இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comTuesday, 25 November 2008
அவியல் - பரிசல்காரன் கவனிக்க
நம்ம பரிசல்காரர் அவியல் என்ற பெயரில் தவறான தகவலைத் தந்து ஊரை ஏமாற்றுகிறார்... இதோ உண்மையான அவியல்..
தேவையான பொருட்கள்
- கத்தரிக்காய் 2
- வாழைக்காய் 2
- உருளைகிழங்கு 2
- கேரட் 2
- பீன்ஸ் 100 கிராம்
- பூசணிக்காய் 2 பெரிய துண்டுகள்
- முருங்கக்காய் 3
- தேங்காய் பாதியளவு
- புளித்தத் தயிர் 2 கப்
- பச்சை மிளகாய் 5
- மஞ்சள் பொடி ½ டேபிள் ஸ்பூன்
- கடுகு ½ டேபிள் ஸ்பூன்
- உப்பு தேவைக்கேற்ப ( சூடு சொரணைக்கேற்ப )
காய்கறிகள் அனைத்தையும் நன்றாகக் கழுவி 2 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.( காய்கறிகளை மட்டும்.. கையையும் சேர்த்து அல்ல)..
பிறகு மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்... பின் தேங்காயை துருவி அதனுடன் சிறிதளவு சீரகம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும். சீரகம் சேர்த்தால் நல்ல பசை போன்று அரைக்கமுடியும்.( டிப்ஸ்மா டிப்ஸ்.. )
இப்போது வேக வைத்த காய்கறிகளுடன், அரைத்த தேங்காய் + பச்சை மிளகாய் கலவையை சேர்த்து அதனுடன் புளித்த தயிர் மற்றும் சூடு சொரணைக்கேற்ப உப்பும் சேர்த்து குறைவான வெப்பத்தில் சில நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்.
பின் கடைசியாக சிறிதளவு கடுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பி்லை சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும்.
....... அவியல் ரெடி.......
பரிசலாரே இது தான் அவியல்.. கண்டதையும் சொல்லி ஊரை எமாற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.. :))
.....எங்களுக்கும் சமையல் தெரியும் ஓய்.. :))
Subscribe to:
Post Comments (Atom)
63 Comments:
சூப்பருங்கண்ணா.. அப்படியே நான் கலக்குற காக்டெய்ல் செஞ்சும் காட்டிடுங்க. குடியுலகம் ச்சீ வலையுலகம் வாழ்த்தும்
என்னது இதெல்லாம்
ஆமா - அவியல் மேல ஒரு மரம் வளந்துருக்கே - அது என்ன ? தேவையான பொருட்கள் லிஸ்ட்லே இல்லியே - சைடு டிஷ்ஷா ?
இப்படி எனக்கு சமைக்க எல்லாம் தெரியுமுன்னு சொன்னா பொண்ணு தந்திருவாங்கன்னுதானே இந்த மாதிரி போஸ்ட் எல்லாம்
அவியல் அருமை!!!
(இது படிக்காமலே பரிசலுக்கு போடற கமெண்ட் மாதிரின்னு நெனச்சிடாதீங்க...படிச்சிட்டுதான்...)
அடுத்தது என்ன??? கார்க்கியோட காக்டெய்ல் செய்முறையை நேயர் விருப்பமா போடவும்.
மஞ்சள் ஜாஸ்தியா இருக்கு. கருவேப்பிலை உருவி போடலை. இன்னும் கொஞ்சம் தயிர் சேர்த்து இருக்கணும். காயெல்லாம் ரொம்பவே வெந்து இருக்கும் போல இருக்கு. எல்லாமே கலந்து கூழ் ரேஞ்சுல ஆகி போச்சு. சேனைக்கிழங்கு போடாம என்ன அவியல்?
வருங்கால அண்ணிக்கு வாழ்த்துக்கள்!
(சமையல் கார அண்ணனுக்கு ஆப்புகள்)
யோவ்.. இன்னைக்கு நானா?
//இது படிக்காமலே பரிசலுக்கு போடற கமெண்ட் மாதிரின்னு நெனச்சிடாதீங்க...படிச்சிட்டுதான்/
விஜய் ஆனந்த்.. ஒனக்கு இருக்குய்யா கும்பி பாகம்...
