இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday 7 November, 2008

யாரிந்த பிரபலப் பதிவர்?

சில ஆண்டுகளுக்கு முன்....
கொச்சினில் ஒரு நட்சத்திர விடுதியின் அறைகள் சிலருக்கு பிரதியேகமாக புக் செய்யப்பட்டது. அதில் சில தொழிலதிபர்களும் ஒரு நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகளும் பல முகவர்களும் கூடி கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.இரவு விருந்து ஒரு கூரை வேய்ந்த நாலாபுறமும் திறந்த ஒரு பெரிய மீட்டிங்ஹாலில். அதற்கான எற்பாடுகள் கன ஜோராக நடைபெறுகிறது.பலவித வகையான "பானங்கள்" தயார் நிலையில்....

விருந்து ஆரம்பிக்கிறது....

வோட்கா குடிக்க விரும்புகிறார். வழக்கம் போல சைட் டிஷ்க்காக சில பழ வகைகளையும் காரவகைகளையும் மாமிசத் துண்டுகளையும் அருகில் வைத்துக் கொள்கிறார். அப்போது அங்கிருந்த அப்போது அந்த தொழிலதிபர்களில் ஒருவர் கூரைவேய்ந்த ஹாலும் வெளியில் ச்சோவென பெய்யும் மழையும் கொடுத்த அற்புத உணர்வால்ஒருவர் புது வித சைட் டிஷ்ஷை அறிமுகப் படுத்துகிறார்.

ஹிஹி.. எலுமிச்சைப் பழம்தான் அது. எலுமிச்சை பழத்தை அறுத்து அதை பிழிந்து அதன் சாற்றை கையில் பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் மணிக்கட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் விட்டுக் கொண்டு அதில் தூள் உப்பை சிறிது தூவிக்கொள்ள வெண்டும். அதை நக்கியவாறே வோட்காவை குடிக்க வேண்டும்.(டெக்கீலா சைட் டிஷ்ஷாம் அது. போக்கிரி படத்துல "என் செல்ல பேரு ஆப்பிள்" பாட்டுல ப்ரகாஷ் ராஜ் செய்வாரே அப்படி) அந்த குறிப்பிட்ட தொழிலதிபர் மெதுவாக வோட்காவை சுவைக்கிறார் வேறு எந்த சைட் டிஷ்களையும் அலட்சியப்படுத்தி தன் மணிக்கட்டில் உள்ள எலுமிச்சைசாறு+உப்பை மட்டும் நக்கியவாறே. அந்த சைட் டிஷ் போதாதென்று ஒரு மூத்த உயர் அதிகாரி வெளிநாட்டில் தனக்கு ஒரு ரஷ்யப் பெண்ணுடன் எற்பட்ட குஜால் அனுபவத்தை உணர்வுப் பூர்வமாக முகபாவணைகளுடன் விவரிக்கிறார். அந்த தொழிலதிபருக்கு ரெட்டை சைட் டிஷ் தந்த உற்சாக மிகுதியால் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அப்போது ஒரு ஃபுல் பாட்டில் வோட்காவைத் தன்னந்தனியாக காலி செய்கிறார். விருந்து களை கட்டுகிறது. வெளியில் பெய்யும் மழையை போலவே..

இதோடு நிறுத்தி இருந்தால் பரவா இல்லை. பிறகுதான் கச்சேரியே ஆரம்பிக்கிறது. அந்த தொழிலதிபருக்குள் நம் வால்பையனை விட அதிக ஸ்ப்லிட் பர்சனாலிட்டி இருக்கிறது என்பதை நிரூபித்த நாள் அது.

திடீரென்று கதா காலட்சேபம் நடத்தினார். கொஞ்ச நேரத்தில் மெனேஜ்மெண்ட் குருவாக மாறி பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.அதைத் தொடர்ந்து மைக் மேடை எதுவும் இல்லாமலே பெரும் அரசியல் சொற்பொழிவு ஆத்தினார்.(நம்ம வெண்பூ காப்பி ஆத்துவது போல) இன்னும் பலவகையான உரைகளை நிகழ்த்தினார்.. உரைகளை நிகழ்த்தினார் என்பதைவிட பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்று தான் சொல்ல வேண்டும்.
அங்கே குழுமி இருந்த முகவர்கள் அனைவரும் வாயப் பிளந்துக் கொண்டு இவர் உரைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானோர் தன்னிலை மறந்திருந்தனர் என்பதால் மறுநாள் அவர்களுக்கு எல்லாம் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக நினைவிருக்க வாய்ப்பில்லை.அந்த உரையால் சிலருக்கு அதுவரை ஏற்றிய அத்தனையும் இறங்கிபோனதும் நடந்தது.அவர்களைப் பற்றி நமக்கு கவலையும் இல்லை.

கவனிக்க : அங்கே சிலர் உற்சாகபானம் எதுவும் ஏற்றிக்கொள்ளாமல் கொஞ்சம் ஆர்வத்துடனும் கொஞ்சம் "கடுப்புடனும்" கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

சுற்றுப்பயணம் சுபமாக முடிந்து அனைவரும் வீடுவந்து சேர்ந்தார்கள்.
-------------^^^^----------------^^^^----------------^^^^---------

கிட்டத் தட்ட ஓராண்டு உருண்டோடி அல்லது தவழ்ந்தோடி விட்டது. அந்த தொழிலதிபருக்கு தீவிரமாக வீட்டில் பெண் பார்ப்பதாக தெரியவில்லை .. ஆதலால் தனக்கு தானே திட்டப் படி தானே பெண் பார்க்க முடிவு செய்து அவரின் ஜாதகம் நாலாப்புறங்களிலும் சிதறி ஓடுகிறது. ஒரு " ஆஸ்தான"தரக ரிடமிருந்து அழைப்பு வருகிறது. அவரிடம் ஜாதகம் மட்டுமே இருந்தது. போட்டோ தரவில்லை. அதனால் அந்த ஆஸ்து "ஒருத்தர் இங்க சிக்கிட்டார்... உடனே போட்டோ கொண்டுவாங்க.. அப்டியே ஒரே அமுக்கா அமுக்கிடலாம்" என்று சொல்கிறார்..

