இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comMonday 5 November, 2007
எங்க ஊர் குடும்பப் பெயர்கள். செம டமாசு :))
எங்க ஊர்ல எல்லா குடும்பங்களுக்கும் எதாவது ஒரு குடும்ப புனைப்!? பெயர் இருக்கும். அதெல்லாம் படு வேடிக்கையா இருக்கும். இப்போ வரைக்கும் அதுல பாதிப் பேருக்கு மேல என்ன அர்தம்னு தெரியாமலே நானும் அவங்கள அப்டியே தான் அடயாளப் படுத்திகிறேன் :P .
எங்க ஊர்ல இருக்கிரவங்களோட பாதிப் பேர் எனக்கு மறந்துப்போச்சி :( மாதம் ஒரு முறை ஊருக்கு போயும். நான் வீட்டுக்கு போனா எங்க வீட்ட தவிர வேர எங்கயும் போறதில்ல. பக்கத்து வீட்டுக்கோ அல்லது பக்கதுல இருக்கிற தாத்தா வீட்டுக்கோ கூட.
( எங்க ஊர்ல பாட்டி என்ற சொல்லே வழக்கில் இல்லை :). பாட்டியும் எங்களுக்கு தாத்தா தான். எங்க சுத்து பட்டு ஊர்ல எல்லாம் இதே நெலமை தான்).
யார் வீட்டுக்கும் போகவும் மாட்டேன்.. அதே போல ஊர்ல கூடவும் அவ்வளவா பேசவும் மாட்டேன். வீட்ல அத விட மோசம்.ஊர்ல எனக்கு அமைதியின் சிகரம்னு பேரு :P.
சரி மேட்டருக்கு வரேன். பாதிக்கு மேல மக்கள் பேரு எனக்கு மறந்துட்டதால ஞாபகம் இருக்கிற கொஞ்சம் பேர மட்டும் உங்களுக்கு சொல்றேன்.
பொன்னமூட்டு மணி
குந்துகாலமூட்டு ஜெகதீசன்
வண்ணாமூட்டு முருகன்
கொங்காமூட்டு பழனி
நெண்டுக்காமூட்டு வரதன்
தெருக்மோட்டு குப்பன்
ஜினுங்கூட்டு மணி
குண்டமூட்டு குப்புசாமி
மூக்கமூட்டு சிவாஜி
காளையமூட்டு அம்பு( அன்பு)
கரியமூட்டு முருகன்
புட்டமூட்டு சொக்கு
வெள்ளூட்டு பிரகாசம்
ஜொள்ளமூட்டு பன்னீர் :P
மொட்ட ஊட்டு தருமன்
கெழக்குமோட்டு கைலாசம்
வடக்குமோட்டு புட்டன்
புக்கமூட்டு முருகன்
அம்மாசியூட்டு குமார்
தீத்தாமூட்டு குமரன்
புட்டுக்கொள்ளமூட்டு சங்கர்
மீசகாரமூட்டு சாமிக்கண்ணு
மோட்டமூட்டு மணி
குப்பமூட்டு காமராஜ்
செங்காமூட்டு மணி
ஊர்கவணமூட்டு_______( சொல்ல மாட்டோம்ல)
ஊடு என்றால் வீடு....
குப்பமூட்டு = குப்பன் + ஊட்டு = குப்பன் வீட்டு
அதாவது குப்பமூட்டு காமராஜ் என்றால் காமராஜின் அப்பாவோ அல்லது தாத்தாவோ அல்லது கொள்ளுத்தாத்தாவோ குப்பன் என்ற பெயரில் இருப்பார் அல்லது இருந்து இருப்பார். :)
இந்த பெயர்களுக்கு சொந்தக்காரர்கள( எல்லாரும் எனக்கும் சொந்தக்காரங்க தான்) எல்லோரும் இன்னும் இருக்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்னால் இது போன்று சுமார் 200 பெயர்களுக்கு மேல் எனக்கு தெரியும். இப்போ எல்லாம் மறந்துப் போச்சி. ( எல்லாம் இந்த நகரத்துப் பசங்களோட கெட்ட சகவாசம் :P )
19 Comments:
அவனா நீய்யி?
Ayya,
ஊர்கவணமூட்டு பொடியன், namma ooru sangeeringala?
Ille suthupattu Namakkal, Rasaipurama
//பொடிசுங்க - My Friendz
இதுல நான்,நிலா,பவன் and அபி இருக்கோம்.//
இந்த குழந்தை (நாந்தான்) கூடத்தான் இருக்கு. :-)
//எங்க ஊர் குடும்பப் பெயர்கள். செம டமாசு :)) //
தமாசா இல்லையான்னு நாங்கதான் சொல்லுவோம். இருங்க படிச்சுட்டு வாரேன். ;-)
//( எங்க ஊர்ல பாட்டி என்ற சொல்லே வழக்கில் இல்லை :). பாட்டியும் எங்களுக்கு தாத்தா தான்.//
பாட்டிக்கும் தாத்தாவுக்கும் கூட வித்தியாசம் தெரியாமத அங்கிளாயிருக்கீங்களே.... :-P
//யார் வீட்டுக்கும் போகவும் மாட்டேன்.. அதே போல ஊர்ல கூடவும் அவ்வளவா பேசவும் மாட்டேன். வீட்ல அத விட மோசம்.ஊர்ல எனக்கு அமைதியின் சிகரம்னு பேரு :P.//
இதைத்தான் சொல்லுவாங்க.. ஊமை ஊரை கெடுக்கும்ன்னு. :-P
// காந்தி said...
