இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 2 November, 2008

எச்சரிக்கை : சினிமா தொடர் பதிவு

எச்சரிக்கை : இந்தப் பதிவு அநியாயத்துக்கு பெரியதாக இருப்பதால் வழக்கம் போல் படிக்காமல் கமெண்ட் போடும் நல்லவர்களுக்கு... தடித்த எழுத்துக்களில் இருப்பதை மட்டும் படித்துக் கொள்ளலாம்.:)

என்னை இந்தத் தொடருக்காக அழைத்த "மீ த ராப் " "பெரியக்கா மலேசியா மாரியாத்தா மைஃப்ரண்ட் " என் பாசமலர் "பின்னவீணத்துவ சுனாமி ஸ்ரீமதி " ஆகியோருக்கு கொலைவெறியுடன் ஆளுக்கு ஒரு நன்றி ):):)

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஒரு வயதுக்கு முன்பே இருக்கலாம். எங்க திரை அரங்கில்(இப்போது இல்லை) எப்போது முதலில் பார்க்க ஆரம்பித்தேன் எனத் தெரியவில்லை. லேசான நினைவு இருக்கும் சம்பவம் எனில் அரூர் தாஸ் தியேட்டரில் வெற்றிவிழா பார்த்தது நினைவிருக்கு. இரவுக் காட்சி பார்த்துவிட்டு அம்மா ,அப்பா மற்றும் அப்பாவின் தோளில் நான் வந்துக் கொண்டிருக்கிறோம். சில அடி தொலைவு போனதும் ஒரு கை என் தோளில் விழுகிறது. லேசாகத் தலையை தூக்கிப் பார்க்கிறேன். எங்கள் ஊரின் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.லட்சுமணபெருமாள் அவர்கள் சிரிக்கிறார். அப்போது என்ன வயதென்று தெரியவில்லை.ஆனால் படம் பார்த்து காலையில் பசங்க கிட்ட செம பில்டப் குடுத்து சண்டைக் காட்சிகளை விளக்கும் வயது என்பது மட்டும் நினைவிருக்கிறது. அப்போ கதைய பத்தி எல்லாம் எவனுக்கு கவலை.. :)) நாங்க எல்லாம் அப்போவே டெர்ரராக்கும்.. :)

1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

நினைவு தெரிந்த பின் தான் எல்லா படமும் பார்த்திருக்கிறென்...நினைவில்லாமலா பிறந்தேன்.. நல்லா கேக்கறாங்கயயா கேள்வி .. :) ஆனால் வெற்றிவிழா தான் நினைவில் இருக்கிறது.

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

ஸ்ஸ்ஸ்ஸபா.. இப்போவே கண்ணக் கட்டுதே. :( ( பின்ன அ,ஆ, இ, ஈ நு கேட்டா என்ன பன்றதாம் )
சூப்பர் சண்டை காட்சிகள்.. சண்டைக் காட்சிகளைத் தவிர வேறு எதையும் புரிந்துக் கொள்ளவோ உணர்ந்துக் கொள்ளவோ முடியாத அல்லது விரும்பாத வயது அது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா :( .. இனி தியேட்டர் வந்து சினிமா பார்க்கக் கூடாது என முடிவெடுக்க வைத்த படம். கொய்யால நான் என்ன கொள்ளை அடிச்சா காசு சம்பாதிகிறேன்.. இந்த குப்பைகளை எல்லாம் 85 ரூபாய் டிக்கெட் வாங்கி பார்க்க. ( நிஜமா நல்லவரு நாக்கப் புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்விக்கு கொஞ்சம் கூடுதலாவே கேட்டதால நோ ப்ளாக்ல டிக்கெட் வாங்கிங்.. :))
(1-இ.. கேள்விய இங்க கேட்டிருக்கனும்.. கொலைவெறித் தாண்டவம் ஆடி இருப்பேன்)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

குருவி ...இணையத்தில் பார்த்தேன்.... 3 பகுதிகள் தரவிறக்கி வைத்துருந்தாலும் கஷ்டப் பட்டு இரண்டாம் பகுதியின் பாதி பார்க்கும் போதே... நம்ம நந்து அண்ணா சாவை உணர்ந்ததாக சொன்னாரே.. அதைவிட படுபயங்கர விளக்கமுடியாத உணர்வெல்லாம் எனக்கு ஏற்பட்டது.. யாராவது இஅல்வசமாய் ஒரு கணினி தருவதாக அப்போ சொல்லி இருந்தால் இந்தக் கணினியை கொலை செய்திருப்பேன். :(

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
நான் எப்போதுமே சோகமான அல்லது "மெசேஜ்" சொல்லும் படங்களைப் பார்ப்பது இல்லை. என்னை பொறுத்தவரையில் சினிமா என்பது வெரும் பொழுதுபோக்கு சாதனம். தவமோ தியானமோ செய்து மனதை சாந்தப் படுத்தும் கலை எனக்கு வராது என்பதால்( மூன்றாண்டுகள் தினமும் காலையில் 1 மணி நேரம் தியானம் செய்திருக்கிறேன்.. அந்த அனுபவத்தில் சொல்கிறேன்) மனதை சாந்தப் படுத்தவே அல்லது மன இறுக்கத்தில் இருந்து விடுபடவே சினிமா பார்ப்பதை விரும்புபவன்.