உடனே ஒரு பொடியன் அந்த தொழிலதிபரின் போட்டோவை எடுத்துக் கொண்டு அந்த ஆஸ்துவின் அலுவலகம் செல்கிறான். அப்போது அங்கே ஆஸ்துவும் அமுக்க வேண்டிய பார்ட்டியும் அமர்ந்து எதோ பேசிகொண்டிருந்தார்கள். அந்தப் பொடியன் தொழில்ஸின் போட்டோவை ஆஸ்துவிடம் கொடுக்கிறான். அதை ஆஸ்து அந்த பார்ட்டியிடம் தருகிறார். பிறகு "தொழில்பக்தி"யாலும் உற்சாக மிகுதியாலும் 2 தரப்பிலும் நல்லப் பெயர் பெறவும் அவர்கள் மூலம் மேலும் பல கஸ்டமர்களை அள்ளவும் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாமல் அள்ளிவிடுகிறார்...

புகைப் படத்தை பார்த்த அந்த பார்ட்டி, இந்தப் பொடியனைப் பார்த்து லேசான புன்னகை பூக்கிறார். சரி இதெல்லாம் நாகரிகம் தானே என்று அந்தப் பொடியனும் பதிலுக்கு லைட்டா சிரிச்சி வைக்கிறான். திடீரென்று மண்டைக்குள் மங்கலாக பல்ப் எரிய ஆரம்பிக்கிறது.. இவரை எங்கயோ பார்த்திருப்பது போல் இந்த பொடியனுக்குத் தோன்றுகிறது. ஆனால் எங்கு என்றுதான் தெரியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் கடைசி வரை அந்த பல்பு மங்கலாகவே எரிந்துத் தொலைத்தது... சரி இந்த ஊரில் தான குப்பைக் கொட்டிட்டு இருக்கிறோம். எங்காவது பார்த்திருக்கலாம் என்று பொடியன் லேசில் அல்லது லூசில் விட்டுவிடுகிறான்.

நவ் ஓவர் டூ ஆஸ்து....
" மாப்ள தங்கமானவருங்க... பெரிய பெரிய பிச்னஸ் எலலாம் செய்றாங்க.. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை.. நல்ல குடும்பம்... ரொம்ப அமைதியான சுபாவம்... சின்ன வயசுல இருந்து நமக்கு நல்லா தெரிஞ்சவருங்க ( சொனனதுலையே அண்டப் புளுகு ஆகாசப் புளுகு இது தான் ).. இங்க தான் _____ ரோட்ல ஆபிஸ்... சூதுவாது தெரியாத நல்ல பையனுங்க... செட்டு சேர்ந்துட்டு யார் கூடவும் சுத்தமாட்டாப்ள... தொழில், குடும்பம்னு ரொம்ப நல்ல டைப்பு.. பொறுப்பான பையனுங்க... இந்த மாதிரி எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத பையனை பாக்கறது இந்த காலத்துல கஷ்டம் இல்லீங்களா"
இதே ரேஞ்சில அள்ளிக் கொட்டிட்டு இருந்ததால அதுக்கு மெல சிரிப்பை அடக்க முடியாத அந்த பொடியன், நான் கெள்ம்புரேனுங்க என்று சொல்லிவிட்டு ஜூட் விடுகிறான்... அந்த பார்ட்டி கடைசி வரை ஆஸ்துவில் அள்ளிக் கொட்டல்களுகெல்லாம் முகத்தில் எந்த மாற்றத்தையும் காண்பிக்கவில்லை... சரி எல்லாவற்றையும் உன்னிப்பா கேக்கறார் போல.. அல்லது மாப்பிள்ளை படத்தை பார்த்து தன் அக்கா மகளுக்கு சரியான வரன் என்று நினைத்து அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதி காக்கிறார் என பொடியன் நினைத்துவிட்டான்.

அலுவலகம் வந்து அந்த தொழிலதிபர் அண்ட் கோவிடம் நடந்தவற்றை எல்லாம் சொல்லி சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறான். அப்போது இன்னொரு சக தொழிலதிபர் உள்ளே நுழைகிறார். மறுபடியும் முதலிலிருந்து எல்லாவற்றையும் கேட்டு ரசித்த அவர் அந்த பார்ட்டியின் விவரத்தை கேட்கிறார். அந்தப் பொடியனும் தொழில்ஸ் அண்ட் கோவும் பார்ட்டியைப் பற்றி சொல்கிறார்கள்.

அட இவரு நம்ம ____ டயர் கம்பனி ஓனரு.... _____ மாமா கூட(இவர் ஒரு டீலர்) கொச்சின் வந்தாரில்ல.. அட நீங்க கூட ஓவர் அலும்பு பண்ணிங்களே மாமா.. உங்களுக்கு டெக்கீலா டெக்னிக் சைட் டிஷ் சொல்லி கொடுத்தாரே.வோட்காவுக்கு லெமன்காடி+சோடாதான் கரெக்ட் லிம்கா வேனாம்ன்னு சொன்னாரே அவர் தான் இவர்..

சிலர் சாவை உணர்ந்ததை பத்தி எல்லாம் சொல்லி இருப்பாங்க.. ஆனா பேயறைஞ்ச மாதிரினு சொல்றதை யாராவது உணர்ந்திருக்கிங்களா.. அன்னைக்கு அந்த பொடியன் அதை பார்த்தான்.. :))

யாருன்னு கேள்வி பட்ட தொழில்ஸ்கே பேயறஞ்ச மாதிரி ஆச்சின்னா.. அள்ளி விட்டுட்டு இருந்த அந்த ஆஸ்துவின் நிலைமை? :(

எதோ அந்த ஆஸ்த்துக்கு அந்த பார்ட்டியால படு பயங்கர அடி உதை விழுந்திருக்கும் என்று தானே நினைக்கிறிங்க.. அதான் இல்ல.. இங்க தான் செம ட்விஸ்டே இருக்கு.. :))

அந்த பார்ட்டிக்கு அவங்க அக்கா குடும்பத்து மேல என்ன பகையோ என்ன கர்மமோ.. எத்தனை நாளா ரூம் போட்டு யோசிச்சாரோ அவங்களை பழிவாங்க.... இந்த மாப்பிள்ளை ஒகே என்று சொல்லிட்டார்.. :)) ஆனா பாருங்க.. முன்னால சூது ஜெயிச்சாலும் பின்னாலயே வந்து தர்மம் அதை வெல்லும்னு நம்ம குசும்பன் அவர் கூட நாலாவது வரைக்கும் படிச்ச திவ்யா பிரபந்தம் கிட்ட சொன்னா மாதிரி அந்த பொண்ணு வேற ஒரு நல்ல பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. :))

