இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comThursday, 28 May 2009
காந்தியின் மறுபக்கம்
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பம். பெரியப்பா கட்சியில் பல பதவிகளில் இருக்கிறார். அவர் வைத்தப் பெயர் இது. நான் பிறந்த சமயத்தில் இந்திராகாந்தி குடும்பத்தில் சஞ்சய்காந்தி தான் புகழ்மிக்கவராக இருந்தார். அதனால் எனக்கு இந்தப் பெயர். என் தம்பி பெயர் ராஜிவ்காந்தி. :) எங்கள் குடும்பத்தில் மேலும் பல காந்திகள் இருக்கிறார்கள்.
பெயரில் என்ன இருக்கிறது?. பெயர் என்பது வெறும் அடையாளத்துக்கு தான் என்றாலும் இந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஊரிலும் உறவினர்கள் மத்தியிலும் என் பெயர் காந்தி மட்டுமே. பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது கூட நெருங்கிய நண்பர்கள் காந்தி என்று தான் அழைப்பார்கள். என்னை சஞ்சய் என்று அழைப்பவர்கள் மிகக் குறைவு தான்.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
வேளான் கல்லூரிப் பெண்களைக் காப்பாற்ற முடியாமல் பின் வழிப் படிக்கட்டுகளின் ஒருவர் மீது ஒருவராக மூவரும் கருகி இருந்ததைப் பார்த்து அழுதேன். அதன் பிறகு இல்லை. அதற்கு முன்பும் கூட எதற்கும் அழுததாக நினைவில்லை. வீட்டிலோ பள்ளியிலோ சிறுவயதில் அடிவாங்கி அழுதிருக்க வாய்ப்புண்டு. ஆனால் நினைவில்லை. :)
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப ரொம்பப் புடிக்கும். எனக்குத் தான் ஓவியங்களை ரசிக்கும் பழக்கம் உண்டே. :)
( ரொம்ப நன்றிங்க. நல்லவேளை.. புரியுமான்னு கேட்கலை)
4).பிடித்த மதிய உணவு என்ன?
சோறு சாமி சோறு.. 3 வேளையும் சோறு சாப்பிட்ட வளர்ந்த ஒடம்பு இது. அதிலும் சோற்றில் தயிர் விட்டு கரைத்து அம்மிக் கல்லில் புளியை அரைத்து தொட்டுக் கொண்டே சோற்றுக் கரைசைலைக் குடிப்பது மிகவும் பிடிக்கும். புளி இல்லாத சமயங்களில் மாங்காய் பறித்து அதை கல்லால் உடைத்து உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்துக் கடித்துக் கொண்டு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். இப்போது அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதால் ஹோட்டலில் அல்லது வீட்டில் சாம்பார், ரசம் சாதம் மட்டுமே.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
(நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களுடன் நட்பு வைத்துக் கொள்வீர்களா என கேள்வி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.)
