இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comTuesday, 27 November 2007
மருத்துவ மாணவர்கள் போராட்டம் சரியா?
மருத்துவ பட்ட படிப்பு ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவதற்கும் ஒரு ஆண்டு கட்டாய கிராமப்புற பணிக்கும் எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவ Moneyகள் புதுசு புதுசா யோசிச்சி போராட்டம் நடத்துறாய்ங்க. எதிர்ப்புக்கு அவர்கள் சொல்லும் காரணம்:
:: ஆறரை ஆண்டுக்கு எதிர்ப்பு ::
17 வயதில் பட்டப் படிப்புக்கு சேர்ந்தால் அதை முடிக்க 24 வயது கடந்துவிடும். அதற்கு பிறகு தான் வேலைக்கு போக முடியும். ஆனால் பொறியியல் படிக்கும் மாணவர்கள் 22 வயதிலேயே மாதம் 30000 மேல் சம்பாதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.நாங்கள் மட்டும் நீண்ட வருடங்கள் காத்திருக்க வேண்டுமா என்பது தான்.
பதில் : உங்கள் நோக்கம் விரைவில் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் என்றால் உங்களை யார் மருத்துவம் படிக்க சொன்னார்களாம்?. நீங்களும் பொறியியலோ விஷுவல் கம்யூனிகேஷனோ பேஷன் டிஸைனிங்கோ படிக்க போக வேண்டியது தானே?
:: ஒரு ஆண்டு கிராமப் பணிக்கு எதிர்ப்பு ::
கிராமப் புறப் பணிக் காலத்துல அரசாங்க சம்பளமாக 8000 முதல் 10000 வரை தான் கிடைக்கும். இதுவே உடனடியாக தனியார் மருத்துவ மனைகளில் வேலைக்கு சேர்ந்தால் கை நெறய( சில்லறையா கொடுப்ப்பாங்களோ? :P ) காசு கிடைக்கும். எங்களை எதற்கும் கட்டாயப் படுத்தாதிர்கள். எங்கள் இஷ்டத்திற்கு வேலைக்கு போக அனுமதியுங்கள் என்பது தான்.
பதில் : மேலே சொன்ன அதே பதில் தான். உங்கள் நோக்கம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் அல்லது குறைந்த வயதிலேயே கை நிறய சம்பாதிக்க வேண்டுமெனில் நீங்கள் அதற்குறிய படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டியது தானே. யார் உங்களை தடுத்தது?
இவர்கள் எல்லாம் சிறு பிள்ளைகள். எதோ உணர்ச்சிவசப் பட்டு பேசுகிறார்கள். விட்றலாம்.
ஆனால் இதுக்கு ஆதரவு தெரிவிச்சு வருங்கால முதல்வர் சரத்குமார்ல ஆரம்பிச்சி கடந்த கால முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள் வரை வரிந்துக் கட்டிக் கொண்டு பேசுவதை தான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
சமீபத்தில் அம்மாவின் அறிக்கை:
"பொறியியல் மாணவர்கள் படித்து முடித்தவுடன் மாதம் ரூ.50000 ல் இருந்த்து 1 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.ஆனால் மருத்துவ மாணவர்கள் ஆறரை ஆண்டு படிப்பு முடித்து பிறகு மேல் படிப்பு முடித்து சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது 30 வயது ஆகிவிடும் . எனவே ஒரு ஆண்டு அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது தான். அப்போ 29 வயது வரை படிப்பதை பற்றி கவலை இல்லை.
இப்போ ராமதாஸ் மட்டும் அம்மாவுடன் கூட்டணி வைக்கத் தயார்னு ஒரு அறிக்கை விடட்டும் பாருங்க. அப்புறம் மம்மிக்கு ஒரு ஆண்டு என்ன? இன்னும் 5 ஆண்டுகள் அதிகரித்தாலும் அதை பற்றி கவலை பட மாட்டாங்க. என்ன கொடுமை அமாஸ் இது?
