இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday 24 September, 2008

பெரிய கட்சிகளுக்கு வடிவேலு சவால்


"விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நின்று ஜெயிப்பேன்"
- இவை அண்ணார் வடிவேலு சமீபத்தில் உதிர்த்தவை...

"விஜயகாந்தை புகழ்ந்து அரசியல் வசனம் பேசி நடிக்க சொன்னதால் அவர் படங்களில் நடிக்கவில்லை. அதனால் தான் என் மீது தாக்குதல் நடக்கிறது. நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன்"
- இதுவும் அண்ணார் வடிவேலுவின் டயலாக் தான்.

.... வடிவேலு வர்த்தைப் படி அவர் எந்த கட்சியையும் சாராத பட்சத்தில் விஜயகாந்தை எதிர்த்து சுயேட்சையாகத் தான் போட்டியிடுவார். அப்போது நிச்சயம் மற்ற அரசியல் கட்சிகளும் தன் வேட்பாளர்களை அந்த தொகுதியில் நிறுத்துவார்கள்... நம் அரசியல் சட்டத்தின் சாபக் கேடு, ஒரு தொகுதியில் ஒருவர் தான் ஜெயிக்க முடியும். வடிவேலு சொல்வது போல் அவர் வெற்றிபெறுவாரேயானால்.. அது விஜயகாந்திற்கு மட்டும் தோல்வி அல்ல. அந்த தொகுதியில் தங்கள் வேட்பாளர்களை போட்டியிடச் செய்த மற்ற அரசியல் கட்சிகளுக்கும் தான் தோல்வி... அப்படியானால் சுயேட்சையாக போட்டியிட்டு விஜயகாந்த் , ஜெயலலிதா , கருணாநிதி, தங்கபாலு, ராமதாஸ் , காவி மற்றும் சிவப்புக்காரர்கள் ஆகியோர்களின் வேட்பாளர்களை தன்னால் தோற்கடிக்க முடியும் என்கிறார் வடிவேலு..

.. யப்பா.. இந்த காமெடியனுங்க தொந்தரவு தாங்க முடியலைடா சாமி.. இம்புட்டு நாள் ஈரோவா நடிச்சவனுங்க தான் மொத மந்திரியா ஆவனும்னு வந்தாங்க.. இப்போ காமெடியனுங்களும் போட்டிக்கு வந்துட்டாங்கய்யா... அட வடிவேலுவும் ஈரோவா நடிச்சிருக்கார் இல்ல.. அப்போ மொத மந்தி ஆசை நாயந்தாண்யா..

.......இந்த பதிவை எழுதி முடிக்கும் இந்த நேரத்திலே சன் நியூஸ் மீண்டும் தலைப்புச் செய்திகளில் கேட்டது " விஜயகாந்தை எதிர்த்து கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும்..வடிவேலு ரசிகர்கள் நேரில் வந்து வலியுறுத்தல்"

.... ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்கய்யா... அடுத்து என்ன?.. கட்சிக் கொடி.. சாரி.. மன்றத்துக் கொடி டிசைன் பண்ண வேண்டியது தான்.... :))

.... கொய்யால தியேட்டர்ல ப்ளாக்ல டிக்கெட் வாங்கி படம் பார்த்து உங்களை உசுப்பேத்தி விடற எங்களுக்கு இதுவும் வேணும்... இதுக்கு மேலயும் வேணும்டா.. :(

16 Comments:

said...

கடைசி வரிஅக்ள் ‘நச்ச்!”

said...

வரிகள்...!

said...

சஞ்சய், 2013ல நாம ஆட்சிய புடிச்சதும் இந்தியாவுல ஒரு 10 வருசத்துக்கு சினிமாவ தடை செஞ்சுருவோமா? 10 வருசம் கழிச்சு நாம ரெண்டு பேரும் டபுள் ஹீரோ படம் ஒன்னு எடுப்போம், நாமதான் ஹீரோ, அப்றம் மக்களே மறுபடியும் கெஞ்சி கூத்தாடி சினிமாவ தடை பண்ண சொல்லிருவாய்ங்க. இதத் தவிர வேற வழியே இல்ல நம்ம நாட்ட காப்பாத்த.

said...

கூலான உங்களையே சூடாக்கிட்டாய்ங்களே சஞ்சய் சூடாக்கிட்டாய்ங்களே :)))

said...

விஜய காந்துக்கே ஒட்டுப் போட்டு கெலிக்க வைத்த
விருத்தாசல மக்கள் வடி வேலுவையும் ஜெயிக்க வைக்க
மாட்டார்களா? அங்கேயே வைத்துக் கொள்ளலாம் அப்பு.

said...

ஆனா வடிவேலண்ணன் தான் கேப்டன எதிர்க்கிற எல்லா அரசியல் கட்சிகளின் ஆதரவோடும்னு உஷாரா சொல்லிக்கிட்டு இருக்காரே

said...