நிச்சயம் நண்பனாக இருப்பேன். ஒருவர் என்னிடம் எப்படிப் பழகுகிறார் என்பது தான் எனக்கு முக்கியம். பொதுவான அபிப்ராயத்தில் அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
முதலில், குளிக்கப் பிடிக்குமா என்பதை கேட்டுவிட்டு இதைக் கேட்பதே நாகரிகம் என நினைக்கிறேன். என்ன சொல்றிங்க? :)
கடலில் குதித்திருக்கிறேன். குளித்ததில்லை. அருவியிலும் அதிகம் குளித்ததில்லை. எனக்கு கிணற்றில் குளிக்கவே பிடிக்கும். பள்ளியில் படிக்கும் போது 40 கிமீ தொலைவு செல்ல வேண்டும் என்பதால் 7 மணிக்கு பஸ் ஏறி ஆகனும். அதனால் தினமும் காலை 6 மணிக்கெல்லாம் கிணற்றில் குதித்து விடுவேன். மிகச் சிறந்த உடற்பயிச்சியும் கூட. கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும்ப் போது கூட அருகில் இருந்த ஒரு நண்பனின் கிணற்றில் தான் தினமும் குளியல். அதன் பிறகு கிணற்றில் குளிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
இப்போதெல்லான் எனக்கு மிகவும் பிடித்தது இதில் குளிக்கத் தான். தொட்டியில் நீர் நிரம்பி முன்புறம் இருக்கும் சிறு இடைவெளியில் கொட்டும். அதன் கீழ் அமர்ந்து குளிப்பது அலாதி சுகம். இப்போதும் ஊருக்கு போனால் குளிப்பது இங்கு தான்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
குறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் இல்லை. அவர் முழுத் தோற்றமும் தான் கண்ணில்படும். அதைத் தவிர்த்து சொல்ல வேண்டும் என்றால் முகம் தான். முகபாவணைகளை கவனிப்பேன்.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது : ரொம்ப திமிர், வைராக்கியம், பிடிவாதம் - பல சமயங்களில் என்னை தலைநிமிர வைத்திருக்கு. மனிதாபிமானம். எதிரியாக யாரையும் நினைககாமல் இருப்பது.( என்னை எதிரியாக எத்தனைப் பேர் நினைத்திருக்கிறார்களோ? :) ). என் மேல பாசமா இருக்கிறவங்க கிட்ட அதை விடா 100 மடங்கு அதிக பாசமா இருப்பேன்.
பிடிக்காதது : பொறுமையின்மை,கோபம். வைராக்கியம். பிடிவாதம். இவ்ளோ பிடிவாதம் கூடாதோ என சில சமயங்களில் நினைப்பேன். எளிதில் உணர்ச்சி வசப் படுவேன். ரொம்ப சென்சிடிவ். என் மேல கோவப் படறவங்க கிட்ட அதைவிட 1000 மடங்கு அதிகமா கோவப் படுவேன். :))( நோட் பண்ணுங்கப்பா.. :) ). அதுவும் குறிப்பிட்ட நிகழ்வுக்காகவாத் தான் இருக்கும். கொஞ்ச நேரத்துல நானும் மானங்கெட்ட்வந்தான்னு நிரூபிச்சிடுவேன். :))
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
கல்யாணமே ஆகலையாம்.. அதுக்குள்ள தொட்டில் கட்டி பொறக்கப் போற பொண்ணுக்குத் தேன்மொழின்னு பேர் வைக்கனுமாம்... :)
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
யாருமே பக்கத்துல இல்லையேன்னு சந்தோஷப் படறேன். நான் எப்போதும் சுதந்திரமா இருக்கனும்னு நினைக்கிறவன். சின்ன சின்ன இடைஞ்சல்கள் கூட எரிச்சல் படுத்தும். ஆகவே யாரும் பக்கத்துல இல்லாம இருக்கிறது தான் சந்தோஷம். ( எப்போதும் உடன் இருப்பதைப் பற்றி தான் சொல்கிறேன். நண்பர்களுடன் அவ்வப்போது கும்பல் சேர்வதைப் பற்றி சொல்லவில்லை. அது மிகவும் பிடித்தமான விஷயம்.)
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
எனக்கு ஆடைகளின் நிறத்தை சொல்லத் தெரியாது. எனக்கு பெரும்பாலான நிறங்களின் பெயர்கள் தெரியாது.
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சர்கள் பதவியேற்பு விழாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
என் விருப்பங்களை பிறர் மீது திணிக்க விரும்புவதில்லை. அந்தப் பேனாக்களைப் பயன்படுத்துபவர்களுக்குத் தேவையான/பிடித்த வண்ணங்களில் இருக்க விரும்புகிறேன்.
14.பிடித்த மணம்?
உழைப்பாளிகளின் வியர்வை மணம். உச்சி வெயிலில் வெற்றுடம்புடன் வயலில் வேலைப் பார்க்கும் போது கொட்டும் வியர்வை மிக அழகான மணம் கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன். அயம் பேசிகலி விவசாயிமா.. :)
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
சில வரிகளில் சொல்லிவிடும் அளவுக்கு எனக்குப் பிடித்த பதிவர்கள் யாரும் சாதாரன ஆட்கள் இல்லை.
