இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 8 November, 2008

டரியல் v1.11.1

புதுகை தென்றல் அக்கா ஒரு வருடத்தில் 250 பதிவுகள் போட்டிருக்கிறார். கிட்டத் தட்ட தினம் ஒரு பதிவு. ஆனால் அதற்கெல்லாம் தொடர்ந்து பதிவர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருப்பது ஆச்சர்யம் தான். காரணம் ஹஸ்பண்டாலஜி, மாண்டிசோரி, சிறுகதைகள், வாழ்க்கை அனுபவங்கள், கோவில் தரிசனங்கள் என எல்லாவற்றையும் ஜல்லி அடிக்காமல் சுருக்கமாக அழகாக அசால்ட்டாக எழுதி விடுகிறார். படிக்கும்போது நமக்கு சோர்வாய் தெரிவதில்லை. இது தான் அக்காவின் பலம் என நினைக்கிறென். வாழ்த்துக்கள் அக்கா.. இன்னும் நிறைய ஸ்கோர் பண்ணுங்க. :)

^^^^^

கன்னாபின்னாவென்று உடல் எடைக் கூடிக் கொண்டு செல்வதால் இரவில் உணவை தவிர்ப்பது என்று முடிவு செய்து சில வரங்களாக கடைபிடிக்கிறேன். முழுமையாக தவிர்த்தால் உடல் ரீதியான பிரச்சனைகள் வரும் என்பதால் பழங்கள் சாப்பிடுகிறேன். ஒரு நாள் இரவு தொலைபேசிய "விவரமான" பதிவர் ஒருவர் என் பழ மெனுவில் சேர்க்க வெண்டியவை மற்றும் நீக்க வேண்டியவை பற்றி உபயோகமான டிப்ஸ் குடுத்தார். அதோடு விட்டிருக்கலாம்.. பேரிச்சம் பழத்தை தனியாக சாப்பிடுவதை விட.......
ஓவர் டூ அந்த விவரமான பதிவர்.... :)
" வளைகுடா நாடுகளில் கொட்டை இல்லாத பேரிச்சம் பழத்தை பாலில் கலந்து அதை நன்றாக அரைத்து அதை நன்றாக காய்ச்சி பிறகு மிதமான சூட்டிற்கு கொண்டுவந்து அதை முதலிரவுக்கு செல்லும் மணமகனுக்கு கொடுப்பார்களாம். அதைக் குடித்ததும் அந்த மணமகனுக்கு ”பல குதிரைகள்” பலம் வந்துவிடுமாம்." :)).. தனியா இருக்கிற ஒரு பையனிடம் சொல்லி இப்படியா உசுப்பேத்தறது.. :( ... இது நம்ம ஊர் சிட்டுக் குருவி லேகியத்தைப் போல் இருக்குமா எனத் தெரியவில்லை. :)).. அப்போ தான் தெரிஞ்சது இவர் விவரமானவர் மட்டுமில்ல.. விவகாரமானவரும் கூட என்று.. :))

^^^^^

தமிழ் தொலைக்காட்சிகளில் ஓரளவுக்கு சுமாரான நிகழ்ச்சிகளை விஜய் டிவி வழங்கியது. மிகவும் விரும்பி பார்க்கும் ஒரே சேனல் அதுவாகத் தான் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அந்த சேனலை பார்க்கவே எரிச்சலாய் இருக்கிறது. எப்போது பார்த்தாலும் ஏர்டெல் சூப்பர் சிங்கரும் அதன் நிகழ்வுகள், ஜோடி நெ.1 அதன் நிகழ்வுகள் அடுத்த பிரபுதேவா அதன் நிகழ்வுகள் அல்லது கனாக்காணும் காலங்கள், கலக்கப் போவது யாரு போன்றவைகளின் எண்ணிலடங்கா மறு ஒளிபரப்புகள். என்னாச்சி இந்த சேனலுக்கு? வழக்கம் போல் தாய்க் கழகமான ஸ்டாரின் நிகழ்ச்சிகளில் புதியதாக எதையாவது இறக்குமதி செய்யலாமே..