அப்பாலிக்கா வேற ஒரு அப்பாவி போட்டோவை மெனக்கெட்டு ஸ்கேன் பண்ணி இந்த தொழில்ஸ்க்கு அந்தப் பொடியன் மெயில் அனுப்பி , அந்த அப்பாவி வாழ்க்கை வீணாக காரணமா இருந்ததெல்லாம் ஒரு தனிப் பதிவா போட வெண்டிய சமாச்சாரம்.. :(

டிச்சிக்கி 1 : இவர் ஒரு பிரபல பதிவர்.. இவர் யார் என உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களும் இவரைப் பற்றி இது போல் ஒரு பதிவை போட்டு புண்ணியம் தேடிக்கொள்ள்லாம் ... :))
டிச்சிக்கி 2 : இந்த பிரபலப் பதிவரின் புகழை பரப்பும் அரியதொரு சேவையில் தங்களை அற்பணித்துக் கொள்ள விரும்புவர்கள் இங்கே முன் பதிவு செய்துக் கொள்ளவும்...

நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?

106 Comments:

said...

//
பதிவின் பின்னனி தெரியாமல் யாரும் உணர்ச்சிவசப் பட வேண்டாம் என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. :))
//

என்னா பிண்ணனி? அண்ணன் யாரு தெரியுமா? அவரை கிண்டலடிச்சி ஒரு பதிவா? இதுக்கு எதிரா என்ன பண்ணுறதுன்னு ஈரோடு கருத்து கந்தசாமி சங்கத்தினர் தலைவர் வால்பையன் தலைமையில் கூடி திங்கட்கிழமை விவாதிப்பார்கள் (சனி, ஞாயிறு கூடுனாலும் வேறெந்த பிரயோஜனமும் இருக்காதுன்றதால)..

பொருளை எடுத்துட்டு கிளப்புங்கடா ஆட்டோவை..

said...

தொழிலதிபரை என்னா நெனச்ச நீயி.. அவருகிட்ட பாம்பு இருக்குது தெரியுமா? யோவ் நான் அவரு ஃப்ளிக்கர்ல போட்ட பாம்பு படத்த சொன்னேன்...

said...

ஆமா அந்த தொழில்ஸ் தண்ணி மட்டும்தானா? வேற எதுவும் இல்லயா? (நான் தம் அடிக்கிறத கேட்டேன்.. நீ பாட்டுக்கு வேற எதுனா உளறி குதூகலமா இருக்குற குடும்பத்துல கும்மி அடிச்சிடாத)..

said...

//
அப்பாலிக்கா வேற ஒரு அப்பாவி போட்டோவை மெனக்கெட்டு ஸ்கேன் பண்ணி இந்த தொழில்ஸ்க்கு அந்தப் பொடியன் மெயில் அனுப்பி
//

நீதானா அது.. அந்த அப்பாவியோட குடும்பம் கொலைவெறியோட யாரையோ தேடிட்டு இருக்குறதா சொன்னாங்க.. அட்ரஸ் குடுத்துரட்டா..

said...

//
இரவு விருந்து ஒரு கூரை வேய்ந்த நாலாபுறமும் திறந்த ஒரு பெரிய மீட்டிங்ஹாலில்.
//

என்னாது மீட்டிங் ஹாலா? சுத்தம்.. அதுக்கு பேரு ஓலக்குடிச..

குடிசைக்கு கீழ உக்காந்து எலுமிச்சம்பழம் நக்கிட்டு கள்ளு குடிச்சதை இவ்ளோ டீசன்டா யாராவது போட முடியுமா?

said...

//
அதை நக்கியவாறே வோட்காவை குடிக்க வேண்டும்
//

வேணாம்டா வெண்பூ.. கன்ட்ரோல்.. மனசுல நெனக்கிறத எல்லாம் பின்னூட்டத்துல போடக்கூடாது... :)))

said...

//
அந்த சைட் டிஷ் போதாதென்று ஒரு மூத்த உயர் அதிகாரி வெளிநாட்டில் தனக்கு ஒரு ரஷ்யப் பெண்ணுடன் எற்பட்ட குஜால் அனுபவத்தை உணர்வுப் பூர்வமாக முகபாவணைகளுடன் விவரிக்கிறார்.
//

இதை விரிவாக சொல்லாத பொடியனுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கிறேன்..

said...

//
முதலும் கடைசியுமாக அப்போது ஒரு ஃபுல் பாட்டில் வோட்காவைத் தன்னந்தனியாக காலி செய்கிறார்.
//

அடப்பாவி.. இதுதான் மேட்டரா? உங்களுக்கு குடுக்காம அவரே குடிச்சிட்டாருன்றதுக்காக இப்படி ஒரு பதிவா? விடுங்க.. அவரு உங்களுக்கு நாளைக்கே ரெண்டு பாட்டில் வாங்கித்தருவாரு..

said...

//
அந்த தொழிலதிபருக்குள் நம் வால்பையனை விட அதிக ஸ்ப்லிட் பர்சனாலிட்டி இருக்கிறது என்பதை நிரூபித்த நாள் அது
//

ஆஹா.. ஆஹா.. வால்பையனை மிஞ்சுற ஒருத்தர் அவர் ஊர்ல இருந்தே.. கேட்கவே காதுக்கு குளு குளுன்னு இருக்கு.. ::)

said...

//
திடீரென்று கதா காலட்சேபம் நடத்தினார். கொஞ்ச நேரத்தில் மெனேஜ்மெண்ட் குருவாக மாறி பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.
//

அவரு பேச ஆரம்பிச்சா வேற நிறுத்தவே மாட்டாரே... :)))))

said...

//
பெரும் அரசியல் சொற்பொழிவு ஆத்தினார்.(நம்ம வெண்பூ காப்பி ஆத்துவது போல)
//

அதான பாத்தேன்.. எங்கடா இன்னும் சொல்லலியேன்னு.. ஏம்பா அதுதான் எலுமிச்சம்பழம் + உப்பு இருக்குதுல்ல, நான் வேற எதுக்கு ஊறுகாயா???? :)))

said...