எனக்கு சச்சின், வசீகரா, பஞ்ச தந்திரம், 23ம் புலிகேசி வகையறா சினிமாக்கள் மீது தான் நாட்டம்...
ஆனாலும்.. மகாநதி என்னை வெகுவாக பாதித்த படம் என சொல்வேன். அந்த சிறுமி கொல்கத்தா விபச்சார விடுதியில் படும் அவதி.. பிறகு வீட்டிற்கு வந்தும் தூக்கத்தில் அதை நினைத்து புலம்புவது.. இது மிகவும் தாக்கிய காட்ச்சிகள்...
அடுத்து....தேவர் மகன்... அதில் வரும் பஞ்சாயத்துக் காட்சிகளெல்லாம் எங்கள் வாழ்க்கையில் நிகழ்வது போன்று இயல்பாய் இருந்தது. தாக்கியது என்று சொல்வது கொஞ்சம் மிகையாக இருக்கும். என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஊரில் நாசர் குடும்பம் போன்ற ஒரு குடும்பம்.. எப்போதும் எங்களுடன் மல்லுக்கு நிற்கும்.. ஆனால் இந்த தலைமுறையியில் நாங்கள் ஒற்றுமையாக இருப்பதோடு அப்போது மோதிக் கொண்ட எங்கள் பெற்றோர்களியும் ஒன்றாக்கி இருக்கிறோம். ஒருவர் தவிர மற்ற எல்லாரும் பகை மறந்தே உறவாடுகிறார்கள். :)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

நிறைய இருக்கு.. குறிப்பாக பெயர் பிரச்சனை.. பெயரில் என்ன இருக்கு? அதை எல்லாம் பெரிதாக்கி இம்சை செய்வார்கள் கலாச்சார காவலர்கள். சண்டியர் கிருஷ்ணசாமி கும்பல் பண்ண அட்டகாசம்... ரஜினி படங்களுக்கு ராமதாஸ் வகையறா செய்த ஓவர் டார்ச்சர்.. எல்ல்லம் ரொம்ப மோசமான அரசியல்.

அதைவிட பெரிதாக தாக்கிய அரசியல் தமிழ்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் வரிவிலக்கு அளித்தது. கலைஞரின் மிக மோசமான முடிவு இது. பெயர் மட்டும் தமிழில்.. ஆனால் வசங்கள் பாடல் வரிகளில் பாதி எல்லாம் ஆங்கிலத்தில்... நல்லவன் என்று பெயர் வைத்துக் கொண்டால் கற்பழிப்பு செய்தாலும் குற்றமல்ல என்பது போல இருக்கு இது. சரியான மோசடி இது. விஞ்சான முறை வரி ஏய்ப்பு...

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

குறிபிட்டு சொல்ல நினைவு வரவில்லை. அபூர்வ சகோதரர்கள் பார்த்து பிரமித்து போனேன். பிறகு இரட்டை வேடங்கள் படங்களைப் பார்த்து ஆச்சர்யப் பட்டிருக்கேன். விட்டாச்சார்யா பாணி தந்திரக் காட்சிகள் கொண்ட படங்கள் மற்றும் சிவாஜியின் நவராத்திரி ஆகியவைகள் பெரிதும் தாக்கிய தொழில்நுட்பங்கள் என்று சொல்லலாம்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
அவ்வப்போது இணையத்தில் மட்டும். சினிமாவின் புதிய விஷயங்கள் அல்லது கமல் பற்றிய செய்திகள் கண்ணில் படும் போது படிப்பேன். மத்தபடி தேடிச் சென்று ஆர்வத்துடன் படிப்பது இல்லை.

7. தமிழ்ச்சினிமா இசை?

என் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்று கூட சொல்லலாம். இப்போதெல்லாம் தினமும் சில மணி நேரங்களாவது தமிழ் சினிமா இசையை கேட்பேன். காலையில் எழுந்ததும் ஜெயா மேக்ஸில் பாடல்கள் கேட்டுக் கொண்டு தான் எல்லா வேலைகளும் நடக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது கணினியில் கேட்டுக் கொண்டிருப்பேன். மின்சாரத் தடை அல்லது பயணத்தில் மொபைலில் கேட்டுக் கொண்டிருப்பேன். பாடல் வரிகளை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை.. இசை மட்டுமே என் விருப்பம்.

இப்போது வரும் தமிழ் சினிமா இசை எல்லாம் தற்காலிகமாகவே இருக்கிறது. அடுத்த நல்ல மெட்டுக்கள் சில வந்தால் முன்னவைகள் காணாமல் போய்விடுகிறது அல்லது முன்னவைகள் கேட்க பிடிப்பதில்லை. என் மொபைலில் சேமித்து வைத்திருப்பது எல்லாம் இளையராஜாவின் “ அரம்பகால” இசைகள் மட்டுமே. அந்த இடத்தை நிரப்ப இனி யாராலும் முடியும் என்று தெரியவில்லை.

இப்போதும் தேவை இல்லாத இசைக் கருவிகளின் இரைச்சலைக் குறைந்தால் இன்னும் சில காலம் கூடுதலாக ரசிக்கலாம் என்று நினைக்கிறேன்.

8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

ஹிஹி.. தொலைக்காட்சியில் தமிழ் சினிமா பார்ப்பதே இல்லையே :)).. Star movies, HBO வில் மட்டும் தானே சினிமாவே பார்ப்போம் நாங்க.. :)) இப்போ எல்லாம் HBOவில் சப் டைட்டில் எல்லாம் போட்டு அசத்துகிறார்கள். :)) ஹிந்தி படங்களை தியேட்டர் அல்லது டிவில் பார்ப்பது இல்லை.. ஒரு மண்ணும் புரியாம என்னத்தை பார்க்கிறது.

