இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Tuesday, 13 November, 2007

இந்த காலத்து குட்டீஸ்... ஒரு போட்டி மாதிரி!

ஆளாளுக்கு அவங்க பிளாக்ல ஒரு போட்டி நடத்துறாங்களே.. நாமளும் எதுனா ட்ரை பண்ணலாம்னு யோசிச்சிட்டிருந்தப்ப தான்( நம்ப மாட்டிங்களே) இந்த போட்டிக்கான ?! கரு (ஹிஹி.. அப்டி தான சொல்லனும்..) கிடைச்சது.

இத குட்டீஸ் கார்னர்ல தான் போடலாம்னு இருந்தேன். நான் மை ப்ரண்ட் ஆண்ட்டியின் சமீபத்திய பதிவுக்கு போய் அவர் குட்டீஸ் கார்னரில் வெட்டியாய் எடத்த அடச்சிகிட்டு அவர் பிளாக்ல மட்டும் பதிவு போடறத பத்தி போட்ட ஒரு பின்னூட்டத்துக்கு எனக்கு ஜிடாக்கில் வந்து பதில் சொன்னார். அதான் அங்க நீங்க எல்லாரும் ஒரு நாளைக்கு 4 பதிவு போடறிங்களே. எங்க ஈ ஒட்டிட்டிருக்கோ அங்க எல்லாம் போஸ்ட் போட்டு கடமையைய் தவறாமல் செய்யறேன்னு சொன்னாங்க.( அப்பாடா போட்டு குடுத்தாச்சி:P ). அப்போ தான் எனக்கும் லேசா உறைச்சது. நாம கூட பொடியன் என்ற பேர்ல ஒரு பிளாக் ஆரம்பிச்சி அப்புறம் குட்டீஸ் கார்னர் ஆரம்பிச்சதும் அத மறந்துட்டோமே என்று.
அதான் இந்த பதிவ இங்கன போட்டுறலாம்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப டேங்ஸ் ஆண்ட்டி:P.
இதோ விஷயத்துக்கு வாரேன்..:)

இன்னிக்கு சாயங்காலம் என்னோட டீலர் மாமா ஒருத்தர பார்க்க போயிருந்தேன். நான் பொதுவா எங்க டீலர்ஸ்கிட்ட பிஸினஸ் பேசரத விட வெட்டிகதை பேசறது தான் அதிகமா இருக்கும்( அந்த கம்பெனி எங்க போய் உருப்படப் போகுதுனு தான மனசுக்குள்ள திட்றிங்க ). இன்னைக்கு எதேதோ( தப்பா எதும் இல்லீங்கோ:P ) பேசிட்டிருக்கும் போது அவங்க வீட்ல நடந்த ஒரு கலாட்டவ பத்தி சொன்னார்.

அவங்க வீட்ல ஒரு குட்டி பையன்( நம்ம சங்கத்து ஆள் ) இருக்கான்.. நம்ம நிலா மாதிரி கொஞ்சம் வாலு. கொஞ்ச நாள் முன்னாடி அவர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்திருக்கு. அது அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை பற்றிய அழைப்பு. இவர் எதிரில் இருப்பவருடன் மிகுந்த கோபத்துடன் பேசி இருந்திருக்கார். அப்போது அருகில் இருந்த அவர் மகன், அப்பா நான் பேசறேன்.. நான் பேசறேன்.. என்று தொந்தரவு செய்திருக்கான். இவர் இருந்த டென்ஷனில், பேசிட்டிருக்கேன்ல எதுக்குடா தொந்தரவு பன்ற என்று அவர் மகனை அடித்துவிட்டாராம். அவனும் அழுதுகொண்டே சென்று விட்டானாம்.

அடுத்த 2 மணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்து மீண்டும் தொ.அழைப்பு வந்திருக்கு. அந்த டீலர் மாமா வேறு அறையில் இருந்தாராம். அப்போது நம்ம சங்கத்து ஆள் தொலைபேசி அருகில் இருந்தானாம்.

போட்டி !? : இப்போது அங்கு என்ன நடந்திருக்கும்?

சரியான பதிலை சொல்பவர்களுக்கு குட்டீஸ் கார்னரில் ஒரு வாரம் ஸ்டார் அந்தஸ்து வழங்கப் படும். ( தமிழ்மணத்துக்கே நாங்க இப்போ போட்டியாக்கும்:P ).

~போட்டி வெள்ளிக்கிழமை மதியம் இந்திய நேரப் படி முடிவடையும்.~

18 Comments:

said...

அடிங்க...!

அடிங்க...!

அடிங்க...!

(போன் வந்தா அடி விழும்ன்னு ஒரளவுக்கு புரிய ஆரம்பிச்சிருக்கும் பயலுக்கு அதுவும் சங்கத்து ஆளுன்னு வேற சொல்லிட்டீங்களா எவ்ளோ கொடுத்தாலும் தாங்குற தகுதி இருக்கும் (ஆமாம் பொடி நீ அந்த சங்கத்த தானே சொன்ன!?) அதான் இப்படி கத்துவான் - போன் எடுத்தப்பிறகு!)

குறிப்பு - பொடி பசங்க நீங்க வேறவேற அர்த்தம் எடுத்துக்கப்படாது சொல்லிட்டேன் ஆமாம்!!!

said...

