இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Sunday 21 December, 2008

அபியும் நானும் - டபுள் விமர்சனம்


பெண் குழந்தைகள் என்றால் அப்பாக்கள் ஓவர் அழிச்சாட்டியம் செய்வார்கள். அது தான் இந்த படத்தின் முதல் பாதி. படம் அழகாக நகர்கிறது. குழந்தையின் PreKG அட்மிஷனுக்கு பண்ணும் ஆர்ப்பாட்டம் ஜாலி. அதற்காக அவர்கள் பண்ணும் வாக்குவாதம் இப்போது எல்லார் வீட்டிலும் நடப்பது தான்.

“ குழந்தைக்கு சொல்லிக்குடுக்கும் அளவுக்கு அப்பா அம்மாவுக்கு நாலேஜ் இருக்கான்னு பரீட்சை வைப்பாங்க”ன்னு ஐஸ்வர்யா சொல்லும் போது “ அப்போ பள்ளி கூடத்துல என்ன புடுங்குவாங்களாம்” என்று நந்துf/oநிலா மாதிரி ப்ரகாஷ்ராஜ் கேட்பார் என்று எதிர்பார்த்து எமாந்தேன். அதற்காக அலெக்சாண்டரின் குதிரையின் பெயர் என்ன என்று தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு மெனக்கெட்டு தயார் செய்வது டூ மச்சி.. இதற்கும் குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? சிலர் பல வருடங்களாக குழந்தையின் அடிமிஷனுக்காக பரீட்சை எழுத வருகிறார்களாம். கொய்யால கொழந்தைக்கு அட்மிஷனா? இல்ல வயசுக்குவந்த பையன்/பொண்ணுக்கு அட்மிஷனாடா?

பொண்ணு பள்ளியில் படிக்கும் போதே வெளிநாட்டு பல்கலைகழகங்களோட அப்ளிகேஷனை கையில் வைத்துக் கொண்டு அலையும் அப்பாக்களை விட கல்லூரி முடிந்ததும் எந்த வெளிநாட்டு மாப்பிள்ளை சிக்குவான் பொண்ண எப்போ தொரத்திவிடலாம்னு காத்துட்டு இருக்கும் அப்பாக்கள் அதிகம் இருக்கும் இந்த காலத்தில் MBA படிக்க பொண்ணு டில்லி போவதை எதிர்க்கிறார் ப்ரகாஷ்ராஜ். சரி தொலையட்டும்..

ஒருவழியாக முதல் பாதி சுபம்.

இரண்டாம் பாதி.. அடக் கொடுமையே!.. ப்ரகாஷ்ராஜ் எனும் அப்பனை கேனையனாக காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அநியாயத்துக்கு ஜோக்கராய் தெரிகிறார். கல்லூரியில் படிக்கும் பொண்ணுகிட்ட “ உன் வாழ்க்கையை நீயே அமைச்சிக்கிறது உன் உரிமை மட்டுமில்லை.. கடமையும் கூட”ன்னு டகால்ட்டி டயலாக் விடுபவர் பொண்ணு ஒருத்தனை லவ் பன்றான்னு தெரிஞ்சதும் கொதித்தெழுகிறார். அந்த பையன் ஒரு பஞ்சாபி என்று தெரிந்ததும் மேலும் நொந்து போகிறார். அப்பா செல்லமாக வளர்ந்த ஒரு பெண் தன் கல்யாண தேதியை சாப்பிடும் நேரத்தில் அப்பாவிடம் தகவலாய் தெரிவிக்கிறார். கல்யாண தேதி பற்றி அவரிடம் கேட்க கூட மாட்டாராம். கல்யாணம் எப்படி நடக்க வேண்டும் என்பது உட்பட எல்லாம் ப்ரகாஷ்ராஜ்க்கு தெரியாமலே தீர்மாணிக்கப் படுகிறது.

தன் மீதான் பாசம் குறைவதாக படுவதால் ப்ரகாஷ்ராஜ்க்கு மாப்பிள்ளை மீது வெறுப்பு வருகிறது. பிறகென்ன? இருக்கவே இருக்கு தமிழ் சினிமா சீன் டெம்ப்ளெட்.

கதவருகே காரணமே இல்லாமல் நாயகி வந்து நிற்கும் போது வீட்டில் ஒரு வெட்டி கும்பல் உட்கார்ந்துக் கொண்டு நாயகனுக்கே தெரியாத அவனை பற்றின நற்குணங்களை எல்லாம் பட்டியல் போடுவார்கள். உடனே ஒளிந்திருந்து இதை ஒட்டு கேட்கும் நாயகிக்கு நாயகன் மீது நல்ல அபிப்ராயம் வந்துவிடும்.

