இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSaturday 19 January, 2008
மார்க்கெட்டிங்கும் பதிவர்களும்!
If you're attacking your market from multiple positions and your competition isn't, you have all the advantage and it will show up in your increased success and income. - Jay Abraham
மார்க்கெட்டிங் என்பது இப்போது எல்லோருக்குமே... தனி மனிதனுக்கு கூட தேவையான் ஒரு சமாச்சாரம் ஆய்டிச்சி. பூக்கடைக்கு கூட விளம்பரம் தேவைபடும் காலம் இது. விளம்பரம் என்பது மார்க்கெட்டிங்கின் முக்கியமான அங்கம். மார்க்கெட்டிங்கின் இதயம் என்று கூட சொல்லலாம். அதென்ன பூக்கடைக்கு கூட விளம்பரம்? அங்கும் பூவை விற்கத் தானே செய்கிறார்கள். அதற்கும் விளம்பரம் தேவை தானே. அதில் என்ன ஆச்சர்யம் என்கிறிற்களா? . பூக்கடையில் தான் பூ வாசம் வருமே. அதை வைத்து வாடிக்கயாளர்கள் வரமாட்டர்களா. அதெல்லாம் தெருவுக்கு ஒரு பூக்கடை இருக்கும் போது தான் தேடி வந்த கதை எல்லாம். இப்போ தீப்பெட்டியை வரிசையாய் அடுக்கி வைத்த மாதிரி ஒரே இடத்தில் பல கடைகள் இருக்கும் போது கஸ்டமரை தங்கள் கடைக்கு வர வைக்க அவசியம் விளம்பரம் என்னும் மார்க்கெட்டிங் தேவை தானே. அதுவுமின்றி பாலித்தின் பேப்பரில் பூக்களை அடைத்து பொக்கேவாக விற்கும் இந்த காலத்தில் வாசம் எங்கே வீசுகிறது? ஆகவே மார்க்கெட்டிங் அவசியம் தான். இப்போது எல்லாம் பெண்கள் கூட கூந்தலுக்கு மணம் வீச பூ வைப்பதில்லை. போட்டிருக்கும் உடைக்கு மேட்ச்சிங்காகத் தான் பூ வைக்கிறார்கள். அதனால் ஏகப்பட்ட கலப்பின மலர்கள் வந்துவிட்டன. அதில் வாசமும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை. எவண்டா கண்டுபிடிச்சான் இந்த மேட்ச்சிங்க?
மார்க்கெட்டிங் என்பது எதோ கோட்டு சூட்டு போட்டுகிட்டு ஏசி ரூம்ல பெரிய திரைல ஒரு மடிக்கணினியை இணைச்சு புரியாதை வார்த்தைகளை திரையில் காட்டி புது புது திட்டம் போட்டு விற்பனையை பெருக்கும் யுக்தியை விளக்கும் ஒரு ஸ்மார்ட்டான ஆசாமிக்கு சொந்தமானதுனு நெனைக்கிரிங்களா? அதான் இல்லை. விற்பனை அல்லது சேவை துறைக்கு மட்டுமில்லை... நம் தினசரி நடவடிகைகளுக்கும் அத்தியாவசியமானது தான். தம் தினசரி நடவடிகைகளில் மார்க்கெட்டிங்கை உபயோகிக்காதவர்களே இருக்க முடியாது. சிலர் இதை தெரிந்து செய்கிறார்கள். சிலர் தெரியாமலே செய்கிறார்கள். என்ன தலை சுத்துதா? இதோ வந்துட்டேன்..
சிலர் தங்களை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என திட்டம் போட்டு மார்க்கெட்டிங் செய்வார்கள்.ஏனெனில் அவர்கள் தங்கள் ஸ்டைலில் தங்களிடம் உள்ள திறமையை வெளிப்படுத்துகிறார்கள். அது அனவருக்கும் தெரியவேண்டும் என நினைக்கிறார்கள்.தான் செய்வதை அனைவரும் கவனிக்க வேண்டும் என் நினைக்காதவர்கள் உலகில் இருக்கவே முடியாது.புகழை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா என்ன?
