இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 7 September, 2008

மங்களூர் சிவா திருமணம் - சென்னையில்


நம்ம மங்களூர் மைனர் வசமா மாட்டிக்கிட்டார்..

மங்களூர் சிவாவிற்கும் என் பாசமிகு சீனியரும் சைண்டிஸ்டுமான ஜெர்மனி(படிப்பு மட்டும்) பூங்கொடிக்கும் வருகிற வியாழன் 11ம் தேதி சென்னை வடபழனி முருகன் கோவிலில் நண்பர்கள் சூழ எளிமையான திருமண வைபோகம் நடைபெற இருக்கிறது...

மணமக்கள் இருவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவோம்... நான் டிக்கெட் போட்டாச்சி.. அப்பா நீங்க? :)

நாள் : 11-09.2008 வியாழன்
நேரம் : காலை 7.30 - 8.30
இடம் : முருகன் கோவில் , வடபழனி

60 Comments:

said...

சூப்பர், வாழ்த்துக்கள் சிவா!

said...

எனக்கு டிக்கெட் போடுங்கப்பா! இன்னும் 3 நாட்கள்தான் இருக்கா?
ரைட்டு ரைட்டு! மாப்பி சிவா!

said...

அண்ணன் மங்களூரார் அண்ணியோடு வாழ்வாங்கு வாழ்க!

//நான் டிக்கெட் போட்டாச்சி.. அப்பா நீங்க? :)
//

நான் ஏன் டிக்கெட் போடணும்? உள்ளூர்தான?

said...

அடப்பாவி அவன் போன் பண்ணி ரெண்டாவது நிமிசத்துல போஸ்ட்டா?

said...

ஒருத்தன் அவசர அவசரமா கல்யானம் பண்றான். ஒருத்தன் அத விட அவசரமா போஸ்ட் போடுறான்.

நல்லா இருங்கடே

said...

வாழ்த்துக்கள், நேரம் தெரிந்தால் வர ஏதுவாக இருக்கும்.

said...

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள், நேரம் தெரிந்தால் வர ஏதுவாக இருக்கும்.//

நேரம் காலை 7.30 - 8.30.. பதிவிலும் இப்போது சேர்த்துவிட்டேன்.. அவரும் தனியாக விளக்கமாக ஒரு பதிவு போடறார்.

said...

வாழ்த்துக்கள்

வரலாமா? எப்படி அடையாளம் காண்பது??

"கும்மி கும்மியோ" என்று கத்துகிறேன்.. யாராவது "குதிரைக்கு 3 கால்" என்று சொல்லுங்கள்..

நர்சிம்

said...

வாழ்த்துக்கள் சிவா!

said...

வாழ்த்துக்கள் சிவா!

சஞ்சய்.. உங்க பொறந்தநாளைன்னைக்கு நல்ல நல்ல செய்தியா வருது!

வெரிகுட்!

said...

வாழ்த்துக்கள் சிவா :))

said...

11ம் தேதி வியாழன் காலை 7.30 - 9.00க்குள் வடபழனி முருகன் ஆலயத்தில் அனைவரும் வந்திருந்து வாழ்த்த வேண்டுகிறேன்

அன்புடன்
மங்களூர் சிவா

said...

வாழ்த்துகள், மங்களூர் சிவா.

said...

வாழ்த்துக்கள் சிவா..

****

சஞ்சய், சென்னை வந்தா கூப்புடுங்க. செல் நெம்பர் இருக்குல்ல??

said...

//முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள், நேரம் தெரிந்தால் வர ஏதுவாக இருக்கும்.//

//புதுகை.அப்துல்லா

நான் ஏன் டிக்கெட் போடணும்? உள்ளூர்தான?//

// narsim said...

வாழ்த்துக்கள்

வரலாமா? எப்படி அடையாளம் காண்பது??//

சிம்பிளான கல்யாணத்தை நம்ம பதிவர்கள் கிராண்ட்டாக்கப் போறாங்கன்னு நெனைக்கறேன்!

கல(ந்து)க்குங்க!

said...

// மங்களூர் சிவா said...

11ம் தேதி வியாழன் காலை 7.30 - 9.00க்குள் வடபழனி முருகன் ஆலயத்தில் அனைவரும் வந்திருந்து வாழ்த்த வேண்டுகிறேன்

அன்புடன்
மங்களூர் சிவா//


இப்படி சம்பிரதாயமெல்லாம் தேவையே இல்லை சிவா நமக்கு!

யாரு சொன்னாலும் வந்து அள்ளிப் போட்டுக்க ரெடி நாங்க!!!

said...

