இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comThursday, 14 May 2009
படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 2
Lables
கவிதை,
பேசும் கவிதைகள்
புதியவர்கள் மட்டும் கீழே படிங்க. ஏற்கனவே இதைப் பற்றித் தெரிந்தவர்கள் நேரடியாக படத்தைப் பார்த்து கவிதை சொல்லிடுங்க.
இதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ஒன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.
கவிதை ஹைக்கூவாகவும் இருக்கலாம். 25 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.
இங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.
தனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலாம். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்?. :)
இங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.
டிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .
விருப்பம் உள்ளவர்கள் வைரஸ் கூட அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவர் : kusumbuonly@gmail.com . அடுத்த வாரம் ஆயில்யன் அட்ரஸ் தறேன். ஆட்டோவே அனுப்பலாம். :)
இந்த வாரப் படம்..
முந்தையக் கவிதைகள் படிக்க : பேசும் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
37 Comments:
me the first.. :))
//முந்தையக் கவிதைகள் படிக்க : பேசும் கவிதைகள்//
அங்க கவிதைய காணோம் :(((
கவிதை :-
ஐ ஆம் எ டிஸ்கோ டேன்சர்....
பே.. பம்... பே.. பம்....
நான் பாடும் பாடல் ... சூப்பர்...
பே.. பம்... பே.. பம்....
வாக்குறுதிகள் நிறைவேறுமா ?
அவீங்க வந்துட்டு போனாங்க
வாக்குறுதி எல்லாம் கொடுத்தாங்க
இன்னும் அடுத்த தேர்தல் வரும் வரைக்கும்
நாம் காத்திருக்கணுமா?
ai sanjayoda latest photo
ஆடுமாடுகளுடன் ஓய்வெடுக்கும் பழைய செருப்பு !
:(
கவிதை 1
எலவச மின்சாரம் மின்னும்
வீடு வந்து சேரல
வட்டியில்லா க்கடனும்
காடு வந்து போகல
ஓயாம உழச்சாலும் காசு வீடு வந்து சேரல
கையெல்லாம் காய்ச்சாலும் கஞ்சி காச்ச முடியல
விவசாயம் பண்ணி பொழைச்ச
மக்க!
வயித்து பசியில காஞ்சு
கிடக்க!
வந்துட்டானுங்க ஆட்டிட்டு
த்தூ
ஓட்டு மட்டும் கேட்டுகிட்டு
யாருக்காக காத்திருக்கேன்
பாதையத்தான் பாத்திருக்கேன்
உலகத்துக்கே விடிஞ்சாலும்
சூரியன்தான் உதிச்சாலும்
எலை தழைங்க துளிச்சாலும்
என்சோட்டு சாதி சனம்
வாழ்க்க மட்டும் விடியலியே
நல்ல மாட்டுக்கு ஒரு
சூடுன்னான் பெரியவன்
இந்த மாடு இனி உதவாதுன்னான்
சின்னவன்!
இனி வாழ்கை இந்த மாட்டோடு!
வாவ் அதிஷா,
அட்டகாசம். அப்படியே கழகங்களையும் ஒரு பிடி பிடிச்சிட்டீங்க. Good one.
அனுஜன்யா
யு டூ குசும்பன்? நல்லாவே இருக்கு :)
அனுஜன்யா
நல்ல கவிதைக்காக உங்க ஃபோட்டோவையே போடுவீங்கன்னு நான் நினைக்கவேயில்ல தல..
//ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்ல கவிதைக்காக உங்க ஃபோட்டோவையே போடுவீங்கன்னு நான் நினைக்கவேயில்ல தல..//
ஹஹாஹஹா ...Once more!!!!
anbudan aruna
நான் ஆட்டைக்கு வரல!
அதிஷா கவிதைக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுகிறேன்
விருப்பம் உள்ளவர்கள் வைரஸ் கூட அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவர் : kusumbuonly@gmail.com //
மாமா உன் போட்டோவை எல்லோரிடமும் கொடுத்து வெச்சு இருக்கீயா?
//ஆயில்யன் அட்ரஸ் தறேன். ஆட்டோவே அனுப்பலாம். :)
//
ஹைய்ய்ய் அப்ப ரிடர்ன் டிரிப்ல நான் ஃப்ரீயாவே ஊருக்கு வந்துவிடுவேனேஏஏஏஏஏஏஏ.....!
