இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 27 October, 2007

ஆட்களை திரட்ட பிரியாணி பொட்டலம் வேண்டாம்.

முகு: இது கதையல்ல...நிஜம்.. தைரியமாக முயன்று பார்க்கலாம்.

உங்கள் வலைப்பூவிற்க்கு ஆட்கள் வரத்து குறைந்துவிட்டதா? இல்லை யாரும் வருவதே இல்லயா? கவலை வேண்டாம். அற்புதமான லேகியங்கள் கைவசம் இருக்கு. இதற்கு உங்களுக்கு தலைப்புக்கு மட்டும் கொஞ்சூண்டு கற்பனா( கல்பனா இல்ல) சக்தி இருந்தால் போதும். உள்ளடக்கத்தை பற்றி கொஞ்சமும் கவலை பட வேண்டாம்.. தத்துப்பித்தென்று எதை வேண்டுமானாலும் உளறி வைக்கலாம். உளருவதற்கு உங்களுக்கு ஒன்றும் தோன்றவில்லயா? அதற்கும் கவலைப்ப்பட வேண்டாம். பதிவைப் போடுவதற்கு முன்பு உங்க குழந்தையுடன் அல்லது பக்கத்து வீட்டு குழந்தையுடன்( இது கல்யாணம் ஆகாதவங்களுக்கு.. அந்த குழந்தையின் அம்மா அருகில் இருக்கக் கூடாது :P .. அப்புறம் எங்க போய் அல்லது வந்து குழந்தையை கவனிக்க போறிங்க) சிரிது நேரம் செலவிடுங்கள். அவர்கள் பேசுவதைக் கூட ஒரு பதிவாகப் போடலாம்.( மொக்கை போதும்)

லேகியம் தந்துடறேன்.

1. இணையத்தில் இருக்கும் எல்லா திரட்டிகளிலும் உங்கள் வலைப்பூவை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழ்மணம் , தேன்கூடு, தமிழ்வெளி, தமிழ்பிளாக்ஸ் இத்யாதி...

2. தலைப்பு மிகவும் பரபரப்பானதாக இருக்க வேண்டும். முடிந்தால் தற்போதய சூடான நிகழ்வுகள் பற்றியதாக இருப்பின் இன்னும் நலம்.

3. கொஞ்சம் புகழ்பெற்ற வலைப்பூக்களில் எல்லாம் சென்று உங்கள் கற்பனா ( மீண்டும் கல்பனா இல்ல) சக்தியை பயன்படுத்தி அந்த பதிவுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தி பின்னூட்டம் போட வேண்டும்.


தலைப்பு எப்படி இருக்க வேண்டும்?

* நீயெல்லாம் ஒரு ஆம்பிளயா? ( ஒன்றா இரண்டா? இணைப்பு கொடுக்க :( )
* நீயெல்லாம் ஒரு பொம்பாளயா? ( ஒ.இ.இ.கொ:( )
* செக்ஸ் கல்வியாம் - அடி செருப்பால
* பிளாக்கர் பாஸ்வேர்ட் ஹைஜாக் செய்தவர்கள் யார்??? ஆதார பேச்சுக்களுடன்!
* எனக்கும் இந்த மெயில் வந்தது என்று ( அழையா விருந்தாளியாக!? ) பாதிக்கப் பட்ட எல்லார் பதிவுக்கும் சென்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி விளம்பரம் தேட வேண்டும். முடிந்தால் நான் மெயில் அனுப்பி அவரை எச்சரித்தேன் அல்லது காப்பாற்றினேன் :( என்று பீற்றிக் கொள்ள வேண்டும்.
* அபிஅப்பா உண்மைத் தமிழரா என அறிவுப் பூர்வமானா சர்வே எடுக்க வேண்டும்.
* உஷார்.. உஷார் .. உங்கள் வலைப்பூ திருடுபோகலாம்!
* எனக்கு வந்த மெயில்
* ஜிமெயில் / பாளாக்கர் பாஸ்வேர்டு திருடு போவது எப்படி
* 20 நிமிடங்களில் அந்த தளம் முழுமையாக கைப்பற்றப்பட்டது
* பெண்களை கவர்வது எப்படி?
* அம்பு குறி இட்ட இடத்தை பார்க்கவும்!
* ஹிஹி .. ஆட்களை திரட்ட பிரியாணி பொட்டலம் வேண்டாம். ( இந்த பதிவு தான் )
இப்படி இன்னும் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.


