இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Monday, 1 September, 2008

இது பொம்பளைங்க சமாச்சாரம்..பெண்ணியவாதிகள் கவனிக்க..

சமீபத்தில் தோழி ஒருத்தியிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது , பெண்களை பற்றி இழிவாக பேசினால் தான் பொங்கி எழுந்துவிடுவேன் என்று மிரட்டினார். நான் எதும் இழிவாக பேசவில்லை. பெண்ணியம் பற்றி பேசிக் கொண்டிருந்த போது எதேச்சையாக அவர் அப்படி சொன்னார். எதிர்காலத்தில் மகளிர் சங்கத்தில் சேர்ந்து பெண்களுக்காக சேவை செய்யப் போவதாக சொன்னார். வாழ்த்துக்கள்.. :)

எனக்கு தெரிந்தவரையில் மாதர் சங்கம் என்றால் சமுதாயத்தில் பிரபலமானவர்களுக்கு எதிராக மட்டுமே போராடும் சங்கம் தான். தினம் தினம் எத்தைனையோ ஏழை பெண்களுக்கு ஆண் மக்களால் அல்லது மாமியார்களால் பல கொடுமைகள் நடக்கிறது. அதை எல்லாம் அவர்கள் எதிர்ப்பதில்லை. இவர்கள் போராட்டம் நடத்தும் சம்பவத்தில், ஒன்று பாதிக்கப்பட்டவர் பிரபலமானவராக இருப்பார் அல்லது குற்றவாளி பிரபலமாக இருப்பார். அப்போது தான் இவர்கள் வீதிக்கு வருவார்கள். அப்போ தானே இவர்களுக்கும் பப்ளிசிட்டி கிடைக்கும்?...

அதனால்.. இந்த வகை பெண்ணியவாதியாகத் தானே வரப் போகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவர் நீண்ட தயக்கத்திற்கு பிறகு ஒரு திட்டத்தை சொன்னார். ரொம்ப அற்புதமான திட்டம். முயன்றால் செயல்படுத்தவும் முடியும்...

திட்டம் இது தான் :
1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்(Sanitary napkins) விநியோகிப்பது. கூச்சமாக உணர்ந்ததால் அவர் இதை பற்றி விரிவாக என்னிடம் எதும் சொலவில்லை. நானும் விட்டுவிட்டேன். அதான் இருக்கவே இருக்கிறதே இணையம்.. :)

உருப்படியான மேட்டராக பட்டதால் இணைய ஆராய்ச்சியில் இறங்கியதில் கிடைத்தவை..
பெண்கள் மாதவிலக்கு சமயங்களில் அதிக flow இருக்கும் சமயங்களில் 4 முதல் 6 மணி நேரங்களுக்கு ஒரு முறை நாப்கின் மாற்ற வேண்டும். குறைந்த பட்சம் 3 நாட்களுக்கு எவ்வளவு தேவை என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். கடைகளில் விற்கும் நாப்கின்கள் ஏழை பெண்கள் வாங்கும் நிலையில் இல்லை. கிராமங்களின் நிலை பற்றி சொல்லவே வேண்டாம். வாங்கும் நிலையில் வசதி இருந்தாலும் விற்பவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே ஏழை பெண்களும் கிராமத்து பெண்களும் சாதாரன துணிகளையே உபயோகிக்கிறார்களாம். அதையும் புதிது புதிதாக எல்லாம் உபயோகிப்பதில்லையாம். ஒரே துணியை துவைத்து உலர்த்தி பின் அதையே உபயோகிக்கிறார்களாம். இதனால் கிருமிகள் தோன்றி தொற்று நோய்கள் வருமாம். எவ்வளவு கொடுமையான விஷய்ம்?

ஆகவே தோழி சொன்னது போல் இதை 1 ரூபாய்க்கு விற்பதன் மூலம் பலரும் உபயோகிக்க வைக்க முடியும். அதையும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் தயாரித்து விற்றால் மலிவாகவும் விற்க முடியும் என்று சொன்னார்.. மேலும் சுய உதவிக் குழுக்களுக்கும் வருமானம் கிடைத்த மாதிரி ஆகும்... கிராமப் புற சுய உதவிக் குழு பெண்கள் மூலம் பிறரையும் நாப்கின் உபயோக படுத்த வைக்க முடியும்.