உதாரணத்திற்கு நம் ப்ளாகர்களை எடுத்துக் கொள்ளுங்கள். பலர் பல ஆண்டுகாலமாக எழுதுவார்கள். அவர்களை பெருமாலானோருக்கு தெரியாது. ஆனால் சிலர் வந்த வேகத்திலேயே பலராலும் கவனிக்கப் படுவார்கள்.கவனிக்கப் படாதவர்களை சொன்னால் அவர்கள் மனம் புண்படலாம். ஆகவே அவர்களை விட்டு விடுவோம். வெகு விரைவில் கவனிக்கப் பட்டவர்களில் ஒருவர் நம் அண்ணாச்சி நந்தகுமார்.அவர் விவரமாக அவருக்கு வைத்துக் கொண்ட பெயர் நந்துf/oநிலா. ஏனெனில் நிலா தமிழ்மணத்தில் பெரும்பாலானோர் அறிந்த ஒரு பெயர். ஆகவே அதை வைத்துக் கொண்டு பதிவு எழுத வந்ததும் அவரும் தெரிந்த முகமாகவே பலருக்கும் தெரிந்தார். இந்த பெயர் வைக்கும் மார்க்கெட்டிங் உத்தி அவரை பிரபல(?!) பதிவராக :) ஆக்கியது.
தனித்தன்மையை வெளிப்படுத்துவதும் மார்க்கெட்டிங்கின் ஒரு அங்கம் தான்.உதாரணத்திற்கு....டிவி ஒரு பொதுவான தொழில்நுட்பத்தில் தான் செயல்படுகிறது. எனவே அதை தயாரிக்கும் எல்லா நிறுவனக்களும் அதற்கு பொதுவாகவே டிவி என்று பெயரிட்டே விற்கலாம். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு பெயருடன் தங்கள் டிவியை விற்கிறார்கள். காரணம்...தொழில்நுட்பமாக பொதுவானதாக இருந்தாலும் அதில் பயன்படுத்தப்படும் சில பாகங்கள், வடிவமைப்பு மற்றும் மென்பொருட்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சிறிதளவேனும் மாறுபடும்.ஆகவே தான் தனித் தனிப் பெயர். ஒவ்வொரு நிறுவனமும் தயாரிக்கும் டிவிக்கு பல மாடல்கள் இருக்கும் அவற்றிற்கு தனி தனி பெயர்கள் இருக்கும். பெயரை வைத்தே அதன் தரம் மற்றும் தனித் தன்மையை கண்டுபிடித்துவிடலாம். வாடிக்கையாளர் கடைக்கு போகும் போது டிவி வேண்டும் என்று கேட்பதில்லை. எல்ஜி, சாம்ச்ங், சோனி, ஓனிடா என்று பெயர் சொல்ல்லித் தான் கேட்க்கிறார்கள்.இதற்கு காரணம் அந்த நிறுவனங்களின் மார்க்கெட்டிங் உத்தி தான்.இப்படி தனித் தனி பெயர்கள் இல்லாமல் பொதுவாக டிவி என்று மட்டும் இருந்தால் ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்பம் வேறு நிறுவனத்தின் டிவி விற்பனையை அதிகப் படுத்திவிடும்.
இந்த மார்க்கெட்டிங் உத்தியை பதிவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் பாருங்கள். ஒரே பெயரில் பல பதிவர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் பெயருடன் ஏதேனும் ஒரு வார்த்தையை சேர்த்து வைத்திருப்பார்கள். உதாரணமாக சிவா என்ற பெயரில் 3 ( எனக்கு தெரிந்து)பிரபல பதிவர்கள் இருக்கிறார்கள். மங்களூர் சிவா, நெல்லை சிவா, நாகை சிவா . இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி எழுத்து நடை இருக்கு.நாகை சிவா ஒரு மாதிரி எழுதுவார். நெல்லை சீவா வேறு மாதிரி எழுதுவார். மங்களூர்சிவா "ஒரு மாதிரி":P எழுதுவார். இவர்கள் பெயருக்கு முன்னால் தங்கள் ஊரின் பெயரை வைத்துள்ளதால் தான் ஒருவரின் பதிவுக்கு கிடைக்க வேண்டிய பலன் அல்லது பாராட்டு இன்னொரு பதிவருக்கு போகாமல் உரியவாருக்கு போய் சேருகிறது.மங்கை என்ற பெயரில் கூட 2 பதிவார்கள் இருக்கிறார்கள். ஒருவர் தமிழில் பெயர் வைத்திருக்கிறார். இன்னொருவர் ஆங்கிலத்தில்.இது தான் தயாரிப்புக்கு தனி தனி பெயர் வைக்கும் மார்க்கெட்டிங் உத்தி. ஒரே நிறுவனம் பல மாடல்களில் தனி தனி சிறப்பம்சங்களுடன் தயாரிப்பை வெளியிடுவது போல், பலர் ஒரே பதிவில் எல்லாவற்றை பற்றியும் எழுதாமல் ஒவ்வொரு விதமான பதிவுகளுக்கும் தனித் தனி வலைப்பூக்கள் வைத்திருக்கிறார்கள(ஹிஹி.. மீ டூ..). இதற்கு உதாரணம் சொன்னால் ப்ளாகர் சர்வர் போதாது.
