இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Tuesday, 11 November 2008

டேய்... பர்ஃபார்மன்ஸ் பண்ண உடுங்கடா...

ஈரோடு முதல் ஹோசூர் வரையிலான 6 மாவட்டங்களில் எங்கள் துறையில் அனைவருக்கும் நன்கு தெரிந்த நிறுவனமாக இருந்தாலும் கோவையைப் பொறுத்த வரையில் நாங்கள் அப்போது புதிது. அந்த மாவட்டங்களில் ராஜா என்பதை விட மகராஜா போல் தான் எங்களுக்கு மரியாதை இருக்கும். எந்த நிறுவனமாக இருந்தாலும் விநியோகம் செய்ய எங்களை அணுகிவிட்டு தான் பிறரை பார்ப்பார்கள். அந்த மிதப்பிலேயே இருந்த எங்களை ஒரு நிறுவனம் கோவையில் வியாபாரம் ஆரம்பிக்க வற்புறுத்தியது. அவர்கள் நச்சரிப்பாலும் ஈரோட்டு சாம்ராஜ்ய மிதப்பிலும் எதோ ஒரு தைரியத்தில் ஒரு இளிச்சவாயனின் தலைமையில் கோவையிலும் கால் பதித்தோம்..

அந்த இளிச்சவாயன் அதற்கு முன் இரு முறை மட்டுமே கோவை வந்திருக்கிறான். ஒரு முறை ஒரு நிறுவன முகவர்கள் சந்திப்பிற்கும் மற்றொரு முறை ஒருவர் திருமணத்திற்கும் மட்டுமே. ஆகவே அவனுக்கு கோவையில் அப்போது கிழக்கு மேற்கு கூட தெரியாது. ஆனாலும் ஒரு மாதம் பெரும் அலைச்சலுக்கு பின் அலுவலகமும் , சேமிப்புக் கிடங்கும் முடிவு செய்து குடி புகுந்தாயிற்று. ( அந்த நாட்கள் அனுபவத்தை 10 பதிவா போடலாம்..:) )

அடுத்து தான் ஆரம்பிச்சது சீனே.. :)

முதல் வேலையாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் டீலர்களை வளைச்சிப் போடனும். நாம் இங்கு புதிது என்பதாலும் நாங்கள் ஒப்பந்தம் போட்ட நிறுவனத் தயாரிப்புகளை அதற்கு முன் கோவை ஏரியாவில் விநியோகித்தவர்கள் சரியாக செயல்படாததாலும் எங்களுக்கு கடும் சவால்கள் காத்திருந்தது. சிறு மற்றும் நடுத்தர டீலர்கள் எங்கள் ஈரோட்டு புராணத்தை கேட்டதும் கொஞ்சம் பவ்யமாக நடந்துக் கொள்வார்கள். ஆனால் இந்த பெரிய டீலர்கள் இருக்கிறார்களே முதல் ஒரு மாதம் என்னை சாவடிச்சிட்டாங்க..

அந்த கால்ங்களில் பெரும்பாலான டீலர்களிடம் நான் பட்ட பாடு...

ஒவ்வொரு முறையும் வழக்கமான சம்பிரதாயமான பேச்சுகளுக்கு பின் ஆரம்பிப்பேன்..

[பச்ச கலரு - நானு
சேப்பு கலரு - டீலரு
கருப்பு கலரு - கடை ஸ்டாப் அல்லது கஸ்டமர்]

“இந்த மாடல் மத்த ப்ராண்ட் விட ரொம்பவே பெட்டர் சார்”

ம்ம்ம்... வேர்ல்பூல்ல இதே ரேஞ்ச்ல ஒன்னு இருக்கு

ஆமாம் சார்.. ஆனா அதுல ஹெல்த்கார்ட் இருக்காது.. அதும் இல்லாம

ஏம்ப்பா அந்த கஸ்டமர்க்கு ஓனிடால ப்ளாக் 200 காட்டு

ம்ம்.. சொல்லுங்க..”

அதை விட இதுல...”

“சார் அந்த கஸ்டமர் எல்ஜில சவுண்ட்மாஸ்டர் கேக்கறார்.. இப்போ அது நம்மகிட்ட ஸ்டாக் இல்லை”

டீலர் நம்ம ப்ராடக்ட் கேட்டலாக் எடுத்து பார்ப்பார்..

