இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday 18 January, 2008

உங்கள அறுக்க ஒரு புது ப்ளாக்

நம்ம சிவா மாமா வலைச்சரத்துல எதாச்சும் உருப்படியா (?!) எழுதனுமே அப்டினு நெனச்சி ஹிண்டு ஆஃபிஸ்க்கு லீவ் போட்டுட்டு கண்ணுல வெளக்கெண்ணை (வேற எண்ணெயே கெடைக்காதா?:( ) விட்டுக்கிட்டு தமிழ் பதிவுகள் எல்லாத்தயும் வாழ்க்கைல முதல் முறையா( இவ்ளோ நாளா எதயும் படிக்காம் தான பின்னூட்டிட்டு இருந்தார். :) படிச்சதுல கண்ணு கொ்ஞ்சம் டிம் ஆய்ட்டதால பவர் க்ளாஸ் வாங்க கண் கண்ணாடி கடைக்கு போனார்.அந்த கடையில் முதலில் வாங்க வரும் கஸ்டமருக்கு நஷ்டம் ஆனாலும் பரவா இல்லை என்று கண்ணாடியை விற்று விடுவார்கள். எந்த காரணத்தைக் கொண்டும் முதல் கஸ்டமரை வெருங்கைய்யொடு அனுப்ப மாட்டார்கள். சிவா மாமாவை பார்த்ததும் கடைக்காரருக்கு ரொம்ப சந்தோஷம். காலைல மொத போணி. பெரிய ஆள் சிக்கிட்டார். இன்னைக்கு லம்பா ஒரு அமோண்ட்டு பாத்துடால்ம்டானு நெனச்சிக்கிட்டார்.....( பின்ன Leon Wilson எழுதின The Business of Share Trading புத்தகத்தை கைல வச்சிருந்தா வேற என்ன தான் நெனைக்க முடியும்? :P ).....

அங்க கடைக்காரர் அவருக்கு ஒரு கண்ணாடி எடுத்து காட்டினார்.
அப்போ கடைக்காரருக்கும் சிவா மாம்ஸுக்கும் நடந்த உரையாடல் ,

சிவா மாம்ஸ் : அந்த கண்ணாடி வெல என்ன?
கடைக்காரர் : 2500 ரூபாய்ங்க சார்.
சிமா: அவ்ளொ வெலை எல்லாம் கட்டுபடி ஆகதுங்க. வேற காட்டுங்க.
ககா : இது பாருங்க சார் ( வேற ஒன்னு காட்டறார்)
சிமா : இது என்ன வெல?
ககா: 2000 ரூபாய் சார்.
சிமா : அவ்ளோ வெலை எல்லாம் குடுத்து என்னால வாங்க முடியாதுங்க. அத விட கொஞ்சம் கம்மி ரேட்ல ஒன்னு காட்டுங்க.
ககா: இத பாருங்க சார்.
சிமா: இது வெலை என்ன?
ககா: 1500 ரூபாய் சார்.
சிமா : இல்லிங்க இது கொஞ்சம் " காஸ்ட்லி". இன்னும் கம்மி ரேட்ல காட்டுங்க.
ககா: இது பாரு( மரியாதை:P)
சிமா: ரேட்?
ககா: 500 ரூபாய்
சிமா: இப்போ என்கிட்ட இவ்ளோ பணம் இல்லைங்க. இத விட கம்மி ரேட்.
ககா: ( கடுப்பாகி ) இது பாருப்பா 150 ரூபாய் தான்.
சிமா: இது கூட கொஞ்சம் ஜாஸ்தி தானுங்க.
ககா: இது பாத்து தொலை 50 ரூபாய் தான்.
சிமா: அய்யோ இதுவும் காஸ்ட்லி தானுங்க. வேற காட்டுங்க.
ககா: (செம கடுப்பாகிறார்) யோவ் இந்தாய்யா இத வச்சிக்கோ. காசும் வேணாம் ஒன்னும் வேணாம்.எடத்த காலி பண்ணு. காலங்காத்தால $%^%&^$#@.
... சிவா மாம்ஸ் அத வாங்காம அப்டியே நிக்கறார்.....
ககா: இன்னும் என்னய்யா யோசிக்கிற. அதான் ஃப்ரீயா தறேன்னு சொல்லிட்டேனே.


சிமா: எல்லாம் சரி தான். இத வாங்கிட்டு போறதுல ஒன்னும் ப்ரச்சனை இல்ல. என் அண்ணனுக்கும் ஒன்னு வேணும் . அவருக்கும் ஒன்னு குடுத்திங்கனா சந்தோஷமா வாங்கிட்டு போய்டுவேன்.
(கடைக்காரர் என்ன ஆனார் என்பதை சொல்ல வேண்டியதில்லை என் நினைக்கிறேன்.:P)

........ The End........