நான் கேட்பது...அதை ஏன் 1 ரூபாய்க்கு விற்க வேண்டும்? ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவே அரசாங்கம் தரலாமே. எய்ட்ஸ் என்னும் கொடிய நோயில் இருந்து தப்பிக்க இலவசமாக ஆணுரை வழங்கம் போது பெண்களின் ஆரோக்கியத்திற்காக இதை ஏன் இலவசமாக வழங்கக் கூடாது. ரேஷன் கடைகளில் விற்கும் போது கிராமத்து பெண்களும் நகரத்து ஏழை பெண்களும் எளிதில் வாங்கி உபயோகிக்க முடியுமே. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இதை தயாரிக்க பயிற்சி அளித்து அவர்களிடமே அரசங்கம் இதை வாங்கி அவர்களுக்கும் வருமானத்திற்கு வழி செய்யலாம். ஆனால் இதை அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கும் நிறுவனங்கள் இதற்கு தடையாக இல்லாமல் இருக்கனும்.

1 ரூபாய்க்கு அரிசி கொடுக்க நிதி இருக்கும் போது அரசாங்கத்திற்கு இதற்கு நிதி இருக்காதா?.. ஒரு வேளை அரசாங்கத்திற்கு இந்த யோசனை இல்லாமல் கூட போயிருக்கலாம். ஆனால் வாய் கிழிய பேசும் பெண்ணிய வாதிகள் இதற்கு என்ன முயற்சி எடுத்தார்கள்?...

54 Comments:

said...

//நான் கேட்பது...அதை ஏன் 1 ரூபாய்க்கு விற்க வேண்டும்? ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவே அரசாங்கம் தரலாமே. //

கொடுக்கலாம் மாம்ஸ் பிரச்சினை என்னன்னா இலவசமாக கொடுக்கிறார்கள் என்றால் முதல் ஆளாக நீங்களே Qவில் நிற்பீர்கள்.

said...

//1 ரூபாய்க்கு அரிசி கொடுக்க நிதி இருக்கும் போது அரசாங்கத்திற்கு இதற்கு நிதி இருக்காதா?//

ஏழைகளுக்கு அரிசி கொடுத்தவர் எங்கள் தலைவர் என்று தேர்தல் சமயத்தில் தெரு தெருவா குழாய் ஸ்பீக்கர் கட்டி கூவலாம்.

ஆனா இதை கொடுத்தா பெண்களுக்கு நாப்கின் கொடுத்த வள்ளல் என்று கூவ கூச்சமாக இருக்குமே மாம்ஸ்:))

உங்க தோழியே
( கூச்சமாக உணர்ந்ததால் அவர் இதை பற்றி விரிவாக என்னிடம் எதும் சொலவில்லை. )

said...

இதைப் பற்றி எழுதியதற்கு முதலில் எனது பாராட்டுக்கள் சஞ்சய்.

said...
This comment has been removed by the author.
said...

ஆஹா அப்ப நானும் பாராட்டு சொல்லிக்கனுமா?

மாம்ஸ் பாராட்டுக்கள் மாம்ஸ்.

said...

உங்கள் தோழி சொன்னது மிகவும் அருமையான யோசனை சஞ்சய்.
ஆனால் நீங்கள் சொல்வது போல் அதை இலவசமாக கொடுக்க கூடாது.
மிகக் குறைந்த விலையில் இதை தயாரிக்க கோவையை சேர்ந்த ஒருவர் தொழில்நுட்பமும், இயந்திரங்களையும் கண்டுபிடித்துள்ளார். அவரும் இந்த தொழில்நுட்பத்தை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கற்றுத்தந்து, தனது இயந்திரத்தையும் விற்கிறார். இயந்திரத்தின் விலை 35000 என நினைக்கிறேன். அவரது விவரங்களை சமீபத்தில் படித்தேன். விரைவில் அந்த விவரங்களை கண்டறிந்து உங்களுக்கு தர முயற்சிக்கிறேன். நீங்கள் உங்கள் தோழிக்கு தெரிவியுங்கள். இப்படி அடிதட்டு மக்களின் அத்தியாவசியமான தேவைகளை பூர்த்திசெய்ய நினைக்கும் உங்கள் தோழிக்கு எனது வாழ்த்துக்களை கட்டாயம் தெரிவியுங்கள்.

(2013ல் எங்கள் ஆட்சியில் அவருக்கு மத்திய மகளிர் நலத்துறை அமைச்சர் பதவி தரத் தயாராக உள்ளோம்.)

said...