(அனைவரும் பரிசுப் பொருட்கள் அனுப்ப மெயிலில் தொடர்பு கொள்ளவும்..:) )
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
பதிவு என்று ஒருமையில் கேட்பதால் பதில் சொல்ல இயலவில்லை. அவர் மிகப் பெரும் கவிதாயினி. வலிமையான வரிகளுக்கு சொந்தக்காரி. வெறும் காதல் கவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டு தானும் கவிஞர் தான் என்று சொல்லிக் கொள்ளாமல் சமூக சிந்தனை உள்ள கவிதைகளும் அற்புதமாக எழுதுவார். அவர் வலிமை அறிய அவருக்கு வரும் பின்னூட்ட எண்ணிக்கைகளைப் பாருங்கள். :)
17. பிடித்த விளையாட்டு?
கபடி, கால்பந்து நன்றாக விளையாடுவேன். அதனால் மிகப் பிடிக்கும். மற்ற சிலதும் ரசிப்பதுண்டு.
18.கண்ணாடி அணிபவரா?
பைக் ஓட்டும் போது கண்ணில் தூசு விழாமல் இருக்கவும் சுற்றுலா செல்லும் போதும் சும்மா சீன் போடவும் அணிவதுண்டு. மேலதிக விவரங்களுக்கு காண்டாக்ட் மிஸ்டர் குசும்பன். :)
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நான் சினிமா பார்ப்பது பொழுதுபோக்கிற்கு மட்டுமே. தியேட்டரில் பாடம் நடத்தாமலும் கருத்து சொல்லாமலும் இருக்கும் எல்லாப் படங்களும் பிடிக்கும். ஜாலியா இருக்கனும். காமெடி படங்களுக்கு முக்கியத்துவம். அதுக்காக குமுதம் ஆனந்தவிகடன்ல வர பிட்டு ஜோக்குகளை கோர்த்து படம் எடுத்தா கொலைவெறி தான். :)
20.கடைசியாகப் பார்த்த படம்?
நியூட்டனின் மூன்றாம் விதி.
21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலங்கள் ரொம்பப் பிடிக்கும். ஊரில் மழைக்காலங்களில் தினமும் வானவில் பார்ப்பது ரொம்ப அழகா இருக்கும். பலத்த மழை பெய்யும் போது பள்ளி விடுமுறை அறிவித்துவிடுவார்கள். :)
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஹிஹி.. இந்த வார இந்தியா டுடே.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
10 வருடங்களுக்கு முன் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்த போது அப்போது இருப்பதை விட நல்ல படம் கண்ணில்பட்டால் உடனே மாற்றிவிடுவேன். கொஞ்ச நாளிலேயே போர் அடித்துவிட்டது. இப்போது அதெல்லாம் மறந்தே போய்விட்டது.
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
அழுகைத் தவிர குழந்தைகள் வெளிப்படுத்தும் அத்தனை சப்தங்களும் பிடிக்கும். குழந்தைகள் மட்டுமில்லை, யாருமே அழுவது எனக்குப் பிடிக்காது.
