இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Sunday, 28 September 2008

சரோஜா - படத்துக்கு வேற எதுனா பேர் வச்சிருக்கலாம்

இதுவரை நானும் எவ்வளவோ கேவலமான சினிமாக்கள் எல்லாம் பார்த்திருக்கேன்.. ஆனா இவ்வளவு கேவலமான சினிமாவை நேற்று தான் பார்த்தேன்... இதை முழு நீளக் காமெடி படமாக எடுத்திருந்தால் கொஞ்சம் ரசித்திருக்கலாம்...

யுவன் பின்னனி இசையை அநியாயத்துக்கு வீணடித்திருகிறார்.. ஒரு நிஜமான திரில்லருக்கு அந்த இசையை பயன்படுத்தி இருக்கலாம்..

ப்ரேம்ஜிக்காக திணித்திருக்கும் situation songs எல்லாம் செம எரிச்சல் ரகம்...

முதல் 45 நிமிடங்கள் எதோ மியூசிச் சானல் பார்ப்பது போன்ற உணர்வு... அடுத்த காட்சிகள் எல்லாம் என்ன செய்வது என்றே தெரியாமல் திணிக்கப் பட்டிருக்கிறது.. சகிக்கலை... நான் இந்தளவு எந்த படம் பார்க்கும் போதும் எரிச்சல் அடைந்தது இல்லை...

அந்த 4 பேரும் யாரிடமாவது அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.. அல்லது யாருமே துரத்தவில்லை என்றாலும் தப்பித்து ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் அல்லது தேடி போய் வில்லன் கும்பலிடம் வலுக் கட்டாயமாக மாட்டிக் கொள்கிறார்கள்.

ஜெயராமின் லூசுத்தனமான ப்ளாஷ் பேக்... சுத்தமா ஒட்டல.. கர்மம்..

ஒரு பர்சிர்க்காக உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் மீண்டும் ஆபத்தை தேடிப் போகிறார்கள். அதற்கு சொல்லும் காரணம் சுத்த அபத்தம். அதில் இருக்கும் விலாசத்தை வைத்து வில்லன் சரண் வீட்டுக்கு வந்துடுவானாம்... ஏன் வெளிய போலிஸ்ல சொல்ல வேண்டியது தான?

தமிழ்நாட்ல இருந்து போகும் சரணும் அவர் தம்பியும் தெலுங்கில் தான் அதிகம் பேசுகிறார்கள்.. ஆனால் ஆந்திராவில் இருக்கும் அனைவரும் தமிழில் மட்டுமே பேசுகிறார்கள்.. கொடுமைடா சாமி..

பாடல்கள் எல்லாம் பரவாயில்லை...
காட்சி அமைப்பு மகா கேவலம்.. பெரும்பாலான காட்சிகள் ஸ்ளோ மோஷனில் தான் அமைத்திருக்கிறார்கள்.. சீரியல் பார்பப்து போன்ற உணர்வு....

ஒரே ஆறுதல் - ப்ரகாஷ்ராஜ் .. அற்புதமா நடிச்சி இருககார்.. அடுத்து சரண் - மோசம் இல்லை.. கொஞ்சம் நல்லாவே நடிச்சிருக்கார்.. மத்தது எல்லாம் வேஸ்ட்.. பழகின தோஷத்துக்கு வாய்ப்பு கெடைச்சிருக்குன்னு நல்லா தெரியுது..

ப்ரேம்ஜி சொல்லும் காப்பி வசனம் - எவ்வ்வ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாடோமா? மாப்ள.. இனி உங்க குடும்ப படம் தியேட்டர் போய் பாக்க மாட்டோம்டா..

எதாச்சும் கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணுங்க மிஸ்டர் வெங்கட் ப்ரபு.. சகிக்கல உங்க சரக்கு....

இதுக்கு மேல என்னத்த சொல்றது... இனி பழயபடி இணையத்தில் மட்டுமே சினிமா பாக்கறதுனு முடிவு பண்ண வச்ச படம் இது...

... கமல், மணிரத்னம், ஷங்கர் மாதிரி சிலர் படங்கள் மட்டும் விதிவிலக்கு... :)

26 Comments:

said...

me the first

said...

@ rapp
adapaavi adapaavi

said...

nallavelai pizhaitheeeeeen :) :)

said...

பொடிப்பொண்ணு, :):):)

said...

