இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Tuesday, 19 May, 2009

தத்துபித்துவம் - 2

அப்பப்ப யார்னா தேவைக்கேற்ப எதுனா கண்டுபுடிச்சினு தான் இருக்காங்க. அதுக்கு அவங்க எவ்ளோ கஷ்டப் பட்டிருப்பாங்கன்னு சொல்ல வேண்டியதில்லை. ஆனா அதை பயன் படுத்தற நம்மாளுங்க இருக்காங்களே.. அடடா.. எல்லாம் பயங்கரமான புரோட்டா மாஸ்டருங்க தான். அதை எப்டி எல்லாம் கொத்து புரோட்டா போட முடியுமா அதெல்லாம் பண்ணிடறாங்க. ஈமெயில் என்பது எல்லாருக்கும் மிகப் பெரிய வரப் பிரசாதம். முன்னாடி எல்லாம் மக்கள் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க. என்னடா இது.. ஓசில கெடைக்கிதேன்னு இருக்கிற எல்லா வெப்சைட்லையும் ஐடி வச்சிருந்தும் ஒரு பயலும் மெயில் அனுப்பலையேன்னு ஃபீல் பண்ணுவாங்க. அதனால அப்பப்போ கோடிக்கணககான டாலர்கள் நமக்கே தெரியாம நம்ம பேர்ல லாட்டரில கிடைச்சிட்டு இருந்தது. அது ஒரு சந்தோஷமான பீலிங்கு.

இப்போல்லாம் அந்த பீலிங்கு வேற மாதிரி ஆய்டிச்சி. பின்ன ... தெரிஞ்சவன் மெயில் பண்றானோ இல்லையோ.. இந்த லேகியம் விக்கிறவனுங்க இம்சை தாங்கறதில்லை. 20% ஆஃபர்.. 10 வயாகரா வாங்கினா 100 கிராம் மான்கொம்பு அல்லது சிட்டுக் குருவி லேகியம் ஃப்ரீயா குடுத்து கைல 10 ரூபாய் பணமும் குடுக்கிறோம் என்ற ரீதியில் இவனுங்க அழிச்சாட்டியம் தாங்கறதில்லை. இன்னும் பலானது பலானது எல்லாம் அனுப்பறானுங்க.

ரோட்ல லேகியம் விக்கிறவன் எல்லாம் லேப்டாப் வாங்கிட்டு நம்மள படுத்தறானுங்க. நல்ல வேளை ஆண்டி ஸ்பாம் கோடடிச்சி அதை எல்லாம் தனிப் பொட்டியில ஓரம் கட்டிடறாங்க.

மெயில் அனுப்பினாத் தான இந்த வேலை எல்லாம் பண்ணுவீங்க.. நாங்க வேற வழியா வருவோம்லன்னு ஒரு குருப்பு கிளம்பி இருக்கு. கூகுள்ல SMS Channel என்று ஒரு சேவை இருக்கு. அதுல ஏராளமான சேனல்ஸ் இருக்கும். யார் வேணாலும் இதை உருவாக்கலாம். யாரோட சேனல்ல வேணாலும் இணைந்து நாமளும் செய்தி அனுப்பலாம். அந்த செய்திகள் எல்லாம் அதுல இணைஞ்சிருக்கிற உறுப்பினர்களோட மொபைலுக்கு குறுஞ்செய்தியா போய்டும். இதுல இப்போ இந்த அஜால் குஜால் பார்ட்டிங்களும் சேர்ந்துட்டாங்க.

நகைச்சுவை மற்றும் செய்திகளுக்காக நாம இணைஞ்சிருக்கிற சேனல்ல இவங்களும் வந்திருக்காங்க. "Hi, this is sheela. please subscribe our channel to get sex tips free to increase your sex activities. send SEX to 9710******" அப்டின்னு தினமும் ஒரு செய்தியாவது வருது. ஒரு நாளைக்கு ஷீலா, அடுத்த நாள் மீனா, அடுத்த நாள் ரீனா.. சீக்கிறமே அசின் , திரிஷா, நயந்தாரா எல்லாம் வருவாங்கன்னு நினைக்கிறேன். :) . மொபைல்ல எந்த ஆண்டி ஸ்பாம் போட்டு இதை தடுக்க முடியும்?..எப்டி எல்லாம் அஜால் குஜால் பார்ட்டிங்க டெக்னாலஜிய யூஸ் பண்றாங்க பாருங்க.

