இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Monday, 3 November 2008

எல்லாரும் மெஸ்ல சாப்பிடுங்கப்பு!


நம்ம வெண்பூ அண்ணாச்சி சமீபத்திய துணுக்ஸ்ல பிரபல “உயர்விலை” சைவ உணவகம் பத்தி பொலம்பி இருக்க்கார்.. அந்தப் பக்கம் எல்லாம் ஏன் போறிங்க? எல்லா ஊர்லையும் நல்ல மெஸ் இருக்கும்.. அதன் சராசரி விலைப்பட்டியல் இங்கே ...


2  இட்லி - 6 ரூபாய்
1 தோசை - 5 ரூபாய்
முட்டை தோசை - 10 ரூபாய்
1 சப்பாத்தி - 5 ரூபாய்
1 பரோட்டா - 5 ரூபாய்
ஒரு ரோஸ்ட் - 10 ரூபாய்
ஆனியன் ரோஸ்ட் 12 ரூபாய்
முட்டை ரோஸ்ட் - 12 ரூபாய்
மசால் ரோஸ்ட் - 12 ரூபாய்
முட்டை பரோட்டா - 15 ரூபாய்
வீச்சு பரோட்டா - 5 ரூபார்
முட்டை வீச்சு - 10 ரூபாய்
ஊத்தப்பம் - 8 ரூபாய்
முட்டை ஊத்தப்பம் - 12 ரூபாய்
தக்காளி ஊத்தப்பம் - 12 ரூபாய்


தக்காளி சாதம் , பருப்பு சாதம். எலுமிச்சை சாதம் - தலா 10 ரூபாய்
முழுச்சாப்பாடு - 20 - 25 ரூபாய் ( சாம்பார், குழம்பு , ரசம் , மோர், கூட்டு, பொறியல், அப்பளம் எல்லாம் அடங்கும் )

ஆம்லெட் - 5 ரூபாய்
ஆஃப்பாயில் - 4 ரூபாய்
ஃபுல்பாயில் - 4 ரூபாய்
முக்கா பாயில் - 4 ரூபாய்
கால் பாயில் இன்னும் ஆரம்பிக்கவில்லை போலும் :))
கலக்கி - 4 ரூபாய்

பொங்கல் - 10 ரூபாய்
1 பூரி - 5 ரூபாய்

மெஸ்களில் இன்னும் ஏராளமான உணவு வகைகள் உண்டு.. :)

இன்னும் தக்காளி சேவை, முட்டை சேவை, சாதா சேவை, உப்புமா, இடியாப்பம் என எல்லாமே மலிவு விலை தான்.

சுவையும் ஓரளவுக்கு வீட்டுத் தயாரிப்பு போலத் தான் இருக்கும். இதை விட்டு பெரும்பாலும் ”கவுரவமாக” சாப்பிடுவதற்காக மெஸ்களைத் தவிர்த்து ஹோட்டல்களுக்கு செல்வதால் தான் ஹோட்டல் என்று சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லாத... போர்டில் மட்டும் ஹோட்டல் என்ற வார்த்தையை ஒட்டிவைத்திருக்கும் உணவகங்கள் கூட அநியாய விலையில் உணவை விற்கிறார்கள்....

இது போன்ற ஹோட்டல்களைத் தவிர்த்துவிட்டு பெரும்பாலும் எந்த ஊர்ப் போனாலும் மெஸ்களைத் தேடிச் சென்று சாப்பிடுவதால் தான் 2 ஆண்டுகளாக வீட்டு சாப்பாடு இல்லாமல் வெளியே சாப்பிட்டாலும் இது வரையில் உணவுப் பிரச்சனையால் எனக்கு எந்த உடல் உபாதைகளும் வரவில்லை.

முடிந்தவரை மெஸ்களிலேயே சாப்பிடுங்கள்..

34 Comments:

கோவி.கண்ணன் said...

மெஸ் சாப்பாட்டுக்கு டிப்ஸ் வைக்க வேண்டியதில்லை. - இது விட்டுப் போச்சு !

கோவி.கண்ணன் said...

மி தான் பர்ஸ்டா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்

வெண்பூ said...