குறட்டை சத்தம் சுத்தமா பிடிக்காது. தூங்கும் நேரத்தில் எந்த சப்தமும் கேட்கக் கூடாது. ஸ்விட்ச் போடும் சத்தம் கூட எரிச்சலைத் தரும். இரவு நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்களைக் கண்டால் கொலைவெறி வரும்.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சுற்றுலாவிற்காக தாய்லாந்து.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
டெபனட்லி.. டெபனட்லி.. சரக்கே இல்லாம 2 வருஷமா பதிவுகள் எழுதி அதையும் உங்கள படிக்க வைக்கிறேனே.. இதைவிடத் தனித் திறமை வேற என்ன வேண்டும்? :)
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஏராளமா இருக்கு. முக்கியமானது, அசைவம் சாப்பிடுபவர்கள் அதற்காக சொல்லும் எந்தக் காரணத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை. நீங்கள் சாப்பிடடும், ஆடு, கோழி மற்றும் இன்ன பிற ஜீவன்களின் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்கும் அவைகளுக்கும் என்ன விரோதம்? ஏன் கொல்கிறீர்கள்? நீங்கள் சாப்பிடும் எந்த ஜீவனாவது இன்னொரு உயிரைக் கொன்று சாப்பிடுகிறதா?. உங்களிடம் எதிர்ப்பைக் காட்டி இருக்கின்றனவா?. ஒரு முறை அவைகளின் முகத்தைப் பாருங்கள். அதில் அப்பாவித் தனத்தைத் தாண்டி எதாவது உணர்ச்சி தெரிந்திருக்கிறதா?. பிறகு ஏன் கொன்று சாப்பிடுகிறீர்கள்?. இன்னொரு உயிரைக் கொன்று நம் உயிரை வளர்க்க வேண்டுமா?. எந்த மாமிசமும் சாப்பிடாமலே நாம் உயிர் வாழத் தேவையான உணவுகள் இருக்கும் போது ஏன் அப்பாவி ஜீவன்களைக் கொல்ல வேண்டும்?.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம் மற்றும் பொறுமையின்மைதான்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
எங்க ஊரும் விவசாய நிலங்களும் தான்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நல்லது பண்ணலைனாலும் யாருக்கும் கெட்டது பண்ணாம இருக்கனும்னு..
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
யாரோட கணவர், யாரோட மனைவி இல்லாமல்னு சொல்லாம இப்டி கேட்டா என்ன அர்த்தம்? :)
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை வாழ்வதற்கே... எப்புடூ.. :)
நான் அழைக்க விரும்பும் பாசக்கார புள்ளைங்க
1. ரொம்ப நாளா டிமிக்கி குடுக்கும் மங்களூர் முன்னாள் மைனர்
2. கரப்பான் பூச்சி விருது வடிவமைப்பாளர் குசும்பன்
3.எங்க மாவட்டத்துல ( அப்போ எங்க மாவட்டம் தான்) மாப்ள எடுத்திருக்கும் சுபா டீச்சர்
4.கரண்ட் இல்லாம பல்பு எரிக்கும் என் முதல் சமையல் குரு அருணா அக்கா
5. பதிவு போட மேட்டர் இல்லைனு டகால்டி விடும் கும்கீ
6. பஞ்சாபி ஃபுட் ஸ்பெஷல்( சாப்டறதுல மட்டும்) விக்னேஷ்வரி.
இதுல சில கேள்விகள் கல்யாணம் ஆனவங்களுக்காக கேட்டிருப்பதால் சில பாசக்கார பயலுகளை கோர்த்து விட முடியலையேன்னு துக்கம் தொண்டயை அடைக்கிது. :(
பின்ன.. இதை எழுத எனக்கு 3 நாளாச்சே.. :(
என்னை எழுத வைத்த கோவை கவுஜாயினி சக்தி சித்திக்கு கடுப்பான நன்றிகள். மரியாதையா விரல்வலிக்கு தைலம் வாங்கி அனுப்புங்க.. நானெல்லாம் படிக்கிர காலத்துல கூட இம்புட்டு கேள்விகளுக்கு பதில் எழுதியதில்லை..:((
ஒரு கவிதை சொல்லிட்டுப் போங்க மக்கா..
27 Comments:
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
12வதில் எல்லாத்திலும் பெயில் ஆகி வந்தப்ப அப்பா அடிச்ச அடியில் அழுதது நினைவு இருக்கா மாம்ஸ்:)
மாமா எல்லோரும் படிக்கட்டும் வந்து கவனிச்சுக்கிறேன்!
