இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Friday, 2 November, 2007

இலவசக் கொத்த்னார் கேள்விகளுக்கு பதில்கள்.

நண்பர்களே இலவசக் கொத்தனார் தன் இலவசம் வலைப்பூவில் குயிஜ( அப்டித்தான் அவா சொல்றா ) போட்டி நடத்துறார். அதில் நானும் பங்கு பெற்று சில பதில்களை சொன்னேன். அந்த கேள்விகளுக்கு பதில் தேடியதில் பல அரிய விஷயங்கள தெரிஞ்சிகிட்டேன். அதுக்கு கொத்தனாருக்கு ரொம்ப நன்றி. நான் சொன்ன பதிலில் ஒன்றை மட்டும் தவறு என்று சொல்லிவிட்டார் (இப்படி ஏமத்திட்டயே கூகுள்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ) இன்னும் இரண்டு பதில்களை Pending வச்சிருக்கார். அவர் நெனைக்கிற பதில சொல்லனுமாம். (எனக்கு ஜோசியம் தெரியாதுனு யார்னா சொல்லுங்க அவர்கிட்ட ப்ளீஸ்). எது எபப்டியோ உண்மையில் அது மனம் விட்டு பாராட்டக் கூடிய செயல். எனக்கு நேத்து தான் இந்த குயிஜ பத்தி தெரிய வந்தது. அதனால இந்த வாட்டி பெரிசா கண்டுக்கல..( மண் ஒட்ட விட மாட்டோம்ல ... இதுல கொஞ்சம் பேரு எல்லாத்துக்கும் சரியான பதில வேற சொல்லிட்டாங்க.. எப்டித்தான் முடியுதோ.. அவ்வ்வ்வ்வ் :( ).

சரி இப்போ தலைப்புக்கு வரேன்.. அதாவது யார்க்காச்சும் கொத்தனார் கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சதுனா அங்கன போய் சொல்லுங்கண்ணேன். உங்க அறிவ பத்தி அல்லாரும் தெரிஞ்சிக்கட்டும். என்னத்த பெரிய அறிவு.. எல்லாரும் முன்னாடியே பதில தெரிஞ்சிகிட்டா சொல்றாய்ங்க.. எல்லாம் கூகுள் , விக்கிபீடியா புண்ணியதுல தான சொல்றாங்கனு யாரும் சலிச்சிக்காதிங்க. அதுல சரியா தேடரதுக்கும் நமக்கு கொஞ்சமாச்சும் அறிவு வேணுமாக்கும். ஆகவே பெரிசுகளே பொடிசுகளே அங்கிட்டு போய் பதில சொல்லுங்க. அப்போ தான் இது மாதிரி நல்ல சமாச்சாரங்களும் தமிழ் வலைப்பதிவு உலகத்துல அப்பப்போ கெடைக்கும்.

( ஹிஹி.. அந்த கேள்விங்களுக்கு இங்க பதில் இருக்கும்னு நெனச்சி வந்திங்களாக்கும்.. அஸ்கு.. புஸ்க்கு..அப்பள வட... அந்த கேள்விங்கள தயார் பண்ண அவர் எவ்ளோ கஷ்டப் பட்டிருப்பார்?)

மேலும் என் வலைப்பூ தமிழ்மணத்தில் இன்று ( கொஞ்ச நேரத்துக்கு முன்னால ) சேர்த்துக் கொள்ளப் பட்டிருப்பதால் அதில் தெரியுமாறு ஒரு பதிவை போடுவது என்று நினைத்ததாலும் தமிழ்மணத்தில் தெரியப் போகும் முதல் பதிவிற்கு பெருமளவில் ஆட்களைத் திரட்ட வேண்டும் என்ற அரிய நோக்கத்திற்காகவும் தான் இந்த பதிவிற்கான தலைப்பு வைக்கப் பட்டதெயன்றி வேறெந்த உள் ( குத்தும்) நோக்கமும் இல்லை என்பதை உங்கள் முன்னிலையில் தெரிவித்துக் "கொல்ல" கடமைப்ப் பட்டுள்ளேன்.

நன்றி..வணக்கம்.. மீண்டும் வருக..
(பிகு: இந்த ஒடம்பு எவ்வளவு அடி தாங்கும் என்பதை தெரிந்துக் கொண்டு அடிக்கவும்.. அப்புறம் கொலக் கேசு ஆய்டும்..ஆமா.. :P )

4 Comments:

said...

வாழ்த்துக்கள் ஜூனியர்,தமிழ்மணத்துல வந்தாச்சு. இனி வர போஸ்ட்லாம் இடி மழையாத்தான் இருக்கும்ன்னு நம்புகிறேன்

said...

நன்றி சீனியர்..
எல்லாம் என் சீனியர் ஆசிர்வாதம் :))
நாம எல்லம் நடிச்ச விடியோவ போட்டிருக்கேன் பாத்தேளா சீனியர்?

said...

//
இனி வர போஸ்ட்லாம் இடி மழையாத்தான் இருக்கும்ன்னு நம்புகிறேன்
//

ரிப்பீட்டேய்
:-))))))

said...

//மங்களூர் சிவா said...

//
இனி வர போஸ்ட்லாம் இடி மழையாத்தான் இருக்கும்ன்னு நம்புகிறேன்
//

ரிப்பீட்டேய்
:-))))))//

நன்றி சிவா மாம்ஸ்..
எல்லாம் என் சிவா மாமா ஆசிர்வாதம் :))

மாம்ஸ் மீ டூ ரிப்பீட்டடேய்... ( Repeated.. அந்த டேய் இல்ல ;()

Tamiler This Week