//உப்பு தேவைக்கேற்ப ( சூடு சொரணைக்கேற்ப // ஹஹாஹா
படத்தில இருக்கறது அவியல் தானா, மஞ்சளா மோர்க்குழம்பு மாதிரி இருக்கு
// cheena (சீனா) said...
ஆமா - அவியல் மேல ஒரு மரம் வளந்துருக்கே
//
சீனா சார் அந்த மரம் நம்ம சஞ்சய் வளத்தினது.
மாம்ஸ் அது என்னா சட்டியின் நடுவில் கருவேப்பில்லை மரம் முளைச்சு இருக்குது? ஓ டெக்கரேசனா?
அப்படியே ரெண்டு சீரியல் லைட்டையும் கட்டிவிடுங்க கிருஸ்மஸ் வரப்போவுது!!!
//தேவையான பொருட்கள்//
நல்ல ஸ்ட்ராங்கான உருட்டு கட்டைகள்
//செய்முறை ://
ரெடின்னு சொன்னவுடனே எல்லோரும் சஞ்சய் மண்டையில மத்தளம் வாசிக்கனும்
//எங்களுக்கும் சமையல் தெரியும் ஓய்.. :))//
எங்களுக்கு தான் சாப்பிட தெரியாது ஒய்
எப்பே!
இத அவியல்னு சொன்னா, அவியலை என்ன சொல்றது..... :)
புளித்த தயிர்????
மோர்க்குழம்பா ஆயிரும்.
அதிகம் புளிக்காத தயிர் விடணும்.
எங்களுக்கும் சமையல் தெரியுமுல்லெ:-))))
கார்க்கி.. நேக்கு அதெல்லாம் தெரியாதே அம்பி.. :(
நான் வல்லிய நல்ல பையனாக்கும்.. :)
// தாரணி பிரியா said...
என்னது இதெல்லாம்//
ஏன் உங்களுக்கு தெரியாதா? எல்லாம் தமிழ்ல தான இருக்கு.. ஓ.. நீங்க தான் கிச்சன் பக்கமே போகாத ஆளாச்சே.. அம்மாகிட்டா கேளுங்க அக்கா.. சொல்வாங்க.. :)
//cheena (சீனா) said...
ஆமா - அவியல் மேல ஒரு மரம் வளந்துருக்கே - அது என்ன ? தேவையான பொருட்கள் லிஸ்ட்லே இல்லியே - சைடு டிஷ்ஷா ?//
ஹிஹி.. வயசான காலத்துல குரும்ம்ம்ம்ம்ம்பு.. :)
// தாரணி பிரியா said...
இப்படி எனக்கு சமைக்க எல்லாம் தெரியுமுன்னு சொன்னா பொண்ணு தந்திருவாங்கன்னுதானே இந்த மாதிரி போஸ்ட் எல்லாம்//
ச்சீ.. போங்கள்.. :))
// விஜய் ஆனந்த் said...
அவியல் அருமை!!!
(இது படிக்காமலே பரிசலுக்கு போடற கமெண்ட் மாதிரின்னு நெனச்சிடாதீங்க...படிச்சிட்டுதான்...)
அடுத்தது என்ன??? கார்க்கியோட காக்டெய்ல் செய்முறையை நேயர் விருப்பமா போடவும்.//
பரிசல்.. என் தலைப்பை அப்பாலிக்கா கவனிக்கலாம்.. மொதல்ல இத்த கவனிங்க சாமொயோவ்.. :))
( என் பதிவுக்கு மட்டும் தான் இந்த மாதிரி பன்றாங்கன்னு நெனைச்சேன்.. எல்லா ஏரியாவுலையும் இதே கதை தானா? ;)) )
//தாரணி பிரியா said...
மஞ்சள் ஜாஸ்தியா இருக்கு. கருவேப்பிலை உருவி போடலை. இன்னும் கொஞ்சம் தயிர் சேர்த்து இருக்கணும். காயெல்லாம் ரொம்பவே வெந்து இருக்கும் போல இருக்கு. எல்லாமே கலந்து கூழ் ரேஞ்சுல ஆகி போச்சு. சேனைக்கிழங்கு போடாம என்ன அவியல்?//
ரைட்டு.. இதை எல்லாம் ஒரு அவியல்னு பண்ணி அதை பொழப்பில்லாம போட்டோ எடுத்து பெருமையா நெட்ல வேர அப்லோட் பண்ணி இருக்காங்களே.. அவங்களுக்கு இதை அனுப்பிடறேன்.. கவலைபடாதிங்க.. :))
//தமிழ் பிரியன் said...