8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?

சமீபத்தில் விடியோகான் நிறுவனம் குடுத்த ஒரு ஹிந்தி சினிமா தொகுப்பில் லக்‌ஷ்யா பார்த்தேன் சப் டைட்டில் இருந்ததால். :) .. கார்கில் போரை வைத்து எடுத்த உணர்ச்சிப் பூர்வமான படம். நன்றாக இருந்தது.

ஆங்கிலத்தில் ஜுராசிக் பார்க். பாதித்ததா பயமுறுத்தியதா என்று சொல்ல முடியவில்லை. தாக்கம் குறைய பல காலம் ஆகியது.

சமீபத்தில் அண்ணாச்சி வடகரைவேலன் புண்ணியத்தில் கோவை காஸ்மோபாலிடன் க்ளப்பில் அகிராவின் படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அரை மணி நேரத்தில் வந்துவிட வேண்டுமென்று நினைத்து தான் போனேன். பிறகு ஒரு மணி நேரம்.. பிறகு 2 மணிநேரம்.. அப்படியே என்னை கட்டிப் போட்டுவிட்டது. 3 மணி நேரம் ஆகியும் வெளியே வர மனமில்லை. துணிதுவைக்கும் கடமை என்னை கெட்ட வார்த்தையில் திட்டி அழைத்ததால் மனமில்லாமல் வெளியே வந்தேன். படங்களின் பெயரை நினைவில் கொள்ள முடியவில்லை. அவ்வ்ளவு அற்புதமான படங்கள்.

சூபப்ர் மேன் மற்றும் ஸ்பைடர் மேன் படங்களை பார்க்கும் போது எரிச்சலாய் வரும். இவைகளுக்கு லுச்சாத் தனமான ஹாரிபாட்டர் கதைகள் எவ்வளவோ மேல். :(.. இவங்களுக்கு எல்லாம் விஜயகாந்த் மற்றும் விட்டலாச்சார்யார் படங்களை யாராவது போட்டு காட்டுங்கப்பா.. :(


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

Pass Boss :))
(....ஒருவேளை எனக்கு நேரடித் தொடர்பு இல்லாததால் வேண்டுமானால் தமிழ்சினிமா மேம்படலாம்.. :))... )

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரகாசமாய் இருக்கு. அதற்கு முன் சில கும்பல்களை ஓட ஓட விரட்ட வேண்டும் அல்லது திருந்த வைக்க வேண்டும்.
  • சொந்தமய் யோசிக்கத் தெரியாமல் ஆந்திராவில் இருந்து சுட்டுப் போடும் எடிட்டர்” ரீமேக் மோகன்” குடும்பம்.
  • மகேஷ் படங்களின் பூஜை அன்றே தமிழ் ரைட்ஸை வாங்கி பெட்டியில் பூட்டிவைக்கும் இளைய தலவலிபதி விஜய்
  • சந்திரமுகி, குசேலன் என்று கடன்வாங்கியே காலம் தள்ளும் ரஜினி
  • இரட்டை அர்த்த வசனங்கள் மட்டுமே சினிமா எடுக்க போதுமான் தகுதி என நினைத்துக் கொண்டிருக்கும் எஸ்ஜே.சூர்யா
  • யாராவது ஒருவர் வித்தியசமான கதையில் படமெடுத்து தெரிந்தோ தெரியாமலோ அது நன்றாக ஓடினால் அதே பாணியை பல ஆண்டுகளுக்கு பிடித்து தொங்கும் மசாலா இயக்குநர்கள்.
  • சினிமா எடுக்க காதல் என்னும் கன்றாவியை தாண்டி யோசிக்கத் தெரியாத டூபாக்கூர்கள்
இவர்களை எல்லாம் விரட்ட வேண்டும் அல்லது இவர்களாகவே திருந்த வேண்டும். அபப்டி திருந்தினால் தமிழ்சினிமா பெரிய சிகரங்களை எட்டலாம். பாலிவுட் இன்று இருக்கும் உயரத்திற்கு பல தமிழர்கள் தான் காரணம். ஏன்னா அங்க புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பு உண்டு. அதனால் திறமைசாலிகள் புலம் பெயர்ந்துவிடுகிறார்கள். கோடம்பாக்கத்தில் உப்புமாக்களுக்கு மட்டுமே வாய்ப்பு.

பாலிவுட் = சீனா
கோலிவுட் = இந்தியா

இந்தியா =(அ)> சீனா என்ற நிலை வர நிறைய சீர்திருத்தங்கள் தேவை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய
சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா என்பது வெரும் பொழுதுபோக்கு சாதனம். இன்று ஏராளமான பொழுதுபோக்கு சாதங்கங்கள் வந்துவிட்டதால் சினிமா இல்லாதது ஒரு குறையாவே இருக்காது. தமிழர்கள்சினிமாவிற்கு தண்ட செலவு செய்யாமல் ஓராண்டு சேமிப்பு உயரும். மாணர்களின் படிப்பு மேம்படும். மொத்தத்தில் தமிழர்கள் சுபிட்சமாகவே இருபபார்கள்.

சினிமாத் தொழிலை நம்பி இருக்கும் குடும்பங்கள் பெரிய அளவில் பாதிப்படையும் என்பதால் அப்படி ஒரு நிலை வரக் கூடாது என்பதே என் விருப்பம்.


