இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday 16 May, 2009

தத்துபித்துவம் - 1 + 201வது பதிவு

இப்போது எல்லாம் டிவி பார்ப்பது என்பதே ஒரு கொடுமையான சமாச்சாரமா ஆய்டிச்சி. எல்லா சேனல்களைலும் ஒரே மாதிரி நிகழ்ச்சிகள். முன்னாடி எல்லாம் எல்லா சேனல்களிலும் அழுகாச்சி சீரியல்களா ஓடிட்டு இருக்கும். அந்த சமயங்கள்ல விஜய் டிவியில சில புதுமையான நிகழ்ச்சிகளும் ஜாலியான தொடர்களும் ஒளிபரப்ப ஆரம்பிச்சாங்க. அதனால டிவி பார்க்க உட்கார்ந்தா விஜய் டிவி தான் பார்ப்பேன். இப்போ எல்லா சேனல்களிலும் ஒரே மாதிர் ரியாலிட்டி ஷோக்கள் தான் வருது. எந்த சேனல் திருப்பினாலும் யாராவ்து ஆடிட்டே இருக்காங்க.. யாராவது கெமிஸ்டி , பிசிக்ஸ் எல்லாம் நல்லா வொர்க் அவுட் ஆச்சி, கோ ஆர்டினேஷன் நல்லா இல்ல.. டமிங் மிஸ் பண்ணிட்டிங்க , எனர்ஜி லெவல் கம்மியா இருந்தது ( எப்டி தான் அளக்கறாங்களோ ) என்று அரைச்ச மாவையே அரைக்கிறாங்க.. இல்லைனா எதாவது அற்ப காரணங்களுக்கு சண்டைப் போடறாங்க.. அதையுமாய்யா ஒளிபரப்புவிங்க?. இந்த ஆட்டம் பாட்டம் ஆளுங்க டார்ச்சர் தாங்கறதில்லை.. கொய்யால.. ஒன்னுக்கடிக்கிறதைத் தவிர வேற ஒன்னுவிடாம ஒளிபரப்பறாங்க.

அது இல்லைனா யாராவது பாடிட்டே இருக்காங்க. அங்கயும் யாராவது பல்லவி, ச்சரணம், டெம்போ என்று நமக்கு புரியாத வார்த்தைகளா பேசறாங்க. சும்மா சும்மா டென்ஷன் ஆகறாங்க. போட்டியில கலந்துக்கிறவங்க , ஒரு எபிசோடுக்கு யாராவது ஒருத்தராவது அழறாங்க.. போட்டின்னா தோல்வி சகஜம் தானே.. சும்மா இருந்து தோற்பதில்லையே.. போட்டி போட்டு உங்களை விட திறமைசாலிகிட்ட தானே தோல்வி வருது.. இதுக்கு பெருமை படறதை விட்டு அழுவாங்களா யாராச்சும்? இது கூட பரவால்ல.. இவங்க வீட்ல இருந்து அப்பா அம்மா தாத்தா பாட்டி அத்தை மாமா எல்லாரும் வந்திருப்பாங்க.. அவங்களும் கூடவே அழுவாங்க.. அழுதுகிட்டே திடீர் கருத்து கந்தசாமிகளாவும் ஆய்டுவாங்க.

இவங்களை எல்லாம் தாண்டி வந்தா இந்த காமெடி ஷோ பன்றவங்க இம்சை.. ஸ்டேண்டிங் காமெடி பன்றோம்னு சொல்லிட்டு மொபைல் கண்டுபிடிச்ச காலத்துல வந்த SMS எல்லாம் மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சிட்டு இருக்காங்க.. இல்லைனா மிமிக்ரி என்ற பெயரில் சினிமா நடிகர்கள் குரல்களை எல்லாம் கொத்து புரோட்டா போடறாங்க.. சிலர் பன்றது கொஞ்சம் ரசிக்கிற மாதிரியும் இருக்கும். ஆனால் பெரும்பாலான மிமிக்ரிகள் கடுப்பு தான். வேற கான்செப்டே இல்லை போல. அங்க இருக்கிற நடுவர்கள் இருக்காங்களே.. யப்பா.. தாங்க முடியலை..