//
கவனிக்க : அங்கே சிலர் உற்சாகபானம் எதுவும் ஏற்றிக்கொள்ளாமல் கொஞ்சம் ஆர்வத்துடனும் கொஞ்சம் "கடுப்புடனும்" கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
//

ஆமாம்பா இந்த பதிவு எழுதுனவரு குடிக்கல. ரொம்ப நல்லவருங்க‌, வல்லவருங்க‌.. அது மட்டுமில்லாம தங்கமானவருங்க... பெரிய பெரிய பிச்னஸ் எலலாம் செய்றாங்க.. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை.. நல்ல குடும்பம்... ரொம்ப அமைதியான சுபாவம்... சின்ன வயசுல இருந்து நமக்கு நல்லா தெரிஞ்சவருங்க .. இங்க தான் _____ ரோட்ல ஆபிஸ்... சூதுவாது தெரியாத நல்ல பையனுங்க... செட்டு சேர்ந்துட்டு யார் கூடவும் சுத்தமாட்டாப்ள... தொழில், குடும்பம்னு ரொம்ப நல்ல டைப்பு.. பொறுப்பான பையனுங்க... இந்த மாதிரி எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத பையனை பாக்கறது இந்த காலத்துல கஷ்டம் இல்லீங்களா?

என்னா சொல்றீங்க???

said...

//
அப்போது இன்னொரு சக தொழிலதிபர் உள்ளே நுழைகிறார்.
//

அடடடடா!!! நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்கலடா சாமி...

said...

//
அலுவலகம் வந்து அந்த தொழிலதிபர்
//

ரெண்டாவது வார்த்தையில முதல் எழுத்து "ந" இல்லை???

said...

//
சிலர் சாவை உணர்ந்ததை பத்தி எல்லாம் சொல்லி இருப்பாங்க.. ஆனா பேயறைஞ்ச மாதிரினு சொல்றதை யாராவது உணர்ந்திருக்கிங்களா.. அன்னைக்கு அந்த பொடியன் அதை பார்த்தான்..
//

ஏன் நீங்க அவரை அறைஞ்சிட்டீங்களா? :))))

said...

//
அந்த பார்ட்டிக்கு அவங்க அக்கா குடும்பத்து மேல என்ன பகையோ என்ன கர்மமோ.. எத்தனை நாளா ரூம் போட்டு யோசிச்சாரோ அவங்களை பழிவாங்க.... இந்த மாப்பிள்ளை ஒகே என்று சொல்லிட்டார்
//

கண்ணா!!! குடிக்கிறவங்க எல்லாம் கெட்டவங்களும் இல்லை (உம். தொழில்ஸ்) அதே மாதிரி குடிக்காதவங்க எல்லாம் நல்லவங்களும் இல்லை (உம். சத்தியமா நான் இல்லை)... :))))

said...

//
இவர் ஒரு பிரபல பதிவர்..
//

அப்பிடியா????

//
இவர் யார் என உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களும் இவரைப் பற்றி இது போல் ஒரு பதிவை போட்டு புண்ணியம் தேடிக்கொள்ள்லாம்
//

இது என்னாது வீட்டுக்கு லெட்டர் வருமே.. இந்த கடிதத்தை உடனே நகலெடுத்து 20 பேருக்கு அனுப்பினால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் அப்படின்னு.. அது மாதிரியா?

said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

அம்மா: அதை ஏண்டா கண்ணா கேக்குற? பொடியன்னு நெனச்சி கம்பேனி ரகசியத்த சொன்னா அவன் அத ஊருக்கே சொல்லிட்டான். அத நெனச்சிதான்...

said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

ம்ம்ம்.. உனக்கு மாப்பிள பாக்குறப்பவாவது நாமளே தேடி நல்ல பையனா புடிக்கணும்.. தெரிஞ்சவங்கன்னு யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது...

said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

அம்மா: நீ அழகுல என்னை மாதிரி இருக்குறது ஓகே.. அறிவுல அப்பா மாதிரி இருந்துட்டா என்னா பண்றதுன்னுதான்..

said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

அம்மா: நாலு நாள் ஊருல இருந்துட்டு இன்னிக்குதான் வீட்டுக்கு திரும்பி வர்றோம். உங்கப்பா சமையல் செய்யுறேன்னு சமையல்கட்டை என்னா வழி பண்ணியிருக்காறோன்னு நெனச்சேன்.. அதனாலதான்..

said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

அம்மா: உங்கப்பா அடுத்தவாரம் கொச்சின்ல ஏதோ கான்ஃப்ரஸ்க்கு போகணும் சொல்லிட்டு இருந்தாரு.. அதுதான்.

said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

அம்மா: நாம ஊருக்கு கிளம்புறதுக்கு முன்னால நம்ம வீட்டுக்கு கால் மூட்டை எலுமிச்சம்பழம் வந்து இறங்குனது, அத நெனச்சிதான்..

said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

அம்மா: அவரோட கதா காலட்சேபத்தால பாதிக்கப்பட்டது நான் மட்டும்தான்னு நெனச்சேன். இத்தனை பேரு இருக்காங்கன்னு நெனக்கிறப்ப வர்ற ஆனந்தக் கண்ணீர்டா அது..

said...

போதும்பா இன்னிக்கு... தனியா கும்முறதுக்கு போர் அடிக்குது.. வர்ட்டா?

said...

Me the 29th...

said...

///வெண்பூ said...

//
பதிவின் பின்னனி தெரியாமல் யாரும் உணர்ச்சிவசப் பட வேண்டாம் என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. :))
//

என்னா பிண்ணனி? அண்ணன் யாரு தெரியுமா? அவரை கிண்டலடிச்சி ஒரு பதிவா? இதுக்கு எதிரா என்ன பண்ணுறதுன்னு ஈரோடு கருத்து கந்தசாமி சங்கத்தினர் தலைவர் வால்பையன் தலைமையில் கூடி திங்கட்கிழமை விவாதிப்பார்கள் (சனி, ஞாயிறு கூடுனாலும் வேறெந்த பிரயோஜனமும் இருக்காதுன்றதால)..

பொருளை எடுத்துட்டு கிளப்புங்கடா ஆட்டோவை..///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

said...

///வெண்பூ said...