பின்னூட்டம் எப்படி இருக்கனும்?
* பத்மபிரியா பற்றிய பதிவில் ஞானி பற்றி எழுத வேண்டும்.
* தொழில் நுட்பம் பற்றிய பதிவில் உங்களுக்கு பிடிக்காதவரை பற்றி திட்ட வேண்டும்
* குறிப்பாக இதை எல்லாம் அதிக பின்னூட்டங்கள் இருக்கும் பதிவில் செய்ய வேண்டும்.
* சுயதம்பட்டம் அடிப்பவரின் பதிவில் சென்று அவரை பற்றி 4 வார்த்தை அவரை புகழ்ந்து( மனதில் திட்டிக் கொண்டு) எழுத வேண்டும். அடிக்கடி அப்படி செய்வதன் மூலம் அவர் நண்பர்கள் பட்டியலில் உங்களை சேர்த்து அவரது பதிவில் அதற்கான இணைப்பையும் கொடுத்துவிடுவார்.

Belive Me.. Its Working yaar... :)


பிகு: இந்த பதிவு ச்சும்மா கலாய்க்கத் தான்.. யாரையும் புண்படுத்த அல்ல... இதில் நான் சில உருப்படியான இணைப்பு(தலைப்பு)களையும் கொடுத்துள்ளேன். யாருக்காவது இந்த பதிவில் ஏதேனும் ஆட்சேபகரமான விஷயங்கள் இருந்தால் தயவுசெய்து பின்னூட்டத்தில் தெரிவித்து விடுங்கள். உங்கள் காரணம் ஏற்றுக்கொள்ளும் படி இருப்பின் அந்த வாக்கியங்கள் நீக்கப் படும். யாரும் ஆபாச பின்னூட்டம் போட வேண்டாம். அதற்கு இங்கு அனுமதி இல்லை :)...

8 Comments:

said...

ஆ(ழ்ந்த) பா(சமிகு) ச(கோதரனாக) பின்னூட்டமிடுகிறேன். எப்டிங்னா? நீங்கதான்னா எனக்கு குரு:)

said...

ஆஹா .. பாசக்கார புள்ளைங்க கெளம்பிட்டாய்ங்கய்யா.. :P

said...

ஜூனியர் என்னயும் கலாய்ச்சுட்ட போல, பரவாயில்ல பொடிப்பையந்தானே :P

said...

Chance கெடைக்கும் போதே எல்லாரயும் கலாய்ச்சிடனும் சீனியர். அப்புறம் அதுக்குனு தனி போஸ்ட் போட முடியாதுல? :P...
அடிக்கடி வந்து உங்க ஜுனியர ஊக்கப் படுத்தரதுக்கு ரெம்ப நன்னிங்க...

said...

//
நிலா said...
ஜூனியர் என்னயும் கலாய்ச்சுட்ட போல, பரவாயில்ல பொடிப்பையந்தானே :P
//

போடா போடா பொடி பயலே
புத்தி கெட்ட மட பயலே
:-)))

சும்மா ஜோக்கு
மாமா உன்னைய திட்டுவேனா?

said...

நீங்க திட்னா மட்டும் நான் கோச்சிக்குவேனாக்கும்.. :-P

( அதுக்காக போயா போயா புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்குனு எல்லாம் எசப் பாட்டு பாட மாட்டேன்.. :P )

said...

test...

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘

Tamiler This Week