இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comMonday 4 May, 2009
IIT ஆராய்ச்சியாளருடன் ஒரு அலம்பல்
மாலை 7 மணி
Athisha Calling...
”வணக்கம் வினோ.. எப்டி இருக்கிங்க. கோவைல இருக்கிங்களா?” - இல்லைனா கூப்ட மாட்டாரே பெரும்பதிவர். :)
”நல்லா இருக்கேன். முரளிக் கண்ணன் வந்திருக்கார். வேலன் அண்ணாச்சி வீட்டுக்குப் போகனுமாம். அவர்கிட்ட அண்ணாச்சி நம்பர் இல்லையாம். நீங்க பேசிடறிங்களா?”
உடனே பேசிடறேன்..
“ ஹலோ”
“ முரளிகண்ணன்?”
”ஆமாங்க”
“ வணக்கம் முரளி. நான் வடகரை வேலன் பேசறேன்”
“ சார்.. வணக்கம்.. நல்லா இருக்கிங்களா?.”
“நல்லா இருக்கேன். நீங்க கோவைல இருக்கிங்களா?”
“ஆமாம் சார். உங்க வீட்டுக்கு வரனும். எப்டி வரதுன்னு தெரியலை”
“ இப்போ நீங்க எங்க இருக்கிங்க”
“ கவுண்டம்பாளையம் சார்.”
“சரி. நான் இப்போ ரொம்ப பிசியா இருக்கேன். பார்க்க முடியாது. நீங்களும் ரொம்ப தூரத்துல இருக்கிங்க. இன்னொரு நாள் பார்க்கலாமே”
“ அப்டியா. சரிங்க சார். ஒன்னும் பிரச்சனை இல்லை”
...............நிற்க.
” சரி முரளி. ஒன்னு பண்ணுங்க. வந்ததும் வந்துட்டிங்க. இந்த சஞ்சய் இப்போ ஃப்ரீயா தான் இருப்பான். அவனை பார்த்துட்டு போய்டுங்க”
“அப்டியா?.. சரிங்க சார். காலைல பார்க்கிறேன்”
“காலைல அவனை சந்திக்கிறது கஷ்டம். ரொம்ப பிசியா இருப்பான். நாங்களே அவன் கிட்ட 2 நாள் முன்னாடி போன் பண்ணி டைம் வாங்கிட்டு தான் போவோம். பையன் அவ்ளோ பிசியா இருப்பான்.”
”ஓ..ஹோ..”
“ அதனால இப்போவே அவனை பார்த்துடுங்க”
“சரிங்க சார்”
“ எதுக்கும் அவனுக்கு போன் பண்ணிட்டு போங்க. எதுனா மீட்டிங்க்ல இருப்பான். அவன் கிட்ட பேசறதும் பாக்கறதும் அவ்ளோ சுலபம் இல்லை. முயற்சி பண்ணி பாருங்க”
“ சரிங்க சார். அவர் போன் நம்பர் இருக்கா”
“98_______”
“ இப்போ கால் பண்றேன் சார். வச்சிடறேன்”
” சரிங்க முரளி”
......
“ ஹலோ”
“ஹாய் சஞ்சய். எப்டி இருக்கிங்க.”
“ எனனாது சஞ்சயா?. உங்களுக்கு எந்த நம்பர் வேணும்ங்க?”
“98________”
“ நம்பர் கரெக்ட் தான். ஆனா ஆள் கரெக்ட் இல்லையே.நீங்க யாரு?”
“ என் பேரு முரளிக் கண்ணன். என் ஃப்ரண்ட் சஞ்சய் நம்பர்னு நினைச்சி கால் பண்ணிட்டேன். சாரி சார்”
“சஞ்சய் நம்பர் எனக்குத் தெரியும்.. உங்களுக்கு இந்த நம்பர் யார் குடுத்தாங்க”?
” வடகரை வேலன்னு ஒரு நண்பர் குடுத்தாருங்க. நான் அவரோட ஃப்ரண்ட். என் பேர் முரளிகண்ணன்”
“ யோவ் முரளி. நான் தான்யா வடகரை வேலன். நான் எப்போ உனக்கு நம்பர் குடுத்தேன்”
“ அச்சோ.. சார்.. அப்போ உங்களுக்கு முன்னாடி என்கிட்ட பேசினது யாரு?”