மருத்துவம் என்பது நோய் போக்கும் உயிர் காக்கும் புனிதமான சேவை.இதை இப்படி பண ரீதியாக ஒரு முன்னால் முதல்வரே பார்க்கும் போது அந்த மருத்துவ மாணவர்களின் மன நிலை எப்படி இருக்கும்? இவர்கள் இப்படி பணத்தாசை காட்டி பெரியவர்களால்?! வளர்க்கப் படுவதால் தான் விரைவாகவும் அதிகமாகவும் சம்பாதிக்க நினைக்கிறார்கள். படிப்பு முடித்ததும் வங்கி கடனுடன் பெரும் மருத்துவ நிறுவனங்களை ஆரம்பித்து மேலும் பல மருத்துவ நிறுவனங்கள் ஆரம்பிக்கவும் வங்கிக் கடனை அடைக்கவும் அநியாய கட்டணம் வசூலித்து ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு நவீன மருத்துவம் எட்டாக் கனியாக ஆகிவிட்டது. தட்டிக் கேட்க அல்லது தடுத்து நிறுத்த வேண்டிய தலைவர்கள் இவர்களை தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பின்னே.. கட்சி நடத்த நன்கொடை வழங்க நிறைய பணக்காரர்கள் வேண்டுமல்லவா? அவரவர் கஷ்டம் அவரவர்க்கு. :(
மாணவர்களின் இந்த மன நிலைக்கு பணவெறி பிடித்த அரசியல்வாதிகள் மட்டுமில்லை. அரசாங்கமும் தான்.கல்வி நிறுவனங்களில் நடக்கும் பகல் கொள்ளையை தடுத்து மாணவர்களின் படிப்புக்கான பெரும் பண சுமையை ஓரளவாவது குறைத்தால் தான் அவர்களும் படிப்புக்கான பெரும் முதலீட்டை வட்டியுடன் சீக்கிரம் சம்பாதித்து பிறகு எதாவது சேமித்து ஒரு மருத்துவ நிறுவனத்தை நிறுவ முடியும் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் இருந்து ஒழிக்க முடியும்.
அது சரி.. அரசாங்கம் என்பதே பெரும் முதலீட்டுடன் பதவிக்கு வரும் அரசியல் வாதிகளின் சொத்து தானே. குறைந்த பட்சம் மருத்துவ படிப்புடன் சேர்த்து கொஞ்சம் மனிதாபிமானம் அல்லது சேவை மனப் பான்மை பற்றியும் கற்பித்தால் கொஞ்சம் நல்லது நடக்கலாம். யாருமே கிராமத்துக்கு போய் மருத்துவம் பார்க்க விரும்பலனா யார் அவங்க உயிர காப்பாத்தரது? அவங்க அப்படி என்னங்கய்யா பாவம் பண்ணாங்க?
டிஸ்கி: அதிகம் பணம் சம்பாதிப்பதயோ அல்லது பெரும் பணக்காரர்கள் உருவாவதையோ( நேர் வழியில்) நான் ஒரு போதும் எதிர்பவனல்ல.கோயிலுக்கு சாமி கும்பிடப் போகும் போது அங்கு சுண்டலும் புளியோதரையும் தான் கிடைக்கும்( எத்தன பேர் வாரப் போறாய்ங்களோ? :( ). நீங்கள் அங்கு போவது சாமி கும்பிடவும் மன அமைதிக்காகவும் தான்.சாப்பிடுவதற்கு அல்ல. ஆகவே அங்கு கிடைப்பதை தான் நீங்கள் சாப்பிட வேண்டும். உங்களுக்கு வகை வகையாகவும் ருசியாகவும் சாப்பிட ஆசை இருந்தால் நீங்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு தான் போக வேண்டும். கோவிலில் உக்காந்து பொலம்பாதிங்க என்று தான் சொல்கிறேன்.( அப்டியே நான் சொல்றத கேட்டுட்டாலும்:P )
13 Comments:
முட்டாள் தனமான கருத்து. கட்டாயப் படுத்திச் செய்வதல்ல சமூக சேவை.
வாங்க அனானி. :P( யார்னு தெரியும்ல:P )
மருத்துவம் என்பது நிச்சயம் சேவை தான்.சமூக சேவை என்று நீங்களும் ஒத்துக் கொண்டீர்கள்.
நீங்கள்( மருத்துவ மாணவர்கள்) சேவை செய்யும் படிப்பை படித்துக் கொண்டிருக்கிரீர்கள். ஆகவே குறைந்தபட்சம் ஓராண்டாவது சேவை செய்யுங்கள் என சொல்வது கட்டாயமல்ல. நினைவூட்டல்.
http://vasanthamravi.blogspot.com/2007/11/blog-post_4082.html
Already told few points regarding the Compulsary Service here
http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html
Few other related points at
http://thiagu1973.blogspot.com/2007/09/blog-post_3557.html
//:: ஒரு ஆண்டு கிராமப் பணிக்கு எதிர்ப்பு :://
முற்றிலும் தவறான தகவல். எதிர்ப்பு "கிராமப்"பணிக்கு அல்ல. "கட்டாய" பணிக்கு. (இத்திட்டத்தில் 4 மாதம் மட்டும் தான் கட்டாய "கிராமப்"பணி. மீதி 8 மாதங்களும் "நகர"பணி தான். )அதன் மூலம் நிரந்திர மருத்துவர் பணியிடம் அழிக்கப்படுவதை எதிர்த்து.