............ யப்பா கேள்வி தயாரித்த புண்ணியவான்களா... பள்ளியோடத்துல கூட இம்புட்டு கேள்விக்கு பதில் சொன்னதில்ல்லை... 5 கேள்வி கேட்டாலே 4 கேள்விகளை சாய்சில் விட்டு 5வது கேள்விக்கு சாய்சில் விட்ட 4 கேள்விகளையும் பதிலா எழுதி வைப்பேன். என்னையப் போய் எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுத வைச்சிட்டிங்களே... நல்லா இருக்கப்பு.. :(

சுத்தி நின்னு தப்பிக்கவிடாம மாட்டிவிட்ட புண்ணியவதிகளா.. இப்போ சந்தோஷமா.. நல்லா இருங்க நீங்களும்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

அநேகமா இந்த தொடர்பதிவின் கடைசி பதிவு என்னோடதா தான் இருக்கும்னு நினைக்கிறேன். ஒருவேளை இதுவரை இந்த தொடரில் மாட்டாத புண்ணியவான்கள் யாராச்சும் இருந்தா என்னோட வேண்டுகோளை ஏற்றதா சொல்லி பதிவு போட்டு மறக்காம இந்த பதிவுக்கு ஒரு லின்கும் குடுங்க.. ( எல்லாம் ஒரு வெளம்பரம் தான். :)) )

சின்ன பதிவா இருந்தாலே எழுத்துப் பிழைகள் எண்ணமுடியாத அளவு இருக்கும். இதை மறுமுறை வாசித்து திருத்தம் செய்ய என் சோம்பேறித் தனம் அனுபதியளைக்காததால் வழக்கம் போல் எழுத்துப் பிழைகளை கண்டுக்க வேணாம்னேன்.:))
--

இதைத் தொடர அருணா அக்காவை மற்றும் பொடிப்பொண்ணை மாட்டிவிடுகிறேன்.. :)

50 Comments:

said...

பதிவு முழுவதுமே தடித்த எழுத்துக்களால் இருப்பதால் எதைப்படிப்பது என்று ஒரு சிறு குறிப்பு வரைக!!!

said...

//"மீ த ராப் " "பெரியக்கா மலேசியா மாரியாத்தா மைஃப்ரண்ட் " என் பாசமலர் "பின்னவீணத்துவ சுனாமி ஸ்ரீமதி "//

மாம்ஸ் தமிழ் பதிவுலகமே உங்களை கூப்பிட்டு இருக்கு பாருங்க, நான் சொன்னா கிண்டல் செய்யுறேன்னு என்று சொல்லுவீங்க... பெரும் பதிவர் ஆகிட்டீங்க:)

said...

//ஒரு கணினி தருவதாக அப்போ சொல்லி இருந்தால் இந்தக் கணினியை கொலை செய்திருப்பேன். :(//

இப்பயும் ஒன்னும் கெட்டு போகல நான் தருகிறேன்...

(தயவு செய்து கணினியை உடைக்கவும், பதிவு எழுதாம ஆக்க என்ன என்ன எல்லாம் செய்யவேண்டி இருக்கு)

said...

//சில அடி தொலைவு போனதும் ஒரு கை என் தோளில் விழுகிறது. //

என்ன மாம்ஸ் மருதம் கதை புக்கில் வரும் ஆரம்ப வரிகள் மாதிரி இருக்கு!!!

said...

//படங்களை தியேட்டர் அல்லது டிவில் பார்ப்பது இல்லை.. //

வானவில் தெரியும் அது என்ன மாம்ஸ் டிவில்:)))

said...

/
குசும்பன் said...

பதிவு முழுவதுமே தடித்த எழுத்துக்களால் இருப்பதால் எதைப்படிப்பது என்று ஒரு சிறு குறிப்பு வரைக!!
/

ரிப்பீட்டு

said...

//
குசும்பன் said...

//"மீ த ராப் " "பெரியக்கா மலேசியா மாரியாத்தா மைஃப்ரண்ட் " என் பாசமலர் "பின்னவீணத்துவ சுனாமி ஸ்ரீமதி "//

மாம்ஸ் தமிழ் பதிவுலகமே உங்களை கூப்பிட்டு இருக்கு பாருங்க, நான் சொன்னா கிண்டல் செய்யுறேன்னு என்று சொல்லுவீங்க... பெரும் பதிவர் ஆகிட்டீங்க:)
//

ரிப்பீட்டு

said...

//
//ஒரு கணினி தருவதாக அப்போ சொல்லி இருந்தால் இந்தக் கணினியை கொலை செய்திருப்பேன். :(//

இப்பயும் ஒன்னும் கெட்டு போகல நான் தருகிறேன்...

(தயவு செய்து கணினியை உடைக்கவும், பதிவு எழுதாம ஆக்க என்ன என்ன எல்லாம் செய்யவேண்டி இருக்கு)
//

ரிப்பீட்டு

said...

//
குசும்பன் said...

//சில அடி தொலைவு போனதும் ஒரு கை என் தோளில் விழுகிறது. //

என்ன மாம்ஸ் மருதம் கதை புக்கில் வரும் ஆரம்ப வரிகள் மாதிரி இருக்கு!!!
//

ரிப்பீட்டு

said...

/
குசும்பன் said...

//படங்களை தியேட்டர் அல்லது டிவில் பார்ப்பது இல்லை.. //

வானவில் தெரியும் அது என்ன மாம்ஸ் டிவில்:)))
/

ரிப்பீட்டு

said...