^^^^^

நவம்பர் ஏழாம் தேதி எங்க தலைவரை வாழ்த்தி உலா வந்த ஒரு குறுஞ்செய்தி :
”பிறந்த நாள் என்றால், அப்போது என்ன வயதோ அந்த எடையில் கேக் வெட்டி..பெரிய கட் அவுட் வச்சி அதுக்கு அவங்களே பாலபிஷேகம் பண்ணி.. செய்தித் தாள்கள்ல 3 பக்கங்களுக்கு வாழ்த்து செய்தி போடவச்சி... இன்னும் பல வெட்டி சீன் போடும் பிரபலங்களுக்கு மத்தியில்..ஒரு சகாப்தம்.. ஒரு மன்னன்.. இலங்கைத் தமிழர்களுக்காக இன்று தன் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்றும் இன்றைய தினத்தை அவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் சொன்ன எங்கள் உலக நாயகனே உண்மையாகவே,
உலகம் எங்கிலும்
உன்னை மிஞ்சிட யாரு..
உன்னைப் பெற்றதில்
பெருமைக் கொள்ளுது நாடு....
உலக நாயகன்.. உலக சூப்பர் ஸ்டார் டாக்டர்.கமலஹாசன் அவர்களே வாழ்க வளமுடன். நாங்கள் உங்களை நேசிக்கிறோம் தலைவா.

^^^^^

"Its none of my business what you think of me" என்பதை கடைபிடித்தாலும் தேவை இல்லாமல் யாரையும் முகம் சுழிக்க வைக்க வேண்டாம் எனக் கருதுகிறேன். இந்த வீக்கெண்ட் சமாச்சாரம் நம்மைப் பற்றி "மேலும்" தவறான எண்ணத்தை தோற்றுவிக்கும் என்று நினைத்து வீக்கெண்ட் படங்களைத் தவிர்க்கலாமா என யோசிக்கிறேன்.. என் குழப்பத்தை தீர்த்து வைக்கவும்.. :(

^^^^^

டரியல் Of the Week...
யாராவது சிரிச்சிங்க.. கொன்னுடுவேன்..


நான் கஷ்டப்பட்டு ஞாபகப் படுத்தி எழுதின இந்தப் பதிவை ஏன் யாரும் சரியா கண்டுக்கலை? :(

50 Comments:

said...

me the rapp :))
(பின்னூட்ட களவானித் தனம்.. :)) )

said...

// டரியல் Of the Week...
யாராவது சிரிச்சிங்க.. கொன்னுடுவேன்.. //

நா சிரிக்கல...சிரிக்கல...சிரிக்கல...

பயந்து வயிறு கலங்கிடிச்சி...

இது டரியல் Of the Week-ஆ இருக்காது...டரியல் Of the Century...

said...

புதுகை தென்றல் அக்கா ஒரு வருடத்தில் 250 பதிவுகள் போட்டிருக்கிறார். கிட்டத் தட்ட தினம் ஒரு பதிவு. //

வாழ்த்துக்கள்

said...

//உடல் எடைக் கூடிக் கொண்டு செல்வதால் இரவில் உணவை தவிர்ப்பது என்று முடிவு செய்து சில வரங்களாக கடைபிடிக்கிறேன்.//

மாம்ஸ் அந்த முழு கோழி கிரில்டு சிக்கன் உணவு வைகையாரவில் வராது, கொறிக்கும் ஸ்னாக்ஸ் வகையில் தானே வரும்!!!

said...

//. முழுமையாக தவிர்த்தால் உடல் ரீதியான பிரச்சனைகள் வரும் என்பதால் பழங்கள் சாப்பிடுகிறேன். //

ஆம் ஒரே ஒரு பலாபழம், 12 ஆப்பிள், ஒரு கிலோ திராட்சை (திராட்சை ஸ்பூன்லிங்கோடு சாப்பிடு ஒரு பெண் அதை சொல்லவே மாட்டேன் மாம்ஸ்) மட்டும் தான் சாப்பிடுகிறார்.

பழ வியாபாரி

said...