அதாகப் பட்டது எனதருமை வலை வாழ் மக்களே! எதுனா ஃப்ரீயா கெடைச்சதுனா எனக்கும் என் தம்பிக்கும் மட்டுமில்ல எங்க ஊட்ல கீர எல்லார்க்கும் ஒன்னு குடுங்கனு கேட்டு வாங்கறது நம்ம கல்ச்சர் :P. அப்டி இருக்கும் போது கூகுள் ஃப்ரீயா ப்ளாக் எழுத எடம் குடுக்கும் போது ஒரு ப்ளாகோட நிறுதிக்க நம்ம கல்ச்சர் எடம் குடுக்கல. அதானால் இதை வழக்கமான மொக்கைக்கு வச்சிகிட்டு எனகு ரொம்ப பிடிச்ச என்ன வாழவைக்கும் மார்க்கெட்டிங் மற்றும் அதுக்கு தொடர்புடைய சமாச்சாரங்கள பத்தி எழுத கத்துக்குட்டி என்று ஒரு வலைப்பூவையும் ஆரம்பிச்சிருக்கேன். உங்கள் மேலான ஆதரவை நல்குகிறேன்.:))
அங்கும் கும்மி அடிக்கலாம். ஆனா அது யாருக்கவது உபயோகமாவோ சிந்திக்கும் விதமாவோ இருக்கோனும். :) கும்மில என்னத்தடா சிந்திக்கற மாதிரி கும்மி என்று கேக்கறிங்களா?.. எல்லாராலும் கும்மி அடிக்க முடியாது.கும்மி அடிக்க கற்பனை வேணும். அப்டியே நம்ம ஐன்ஸ்டீன் என்ன சொல்றார்னு பாருங்க..
"Imagination is more important than knowledge. For knowledge is limited, whereas imagination embraces the entire world, stimulating progress, giving birth to evolution." ஸோ .. நல்லா அறிவுபூர்வமா கும்முங்கோ. :)

21 Comments:

said...

//Imagination is more important than knowledge. For knowledge is limited, whereas imagination embraces the entire world, stimulating progress, giving birth to evolution//

எப்டிடா ஸ்பெல்லிங் மிஸ்ட்டேக் இல்லாம கரெக்ட்டா பாத்து டைப் பண்ற?

பெரிய ஆளாயிட்டடா.

said...

ஹேய் பொடியன் சஞ்செய்

நாங்கெல்லாம் தேவைன்னா எவ்ளோன்னாலும் காசு கொடுத்துத்தான் வாங்குவோம். நானும் 2 பதிவு அப்புறம் ஒரு குழுப் பதிவு வேற வைச்சிருக்கேன். ஆமா

நல்வாழ்த்துகள்

said...

//எனகு ரொம்ப பிடிச்ச என்ன வாழவைக்கும் மார்க்கெட்டிங் மற்றும் அதுக்கு தொடர்புடைய சமாச்சாரங்கள பத்தி//

எனக்குப் புரியல. பொய்யை தவிற வேற ஒண்ணும் பேசக்கூடாது. இந்த ஒரே ஒரு வரிதானே நம்மை வாழவைக்கும் மார்கெட்டிங் உத்தி.

இன்னும் ப்ளாக் போட்டு விளக்க வேற என்ன இருக்கு இதுக்கு மேல?

என்னமோ போ. இங்க இருந்த வரைக்கும் நல்லாத்தான் இருந்த. என்ன ஆச்சோ?

said...

//நந்து f/o நிலா said...

எப்டிடா ஸ்பெல்லிங் மிஸ்ட்டேக் இல்லாம கரெக்ட்டா பாத்து டைப் பண்ற?

பெரிய ஆளாயிட்டடா.//

ஐ.. பரவால்லையே.. இது இங்லிஷ்னு கண்டுபிடிச்சிடிங்க போல.. வர வர விவரமா ஆய்ட்டிங்க போங்க.. ;P

said...

//cheena (சீனா) said...

ஹேய் பொடியன் சஞ்செய்

நாங்கெல்லாம் தேவைன்னா எவ்ளோன்னாலும் காசு கொடுத்துத்தான் வாங்குவோம். நானும் 2 பதிவு அப்புறம் ஒரு குழுப் பதிவு வேற வைச்சிருக்கேன். ஆமா

நல்வாழ்த்துகள//

தெரியுமே... வாழ்த்துக்கு நன்றி.
.. நந்து சார்.. பாத்து கத்துக்கோங்க.. ஒரு அறிவாளிய கிண்டல் பண்றதுல அவ்ளோ சந்தோஷம். :))...

said...