சார் அதுல லெஃப்ட் சைட்ல இருக்கு பாருங்க...

ப்ரகாஷ் சவுண்ட்மாஸ்டர் ஸ்டாக் இருக்கா.. அர்ஜெண்டா 5 செட் வேணுமே” - இது போன்ல..
பேசி முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணனும்...
பேசி முடிச்சிட்டார்..

ஆக்சுவலா இந்த மாடல் தான் இருக்கிறதுலயே ஃபாஸ்ட் மூ....

ஏம்ப்பா.. சவுண்ட் மாஸ்டர் நாளைக்குத் தான் வரும்.. சாம்சங்க்ல கே44 காட்டு..”

ஃபாஸ்ட் மூவிங் சார்..”

சார்.. உங்களுக்கு சவுண்ட் நல்லா வேணும்னா சான்சுய்ல ஹார்ட்ராக் பாருங்க.. அருமையா இருக்கும்.. வெலையும் கம்மி தான்..” ஒரு கஸ்டமரிடம்..

ம்ம்ம்.. என்ன சொன்னிங்க சஞ்சய்..?

வாஷிங் மெஷின்ல நம்மள்து ஃபைபர் ட்ரம் சார்.. மத்த ப்ராண்ட் மாதிரி ஸ்டீல்.....”

ஏம்ப்பா .. ஏன் அந்த ஃப்ரிட்ஜ் பார்த்த கஸ்டமர் வெளிய போறாங்க..?

“ சார் அவங்க வாங்கற மாதிரி தெரியலைங்க.. சும்மா வெலை விசாரிச்சிட்டு இருக்காங்க..”

அப்புறம் சஞ்சய்.. உங்க ப்ராண்ட்டுக்கு அவ்வளவா விளம்பரம் இல்லையே.. நாம் என்ன தான் கஸ்டமருக்கு எதுத்து சொன்னாலும் அவங்க கேக்கறது.........”

“ சொல்லுங்க.. என்ன வேணும்...”

“ ஏனுங்க.. போன வாரம் டிவி எடுத்துட்டு போனோம்.. புள்ளி புள்ளியா வருதுங்களே...”

கேபிள் பிரச்சனையா இருக்கும்.. பாருங்க..”

“ இல்லீங்க .. நாங்க டிஷ் ஆண்டனா போட்டிருக்கோம்..”

ஏம்பா குமாரு.. இவர் கிட்ட அட்ரஸ் வாங்கி வச்சிக்கோ.. அந்த கம்பனி சர்வீஸ் செண்டருக்கு போன் பண்ணி கம்ப்ளைண்ட் புக் பண்ணிடு..”

சர்விஸ் செண்டர்ல இருந்து ஆளுங்க வருவாங்க.. போய்ட்டு வாங்க...”

“ இவங்க டிஷ் சரியா ஃபிட் பண்ணி இருக்க மாட்டாங்க.. இருந்தாலும் டிவி தான் பிரச்சனைன்னு வந்துடுவாங்க.. என்ன பன்றது பாருங்க

கஸ்டமர் சாதாரனமா விட்டாலும் பக்கத்து வீட்டுக்காரன் வந்து பயமுறுத்துவான் சார்..

அது தான் இப்போ பெரிய பிரச்ச.....

“ ஏனுங்க.. அந்த கருப்புகலர் டிவி பாத்தேனுங்க.. வெல ரொம்ப ஜாஸ்தியா இருக்குதுங்களே.. மத்த கடைல எல்லாம் கம்மியா சொல்றாங்க...”- எனக்கு இடதோ வலதோ ஒருத்தன்..

அவரை சமாளித்து அனுப்பறார்..
இந்த மாடல்ல மட்டும் 5 செட் அனுப்பறேன் சார்.. அது எப்படி போகுதுனு பாருங்க.. அப்புறம் இன்னும் ஜாஸ்தி பண்ணலாம்.. 2 செட் போச்சின்னாலே உங்களுக்கும் ஒரு கான்ஃபிடண்ட் வரு........