சிவா கல்யாணத்தை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தை விட, கல்யாணத்துக்கு சஞ்சய் போகிறாரே என்றவருத்தமும், மொய் பணத்தை எப்படி சிவா பாதுக்காக்க போகிறார் என்ற வருத்தமே அதிகமாக இருக்கிறது.

said...

//நந்து f/o நிலா said...
ஒருத்தன் அவசர அவசரமா கல்யானம் பண்றான். ஒருத்தன் அத விட அவசரமா போஸ்ட் போடுறான். //

ஒருத்தன் அவசர அவரமாக முதல் பின்னூட்டம் போடுகிறான்:)))

said...

//நம்ம மங்களூர் மைனர் //

மாம்ஸ் மைனருக்கு --- மிஸ்ஸிங்!!

மங்களூர் மைனர் குஞ்சு என்றுதானே சொல்லனும்!!

அப்ப மிஸ் ஆனது எது?

said...

சென்னை நண்பர்கள் மற்றும் இயன்றவர்கள் அவசியம் வரவேண்டும்

என் மொபைல் எண் : 098458 95200

said...

மங்களூரும் ஜேர்மனியும் இல்லறவாழ்வில் சீரும் சிறப்பாகவும் வாழ வாழ்த்துக்கள்

said...

@ நர்சிம்

98458 95200
அவசியம் வாங்க

said...

@murali kannan

11th sep, 2008
morning 7.30 - 9.00

said...

// மங்களூர் சிவா said...

11ம் தேதி வியாழன் காலை 7.30 - 9.00க்குள் வடபழனி முருகன் ஆலயத்தில் அனைவரும் வந்திருந்து வாழ்த்த வேண்டுகிறேன்

அன்புடன்
மங்களூர் சிவா//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.......

said...

மங்களூர் சிவா எல்லாத்துக்கும் இப்பிடித்தானே பின்னூட்டம் போடுவாரு, அதான் நானும் அவரு ஸ்டைல்லயே பின்னூட்டம் போட்டுட்டேன்.

said...

மங்களூருக்கும், ஜெர்மனிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

விடிஞ்சா கல்யாணம், பிடிடா வெத்தலையும் பாக்கும் அப்படிங்கற கதையால்ல இருக்கு ? சென்னைல எத்தனை நாளு இருப்பீக ?

நான் 12ம் தேதி இரவு தான் சென்னை போறேன் :(

said...

மங்களூர் சிவாவிற்கு வாழ்த்துக்கள்

said...

இனிய வாழ்த்துக்கள் சிவா மற்றும் பூங்கொடி. :-)

said...

நண்பருக்கு இதய‌ப்பூர்வமான திருமண வாழ்த்துகள்.! (எவ்ளோ படிச்சு படிச்சு சொன்னாலும் எவன் கேக்குறான் இந்த ஊர்ல‌..?)

said...

ஆஹா!! மங்களூர் அண்ணே.. இப்ப மிஸ்டு கால் இருந்துச்சே என் போன்ல.. இதைச் சொல்லத்தான் கூப்பிட்டீகளா? இதோ கிளம்பிட்டே இருக்கேன். வாழ்த்துக்கள்!!! :)

said...

நினைச்சதை நடத்திப்புட்டீகளே சிவா!

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
(2 பேருக்கும் சொல்லணுமில்ல)


ஒரு மத்தியான சாப்பாடு பார்சல்...!

:)

said...

நாங்க முன்னாடியே சொன்னோமுல்ல

http://kummionly.blogspot.com/2008/05/blog-post_08.html

said...

அடுத்தவர்
ஜொள்ளா விட
அழகுப் படங்களை
அசத்தலா போட்டுத்தந்து
அற்புதமாய் இருந்துவந்தார்
நம்ம கும்மி புகழ் அன்பு நண்பர்
சிவராமன்.! என்னமாயம் நடந்துச்சோ
இப்பல்லாம் சொந்த ஜொள்ளை மட்டும்
விட்டு கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார். நல்லபொண்ணு
யாராவது நறுக்குன்னு வந்து நின்னு தொல்லை இல்லாம
எங்களுக்கு நல்ல காலம் பொறக்கவை மங்களூரு மாரியாத்தா!
இதுதான் என்னமோ படிக்கட்டு கவுஜயாமுல்ல...ஏறி வந்து படிச்சுப்புட்டு
நீங்க பதவிசா போயிருங்க ! எம்மேல யாரும் ஏறப்புடாது சொல்லிப்புட்டேன்!

said...

//நம்ம மங்களூர் மைனர் வசமா மாட்டிக்கிட்டார்..//

கிண்டலா,

என் தம்பி சிவா படு ஸ்மார்டாக இருப்பான் அவனை கட்டிக்கிறதுக்கு கொடுத்து வைக்கனும்.

said...