ஏழை பெண்களும் கிராமத்து பெண்களும் சாதாரன துணிகளையே உபயோகிக்கிறார்களாம். அதையும் புதிது புதிதாக எல்லாம் உபயோகிப்பதில்லையாம். ஒரே துணியை துவைத்து உலர்த்தி பின் அதையே உபயோகிக்கிறார்களாம்.//

நகரத்தில் கூட அனைவரும் இதை வாங்குவது இல்லை. பணம் அதிகம் ஆகிறது என்பது காரணம்.

நாங்களெல்லாம் இதைத்தான் உபயோகித்தோமா என்று கேட்கும் அம்மாக்களும், மாமியார்களும் இன்று இருக்கிறார்கள். வேலைக்கு போகாத பெண்களும் இதற்காக பணம் கேட்க கணவரிடம் கூச்ச படுகிறார்கள். மாத லிஸ்டில் இதைச் சேர்த்தால் மாமியார் முகம் தூக்கி வைத்துக்கொண்டு பெரிய பிரச்சனை ஆகிறாதாம்.

இவைகளெல்லாம் நான் எடுத்து வைத்திருக்கும் சர்வே ரிசல்ட்கள் சஞ்சய்//

இதனால் கிருமிகள் தோன்றி தொற்று நோய்கள் வருமாம்.

//சுகாதாரமாக இல்லாததால் பல நோய்கள் வரக் காரணம்.//

said...

பயன்படுத்தியதைச் சரிவர டிஸ்போஸ் செய்யவும் சொல்லிக் கொடுக்கணும். அதுக்கு எதாவது ஏற்பாடுகள் இருக்குமா?

சென்னை போன்ற பெரிய நகரங்களிலேயே (முக்கியமாக அட்டகாசமான அடுக்குமாடிகள் இருக்கும் இடங்களில்) தெருவில் கிடப்பதைப் பார்த்திருக்கேன். குப்பைத்தொட்டியில் சரியாகப் பார்த்து எய்ம் பண்ணத் தெரியலை போல(-:

said...

மாம்ஸ் வாசகர் பரிந்துரைக்கு இந்த பதிவுக்கு ஒரு ஓட்டு போட்டு இருக்கேன்.

said...

இந்தப் பதிவிற்குப் பாராட்டுகள். குசும்பனாவது இங்க மட்டும்தான் வோட்டுப் போட்டார். நான் இங்க + தமிழிஷ் ரெண்டுலயும் போட்டிருக்கேன் :)

said...

சஞ்சய் ஒரு சென்சிடிவான டெலிகேட் மேட்டரை பதிவிட்ட துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.
முன்பைவிட விலைமலிந்த பல பிராண்ட்கள் கிடைக்கின்றன.இன்னும் மலிவாகக் கிடைத்தால் நல்லதுதான்.
விஷ்யம் தெரிந்த சிலர் பேண்டேஜ் காட்டன் ரோல்களை வாங்கி துணியோடு பயன்படுதுவதும் உண்டு.
ஆனால் முக்கியமான விஷயம் அதை டிஸ்போஸ் செய்வது.துளைசியக்கா சொன்னது போல இப்பவும் எங்கள் பகுதியில் பார்க்க நேர்கிறது.குறைந்தபட்சம் கறைய்ஆவது நீக்கி போடலாம்.நாய்களிடம் படும் பாடு அநாகரிகம்.இதற்கு காரணம் அலட்சியமும் அதை எரிக்கக்கூடாது எனச் சொல்லப்படும் மூட நம்பிக்கையும்.
தொற்று பரவுவது உண்மை மட்டுமல்ல.மிக அபாயகரமானது என டாக்டர்ஜெயாஸ்ரீதர் ஜூவியில் எழுதியதைப் படித்திருக்கேன்.
அதற்கும் கூச்சமே காரணம்.யார் கண்ணிலும் படக்கூடாது என்பதால் துணிகளை மறைவான இடத்திலும்,சூரிய ஒளி படாமலும் காய வைப்பது.
துணி என்றாலும் அடிக்கடி டிஸ்போஸ் செய்து மாத்திடனும்.
இந்த விழிப்புணர்வு நிச்சயம் தேவைதான்.
இலவசமாக தர வேண்டிய தேவையில்லை.மலிவாக கிடைத்தாலே போதும்.

said...

உருப்படியான 'ஏதாவது செய்யணும் பாஸ்'!

பாராட்டுகள்.