ஹலோ.... ஆங்.. சொல்லுங்க சார்.. இல்லைங்க இப்போ எதும் வேணாம்.. இல்லைங்க.. சேல்ஸ் ரொம்ப டல்லா இருக்கு..
பேசி முடிச்சிட்டார்...

சொல்லுங்க சார். ஆர்டர் கன்ஃபார்ம் பண்ணிங்கன்னா நானும் அப்டியே கெலம்பிடுவேன்.. சார் வேற ரொம்ப பிசியா இருக்.....

“சார்.. சர்வீஸ் செண்டர்ல இருந்து கால் பண்ணாங்க.. அந்த வாப்ப்பாறை கஸ்டமர்து பிக்சர் ட்யூப் கம்ப்ளைண்டாம்... வாரண்டிமுடிஞ்சி போச்சாம்.. ஃப்ரியா மாத்த முடியாதுன்னு சொல்றாங்க....”

அந்த 5 மட்டும் அனுப்ப.....

“ஏனுங்க.. ஒரு மாசம் தான் ட்யூ கட்டலை.. அதுக்கே.......

............டேய்........ பர்ஃபார்மன்ஸ் பண்ண உடுங்கடா.......... :(

..... இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சி ஒரு மாசத்துல கிட்டத் தட்ட எல்லா டீலர்கிட்டயும் ஆர்டர் எடுத்து எல்லாக் கடைகள்லயும் இடம் புடிச்சாச்சி.. அதை பார்த்த சாம்சங் நிறுவனம் அப்போ இருந்த டிஸ்ட்ரிப்யூட்டர் கிட்ட இருந்து பாதி மாடல்ஸ் பிரிச்சி எங்களுக்கு குடுத்துட்டாங்க... :) ..... இப்போல்லாம் கால் மேல கால் போட்டு தானே டீலர்ஸ் கிட்ட பேசுவோம்.. அதும் சில லேட் பேமண்ட் டீலர்ஸ் கிட்ட எல்லாம் ஒரே தாதா எஃபக்ட் தான்...:))

32 Comments:

said...

சுவராசியமா எழுதியிருக்கீங்க

said...

அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...

said...

[பச்ச கலரு - நானு
சேப்பு கலரு - டீலரு
கருப்பு கலரு - கடை ஸ்டாப் அல்லது கஸ்டமர்]
இது நல்லா இருக்கப்பூ ,நானும் இதே மாதிரி
பச்சை,சேப்பு ,கருப்புன்னு இனிமே பின்னி பெடலெடுக்க வேண்டியதுதான்:)))

“இந்த மாடல் மத்த ப்ராண்ட் விட ரொம்பவே பெட்டர் சார்”

said...

//Blogger நந்து f/o நிலா said...

அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...//

LOL :))))

Motha posta oru commenta apaes pannitaar nandhu :))

said...

//அதும் சில லேட் பேமண்ட் டீலர்ஸ் கிட்ட எல்லாம் ஒரே தாதா எஃபக்ட் தான்...:))//

முற்பகல் செய்யின்
பிற்பகல் தாமே விளையும்

ஹீ ஹீ ஹீ

said...

மார்கெட்டிங் துறையில் இருந்த/இருக்கிற எல்லோருக்கும் இதைப் போல அனபவம் இருக்கும்.

நல்ல நகைச்சுவை உணர்வோடு எழுதியிருக்கிங்க

said...

நன்றி முரளி. :)

-------
நந்து அண்ணாச்சி.. உங்கள மாதிரி நல்லவங்களுக்காக தான் அந்த ஆப்ஷனை திறந்து விடல.. :)

said...

// நந்து f/o நிலா said...

அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...//

இதுக்கு நான் சொல்ல நினைப்பதை நம்ம குசும்பன் மாமா வந்து சொல்லுவாக :))

said...

// விலெகா said...

[பச்ச கலரு - நானு
சேப்பு கலரு - டீலரு
கருப்பு கலரு - கடை ஸ்டாப் அல்லது கஸ்டமர்]
இது நல்லா இருக்கப்பூ ,நானும் இதே மாதிரி
பச்சை,சேப்பு ,கருப்புன்னு இனிமே பின்னி பெடலெடுக்க வேண்டியதுதான்:)))//

ஹிஹி.. வாழ்த்துக்கள்.. :)

//“இந்த மாடல் மத்த ப்ராண்ட் விட ரொம்பவே பெட்டர் சார்”//
விலெகா இன்னா சொல்ல வரீங்கோ :(

said...