//ஆயில்யன் said...

அடிங்க...!

அடிங்க...!

அடிங்க...!//

ஹய்யா.. மாமா சொல்லிட்டாரு..
சங்கத்து ஆளுங்க எல்லாம் ஓடியாங்க.. ஓடியாங்க :P

said...

அய்யோ நான் தான் பர்ஸ்ட்டா அப்ப போட்டியில எனக்கு ஊத்திக்கிச்சு!!!!!
எனக்கு தெரியுமே......!?????

said...

யோசிங்க ஆயில்யன் அங்கிள்.. யார் வேணாலும் எத்தனை பதில்கள் வேணாலும் சொல்லலாம்.

said...

அப்ப்பாட்ட அடி வாங்கிக் கொடுத்திட்டீல்ல - வைய்யா போனெ ....

said...

// cheena (சீனா) said...

அப்ப்பாட்ட அடி வாங்கிக் கொடுத்திட்டீல்ல - வைய்யா போனெ ....//

நாங்க பெரியவங்கள இப்டி எல்லாம் மரியாதை இல்லாம பேச மாட்டோம் :P

said...

நாங்க பெரியவங்கள இப்டி எல்லாம் மரியாதை இல்லாம பேச மாட்டோம் :P


அப்ப்டியா - மரியாதென்னா என்னன்னு தெரியுமா குட்டீஸ் ?

குட்டீசெல்லாம் மருவாத பத்திப் பேசப்படாது. அதுங்க எக்செப்ஷனல் கேசுங்க

jaseela said...

phone eduthu "hello" solli pesa aarambichu iruppan.clue kudukka koodatha podiya?

said...

// jaseela said...

phone eduthu "hello" solli pesa aarambichu iruppan.clue kudukka koodatha podiya? //
தலைப்பை படிங்க ஆண்ட்டி :)

jaseela said...

aah......"hello....appaa innum weettilathaan irukkaru.ungalai thirumbavum thitrathukkulla phone wechidungannu " solli iruppano?....friday waraikkum thaangathu podiya....konjam consider pannu;}

said...

//குட்டீசெல்லாம் மருவாத பத்திப் பேசப்படாது. அதுங்க எக்செப்ஷனல் கேசுங்க//

அதெல்லாம் முடியாது நாங்க மரியாதை தருவோம். நீங்க வாங்கித் தான் ஆகனும்.. :)
( எங்கள கெடுத்து எல்லார்கிட்டயும் திட்டு வாங்க வைக்கப் பாக்கறிங்களா? அதெல்லாம் நடக்காது.. ஆமா அ.மு.க, வ.வா.ச, ப.பா.ச இவங்க எல்லாம் சேர்ந்து எங்க குட்டீஸ் சங்கத்துக்கு எதிரா எதோ சதி பன்றதா ஒரு செய்தி காத்துல பரவுதே.. அதுல உங்களுக்கும் பங்கு இருக்கோ? :) )

said...

// jaseela said...

aah......"hello....appaa innum weettilathaan irukkaru.ungalai thirumbavum thitrathukkulla phone wechidungannu " solli iruppano?....friday waraikkum thaangathu podiya....konjam consider pannu;}//

ஆக்சுவலி.. சண்டே வரைக்கும் கெடு வைக்கலாம்னு தான் நெனச்சேன். ஆனா.. வெள்ளிக்கிழமைக்கு அப்பூரம் ஒரு 5 நாள் லீவு விட வேண்டி இருக்கிறதால வெள்ளிக்கிழமையோட முடிச்சிகிலாம்னு முடிவு பண்ணிட்டேன். :))

jaseela said...

hey podiya.....solla maranthitten.........innikku Nehru mama birthday!so ella podisukalukkum...Childrens Day wishes!!!!!!!....athukkuthaan intha pathiva?but mention pannaliye?

said...

// jaseela said...

hey podiya.....solla maranthitten.........innikku Nehru mama birthday!so ella podisukalukkum...Childrens Day wishes!!!!!!!....athukkuthaan intha pathiva?but mention pannaliye?//

Thanks for ur Wishes Aunty.. இந்த போஸ்ட் அதுகில்ல.. குட்டீஸ் கார்னர்ல விஷ் பண்ணி இருக்கோம் பாருங்க.. :)

said...

அங்கிள் என் அப்பா,அம்மா என்ன வீட்டில இருக்கசொல்லீட்ட்டு சிவாஜி பாக்க போய்ருக்காங்க...டேமேஜர் போன் பண்ணா காய்ச்சில்னு சொல்ல சொன்னாங்க...நீங்க சொல்லீடுங்க பிளிஸ்...நன்றி...வணக்கம்.

மாஸ்டர் மகேந்திரன் said...

சாரி ராங் நம்பர்னு சொல்லி இருப்பான்.. ;)

பக்கத்து வீட்டு பைய்யன் said...

நாங்க எல்லாம் அந்த காலத்து குட்டீஸ். எங்க கிட்ட கேட்டா எப்படி தெரியும்?

said...

'உன்னாலே தானே அப்பா அடிச்சாரு..'ன்னு சொல்லி போனை கீழே போட்டு உடைத்து மிதி மிதின்னு
மிதிக்கிறான். ஓகேவா குட்டீஸ்?

Tamiler This Week