தலைப்புல வெறும் 'ரோஜா'னு வருது. கொஞ்சம் கவனிங்க

said...

:))

said...

ரொம்ப நல்ல படம்னு பல பதிவர்கள் சொன்னாங்களே...?!

said...

8

said...

NINE .....GOOD...

My Keyboard is Working Fine..

:)

said...

தமிழ்லயும் நல்லா டைப் பண்ணுதுப்பா!

அட 10 ம் நானா?

said...

:)

said...

//தமிழன்... said...
ரொம்ப நல்ல படம்னு பல பதிவர்கள் சொன்னாங்களே...?!//

அதான ... ?

said...

எனக்கு தெரிஞ்சி படம் நல்லாவே இல்லைன்னு சொல்ற முதல் ஆள் நீங்கதான் சஞ்சய்.. :(

said...

//வெண்பூ said...

எனக்கு தெரிஞ்சி படம் நல்லாவே இல்லைன்னு சொல்ற முதல் ஆள் நீங்கதான் சஞ்சய்.. :(//

ரிப்பீட்டேய்..


யோவ்.. என்ன கொடுமை இது சஞ்சய்? இன்னைக்குதான் சரோஜா நல்லாயிருக்குன்னு நான் பதிவு போடறேன். என் பதிவுல லிங்க் குடுத்திருக்கற நீங்க மொக்கைப்படம்ங்கறீங்க.

எல்லாரும் நம்ம ரெண்டு பேரும் சும்மா பேசி வெச்சுட்டு பண்றோம்ன்னு கண்டுபிடிச்சுடமாட்டாங்களா?

சும்மா கிண்டலுக்கு இப்படிப் பதிவு போடவான்னு கேட்டீங்க. நெஜமாவே போடுவீங்கன்னு நெனைக்கலியே நண்பா...

said...

உங்கள யாரு அவசரப்பட்டு தியேட்டருக்கெல்லாம் போக சொல்றது!
உங்க ஊருல லோக்கல் சேனல் தெரியாதா!
இங்கே புது படமெல்லாம் நாங்க அதுல தான் பாக்குறது.

அப்படியே இல்லைனா கூட இந்திய தொலைக்காட்சியில் முதன்முறையாகன்னு ஏதாவது தொலைக்காட்சியில் போடுவாங்க அப்போ பாத்துக்கலாம்

said...

ரொம்ப ஆச்சரியமா இருக்கு..

சஞ்சய் மாதிரியான இளைஞர்கள்தான் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அப்படின்னா சஞ்சய் இளைஞர் இல்லையா..? என்னை மாதிரி முதியவரா..?

said...

/
இதுக்கு மேல என்னத்த சொல்றது... இனி பழயபடி இணையத்தில் மட்டுமே சினிமா பாக்கறதுனு முடிவு பண்ண வச்ச படம் இது...
/

எனக்கு 'காதலில் விழுந்தேன்' :(((((((

said...

http://mangalore-siva.blogspot.com/2008/09/blog-post_29.html

said...

http://www.ularal.com/as-aa-aoea-aaaaaaaa/

said...

//இதை முழு நீளக் காமெடி படமாக எடுத்திருந்தால் கொஞ்சம் ரசித்திருக்கலாம்...//

உண்மை

//முதல் 45 நிமிடங்கள் எதோ மியூசிச் சானல் பார்ப்பது போன்ற உணர்வு... அடுத்த காட்சிகள் எல்லாம் என்ன செய்வது என்றே தெரியாமல் திணிக்கப் பட்டிருக்கிறது.. சகிக்கலை//
வழிமொழிகிறேன்

என் கருத்துக்கள் http://www.ularal.com/as-aa-aoea-aaaaaaaa/

said...

செந்தில்: இப்பொழுது அண்ணன் சரோஜா படத்துக்கு வேறு பெயர் வைத்து ரூ200 மொய் செய்வார்!!!

said...

******ப்ரேம்ஜிக்காக திணித்திருக்கும் situation songs எல்லாம் செம எரிச்சல் ரகம்*****

ஆமாம். மகா கடி. ஆனா பிரேம்ஜி "யாரு இந்த பிகரு " அப்படின்னு கேப்பாரே அது சூப்பர்.

யுவன் சங்கர் ராஜா - கொஞ்ச நாள் background மியூசிக் போடாம இருக்கலாம்.

said...