/
சரோஜா :( .. இனி தியேட்டர் வந்து சினிமா பார்க்கக் கூடாது என முடிவெடுக்க வைத்த படம்.
/

இதுமாதிரி நிறைய படம் எடுங்கய்யா நாட்டுல நிறைய பேரு திருந்தணும்!!

said...

//

குருவி ...இணையத்தில் பார்த்தேன்.... 3 பகுதிகள் தரவிறக்கி வைத்துருந்தாலும் கஷ்டப் பட்டு இரண்டாம் பகுதியின் பாதி பார்க்கும் போதே... நம்ம நந்து அண்ணா சாவை உணர்ந்ததாக சொன்னாரே.. அதைவிட படுபயங்கர விளக்கமுடியாத உணர்வெல்லாம் எனக்கு ஏற்பட்டது..
//

நல்லா இருங்கய்யா!

அந்த 3வது பாகத்தையும் பாத்துட்டு விமர்சனம் எழுதவும்.

said...

//
* சொந்தமய் யோசிக்கத் தெரியாமல் ஆந்திராவில் இருந்து சுட்டுப் போடும் எடிட்டர்” ரீமேக் மோகன்” குடும்பம்.
* மகேஷ் படங்களின் பூஜை அன்றே தமிழ் ரைட்ஸை வாங்கி பெட்டியில் பூட்டிவைக்கும் இளைய தலவலிபதி விஜய்
* சந்திரமுகி, குசேலன் என்று கடன்வாங்கியே காலம் தள்ளும் ரஜினி
* இரட்டை அர்த்த வசனங்கள் மட்டுமே சினிமா எடுக்க போதுமான் தகுதி என நினைத்துக் கொண்டிருக்கும் எஸ்ஜே.சூர்யா
* யாராவது ஒருவர் வித்தியசமான கதையில் படமெடுத்து தெரிந்தோ தெரியாமலோ அது நன்றாக ஓடினால் அதே பாணியை பல ஆண்டுகளுக்கு பிடித்து தொங்கும் மசாலா இயக்குநர்கள்.
* சினிமா எடுக்க காதல் என்னும் கன்றாவியை தாண்டி யோசிக்கத் தெரியாத டூபாக்கூர்கள்
//

கோடம்பாக்கத்துக்கு சாவுமணி அடிச்சிடுவீங்க போல இருக்கே??

said...

அடப் பாவிகளா! உங்கள் பதிவைப் பார்த்துவிட்டு மாட்டிவிடலையேன்னு சந்தோஷப் பட்டுட்டுத் தானே பதில் போட்டேன்....இப்பிடி டகால்டி வேலை பண்ணுவீங்கன்னு தெரியாமப் போச்சே???
அன்புடன் அருணா

said...

"மொபைலில் சேமித்து வைத்திருப்பது எல்லாம் இளையராஜாவின் “ அரம்பகால” இசைகள் மட்டுமே. அந்த இடத்தை நிரப்ப இனி யாராலும் முடியும் என்று தெரியவில்லை."

உண்மையை சொன்னீங்க போங்க !

ஆனா ரஜினியின் எந்த படமும் பார்க்காததால் எஸ்.ஷெ.சூர்யா மன்றம் சார்பாக கண்டனத்தை தெருவிக்கிறோம்:-))))))))))))

said...

//கொய்யால நான் என்ன கொள்ளை அடிச்சா காசு சம்பாதிகிறேன்.. இந்த குப்பைகளை எல்லாம் 85 ரூபாய் டிக்கெட் வாங்கி பார்க்க.

Should I Clap?
:)

//நல்லவன் என்று பெயர் வைத்துக் கொண்டால் கற்பழிப்பு செய்தாலும் குற்றமல்ல

Forwarded to Hon.CM of TN.

//மாணர்களின் படிப்பு மேம்படும்.

ஹி..ஹி..
பாலிவுட், ஹாலிவுட், கிரிக்கெட், xxx, yyy, zzz...

said...

சூப்பர் பதிவு. முழுதாக படித்தேன் :( :(


கலக்கல்சு...... :)

said...

//மூன்றாண்டுகள் தினமும் காலையில் 1 மணி நேரம் தியானம் செய்திருக்கிறேன்.. அந்த அனுபவத்தில் சொல்கிறேன்//

அப்படியா ??? சொல்லவே இல்லை :P

said...

//இப்போ எல்லாம் HBOவில் சப் டைட்டில் எல்லாம் போட்டு அசத்துகிறார்கள். :)) //

சேம் பின்ச்சு :)

said...

பசங்களோட படத்தை பில்டப் கொடுத்து பேசும் வயசாம்.. தலைமை ஆசிரியர் எல்லாம் தெரியுதாம்.. அப்பா தோளில் தூங்கிட்டு வருவாராம்... என்ன ஏமாத்த பாக்கிறீங்களா சஞ்சய் அங்கிள்?

நீங்க முதன் முதலில் பார்த்த அந்த 1970 களில் வந்த படத்தைச் சொன்னா நாங்க என்ன உங்களை கலாய்க்கவா போறோம்???.. ;))

said...

///என்னை இந்தத் தொடருக்காக அழைத்த "மீ த ராப் " "பெரியக்கா மலேசியா மாரியாத்தா மைஃப்ரண்ட் " என் பாசமலர் "பின்னவீணத்துவ சுனாமி ஸ்ரீமதி " ஆகியோருக்கு கொலைவெறியுடன் ஆளுக்கு ஒரு நன்றி ):):)///
எல்லாம் பெரிய பெரிய பதிவர்கள்.. நீங்க மெய்யாலுமே பெரீஈஈஈஈஈஈஈஈஈய பதிவர் தான்... :))))

said...