இன்னும் சிலர் தங்கள் பதிவுக்கு மார்க்கெட்டிங் செய்யும் விதமே வேறு. பதிவில் பொருளடக்கத்திற்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் பிறரை கவரும் விதத்தில் இருக்கும். சிலர் பதிவு எழுதுவதை விட தலைப்புக்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.( பார்க்க :ஆட்களை திரட்ட பிரியாணி பொட்டலம் வேண்டாம்.)
இன்னும் சிலர் தங்கள் பதிவை மார்க்கெட்டிங் செய்ய ஜிமெயில் மற்றும் யாஹூ ஸ்டேட்டஸ் செய்திகளை பயன்படுத்துவார்கள்.மங்களூர் சிவா மாமா வலைச்சரத்துக்கு ஆள் சேர்ப்பது, மை ஃப்ரண்ட் தேன்கிண்ணத்த பாப்புலர் ஆக்கினது எல்லாம் இந்த வகை மார்க்கெட்டிங் தான்.:)
இன்னும் சிலர் புரியாத( என் பதிவுகள் மாதிரி:P) அல்லது மொக்கை(இதுவும் என்னை மாதிரி:P) பதிவுகளுக்கு எல்லாம் சென்று சம்பந்தமே இல்லாமல மிக வித்தியாசமாய் பின்னூட்டம் போடுவார்கள். குறைந்த பட்சம் வெறும் சிரிப்பானையாவது போட்டு வைப்பார்கள். அப்போது தான் தன்னை பலரும் அடையாளம் கண்டுகொண்டு.. இவர் ரொம்ப ஆக்டிவான பதிவராக இருப்பார் போல.. என்று நினைத்து இவர்கள் பதி்வுக்கும் வருவார்கள்.இதுதான் மார்க்கெட்டிங்.
நம்ம புதுகைதென்றல் மாதிரி பதிவு போட்டதும் எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பி தெரியப் படுத்தறது, சிவா மாமா மாதிரி ஆன்லைன்ல இருக்கிற எல்லார்க்கும் சாட் மூலமா லின்க் அனுப்பி தெரியபடுத்தறது எல்லாமே மார்க்கெட்டிங் தான்.
அப்புறம் மின்னஞ்சல் சிக்னேச்சர் பகுதியிம் ப்ளாக் முகவரி இணைத்து அனுப்புவது, யாரோ கஷ்ட்டப் பட்டு யோசிச்சு எல்லாரும் ரசிக்கிற மாதிரி அழகுப்படுத்தி இணையத்துல போட்டு வைக்கிற புகைப்படம் வகையறா ஃபார்வர்ட் அஞ்சல்களில் கஞ்சமும் கூச்ச நாச்சமில்லாமல் அதில் உள்ள சுட்டியை நீக்கிட்டு நம்ம ப்ளாக் சுட்டியை பதிவு பன்றது எல்லாம் மார்க்கெட்டிங் தான். ;)
யாராவது ஒரு திரட்டியில மட்டும் பதிவு பண்ணி இருக்கங்களா சொல்லுங்க. ஊர்ல இருக்கிற எல்லா திரட்டியிலும் பதிவு பண்ணி வச்சிருக்கங்க. அதில்லாம சர்ச் எஞ்சின்லயும் பதிவு பண்ணி வச்சிருக்காங்க. இதெல்லாம் எதுக்கு தங்களோட வாசகர் வட்டத்த அதிகரிக்க தான்.
ஹிஹி.. என்னடா இது எந்த கர்மத்த பண்ணாலும் இந்த மூதேவி வந்து மார்க்கெடிங்னு கத விடுதேனு திட்றது கெக்குது. என பன்றது மார்க்கெட்டிங் நம்ம வாழ்க்கைல பிரிக்க முடியாத அங்கமாய்டிச்சே. :)
தங்களோட தயாரிப்புகளை எல்லாருக்கும் கொண்டு சேர்க்க நிறுவங்கள் மார்க்கெட்டிங் செய்வது போல தங்களோட கருத்துக்கள் அல்லது மொக்கைகள் எல்லாருக்கும் போய் சேர்வதற்காக நாம் செய்வதும் மார்க்கெட்டிங் தான். :)
If you do build a great experience, customers tell each other about that. Word of mouth is very powerful. - Jeff Bezos
இப்பத்திக்கு அப்பீட்டு......
