இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSaturday, 13 September 2008
வீரப்பன் வாழ்ந்த மலைப்பகுதி மக்கள் நிலை
2 நாட்களுக்கு முந்தய ரயில் பயணத்தின் போது யாரோ விட்டுச் சென்ற குமுதம் படிக்க நேர்ந்தது. இப்போதெல்லாம் வார இதழ்கள் எல்லாம் பயண துணைக்கு மட்டும் தான் போலும்.. அதில் வீரப்பன் காட்டில்( அதென்ன வீரப்பன் காடு? ) பண புதையல் என்பது போல் ஒரு செய்தி. அந்த புதையலால் தான் அந்த காட்டுப் பகுதி மக்கள் பலர் இப்போது வசதியாய் வாழ்வதாக இருந்தது. இதில் எந்த அளவு உண்மை என்று தெரியாது...
எனக்கு தெரிந்த காரணம் வேறு....
அந்தியூர் மற்றும் சத்தியமங்கலம் மலைப்பகுதியில் வாழும் மக்கள் ராகி , சாமை, மக்காச்சோளம் போன்றவற்றை பயிரிடுவார்கள். ராகி எல்லாம் நல்ல விலை கிடைக்கும் தானியம். ஆனால் அவர்களால் அப்போது அந்த பணத்தை பயன் படுத்த முடியாது. வீரப்பன் வாழ்ந்த காலத்தில் அந்த மலைப்பகுதி மக்கள் ஒரு ரேடியோ வாங்கி வந்தாலும் அதை ரொம்ப சிரமப் பட்டு மறைத்தே கொண்டு போவார்களாம். காரணம், அதிரடிப்படையினர் கண்ணில் பட்டால் கொடுமை படுத்திவிடுவார்களாம். இதை வாங்க உனக்கு பணம் எங்கிருந்து வந்தது? வீரப்பன் கிட்ட வாங்கினையா? என்று குடைவார்களாம். அதற்கு பயந்தே அதுவரை யாரும் எந்தப் பொருளும் வாங்காமல் பணத்தை அப்படியே வைத்திருந்து இருக்கிறார்கள்.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. அதிரடிப்படை முகாம் எதும் இல்லை.. எனவே TV, DTH ( மலைப்பகுதியில் கேபிள் வசதி இல்லை) என்று தேவையான எல்லாம் வாங்கி செல்கிறார்களாம். இவ்வளவு நாள் பயன்படுத்தாமல் வைத்திருந்த பணம் தான் இப்போது அவர்களை வசதியாக வாழ வைக்கிறது. வீரப்பன் புதைத்த வைத்து பணம் காரணமாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
இப்போது அவர்களால் அந்தியூர் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் நல்ல வியாபாரம் நடைபெறுகிறது.
கொசுறு:
Web Of Trust - நெருப்புநரி மூலம் இணைய உலா வரும்போது அதில் காணும் சுட்டிகள் பாதுகாப்பானதா அபாயகரமானதா என்பதை வெளிப்படுத்தும் add on. பயன்படுத்துங்க.. பயன்பெறுங்க..
17 Comments:
me the firstuuu ?????
:)
தனியா கும்மி அடிக்க விட்டுட்டாங்களேயா !! :D
//வீரப்பன் வாழ்ந்த மலைப்பகுதி மக்கள் நிலை//
ஒ ஒ மீசைக்காரர் பத்தியா :)
//இப்போது அவர்களால் அந்தியூர் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் நல்ல வியாபாரம் நடைபெறுகிறது.//
அப்பிடியா ? அங்கயும் ஒரு கடை போட்டுடலாமா :)
//வீரப்பன் புதைத்த வைத்து பணம் //
ஹையி
சரி வரேன் டாடா
பல கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளான அந்த மக்கள் இப்பொழுதாவது நிம்மதியாக வாழட்டும்... :)
விரப்பன் கதையை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கேன். முழுதாக பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஒருவன் நிம்மதியா இருந்தா அது புதயைல் வேலையா? என்ன கொடுமை. அவர்கள் நிம்மதி வாழ இறைமை வழி செய்யட்டும்...
//Podiponnu - பொடிப் பொண்ணு said...
//இப்போது அவர்களால் அந்தியூர் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் நல்ல வியாபாரம் நடைபெறுகிறது.//
அப்பிடியா ? அங்கயும் ஒரு கடை போட்டுடலாமா :)
//
அதென்ன அங்கயும் ஒரு கடை போடலாமா? இதுக்கு முன்னாடி எங்க எல்லாம் கடை போட்டிருக்க தாயி நீயி? :))
இப்போது அவர்கள் நிம்மதியாகத் தான் இருக்கிறார்கள் தமிழ்பிரியன்.
----
//ஒருவன் நிம்மதியா இருந்தா அது புதயைல் வேலையா? //
என்ன கொடுமை பாரு விக்கி? :(
/* வீரப்பன் புதைத்த வைத்து பணம் காரணமாக இருக்காது என்றே நினைக்கிறேன்*/
அந்த பணம் எங்க இருக்குன்னு கண்டு பிடிச்சு சொல்லுங்களேன்:-)
Avanga use pannatti poguthu.naan use pannikkaren:-)))
நான்கூட ஒரு கட்டுரையில் நீங்க சொல்ற மாதிரி படிச்சிருக்கேன்.
///Podiponnu - பொடிப் பொண்ணு said...
me the firstuuu ?????
//
podi ponnu, why this kolai veri ???????
அதுசரி! வீரப்பர் தர்மபுரில உங்ககிட்ட குடுத்து வச்ச பணத்த என்ன பண்ணுனீங்க தல? :))
நெருப்பு நரியா? நல்லா பண்ணுறீங்கையா.. மொழிமாற்றம்.!
ராஜி.. உங்க ஊர்ல இருந்து சத்தியமங்கலத்துக்கு 1.30 மணி நேரம் தான் பயணம்.. வேட்டைல இறங்குங்க.. :)
----
அப்டியா ராப்?.. நான் மனசுல நினைக்கிறத எல்லாம் எழுதிடறாங்க போல.. :))
----
நன்றி ரவி... அவ எப்போவும் இப்டிதான்.. பதிவை படிக்காமலே கொலைவெறியோட பின்னூட்டம் போடுவா.. :))
---
உங்க பேருக்கு அப்போவே டிடி எடுத்து அனுப்பிட்டேனே அப்துல்லா.. இன்னும் கெடைக்கலையா?:))
---
நன்றி தாமிரா.. அது என் மொழி பெயர்ப்பு அல்ல.. பலரும் இதை பயன்படுத்தியதை படித்திருக்கிறேன்.. :))
Post a Comment