//விஜய காந்துக்கே ஒட்டுப் போட்டு கெலிக்க வைத்த
விருத்தாசல மக்கள் வடி வேலுவையும் ஜெயிக்க வைக்க
மாட்டார்களா? //
:):):)

said...

நன்றி பரிசலார்.. இன்னும் நாம அனுபவிப்போம்.. இவர் தனிக் கட்சி வேற ஆரம்பிக்கப் போறாராம்ல.. :))

---

நல்ல ஐடியா தான் ஜோசப்.. இங்க வந்து கமெண்ட் போட்டதுக்காக.. நம்ம பரிசலார்.. அப்துல்லா அண்ணாச்சி.. ரங்குடு ..ராப் தலைவி எல்லாரையும் சேர்த்துக்கலாம்.. :))

-----

என்ன பண்றது அப்துல்லா.. இப்டி ஆக்கிட்டானுங்களே.. :(

-----

ஹாஹா ரங்கு.. சூப்பரா சொல்லிட்டிங்க போங்க.. :))

-----

ராப் தலைவி.. இன்னைக்கு செய்தி கேக்கலையா?.. அவர் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போறாராம்..:))

said...

/*கொய்யால தியேட்டர்ல ப்ளாக்ல டிக்கெட் வாங்கி படம் பார்த்து உங்களை உசுப்பேத்தி விடற எங்களுக்கு இதுவும் வேணும்... இதுக்கு மேலயும் வேணும்டா.. :(*/

இப்போவாவது தெரிஞ்சா சரி:-):-)

said...

உங்கள் பதிவு நல்ல இருக்கு ஆனால் அவர் அனைத்து கட்சி ஆதரவிலும் சுயேட்சையாக தான் நிற்பேன் என்று கூறினார், அதுவும் இல்லாமல் ஒருவருடமாக இந்த பிரச்சனைக்காக மிகவும் நொந்து உள்ளார் என்று நினைக்கிறேன்.அதன் கோப வெளிப்பாடு தான் அவர் அப்படி பேசியது சில நாட்கள் சென்றால் அவர் சாதாரண நிலைக்கு திரும்பி விடுவார்.

said...

அவர் படத்து காமெடி மாதிரி நினைச்சுவிட்டார். வடிவேல் நாக்கில் ஷனி :) :)

said...

//யப்பா.. இந்த காமெடியனுங்க தொந்தரவு தாங்க முடியலைடா சாமி.. //

ஹா ஹா ஹா ஹா ஹா

//இப்போ காமெடியனுங்களும் போட்டிக்கு வந்துட்டாங்கய்யா//

ஒரு வேளை அவர்களும் இதை போல காமெடி செய்வதால் இருவரும் ஒரே அலைவரிசையில் வந்ததால் இருக்குமோ :-)))

//இந்த பதிவை எழுதி முடிக்கும் இந்த நேரத்திலே சன் நியூஸ் மீண்டும் தலைப்புச் செய்திகளில் கேட்டது " விஜயகாந்தை எதிர்த்து கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும்..வடிவேலு ரசிகர்கள் நேரில் வந்து வலியுறுத்தல்"//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல

வடிவேல் பண்ணுற காமெடிய விட இந்த சன் டிவி பண்ணுற காமெடி தாங்கல....இதை எல்லாம் ஒரு செய்தின்னு அவங்களும் போட்டுட்டு இருக்காங்க..

said...

.... கொய்யால தியேட்டர்ல ப்ளாக்ல டிக்கெட் வாங்கி படம் பார்த்து உங்களை உசுப்பேத்தி விடற எங்களுக்கு இதுவும் வேணும்... இதுக்கு மேலயும் வேணும்டா.. :(

said...

//யப்பா.. இந்த காமெடியனுங்க தொந்தரவு தாங்க முடியலைடா சாமி.. //

ஹா ஹா ஹா ஹா ஹா

said...

photo super !!!

said...

நன்றி ராஜி..

@திலிபன்: அட நீங்க வேற.. சமீபத்துல சொன்னது “ விஜயகந்த் வடிவேலுங்கிற நெருப்பு மேல காலை வச்சிட்டார்.. அது எப்படி சுடும்னு இனி தான் அவருக்கு தெரியும்”.. இதுக்கு என்ன சொல்றிங்க? :))

நன்றி பொடிப் பொண்ணு

வாங்க கிரி.. நலமா? குட்டி பொண்ணு எப்டி இருக்கா?.. சன் டிவிக்கு எதாவது காமெடி பண்ணலைனா பொழப்ப ஓடாதே.. :)

மிக்க நன்றி குடும்பஸ்தன் சிவா அவர்களே.. :)

Tamiler This Week