//இதுவே உடனடியாக தனியார் மருத்துவ மனைகளில் வேலைக்கு சேர்ந்தால் கை நெறய( சில்லறையா கொடுப்ப்பாங்களோ? //
இதுவே உடனடியாக அரசு பணியில் வேலைக்கு சேர்ந்தால் 19,000 கிடைக்கும்.
//மருத்துவம் என்பது நோய் போக்கும் உயிர் காக்கும் புனிதமான சேவை.//
கண்டிப்பாக ஒத்துக்கொள்கிறேன். அப்படிப்பட்ட உயிர் காக்கும் பணியில் தற்பொழுது படித்து முடித்து TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு Induction Training, Foundation Training, Management Training, RCH Training, Neonatal Training எல்லாம் முடித்த ஒரு அனுபவமிக்க மருத்துவர் மூன்று ஆண்டுகள் கிராமப்புறத்தில் பணிபுரிய வேண்டுமா, அல்லது கத்துக்குட்டி மருத்துவர்கள் வெறும் 4 மாதம் மட்டும் பணிபுரிய வேண்டுமா ???
//யாருமே கிராமத்துக்கு போய் மருத்துவம் பார்க்க விரும்பலனா யார் அவங்க உயிர காப்பாத்தரது? அவங்க அப்படி என்னங்கய்யா பாவம் பண்ணாங்க?//
முற்றிலும் தவறான கருத்து. கிராமப்புறத்தில் வேலை செய்ய மருத்துவர்கள் தயாராக உள்ளார்கள்.
There were 5500 application for 300 posts in Primary health Centres (in Tamil Nadu).....
The guys who are in waiting list are coming every day to DPH Office and asking for appointment orders..... Do you think that doctors are not willing...
So the fact that there are no doctors ready is totally false (as far as Tamil Nadu is concerned)....
If That is a regular post with a pay of Rs 18000 per month, I am ready to show you doctors to fill in all the vacancies.
There are at present more than 500 doctors in Waiting List. If an appointment order is given, they will join (pay Rs 18,000 per month)
But what is the justification in NOT GIVING APPOINTMENT to the person ready to work, but abolishing that post and making it filled by different persons every 4 months for a mere Rs 8000
கீழ்க் கண்டவை குறித்து உங்கள் கருத்து என்ன
1. கிராமப்புறங்களில் ஒரு மருத்துவர் Induction Training, Foundation Training, Management Training, RCH Training, Neonatal Training எல்லாம் முடிதது மூன்று ஆண்டுகள் பணி புரிய வேண்டுமா, அல்லது அதற்கு பதில் ஒரு பயிற்சி மருத்துவர் 4 மாதம் மட்டும் பணி புரிய வேண்டுமா
2. TNPSC Waiting Listல் சுமார் 1000 மருத்துவர்கள் அரசு வேலைக்கு காத்திருக்கும் போது அவர்களுக்கு பயிற்சி அளித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தாமல் அந்த பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாற்றுவதை ஆதரிக்கிறீர்களா ??
3. ஒரு கிராமத்திற்கு 3 ஆண்டுகள் ஒரு மருத்துவர் பணிபுரிய வேண்டுமா, அல்லது ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் ஒவ்வொரு (வேறுவேறு) மருத்துவர் பணிபுரிய வேண்டுமா ??
//உங்கள் நோக்கம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் அல்லது குறைந்த வயதிலேயே கை நிறய சம்பாதிக்க வேண்டுமெனில//
அதிகம் சம்பளம் எல்லாம் வேண்டாம். ஆனால் இப்பொழுது உள்ள சம்பளம் மூன்றில் ஒரு பகுதியாக குறைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா ????
//கோயிலுக்கு சாமி கும்பிடப் போகும் போது அங்கு சுண்டலும் புளியோதரையும் தான் கிடைக்கும்//
இந்த உதாரனம் தவறானது.
//உங்களுக்கு வகை வகையாகவும் ருசியாகவும் சாப்பிட ஆசை இருந்தால் நீங்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு தான் போக வேண்டும். கோவிலில் உக்காந்து பொலம்பாதிங்க என்று தான் சொல்கிறேன்.//
அப்படி யென்றால் யாருமே MBBS படிக்க வேண்டாம் என்று கூறுகிறீர்களா ??? புரியவில்லை ....