....... இது கத்துக்குட்டிக்கான பதிவு. தமிழ்மணம் திரட்டும் வரை இங்கும் வெளியிடப்படும்...........
22 Comments:
தங்களோட கருத்துக்கள் அல்லது மொக்கைகள் எல்லாருக்கும் போய் சேர்வதற்காக நாம் செய்வதும் மார்க்கெட்டிங் தான். :)
ஹையோ ஹையோ இதெல்லாம் என்ன மாதிரி குட்டீஸ்க்கு கூட தெரியுமே அங்கிள்...
@ பவன் : நானும் இத தான ராசா சொல்லி இருக்கேன்.:)
//இன்னும் சிலர் புரியாத( என் பதிவுகள் மாதிரி:P) அல்லது மொக்கை(இதுவும் என்னை மாதிரி:P) பதிவுகளுக்கு எல்லாம் சென்று சம்பந்தமே இல்லாமல மிக வித்தியாசமாய் பின்னூட்டம் போடுவார்கள். குறைந்த பட்சம் வெறும் சிரிப்பானையாவது போட்டு வைப்பார்கள். அப்போது தான் தன்னை பலரும் அடையாளம் கண்டுகொண்டு.. இவர் ரொம்ப ஆக்டிவான பதிவராக இருப்பார் போல.. என்று நினைத்து இவர்கள் பதி்வுக்கும் வருவார்கள்.இதுதான் மார்க்கெட்டிங்.//
எப்போ தான் பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போடற பழக்கம் வர போகுதோ தெரியல போ.. :P
//
மங்களூர் சிவா, நெல்லை சிவா, நாகை சிவா . இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி எழுத்து நடை இருக்கு.நாகை சிவா ஒரு மாதிரி எழுதுவார். நெல்லை சீவா வேறு மாதிரி எழுதுவார். மங்களூர்சிவா "ஒரு மாதிரி":P எழுதுவார்.
//
யோவ்..........
என்னா இது!?!?!?!?!
அதெல்லாம் சரி இந்த பதிவு ஏன் காத்து வாங்குது பின்னூட்டம் இல்லாம!!?!?
அதுக்காக அனானியா கமெண்ட் நீயே போட்டுக்க கூடாது சொல்லீட்டேன்.
//மங்களூர் சிவா said...
அதெல்லாம் சரி இந்த பதிவு ஏன் காத்து வாங்குது பின்னூட்டம் இல்லாம!!?!? //
ஹிஹி.. இன்னைக்கு சண்டே.. பின்னூட்டம் போடறதுக்கு எல்லாரும் லீவ் விட்டிருப்பான்ங்க.. :)
.....குசும்பன்.. கும்மி ப்ளீஸ்.. ;P
மார்கெட்டிங்கோட பதிவர்கள் லிங்க்...ரசிகும்படியா இருக்குது சஞ்சய்..வாழ்க்கையே வியாபாரம்தானே.
@பாசமலர் ..
அமாங்க்கா.. வியாபாரம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. கருத்தியதுக்கு ரொம்ப நன்றி அக்கா.
... அதென்ன.. ஜிடாக்ல நான் ஹை சொன்னதும் எஸ்கேப் ஆய்ட்டிங்க.. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. சொல்லிபுட்டேன்.. :P
//If you do build a great experience, customers tell each other about that. Word of mouth is very powerful. - Jeff Bezos///
துரை இங்கிலீஸ் எல்லாம் பேசுது
//இப்பத்திக்கு அப்பீட்டு......
....... இது கத்துக்குட்டிக்கான பதிவு. தமிழ்மணம் திரட்டும் வரை இங்கும் வெளியிடப்படும்///
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுதுங்க பொடியன் தமிழ்மணம் திட்டும் வரை இங்கும் வெளியிடப்படும் என்று வரவேண்டும்!!!
///எப்போ தான் பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போடற பழக்கம் வர போகுதோ தெரியல போ.. :P///
இது என்னா புது பழக்கம் , எக்ஸ் கூயுஸ் மீ இப்படி எல்லாம் சொல்லபிடாது!!!
//அதெல்லாம் சரி இந்த பதிவு ஏன் காத்து வாங்குது பின்னூட்டம் இல்லாம!!?!?///
புழுக்கம் ஜாஸ்தியா இருக்கு காத்து வாங்குது! இது என்னய்யா கேள்வி!
