இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 3 November, 2007

கோவையில் இசை மழை.. சும்மா அதிரப் போகுதுல..

கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் கோவைல சூரியன் FM and ரெய்ன்போ FM மட்டுமே இருந்தது. ரெய்ன்போ FM பத்தி சொல்லவே வேணாம். அவங்களும் அவங்க வர்ணனைகளும்... சகிக்காது.. இந்த சூரியன் FM அதுக்கு மேல.. விளம்பரத்த போட்டே கொன்னுடுவாங்க. வெரைட்டியான நிகழ்ச்சிகளும் இல்ல. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் போன் பேசரது தான். ஒரே மொக்கைபா( அத நான் சொல்றேன் :( ). அதனால என் மொபைல்ல FM கேக்கற வசதி இருந்தும் அத யூஸ் பன்னாம இருந்தேன்.

அட வீணா( என் ஆளு இல்ல) போன பொடியா.. என்னடா சொல்ல வறனு நீங்க கேக்கறதுக்கு முன்னாடி என் மனசாட்சி( இது நிஜமா.. யார்னா மனசாட்சி பத்தி ஒரு பதிவு போடுங்கப்பா.. போட்டிருந்தா தந்தி குடுங்க) என்ன தல கீழ தொங்க விட்டு கேக்குதுபா :(

இப்போ நம்ம கோவைல(நான் கோவைல இருக்கேன் என்கிற அரிய தகவலை உங்ககிட்ட சொல்லியாச்சிபா:P) FM ரேடியோஸ் லைன் கட்டி அடிக்கிறாங்கபா. ரேடியோ மிர்ச்சி..செம ஹாட்டு மச்சி... ஹலோ FM.. இதான் ரைட் நம்பர்... ரேடியோ சிட்டி .. இவங்க எல்லாம் இப்டி க்யூ கட்டி அடிக்கிறாங்கபா... இவங்க எல்லாம் இப்போதைக்கு சோதனை(ஒலிபரப்பு) பண்ணிட்டு இருக்காங்க... சோதனையை ஒலிபரப்போட நிறுத்திப்பாங்கனு நம்புவோம். நிகழ்ச்சில சோதிக்காம இருந்தா சரி.

இப்போ என் மொபைல எத்தன வாட்டி சார்ஜ் பன்றேன்னு எனக்கே தெரியலபா.. :). கோவை இப்போ குளிருதுனு மட்டும் சொல்லிட்டிருந்த நாங்க இனி கோவை அதிருதுனு சொல்லப் போறோம்ல :P. இந்த பதிவ எழுதும்( அல்லது டைப் பன்னும்) போது கூட ரேடியோ மிர்ச்சி( சுச்சிய தான் ரொம்ப மிஸ் பன்றேன்) கேட்டுட்டு தான் இருக்கேனாக்கும். ;)

ரேடியோ மிர்ச்சில வர அந்த கானா பாட்டு..அட அட.. சொகமா தான் கீதுபா..

4 Comments:

Anonymous said...

யோவ் கோயமுத்தூரை ஆப்கானிஸ்தானுக்கு மாத்தீட்டிங்களா? கொஞ்ச நாள் வெளிநாட்டுக்கு போனா அதுக்குள்ள இப்படி பண்ணீடீங்களேயா!!!

(நீர் கோயமுத்தூர்ல இருக்கறன்கறீர்,உம்ம புரபைல் ஆப்கானிஸ்தான்குது அதான்...ஹி ஹி)

Anonymous said...

உக்கடம், ஆத்துப்பாலம் பக்கத்திலு இருந்துட்டு ஆப்கானிஸ்தான்ல இருக்கேன்னு சொல்றீங்களா.?? இதுவும் இந்தியால தானே இருக்கு

said...

//யோவ் கோயமுத்தூரை ஆப்கானிஸ்தானுக்கு மாத்தீட்டிங்களா? கொஞ்ச நாள் வெளிநாட்டுக்கு போனா அதுக்குள்ள இப்படி பண்ணீடீங்களேயா!!!//

ரியல் எஸ்டேட் பிஸினஸ் சக்க போடு போடுது இங்க.. நீங்க வரதுக்குள்ள ப்ளாட் போட்டு வித்தாலும் ஆச்சர்யபடரதுகில்ல அனானி அங்கிள். :)

said...

//சின்ன அம்மிணி said...

உக்கடம், ஆத்துப்பாலம் பக்கத்திலு இருந்துட்டு ஆப்கானிஸ்தான்ல இருக்கேன்னு சொல்றீங்களா.?? இதுவும் இந்தியால தானே இருக்கு//

.....சொல்லவே இல்ல ;P.... நல்லாத்தான் கெளப்புராய்ங்கய்யா புரளிய :(

Tamiler This Week