இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday 10 January, 2008

சாம்பலான மலர்கள். Serious TAG

இந்த வருஷம் தொடர் விளையாட்டுக்கு பதிவு எழுதியே ப்ளாக் நிரம்பிடும் போல. போன வாரம் தான் பொன்னரசி புண்ணியத்துல ஒரு மொக்கை பதிவு போட்டேன். அதுக்குள்ள நம்ம இம்சை சீரியஸ் பதிவு போட சொல்லி இம்சை குடுக்கிறார்.

//சீரியஸ் பதிவு போட நான் அழைக்கும்(Tagged) மொக்கை நண்பர்கள் குசும்பன், மங்களுர் சிவா, ரசிகன், பொடியன் (அ) சஞ்சய், & மைபிரண்டு.//
...... ஏனுங்ணா.. சீரியஸ்க்கும் எங்களுக்கும் என்னங்ணா சம்பந்தம்? :P.. அதுவும் பாருங்க.. மொக்கை போடறவங்கள மட்டும் மாட்டி விட்டிருக்கார். ம்ம்ம்ம்.. நல்லா இருங்க. :)

சரி நம்ம மொக்கையை தொடர்ந்தவராச்சே. ஏதோ நம்மளால முடிஞ்சத நாமளும் செய்வோம்.



என்னால் மறக்க முடியாத சம்பவமும் அதனை தொடர்ந்து மாறிய மனமும். தூக்கு தண்டனை என்பது சட்டத்தின் உதவியுடன் நடத்தப் படும் கொலை என்ற எண்ணம் கொண்டிருந்த நான், சில மனித மிருகங்கள் தூக்கிலிட்டுக் கொல்லப் பட வேண்டியவர்களே என்று நினைக்கத் தொடங்கிய தருணம் அது.
தருமபுரியில் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் கல்லூரியின் அருகில் தான் அந்த துயரம் நிகழ்ந்தது. கோவை விவசாயக் கல்லூரி மாணவிகள் சில காட்டு மிராண்டிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப் பட்டார்கள். செய்தி அறிந்து நாங்கள் வந்து சேருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. அந்த காட்டு மிராண்டிகள் எதுவும் எங்கள் கையில் அகப் படாமல் தப்பித்துவிட்டது. பேருந்தின் பின் படிகளில் ஒருவர் மீது ஒருவராக அந்த 3 தோழிகளும் கருகிபோய் இருந்தார்கள். என் வாழ்க்கையில் நான் கண்ணீர் விட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய சில தருணங்களில் இதுவும் ஒன்று.

அருகில் தீக்காயங்களுடன் சில மாணவிகள் அழுதுக் கொண்டிருந்தார்கள். அந்த மிருகங்கள் கையில் கிடைத்தால் பிய்த்து எரிந்துவிடும் கோபத்தில் சில மாணவர்கள். அதில் என் நெருங்கிய நண்பனும் ஒருவன். அவன் வகுப்புத் தோழிகள் தான் அந்த மாணவிகள். என்னுடன் பள்ளியில் படித்தவன். அந்த மாணவிகள் 3 பேரும் நன்றாகப் படிப்பவர்க்ளாம். அதில் ஒரு மாணவிக்கு IAS Officer ஆக வேண்டும் என்பது கனவாம். அதற்காக தன்னை தயார் செய்துக் கொண்டிருந்தாராம். அந்த கனவும் தீயோடு கருகி போனது எவ்வளவு பெரிய கொடுமை?.
அந்த சம்பவத்திற்கு காரணமான கொடியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டவாறே( சாலை மறியல் செய்வதை இப்போது வெறுக்கிறேன்) நானும் சில நண்பர்களும் மாவட்ட ஆட்சித் தலைவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சில மாணவ நண்பர்கள் ஆத்திரப் பட்டு ஆட்சியரின் கார் கண்ணாடியை உடைத்து விட்டார்கள். அதை தொடர்ந்து எங்கள் மீது தடியடி நடத்தப் பட்டது. பிறகு அது கலவரமாக மாறி கண்ணீர் புகையுடன் துப்பாக்கி சூடு நடத்தப் பட்டது. என் தோல் பட்டையிலும் ரப்பர் குண்டு பாய்ந்தது. இரவு வரை இந்த கலவரம் நீண்டது.

பிறகு அரசு பொது மருத்துவமனையின் பின் புற வழியாக சென்று தீக்காயம் அடைந்த மாணவிகள் சிகிச்சை பெற்ற வார்டுக்கு சென்று என் நண்பனுக்கும் அவன் தோழர்கள் மற்றும் தோழிகளுக்கும் தேவையான உதவிகளை செய்து அவர்கள் பையூர் விவசாய ஆராய்ச்சி நிலையம் செல்லும் வரை இருந்து இரவு 1 மணிக்கு மேல் அதே பின் புற வழியாகவே வெளியேறி அருகில் இருந்த ரயில் தண்டவாளத்திலேயே நடந்து சென்று ஹாஸ்டல் போய் சேர்ந்தேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சில சம்பவங்களில் ஒன்று.