வாழ்த்துக்கள் ரிப்பீட்டரே..இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை."

said...

முடிவு கிட்டிருச்சு தங்கங்களா....

கவிதை உண்மைதான்..
எல்லாம் காதல் மயக்கத்தில்தான்
பார்ட்ட்டி பீலிங்ஸ் காட்டிருக்கு!

மொத்தத்துல நல்லது நடக்கப்போவுது!

செப்டம்பர் 11 - சிவாவை சாச்சுப்புட்டாய்ங்கப்பூ !

Anonymous said...

வாழ்த்துக்கள் சிவா!

said...

வாழ்த்துக்கள் சிவா

Anonymous said...

வாழ்த்துக்கள்

said...

செப்டம்பர் 11ல் இணையும் இரு நல்ல உள்ளங்களும், இல்வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று ( பதினாறு பேறு உட்பட ) பெரு வாழ்வு வாழ நல்வாழ்த்துகள்.

அன்புடன் ... சீனா - செல்வி ஷங்கர்

said...

மங்களூரார் மற்றும் பூங்கொடிக்கு, இனிய வாழ்த்துக்கள். முதல் நாள் ஊருக்குக் கெளம்புறேன். வரவேற்பு, கிரவேற்பு எதாவது உண்டா, அப்பால?

9/11/2001 ல் விழுந்தது அமெரிக்க ரெட்டைக் கோபுரம்!
9/11/2008 ல் விழப் போகுது மங்களூர் ஜொள்ளுக் கோபுரம்!

முதலாவது, அழிவு. இரண்டாவது, அழகு.
வாழ்க வளமுடன்...

said...

சிவா இனிய திருமண வாழ்த்துக்கள், உங்கள் பதிவை போல வாழ்க்கையையும் சுவாராசியமாக இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள் சிவா & பூங்கொடி !!!

Anonymous said...

வாழ்த்துகள் :)

said...

சிவாவுக்கு வாழ்த்துக்கள்...

said...

வாழ்த்துக்கள் சிவா:-)

said...

வாழ்த்துக்கள் சிவா

said...

வாழ்த்துக்கள் சிவா அண்ணன்...:))

said...

நல்லாருங்க நல்லாருங்க...:)

said...

சிவாவோட பதிவில தனி ஆவர்த்தனம் வாசிச்சிருக்கேன் முன்னாடியே சொல்லப்படாதா வந்து விளாசி இருப்பம்ல...:)

said...

நந்து f/o நிலா said...
\
ஒருத்தன் அவசர அவசரமா கல்யானம் பண்றான். ஒருத்தன் அத விட அவசரமா போஸ்ட் போடுறான்.

நல்லா இருங்கடே
\

:))

அதானே செப்டெம்பர் லாஸ்ட்லன்னுதானே பட்சி சொல்லிச்சு...

said...

மங்களூர் சிவா said...
\
11ம் தேதி வியாழன் காலை 7.30 - 9.00க்குள் வடபழனி முருகன் ஆலயத்தில் அனைவரும் வந்திருந்து வாழ்த்த வேண்டுகிறேன்

அன்புடன்
மங்களூர் சிவா
\

கும்மிட மாட்டோம்...?

said...

தாமிரா said...
\
நண்பருக்கு இதய‌ப்பூர்வமான திருமண வாழ்த்துகள்.! (எவ்ளோ படிச்சு படிச்சு சொன்னாலும் எவன் கேக்குறான் இந்த ஊர்ல‌..?)
\

;)

said...

சஞ்சயய் அண்ணாச்சி சிவா சமையல் குறிப்பு புத்தகமா வாங்கி ராத்திரி பகலா மனப்பாடம் பண்ணத சொல்லாம விட்டுட்டிங்களே...:)

said...

உங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய் அண்ணன்...

said...

வாழ்த்துக்கள் சிவா

said...

"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் அப்படிங்கற மாதிறி ஸ்டைலா "மங்களூருக்கும், ஜெர்மனிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அப்படின்னு
வாழ்த்திட்டு போய்ட்டாறு நம்ம ஜோசப் பால்ராஜ்//
நம்ம பங்குக்கு ஏதாவது வாழ்த்துனுமில்ல
"இல்லற‌த்தில் இணைய போகும் என் அன்பு நண்பர் சிவாவிற்கு என் அன்பு கனிந்த வாழ்த்துக்கள்"

said...

கல்யாணத்துக்கு போறவங்க என் சார்பா வாழ்த்துக்களை சொல்லிருங்க நண்பர்களே

said...

வாழ்த்துக்கள் சிவா!

Tamiler This Week