வருங்கால அண்ணிக்கு வாழ்த்துக்கள்!
(சமையல் கார அண்ணனுக்கு ஆப்புகள்)//
ஹய்யோ.. ஹய்யோ.. இதெல்லாம் என் சமையல்னு நெனைச்சிங்களா? :))
ஒன்லி ட்ரேஸ்லேட்டிங்.. :)
//பரிசல்காரன் said...
யோவ்.. இன்னைக்கு நானா?//
இன்னைக்கு மட்டும் தானா? :)
// பரிசல்காரன் said...
//இது படிக்காமலே பரிசலுக்கு போடற கமெண்ட் மாதிரின்னு நெனச்சிடாதீங்க...படிச்சிட்டுதான்/
விஜய் ஆனந்த்.. ஒனக்கு இருக்குய்யா கும்பி பாகம்...//
ஹிஹி.. ஹ்ம்ம்ம் ஆகட்டும்..சீக்கிறம் சீக்கிறம்.. :)
இவண்,
சிக்க உட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம் :)
// சின்ன அம்மிணி said...
//உப்பு தேவைக்கேற்ப ( சூடு சொரணைக்கேற்ப // ஹஹாஹா
படத்தில இருக்கறது அவியல் தானா, மஞ்சளா மோர்க்குழம்பு மாதிரி இருக்கு//
நானும் அவியல்னு நெனைச்சி தான்க்கா அந்த படத்தை போட்டிருக்கேன்.. படத்துக்கு கீழ அப்டி தான் போட்டிருந்தது.. :))
// சின்ன அம்மிணி said...
// cheena (சீனா) said...
ஆமா - அவியல் மேல ஒரு மரம் வளந்துருக்கே
//
சீனா சார் அந்த மரம் நம்ம சஞ்சய் வளத்தினது.//
ஹாஹா.. எனக்கு நியூசிலாந்து ஆப்பிள் மரம் வளர்க்கத் தான் ஆசை.. வரும் போது வாங்கிட்டு வாங்கக்கா :))
//குசும்பன் said...
மாம்ஸ் அது என்னா சட்டியின் நடுவில் கருவேப்பில்லை மரம் முளைச்சு இருக்குது? ஓ டெக்கரேசனா?
அப்படியே ரெண்டு சீரியல் லைட்டையும் கட்டிவிடுங்க கிருஸ்மஸ் வரப்போவுது!!!//
சரிங்க மாம்ஸ்.. இதையும் அந்த அவியலை பண்ணங்களுக்கு சொல்லிடறேன்.. அடுத்த வாட்டி இதெல்லாம் போட்டு நெட்ல அப்லோட் பண்ணட்டும்.. :)
வால்பையனின் முதல் 2 பின்னூட்டங்களை எனக்கு படிக்கமுடியவில்லை.. அது எதோ வேற மொழி போல.. :))
//வால்பையன் said...
//எங்களுக்கும் சமையல் தெரியும் ஓய்.. :))//
எங்களுக்கு தான் சாப்பிட தெரியாது ஒய்//
சாப்பிடத் தான் தெரியாது.. ஆனா .. நல்லா ......... தெரியும் :))
//வெயிலான் said...
எப்பே!
இத அவியல்னு சொன்னா, அவியலை என்ன சொல்றது..... :)//
அப்போ இது அவியல் இல்லையா? பய புள்ளைங்க ஏமாத்திடானுங்க போல.. எல்லாரும் இங்க போய் உங்க கண்டனத்தை தெரிவிச்சிடுங்க.. :))
//துளசி கோபால் said...
புளித்த தயிர்????
மோர்க்குழம்பா ஆயிரும்.//
அப்போ sour curdன்னா புளித்த தயிர் இல்லையா? நான் தான் தப்பா புரிஞ்சிகிட்டேனா? :))
//அதிகம் புளிக்காத தயிர் விடணும்.
எங்களுக்கும் சமையல் தெரியுமுல்லெ:-))))//
ஹிஹி.. உங்களுக்கு ”சமைக்கவும்” தெரியும்னும் எனக்கு தெரியும்..
ஆனா எனக்கு சமையல் மட்டுமே தெரியும்.. அதுவும் இப்படி நெட்ல சுட்டு தான் தெரியும் :))
அப்போ சீக்கிரமே கல்யாண விருந்து உண்டு எங்களுக்கு!