@ ராப்: நன்றி தல... :)
//தலைப்புல வெறும் 'ரோஜா'னு வருது. கொஞ்சம் கவனிங்க//

அட நீங்க வேற தல.. இந்த அட்டு படத்துக்கு எங்க அம்மா பேரை வச்சிட்டானுங்கனு ஃபீல் பண்றேன்.. நீங்க காமெடி பன்றிங்க.. :((

---
@ பொடிப் பொண்ணு said...
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :)
//nallavelai pizhaitheeeeeen :) :)//

ச்ச.. மிஸ் ஆய்டிச்சே.. ஒருவேளை தஞ்சாவூர்ல நல்லா இருக்கலாம்.. போய் பாரு.. :)
-----
//ரொம்ப நல்ல படம்னு பல பதிவர்கள் சொன்னாங்களே...?//

வதந்தியை நம்ப வேண்டாம் தமிழன்.. எல்லாம் யான் பெற்ற இன்பம்_____ கொள்கை தான்.. ஏமாந்துடாதிங்க.. :)

said...

@ சுரேகா..
இந்த பின்னூட்டங்கள் நீங்க போட்டதா இல்லை.. ”சாரி நான் சுரேகாவின் கணிப்பொறி” என்ற பிரபல பதிவர் போட்டதா? :)))
---
நன்றி கார்த்திக்..
-----
தருமி சார்.. நீங்களும் வதந்தியை நம்பாதிங்க :)

----
@ வெண்பூ :
என்ன பண்றது அண்ணாச்சி.. எனக்க்கு நல்ல ரசனை இல்லையோ என்னவோ?.. நீங்க பாத்திங்களா?.. நிஜமா பிடிச்சிருந்ததா? :((
-----
@ பரிசலார் : அட நம்புங்க.. மெய்யாலுமே செம எரிச்சல்.. :(
//சும்மா கிண்டலுக்கு இப்படிப் பதிவு போடவான்னு கேட்டீங்க. நெஜமாவே போடுவீங்கன்னு நெனைக்கலியே நண்பா...//

ஹிஹி.. வெங்கட் பிரபு கிட்ட எவ்ளோ பொட்டி வாங்குனிங்க? :))

-------

said...

@ வால் : ஈரோட்ல இருக்கும் போது நானும் எல்லாப் படங்களையும் பாலிமர்ல தான் பாத்தேன்.. ஆனா என்ன பன்றது.. இங்க இருக்கிற பாலிமர் புது படம் போட மாட்டேங்கறங்களே.. :(
-------
@ உ.தமிழன் அண்ணாச்சி : அதுல ரசிக்கிற மாதிரி ஒண்ணுமே இல்லை அண்ணாச்சி.. வெங்கட் பிரபு படம்னா நல்லா தான் இருக்கும்னு ஒரு முடிவோட போனா அப்டி தான் சொல்வாங்க.. எல்லாம் சென்னை 28ன் புண்ணியம்.., புலிகேசி மாதிரியே நா. அழகப்பன் இருக்கும்னு நெனைச்சிட்டு போய் அதே ஞாபகத்துல பார்த்து அதை ஆஹா ஓஹோனு புகழ்ந்தவங்களும் இருக்காங்க.. :)
( உங்களுக்கு பதில் சொல்ற பின்னூட்டம் கூட பெரிசய்டுது போங்க.. :)) )
------

said...

@ சிவா மாம்ஸ்
//

எனக்கு 'காதலில் விழுந்தேன்' :(((((((//
நீங்க காதலில் விழுந்தேன் பார்த்ததால் உங்களுக்கு கஷ்டம்.. உங்க காதலில் விழுந்ததால இன்னொருந்தர் ரொம்ப கஷ்ட பட்றாங்களாமே.. அப்டியா? :))

--------
@ புருனோ :
நன்றி டாக்டர்.. உங்க பதிவு பார்த்தேன்.. ரொம்ப சரியா சொல்லி இருக்கிங்க.. இதை எல்லாம் எப்டி தான் ரசிக்கிறாங்களோ? :(
-----
@ குசும்பன் :
வெரும் 200 தானா? 2000000 தருகிறேன்.. வழக்கம் போல வெரும் கவரில் எழுதி :))
--------
நன்றி மணிகண்டன்... பின்னனி இசை பத்தி இளையராஜா கிட்ட கொஞ்சம் யுவன் கத்துக்கலாம்..

Tamiler This Week