இந்த சம்பவத்திற்கு பிறகு தான் உயிர்களின் மதிப்பு தெரியாமல் கொல்லும் இந்த மிரு்கங்களை சட்டத்தின் உதவியுடன் கொல்வதில் தவறில்லை என்ற எண்ணம் வந்தது.

20 Comments:

said...

இம்சை என்னைய ஏற்கனவே TAG பண்ணியிருக்கார். நான் இன்னும் பதிவு போடலை.

said...

நல்ல வேலை எங்க நீயும் என்னைய TAG பண்ணிட்டியோன்னு பயந்து போயிட்டேன்.

said...

என்னாது பதிவ பத்தி கமெண்ட்டா !?!?!?!!?
நான் அப்பாலிக்கா வாரேன் வர்ட்டா

said...

//மங்களூர் சிவா said...

நல்ல வேலை எங்க நீயும் என்னைய TAG பண்ணிட்டியோன்னு பயந்து போயிட்டேன்.//

ஓவ்வொரு பதிவுக்கும் தொடர்பு குடுத்துட்டே இருந்தா அப்புறம் யாரும் உருபடியா வேலை பாக்க முடியாது. (ம்ம்.. இப்போ மட்டும் என்னவாம்? என்னத் தவிர வெற யாரும் உருப்படியா வேலை பாக்கறதில்லை :P )

said...

//மங்களூர் சிவா said...

என்னாது பதிவ பத்தி கமெண்ட்டா !?!?!?!!?
நான் அப்பாலிக்கா வாரேன் வர்ட்ட//
அதான பார்த்தேன். எங்க பதிவ படிச்சிட்டு கமெண்ட் போட்டிங்களோனு பயந்துட்டேன். :)

.... இந்த கமெண்ட் வெற ஒரு பதிவுல பாத்த மாதிரி இருக்கே:).. இது என்ன பின்னூட்டம் டெம்ப்ளட்டா? :P...

said...

The best punishment would be to kill them like in Middle east.

Thanks sanjai

Anonymous said...

இத்தனைக் கொடூரமும் மனிதத்தில் இருப்பது.. எவ்வளவு வேதனை. இப்படியும் மனிதப் பிறவி உண்டு என்றும், இன்னும் எவ்வளவோ மாறவேண்டும் என்கிற கற்றல் மட்டுமே மிஞ்சுகின்றது..

Guess while we get to think/work for a more enlightened society - one that's more sensitive towards everyone else - enough not to harm others in all of one's selfish interests.. one can only pray that the gals' souls rest in peace.

As always, such memories always bring their learning (as painful as it may be) and remind us that there's still loads we can do to plant a bit more Hope in 'tis world, hmm.
Thanks 'pa, for sharing that memory with all.
Do take care too,
minerva*

said...

உங்க கருத்துக்கும் அந்த மாணவிகளின் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்தனை செய்ததற்கும் நன்றி மின்ஸ்.

said...

இதே கருத்தை வைத்து கோவி சாரிடம் விவாதம் செய்தேன், மற்ற உயிரின் மதிப்பு தெரியாத, அல்லது மற்றவர்களை மனிதனாக மதிக்க தெரியாத மனித உருவில் அலையும் மிருகங்கள் வாழ்வதில் ஒரு பயனும் இல்லை!!!

said...

சரி தான் குசும்பன்.

said...

அப்போ பத்திரிக்கைகளில் படிக்கும்போதே மனம் கனத்துடுச்சு எனக்கு.. நீங்க உண்மையாவே அந்த கோரச் சம்பவம் நடந்த இடத்துல இருந்திருக்கிங்க.. எப்படி ஃபீல் பண்ணுவிங்கன்னு புரியுது...ஒருபாவமும் அறியாத அந்த சகோதரிகளுக்கு அஞ்சலிகள்..
மிருகத்தனமா நடந்துக்கிட்ட அந்த இதயமில்லாதவங்களுக்கு குடும்பமே இல்லையோ?..

said...

இப்படி ஆளாளுக்கு டேக் பண்ணா நான் என்னங்க பண்றது? பாட்டு மட்டும் தான் போட நேரம் கிடைக்குது. ஏதோ மொக்கைன்னா கூட கொஞ்சம் ட்ரை பண்ணலாம்.. சீரியஸ்ன்னா சான்ஸே இல்ல.. :-P

said...

கேள்விப்படும்போதே கொடுமையாக இருக்கிறதே..அந்தக் காட்சியை நேரில் கண்டதற்கு உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?மறக்க முடியாதுதான்..

said...

பொடியரே,

நேரிடையாக இதனைக் கண்ட அனைவருக்கும் மனம் கனத்துத் தான் போகும். என் வருத்தம் எல்லாம், தவறு செய்தால் தண்டனையிலிருந்து தப்பித்துவிடலாம், என்று எண்ணம் வருமளவு நம் சட்ட நிலைநிறுத்துதல் இருக்கிறது என்பதே. பேருந்தை எரியூட்டுவது, அரசியல் யூக்திகளில் ஒன்று. இந்த நிகழ்வும், பெண்களை எரிக்க வேண்டும் என்று நடத்தப்பட்டியிருக்குமா என்றால், அது சந்தேகத்துக்குரியதாகவே படுகிறது.