சரியா சொல்லியிருக்கீங்க சஞ்சய்.. இதுவரைக்கும் சென்னையிலயே எனக்கும் என் தங்கமணிக்கும் வீட்டுக்கு வெளியே திருப்தியான சாப்பாடு கிடைத்த ஒரே இடம் மயிலாப்பூர் மாமி மெஸ்தான்.. (தேங்க்ஸ் டூ லக்கிலுக்). புரோட்டா, இட்லி, தோசை என்று இரண்டு பேரும் திருப்தியாக கட்டு கட்டு என்று கட்டியபிறகு பில் கேட்டால் 35 ரூபாய் என்றார்கள்.

என்ன ஒரே பிரச்சினை.. நல்ல மெஸ்ஸை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். யாராவது ஒரு பதிவுத் தொடர் ஆரம்பிக்கப்பா!!! :))

வால்பையன் said...

கோவை வந்தால் இதெல்லாம் வாங்கி கொடுப்பிங்களா?

விலெகா said...

கோவை வந்தால் இதெல்லாம் வாங்கி கொடுப்பிங்களா?
வாங்கித்தருவாரு உங்க காசுல:---))))))))))))))

Thamiz Priyan said...

ரொம்ப நல்ல பதிவு!

Thamiz Priyan said...

மிகவும் பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது. வாழ்த்துக்கள் சஞ்சய்!

Thamiz Priyan said...

அதிலும் இடையில் கதாநாயகி பேசக் கூடிய வசனங்கள் நல்லா இருக்கு. இதுபோல் உங்களால் மட்டும் எப்படி எழுத முடிகின்றது?

Thamiz Priyan said...

ஆனாலும் கிளைமாக்ஸில் இவ்வளவு திருப்பங்களை எதிர்பார்க்கலை. கலக்கிட்டீங்க சஞ்சய்! வாழ்த்துக்கள்!

விலெகா said...

கால் பாயில் இன்னும் ஆரம்பிக்கவில்லை போலும் :))
அப்புடி வந்தால் அதுக்கு என்ன விலை:--------))))))))))

Thamiz Priyan said...

இடையில் வந்த மெஸ் காமெடி சீன் எல்லாம் சூப்பரா இருந்தது..:)

Thamiz Priyan said...

இவ்வளவு நல்லா எழுதுறிங்களே நீங்க ஏன் சினிமாவில் முயற்சிக்ககூடாது..?

Thamiz Priyan said...

உங்கள் எழுத்துக்களில் ஒருபுறம் பாலச்சந்தரும், மறுபுறம் மணீரத்னமும், இன்னொரு புறம் ஸ்ரீதரும், மற்றொரு புறம் பாக்யராஜூம் பரிமளிக்கின்றனர்... வாழ்த்துக்கள் சஞ்சய்!

விலெகா said...

ஆனாலும் கிளைமாக்ஸில் இவ்வளவு திருப்பங்களை எதிர்பார்க்கலை.
ஆமா பெரிய படம்னா க்ளைமேக்ஸ் அப்புட்டிதன் இருக்கும்:-)))))))))))

Thamiz Priyan said...

எம்புட்டு நேரம் தான் உண்மை பேசற மாதிரி நடிக்கிறது கஷ்டமா இருக்குப்பா.... சோடா ப்ளீஸ்..

முரளிகண்ணன் said...

i'm also follow your way for the past 10 years.

ரசிகன் said...

வீட்டு சாப்பாடு எப்போ கிடைக்கும்ன்னு எதிர்பாத்துக்கிட்டிருக்கோம். இப்போ போய் ஓட்டலா? மெஸ்ஸான்னு கிண்டல் பண்ணறதுல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல.. ஆமா...

Busy said...

Good !!!!, Early i was in CMB i goto AAchi Mess, is famous in Coimbatore,


Ana namma kai yanhiee bhavan mathuriee varathooo.....

தாரணி பிரியா said...

\\ தக்காளி சாதம் , பருப்பு சாதம். எலுமிச்சை சாதம் - தலா 10 ரூபாய்முழுச்சாப்பாடு - 20 - 25 ரூபாய் ( சாம்பார், குழம்பு , ரசம் , மோர், கூட்டு, பொறியல், அப்பளம் எல்லாம் அடங்கும் )
ஆம்லெட் - 5 ரூபாய்ஆஃப்பாயில் - 4 ரூபாய்ஃபுல்பாயில் - 4 ரூபாய்முக்கா பாயில் - 4 ரூபாய்கால் பாயில் இன்னும் ஆரம்பிக்கவில்லை போலும் :))கலக்கி - 4 ரூபாய் \\

மதியத்துக்கு இத்தனையும் சாப்பிட வேண்டியது. அப்புறம் நைட்டுக்கு only fruits i am in diet-ன்னு சொல்ல வேண்டியது.