// G3 said...

//Blogger நந்து f/o நிலா said...

அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...//

LOL :))))

Motha posta oru commenta apaes pannitaar nandhu :))//

அடுத்த சாபம் விடனுமா? :)

said...

//வால்பையன் said...

//அதும் சில லேட் பேமண்ட் டீலர்ஸ் கிட்ட எல்லாம் ஒரே தாதா எஃபக்ட் தான்...:))//

முற்பகல் செய்யின்
பிற்பகல் தாமே விளையும்

ஹீ ஹீ ஹீ//

இதுக்கு இன்னாமே அர்த்தம்? :(

said...

// வால்பையன் said...

மார்கெட்டிங் துறையில் இருந்த/இருக்கிற எல்லோருக்கும் இதைப் போல அனபவம் இருக்கும்.

நல்ல நகைச்சுவை உணர்வோடு எழுதியிருக்கிங்க//

நன்றி சார்வால் .. :)

said...

//நந்து f/o நிலா said...
அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...//

உங்க ஆதங்கம் புரியுது மிஸ்டர் தொழிலதிபர் நந்து, அந்த குட்டி தொழிலதிபர் பாவம் விட்டுவிடுங்க:))

said...

நான் இன்னா சொல்றேனா சூப்பரப்பு:)))

said...

//
“கஸ்டமர் சாதாரனமா விட்டாலும் பக்கத்து வீட்டுக்காரன் வந்து பயமுறுத்துவான் சார்..”
//

ஹி ஹி ஹி நல்லாயிருக்கு :)

இவ்வளவு தடைகளை மீறியும் கிடைத்த உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் !!!

said...

// நந்து f/o நிலா said...

அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...//

டபுள் ரிப்பீட்டேய்........

(எப்பவாச்சும் கத்தினாலும் சிங்கம் சிங்கம்தான்யா. சூப்பர் கமெண்ட் நந்து!)

Anonymous said...

//அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...//
ஆசை ஆசையாக்கேக்கறார் நிலா அப்பா , அவருக்கு மட்டும் பெர்பார்மன்ஸ் காட்ட உடாட்டி எப்படிங்க சஞ்சய்.

said...

இந்த பதிவுல இருந்து தெரியற செய்தி என்னன்னா சஞ்சய் ஆரம்பத்துல நல்ல பையன் மாதிரிதான் இருப்பார். கொஞ்ச நாள் ஆனவுடன் தாதா மாதிரி ஆகிடுவார்.

said...

இந்த பதிவுல இருந்து தெரியற செய்தி என்னன்னா சஞ்சய் ஆரம்பத்துல நல்ல பையன் மாதிரிதான் இருப்பார். கொஞ்ச நாள் ஆனவுடன் தாதா மாதிரி ஆகிடுவார்.

said...

தாரணி பிரியா said...
இந்த பதிவுல இருந்து தெரியற செய்தி என்னன்னா சஞ்சய் ஆரம்பத்துல நல்ல பையன் மாதிரிதான் இருப்பார். கொஞ்ச நாள் ஆனவுடன் தாதா மாதிரி ஆகிடுவார்.//

உங்க கீ போர்டில் “த்” சரியாகவேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்

தாத்தா மாதிரி என்று வரனும்:))

said...

//நந்து f/o நிலா said...
அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...//

சஞ்சயின் பர்மான்ஸ் பற்றி வெளியே சொல்லவும் முடியாம உள்ளே வெச்சுக்கவும் முடியாம தவிக்கும் உங்க மனநிலைய புரிஞ்சுக்க முடியுது நந்து.

100 டீவி ஒரே மாசத்தில் வித்தாராமே!!!

ஆம் அதுக்கு முன்னாடி 500 டீவி வித்துக்கிட்டு இருந்தது இப்படிதானே நீங்க சொல்ல நினைக்கிறீங்க:))

said...

//குசும்பன் said...

