இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comThursday 21 May, 2009
படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3
Lables
கவிதை,
பேசும் கவிதைகள்
புதியவர்கள் மட்டும் கீழே படிங்க. ஏற்கனவே இதைப் பற்றித் தெரிந்தவர்கள் நேரடியாக படத்தைப் பார்த்து கவிதை சொல்லிடுங்க.
இதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ஒன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.
கவிதை ஹைக்கூவாகவும் இருக்கலாம். 25 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.
இங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.
தனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலாம். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்?. :)
இங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.
டிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .
இந்த வாரப் படம்..
முந்தையக் கவிதைகள் படிக்க : பேசும் கவிதைகள்.
Subscribe to:
Post Comments (Atom)
23 Comments:
காதல் சண்டே
உன்னிடம் சண்டைபோடும் நாளா சண்டே?
காதல் மொழி பேசும் நாளா சண்டே?
இன்டர்நெட், சாட் என்று கும்மி அடித்தோம்
ஹோட்டல், பப் என்று சுற்றினோம்
மல்டிப்ளெக்ஸ் அனைத்தும் பார்த்துவிட்டோம்
மால்கள் அனைத்தும் அளந்துவிட்டோம்
அடல்ட்ஸ் என்ன குழந்தை என மொழி பேசி
காதல நினைவுகள் பருகினோம்
வேலை காரணம் நாம் பிரிந்தாலும்
ஊர் மாறினாலும் மறக்கமாட்டேன் என்றாய்
இருந்தாலும் என்னை மறந்துவிட்டாயா தோழி
சண்டே எனக்கு பிறந்த நாள்!
சண்டேன்னா
இப்படித்தான்..,
சிவப்பு மெத்தையில்...
வரியா
இன்னைக்கு சண்டே
சரக்கடிக்க போலாம்
வரியா
இதுதான் எனக்கு தெரிஞ்ச கவிதை
ஒகேவா
பரிசா ஒரு ஃபுல் வாங்கி கொடுத்தா போதும்!
என்னாச்சி? இந்த வாரம் எல்லாரும் லீவ் விட்டுட்டாங்களா? :(
Go E ,
Go E,
Go E,
ச்சூ ச்சூ E
ஹை....நாளைக்கு சண்டே ஜாலிடே..என்ஜாய் எனச் சொல்லும்
மேட்டிக்குடி மகன் உனக்குத் தெரியுமா என் சண்டேக்களின் முக்கியத்துவம்
பசி போக்கும், ஒரு வேளை சத்துணவும் கிடைக்ககாத நாள்
யூனிபார்ம் ஆடையின் கிழிசல்களுக்கு ஒட்டுப் போடும் நாள்
அடுத்த மாதப் பரிட்சைக்குள் பேனா வாங்க, சம்பாதிக்கும் நாள்
ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்
நட்பு எனும் பெயரில்
திங்களில் திரிந்து
செவ்வாயில் கனிந்து
புதனன்று காதல் சொல்லப்பட்டு
வியாழனன்று மோகம் வென்றுவிட
வெள்ளியன்று ஊடல் கொண்டு
சனியோடு தொலைந்து போகின்றது
இப்பொழுது
காதல் எனும்
பெயரில் உதிக்கும்
இனக்கவர்ச்சி
இளையவர்களிடம்
/sakthi said...
ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்
நட்பு எனும் பெயரில்
திங்களில் திரிந்து
செவ்வாயில் கனிந்து
புதனன்று காதல் சொல்லப்பட்டு
வியாழனன்று மோகம் வென்றுவிட
வெள்ளியன்று ஊடல் கொண்டு
சனியோடு தொலைந்து போகின்றது
இப்பொழுது
காதல் எனும்
பெயரில் உதிக்கும்
இனக்கவர்ச்சி
இளையவர்களிடம்/
அருமை
இங்கே இடுகை
கதம்ப மாலை ஆகிறது
ஞாயிறு காலை
கணவன்
தாரம்
மற்றும்
பசங்கள் சேர்ந்தயுடன்.
.....................................................................................................
உண்ணும்
உறங்கும்
விடுதிகளாய் இல்லங்கள்
வார நாட்களில் ...................
ஞாயிறு வந்துவிட்டால்
வீடுகளில் எல்லாம்
விழாக்கோலம்
குடும்பத்தின
குதூகலத்தில்.......................
"இன்று உனக்காக நானடி!"
-----------------------------
நெற்றியில் முத்தமிட்டு, சூடான காஃபி...
ஆர்டின் வடிவத்தில் சுட்டுக் கொடுத்த தோசை...
இருவரும் சேர்ந்து துவைத்த சேலை...
கேட்டுக் கேட்டு, ஆர்வமாய் செய்த அரைகுறை சமையல்...
தோளில் சாய்ந்து ரசித்துப் பார்த்த ஐஸ்க்ரீம் சினிமா...
...............
எல்லா ஞாயிறும் தவறாமல், எப்படித்தான் ,
மேன்ஷன் அறைக்குள் நுழைகிறதோ
தடை செய்யப்பட்ட இந்த கனவு மட்டும்.
Link : http://suzhiyam.blogspot.com/2009/05/blog-post_27.html
சிலிர்க்கின்றது இதயம்
காதல் பூக்கள் மின்ன
ஞாயிறு உதயம்
தோளில் சாய்ந்துச் சண்டைப் போடவும்
கைக்கள் கோர்த்துச் சாலை நடக்கவும்
தலைமுடி கலைத்து வாரி விடவவும்
ஒரே கிண்ணத்தில் காப்பி பருகவும்
நெற்றி..கன்னம்..மீசை உறுத்தவும்
புஜத்தில் சரிந்து உறங்கிக் கொள்ளவும்
மீண்டும் வாய்க்குமா உன் மூச்சுக் காற்று உரசிய அதே ஞாயிறு??
ஞாயிறு!
உன்னைக் காணாமல்
ஏங்கித் துடித்துச் சிவந்த
என் இதயம்!
இப்டி ஒரு விஷயம் இருக்கிறது தெரியாம போச்சுங்க.. நல்ல முயற்சி.. நானும் முயற்சி பண்றேன்.. பார்த்து ஏதோ பண்ணுங்க.. :P
யார் இந்த இதயா..
இவள்தான்..
கலியுகக்..
குந்தியா..
சூர்யநாளில்..
இவளின்..
மணக்கோலம்..
நட்சத்திரங்கள்..
துணையுடன்..
ஊர்கோலம்..
எங்கே..
வியாசர்..
எழுத..
நான் தயார்..
புதிய..
பாரதம்..
பாலா & ப்ரியா
மன்னிக்கவும்.. இது முடிந்து போன போட்டி. இந்த வாரத்திற்கு http://podian.blogspot.com/2009/05/4.html இங்கே பார்க்கவும். நன்றி.
விடுமுறை தினம்
இதயத்தில் இருப்பவளோடு..
இப்போது
இதயத்தில்
விடுமுறை தினம்
மட்டும்!!!
np.. have noticed it later.. lemme see..
Post a Comment