தொழிலதிபரை என்னா நெனச்ச நீயி.. அவருகிட்ட பாம்பு இருக்குது தெரியுமா? யோவ் நான் அவரு ஃப்ளிக்கர்ல போட்ட பாம்பு படத்த சொன்னேன்...///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டே

said...

ஆமா அந்த தொழில்ஸ் தண்ணி மட்டும்தானா? வேற எதுவும் இல்லயா? (நான் தம் அடிக்கிறத கேட்டேன்.. நீ பாட்டுக்கு வேற எதுனா உளறி குதூகலமா இருக்குற குடும்பத்துல கும்மி அடிச்சிடாத)..

said...

//
அப்பாலிக்கா வேற ஒரு அப்பாவி போட்டோவை மெனக்கெட்டு ஸ்கேன் பண்ணி இந்த தொழில்ஸ்க்கு அந்தப் பொடியன் மெயில் அனுப்பி
//

நீதானா அது.. அந்த அப்பாவியோட குடும்பம் கொலைவெறியோட யாரையோ தேடிட்டு இருக்குறதா சொன்னாங்க.. அட்ரஸ் குடுத்துரட்டா..

said...

வெண்பூ said...

//
இரவு விருந்து ஒரு கூரை வேய்ந்த நாலாபுறமும் திறந்த ஒரு பெரிய மீட்டிங்ஹாலில்.
//

என்னாது மீட்டிங் ஹாலா? சுத்தம்.. அதுக்கு பேரு ஓலக்குடிச..

குடிசைக்கு கீழ உக்காந்து எலுமிச்சம்பழம் நக்கிட்டு கள்ளு குடிச்சதை இவ்ளோ டீசன்டா யாராவது போட முடியுமா?

said...

//
அதை நக்கியவாறே வோட்காவை குடிக்க வேண்டும்
//

வேணாம்டா தமிழ்.. கன்ட்ரோல்.. மனசுல நெனக்கிறத எல்லாம் பின்னூட்டத்துல போடக்கூடாது... :)))

said...

கலக்கல் போட்டோ :))

போட்டோவுக்கு தயார் பண்ணுன பதிவா ??


(நான் யாரையும் பகைச்சிக்க தயார இல்லப்பா ஊரு பக்கம் வந்தா இட்லி பூரி தோசைன்னு தின்னுட்டு போகணும்!)

said...

///வெண்பூ said...

//
அப்போது இன்னொரு சக தொழிலதிபர் உள்ளே நுழைகிறார்.
//

அடடடடா!!! நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்கலடா சாமி...////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

அம்மா: அதை ஏண்டா கண்ணா கேக்குற? பொடியன்னு நெனச்சி கம்பேனி ரகசியத்த சொன்னா அவன் அத ஊருக்கே சொல்லிட்டான். அத நெனச்சிதான்...

said...

வெண்பூ said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

ம்ம்ம்.. உனக்கு மாப்பிள பாக்குறப்பவாவது நாமளே தேடி நல்ல பையனா புடிக்கணும்.. தெரிஞ்சவங்கன்னு யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது...

said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

அம்மா: நீ அழகுல என்னை மாதிரி இருக்குறது ஓகே.. அறிவுல அப்பா மாதிரி இருந்துட்டா என்னா பண்றதுன்னுதான்..

said...

வெண்பூ said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

அம்மா: நாலு நாள் ஊருல இருந்துட்டு இன்னிக்குதான் வீட்டுக்கு திரும்பி வர்றோம். உங்கப்பா சமையல் செய்யுறேன்னு சமையல்கட்டை என்னா வழி பண்ணியிருக்காறோன்னு நெனச்சேன்.. அதனாலதான்..

said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

அம்மா: உங்கப்பா அடுத்தவாரம் கொச்சின்ல ஏதோ கான்ஃப்ரஸ்க்கு போகணும் சொல்லிட்டு இருந்தாரு.. அதுதான்.

said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

அம்மா: நாம ஊருக்கு கிளம்புறதுக்கு முன்னால நம்ம வீட்டுக்கு கால் மூட்டை எலுமிச்சம்பழம் வந்து இறங்குனது, அத நெனச்சிதான்..

said...

வெண்பூ said...

//
நிலா : இதை படிச்சிட்டு நீ ஏம்மா அழற?
//

அம்மா: அவரோட கதா காலட்சேபத்தால பாதிக்கப்பட்டது நான் மட்டும்தான்னு நெனச்சேன். இத்தனை பேரு இருக்காங்கன்னு நெனக்கிறப்ப வர்ற ஆனந்தக் கண்ணீர்டா அது..

said...

///ஆயில்யன் said...
கலக்கல் போட்டோ :))
போட்டோவுக்கு தயார் பண்ணுன பதிவா ??
(நான் யாரையும் பகைச்சிக்க தயார இல்லப்பா ஊரு பக்கம் வந்தா இட்லி பூரி தோசைன்னு தின்னுட்டு போகணும்!)////

அண்ணே! இதை முதலிலேயே சொல்றது இல்லியா? நான் கவனிக்காம வெண்பூ மாதிரி கும்மிட்டனே? அப்ப எனக்கு இட்லி, பூரி எல்லாம் கிடைக்காதா ... அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

அண்ணன் பொடியன் சஞ்சய் வாழ்க!

said...

ஈரோடு பேனை போட்டோ எடுக்கும் போட்டாகிராபர் வாழ்க! வாழ்க!

said...

எங்க குட்டி பாப்பா நிலா வாழ்க! வாழ்க!

said...

எங்களுக்கு இட்லி, தோசை, பூரி எல்லாம் சுட்டுத்தரப் போகும் அண்ணி வாழ்க! வாழ்க! வாழ்க!

said...

மீ த 50!

said...

அனானி அதர் ஆப்சன் இல்லாத ப்ளாக்குகளில் கமெண்டுவதில்லை என்ற கொள்கை முடிவின் காரணமாக "போடா போய் புள்ளைங்கள படிக்க வைங்கடா" ன்னு மட்டும் சொல்லிகிறேன்.

(கையில் மாட்டாமயா போயிட போற)

said...

ஹிரோடு ஈரோவப் பத்தின
இந்த விசயத்தை கேள்விப்பட்டதேயில்லையே!
படிக்கும் போது சிரிப்பை அடக்கவே முடியல சஞ்சய்.

இன்னைக்கு என்ன அவருக்கு திருமணநாளா?

said...