அவனா நீய்யி?//
:((((((((((((((
.:: மை ஃபிரண்ட் ::. said...
//பொடிசுங்க - My Friendz
இதுல நான்,நிலா,பவன் and அபி இருக்கோம்.//
இந்த குழந்தை (நாந்தான்) கூடத்தான் இருக்கு. :-)
ரிப்பிட்டெய்ய்ய்ய், சீக்கிரம் வந்து நம்ம சங்க பணிகள் எல்லாம் ஸ்டார்ட் பண்னுங்க....வீ அர் வெய்டிங்....
//.:: மை ஃபிரண்ட் ::. said...
//பொடிசுங்க - My Friendz
இதுல நான்,நிலா,பவன் and அபி இருக்கோம்.//
இந்த குழந்தை (நாந்தான்) கூடத்தான் இருக்கு. :-) //
...இவங்க கொழந்த்தயாமாம் :P
( என்ன கொமுமை சீனியர் இது? :)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
//( எங்க ஊர்ல பாட்டி என்ற சொல்லே வழக்கில் இல்லை :). பாட்டியும் எங்களுக்கு தாத்தா தான்.//
பாட்டிக்கும் தாத்தாவுக்கும் கூட வித்தியாசம் தெரியாமத அங்கிளாயிருக்கீங்களே.... :-P //
ஒரு வாட்டி திலகவதி IPS ஆண்ட்டி குமுததுல்ல எழுதி இருந்தாங்க படிக்கலயா? ஆம்பள தாத்தா.. பொம்பள தாத்தானு.. அவாளுக்கும் வித்தியாசம் தெரியாதுன்னு சொல்றேளா மை பிரண்ட் ஆண்ட்டி.? :))
//.:: மை ஃபிரண்ட் ::. said...
//யார் வீட்டுக்கும் போகவும் மாட்டேன்.. அதே போல ஊர்ல கூடவும் அவ்வளவா பேசவும் மாட்டேன். வீட்ல அத விட மோசம்.ஊர்ல எனக்கு அமைதியின் சிகரம்னு பேரு :P.//
இதைத்தான் சொல்லுவாங்க.. ஊமை ஊரை கெடுக்கும்ன்னு. :-P //
இதைத் தான் சொல்வாங்க.. சொந்த செலவுல சூனியம் வச்சிகிறதுனு.. :(
அவ்வ்வ்வ்..அவ்வ்வ்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
//Baby Pavan said...
.:: மை ஃபிரண்ட் ::. said...
//பொடிசுங்க - My Friendz
இதுல நான்,நிலா,பவன் and அபி இருக்கோம்.//
இந்த குழந்தை (நாந்தான்) கூடத்தான் இருக்கு. :-)
ரிப்பிட்டெய்ய்ய்ய், சீக்கிரம் வந்து நம்ம சங்க பணிகள் எல்லாம் ஸ்டார்ட் பண்னுங்க....வீ அர் வெய்டிங்....//
வந்துடறேன் தோழா.. :)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
//எங்க ஊர் குடும்பப் பெயர்கள். செம டமாசு :)) //
தமாசா இல்லையான்னு நாங்கதான் சொல்லுவோம். இருங்க படிச்சுட்டு வாரேன். ;-) //
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா.. ச்ச.. மை பிரண்ட் ஆண்ட்டி..
கடைசி வரைக்கும் சொல்லவே இல்லயே.. :(
///.:: மை ஃபிரண்ட் ::. said...
//பொடிசுங்க - My Friendz
இதுல நான்,நிலா,பவன் and அபி இருக்கோம்.//இந்த குழந்தை (நாந்தான்) கூடத்தான் இருக்கு. :-)///
எங்களை மாதிரி சின்ன பசங்க இருக்குற இடத்தில் அக்காவுக்கு என்ன வேலைனு கேக்கேன்.
எங்கள் ஊர்ப் பெயர்களும் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
போக்காலி வீடு,
புண்ணாக்கு வீடு,
ரொட்டிக்காரர் வீடு,
பிடாரன் வீடு......
நிறைய மறந்து விட்டது.அப்பாவிடம் கேட்க வேண்டும்.ஞாபகப் படுத்தியதற்கு நன்றி
நீ யார்மூட்டு ச்சே யார்வூட்டு பொடியன் சொல்லவே இல்லியே
:-))))
மை ப்ரெண்ட் நீங்க கொயந்தையா!?!?!!?!?
தாங்குமா இந்த பூமி!?!?!?!?!
Hehehe... Awesome post..Enga amma appa vum ipdi yethathu oora pathi pesumbothu pesitu irupanga.. :D Ketta artham solla matanga! :(
வாங்க பொன்ஸ்... உங்க அண்ணிகிட்ட கேட்டு பாருங்க.. இன்னும் நெறய சொல்வாங்க :)).. அவங்களும் எங்க ஊரு தான? :P
நண்பா எங்க 4 நாளா காணொம்.....தீபாவளி சந்தொசமா கொண்டாடியாச்சா...
Post a Comment