//கிராமப்புறங்களில் ஒரு மருத்துவர் Induction Training, Foundation Training, Management Training, RCH Training, Neonatal Training எல்லாம் முடிதது மூன்று ஆண்டுகள் பணி புரிய வேண்டுமா, அல்லது அதற்கு பதில் ஒரு பயிற்சி மருத்துவர் 4 மாதம் மட்டும் பணி புரிய வேண்டுமா//
உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன். 4 மாதம் பணி புரிவதைவிட 3 ஆண்டுகள் பணி புரிவது தான் சிறந்தது. நீங்கள் சொல்லும் அந்த பயிற்ச்சிகளை எல்லம் முடித்து 3 ஆண்டுகள் கிறாமப் புறத்தில் பணிபுரிய தயாராக இருக்கிறீர்களா?
//TNPSC Waiting Listல் சுமார் 1000 மருத்துவர்கள் அரசு வேலைக்கு காத்திருக்கும் போது அவர்களுக்கு பயிற்சி அளித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தாமல் அந்த பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாற்றுவதை ஆதரிக்கிறீர்களா ??//
தற்சமயத்திற்கு நிரந்தரமாக வேலை கொடுக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த்த அடிப்படையில் பணி புரிவது தவறில்லை. இன்று எல்லா துறையிலுமே ஒப்பந்த அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் அது வலுக்கட்டாயமாக இருப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை.
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி புருனே அவர்களே.நான் எதிர்ப்பது எல்லாம் பொறியியல் மாணவர்களுடன் கம்பேர் பண்ணி பண ரீதியில் பேசுவதால் தான்.அதனால் தான் நீங்கள் ஏன் அந்த படிப்பை தேர்ந்தெடுக்கிறிர்கள் என்பது தான் என் ஆதங்கம்.கிறாமப் புற பணி சம்பந்தமாக சில புதிய தகவல்களை தெரிய படுத்தி இருக்கிறிர்கள். மேலும் எதிர் பார்க்கிறேன். நன்றி.
//நீங்கள் சொல்லும் அந்த பயிற்ச்சிகளை எல்லம் முடித்து 3 ஆண்டுகள் கிறாமப் புறத்தில் பணிபுரிய தயாராக இருக்கிறீர்களா?//
தயார் தான் !!!
There were 5500 application for 300 posts in Primary health Centres (in Tamil Nadu).....
If an appointment order is given, they will join (pay Rs 18,000 per month)
//தற்சமயத்திற்கு நிரந்தரமாக வேலை கொடுக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த்த அடிப்படையில் பணி புரிவது தவறில்லை.//
தமிழக அரசும் வேலை கொடுக்க தயார் தான். கடந்த 2006 மே மாதம் முதல் இன்று வரை சுமார் 4000 மருத்துவர்கள் நிரந்திரமாக Time Scale of Payல் தமிழகத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மருத்துவமாணவர்கள் எதிர்ப்பது என்னவென்றால் 8000 ரூபாய் "உதவித்தொகையுடன்" பீகார், சட்டீஸ்கரில் ஒரு வருடம் கட்டாயமாக பணிபுரிய சொல்வதைத்தான்.
//இன்று எல்லா துறையிலுமே ஒப்பந்த அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. //
மருத்துவம் என்பது நோய் போக்கும் உயிர் காக்கும் புனிதமான சேவை.இதை இப்படி பண ரீதியாக பார்க்கும் போது அந்த மருத்துவ மாணவர்களின் மன நிலை எப்படி இருக்கும்? :) :) :) :)
//கிறாமப் புற பணி சம்பந்தமாக சில புதிய தகவல்களை தெரிய படுத்தி இருக்கிறிர்கள். மேலும் எதிர் பார்க்கிறேன். நன்றி.//
கீழ்க்கண்ட சுட்டிகளைப் பார்க்கவும்
http://vasanthamravi.blogspot.com/2007/11/blog-post_4082.html
http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html
http://thiagu1973.blogspot.com/2007/09/blog-post_3557.html
மருத்துவர்களின் பற்றாக்குறை என்பது தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரு விஷயமே கிடையாது.
அரசு பணியில் சேர்ந்து கிராமப் புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்ய "முதல் தலைமுறை" மருத்துவர்கள் ஆர்வமாகவே உள்ளார்கள்.
(First Generation Doctor -> one whose parents are not doctors)
மருத்துவம் என்பது நிச்சயம் சேவை தான்.சமூக சேவை என்று நீங்களும் ஒத்துக் கொண்டீர்கள்
sir.. its a profession. read Dr.Bruno's posts. Its a profession but since it deals with life of humans, its got its own added responsibility and care. i don't intend to tell that it should be treated like a pakka money making profession, but what i say is, its idiotic to consider medicine as a 100% service.
பதிவு ரொம்ப பெருசா இருக்கு அப்புறமா வந்து,
அப்பவும் படிக்காம போறேன்!!!!
Post a Comment