சரி, செய்தி பார்க்கலாம்னு சன் செய்தி, கலைஞர் செய்தி திருப்பினா, அவங்க கொடுமை அதுக்கு மேல.. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை வேஷ்டியை அவுத்துப் போட்டு ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சின்னு சொல்வாங்களே அந்த மாதிரி தான். காலைல பதிவு பண்ணி வச்ச செய்தியையே ராத்திரி வரைக்கும் ஒளிபரப்பறாங்க.

இவங்கதான் இப்டி. எதுனா இங்கிலீசு சேனல் பாக்கலாம்ன்னு திருப்பினா இந்த அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் காட்டுக் கத்து கத்திட்டு இருக்காங்க.. தேர்தல் முடிஞ்சாலும் கொஞ்ச நாளைக்கு இந்த இம்சை இருக்கும்.. எல்லா சேனல்களிலுமே ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப பேசிட்டு இருக்காங்க.. அதுலையும் இந்த நிகழ்ச்சியைத் தொகுக்கிறவங்க டார்ச்சர் அதுக்கு மேல. ஐபிஎன்னோட சகரிகா கோஸ், எண்டிடிவி பார்க்கா தத் 2 பேரும் கொஞ்சம் பரவால்ல.. தமிழ்நாட்டுக்கு ஓரளவு முக்கியத்துவம் தராங்களேன்னு நெனைச்சி டைம்ஸ்நவ் பார்த்து தொலைஞ்சா அவ்ளோ தான். விவாதம்ன்னு சொல்லிட்டு இந்த அன்னா கோஸ்வாமி அடிக்கிற லூட்டிக்கு அளவே இருக்காது.. இவர் கரன் தாபரோட வள வளா கொழ கொழா வெர்ஷன். பேசறவங்களை மடக்கறதா நினைச்சி மணிக்கணக்குல அவர் மட்டுமே பேசுவார். விவாதத்துக்கு வந்த அரசியல்வாதிங்க எல்லாம் இவர் வாயைத் தான் பரிதாபமா பார்த்துட்டி இருப்பாங்க.. நம்ம சுப்பைய்யா வாத்தியாருக்கு சொந்தக்காரர் போல...

என்னக் கர்மம் தாண்டா பன்றதுன்னு அன்னைக்கு ஒரு நாள் விஜய் டிவியை பார்த்தேன்.. அதுல எதோ ஒரு FM ஸ்டேஷன்ல அதோட ஆர்ஜேவும் பாடகர் ஸ்ரீனிவாசும் இங்கிலிஷ்ல( மட்டுமே) பேசிட்டு இருந்ததை ஒளிபரப்பினாங்க..

கடுப்பாகி ஆன்லைன் வந்து நம்ம கானா பிரபாகிட்ட பேசிட்டு இருந்தேன்..அவர் ஆஸ்திரேலிய தமிழ் வானொலியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர். அப்போ அவர் சொன்ன விஷயம் ஆச்சர்யமா இருந்தது. அவர்கள் வானொலியில் மருந்துக்குக் கூட ஆங்கிலம் பாவிப்பது இல்லையாம். ஒரு மருத்துவ நிகழ்ச்சி தவிர. அது சரி தான்.. அன்னாசினை - மூத்தசகோதரபாவம்னா சொல்ல முடியும்?. அது 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பு. அந்த வானொலியுடன் தொடர்புள்ள அனைவருக்கும் பாராட்டுகள்.

ஆனால் நம்ம ஊர் பன்பலைகளில் பெருமளவு ஆங்கிலம் தான். இதற்கு கானா அடிச்ச கமெண்ட் “ எதுவுமே பக்கத்துல இருக்கும் போது அதோட மதிப்பு நமக்குத் தெரியாது பாஸ்”... ஆமால்ல..

ஹிஹி.. இது என்னோட 201வது பதிவு.. :-)
இந்த வலைப்பூ ஆரம்பித்து மிகச் சரியாக 25 மாதங்கள் ஆகிறது. :-)
உங்கள் பொன்னான ஆதரவுக்கு நன்றி..நன்றி.. நன்றி.. :))

21 Comments:

said...

25 மாத நிறைவுக்கும் 201-க்கும் வாழ்த்துக்கள்!

//எதுவுமே பக்கத்துல இருக்கும் போது அதோட மதிப்பு நமக்குத் தெரியாது//

பித்துவம் இல்லை சரியான தத்துவமே:)!

said...