நீங்க செல்லாவோ அப்படீங்கற சந்தேகம் வலுத்து வருகிறது.

said...

//பயன்படுத்தியதைச் சரிவர டிஸ்போஸ் செய்யவும் சொல்லிக் கொடுக்கணும். அதுக்கு எதாவது ஏற்பாடுகள் இருக்குமா?

சென்னை போன்ற பெரிய நகரங்களிலேயே (முக்கியமாக அட்டகாசமான அடுக்குமாடிகள் இருக்கும் இடங்களில்) தெருவில் கிடப்பதைப் பார்த்திருக்கேன்.//

விமானங்களில் வைத்திருப்பது போன்று டீஸ்போசபிள் கவரில் போட்டு குப்பைத் தொட்டியில் போடலாம்.

சுகாதாரப் பணியாளர்களுக்கும் சாக்கடைகளை சுத்தம் செய்கையில் இது ஒரு பெரும் தலைவலியே.

said...
This comment has been removed by the author.
said...

சஞ்சய் எனது முந்தைய பின்னூட்டத்தில் சொல்லியிருந்தபடி எல்லா விவரங்களுடனும், ஒரு பதிவிட்டுள்ளேன். பாருங்கள்.
http://maraneri.blogspot.com/2008/09/blog-post.html

( நாங்க சொல்றதத்தான் செய்வேம், செய்யிறதத்தான் சொல்வோம். )

said...

எப்படிங்க இப்படி?

விழிப்புணர்வு என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்களுக்கு இது தான் தோன்றியதா?
ஆனால் தேவையான பதிவு தான்!

இலவச திட்டம் இப்போதோ பெண்கள் உயர்நிலை பாளிகளில் இருப்பதாக தகவல்,
அது முழுவதும் போய் சேராமல் இருக்கலாம். மாதர் சங்கங்கள் அதை கவனத்தில் கொண்டு வரவேண்டும்.

said...

//குசும்பன் said...

மாம்ஸ் வாசகர் பரிந்துரைக்கு இந்த பதிவுக்கு ஒரு ஓட்டு போட்டு இருக்கேன்.//


ரிப்பீட்டேய்...!

said...

சஞ்சய்,

உண்மையிலேயே சூப்பரான பதிவு.

said...

//
குசும்பன் said...

//நான் கேட்பது...அதை ஏன் 1 ரூபாய்க்கு விற்க வேண்டும்? ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவே அரசாங்கம் தரலாமே. //

கொடுக்கலாம் மாம்ஸ் பிரச்சினை என்னன்னா இலவசமாக கொடுக்கிறார்கள் என்றால் முதல் ஆளாக நீங்களே Qவில் நிற்பீர்கள்.
//

repeateyyy

said...

//
குசும்பன் said...

//1 ரூபாய்க்கு அரிசி கொடுக்க நிதி இருக்கும் போது அரசாங்கத்திற்கு இதற்கு நிதி இருக்காதா?//

ஏழைகளுக்கு அரிசி கொடுத்தவர் எங்கள் தலைவர் என்று தேர்தல் சமயத்தில் தெரு தெருவா குழாய் ஸ்பீக்கர் கட்டி கூவலாம்.

ஆனா இதை கொடுத்தா பெண்களுக்கு நாப்கின் கொடுத்த வள்ளல் என்று கூவ கூச்சமாக இருக்குமே மாம்ஸ்:))

உங்க தோழியே
( கூச்சமாக உணர்ந்ததால் அவர் இதை பற்றி விரிவாக என்னிடம் எதும் சொலவில்லை. )
//

repeateyyyy

said...

//
குசும்பன் said...

ஆஹா அப்ப நானும் பாராட்டு சொல்லிக்கனுமா?

மாம்ஸ் பாராட்டுக்கள் மாம்ஸ்.
//

repeateYYY

said...

//குசும்பன் said...

மாம்ஸ் வாசகர் பரிந்துரைக்கு இந்த பதிவுக்கு ஒரு ஓட்டு போட்டு இருக்கேன்.//

கல்யாணம் ஆன சில நாட்களிலேயே பெண்ணிய பதிவராக மாறிய சர்வதேசப் பதிவர் குசும்பன் அவர்களே நன்றி நன்றி நன்றி.. :))

( பின்ன .. முதல் ஓட்டு போட்டவராச்சே.. :P )

said...

//புதுகைத் தென்றல் said...