//கரண்ட் இல்லாம பல்பு எரிக்கும் என் முதல் சமையல் குரு அருணா அக்கா//
முதல் சமையல் குரு பதவிக்கு ரொம்ப நன்றிப்பா!!!!
அதுக்காக இப்படிப் பரீட்சை எழுத வைக்கலாமா???இப்போதான் பரீட்சை கேள்வித்தாள்,ரிசல்ட்...இதிலிருந்து விடுதலை கிடைத்தது....அதுக்குள்ளே நீ ஆரம்பிச்சிட்டியா???ம்ம்ம் எழுதிடுறேன்....
அன்புடன் அருணா
//கடைசியாகப் பார்த்த படம்?
நியூட்டனின் மூன்றாம் விதி.//
இதை தான் விதி யாரை விட்டதுன்னு சொல்வாங்களோ!
கும்க்கியை அவரது பிறந்த நாளன்று அவரை பற்றி எழுத அழைத்தது நல்ல பொருத்தம்!
/
தேன்மொழின்னு பேர்
/
நோட் பண்ணிகிட்டேன்யா நோட் பண்ணிகிட்டேன்
:)))))))))))
/
20.கடைசியாகப் பார்த்த படம்?
நியூட்டனின் மூன்றாம் விதி.
/
கொலைவெறியோட சுரேகாவை தேடிகிட்டிருக்கேன். அவர் பதிவை பாத்துட்டு சினிமாக்கு போய் பொண்டாட்டிகிட்ட திட்டு வாங்கினதுதான் மிச்சம்
:))))))))
//நான் பிறந்த சமயத்தில் இந்திராகாந்தி குடும்பத்தில் சஞ்சய்காந்தி தான் புகழ்மிக்கவராக இருந்தார். அதனால் எனக்கு இந்தப் பெயர். //
எதுக்கு? அந்த புகழைக் கெடுக்கவா?
எதற்கும் அழுததாக நினைவில்லை//
நீங்க எதுக்கு அழணும்?உங்க பிரண்ட்ஸ் ஆனதுக்கு நாங்கதானே அழணும்:-)
//உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப ரொம்பப் புடிக்கும்//
உங்களுக்கு மட்டும் பிடிக்கும்ங்கிற உண்மையை நான் சொல்லிடவா?
//நல்லவேளை.. புரியுமான்னு கேட்கலை//
கேக்கமாட்டோம்...புரியாதுங்கிறது எங்களுக்கே தெரியும்போது எதுக்கு கேக்கணும்?
சோறு சாமி சோறு.. 3 வேளையும் சோறு சாப்பிட்ட வளர்ந்த ஒடம்பு இது//
வளர்ந்த.. இல்லை...பெருத்த:-))
///நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
(நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களுடன் நட்பு வைத்துக் கொள்வீர்களா என கேள்வி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.)//
கேள்விக்கு பதில் தெரியலின்னா தெரிஞ்சதெல்லாம் எழுத கூடாது.
//பொதுவான அபிப்ராயத்தில் அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.//
உங்கள விட மோசமானவர்தான் இந்த உலகத்திலயே கெடையாதே..அப்புறம் ஏன் கவலை
//கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும்ப் போது கூட அருகில் இருந்த ஒரு நண்பனின் கிணற்றில் தான் தினமும் குளியல்//
One correction..
தங்கியிருக்கும்போதுன்னு சொல்லணும்...படிக்கும்போதுன்னு சொல்ல கூடாது
//அதுவும் குறிப்பிட்ட நிகழ்வுக்காகவாத் தான் இருக்கும். கொஞ்ச நேரத்துல நானும் மானங்கெட்ட்வந்தான்னு நிரூபிச்சிடுவேன். :))//
Again correction...
நான்.....Not நானும்
//9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?//
உங்களை கல்யாணம் பண்ணிக்கிற அப்பேர்பட்ட தியாகி கிட்ட பிடிக்காதது வேற சொல்வீங்களா...
question is out of syllabus and reserved for future...