///குசும்பன் said...

பதிவு முழுவதுமே தடித்த எழுத்துக்களால் இருப்பதால் எதைப்படிப்பது என்று ஒரு சிறு குறிப்பு வரைக!!!/// ரிப்பீட்ட்ட்ட்ட்டே

said...

//ஒரு கணினி தருவதாக அப்போ சொல்லி இருந்தால் இந்தக் கணினியை கொலை செய்திருப்பேன். :(//

முதலில் உடைச்சுட்டு சொல்லுங்க.. நாங்க உங்க பேரைச் சொல்லி நிதி கலெக்ட் பண்ணித் தர்ரோம்.. ;)))

said...

மங்களூர் சிவா அண்ணாத்தே சொன்னதுக்கு எல்லாம் ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டே போட்டுக்குறேன்.. :))

said...

பொடிப் பொண்ணு போட்ட கமெண்டுக்கு எல்லாம் ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே போட்டுக்குறேனாக்கும்... :)))

Raghavan said...

ஹலோ.. என்னப்பா ஒரு பின்னூட்டத்திற்கு கூட பதில் போடவேயில்லை... ஞாயிற்றுக்கிழமை என்பதால் தூங்கியாச்சா இல்லை பதில் போட விருப்பமில்லையா? இராகவன், நைஜிரியா

said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வெற்றிவிழா விஷயத்தில் அண்ணன் தமிழ்பிரியன் கருத்துக்களை கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

said...

// மகாநதி என்னை வெகுவாக பாதித்த படம் என சொல்வேன்//

இத மொதல்லயே சொல்லவேண்டியதுதான. என்னைவிட பயங்கரமா சுத்தி வளைச்சுத்தான் விஷயத்துக்கு வருகிறீர்கள்:):):)

said...

சரோஜா விஷயமும் எனக்கு அண்ணன் தமிழ்பிரியன் கூற்றை ஊர்ஜிதப்படுத்துது.

said...

//பதிவு முழுவதுமே தடித்த எழுத்துக்களால் இருப்பதால் எதைப்படிப்பது என்று ஒரு சிறு குறிப்பு வரைக!!!//

வழிமொழிகிறேன்:):):)

said...

//"மீ த ராப் " "பெரியக்கா மலேசியா மாரியாத்தா மைஃப்ரண்ட் " என் பாசமலர் "பின்னவீணத்துவ சுனாமி ஸ்ரீமதி " //

ஆண் பதிவர்கள் ஏன் உங்களை ஆட்டத்துல சேத்துக்கலை:):):)

said...

////

குருவி ...இணையத்தில் பார்த்தேன்.... 3 பகுதிகள் தரவிறக்கி வைத்துருந்தாலும் கஷ்டப் பட்டு இரண்டாம் பகுதியின் பாதி பார்க்கும் போதே... நம்ம நந்து அண்ணா சாவை உணர்ந்ததாக சொன்னாரே.. அதைவிட படுபயங்கர விளக்கமுடியாத உணர்வெல்லாம் எனக்கு ஏற்பட்டது..
//

நல்லா இருங்கய்யா!

அந்த 3வது பாகத்தையும் பாத்துட்டு விமர்சனம் எழுதவும்.

//

வழிமொழிகிறேன்:):):)

said...

hmmm.. interesting! aana konjam lengthy!

said...

//என்னை இந்தத் தொடருக்காக அழைத்த "மீ த ராப் " "பெரியக்கா மலேசியா மாரியாத்தா மைஃப்ரண்ட் " என் பாசமலர் "பின்னவீணத்துவ சுனாமி ஸ்ரீமதி " ஆகியோருக்கு கொலைவெறியுடன் ஆளுக்கு ஒரு நன்றி ):):)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்...:))
தொடரை தொடர்ந்ததுக்கு நன்றி.. :))))))

said...

தடித்த எழுத்துக்களை மட்டும் படிக்கறதுக்கு பதிலா முழுபதிவையுமே படிச்சுட்டு போயிடலாம்.

\\ஆனால் இந்த தலைமுறையியில் நாங்கள் ஒற்றுமையாக இருப்பதோடு அப்போது மோதிக் கொண்ட எங்கள் பெற்றோர்களியும் ஒன்றாக்கி இருக்கிறோம். ஒருவர் தவிர மற்ற எல்லாரும் பகை மறந்தே உறவாடுகிறார்கள். :)\\


அந்த‌ ஒருவ‌ர் ச‌ஞ்ச‌யா? கோவிச்சுக்காதீங்க‌. நிஜ‌மாவே நீங்க‌ இத்த‌னை ந‌ல்ல‌வரா?\\துணிதுவைக்கும் கடமை என்னை கெட்ட வார்த்தையில் திட்டி அழைத்ததால் மனமில்லாமல் வெளியே வந்தேன்.\\

திட்டினாதான் வேலை செய்ய‌ணுமின்ற‌ ப‌ழ‌க்க‌ம் இன்னும் போக‌லையா?நான் இந்த‌ ப‌திவை முழுசா ப‌டிச்சேன்னு ந‌ம்புங்க‌.

said...

@குசும்பன் :
சிறு குறிப்பு வரைந்தால் அதுவும் பெரும் பதிவாகிவிடும்.. பரவால்லையா? :)

/மாம்ஸ் தமிழ் பதிவுலகமே உங்களை கூப்பிட்டு இருக்கு பாருங்க, நான் சொன்னா கிண்டல் செய்யுறேன்னு என்று சொல்லுவீங்க... பெரும் பதிவர் ஆகிட்டீங்க:)//
நான் வேலை வெட்டி இல்லாம இருக்கிறது மொத்த பதிவுலகத்துக்கே தெரிஞ்சிருக்கு மாமா.. :)

//இப்பயும் ஒன்னும் கெட்டு போகல நான் தருகிறேன்...