இதைப் பற்றி எழுதியதற்கு முதலில் எனது பாராட்டுக்கள் சஞ்சய்.//

நன்றி தென்றல் அக்கா.. உங்க பதிவில் இணைப்பு கொடுத்ததற்கு இன்னொருக்கா நன்ரி.. :)

-----
// குசும்பன் said...

ஆஹா அப்ப நானும் பாராட்டு சொல்லிக்கனுமா?

மாம்ஸ் பாராட்டுக்கள் மாம்ஸ்.//

உம்மை எல்லாம் கொழுக்கட்டை செய்ய சொன்னதோட விட்டிருக்க கூடாது.. :)

said...

//ஜோசப் பால்ராஜ் said...

உங்கள் தோழி சொன்னது மிகவும் அருமையான யோசனை சஞ்சய்.
ஆனால் நீங்கள் சொல்வது போல் அதை இலவசமாக கொடுக்க கூடாது.//

தேவை இல்லாத எவ்வளவோ இலவசமாக வழங்கும் போது இதை தரலாம் நண்பா.. தவறில்லை.. அரசாங்கத்திற்கு பெரிய நிதி இழப்பு ஏற்பட்டு விடாது. விளக்கமான பின்னூட்டத்திற்கும் இதற்காக தனி பதிவிட்டதற்கும் நன்றி ஜோசப்.

said...

//இவைகளெல்லாம் நான் எடுத்து வைத்திருக்கும் சர்வே ரிசல்ட்கள் சஞ்சய்//

நல்ல விஷயம் எல்லாம் பன்றிங்க.. வாழ்த்துக்கள் கலா அக்கா.. :)

---
//துளசி கோபால் said...

பயன்படுத்தியதைச் சரிவர டிஸ்போஸ் செய்யவும் சொல்லிக் கொடுக்கணும். அதுக்கு எதாவது ஏற்பாடுகள் இருக்குமா?//

உங்களுக்கு தெரிந்த இந்த விஷயத்தை தெரியாத ஒருவருக்கு சொல்லுங்கள்.. பிறகு அவர் வேறொருவருக்கு சொல்வார்.. அப்படியே பரவலாக எல்லோரும் அறிய செய்யலாம்.

said...

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தப் பதிவிற்குப் பாராட்டுகள். குசும்பனாவது இங்க மட்டும்தான் வோட்டுப் போட்டார். நான் இங்க + தமிழிஷ் ரெண்டுலயும் போட்டிருக்கேன் :)//

நன்றி சுந்தர் ஐயா.. :)

----

@ கண்மணி டீச்சர்
//.இதற்கு காரணம் அலட்சியமும் அதை எரிக்கக்கூடாது எனச் சொல்லப்படும் மூட நம்பிக்கையும்.
தொற்று பரவுவது உண்மை மட்டுமல்ல.மிக அபாயகரமானது என டாக்டர்ஜெயாஸ்ரீதர் ஜூவியில் எழுதியதைப் படித்திருக்கேன்.
அதற்கும் கூச்சமே காரணம்.யார் கண்ணிலும் படக்கூடாது என்பதால் துணிகளை மறைவான இடத்திலும்,சூரிய ஒளி படாமலும் காய வைப்பது.
துணி என்றாலும் அடிக்கடி டிஸ்போஸ் செய்து மாத்திடனும்.
இந்த விழிப்புணர்வு நிச்சயம் தேவைதான்.//
இது போன்ற தகவல்களை உங்களை போன்ற பொறுபுள்ளவர்கள் எழுதினால் பெரிய அளவில் விழிப்புணர்வை எற்படுத்த முடியும். ஆர்ரோக்கியம் சம்பந்த பட்ட விஷயத்தில் கூச்சம் எதற்கு?

சகோதரி டாக்டர் ஷாலினி தனி ஆளாக எவ்வளவுதான் பேசுவார்? எல்லா பெண்களும் அவரை பின்பற்ற வேண்டும்.

said...

//Indian said...

உருப்படியான 'ஏதாவது செய்யணும் பாஸ்'!

பாராட்டுகள்.//
நன்றி பாஸு.. :))

// நீங்க செல்லாவோ அப்படீங்கற சந்தேகம் வலுத்து வருகிறது.//
ஹிஹி.. இந்த விளையாட்டு கூட நல்லா தான் இருக்கு.. ஆனால் பதிவர்கள் பாதி பேருக்கு என்னை நன்றாகத் தெரியுமே.. :(


//விமானங்களில் வைத்திருப்பது போன்று டீஸ்போசபிள் கவரில் போட்டு குப்பைத் தொட்டியில் போடலாம்.//

நல்ல யோசனை..