//என் பழ மெனுவில் சேர்க்க வெண்டியவை மற்றும் நீக்க வேண்டியவை பற்றி உபயோகமான டிப்ஸ் குடுத்தார்.//

வாழப்பழத்தை தோலோடு சாப்பிடும் உமக்கு தோல் நீக்கி சாப்பிட சொல்லி கொடுத்தது அவர் குத்தமா?

said...

//தனியா இருக்கிற ஒரு பையனிடம் சொல்லி இப்படியா உசுப்பேத்தறது.. :( //

சத்தியமாக கொஞ்சம் கூட சிரிக்காம நம்பிட்டேன் மாம்ஸ்!!!

said...

//பெரிய கட் அவுட் வச்சி அதுக்கு அவங்களே பாலபிஷேகம் பண்ணி.. செய்தித் தாள்கள்ல 3 பக்கங்களுக்கு //


FYI 2011 முதல்வர் நம்பர் 12 விஜயகாந் கூட பல வருடங்களாக பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது இல்லை ஈழமக்களுக்காக!

said...

//வீக்கெண்ட் படங்களைத் தவிர்க்கலாமா என யோசிக்கிறேன்.. என் குழப்பத்தை தீர்த்து வைக்கவும்.. :(//

தலைக்கு மேலே வெள்ளம் போகும் பொழுது ஜான் என்ன முழம் என்ன?:))))

said...

டரியல் Of the Week...
யாராவது சிரிச்சிங்க.. கொன்னுடுவேன்..//

டரியல் டக்ளஸுக்கு போட்டியாக இப்படி பதிவு ஆரம்பிப்பதையும் ராயல்டி தராமல் பதிவு போடுவதையும் கண்ணாபின்னாவென்று கண்டிக்கிறேன்....

Anonymous said...

//கன்னாபின்னாவென்று உடல் எடைக் கூடிக் கொண்டு செல்வதால் இரவில் உணவை தவிர்ப்பது என்று முடிவு செய்து சில வரங்களாக கடைபிடிக்கிறேன்.//

ஒரு சர்தார்ஜி ஜோக்தான் ஞாபகம் வருது.

டாக்டர் : காலையில் இரண்டு சப்பாதி, மதியம் இரண்டு சப்பாத்தி, இரவில் இரண்டு சப்பாத்தி சாப்பிடுங்க உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

சர்தார்ஜி : சாப்பாட்டுக்கு முன்னாடியா? பின்னாடியா?

said...

படிப்பவர்கள் டரியல் ஆகாமல் ஒரு நல்ல பதிவு

Anonymous said...

புதுகைத்தென்றல் அக்காவுக்கு வாழ்த்துக்கள், டரியல் சூப்பர்

Anonymous said...

பழ மெனு வில பலாப்பழத்தை தானே நீக்க சொன்னார், பொய் சொல்லாம சொல்லுங்க

said...

புதுகைத்தென்றல் அக்காவுக்கு வாழ்த்துக்கள் !!!!!!!!!! :)

தங்கத் தலைவர் டி.ஆர் பத்தின கிண்டல் வீடியோவை நான் வன்மையாக கண்டிக்கிறேன் !!!

said...

முழுமையாக தவிர்த்தால் உடல் ரீதியான பிரச்சனைகள் வரும் என்பதால் பழங்கள் சாப்பிடுகிறேன்.// ரெண்டு கிலோ சாப்பிடுறீங்களாமே..!

அப்பிடீனு கஷ்டப்பட்டு ஒரு பின்னூட்டம் யோசிச்சிகினு வந்தா ஊடுகட்டி விளையாண்டுகிட்டிருக்கார் குசும்பன். விஜய் டீவியைப்பற்றி சொன்ன விஷயத்துக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன். இப்போ அவங்க புரொகிராம் பற்றி விளம்பரம் போட்டே கடுப்படிக்கிறானுங்கோ..!

said...

நண்பர்களே சஞ்சய் போட்டு இருக்கும் டீ சர்ட் பெண்ணின் புகைப்படத்துக்கு விளக்கம் விவகாரமாக சொல்கிறார், மேலதிக தகவலுக்கு அவரை தொடர்பு கொள்ளவும்... பயங்கர குஜாலான மேட்டர்.