நீங்க போடும் வீக் எண்ட் பதிவில் கூடதான் பாப்பாங்க சட்டை பட்டன் பேண்ட் பட்டன் எல்லாம் கழட்டிவிட்டு காத்து வாங்குதுங்க நாங்க எதாவது கேட்டோமா?
///சர்ச் எஞ்சின்லயும் பதிவு பண்ணி வச்சிருக்காங்க.///
கோவில் எஞ்சின், தர்கா எஞ்சின்லயும் பதிவு பண்ணி வச்சா என்னா குறைஞ்சா போய்டுவீங்க?
// இதெல்லாம் எதுக்கு தங்களோட வாசகர் வட்டத்த அதிகரிக்க தான்.//
அப்ப வாசகர் விட்டத்தினை அதிகரிக்க என்ன செய்யனும், வட்டம் 23CM என்றால் விட்டம் என்னா? பரப்பளவு என்னா?
//இன்னும் சிலர் புரியாத( என் பதிவுகள் மாதிரி:P) அல்லது மொக்கை(இதுவும் என்னை மாதிரி:P) பதிவுகளுக்கு எல்லாம் சென்று சம்பந்தமே இல்லாமல மிக வித்தியாசமாய் பின்னூட்டம் போடுவார்கள்.///
இதை கண்டித்து இங்கிருந்து வெளிநடப்பு செய்கிறேன்.
சாரி மேலே உள்ள கமெண்ட் என் பெயரில் வந்து விட்டது அதையும் மானஸ்தன் என்ற அனானி பெயரில் சேர்த்துக்கவும்!
//... அதென்ன.. ஜிடாக்ல நான் ஹை சொன்னதும் எஸ்கேப் ஆய்ட்டிங்க.. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. சொல்லிபுட்டேன்.//
ஓஓ...ரங்கமணியும் என் பொண்ணும் பழைய கணிணிய என் தலைல கட்டி..புதுச அவங்க ஆக்கிரமிச்சு..
அது அப்பப்ப slow ஆகி..கட் ஆகி..இப்ப ஒங்ககிட்ட
மட்டுமில்ல..இன்னும் இது மாதிரி வாங்கிக் கட்டி...
பதிவுலகத்துலே இவ்வளவு சந்தைப்படுத்தும் ( Marketing )வழிகள் இருக்கா - தெரியாமப் போச்சே !!
என் பதிவெ யாரும் பாக்க மாட்டேங்குறாங்க
//said...
பதிவுலகத்துலே இவ்வளவு சந்தைப்படுத்தும் ( Marketing )வழிகள் இருக்கா - தெரியாமப் போச்சே !!
//
யாரங்கே ... இழுத்து ஸாரி அழைத்து வாருங்கள் மங்களூர் சிவாவையும் குசும்பனையும் .. சீனா தாத்தா பதிவுக்கு கும்மி அடிக்க... கவலை படாதிங்க தாத்தா.. சீக்கிறமே கும்மிக்கு தேதி குறிச்சிடறோம்.. :))
//ஓஓ...ரங்கமணியும் என் பொண்ணும் பழைய கணிணிய என் தலைல கட்டி..புதுச அவங்க ஆக்கிரமிச்சு..
அது அப்பப்ப slow ஆகி..கட் ஆகி..இப்ப ஒங்ககிட்ட
மட்டுமில்ல..இன்னும் இது மாதிரி வாங்கிக் கட்டி... //
:)))))
//ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுதுங்க பொடியன் தமிழ்மணம் திட்டும் வரை இங்கும் வெளியிடப்படும் என்று வரவேண்டும்!!!//
யப்பா டமிலு.. மெய்யாலுமே இந்த வரியில எதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கும் போலனு ஒவ்வொரு எழுத்தா படிச்சி பாத்தேன்யா..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
aahaa..... ipdi vera ideal ellam irukka! nadathunga :)
//Dreamzz said...
aahaa..... ipdi vera ideal ellam irukka! nadathunga :)//
பின்ன உங்கள எல்லாம் எப்டி ட்ரீம்ஸ் நிம்மதியா விட முடியும்? :P
// வாடிக்கையாளர் கடைக்கு போகும் போது டிவி வேண்டும் என்று கேட்பதில்லை. எல்ஜி, சாம்ச்ங், சோனி, ஓனிடா என்று பெயர் சொல்ல்லித் தான் கேட்க்கிறார்கள் //
ஓகோ! போதும்! போதும்!
Post a Comment