“ என்ன பேசினிங்க சொல்லுங்க...”
“-----------”
“-----------”
“-----------”
“-----------”
”அடப்பாவி.. இதுல இருந்தே தெரியலையா?. இது அவன் வேலை தான்யா.. ;)) “
“ யாருங்க சார்?”
“வேற யாரு. சஞ்சய் தான்”
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. முரளிக் கண்ணன் நன்றாக வழிகிறார். வந்த முதல் நாளே ஆரம்பிச்சிட்டிங்களாய்யா? :)
-----------------
.........தொடர்க.
“ முரளி , ஒரு நிமிஷம் லைன்ல இருங்க. வேற ஒரு கால் வருது”
”சரிங்க சார்”
..அண்ணாச்சிக்கு போன் செய்கிறேன்...
“ஹலோ”
“அண்ணாச்சி. சஞ்சய் பேசறேன். முரளிக் கண்ணன் வந்திருக்கார். உங்க வீட்டுக்கு வரனுமாம். நான், நீங்க பேசற மாதிரி அவர்கிட்ட பேசி வச்சிருக்கேன். நீங்க கான்கால்ல அமைதியா இருங்க. நான் பேசறேன்.”
“அடப் பாவி.”
“முரளி.சாரிங்க. வேற ஒரு முக்கியமான கால். அதான் பேச வேண்டி இருந்தது.”
“அதனாலென்ன சார். பரவால்ல”
” சரி முரளி. ஒன்னு பண்ணுங்க. வந்ததும் வந்துட்டிங்க. இந்த சஞ்சய் இப்போ ஃப்ரீயா தான் இருப்பான். அவனை பார்த்துட்டு போய்டுங்க”
“அப்டியா?.. சரிங்க சார். காலைல பார்க்கிறேன்”
“காலைல அவனைப் பார்க்கறது கஷ்டம். ரொம்ப பிசியா இருப்பான். நாங்களே அவன் கிட்ட 2 நாள் முன்னாடி போன் பண்ணி டைம் வாங்கிட்டு தான் போவோம். பையன் அவ்ளோ பிசியா இருப்பான்.”
”ஓ..ஹோ..”
“ அதனால இப்போவே அவனை பார்த்துடுங்க”
“சரிங்க சார்”
“ எதுக்கும் அவனுக்கு போன் பண்ணிட்டு போங்க. எதுனா மீட்டிங்க்ல இருப்பான். அவன் கிட்ட பேசறதும் பாக்கறதும் அவ்ளோ சுலபம் இல்லை. முயற்சி பண்ணி பாருங்க”
“ சரிங்க சார். அவர் போன் நம்பர் இருக்கா”
“இருங்க பார்த்து சொல்றேன்”
இந்த கேப்ல அண்ணாச்சி பூந்து குட்டையைக் குழப்பிட்டார்... இல்லைனா அந்த நீலக் கலர்ல இருக்கிறது தான் நடந்திருக்கும். :)
“ யோவ் முரளி. நீ இவ்ளோ அப்பாவியா இருப்பன்னு நினைச்சிக் கூட பார்க்கலைய்யா :)) “
“ சார்.. சொல்லுங்க சார்”
“ யோவ் நான் வடகரை வேலன் பேசறேன். இவ்ளோ நேரமா உன்கிட்ட பேசினது சஞ்சய் தான். ;) “
”அண்ணாச்சி.. இப்டி பூந்து காரியத்தைக் கெடுத்துட்டிங்களே:(” .....நான்.
“ஆஹா.. இப்டியா கலாய்பிங்க.. :)” - முரளி.