"தொழிலதிபர்"

தலவர் கவுண்டமணி சொன்னதுதான் ஞாபகம் வருது,

கொய்யாக்கா விக்கறவன் கல்லமுட்டாய் விக்கறவன்லாம் தொழிலதிபர். நாட்ல இந்த தொழிலதிபர் தொல்ல தாங்கலடா சாமி.

said...

// கொய்யாக்கா விக்கறவன் கல்லமுட்டாய் விக்கறவன்லாம் தொழிலதிபர். நாட்ல இந்த தொழிலதிபர் தொல்ல தாங்கலடா சாமி.//

இத நாங்க சொல்லனும்.

said...

கருமத்த, எழவு இந்த டெம்பிளேட் ..ரே மாத்துய்யா.... :(

ஒரு வரிக்கூட படிக்கமுடியாமே கண்ணு வலிக்குது.. :(

said...

//வெண்பூ said...
This post has been removed by the author.
7 November, 2008 4:26 PM
வெண்பூ said...
This post has been removed by a blog administrator.
7 November, 2008 4:32 PM
பொடியன்-|-SanJai said...
This post has been removed by the author. //

பின்னூட்டம் போட்டு விளையாடலாம் ஆனா இது என்ன பின்னூட்டம் போட்டு டெலிட் செஞ்சு விளாயாட்டு?
சின்னபுள்ள தனமா!!!

said...

//பிழிந்து அதன் சாற்றை கையில் பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் மணிக்கட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் விட்டுக் கொண்டு//

சத்தியாம இதுக்கு மேல யாராலையும் குழப்ப முடியாது சாமியோவ்....

மாம்ஸ் யார் கையில் விடனும்???

said...

மாம்ஸ் நீங்க ஒரு அனுமார் மாம்ஸ்!

ராமனிடம் சீதைய சேர்த்துவைத்த அனுமார் போல நீங்க நவீன அனுமார் மாம்ஸ்:))

(இதுக்குமேல என்னால குறிப்பா சொல்ல முடியல)

said...

நந்து உங்கள எப்படி திட்டுவது நான்?


இப்படி எல்லாம் உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சேனே எனக்கு 35 வயசு ஆகுது அபீசியலா ஒரு கல்யாணத்தை செஞ்சு வெக்க மனசு வரலீயேன்னு பதிவு போட்டு குமுறி இருக்கும் சஞ்சய்க்கு ஏதாவது செய்யுங்க பாஸ்!!!!

said...

//.(நம்ம வெண்பூ காப்பி ஆத்துவது போல)//

பொது இடம் என்று மறந்து வீட்டில் மனைவிக்கு காப்பி ஆத்துவது போல என்று எப்பொழுதும் போல் கரெக்ட்டா சொல்லுங்க மாம்ஸ், இல்லேன்னா கோச்சுப்பார்!!!

said...

//எவ்வளவோ முயற்சித்தும் கடைசி வரை அந்த பல்பு மங்கலாகவே எரிந்துத் தொலைத்தது... //

இப்பவும் அப்படிதானே மாம்ஸ்:)

என்னைக்கு அது ஒழுங்கா எரிஞ்சு இருக்கு!!!

said...

பதிவின் உட்கருத்தை, சாரம்சத்தை, ஒழுங்காக வாங்கியது நான் ஒருவன் தான் என்று என்னை பாராட்டி பாராட்டு விழா நடத்த போகிறார், பொடியன்!!!

பதிவின் நோக்கம்

இப்படி எல்லாம் உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சேனே எனக்கு 35 வயசு ஆகுது அபீசியலா ஒரு கல்யாணத்தை செஞ்சு வெக்க மனசு வரலீயேன்னு பதிவு போட்டு குமுறி இருக்கும் சஞ்சய்க்கு ஏதாவது செய்யுங்க பாஸ்!!

said...

//ஒரு மூத்த உயர் அதிகாரி வெளிநாட்டில் தனக்கு ஒரு ரஷ்யப் பெண்ணுடன் எற்பட்ட குஜால் அனுபவத்தை உணர்வுப் பூர்வமாக முகபாவணைகளுடன் விவரிக்கிறார். //

விட்டா லைவ் ஷோவே காட்டி இருப்பார் போல:)))

(சரி சீடி கிடைக்குமா என்று கேளுங்க:)

said...

டகீளா பற்றிய பதிவு என்பதற்காக இங்கு வந்து பின்னூட்ட மழை பெய்து இருக்கும் வெண்பூ ஒரு டகீளா பிரியர் என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார்.

Anonymous said...

சஞ்சய் ஏன் இந்தக் கொலவெறி.

நாளைக்கு உனக்கு பொண்னு பாக்கும் போது எங்கள மாதிரி நாலு பேரு கிட்ட கேப்பாங்க. ஜாக்கிரதை.

ஈரோட்டுக் காரரே இதுக்கெல்லாம் கவலப் படாதீங்க.

said...

டபுள் மீனிங்கில் மட்டுமே கமெண்ட் போடும் வெண்பூவார் ஒழிக :)
--------
//என்னாது மீட்டிங் ஹாலா? சுத்தம்.. அதுக்கு பேரு ஓலக்குடிச..//
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது.. அவனுங்க அப்டி தான் சொன்னானுங்க.. :(

//குடிசைக்கு கீழ உக்காந்து எலுமிச்சம்பழம் நக்கிட்டு கள்ளு குடிச்சதை இவ்ளோ டீசன்டா யாராவது போட முடியுமா?//

பனைமரத்துக்கு கீழ தான என் மாமன் அப்துல்லா வழக்கமா கள்ளு குடிக்கிறார்.. :)

said...

//வேணாம்டா வெண்பூ.. கன்ட்ரோல்.. மனசுல நெனக்கிறத எல்லாம் பின்னூட்டத்துல போடக்கூடாது... :)))//

பாருங்க மக்களே.. இவரு ரொம்ப நல்லவராமாம்.. :))

said...

//இதை விரிவாக சொல்லாத பொடியனுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கிறேன்..//
சிடி.. இருக்கு.. அனுப்பவா? :))

said...

//அவரு பேச ஆரம்பிச்சா வேற நிறுத்தவே மாட்டாரே... :)))))//

முதல் தடவை போன் பண்ணதுக்கே ஒரு மணி நேரம் பேசினதை இப்டி எல்லாம் சொல்லிக் காட்டக் கூடாது.. :))

said...