//நந்து f/o நிலா said...

எனக்குப் புரியல. பொய்யை தவிற வேற ஒண்ணும் பேசக்கூடாது. இந்த ஒரே ஒரு வரிதானே நம்மை வாழவைக்கும் மார்கெட்டிங் உத்தி.//

எச்சுச்மீ..12 மணி வரைக்கும் தூங்கற உங்களுக்கும் மார்க்கெட்டிங்குக்கும் இன்னா சாமீ சம்பந்தம்.. டூ மச்சா அளந்து விடப்படாது. :P


//என்னமோ போ. இங்க இருந்த வரைக்கும் நல்லாத்தான் இருந்த. என்ன ஆச்சோ?//

ஹிஹி..நாங்களும் நல்லா இருக்க மாட்டோம்.. மத்தவங்களையும் நல்லா இருக்க விட மாட்டோம். :P

said...

ஐயே சஞ்சய் ....இதுதான் சந்தடி சாக்குல சிந்து பாடுறதா?என்னவோ சிவா மாமாவைக் கலாய்க்கிறதுல ஆரம்பித்து எங்கேயோ கும்மில வந்து முடிச்சுட்டியே???
அருணா

said...

//உங்கள அறுக்க ஒரு புது ப்ளாக்//

ஆண்டவா... காப்பாத்து!!

said...

நெசமாவே காப்பாத்து!!

said...

//aruna said...

ஐயே சஞ்சய் ....இதுதான் சந்தடி சாக்குல சிந்து பாடுறதா?என்னவோ சிவா மாமாவைக் கலாய்க்கிறதுல ஆரம்பித்து எங்கேயோ கும்மில வந்து முடிச்சுட்டியே???
அருணா
//

ஹிஹி... ஊருக்கு இளைத்தவன்...... எதோ சொல்வாங்களே என்ன அது? :P

said...

//சேதுக்கரசி said...

//உங்கள அறுக்க ஒரு புது ப்ளாக்//

ஆண்டவா... காப்பாத்து!//
இதுக்கெல்லாம் ஒரு நாள் நீங்க என் டார்லிங் மீனு கிட்ட பதில் சொல்ல வேண்டி இருக்கும் பாருங்க. :((

வர வர.. பின்னூட்டம் போடறதுக்கும் கூகுள் ரீடர் யூஸ் பன்றதுக்குமே சிலர் ப்ளாகர் அக்கவுண்ட் வச்சிருக்காங்கப்பா. ப்ளாக் இல்லைனா என்ன அதான் இருக்கவே இருக்கே நம்ம அன்புடன். அங்க வந்து உங்கள கவனிக்கிறேன் இருங்க. :))

said...

சூப்பரேய்ய்ய் நல்ல விசயம் தான்..தொடருங்க..வாழ்த்துக்கள்..

said...

//ரசிகன் said...

சூப்பரேய்ய்ய் நல்ல விசயம் தான்..தொடருங்க..வாழ்த்துக்கள்..
//
நன்றி மாம்ஸ்.. :)

said...

//உங்கள அறுக்க ஒரு புது ப்ளாக் //

ரம்பம் ரெடி.. எத்தனை வேணும்? :-))))

said...

//உங்கள அறுக்க ஒரு புது ப்ளாக் //

ரம்பம் ரெடி.. எத்தனை வேணும்? :-))))

said...

//உங்கள அறுக்க ஒரு புது ப்ளாக் //

ரம்பம் ரெடி.. எத்தனை வேணும்? :-))))

said...

//உங்கள அறுக்க ஒரு புது ப்ளாக் //

ரம்பம் ரெடி.. எத்தனை வேணும்? :-))))

said...

ஏன் இத்தனை தடவைன்னு நீங்க கேட்கலாம்.. அதான் நம்பம்ன்னு சொல்லிட்டேன்ல. :-P

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

ஏன் இத்தனை தடவைன்னு நீங்க கேட்கலாம்.. அதான் நம்பம்ன்னு சொல்லிட்டேன்ல. :-P//

கேக்க மாட்டோமே :)

//:: மை ஃபிரண்ட் ::. said...

ரம்பம் ரெடி.. //

ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்... :P

said...

வாழ்த்துகள் சஞ்சய்..

said...

வாழ்த்துக்கு நன்றி அக்கா.:-)

Tamiler This Week