பப்ளிக்கா சொல்லமுடியாத மேட்டர்:))

said...

:-))

said...

புதுகைத் தென்றல் அக்காவுக்கு வாழ்த்துக்கள்!

said...

வீக் எண்ட் ஜொள்ளூ படங்கள் இணையத்தில் தேடினால் சில வினாடிகளில் படங்கள் கிடைக்கும். அதை உங்கள் பதிவில் போட்டுக் காட்ட வேண்டிய அவசியமே இல்லை. அந்த நேரத்தில் வேற ஏதாவது யோசிக்கலாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்!

said...

கொய்யால விடியோ சூப்பர்!!

said...

புதுகை தென்றல் அக்கா ஒரு வருடத்தில் 250 பதிவுகள் போட்டிருக்கிறார். கிட்டத் தட்ட தினம் ஒரு பதிவு. //

வாழ்த்துக்கள்

said...

//
குசும்பன் said...

//தனியா இருக்கிற ஒரு பையனிடம் சொல்லி இப்படியா உசுப்பேத்தறது.. :( //

சத்தியமாக கொஞ்சம் கூட சிரிக்காம நம்பிட்டேன் மாம்ஸ்!!!
//

ரிப்பீட்டு

said...

//
குசும்பன் said...

//வீக்கெண்ட் படங்களைத் தவிர்க்கலாமா என யோசிக்கிறேன்.. என் குழப்பத்தை தீர்த்து வைக்கவும்.. :(//

தலைக்கு மேலே வெள்ளம் போகும் பொழுது ஜான் என்ன முழம் என்ன?:))))
//

அதானே!????

said...

25

said...

//விஜய் ஆனந்த் said...

// டரியல் Of the Week...
யாராவது சிரிச்சிங்க.. கொன்னுடுவேன்.. //

நா சிரிக்கல...சிரிக்கல...சிரிக்கல...

பயந்து வயிறு கலங்கிடிச்சி...

இது டரியல் Of the Week-ஆ இருக்காது...டரியல் Of the Century...//

ரொம்ப நன்றி விஜய்.. இனி அடிக்கடி உங்களை டரியல் ஆக்குவேன்.. ;)

said...

// குசும்பன் said...

மாம்ஸ் அந்த முழு கோழி கிரில்டு சிக்கன் உணவு வைகையாரவில் வராது, கொறிக்கும் ஸ்னாக்ஸ் வகையில் தானே வரும்!!!//

ஒரு சைவப் பிரியாணிகிட்ட பேசற பேச்சா இது.. அபச்சாரம்.. அபச்சாரம்.. :)

said...

// குசும்பன் said...
ஆம் ஒரே ஒரு பலாபழம், 12 ஆப்பிள், ஒரு கிலோ திராட்சை மட்டும் தான் சாப்பிடுகிறார்.

பழ வியாபாரி//

ங்கொக்க மக்கா.. நான் என்ன யானையா? :(

//திராட்சை ஸ்பூன்லிங்கோடு சாப்பிடு ஒரு பெண் அதை சொல்லவே மாட்டேன் மாம்ஸ்)//

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மாமா :)

said...

//வாழப்பழத்தை தோலோடு சாப்பிடும் உமக்கு தோல் நீக்கி சாப்பிட சொல்லி கொடுத்தது அவர் குத்தமா?//

தோலோடு சாப்பிட வேண்டும் என்பது டாக்டர் விஜய் அவர்களின் அறிவுரை.:))

said...

//FYI 2011 முதல்வர் நம்பர் 12 விஜயகாந் கூட பல வருடங்களாக பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது இல்லை ஈழமக்களுக்காக!//
சொன்னாங்க.. அதுக்குத் தான் அனைத்துக் கட்சி கூட்டங்கள்ல கூட கலந்துக்கிறது இல்லையாம்.. :))

said...

//டரியல் டக்ளஸுக்கு போட்டியாக இப்படி பதிவு ஆரம்பிப்பதையும் ராயல்டி தராமல் பதிவு போடுவதையும் கண்ணாபின்னாவென்று கண்டிக்கிறேன்....//

அடிங்க... போட்டிக்கு எல்லாம் ராயல்டி கட்ட முடியாது.. காப்பிக்குத் தான் ராயல்டி கட்ட முடியும்...