வாழ்த்துகள்:)

said...

வாழ்த்துக்கள் சஞ்சய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

// சரி, செய்தி பார்க்கலாம்னு சன் செய்தி, கலைஞர் செய்தி திருப்பினா, அவங்க கொடுமை அதுக்கு மேல.. //


தலைவரே எதுக்கு சேம் சைடு கோல் போடுறீங்க...!!!!
நியாயப்படி நீங்க ஜெயா டி.வி யதான சொல்லணும்...!!!!


சம்திங் பண்டமெண்டலி ராங்.....!!!!




// அவர் ஆஸ்திரேலிய தமிழ் வானொலியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர். அப்போ அவர் சொன்ன விஷயம் ஆச்சர்யமா இருந்தது. அவர்கள் வானொலியில் மருந்துக்குக் கூட ஆங்கிலம் பாவிப்பது இல்லையாம். ஒரு மருத்துவ நிகழ்ச்சி தவிர. அது சரி தான்.. அன்னாசினை - மூத்தசகோதரபாவம்னா சொல்ல முடியும்?. அது 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பு. அந்த வானொலியுடன் தொடர்புள்ள அனைவருக்கும் பாராட்டுகள். //




அட ... இது தெரியாம இருக்குறீங்க...!!! ஒரு தனியார் கொழும்பு எப்.எம் இன் கருத்துகணிப்பின்படி..... !!!

தமிழ் மொழி கொலை செய்யப்படுவது தமிழ் நாட்டில் மட்டும்தானாம்...!!!!


என்ன கொடும சார் இது......!!!!



ஒக்கே .... கேட்ச் யூ லேட்டர்........!!!!!!! ஹியர் டெம்போ சரியில்ல.............!!!




அண்ட் ... பை தி பை.....!!! வாழ்த்துக்கள்....!!!!!

said...

எதுவுமே பக்கத்துல இருக்கும் போது அதோட மதிப்பு நமக்குத் தெரியாது பாஸ் - கானா பிரபா


நான் நோட் பண்ணிக்கிட்டேன் பாஸ்

நொம்ப நன்றி !

தொடர்ந்து இது போன்ற கருத்துக்கள் தவழ விடுங்கள் உங்கள் வலைப்பூவில்

//இந்த வலைப்பூ ஆரம்பித்து மிகச் சரியாக 25 மாதங்கள் ஆகிறது. :-)//

வாழ்த்துக்கள்

said...

25வது மாதத்துக்கான வாழ்த்துக்கள்.

said...

201 வது பதிவுக்கு, வெற்றிகரமான 25ஆவது மாதத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

said...

/
ஐபிஎன்னோட சகரிகா கோஸ், எண்டிடிவி பார்க்கா தத் 2 பேரும் கொஞ்சம் பரவால்ல.. தமிழ்நாட்டுக்கு ஓரளவு முக்கியத்துவம் தராங்களேன்னு நெனைச்சி டைம்ஸ்நவ் பார்த்து தொலைஞ்சா அவ்ளோ தான். விவாதம்ன்னு சொல்லிட்டு இந்த அன்னா கோஸ்வாமி அடிக்கிற லூட்டிக்கு அளவே இருக்காது.. இவர் கரன் தாபரோட வள வளா கொழ கொழா வெர்ஷன்.
/

மாம்ஸ் ஒத்துக்கறோம் நீங்க பெரிய ஆளுதான் அதுக்காக இப்படி பதிவெல்லாம் போட்டு .......


நெம்ப ஓவர்

said...

25 மாத நிறைவுக்கும் 201-க்கும் வாழ்த்துக்கள்! :))))

said...

//ஹிஹி.. இது என்னோட 201வது பதிவு.. :-)
இந்த வலைப்பூ ஆரம்பித்து மிகச் சரியாக 25 மாதங்கள் ஆகிறது. :-)//

:-) வாழ்த்துக்கள் சஞ்சய் ... இரண்டு வருடம் பெரிய விஷயம் தான்

said...

வாழ்த்துக்கள் சஞ்சய்!

said...

25வது மாதத்துக்கான வாழ்த்துகள்.

Anonymous said...

//எதுவுமே பக்கத்துல இருக்கும் போது அதோட மதிப்பு நமக்குத் தெரியாது பாஸ்//

ரொம்ப சரி

வாழ்த்துக்கள் சஞ்சய்

said...