ஒருவழியா கொஞ்ச நேரம் மொக்கைப் போட்டு முடிஞ்சது. எங்கயாவது சாப்பிட வெளிய போகலாம்னு முடிவு பண்ணிட்டோம். அண்ணாச்சி 8.30 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்துடறதா சொல்லிட்டார். நான் 8 மணிக்கு கிளம்பி முரளியை அழைத்து வருவதாக சொல்லிவிட்டேன்.அண்ணாச்சி செல்வேந்திரன் கிட்ட பேசி அவரையும் கூட்டிட்டு ( இல்லைனா இழுத்துட்டு) வரதா சொல்லிட்டார். முரளியை அழைத்து வரும் வழியில் திட்டம் மாறியது. அண்ணாச்சி கால் பண்ணி சிந்தாமணி அருகில் வர சொல்லிட்டார். எங்களுக்கும் அது சவுகரியமாகவே இருந்து. மேட்டுபாளையம் சாலையிலிருந்து கணபதி சென்று பின் காந்திபுரம் வருவதைவிட, சிந்தாமணி வழியாக காந்திபுரம் செல்வது சுலபம். பின் மூவரும் சேர்ந்து செல்வேந்திரன் அறைக்கு சென்றோம்.
எங்கு சாப்பிட செல்வது என கேட்டபோது எனக்கு எப்போதும் பிடித்த கையேந்திபவன் போகலாம்னு சொன்னேன். ஆனால் அருகில் இருந்த கீதா கேண்டீனுக்கு செல்வா இழுத்துட்டுப் போனார். கோவையில் பிரபலமான மெஸ்.
சாப்பிட்டதும் சினிமாவுக்கு போக திட்டம். ஒரு தியேட்டருக்கு போனோம். அங்கே ஆனந்த தாண்டவம் மற்றும் இன்னொரு படம் எதோ போட்டிருந்தாங்க. ஆனந்த தாண்டவம் பார்க்க முடிவெடுத்து அண்ணாச்சி காரைப் பார்க் பண்ணிட்டு வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். சரி, நேரம் ஆகிறது என்று டிக்கெட் வாங்க போனால், ஆனந்த தாண்டவம் ஓடும் தியேட்டரில் எதோ வேலை நடக்கிறதாம். அதனால அந்தப் படம் திரையிட மாட்டாங்களாம். கொய்யால.. முன்னாடி ஒரு போர்ட் வைக்க மாட்டிங்களாடா?.
அடுத்து என்ன செய்ய?. முரளிக் கண்ணன் விதி விளையாடியது. புதுசா மாதவன் நடிச்ச குரு என் ஆளு பார்க்கலாம்னு யாரோ சொன்னோம். எந்த தியேட்டர்ல என்று தெரியலை. அப்போது முரளி,
”நாங்க வரும் போது பார்த்தோம். செண்ட்ரல்ல போஸ்டர் இருந்தது”.
அப்டியா? ரைட்டு விடுங்க.. மிண்டும் நாங்கள் மூவரும் ஒன்றாய் கிளம்பிய இடத்திற்கே வந்தோம். டிக்கெட் வாங்கும் போது , வழக்கம் போல
“ அண்ணே ஓரத்து சீட் குடுத்துடாதிங்க. செண்டர்ல வர மாதிரி குடுங்க”
“சீட் நம்பர் எல்லாம் இல்லைங்க. எங்க வேணாலும் உட்காரலாம்.”
அப்போ தான் டிக்கெட்டை பார்த்தேன். சீட் நம்பர் போடவே இல்லை. அப்போவே புரிஞ்சி இருக்கனும். ஆனா முரளிக் கண்ணன் விதி. உள்ளே போய்ட்டோம். அடப்பாவிகளா, இங்க இருக்கிறவனை எண்ணுவதற்கு விரல்கள் கூட தேவை இல்லை போல இருந்தது.
படம் பார்க்க ஆரம்பித்தோம். .................. ஒருவழியாய் முடிந்தது.
பாவம் முரளிக் கண்ணன். இனி எப்போதும் கோவைப் பக்கம் வரவும் மாட்டார். அப்டியே வந்தாலும் எங்க யாருக்கும் சொல்ல மாட்டார்.
படம் எப்டி இருந்ததுன்னு தெரியனுமா? இங்க பாருங்க.