(தயவு செய்து கணினியை உடைக்கவும், பதிவு எழுதாம ஆக்க என்ன என்ன எல்லாம் செய்யவேண்டி இருக்கு//

ஓசில ஒரு புதுக் கணினி கிடைக்குதுன்னா பதிவு எழுதறதை நிறுத்தறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை மாம்ஸ் :))

// குசும்பன் said...
//சில அடி தொலைவு போனதும் ஒரு கை என் தோளில் விழுகிறது. //

என்ன மாம்ஸ் மருதம் கதை புக்கில் வரும் ஆரம்ப வரிகள் மாதிரி இருக்கு!!//
அட நீங்க இந்த புத்தகம் எல்லாம் படிப்பிங்களா? ச.தேவியை இதுகுள்ள வச்சி தான் படிப்பிங்களோ? :))

// குசும்பன் said...
//படங்களை தியேட்டர் அல்லது டிவில் பார்ப்பது இல்லை.. //

வானவில் தெரியும் அது என்ன மாம்ஸ் டிவில்:))//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

said...

@ மங்களூரார்

//இதுமாதிரி நிறைய படம் எடுங்கய்யா நாட்டுல நிறைய பேரு திருந்தணும்!!//

நீங்க சொல்லாமலே நடந்துட்டு தான் மாம்ஸ் இருக்கு.. எங்க மாமா ஒருத்தர் உனக்கென நான் எனக்கென நீ” என்று ஒரு பதிவு போட்டிருக்கார்.. நேரம் கிடைக்கும் போது படிங்க :))

//நல்லா இருங்கய்யா!

அந்த 3வது பாகத்தையும் பாத்துட்டு விமர்சனம் எழுதவும்.//
விமர்சனம் எழுத நாம் உயிரோட இருக்க மாட்டேனே.. :(

//கோடம்பாக்கத்துக்கு சாவுமணி அடிச்சிடுவீங்க போல இருக்கே??//
இல்லைனா இவனுங்க நமக்கு அடிச்சிடுவாங்களே மாம்ஸ் :(

said...

// aruna said...
அடப் பாவிகளா! உங்கள் பதிவைப் பார்த்துவிட்டு மாட்டிவிடலையேன்னு சந்தோஷப் பட்டுட்டுத் தானே பதில் போட்டேன்....இப்பிடி டகால்டி வேலை பண்ணுவீங்கன்னு தெரியாமப் போச்சே???
அன்புடன் அருணா//

ஹய்யோ.. ஹய்யோ... இதுக்கு பேர் தான் சொசெசூ வச்சிக்கிறதுன்னு திருவள்ளுவர் சொல்லி இருக்கார் :))

said...

//விலெகா said...
"மொபைலில் சேமித்து வைத்திருப்பது எல்லாம் இளையராஜாவின் “ அரம்பகால” இசைகள் மட்டுமே. அந்த இடத்தை நிரப்ப இனி யாராலும் முடியும் என்று தெரியவில்லை."

உண்மையை சொன்னீங்க போங்க !

ஆனா ரஜினியின் எந்த படமும் பார்க்காததால் எஸ்.ஷெ.சூர்யா மன்றம் சார்பாக கண்டனத்தை தெருவிக்கிறோம்:-))))))))))))//

ஆஹா.. கெளம்பிட்டாங்கய்யா :))

said...

நன்றி கார்த்திக் :)

said...

// podiponnu - பொடிப் பொண்ணு said...
//மூன்றாண்டுகள் தினமும் காலையில் 1 மணி நேரம் தியானம் செய்திருக்கிறேன்.. அந்த அனுபவத்தில் சொல்கிறேன்//

அப்படியா ??? சொல்லவே இல்லை :P//

நீ இதை கேக்கவே இல்லையே.. :))

////இப்போ எல்லாம் HBOவில் சப் டைட்டில் எல்லாம் போட்டு அசத்துகிறார்கள். :)) //

சேம் பின்ச்சு ://
ஆளப்பாரு.. தஞ்சாவூருக்கு தனி HBO கோவைக்கு தனி HBOவா வருது.. இந்தியா பூராவும் ஒரே HBO தான் .. :))

said...

@தமிழ்பிரியன்
அய்யா .. ராசா.. நல்லவரே.. எங்க ஊர் வாத்தியார்கள் எல்லாரும் எங்க குடும்பத்துக்கு நண்பர்களா இருப்பாங்க.. அதனால நான் பள்ளிகூடம் போறதுக்கு முன்னடியே அவங்க எல்லோரையும் நல்லாத் தெரியும்.. அதும் இல்லாம இப்போ மாதிரி 2 வயசுலையா நாம பள்ளிக்கூடம் போனோம்.. 5 வயசு ஆகனும்.. அப்போவும் தலையை சுத்து காதை தொடனும்.. அப்போ தான் சேர்த்துப்பாங்க.. :))

//எல்லாம் பெரிய பெரிய பதிவர்கள்.. நீங்க மெய்யாலுமே பெரீஈஈஈஈஈஈஈஈஈய பதிவர் தான்... :)))//

குசும்பனுக்கு சொல்லி இருக்கும் பதிலை படிக்கவும் :)

said...