201 வது பதிவுக்கு, வெற்றிகரமான 25ஆவது மாதத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

said...

//இது என்னோட 201வது பதிவு//

வாழ்த்துக்கள்!

//ஒன்னுக்கடிக்கிறதைத் தவிர வேற ஒன்னுவிடாம ஒளிபரப்பறாங்க.//

சூப்பர்.

மக்கள் டீவி...சாரி..மக்கள் தொலைக்காட்சி பத்தி ஒண்ணும் சொல்லல.அங்க கூட தமிழ்தான்.

நான் ஒரு நாள் தானியில் கிளம்பி
வெளுப்பகம் போய்விட்டு வரும் வழியில் சரக்குந்தும் மகிழ்ந்தும் மோதி விபத்து.வரும் போது ஒரு நெகிழி,ஒரு நிலைவெள்ளி குடுவை வாங்கினேன்.
மறக்காமல் என்னுடைய குடும்ப அட்டையை எட்டு ஒளிப்படி எடுத்தேன்.

said...

முதல்ல 25 மாத நிறைவுக்கும் 201-க்கும் வாழ்த்துக்கள்!

//அது சரி தான்.. அன்னாசினை - மூத்தசகோதரபாவம்னா சொல்ல முடியும்?. //

அதானே பதிவுலே சஞ்செய் டச் மிஸ்ஸாவுதேன்னு பார்த்தேன்.....இங்க பின்னிட்டீங்களே!!

said...

இருக்கவே இருக்கு நம்ம சேனல்

நேசனல் ஜியோகிராபிக்
டிஸ்கவரி
அனிமல் ப்ளானட்

said...

வாழ்த்துகள் சஞ்சய்

said...

நன்றி லக்‌ஷ்மி அக்கா.. ;)

நன்றி வித்யா மம்மி.. :)

நன்றி தாரணி அக்கா.. ;)

லவ்டேல் மேடி, நான் மெகா டிவி அல்லது வசந்த் டிவியை சொல்லவே இல்லையே.. :))
நன்றி நண்பா.. :)

நன்றி ஆயில்ஸ்.. :)

நன்றி கேபிள் சங்கர்ஜி. :)

said...

//மாம்ஸ் ஒத்துக்கறோம் நீங்க பெரிய ஆளுதான் அதுக்காக இப்படி பதிவெல்லாம் போட்டு .......


நெம்ப ஓவர்/

ஹிஹி.. மாம்ஸ்.. புரியுதோ இல்லயோ.. பாக்றது என்னவோ இது தான்.. ரிப்போர்ட்டர்ஸ் எல்லாம் கொள்ளை அழகு மாம்ஸ்.. :))

நன்றி ஜி3.. :)

நன்றி கிரி.. எல்லாம் உங்க ஆசிகள். :)

நன்றி சென்ஷி :)

said...

நன்றி பூர்ணி.. :)

நன்றி சின்ன அம்மனி அக்கா.. :)

//மக்கள் டீவி...சாரி..மக்கள் தொலைக்காட்சி பத்தி ஒண்ணும் சொல்லல.அங்க கூட தமிழ்தான்.//

இந்த டிவியின் பல நிகழ்ச்சிகள் எனக்குப் பிடிக்கும் ரவிஷங்கர்ஜி.. :)

//நான் ஒரு நாள் தானியில் கிளம்பி
வெளுப்பகம் போய்விட்டு வரும் வழியில் சரக்குந்தும் மகிழ்ந்தும் மோதி விபத்து.வரும் போது ஒரு நெகிழி,ஒரு நிலைவெள்ளி குடுவை வாங்கினேன்.
மறக்காமல் என்னுடைய குடும்ப அட்டையை எட்டு ஒளிப்படி எடுத்தேன்.//

இப்போ எதுக்கு தெலுங்குல திட்றிங்க. :))

நன்றி அருணாக்கா.. ;)

நன்றி வால் :)
//நேசனல் ஜியோகிராபிக்
டிஸ்கவரி
அனிமல் ப்ளானட்//
இதுக்கு நான் கண்ணாடி முன்னாடி நிக்கலாமே.. எதுக்கு டிவி எல்லாம்? :))

நன்றி மணிகண்டன். :)

Tamiler This Week