//சுகாதாரப் பணியாளர்களுக்கும் சாக்கடைகளை சுத்தம் செய்கையில் இது ஒரு பெரும் தலைவலியே.//
நிச்சயமாக..

said...

நன்றி வால்பையன்

நன்றி நல்லவரே

நன்றி கார்த்திக்

----

பெண்ணிய பதிவை கிண்டல் செய்யும் ஆணீய பதிவர் மங்களூர் சிவாவை கண்டிக்கிறேன்.. :))

said...

இப்போ நம்ம சென்னை மாநகரப் பள்ளிகளில் இதை இலவசமா தருகிறார்கள் எனவும், இதை எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப் போகிறார்கள் எனப் படித்தேன். இதை ஒரு இயக்கம் போல வட இந்தியாவில் ஒருக் குழு விநியோகித்து சேவை புரிகிறது என்றும் படித்தேன். இதை போல உங்கள் தோழியும் செய்ய இருப்பதை எண்ணி மிகவும் சந்தோஷம். உங்களுக்கும் ஜோசப் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் :):):)

said...

இது ஒரு விழிப்புணர்வு பதிவு. உங்கள் தோழிக்கும் எனது பாராட்டுக்கள். சுகாதரம் என்று வரும் போது துளசி மேடம், கண்மணி ஆகியோர் சொல்லியிருப்பதும் கவனிக்க வேண்டியது.

said...

பொடியா,

நல்ல விஷயம் நாலு பேருக்கு சென்று சேரும்போது, என்ன வெட்கம்?

குடும்பத்தோட உக்காந்து குத்தாட்டம் பாக்கும்போதோ, மானாட மயிராட, கேடி நம்பர் ஒன் பாக்கும்போதோ வெக்கப்படாத நாம், இந்த மாதிரி ஆக்கப் பூர்வ விஷயங்களுக்கு வெக்கப் பட நேரும்போது, உண்மையில் வெக்கமாத்தான் இருக்கு!

பதிவுக்கு வாழ்த்துக்கள்.

said...

நல்ல பதிவு சஞ்சய்.

said...

//விமானங்களில் வைத்திருப்பது போன்று டீஸ்போசபிள் கவரில் ...//

அதானே.... 'ரொட்டிக்குப் பஞ்சம் வந்துருச்சா? அப்ப கேக் தின்னுங்க'ன்னு ஒரு ராணி சொன்னாங்களாம்.

நம்மூர்லே காகிதம் பொறுக்கி விக்கறதுன்னு ஒரு விசயம் இருக்கு என்பதை இங்கே நினைவு படுத்தறேன்

said...

பதிவு பதிவு...

said...

நல்ல விசயம்தான்...

said...

மங்களூர் சிவா said...
//
குசும்பன் said...

//1 ரூபாய்க்கு அரிசி கொடுக்க நிதி இருக்கும் போது அரசாங்கத்திற்கு இதற்கு நிதி இருக்காதா?//

ஏழைகளுக்கு அரிசி கொடுத்தவர் எங்கள் தலைவர் என்று தேர்தல் சமயத்தில் தெரு தெருவா குழாய் ஸ்பீக்கர் கட்டி கூவலாம்.

ஆனா இதை கொடுத்தா பெண்களுக்கு நாப்கின் கொடுத்த வள்ளல் என்று கூவ கூச்சமாக இருக்குமே மாம்ஸ்:))

உங்க தோழியே
( கூச்சமாக உணர்ந்ததால் அவர் இதை பற்றி விரிவாக என்னிடம் எதும் சொலவில்லை. )
\\\


நானும் இதுக்கு ரிப்பீட்டு...:)

said...

பாராட்டுக்கள்...:)

said...

இப்படிப்பட்ட ஒரு sensitive topic-ஐ அழகாய் கையாண்ட விதத்தில் சஞ்சய்க்கு ஒரு பாராட்டு. பெண்களே இதைப்பற்றி வெளிப்படையாக பேச கூச்சப்படும் ஒரு மேட்டரை பற்றி தைரியமாக சொல்லியிருக்கீங்க.

நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை. எல்லாரும் வாங்கமுடியுற அளவுக்கு விலையை குறைக்க அல்லது ரேஷன் கடைகளில் இலவசமாக கொடுக்க (எங்க ஊருல எல்லாம் இந்த மாதிரி ரேஷன் கடைகளே கிடையாது).