:))
ஓ...இதத்தான் அவியல்னு சொல்லுவாங்களா...?!//
ஆமா இது என்ன டேஸ்ட்ல இருக்கும்...
நாமக்கல் சிபி said...
\\
அப்போ சீக்கிரமே கல்யாண விருந்து உண்டு எங்களுக்கு!
\\
ரிப்பீட்டு...:)
//இன்னைக்கு மட்டும் தானா? //
நீடிக்கப் படவும் செய்யலாம்! உங்க நேரத்தைப் பொறுத்தது!
//ஆமா இது என்ன டேஸ்ட்ல இருக்கும்...//
அவியல் டேஸ்ட்லதான்!
// தாரணி பிரியா said...
இப்படி எனக்கு சமைக்க எல்லாம் தெரியுமுன்னு சொன்னா பொண்ணு தந்திருவாங்கன்னுதானே இந்த மாதிரி போஸ்ட் எல்லாம்//
ரிப்பீட்டுக்கிறேன்.
//பொடியன்-|-SanJai said...
கார்க்கி.. நேக்கு அதெல்லாம் தெரியாதே அம்பி.. :(
நான் வல்லிய நல்ல பையனாக்கும்.. :)//
கணபதி பூரா சொன்னாங்க. நீங்க எவ்வளவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வு நல்லவருன்னு.
//பொடியன்-|-SanJai said...
ஏன் உங்களுக்கு தெரியாதா? எல்லாம் தமிழ்ல தான இருக்கு.. ஓ.. நீங்க தான் கிச்சன் பக்கமே போகாத ஆளாச்சே.. அம்மாகிட்டா கேளுங்க அக்கா.. சொல்வாங்க.. :)//
என்ன இது :( நான் அவியல் சூப்பரா செய்வேன் தெரியுமா?
//பொடியன்-|-SanJai said...
ச்சீ.. போங்கள்.. :))//
இதுக்கு என்ன அர்த்தம் வெக்கமா?
:-)))))))))))))
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நேத்து சாயந்திரம் ஒரு தடவ அவங்களை பார்த்ததுக்கே, இப்டி குடும்பஸ்தன் ஆகனும்னு பொறுப்போட பருப்பு கணக்கா திரியரீங்களே:):):)
போட்டோல டக்குன்னு பார்க்க ஆம்லெட் மாதிரி இருந்தது
//அவியல் அருமை!!!
(இது படிக்காமலே பரிசலுக்கு போடற கமெண்ட் மாதிரின்னு நெனச்சிடாதீங்க...படிச்சிட்டுதான்...)
//
ஓல்ட் நியூ பாதர், கண்டிப்பா எல்லாருக்கும் தெரியும் இந்த ரெசிப்பியை டிராப்ட் பண்ணி கொடுத்ததே நீங்கதான்னு:):):)
//மஞ்சள் ஜாஸ்தியா இருக்கு. கருவேப்பிலை உருவி போடலை. இன்னும் கொஞ்சம் தயிர் சேர்த்து இருக்கணும். காயெல்லாம் ரொம்பவே வெந்து இருக்கும் போல இருக்கு. எல்லாமே கலந்து கூழ் ரேஞ்சுல ஆகி போச்சு. சேனைக்கிழங்கு போடாம என்ன அவியல்?//
இப்டித்தான் உங்க வீட்லயும் உங்க ரங்கமணி சமைச்சு வெச்சவுடன் குறை சொல்லி மெரட்டுவீங்களா தாரணிப்பிரியா:):):)
//காய்கறிகள் அனைத்தையும் நன்றாகக் கழுவி 2 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்//
முருங்கைக்காய், பூசணிக்காயுமா? ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்............................
me the 50TH:):):)
Nallatha avial panringa..................
:) :)
:) :)
ஹி,ஹி,ஹி. ஐயா,பொடி கலக்குரீங்க போங்க!!
ஐயா ரூம் பக்கம் அடிக்கடி வந்துட்டு போங்க:-))))))))))))))(அவியல்,பொறியல்,எல்லாம் நாங்க சாப்புடனும் பாருங்க)
எனக்கு வடகரை வேலன் அண்ணாச்சி போடும் கதம்பமும் வேண்டும் !
