Sanjai Gandhi said...

//பாச மலர் said...

ஓ...நீங்கள் ஆரம்பித்து, ரசிகன் தொடர்ந்து, சீனா சார் மூலம் நானும் இந்த tag இல்..பிடியுங்கள் ஒரு நன்றி..ஆமாம், ஏன் திடீர்னு பெயர் மாற்றம்?//

ஹிஹி.. வாங்க பாசமலர்.. உங்கள் நன்றிக்கு பிடியுங்கள் ஒரு Welcome. இந்த உலகத்துல நான் ரசிக்கிற சில விஷயங்கள்ல என் பேருக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. அதான் முகமூடியை கழட்டிட்டு எனக்கு பிடிச்ச என் பேர்லயே எழுத முடிவு பண்ணிட்டேன். :)

பாச மலர் / Paasa Malar said...

இந்த உலகத்துல நான் ரசிக்கிற சில விஷயங்கள்ல என் பேருக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. அதான் முகமூடியை கழட்டிட்டு எனக்கு பிடிச்ச என் பேர்லயே எழுத முடிவு பண்ணிட்டேன். :)

very good..

Ponnarasi Kothandaraman said...

Aaaaaaah.. Na epo thitunen? and athu enna athu english'a illa tamila??

Sanjai Gandhi said...

//பாச மலர் said...

இந்த உலகத்துல நான் ரசிக்கிற சில விஷயங்கள்ல என் பேருக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. அதான் முகமூடியை கழட்டிட்டு எனக்கு பிடிச்ச என் பேர்லயே எழுத முடிவு பண்ணிட்டேன். :)

very good..//

எனக்கு வெரி குட் சொன்னதுக்கு நன்றி. ஆனா நான் எப்போ உங்களுக்கு வெரி குட் சொல்றது? :P

Sanjai Gandhi said...

//Blogger Ponnarasi Kothandaraman said...

Aaaaaaah.. Na epo thitunen? and athu enna athu english'a illa tamila??//

பாவி.. நீ என்ன திட்னதே இல்லையா? பொய் சொல்ல போறதில்லைனு மட்டும் இன்னும் சபதம் எடுக்கவே இலையா நீ? :P

Tamiler This Week