மகன் ,
டாக்டர்
சென்னையில்...
பேரன் ,
சாப்ட்வேர் இஞ்சினியர்
டெக்சாசில்...
நான்,
இன்னும்
கிராமத்திலேயே...
சல்லிவேர்கள்
தள்ளிப் போனாலும்
அங்கேயே இருக்கும்
ஆணிவேர்ப் போல...
விழுதுகள்
விலகிச் சென்றாலும்
விலகாத
ஆலமரத்து அடிமரம் போல...
( நாங்களும் எழுதுவோம்ல கவுஜ.. :)) )
படம் பார்த்துட்டேன்..
கவிதை..
பொருளாதார மேதைகளால்
பந்தாடப்பட்ட
பரங்கிப்பேட்டை
பச்சமுத்து
பதறினார்..
என்னது? மீண்டும் காங்கிரஸ் ஆட்சியா?
திரும்பவும்
காங்கிரஸ் ஆட்சியா
மிஞ்சுமா
கோவணம்?
எனை விட்டு எங்கு சென்றாய் என்னவளே
என் உள்ளத்து உணர்வுகளை கொன்றவளே
ஊர் முழுவதும் அந்நியாமாகிவிட
உன் நினைவுகள் மட்டுமே துணையாய்
என் எளிய தோற்றம் கண்டு
எள்ளி நகையாடும் கூட்டம் அறியுமா???
உண்மையான வாழ்வின் அர்த்தம்
ஊதாரித்தனங்களால் வாழ்வின்
உண்மையை தொலைத்த கூட்டம் எனை பரிகசிக்க
ஒங்கி நிற்கும் இந்த மரமும்
ஒற்றை மாடுமே எனக்கு இப்போது ஆறுதலாய்....
ஆட்டைக்கு என்னையும் சேத்துக்கங்கண்ணே!!!
காலணி போல் நானும்
======================
உன் நிழிலிலாவது என்னை
விட்டு இருக்கலாமே
இது கண்டிப்பா உரைநடை தான். கவிதைன்னு நினைச்சி படிக்க வேண்டாம். அந்த பெரியவரின் காலணி பேசுவது போல்....
என் வாழ்கை
=================
கண்களில் கவலையும்
நாளையேனும் விடியுமா கனவும்
காலணி கூட பரமாக...
இதுவும் சஞ்ஜய் சொன்னதுக்காக எழுதிட்டேன் அவ்வளவு தான்
விளையாட்டைப் படம் கேட்டதற்கு
வினையாக
விளைந்தது இந்தக் கிறுக்கல்
அதனால் இடுகையும் இட்டு விட்டேன்.அன்புடன்
திகழ்
.........................
உறவு இருந்தும் துறவு ...
...........................
மாடு இருக்கிறது
உழவனாய் உழுது கிடக்க...
வீடு இருக்கிறது
கிழவன் நான் இருக்க...
இத்தனையும் இருந்து என்ன ?
எத்தனை நாள் நான் இருப்பேன் ?
இங்கே மாடும் வீடும்
என் சொந்தங்களாய் ...
எங்கே போயின
என் பந்தங்கள் எல்லாம் ...
மண்ணை நேசித்தது
மாபெரும் குற்றமா ?
எனை விடுத்து
எங்கே சென்றாய் என் மகனே ...
தினமும்
வேர்வையில் குளித்து,
பார்வை பூத்து,
வாசலில் தவமிருகின்றேன். மகனே
வருவாய் நீ என !
பயிரை அறுவடை செய்த எனக்கு
உயிரை அறுவடை செய்யும்
கலை தெரியாததால்,
கண்ணீரில் கரைகின்றேன் ...
உறவு இருந்தும்
துறவு தான் முதுமையிலே
என உணர்கின்றேன்.
மின்ன
என் அண்ணன் தம்பிகளோட
கருவேலங்காட்டுக்குள்ள
'ஒரு கட்டுச் சுள்ளியில
ஒரு சுள்ளி கோண சுள்ளி,
ஒரு கட்டுச் சுள்ளியில...' ன்னு
சொல்லிக்கிட்டே சுள்ளி பொறுக்கயில
சத்தமில்லாம மேலேறி
உச்சியத் தொட்டுருவார் சூரியனார்.