இங்கே ரேஷன் கடைகளும் தேவைப்படவில்லை. அது வேற விஷயம்.

இப்போதெல்லாம் குறைவான விலையில் தரமான pads கிடைக்கின்றது. அதனால் எல்லா தரப்பினரும் பயன்படுத்த ஏதுவாக இருக்கின்றது. இது இங்கே உள்ள நிலவரம். இந்தியாவில் எப்படின்னு எனக்கு தெரியாது.

அப்புறம் துளசி டிச்சர், கண்மணி டீச்சர் சொல்வதை நான் வழிமொழிகிறேன். எவ்வளவுக்கெவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. இப்படி சரியாக பராமரிக்காமலும், சரியாக டிஸ்போஸ் செய்யப்படாததாலும் பல பிரச்சனைகள் வருது.

பள்ளியிலேயே இதற்கான சரியான பாடங்களையும் விளக்கங்களையும் கொடுப்பது நல்லது. தனியே கேட்க கூச்சப்படுபவகளுக்கு இப்படி பல பெண் மாணவிகள் கூட்டி சொல்லிக்கொடுத்தால் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்களை கண்டிப்பாக தெரிஞ்சிக்குவாங்க. அதை நடைமுறைப்படுத்துவாங்க. நான் இடைநிலை பள்ளியில் படிக்கும்போது எங்க பள்ளியில் இப்படிப்பட்ட செமினார்கள் வருடத்துக்கு ஒன்றாவது நடத்துவாங்க.

said...

வாழ்த்துக்கள். :-)

said...

கொஞ்ச நாட்களுக்கு முன், ரீயுசபிள் கப் பத்தி ஒரு டிஸ்கஸன் வந்தது. அது எந்த அளவுக்கு இந்தியாவில் சாத்தியம் என்பது தெரியவில்லை. அது பத்தியும், எல்.எஸ் அரவிந்தாவின் அனுபவங்கள் பத்தியும் இங்கே காணலாம்:

http://www.indiatogether.org/manushi/issue150/greetflo.htm

said...

****ஆகவே ஏழை பெண்களும் கிராமத்து பெண்களும் சாதாரன துணிகளையே உபயோகிக்கிறார்களாம். அதையும் புதிது புதிதாக எல்லாம் உபயோகிப்பதில்லையாம். ஒரே துணியை துவைத்து உலர்த்தி பின் அதையே உபயோகிக்கிறார்களாம். இதனால் கிருமிகள் தோன்றி தொற்று நோய்கள் வருமாம். எவ்வளவு கொடுமையான விஷய்ம்?***

திரு. சஞ்சய்!

ஒரே துணியை துவைத்து மறுபடியும் பயன்படுத்துகிறார்களா?

சரி, அப்படியே இருக்கட்டும். அதை சோப் போட்டு வாஷ் பண்ணி பயன் படுத்துவார்கள்னு வைத்துக்கொள்வோம்

அப்படி பயன்படுத்துவதால் கிருமிகள் தோன்றி தொற்று நோய்கள் வருமா, பரவுமா?

இது எனக்குப்புரியவில்லை!

என்ன மாதிரி தொற்று நோய் வருமாம்?

யாரிடம் இருந்து யாருக்கு தொற்றும் இந்த நோய்?

கொஞ்சம் விபரமாகச்சொல்லவும்!

said...

very good thinking..Even ladies did not talk about this till now..
Congrats Mr.Sanjay

said...

மிக நல்ல பதிவு. ஏழைகள் என்றில்லை.மத்தியதர மக்களுக்கும் இவைகளின் விலை கொஞ்சம் எட்டாக்கனிதான்.
எத்தனையோ பிரசாரங்கள் பொதிகையிலியே நான் பார்த்திருக்கிறேன். விழிப்புணர்வு நிறைய வந்திருக்கிறது.
இலவசமாக வேண்டாம் ,உங்கள் தோழி சொல்லியிருப்பது போல செய்தால் போதும். இதைக் கருவாக எடுத்துப் பதிவு போட்டது வெகு திருப்தியாக இருக்கிறது சஞ்சய்.

said...

ஆஹா..
நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க!
பாராட்டுக்கள் சஞ்சய்!