என்ன கொடுமை சஞ்சய் இது?

பொடிப்பொண்ணு said...

//தமிழ் பிரியன் said...

உங்கள் எழுத்துக்களில் ஒருபுறம் பாலச்சந்தரும், மறுபுறம் மணீரத்னமும், இன்னொரு புறம் ஸ்ரீதரும், மற்றொரு புறம் பாக்யராஜூம் பரிமளிக்கின்றனர்... வாழ்த்துக்கள் சஞ்சய்!
//

ஹி ஹி ஹி யான் கமந்த் படிக வந்தேன் :)

பொடிப்பொண்ணு said...

//Blogger தாரணி பிரியா said...

\\ தக்காளி சாதம் , பருப்பு சாதம். எலுமிச்சை சாதம் - தலா 10 ரூபாய்முழுச்சாப்பாடு - 20 - 25 ரூபாய் ( சாம்பார், குழம்பு , ரசம் , மோர், கூட்டு, பொறியல், அப்பளம் எல்லாம் அடங்கும் )
ஆம்லெட் - 5 ரூபாய்ஆஃப்பாயில் - 4 ரூபாய்ஃபுல்பாயில் - 4 ரூபாய்முக்கா பாயில் - 4 ரூபாய்கால் பாயில் இன்னும் ஆரம்பிக்கவில்லை போலும் :))கலக்கி - 4 ரூபாய் \\

மதியத்துக்கு இத்தனையும் சாப்பிட வேண்டியது. அப்புறம் நைட்டுக்கு only fruits i am in diet-ன்னு சொல்ல வேண்டியது.


என்ன கொடுமை சஞ்சய் இது?//


நான் இதை மிகவும் வழிமொழிகிறேன் :) இப்படியே தான் சொல்லிட்டு அலைகிறார்.

Sanjai Gandhi said...

//கோவி.கண்ணன் said...

மெஸ் சாப்பாட்டுக்கு டிப்ஸ் வைக்க வேண்டியதில்லை. - இது விட்டுப் போச்சு !//
அட.. முக்கியமான மேட்டர் மறந்துட்டேனே கோவியாரே.. :))

Sanjai Gandhi said...

//என்ன ஒரே பிரச்சினை.. நல்ல மெஸ்ஸை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். யாராவது ஒரு பதிவுத் தொடர் ஆரம்பிக்கப்பா!!! :))//
ஏற்கனவே சென்னை மெஸ்களைப் பற்றி சில பதிவுகள் வந்ததாக நினைவு வெண்பூவாரே.. தேடி பாருங்க.. :)

Sanjai Gandhi said...

// வால்பையன் said...

கோவை வந்தால் இதெல்லாம் வாங்கி கொடுப்பிங்களா?//

இதுக்கு மேல “ஃபுல்”லாவே வாங்கித் தருவேன் வால்.. :)

Sanjai Gandhi said...

ஹிஹி.. விலெகா.. ஐடியா நல்லாத் தான் இருக்கு.. சீக்கிறம் வாலை கோவை வர சொல்லுங்க.. :)

Sanjai Gandhi said...

தமிழ்பிரியன் அண்ணாச்சியின் பொறுப்பான பின்னூட்டங்களுக்கு நன்றி. உங்கள் ஆலோசனை ஏற்றுக் கொள்ளப் பட்டு இதே போன்ற அடுத்த திகில் கதையில் செயல்படுத்துகிறேன். :))

Sanjai Gandhi said...

நன்றி முரளிகண்ணன்.. அப்படியே தொடருங்கள்.. :)

Sanjai Gandhi said...

/ i'm also follow your way for the past 10 years.

3 November, 2008 11:08 PM
Delete
Blogger ரசிகன் said...

வீட்டு சாப்பாடு எப்போ கிடைக்கும்ன்னு எதிர்பாத்துக்கிட்டிருக்கோம். இப்போ போய் ஓட்டலா? மெஸ்ஸான்னு கிண்டல் பண்ணறதுல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல.. ஆமா...//

எங்கோ பார்த்த ஞாபகம்.. :))

மாமா நலமா? எனனாச்சி ஆளையே காணோம்.. ஊர்ல ஒரு பொண்ண டாவடிச்சிட்டு இருந்திங்களே .. அதையே கல்யாணம் பண்ணிகிட்டா ஊட்டு சாப்பாடு கிடைக்கும்ல :))

Sanjai Gandhi said...