நாங்க எல்லாம் SONYயவே SONI என்று எழுத்து மாத்தி சொந்த பிராண்டாக்குற ஆளுங்க.. எங்கி கிட்ட வந்து ராயல்ட்டியாம்ல ராயல்ட்டி..

மானம்கெட்டவனே .. மாமனே.. மச்சானே.. யாரைக் கேட்கிறாய் ராயல்டி ?:))

said...

//ஒரு சர்தார்ஜி ஜோக்தான் ஞாபகம் வருது.

டாக்டர் : காலையில் இரண்டு சப்பாதி, மதியம் இரண்டு சப்பாத்தி, இரவில் இரண்டு சப்பாத்தி சாப்பிடுங்க உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

சர்தார்ஜி : சாப்பாட்டுக்கு முன்னாடியா? பின்னாடியா?//

பாருங்க மக்களே.. நம்ம அண்ணாச்சி எவ்ளோ நல்லவர்ன்னு.. :))

said...

//முரளிகண்ணன் said...

படிப்பவர்கள் டரியல் ஆகாமல் ஒரு நல்ல பதிவு//

நன்றி முரளிகண்ணன்.. :)
-----------

//சின்ன அம்மிணி said...

புதுகைத்தென்றல் அக்காவுக்கு வாழ்த்துக்கள், டரியல் சூப்பர்//
ரொம்ப நன்றி அக்கா.. :)
----------------

said...

//சின்ன அம்மிணி said...

பழ மெனு வில பலாப்பழத்தை தானே நீக்க சொன்னார், பொய் சொல்லாம சொல்லுங்க//

ஆமாம்க்கா.. அதை நீக்கிட்டு நியூசிலாந்து ஆப்பிளை அதிகம் சாப்பிட சொன்னார்.. எப்போ அனுப்பறிங்க? :))

said...

// Podiponnu - பொடிப் பொண்ணு said...

புதுகைத்தென்றல் அக்காவுக்கு வாழ்த்துக்கள் !!!!!!!!!! :)

தங்கத் தலைவர் டி.ஆர் பத்தின கிண்டல் வீடியோவை நான் வன்மையாக கண்டிக்கிறேன் !!!//

நீ அவரை பத்தி எழுதற கவிதைகளுக்கு இது பரவா இல்லை.. :))

said...

// தாமிரா said...

முழுமையாக தவிர்த்தால் உடல் ரீதியான பிரச்சனைகள் வரும் என்பதால் பழங்கள் சாப்பிடுகிறேன்.//

ரெண்டு கிலோ சாப்பிடுறீங்களாமே..!

அப்பிடீனு கஷ்டப்பட்டு ஒரு பின்னூட்டம் யோசிச்சிகினு வந்தா ஊடுகட்டி விளையாண்டுகிட்டிருக்கார் குசும்பன்.//

பாருங்க மக்களே.. இவரோட தன்னடக்கத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி.. இதை யோசிக்க இவுரு கஷ்டப் பட்டாராமாம் கஷ்டம்..
( அப்போ இவர் பேர்ல வர்ர பதிவெல்லாம் ரமா அக்கா எழுதி குடுக்கறதா இருக்குமோ.. சரி அடுத்தவங்க சமாச்சாரம் நமக்கெதுக்கு? :)) )

//விஜய் டீவியைப்பற்றி சொன்ன விஷயத்துக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன். இப்போ அவங்க புரொகிராம் பற்றி விளம்பரம் போட்டே கடுப்படிக்கிறானுங்கோ..!//

பின்ன.. ஒரே நிகழ்ச்சியை 10 வாட்டி மறுஒளிபரப்பு பண்ணிட்டிருந்தா எவன் விளம்ரம் தருவான்.. அதான் ஒரு நிகழ்ச்சிக்கு இன்னொரு நிகழ்ச்சியை விளம்பரமா போடறாங்க போல.. :)

said...

// குசும்பன் said...