// raghavan said...
ஹலோ.. என்னப்பா ஒரு பின்னூட்டத்திற்கு கூட பதில் போடவேயில்லை... ஞாயிற்றுக்கிழமை என்பதால் தூங்கியாச்சா இல்லை பதில் போட விருப்பமில்லையா? இராகவன், நைஜிரியா//

வாங்க ராகவன்.. பதில் போட விருப்பம் இல்லாமலா? மெதுவா ரிப்ளை போடலாம்னு தான்.. :))

said...

@ தல ராப் :
//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வெற்றிவிழா விஷயத்தில் அண்ணன் தமிழ்பிரியன் கருத்துக்களை கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):)://
தமிழ்பிரியனுக்கு போட்டிருக்கும் பதிலை பாருங்க :)

//இத மொதல்லயே சொல்லவேண்டியதுதான. என்னைவிட பயங்கரமா சுத்தி வளைச்சுத்தான் விஷயத்துக்கு வருகிறீர்கள்:):):)//

ஹிஹி.. தலைவி எவ்வழியோ.. தொண்டன் அவ்வழி :))

//சரோஜா விஷயமும் எனக்கு அண்ணன் தமிழ்பிரியன் கூற்றை ஊர்ஜிதப்படுத்துது.//

அட அதை நீங்களும் ஒருவாட்டி பாருங்க.. :(

//நல்லா இருங்கய்யா!

அந்த 3வது பாகத்தையும் பாத்துட்டு விமர்சனம் எழுதவும்.

//

வழிமொழிகிறேன்:):)://

என்னா ஒரு கொலைவெறிடா சாமி? :((

said...

// rapp said...
//"மீ த ராப் " "பெரியக்கா மலேசியா மாரியாத்தா மைஃப்ரண்ட் " என் பாசமலர் "பின்னவீணத்துவ சுனாமி ஸ்ரீமதி " //

ஆண் பதிவர்கள் ஏன் உங்களை ஆட்டத்துல சேத்துக்கலை:):)://

குட் கொஸ்டின்.. :)

பசங்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும்.. எனக்கு இந்த மாதிரி நல்ல டாபிக்ல எல்லாம் எழுதத் தெரியாதுனு.. :) அதும் இல்லாம எதுக்கு இவணை கொடுமை படுத்தனும்னு விட்டிருபபங்க.. பசங்க எல்லாரும் அவ்ளோ நல்லவங்க..

ஆனா.. பொண்ணுங்களுக்கு தான் என் மேல என்னா ஒரு கொலை வெறி.. ரவுண்டு கட்டி மாட்டி விடறிங்க.. எவ்ளோ கொடுமைக்காரங்க பாருங்க நீங்க எல்லாம்.. :(

( பசங்க யாரும் என்னை மதிக்கிறதில்லைங்கறத வேற எப்டி தான் சொல்ல முடியும்? :(( )

said...

// dinesh c said...
hmmm.. interesting! aana konjam lengthy!//

ஹிஹி.. கொஞ்சம் தானா? எவ்ளோ நல்லவரு நீங்க :))

said...

சினிமா முன்னேற உங்களின் ஆலோசனைகள் நல்லா இருக்கு

said...

// ஸ்ரீமதி said...
//என்னை இந்தத் தொடருக்காக அழைத்த "மீ த ராப் " "பெரியக்கா மலேசியா மாரியாத்தா மைஃப்ரண்ட் " என் பாசமலர் "பின்னவீணத்துவ சுனாமி ஸ்ரீமதி " ஆகியோருக்கு கொலைவெறியுடன் ஆளுக்கு ஒரு நன்றி ):):)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்...:))
தொடரை தொடர்ந்ததுக்கு நன்றி.. :)))))//

வாம்மா என் பாசமலரே.. நேத்து நிம்மதியா தூங்கி இருப்பியே.. :(

said...

//தாரணி பிரியா said...
தடித்த எழுத்துக்களை மட்டும் படிக்கறதுக்கு பதிலா முழுபதிவையுமே படிச்சுட்டு போயிடலாம்.

\\ஆனால் இந்த தலைமுறையியில் நாங்கள் ஒற்றுமையாக இருப்பதோடு அப்போது மோதிக் கொண்ட எங்கள் பெற்றோர்களியும் ஒன்றாக்கி இருக்கிறோம். ஒருவர் தவிர மற்ற எல்லாரும் பகை மறந்தே உறவாடுகிறார்கள். :)\\


அந்த‌ ஒருவ‌ர் ச‌ஞ்ச‌யா? கோவிச்சுக்காதீங்க‌. நிஜ‌மாவே நீங்க‌ இத்த‌னை ந‌ல்ல‌வரா?
//

ஹிஹி.. ஊர்ல மட்டும் :))


\\துணிதுவைக்கும் கடமை என்னை கெட்ட வார்த்தையில் திட்டி அழைத்ததால் மனமில்லாமல் வெளியே வந்தேன்.

திட்டினாதான் வேலை செய்ய‌ணுமின்ற‌ ப‌ழ‌க்க‌ம் இன்னும் போக‌லையா?//

ஹிஹி.. தொட்டில் பழக்கம்.. :)//நான் இந்த‌ ப‌திவை முழுசா ப‌டிச்சேன்னு ந‌ம்புங்க‌//

நம்பறேன்.. நம்மூர்க்காரங்கள நம்பலைனா வேற யாரை நம்பறது..

( அவுங்க படிச்சிட்டாங்களா? :P )

said...

நன்றி வால் :)

Tamiler This Week