//யாருமே பக்கத்துல இல்லையேன்னு சந்தோஷப் படறேன். //
Question is diverterd to Thambichettypatty...and also to P...A:-))
//எனக்கு ஆடைகளின் நிறத்தை சொல்லத் தெரியாது. எனக்கு பெரும்பாலான நிறங்களின் பெயர்கள் தெரியாது.
//
Don't feel.be cool....வயசானா colour blindness வரத்தான் செய்யும்..
//ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சர்கள் பதவியேற்பு விழாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
//
மனசுக்குள்ள உங்க பதவி ஏற்பு விழாவை கற்பனை பண்ணிட்டு இருக்கீங்களா
//பயன்படுத்துபவர்களுக்குத் தேவையான/பிடித்த வண்ணங்களில் இருக்க விரும்புகிறேன்.//
அப்போவாவது பிடிச்ச மாதிரி இருந்தா சரி
//வியர்வை மணம். ////
//உழைப்பாளிகளின் வியர்வை மணம். உச்சி வெயிலில் வெற்றுடம்புடன் வயலில் வேலைப் பார்க்கும் போது கொட்டும் வியர்வை மிக அழகான மணம் கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்//
மக்களே..இந்த பதிலையும் 6வது கேள்விக்கான பதிலையும் சேர்த்து படிச்சி உண்மையை புரிஞ்சிக்கோங்க..
தேவையில்லாம விவசாயிகளை ஏன் சஞ்சய் வம்புக்கு இழுக்கரீங்க
//பைக் ஓட்டும் போது கண்ணில் தூசு விழாமல் இருக்கவும் சுற்றுலா செல்லும் போதும் சும்மா சீன் போடவும் அணிவதுண்டு
///
Anybody can fill up the blank
----------------கண்ணு வெளில தெரியாம இருக்கத்தான் கண்ணாடி போடறீங்ககிற உண்மையை யாருக்கும் சொல்லமாட்டேன் பிரண்ட்...
//பலத்த மழை பெய்யும் போது பள்ளி விடுமுறை அறிவித்துவிடுவார்கள்//
Teacher Escape
//10 வருடங்களுக்கு முன் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்த போது //
oh..computer also Dappa?..
//குறட்டை சத்தம் சுத்தமா பிடிக்காது. //
Vaira ponnum ippadiyen iruntha yenna agurathu..neenga vidara kurattaikku?:-))
//உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம் மற்றும் பொறுமையின்மைதான்.
//
athu illannaa neenga romba nallavara?...
Sathan=Sanjai Gandhi nnu unmaiyai sollavaendiyathuthane:-)))
//இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
எனக்கு ஆடைகளின் நிறத்தை சொல்லத் தெரியாது. எனக்கு பெரும்பாலான நிறங்களின் பெயர்கள் தெரியாது.
//
ஐய்ய அண்ணனுக்கு கலர் பார்க்க தெரியாதா....????
//குசும்பன் said...
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
12வதில் எல்லாத்திலும் பெயில் ஆகி வந்தப்ப அப்பா அடிச்ச அடியில் அழுதது நினைவு இருக்கா மாம்ஸ்:)
மாமா எல்லோரும் படிக்கட்டும் வந்து கவனிச்சுக்கிறேன்!
//
வைச்சு சாத்துன சாத்துல ஊரே வந்து விசாரிச்சுட்டு போச்சாம் ஆனா இவுரு அதை சொல்லாம மறைக்கிறாரு பார்த்தீங்களா பாஸ்....??
//இயற்கை said...
எதற்கும் அழுததாக நினைவில்லை//
நீங்க எதுக்கு அழணும்?உங்க பிரண்ட்ஸ் ஆனதுக்கு நாங்கதானே அழணும்:-)
//
நோ!
நோ!!
இப்பிடியெல்லாம் டக்குன்னு சொல்லிடப்பிடாது அண்ணன் வருத்தப்படுவாரு
மெதுவா சொல்லுங்க :)))
சஞ்சய்...ரசித்து படித்து, பல விடைகளுக்கு சிரித்தேன்...அதுவும் ஆறாவது பதில்..;)
வடகரைவேலன் அவர்களின் பதிவில் தங்கள் கவிதை படித்தேன்.. அருமை.
வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு நாளை நாடு திரும்பும் கும்கீ அவர்கள் நாளை மறுதினமே இதற்கு தக்க பதில்களைத் தருவார் என்று ஏஜென்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபக்கம்னு போட்டுட்டு மறுபக்க போட்டோ ஒன்னு போட்டிருக்கலாம்.. என்னை மாதிரி ஆளுங்க பாத்து சிரிப்போம்ல
பிடிச்சது : ரொம்ப திமிர், வைராக்கியம், பிடிவாதம் - பல சமயங்களில் என்னை தலைநிமிர வைத்திருக்கு. மனிதாபிமானம். எதிரியாக யாரையும் நினைககாமல் இருப்பது.( என்னை எதிரியாக எத்தனைப் பேர் நினைத்திருக்கிறார்களோ? :) ). என் மேல பாசமா இருக்கிறவங்க கிட்ட அதை விடா 100 மடங்கு அதிக பாசமா இருப்பேன்.
நல்ல விஷயம்
மரியாதையா விரல்வலிக்கு தைலம் வாங்கி அனுப்புங்க.. நானெல்லாம் படிக்கிர காலத்துல கூட இம்புட்டு கேள்விகளுக்கு பதில் எழுதியதில்லை..:((
நன்றி சஞ்சய் அண்ணா
பதிவு என்று ஒருமையில் கேட்பதால் பதில் சொல்ல இயலவில்லை. அவர் மிகப் பெரும் கவிதாயினி. வலிமையான வரிகளுக்கு சொந்தக்காரி. வெறும் காதல் கவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டு தானும் கவிஞர் தான் என்று சொல்லிக் கொள்ளாமல் சமூக சிந்தனை உள்ள கவிதைகளும் அற்புதமாக எழுதுவார். அவர் வலிமை அறிய அவருக்கு வரும் பின்னூட்ட எண்ணிக்கைகளைப் பாருங்கள். :)
நன்றி ஆனால் நான் எழுதுவது கவிதை தானா எனும் ஆராய்ச்சியில் இருக்கின்றேன்
வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை வாழ்வதற்கே... எப்புடூ.. :)
யப்பா என்ன ஒரு வார்த்தை
ஒரு வார்த்தை என்றாலும் திரு வார்த்தை
குசும்பா கொழுப்பா? பத்தாப்புல பள்ளியோடத்துலேயே 3 வது ரேங்கு. தயைக் கூர்ந்து முதல் மார்க் எவ்ளோன்னு கேட்க வேணாம். :)
அருணாக்கா நன்றி.. சீக்கிறம் எழுதுங்க.. :)
வாலு, முதல் 15 நிமிடம் இறுதி 15 நிமிடம் தவிர மற்ற போர்ஷன் சுமாரா இருக்கு.. பார்க்கலாம்.. :)
கும்கி இன்னும் எழுதலை.. கொஞ்சம் கெவினிங்க. :)
மங்களூராரே.. கிகிகி.. :)
இயற்கையக்கா.. வெள்ளிக்கிழமை வரேன் ஊருக்கு.. அப்போ இருக்குமா உங்களுக்கு.. பயபுள்ள என்னமா குதிச்சி கும்மி அடிக்கிது... :)
ஆயில்ஸ் .. விடுங்க பாச். இதை எல்லாம் பப்ளிக்ல சொல்லிக்கிட்டு.. :)
ரொம்ப நன்றி மணிநரேன்.. :)
செல்வா, எப்போ கிகிரி பகுதி செய்தியாளர் ஆனிங்க.. :)
அன்புள்ள அதிஷா.. இது முதுகு சொறிதல் பதிவு இல்லை.. :)))
சக்தி மாமி ரொம்ப நன்றி.. :)
Post a Comment