இதே போல் ப்ரகாஷ்ராஜ், வீட்டுக்கு வரும் போது அந்த சர்தார்ஜி மாப்பிள்ளையின் பேட்டி டிவியில் வருகிறது. நடு வழியில் நின்றுவிடும் காரை மாப்பிள்ளை சரி செய்கிறார். இதெல்லாம் கூட பரவாயில்லை. திட்டக் கமிஷனின் உறுப்பினராய் மட்டுமே இருக்கும் மாப்பிள்ளையிடம் பிரதமரே நேரடியாக போன் செய்து முனுசாமி இருக்காருங்களா என்பது போல் ஜோகிந்தர் இருக்கிறாரான்னு பேசுகிறார். பாவம் பிரதமர் ஆபிசில் வேலை பார்க்கும் டசன் கணக்கான செயலர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள் போல.

பிறகு மாப்பிள்ளையின் சேவை மனப்பான்மை எல்லாம் தெரியவைத்து ப்ரகஷ்ராஜ் மனதை மாற்றுகிறார்கள். ஆனால் இதை எதுவும் சீரியசாக செய்யவில்லை. ஒவ்வொரு சீனிலும் ப்ரகஷ்ராஜ் கட்டாயமாக வழிகிறார். பார்க்கவே பாவமாக இருக்கிறது. ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சி படமும் முடிகிறது.

இந்த மாதிரி கதைக்கெல்லாம் துறுதுறுன்னு குறும்பு கொப்பளிக்க இருக்கிற நாயிகி இருக்க வேணாமா? திரிஷா தான் கிடைத்தாரா? குழந்தைகளாக வரும் குட்டிப் பெண்கள் மனதில் நிற்கிறார்கள். திரிஷா சகிக்கலை..

அபபா மகள் இடையிலான உணர்வு பூர்வமான உறவுக்கும் இந்த படத்துக்கும் பெரிய சம்பந்தம் எதும் இல்லை. முதல் பாதியில் மட்டுமே ஓரளவு சம்பந்தம் தெரிகிறது.

........மேலே இருக்கும் விமர்சனம், தியேட்டரை வாழ்க்கைக்கான வகுப்பறையாக நினைத்து பாடம் கற்க செல்பவர்களுக்கு மட்டுமே.....

என்னை மாதிரி பொழுதுபோக்குக்கு சினிமா பார்ப்பவர்களுக்கு :
முதல் பாதி - அழகு - பார்க்கலாம்..
2வது பாதி - ஜாலி - எதார்த்ததை எல்லாம் தூக்கி எங்காவது வைத்துவிட்டு பார்க்கலாம்.
.. பாடல்களைத் தவிர அதிக பட்சமாக 15 முதல் 20 நிமிடங்கள் தான் எரிச்சல் படுத்தும் காட்ச்சிகள் இருக்கின்றன. மற்ற படி போர் அடிக்காமல் தான் இருந்தது...

20 Comments:

said...

வித்தியாசமான விமர்சனம்.நல்லா எழுதியிருக்கீங்க.

said...

//என்னை மாதிரி பொழுதுபோக்குக்கு சினிமா பார்ப்பவர்களுக்கு :
முதல் பாதி - அழகு - பார்க்கலாம்..
2வது பாதி - ஜாலி - எதார்த்ததை எல்லாம் தூக்கி எங்காவது வைத்துவிட்டு பார்க்கலாம்.// Enna Sun tv Vimarsanam mathuree erukuthu.....................

nalla erukku...........

said...

//துறுதுறுன்னு குறும்பு கொப்பளிக்க இருக்கிற நாயிகி இருக்க வேணாமா? //

பல் வெளக்கி வாய் கொப்பளிக்க சொல்லுவாங்க கேள்வி பட்டு இருக்கேன், ஆனால் குறும்பு கொப்பளிக்க என்றால் என்ன?

said...

விமர்சனத்துக்கு நன்றி :) இப்படி ஒரு மொக்க கதையை நான் பார்க்காமல் காத்ததுக்கு உங்களிடம் கடமைப் பட்டிருக்கிறேன் :P

said...

//பல் வெளக்கி வாய் கொப்பளிக்க சொல்லுவாங்க கேள்வி பட்டு இருக்கேன், ஆனால் குறும்பு கொப்பளிக்க என்றால் என்ன?//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

//Podiponnu - பொடிப் பொண்ணு said...
//பல் வெளக்கி வாய் கொப்பளிக்க சொல்லுவாங்க கேள்வி பட்டு இருக்கேன், ஆனால் குறும்பு கொப்பளிக்க என்றால் என்ன?//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//

டபுள் ரிப்பீட்டேய் :-)))

said...

நல்ல விமர்சனம்.

Anonymous said...

சுமாரா இருக்கும்போல இருக்கு. பாத்துருவோம்.

said...