இதெல்லாம் நமக்குத் தெரியாத யாரோ எங்கயோ இருந்து பண்றது. நம்ம கூடவே இருக்கிற சில கொத்து புரோட்டா மாஸ்டருங்க இதுக்கு மேல. சனிக்கிழமை (மே 16 ) தேர்தல் ரிசல்ட் வந்துட்டு இருக்கும் போது தமிழ்மணம்ல சாட் பண்ண ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. என்ன கோளாறு ஆச்சோ தெரியலை கொஞ்ச நேரத்துல அதைத் தூக்கிட்டாங்க. அப்போ ஒரு மூத்த பதிவரு ( மூனே கால் பதிவு மட்டுமே எழுதி இருந்தாலும் 1 வருஷம் ஆச்சினா மூத்தப் பதிவர் தான்.) போன் பண்ணாரு.

”என்னடா தமிழ்மணம்ல சாட் தூக்கிட்டாங்க போல”
”ஆமாண்ணா”
“இட்லிவடைல கூட ஓடிட்டு இருக்குடா”
“இருங்க பார்க்கிறேன்”
“பாரு பாரு” எதுக்கோ சிரிச்சார்..“ என்னண்ணா அதுல நாம எதும் சாட் பண்ண முடியாது போல இருக்கே.. அந்த ஆப்ஷனே காணோமே”
“ அது ஒன்னுமில்லைடா.. அந்த சாட் பார்த்த உடனே நான் குஷி ஆய்ட்டன். எனக்கு பழைய ஞாபகம் வந்துடிச்சி. எல்லாரும் ரொம்ப சீரியசா பேசிட்டு இருந்தாங்க..அதான் நான் “ M25 here.. any F32 pls pm " இப்டி எல்லாம் வித விதமா மெசெஜ் பண்ணி விளையாடிட்டு இருந்தேன்.. கடுப்பாய்ட்டாங்க போல.. அதான் தூக்கிட்டாங்க”

இவரை எல்லாம் வச்சிட்டு என்ன பன்றது? கம்பூட்டருல ஆண்டி ஸ்பாம் வச்சி தடுக்கலாம். ஆனா, ஊட்ல இருக்கிற ஆண்டிக்கே அடங்காம அழிச்சாட்டியம் பண்ற இந்த மாதிரி ஆளுங்கள எதை வச்சி தடுக்கிறது?.

இன்னும் சில நல்லவங்க இருக்காங்க.. வெந்த புண்ணுல எப்டி வேலப் பாய்ச்சறதுன்னு சொல்லிக் குடுக்க காலேஜே கட்டுவாங்க போல. ஞாயித்துக்கு கெழம டிவி பார்த்துட்டே ஆன்லைன்ல இருந்தேன். நம்ம அதிஷா சாட்ல வந்து “ சஞ்சய் உடனே ஜெயா மேக்ஸ் பாருங்க. சுச்சுவேஷன் சாங்கு போட்னுகீறாங்க”ன்னாரு. நானும் ஆர்வமா பார்த்தேன். அதுல ஜெய்சங்கர், அருண்பாண்டியன் எல்லாம் ஆளுக்கொரு மெழுகுவர்த்தியைப் பிடிச்சிட்டு பாடிட்டு இருந்தாங்க..

“ தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா? “

அடப்பாவிகளா.. எப்டி எல்லாம் யோசிக்கிறாய்ங்கய்யா.. நல்ல வேளை மக்கள் டிவியில சினிமா பாட்டுப் போடறது இல்ல. இல்லைனா விளம்பர இடைவேளையா இந்தப் பாட்ட மட்டும் தான் போட்டிருப்பாங்க.