இதோட எங்க கொடுமையை நிறுத்தல. செல்வேந்திரன் ரூம் முன்னாடி தெருவுல நிக்க வச்சி 2 மணி வரைக்கும் மொக்கைப் போட்டுத் தள்ளிட்டோம். தியேட்டருக்கு போகாமலே இங்கயே பேசி இருந்திருக்கலாம். பல நல்ல விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள முடிந்தது. செல்வேந்திரன், அண்ணாச்சி மற்றும் முரளிக் கண்ணன் ஆகிய 3 அறிவு ஜீவிகளும் பேசுவதைக் கேட்க இன்னும் சில மணி நேரங்கள் இருந்திருந்தாலும் சந்தோஷமாக இருந்திருக்கும்.
இரும்படிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலைன்னு கேட்கறிங்களா? வேற என்ன வேலை.. வழக்கம் போல பார்வையாளர் வேலை தான். :))
இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது முரளிக் கண்ணன் அழைத்தார். இதைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லை. :)
டிஸ்கி : முரளிக் கண்ணன் சினிமா பற்றிய பதிவுகளில் தான் ஜீனியஸ் என்று நினைத்தேன். சென்னை IITயில் ஆராய்ச்சி மாணவரும் கூட. ஒரு சிக்கலான் ஆனால் மிகவும் அவசியமான ஆராய்ச்சியை செய்துக் கொண்டிருக்கிறார். அந்த ஆராய்ச்சியில் அவர் வெற்றி பெற்று புகழ் பெற வாழ்துகள்.
23 Comments:
அண்ணா காலைலயே ஆரம்பிச்சிட்டீங்களா உங்க வேலைய!
//எதுக்கும் அவனுக்கு போன் பண்ணிட்டு போங்க. எதுனா மீட்டிங்க்ல இருப்பான். அவன் கிட்ட பேசறதும் பாக்கறதும் அவ்ளோ சுலபம் இல்லை. முயற்சி பண்ணி பாருங்க”
///
அய்யய்யய்யய்ய்யோ
(காலையிலயேவா ஒரு மணி நேரம் ஆகும் போல படிச்சு சிரிச்சு முடிக்க...!)
கோவிகண்ணன் இதெல்லாம் புதுசா என்ன நமக்கு
:)))))))))))))
தெரியாத்தனமா உங்களுக்கு போன் பண்ணி மாட்டிக்கிட்டாரா முரளி :)
சஞ்சய், அடுத்த நாள் உங்களுக்குப் பிடிச்ச கையேந்தி பவன்ல நானும், செல்வேந்திரனும் ஒரு கை பார்த்தோம்.
செமை டேஸ்ட்.
:)))))))))))))
:-))
///இரும்படிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலைன்னு கேட்கறிங்களா? வேற என்ன வேலை.. வழக்கம் போல பார்வையாளர் வேலை தான். :))///
இது மாதிரி தான் ஒரு நைட் கோவையில் ஒரு கூட்டத்துக்கு மத்தியில் தேமேன்னு பராக்கு பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தேனுங்க
/May, 2009 3:07 PM , தமிழ் பிரியன் said...
///இரும்படிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலைன்னு கேட்கறிங்களா? வேற என்ன வேலை.. வழக்கம் போல பார்வையாளர் வேலை தான். :))///
இது மாதிரி தான் ஒரு நைட் கோவையில் ஒரு கூட்டத்துக்கு மத்தியில் தேமேன்னு பராக்கு பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தேனுங்க
//
அடப்பாவமே....! :(
உங்ககிட்ட கொஞ்சம் பார்த்து தான் பேசணும் போல!
முரளிகண்ணனுக்கு நேர்ந்த கொடுமைகளுக்குக் காரணம் என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியேன்னு யாராவது பதிவு போட்டுறப் போறாய்ங்க...
ஆனா என்ன கொடுமைகள் நிகழ்ந்தபோதும் 'பிதாவே இவர்களை மன்னியும்னு' பொறுமையா இருந்தாரே... முரளி ரொம்ப நல்லவரு.
ஹாஹாஹா..
எனக்கு தமிழ்பிரியன் நினைவுக்கு வந்தார் சகா.. ஞாபகம் இருக்கா?
முரளி எஸ்கேப்பா? ஆதி உனக்கு கோவை செல்கையில் என்ன நடந்ததுன்னு கொஞ்சம் நினைச்சுப்பாருடா..? அவ்வ்..
:) அருமை ...ரசிச்சு படிக்க முடிந்தது!