ராதாமோகன் ஏமாற்ற மாட்டாரே!

said...

//குசும்பன் said...
//துறுதுறுன்னு குறும்பு கொப்பளிக்க இருக்கிற நாயிகி இருக்க வேணாமா? //

பல் வெளக்கி வாய் கொப்பளிக்க சொல்லுவாங்க கேள்வி பட்டு இருக்கேன், ஆனால் குறும்பு கொப்பளிக்க என்றால் என்ன?

//

த்ரிபுள் ரிப்பீட்டேய்ய்ய்

said...

இந்த மாதிரி கதைக்கெல்லாம் துறுதுறுன்னு குறும்பு கொப்பளிக்க இருக்கிற நாயிகி இருக்க வேணாமா? திரிஷா தான் கிடைத்தாரா? குழந்தைகளாக வரும் குட்டிப் பெண்கள் மனதில் நிற்கிறார்கள். திரிஷா சகிக்கலை..

நான் கூட நெனச்சேன் ஏன் இந்தம்மாவை பொண்ணா செலக்ட் பண்ணாங்க்ன்னு, அந்த வியட்நாம் வீடு சாங் பேமஸ் பொண்ணைப் போட்டிருக்கலாம்ல.

நல்லா விமர்சிச்சி இருக்கீங்க.
படம் பாக்கணும்.

said...

அப்போ ராதா மோகன் தமிழ் சினிமா நீரோட்டத்தில சேந்திட்டாரு.. வாழ்த்துக்கள்..

பார்க்கலாம் என்று இருந்தேன்..

ம்.. பார்க்கலாம்.

said...

/இந்த மாதிரி கதைக்கெல்லாம் துறுதுறுன்னு குறும்பு கொப்பளிக்க இருக்கிற நாயிகி இருக்க வேணாமா? திரிஷா தான் கிடைத்தாரா? குழந்தைகளாக வரும் குட்டிப் பெண்கள் மனதில் நிற்கிறார்கள். திரிஷா சகிக்கலை../

நூத்துல ஒரு வார்த்தை...:)

said...

/சென்ஷி said...

//Podiponnu - பொடிப் பொண்ணு said...
//பல் வெளக்கி வாய் கொப்பளிக்க சொல்லுவாங்க கேள்வி பட்டு இருக்கேன், ஆனால் குறும்பு கொப்பளிக்க என்றால் என்ன?//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//

டபுள் ரிப்பீட்டேய் :-)))/


ட்ரிபிள் ரிப்பீட்டேய்...:)

said...

/
திரிஷா சகிக்கலை../

:))))))))))

said...

ஆஹா அங்ஙன போய் விமர்சனம் படிச்சிட்டு படம் பார்த்து தள்ளிரலாம்னு... இங்ஙன வந்தா இப்பிடி போட்டு தாக்குறாய்ங்க...


நீங்க சாதா பொடியனா..இல்ல மர்ம பொடியனா..?

said...

//நீங்க சாதா பொடியனா..இல்ல மர்ம பொடியனா..?//

சொக்குப் பொடியனா கூட இருக்கலாம் :))

said...

//
//குசும்பன் said...
//துறுதுறுன்னு குறும்பு கொப்பளிக்க இருக்கிற நாயிகி இருக்க வேணாமா? //

பல் வெளக்கி வாய் கொப்பளிக்க சொல்லுவாங்க கேள்வி பட்டு இருக்கேன், ஆனால் குறும்பு கொப்பளிக்க என்றால் என்ன?

//

த்ரிபுள் ரிப்பீட்டேய்ய்ய்//

ஃப்ரிபில் (அஞ்சாவதுனு நெனைக்கறேன்) ரிப்பீட்டேய்ய்ய்ய்

said...

தமிழ் சினிமாவின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தாங்கள் வரவு புரிந்து, சிலவிருதுகளை வழங்கும் படி கேட்டு கொள்கிறேன்... இதோ உங்களுக்கானஅழைப்பிதழ்..


http://lollum-nakkalum.blogspot.com/2008/12/blog-post_26.html


மறக்காம வாங்க... அழைப்பிதழில் உங்கள் பெயர் போட்டாச்சு... அப்றோம்நிலவரம் கலவரம் ஆயிடும்... சொல்லி புத்தேன்....


PS: Post perusssssssu!! Viral reagigal pathiram!!! Padhikum pothu glows pothu padikavum!!!!

said...

நன்றி நாடோடி :)
_____________

நன்றி பிசி :)
______________
குசும்பா .. எதோ தெரியாம சொல்லிட்டேன் சாமி.. ;(
______________

பொடிப்பொண்ணு : எஸ்கேப் ஆகிட்டயே.. :)
______________

நன்றி சென்ஷி :)
______________

நன்றி சின்னப் பையன் :)

Tamiler This Week