இந்த கூத்தெல்லாம் நடந்துட்டு இருக்கும் போது நம்ம ”ஜி” ஸ்டேட்ட்ஸ்ல இருந்தது “ அடப்பாவிகளா.. ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் போட விட மாட்டேன்றாங்களே ”.. ஹ்ம்ம்ம்.. அவர் எந்த அதிஷாவால பாதிக்கப் பட்டாரோ.. :)

Pussycat Dolls ஃபிகருங்க சேர்ந்து ஜெய் ஹோ பாடலை ”You Are My Destiny”என்ற பெயரில் அட்டகாசமா ரீமேக் பண்ணி இருக்காங்க பாருங்க.. ரசிங்க.. :)

10 Comments:

said...

யாரு மேல உள்ள கோபம் இது சஞ்சய்? பயங்கரமா காட்டிருக்கீங்க :)

said...

ஷீலா நம்பராவது முழுசா போட்டிருக்கலாம்.

said...

நெம்ப நன்னாருக்கு..ஆனா அந்த ஒரு கோடி டாலர் லாட்டரியெல்லாம் டுமீலா?
அய்யோ அத நம்பி நானும் வாலும் பெரிய்ய்ய்ய கம்பேனி ஆரம்பிக்கலாம்னு இருந்தமே...

said...

உங்க அண்ணாத்த இம்புட்டும் படிச்சுபோட்டு நம்பர் கேக்கறாரு பாருங்க....இவிங்கள திருத்த முடியும்னா தோணுது? ம்ஹூம்.

said...

// “ M25 here.. any F32 pls pm " இப்டி எல்லாம் வித விதமா மெசெஜ் பண்ணி விளையாடிட்டு இருந்தேன்.//

இன்னும் கொஞ்சநாள்ல மருமகன் வரப்போரான்னு சொல்லிவைங்க தல,

said...

ஹா ஹா ஹா

எங்க தலைவரு எப்பவுமே இப்படி தான்!

இலக்கியதரமா தான் யோசிப்பாரு!

said...

//ஒரு கோடி டாலர் லாட்டரியெல்லாம் டுமீலா?
அய்யோ அத நம்பி நானும் வாலும் பெரிய்ய்ய்ய கம்பேனி ஆரம்பிக்கலாம்னு இருந்தமே...//

என்ன சொல்றிங்க டுமீலா

எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும் போலயே!

said...

Romba baathikkappattu irukeengannu ninaikiren...

said...

மங்களூர் சிவா said...
ஷீலா நம்பராவது முழுசா போட்டிருக்கலாம்.
//

யோவ் ஆனாலும் ஒமக்கு ரொம்ப கொழுப்புதாம்யா..

said...

சுபா, கோவம் இல்லை.. சும்மா தோனுச்சி.. எழுதினேன். ;)

மங்களூர் மாம்ஸ், இன்னும் அடங்கலையா நீர்?

கும்கி, நீங்களாச்சும் பரவால்ல.. நான் மைக்ரோசாஃப்ட் வெல கேட்டு பில்கேட்ஸ்கே மெயில் போட்டேன்.. :))

கார்த்திக், பக்கத்துல இருக்கிறது நீங்க தான். நீங்களே சொல்லுங்க. வாமு கோமு புக்கை எல்லாம் குடுத்து அவரை கெடுத்ததே நீங்கதான்னு வால் சொல்றாரு.. :))

வாலு, நல்லா சேர்திருக்கிங்கய்யா குமபலு.. :))

கயல்விழி, அப்டி எல்லாம் இல்லீங்க.. பதிவு எழுத மேட்டர் இல்லைனா இப்டி உளற ஆரம்பிச்சிடுவேன்.. என் மொத்த ப்ளாகும் இப்டி தான் இருக்கும்.. :))

ஆதி, உங்க கிட்ட இருந்தா குடுங்க. பாவம் வையாதிங்க.. ;))

Tamiler This Week