எனவே, சமூகக்குற்றங்களுக்கு தண்டனை உண்டு, அதுவும், உடனடியாக கொடுக்கப்பட வேண்டும். ராணுவத்தில், தவறு ஏதும் நடந்தால், கமாண்டிங்க அதிகாரி தான் பொறுப்பேற்பார். இதே மாதிரி, எந்த அரசியல் போராட்டமும், பொறுப்பேற்கும அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும். தொண்டர்களை வழிநடத்துவதில் ஏதேனும் பிரச்சனை என்றால். அவர் தார்மீகப் பொறுப்பேறக வேண்டும்.

இந்த நிகழ்ச்சியயை வைத்து ஒரு சட்டத்திருத்தமும் வரவில்லை என்பது கொடுமையிலும், கொடுமை. தவறு செய்தாலும், படிப்பினை கற்க மாட்டேன் என்று இருப்பது...

என்னமோப் போங்க ரொம்ப சீரியஸா பேசிட்டேன்...

said...

//மிருகத்தனமா நடந்துக்கிட்ட அந்த இதயமில்லாதவங்களுக்கு குடும்பமே இல்லையோ?..//

யாரையோ திருப்தி படுத்த தங்களையே மறந்து தானே இப்படி செய்கிறார்கள். பிறகு எப்படி குடும்பத்தை நினைப்பார்கள். மேலும் மனிதர்களாக இருந்தால் தானே குடும்பத்தை நினைக்க.

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

இப்படி ஆளாளுக்கு டேக் பண்ணா நான் என்னங்க பண்றது? பாட்டு மட்டும் தான் போட நேரம் கிடைக்குது. ஏதோ மொக்கைன்னா கூட கொஞ்சம் ட்ரை பண்ணலாம்.. சீரியஸ்ன்னா சான்ஸே இல்ல.. :-P//

ஓய்.. நான் எங்க உங்கள இதுல TAG பண்ணி இருக்கேன்?:(... மொக்கைல பண்ணதோட சரி. அதுக்கே இன்னும் பதில காணோம். :)

said...

//பாச மலர் said...

கேள்விப்படும்போதே கொடுமையாக இருக்கிறதே..அந்தக் காட்சியை நேரில் கண்டதற்கு உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?மறக்க முடியாதுதான்..//

சாகும் வரை மறக்கமுடியாது.

said...

//TBCD : இந்த நிகழ்வும், பெண்களை எரிக்க வேண்டும் என்று நடத்தப்பட்டியிருக்குமா என்றால், அது சந்தேகத்துக்குரியதாகவே படுகிறத//

நிச்சயம் இது அந்த பெண்களை எரிக்கவேண்டும் என்று நடந்தது தான். தீ வைத்தவுடன் அவர்கள் வெளியேற முயற்ச்சி செய்திருக்கிறார்கள். அப்போது அந்த மிருகங்கள் கற்களை சரமாரியாக பேருந்தின் ஜன்னல்களை நோக்கி வீசிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அதற்கு பயந்து ஜன்னல்களை இவர்கள் மூடிக் கொண்டார்கள். தப்பிக்க வழியே இல்லாமல் போய்விட்டது. இவர்களுக்கு முன்னாடி சென்ற மாணவர்களின் பேருந்தில் இருந்து அவர்கள் வந்து கண்ணாடியை உடைத்து காப்பாற்றுவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.எல்லாரையும் கொளுத்துங்கடா என்று கத்திக் கொண்டே தான் இதை செய்திருக்கிறார்கள்.

விரலை வெட்டிக் கொண்ட காவல் அதிகாரிக்கு நன்கொடை அளித்து ஊக்கப் படுத்தும் போது தங்களுக்கு இதை விட பெரிதாக ஏதேனும் கிடைக்கும் என்று இந்த மிருகங்கள் இதை செய்திருக்கும்.

said...

Ivlo serious post unga kita irunthu ethir paakala! :) nalla ezhuthi irukeenga.. Applause for Imsai 2 make u write this.. :) Write more thoughtful posts like this... Good and descriptive writing..
Darmapuri incident rombavey kastamanathu than.. Athula orutharoda sister had come home and was really painful 2 hear about the incident. She is getting married in some time soon and she was telling abt her sisters dream and the vaccum in their home! :(
Coincidentally neengalum itha pathi ithey samayam post podreenga! :)

said...

@ பொன்ஸ்: ஸ்மைலிஸ் போட்டு சொல்றத பார்த்தா நீ பாராட்டற மாதிரி தெரியலையெ. எதோ உள்குத்து இருக்கிற மாதிரி இல்ல தெரியுது.:( நல்லா இரு. :(((

அவங்க கல்யாணம் நல்லபடியா நடக்க நான் விஷ் பண்ணேன்னு சொல்லுடா.

Tamiler This Week