// Busy said...

Good !!!!, Early i was in CMB i goto AAchi Mess, is famous in Coimbatore,


Ana namma kai yanhiee bhavan mathuriee varathooo.....//

இப்போவும் நம்ம பேவரிட் ஆச்சி மெஸ்தான் பிசி :)
எவ்ளோ வெரைட்டிஸ்.. என்னா ஒரு டேஸ்டு.. இன்னும் கல்யாண வீடு போல் எப்போதும் கூட்டம் தான்.. காத்திருந்து தான் சாப்பிடனும் :))

Sanjai Gandhi said...

//மதியத்துக்கு இத்தனையும் சாப்பிட வேண்டியது. அப்புறம் நைட்டுக்கு only fruits i am in diet-ன்னு சொல்ல வேண்டியது.


என்ன கொடுமை சஞ்சய் இது?//

வங்க மேடம்.. இப்போ சந்தோஷமா..?

..ஹிஹி,, 2வது மாடில இருந்து போன் விழுந்தது என் சாபம் தான்.. :)))

Sanjai Gandhi said...

//ஹி ஹி ஹி யான் கமந்த் படிக வந்தேன் :)//
ஹே வாலுப்பொண்ணு.. படிச்சிட்டு அப்டியே கெலம்ப வேண்டியது தானே,, எதுக்கு இந்த பிட் நோட்டிஸ் ஒட்டிட்டு போற? :)

//நான் இதை மிகவும் வழிமொழிகிறேன் :) இப்படியே தான் சொல்லிட்டு அலைகிறார்.//

ஒடம்பு எப்டிமா இருக்கு? இப்டி எல்லாம் நல்லவங்களை பேசறதால தான் உனக்கு எதிரா நெறைய பாலிட்டிக்ஸ் நடக்குது.. :))

மங்களூர் சிவா said...

//
\\ தக்காளி சாதம் , பருப்பு சாதம். எலுமிச்சை சாதம் - தலா 10 ரூபாய்முழுச்சாப்பாடு - 20 - 25 ரூபாய் ( சாம்பார், குழம்பு , ரசம் , மோர், கூட்டு, பொறியல், அப்பளம் எல்லாம் அடங்கும் )
ஆம்லெட் - 5 ரூபாய்ஆஃப்பாயில் - 4 ரூபாய்ஃபுல்பாயில் - 4 ரூபாய்முக்கா பாயில் - 4 ரூபாய்கால் பாயில் இன்னும் ஆரம்பிக்கவில்லை போலும் :))கலக்கி - 4 ரூபாய் \\

மதியத்துக்கு இத்தனையும் சாப்பிட வேண்டியது. அப்புறம் நைட்டுக்கு only fruits i am in diet-ன்னு சொல்ல வேண்டியது.


என்ன கொடுமை சஞ்சய் இது?
//

டபுள் ட்ரிபிள் ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டு

மங்களூர் சிவா said...

மெஸ்ல இவ்ளோ வெரைட்டி கிடைக்கிறப்ப எதுக்கு மாம்ஸ் தேடி கண்டுபிடிச்சி ஒரு இத்து போன ஹோட்டலுக்கு கூட்டிகிட்டு போன அங்க வந்திருந்தப்ப ??

Sanjai Gandhi said...

//மங்களூர் சிவா said...

மெஸ்ல இவ்ளோ வெரைட்டி கிடைக்கிறப்ப எதுக்கு மாம்ஸ் தேடி கண்டுபிடிச்சி ஒரு இத்து போன ஹோட்டலுக்கு கூட்டிகிட்டு போன அங்க வந்திருந்தப்ப ??//

நீங்க எல்லாம் ரொம்ப டிடர்ஜெண்டு பார்ட்டிங்களாச்சே.. சின்ன மெஸ்ல சாப்ட மாட்டிங்கன்னு தான்.. மெஸ்ல சாப்ட பயன்படுத்தற இலையை நாமளே எடுக்கோனும் மாம்ஸ் :)

Tamiler This Week