//நந்து f/o நிலா said...
அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...//

உங்க ஆதங்கம் புரியுது மிஸ்டர் தொழிலதிபர் நந்து, அந்த குட்டி தொழிலதிபர் பாவம் விட்டுவிடுங்க:))//

ஹலோ.. பெரிசு டபுள் மீனிங்ல பேசுது.. அதுக்கு இவரு வக்காலத்து வாங்கறார் பாரு... :))

said...

//விலெகா said...

நான் இன்னா சொல்றேனா சூப்பரப்பு:)))//

நன்றி விலெகா... :))

said...

// Podiponnu - பொடிப் பொண்ணு said...

//
“கஸ்டமர் சாதாரனமா விட்டாலும் பக்கத்து வீட்டுக்காரன் வந்து பயமுறுத்துவான் சார்..”
//

ஹி ஹி ஹி நல்லாயிருக்கு :)

இவ்வளவு தடைகளை மீறியும் கிடைத்த உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் !!!//
நன்றிங்கோ... :))

said...

// பரிசல்காரன் said...

// நந்து f/o நிலா said...

அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...//

டபுள் ரிப்பீட்டேய்........

(எப்பவாச்சும் கத்தினாலும் சிங்கம் சிங்கம்தான்யா. சூப்பர் கமெண்ட் நந்து!)//

ஊர்ல வந்து போன் பண்ணா எடுக்கறதில்ல.. இதுக்கு மட்டும் வந்துடுங்க... :(

said...

//சின்ன அம்மிணி said...

//அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...//
ஆசை ஆசையாக்கேக்கறார் நிலா அப்பா , அவருக்கு மட்டும் பெர்பார்மன்ஸ் காட்ட உடாட்டி எப்படிங்க சஞ்சய்.//

அக்கா அவரு அவ்ளோ நல்லவர் இல்ல.. சப்போர்ட் பண்ணாதிங்க.. :))

said...

//தாரணி பிரியா said...

இந்த பதிவுல இருந்து தெரியற செய்தி என்னன்னா சஞ்சய் ஆரம்பத்துல நல்ல பையன் மாதிரிதான் இருப்பார். கொஞ்ச நாள் ஆனவுடன் தாதா மாதிரி ஆகிடுவார்.//

டோட்டல் டேமேஜ்... :(

said...

//குசும்பன் said...

தாரணி பிரியா said...
இந்த பதிவுல இருந்து தெரியற செய்தி என்னன்னா சஞ்சய் ஆரம்பத்துல நல்ல பையன் மாதிரிதான் இருப்பார். கொஞ்ச நாள் ஆனவுடன் தாதா மாதிரி ஆகிடுவார்.//

உங்க கீ போர்டில் “த்” சரியாகவேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்

தாத்தா மாதிரி என்று வரனும்:))//

பதில் மரியாதை செய்யப் படும் குசும்பா.. :)

said...

//குசும்பன் said...

//நந்து f/o நிலா said...
அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...//

சஞ்சயின் பர்மான்ஸ் பற்றி வெளியே சொல்லவும் முடியாம உள்ளே வெச்சுக்கவும் முடியாம தவிக்கும் உங்க மனநிலைய புரிஞ்சுக்க முடியுது நந்து.

100 டீவி ஒரே மாசத்தில் வித்தாராமே!!!

ஆம் அதுக்கு முன்னாடி 500 டீவி வித்துக்கிட்டு இருந்தது இப்படிதானே நீங்க சொல்ல நினைக்கிறீங்க:))//

ஹிஹி... கம்பனி சீக்ரெட் எல்லாம் வெளிய சொல்லக் கூடாது.. :))

said...

:):):)

said...

/
நந்து f/o நிலா said...

அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...
/

:)))))))))))))))))))))))

said...

//நந்து f/o நிலா said...
அதர் ஆப்சன திறந்து விட்டு என்னோட பெர்ஃபார்மன்ச காட்ட உடுங்கடா...//

உங்க ஆதங்கம் புரியுது மிஸ்டர் தொழிலதிபர் நந்து, அந்த குட்டி தொழிலதிபர் பாவம் விட்டுவிடுங்க:))

Tamiler This Week