அவரும் வீக் என்ட் ஃபிகர் பதிவு போடுறாரு, சமையல் குறிப்பு போடுறாரு.. இன்னும் என்னதான் பண்ணுவாரு.. யாராவது பெரிய மனசு பண்ணி அவருக்கு ஒரு பொண்ணு பாருங்களேன்...:)))
//நாமக்கல் சிபி said...
அப்போ சீக்கிரமே கல்யாண விருந்து உண்டு எங்களுக்கு!//
ஆமா ஆமா.. 4ம் தேதி மறக்காம ஈரோடு வந்துடுங்க.. :)
தமிழன் நானும் இதை அவியல்னு தான் நினைக்கிறேன்.. இது அவியல் டேஸ்ட்ல தான் இருக்குமாம்.. :)
வித்யா மம்மி.. சஞ்சய் கிட்ட சொல்லி வைக்கனுமா? ;)
தாரணி அக்கா..
/கணபதி பூரா சொன்னாங்க. நீங்க எவ்வளவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வு நல்லவருன்னு.//
ஹிஹி.. சரவணம்பட்டி வரைக்கும் கேட்டிடிச்சா? :))
//என்ன இது :( நான் அவியல் சூப்பரா செய்வேன் தெரியுமா?//
அதெல்லாம் வக்கனையா தான் செய்விங்க.. ஆனா யார் சாப்பிடறது.. கிச்சனுக்கு போகவே எந்த டவுன் பஸ் போகும்னு கேக்கற ஆளு நீங்க.. அவையல் பண்றிங்களாக்கும்.. :))
//இதுக்கு என்ன அர்த்தம் வெக்கமா?//
அதான.. இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? :))))
நன்றி முரளி கண்ணன்.. அம்மாம்பெரிய சிரிப்புக்கு என்ன அர்த்தம் தல? :)
ராப்..
//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நேத்து சாயந்திரம் ஒரு தடவ அவங்களை பார்த்ததுக்கே, இப்டி குடும்பஸ்தன் ஆகனும்னு பொறுப்போட பருப்பு கணக்கா திரியரீங்களே:):):)//
ஹிஹி.. இதெல்லாம் போய் பொதுவுல சொல்லிகிட்டு :))
//போட்டோல டக்குன்னு பார்க்க ஆம்லெட் மாதிரி இருந்தது//
பொறுமையா பார்த்தாலும் உங்களுக்கு அப்டி தான் இருக்கும்.. நீங்க அப்டி தான ஆம்லெட் செய்விங்கன்னு ராப் சொன்னார் :))
//ஓல்ட் நியூ பாதர், கண்டிப்பா எல்லாருக்கும் தெரியும் இந்த ரெசிப்பியை டிராப்ட் பண்ணி கொடுத்ததே நீங்கதான்னு:):):)/
ஹலோ.. கஷ்டப்பட்டு ட்ரான்ஸ்லேட் பண்ணது நானாக்கும் :))
//முருங்கைக்காய், பூசணிக்காயுமா? ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........................//
ஹிஹி.. அந்த சைட்ல அப்டி தான் போட்டிருந்தாங்க :))
//me the 50TH:):):)//
:)))))
நன்றி பிசி.. ஒரு நாள் கோவை வாங்க.. அவியல் சாப்பிடலாம்.. :))
------
//விலெகா said...
ஐயா ரூம் பக்கம் அடிக்கடி வந்துட்டு போங்க:-))))))))))))))(அவியல்,பொறியல்,எல்லாம் நாங்க சாப்புடனும் பாருங்க)//
நன்றி விலெகா :))
நல்ல வேளை அடைப்புல தெளிவா சொல்லிட்டிங்க.. ;)))
// கோவி.கண்ணன் said...
எனக்கு வடகரை வேலன் அண்ணாச்சி போடும் கதம்பமும் வேண்டும் !//
அண்ணாச்சி மேல உங்களுக்கு இம்புட்டு பிரியமா கோவியாரே :))
//வெண்பூ said...
அவரும் வீக் என்ட் ஃபிகர் பதிவு போடுறாரு, சமையல் குறிப்பு போடுறாரு.. இன்னும் என்னதான் பண்ணுவாரு.. யாராவது பெரிய மனசு பண்ணி அவருக்கு ஒரு பொண்ணு பாருங்களேன்...:)))//
வயித்தெரிச்சலை கெளப்பறதே இவருக்கு பொழபப போச்சி :((
Post a Comment