வெயில் படாம நிழல்ல நின்னு நின்னு
ஓடுறவன் பயந்தாங்கொள்ளி!
வெயில்கால் புழுதிபட ஓடிப்போய்
ரெட்டமாட்டுக் கட்டவண்டி தொத்துரவன் வலுத்தவன்!
ரெட்டமாட்டு வண்டி தொத்தி
பொறுக்கி வந்த சுள்ளிக
கல்லுக்கூட்டுக்குள்ள சடசடக்க,
பொங்கச்சோறு பானையில
பொங்க நிக்க,
கட்டவண்டியோட கட்டிவச்ச ஆட்டுக்கிடா
மே... மே... ங்க
முறுக்கு மீசக்கி நடுவுல
புன்னகையா பூரிச்சு நிப்பான் கருப்பராயன்.
இன்னக்கி
கேஸ் அடுப்புல கறி வேகுதாம்!
பேரம் பேத்திக வீடியா கேம் ஆடுதாம்!
இன்னமும்
பூரிச்சுப் புன்னகையாத்தான் நிக்கறான் கருப்பராயன்!
ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் அருணா அக்காவிற்கு விரைவில் பதி மரியாதை செய்யப் படும். :)
ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் அருணா அக்காவிற்கு விரைவில் பதில் மரியாதை செய்யப் படும். :)
ஸ்ரீமதி, கவிதை எங்கே?
புன்புலம் தினமுழுது
புடைத்திருக்கும் உன்
புறங்கைச் சிரைகளுக்குள்
புகுந்து பார்த்தோ..
பொசுக்கும் வெயில் மறுக்க..
புன்னகையின் நரை மறைக்க..
கார்முகில் காணாத
காற்றின் பசலை மொழி
காது தீண்டாதிருக்க..
நீயணிந்த பாகைக்குள்
நுழைந்து நோக்கியோ...
பாடுபொருள் தேடத்
தேவையிருக்கவில்லை என்
கவிதைக்கு..
மருதம் பிறழ்ந்து பாலையாதலின்
மாபெரும் வேதனையுன்
விழிமுனையில் மொழியற்று
வீற்றிருக்கையில்..
இதுவரை கவிதை சொன்ன அனைவருக்கும் நன்றி. உங்கள் கவிதைகள் அனைத்தும் நாளை http://pesumkavithai.blogspot.com/ல் வெளியிடப் படும்.
கெளரிப்ப்ரியா, உங்கள் கவிதையில் சிறிய எழுத்துப் பிழை. திருத்தி இருக்கிறேன். பொறுத்தருள்க.
சிரை = சிறை.
நன்றி.
நாளை 3வது போட்டிக்கான படம் இதே வலைப்பூவில் வெளியிடப்படும்.
copyright களவாடல்.
முன்னாடி போட்ட பின்னூட்டம் என்னோட கவிதை. அர்த்தம் புரியாட்டி அதிஷா கிட்ட கேளுங்க.
இல்ல சஞ்சய் சார்..சிரை தான்.. veins என்ற அர்த்தத்தில சொன்னேன்...
பேசும் கவிதைகள் பக்கத்தில திரும்பவும் சிரை னு மாத்திட்டீங்கன்னா சந்தோஷப் படுவேன் :))
மன்னிக்கனும் கெளரி. அப்டி ஒரு அர்த்தம் இருப்பது தெரியாமல் அவசரப் பட்டுட்டேன். சென்ற போட்டியில் ஒருவர் எழுத்துப் பிழையுட சொன்னதாலே அந்தக் கவிதையின் அழகு பாதிக்கப் பட்டதாக விமர்சனம் வந்தது. மன்னிக்கனும். பழையபடி மாற்றிவிட்டேன்..
டிஸ்கி : நான் சஞ்சய் சார் இல்லை. சஞ்சய் மட்டுமே. :)
இந்த வாரத்திற்கான போட்டிப் ப்டமும் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துகள். :)
it's ok..
நன்றி சஞ்சய் :)))
Post a Comment