//அதான பாத்தேன்.. எங்கடா இன்னும் சொல்லலியேன்னு.. ஏம்பா அதுதான் எலுமிச்சம்பழம் + உப்பு இருக்குதுல்ல, நான் வேற எதுக்கு ஊறுகாயா???? :)))//

என்னதான் டக்கீலா காம்பினேஷன் நல்லா இருந்தாலும் ஊருகாய்க்கு இணையா வருமா? :))

பாருங்க அந்த ஊறுகாயால தான் பதிவுக்கே ஒரு ஸ்பெஷல் கிக் வந்திருக்கு.. :))

said...

//என்னா சொல்றீங்க???//
வெண்பூவார் மாதிரி ரொம்ப நல்லவங்களை பக்கத்துல வச்சிட்டு சொல்றதுக்கு வேற என்ன இருக்க போவுது? அதான் மொத்தமா எல்லாம் சொல்லிட்டிங்களே.. :(

said...

//அடடடடா!!! நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்கலடா சாமி.../

ஆமாஞ்சாமி :)

said...

//கண்ணா!!! குடிக்கிறவங்க எல்லாம் கெட்டவங்களும் இல்லை (உம். தொழில்ஸ்) அதே மாதிரி குடிக்காதவங்க எல்லாம் நல்லவங்களும் இல்லை (உம். சத்தியமா நான் இல்லை)... :))))//

பின்ன.. குசும்பனா? :)

said...

//இது என்னாது வீட்டுக்கு லெட்டர் வருமே.. இந்த கடிதத்தை உடனே நகலெடுத்து 20 பேருக்கு அனுப்பினால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் அப்படின்னு.. அது மாதிரியா?//

அதுக்கும் மேல.. இது புனிதக் காரியம் :)

said...

நிலா அம்மா பேர்ல போட்ட கமெண்ட் எலலாம் சூப்பர்ப் வெண்பூ.. :))

said...

மிஸ்டர் தமிழ்பிரியன்.. ஒபாமா ஜெயிச்சதுக்கு காரணம் நீங்களா இருக்கலாம்.. அதுக்காக அதை இப்டியா கொண்டாடறது.. :))

said...

// ஆயில்யன் said...

கலக்கல் போட்டோ :))

போட்டோவுக்கு தயார் பண்ணுன பதிவா ??


(நான் யாரையும் பகைச்சிக்க தயார இல்லப்பா ஊரு பக்கம் வந்தா இட்லி பூரி தோசைன்னு தின்னுட்டு போகணும்!)//

இவரு ரொம்ப உஷாராமாம்.. :))

said...

// நந்து f/o நிலா said...

அனானி அதர் ஆப்சன் இல்லாத ப்ளாக்குகளில் கமெண்டுவதில்லை என்ற கொள்கை முடிவின் காரணமாக "போடா போய் புள்ளைங்கள படிக்க வைங்கடா" ன்னு மட்டும் சொல்லிகிறேன்.

(கையில் மாட்டாமயா போயிட போற)//

உங்கள யாரு இப்போ உள்ள விட்டது.. கடைசியா வந்து வாக்குமூலம் குடுக்கறது மட்டுமே உங்க வேலை :))

said...

//வெயிலான் said...

ஹிரோடு ஈரோவப் பத்தின
இந்த விசயத்தை கேள்விப்பட்டதேயில்லையே!
படிக்கும் போது சிரிப்பை அடக்கவே முடியல சஞ்சய்.

இன்னைக்கு என்ன அவருக்கு திருமணநாளா?//

அட சாமிகளா.. மாசத்துக்கு எத்தனை திருமண நாள் தான் அவரு கொண்டாடுவாரு? :)))

said...

//கார்த்திக் said...

// கொய்யாக்கா விக்கறவன் கல்லமுட்டாய் விக்கறவன்லாம் தொழிலதிபர். நாட்ல இந்த தொழிலதிபர் தொல்ல தாங்கலடா சாமி.//

இத நாங்க சொல்லனும்.//

அதானே கார்த்தி.. நாம இல்ல சொல்லனும்?
அண்ணாச்சி புது டி80க்கு எண்ணெய் எல்லாம் போட்டு அப்பப்போ தொடைச்சி வைக்கிறிங்கள? :))

said...

//இராம்/Raam said...

கருமத்த, எழவு இந்த டெம்பிளேட் ..ரே மாத்துய்யா.... :(

ஒரு வரிக்கூட படிக்கமுடியாமே கண்ணு வலிக்குது.. :(//

டெஸ்ட்டிங் பண்ணும் போது குறுக்க வந்தது தப்பு சாமி.. :))

said...

//பின்னூட்டம் போட்டு விளையாடலாம் ஆனா இது என்ன பின்னூட்டம் போட்டு டெலிட் செஞ்சு விளாயாட்டு?
சின்னபுள்ள தனமா!!!//

மீ த ஃபர்ஸ்ட அழிச்ச ஒரே ஆள் நம்ம வெண்பூ தான்.. சரக்கு ஓவர் போல.. :))

said...

//சத்தியாம இதுக்கு மேல யாராலையும் குழப்ப முடியாது சாமியோவ்....

மாம்ஸ் யார் கையில் விடனும்???//

புது மிஷின்ல ப்ரிண்ட் அவுட் எடுக்க வர்ர பொண்ணுங்க கைல விட்றாதிங்க மாம்ஸ்... :)

said...

கலக்கிட்டீங்க போங்க!!

said...

/
Comment deleted

This post has been removed by the author.
/

ரிப்பீட்டு

said...

/
Comment deleted

This post has been removed by a blog administrator.
/

இதுக்கும் ரிப்பீட்டு

Anonymous said...

சஞ்சய், சூப்பர் கும்மிதான் பின்னூட்டத்தில, நந்து கோவிச்சுக்கப்போறார். நிலாக்குட்டி படத்தயும் பொருத்தமா போட்டிருக்கீங்க. :)

said...

//ராமனிடம் சீதைய சேர்த்துவைத்த அனுமார் போல நீங்க நவீன அனுமார் மாம்ஸ்:))//

ஹய்யோ ஹைய்யோ.. என்னை குரங்குன்னு மறைமுகமா சொல்றாராமாம்.. ;)) மாமோய் நெறைய பேர் என்னை நேர்ல பார்த்திருக்காங்க.. நீங்க சொல்லாமலே இதெல்லாம் அவங்களுக்கு தெரியுமுங்க.. :))

said...