நண்பர்களே சஞ்சய் போட்டு இருக்கும் டீ சர்ட் பெண்ணின் புகைப்படத்துக்கு விளக்கம் விவகாரமாக சொல்கிறார், மேலதிக தகவலுக்கு அவரை தொடர்பு கொள்ளவும்... பயங்கர குஜாலான மேட்டர்.

பப்ளிக்கா சொல்லமுடியாத மேட்டர்:))//

பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம் போடும் குச்சும்பனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

said...

நன்றி விலெகா :)

தமிழ் பிரியன் அண்ணாச்சி.. உங்க கருத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி.. :)

said...

// மங்களூர் சிவா said...

கொய்யால விடியோ சூப்பர்!!//

டேங்க்ஸ் மாம்ஸ்.. :)

said...

me the 40:):):)

said...

//என் படத்துல டான்ஸ்ல கலக்கியிருக்கேன் பாருங்க, வெற்றி தோல்வி இதெல்லாம் வேற. மக்கள் தெய்வங்கள், என் படத்தப் பாக்குறாங்க//

//கலைஞர் பாராட்டுவிழால, டி.ஆர் பேசப் போறாருன்னு சொன்னவுடனே, நான் பேச ஆரம்பிக்கறத்துக்கு முன்னயே எல்லாரும் கை தட்ட ஆரம்பிச்சிட்டாங்க//

//மாங்கொட்டை போட்டா மாங்கா தானே கிடைக்கும், என் பையன் சிம்புவும் அப்டித்தான்//


இப்படியெல்லாம் தன்னைத்தானே உணர்ந்த ஒரு மகானை அண்டசராசர நாயகன் என்று கூறுவதில் என்ன தவறு?:):):)

said...

புதுகை தென்றல் அக்கா ஒரு வருடத்தில் 250 பதிவுகள் போட்டிருக்கிறார். கிட்டத் தட்ட தினம் ஒரு பதிவு. //

வாழ்த்துக்கள்:):):)

said...

வீடியோ பார்த்துட்டு எனக்கு சிரிப்பு வரல,
அழுகை தான் வருது.
பாவம் அவர் குடும்பத்தார்கள்.

said...

டரியலும் கலக்கலா இருக்கு

said...

//வால்பையன் said...

வீடியோ பார்த்துட்டு எனக்கு சிரிப்பு வரல,
அழுகை தான் வருது.
பாவம் அவர் குடும்பத்தார்கள்.//

குடும்பத்துல ஒருத்தர் மட்டும் இப்டி இருந்தா நீங்க சொல்றது சரி தான்.. 2 பேர் இருந்தா? :))

said...

//Blogger வால்பையன் said...

டரியலும் கலக்கலா இருக்கு//
நன்றி வால்.. :)

said...

யோவ் என்னய்யா.. ஆளாளுக்கு நொறுக்ஸ், துணுக்ஸ், கதம்பம், டரியல், அவியல், பொரியல், கூட்டு, சாம்பார், ரசம், தயிறுன்னு ஆரம்பிச்சிருக்கீங்க.. என்னாச்சி, தனிப்பதிவுக்கு என்னை மாதிரியே யாருக்கும் மேட்டர் கிடைக்கிலயா? :))))

said...

//

இப்படியெல்லாம் தன்னைத்தானே உணர்ந்த ஒரு மகானை அண்டசராசர நாயகன் என்று கூறுவதில் என்ன தவறு?:):):)//

ஐயையோ.. ராப்புக்கு யாராவது சூடம் காட்டி தேங்கா ஒடைங்கப்பா.. பொங்கி எழுந்துட்டா நாடு தாங்காது...

said...

இந்த காமெடி க்ளிப்பிங்க்கை ஏன் சிரி சிரி, சிரிப்போம், காமெடி ப்ளஸ்லையெல்லாம் போடவே மாட்டீங்கறாங்க?

said...

எவ்வளவோ அருமையான பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரராகிய இவர், இப்ப்டிசேலம் மேட்டர் வைத்தியர் ரேஞ்சுக்கு ஆய்ட்டாரே...

Tamiler This Week