அதிஷா, நீங்க ஆரம்பிச்சி வச்சது தானே அண்ணாச்சி. ;)
ஆயில்யன், இதை சிரிக்காம சொல்ல நான் எவ்ளோ கஷ்ட்டப் பட்டிருப்பேன்னு தெரியுதா? :)
யோவ் மங்களூர் மாமா.. கோவி கண்ணனுக்கும் முரளிக் கண்ணனுக்கும் வித்தியாசம் தெரியலையா? பூரிக் கட்டைல அடி பலமோ? :))
வெயிலான், அவர் பண்ணலை. நான் தான் பண்ணேன். :)
முரளி, உங்களுக்கும் செல்வேந்திரனுக்கும் வயித்தால போக. ஒரு வார்த்தை கூப்ட்டிங்களா? :(
நன்றி சுபாஷ். என்னப்பா..எல்லா பதிவுக்கும் ஒரே ஸ்மைலியா போட்டுத் தாக்கறிங்க? :)
நன்றி சென்ஷி. வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகுமாம். ஏன் வாய்க்குள்ளையே சிரிக்கிறிங்க.? :)
தமிழ் அண்ணே.. அதுக்குத் தான் என்னை மாதிரி வெவரமா தூங்கிடனும்னு சொல்றது. :))
ஆயில்ஸ், அன்னைக்கு தமிழ் அண்ணாச்சியைப் பார்க்கவே பாவமா இருந்தது. போட்டோ கூட இருக்கு. ரிலீஸ் பண்ணிடலாமா? :))
வால், உங்களுக்கு பழகி இருக்குமே. ஏற்கனவே நந்தண்ணா கிட்ட பேசறதா நினைச்சி என்கிட்ட பேசி பல்பு வாங்கி இருக்கிங்களே. :)
ஆமாம் செல்வா.. அவரு ரொம்ப்வே நல்லவரு தான். கடைசி வரைக்கும் வெளியக் காட்டிக்காமலே கொடுமை அனுபவிச்சாரே. அதுக்கு பரிகாரமா தான் என்னை விட்டுப் போய் கையேந்திபவன்ல சாப்ட்டிருக்கிங்களே. நல்லா இருங்கய்யா. :(
கார்க்கி, மறக்க முடியுமா அதை? :)) உங்களுக்கெல்லாம் ஊறுகாயே அவர் தானே அன்னைக்கு.. ;))
நன்றி சின்னப் பையன். :)
ஹலோ மிஸ்டர் ஆதி, நீங்க கொஞ்ச நேரத்துல போனைக் கட் பண்ணி சேதத்தைக் குறைச்சிட்டிங்க. ஆனா இன்னொருவாட்டி அதுக்கெல்லாம் சேர்த்து பழிவாங்காம விட மாட்டோம் பாருங்க. :)
ஆனாலும் கடைசில எல்லாருக்கும் அல்வா குடுத்திட்டிங்களே பாஸ். :))
வாங்க சுபா. சமையல் நிபுணர் எல்லாம் இந்தப் பக்கம் வந்திருக்கிங்க. ரொம்ப நன்றி. புனிதாவுக்கு இன்னும் கொஞ்சம் நல்லா சொல்லிக் குடுங்க.. எனக்கு இப்போ அவங்களும் ஒரு குரு. :)
அச்சச்சோ...பாவம்பா!!! இந்தப் பாடு படுத்தறீங்களே!!!
அன்புடன் அருணா
உன்ன திருத்தவே முடியாது.. பாவம் முரளி அண்ணா.. :((
ungalai yennathan panrathu:-)(..thirunthave maateengala.....
அருணாக்கா.. ஹிஹி.. எதோ எங்களால முடிஞ்சது. ;)
ஸ்ரீமதி எனக்கு புகழ்ச்சி பிடிக்காது. :)
இயற்கை, ஸ்ரீக்கு போட்டிருக்கும் கமெண்டை படித்துக் கொள்ளவும். ;))
சஞ்சய் ரொம்ப மோசம், முரளியை ஓட்டிஇருக்கீங்கள
நன்றி அஷோக் சார். :)
எதோ நம்மளால முடிஞ்சது. :)
Post a Comment