// குசும்பன் said...

நந்து உங்கள எப்படி திட்டுவது நான்?


இப்படி எல்லாம் உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சேனே எனக்கு 35 வயசு ஆகுது அபீசியலா ஒரு கல்யாணத்தை செஞ்சு வெக்க மனசு வரலீயேன்னு பதிவு போட்டு குமுறி இருக்கும் சஞ்சய்க்கு ஏதாவது செய்யுங்க பாஸ்!!!!//

ரொம்ப நன்றி மாமா.. என் கண்ணுல ஆனந்தக் கண்ணீர் அருவியா வழியுது மாமா.. :(

said...

// குசும்பன் said...

//.(நம்ம வெண்பூ காப்பி ஆத்துவது போல)//

பொது இடம் என்று மறந்து வீட்டில் மனைவிக்கு காப்பி ஆத்துவது போல என்று எப்பொழுதும் போல் கரெக்ட்டா சொல்லுங்க மாம்ஸ், இல்லேன்னா கோச்சுப்பார்!!!//
குட் கேட்ச்.. கீப் இட் அப் :))

said...

//இப்பவும் அப்படிதானே மாம்ஸ்:)

என்னைக்கு அது ஒழுங்கா எரிஞ்சு இருக்கு!!!//

கரண்டு பில்லு கட்ட காசில்லாததாலையும் எப்போவாச்சும் தான் கரண்டு வருது, அதுக்கு எந்த பல்பு இருந்தா என்னன்னு ஜீரோ வாட்ஸ் பல்பு தான் மாமா ஊட்ல இருக்கு. :(

said...

//விட்டா லைவ் ஷோவே காட்டி இருப்பார் போல:)))//

எல்லாம் ஏற்காட்டுக்குத் தெரியும்.. சாரி எங்களுக்குத் தெரியும் :))

said...

//குசும்பன் said...

டகீளா பற்றிய பதிவு என்பதற்காக இங்கு வந்து பின்னூட்ட மழை பெய்து இருக்கும் வெண்பூ ஒரு டகீளா பிரியர் என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார்.//

அவர், பிரியாணிக்கு கூட டகீலா தான் பயன்படுத்தராராம்.. :)

said...

//வடகரை வேலன் said...

சஞ்சய் ஏன் இந்தக் கொலவெறி.

நாளைக்கு உனக்கு பொண்னு பாக்கும் போது எங்கள மாதிரி நாலு பேரு கிட்ட கேப்பாங்க. ஜாக்கிரதை.

ஈரோட்டுக் காரரே இதுக்கெல்லாம் கவலப் படாதீங்க.//
ஹிஹி... சொல்லிட்டிங்க இல்ல.. இனி உஷாராய்டுவோம்ல :))

said...

நன்றி விலெகா.. :)

மங்களூர் முன்னாள் மைனர் .. அடங்க மாட்டிங்களா? :)

said...

// சின்ன அம்மிணி said...

சஞ்சய், சூப்பர் கும்மிதான் பின்னூட்டத்தில,//
எல்லாம் பாசக்கார புள்ளைங்க.. :))

//நந்து கோவிச்சுக்கப்போறார். //
அதப் பத்தி யாருக்கு கவலை? :) இன்னும் பல விஷயங்கள் அப்பப்போ வெளிவரும் :))

//நிலாக்குட்டி படத்தயும் பொருத்தமா போட்டிருக்கீங்க. :)//
அவ தான் இப்போ பெரிய மாடல் ஆய்ட்டாளே.. எல்லாம் ஒரு விளம்பரம் தான்...:)

said...

பின்னூட்ட களவானித்தனம். :)

said...

பின்னூட்ட மொள்ளமரித்தனம்.. :)

said...

பின்னூட்ட டமாருத்தனம்.. :)

said...

நான் தான் 100 :))

said...

ஹிஹி 98

said...

ஹிஹிஹி 99

said...

ஹிஹிஹிஹி 100..

said...

டோட்டல் டேமேஜ் என்பார்களே அது இது தானா? இல்ல, இது வெரும் பாதி டேமேஜ் தானா? :)

said...

இதில் 1% கூட கற்பனை இல்லை truth :)

said...

பொடியன்-|-SanJai said...
ஹிஹிஹிஹி 100..
//

நல்ல பொழப்பு!!! :(((

சொந்த பதிவில் நூறு அடிச்ச கருமம் புடிச்ச பதிவர் நீங்க ஒரு ஆள் தான்!!!

said...

//அந்த தொழிலதிபருக்குள் நம் வால்பையனை விட அதிக ஸ்ப்லிட் பர்சனாலிட்டி இருக்கிறது என்பதை நிரூபித்த நாள் அது.//

இந்த சந்தேகம் எனக்கும் இருக்கிறது.
விடியகாலை மூன்று மணி வரைக்கும் இணையத்தில் அமர்ந்திருப்பாராம்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் சர்ச்சைக்குரிய பதிவுகளும், பின்னூடங்களும் அப்போது தான் வெளியிடப்படுகின்றன

said...

//குசும்பன் said...

பொடியன்-|-SanJai said...
ஹிஹிஹிஹி 100..
//

நல்ல பொழப்பு!!! :(((

சொந்த பதிவில் நூறு அடிச்ச கருமம் புடிச்ச பதிவர் நீங்க ஒரு ஆள் தான்!!! //

பொறாமை! :))

said...

//Blogger வால்பையன் said...

//அந்த தொழிலதிபருக்குள் நம் வால்பையனை விட அதிக ஸ்ப்லிட் பர்சனாலிட்டி இருக்கிறது என்பதை நிரூபித்த நாள் அது.//

இந்த சந்தேகம் எனக்கும் இருக்கிறது.
விடியகாலை மூன்று மணி வரைக்கும் இணையத்தில் அமர்ந்திருப்பாராம்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் சர்ச்சைக்குரிய பதிவுகளும், பின்னூடங்களும் அப்போது தான் வெளியிடப்படுகின்றன//

பின்ன.. அப்போ தான பழியை எல்லாம் அமெரிக்கால இருக்கிற பதிவருங்க மேல போட முடியும் ;))

Tamiler This Week