இதை முதலில்
கிராமப்புற
மேல்நிலைப்பள்ளிகளில்
அறிமுகப்படுத்தும்
எண்ணம்
நாங்கள் செயல்படும்
ஒரு அமைப்புக்கு இருக்கிறது
என்பது ஒரு கூடுதல் தகவல்!

நாளை உலகத்தை
ஒவ்வொரு செங்கலாக அடுக்கி
நாமே உருவாக்குவோம்.

said...

ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறேன் பேர்வழி என்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேலை. ஒரு மூட்டை உரம் ஆயிரம் ரூபாய் விற்கிறது. வெளிநாட்டில் ஒரு கிலோ அரிசி 150 ரூபாய்க்கு வாங்குகிறோம். வெளிநாட்டில் நாப்கின் விலை குறைவாக உள்ளது. நம்மூரில் ஏழை மக்கள் வாங்க முடியவில்லை(விலை அதிகமாக உள்ளது) ஆட்சியாளர்கள் இதைப் பற்றி சிந்திக்கலாமே?

said...

மிகவும் சென்சிடிவ் விஷயத்தை ரொம்ப தைரியமாக , தெளிவாக சொன்ன சஞ்சய்க்கு என் பாராட்டுக்கள் ! கலக்கிடீங்க போங்க :) :)

said...

நன்றி ராப்..

நன்றி ராமலக்ஷ்மி அக்கா

நன்றி தஞ்சாவூரான்.. சும்மா நச்சின்னு சொல்லிட்டிங்க.. :)

நன்றி ஓவியா?( சமீபத்துல விகடன்ல வந்தது உங்க பதிவா?)

நன்றி துளசி டீச்சர்

நன்றி தமிழன்

நன்றி மைஃப்ரண்ட்
//பள்ளியிலேயே இதற்கான சரியான பாடங்களையும் விளக்கங்களையும் கொடுப்பது நல்லது. தனியே கேட்க கூச்சப்படுபவகளுக்கு இப்படி பல பெண் மாணவிகள் கூட்டி சொல்லிக்கொடுத்தால் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்களை கண்டிப்பாக தெரிஞ்சிக்குவாங்க. அதை நடைமுறைப்படுத்துவாங்க. நான் இடைநிலை பள்ளியில் படிக்கும்போது எங்க பள்ளியில் இப்படிப்பட்ட செமினார்கள் வருடத்துக்கு ஒன்றாவது நடத்துவாங்க.//

யோசிக்க வேண்டிய கருத்து.

said...

நன்றி வருண்.. நேரம் கிடைக்கும் போது விவரமாக சொல்கிறேன்.

நன்றி ராஜி

நன்றி வல்லியம்மா

நன்றி சுரேகா.. உங்கள் பணிக்கு பாராட்டுக்கள்

நன்றி ஜோதிபாரதி

நன்றி பொடிப்பொண்ணு.. உனக்கு தான் ஸ்பெஷல் நன்றிகள். :)

said...

இந்த பதிவி நான் எழுதும் போது எனக்கு எந்தவிதமான வித்தியாசமான உணர்வும் வரவில்லை. ஒரு வழக்கமான பதிவாகத் தான் எழுதினேன். இதற்கு சக பதிவர்களிடமிருந்து வந்த பின்னூட்டங்களை பார்க்கும் போது தான்.. குறிப்பாக பெண் பதிவர்களின் பின்னூட்டங்களை பார்க்கும் போது தான் .. இது பலரும் தொட தயங்கிய ஆனால் தேவைப்படும் ஒரு பதிவாக இருந்திருப்பது தெரியவருகிறது. ஆரோக்கியம் சம்பத்தப் பட்ட ஒரு விஷயத்தில் இவ்வளவு தயக்கமா?

பெண்கள் தங்கள் உடல் உபாதைகளை பற்றி கூட பொதுவில் பேசத் தயங்குவது ஏன் என்று புரியவில்லை.

எதுவாயினும், யாரோ ஒருவன் எழுதியதை முகம் சுழிக்காமல் அல்லது தயங்காமல் வந்து ஆமோதிக்கிறார்களே.. அது வரையிலாவது சந்தோஷம்...

பெண்கள் நிறைய பேசனும்...

இந்த பதிவை நான் எழுத காரணமான அந்த தோழியும் பதிவர்தான். இந்த பதிவுக்கும் பின்னூட்டம் போட்டிருக்கிறார். :)

அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

அப்புறம் ... இந்த பதிவுக்கும் எதி ஓட்டுகள் போட்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள். :)

Anonymous said...

முக்கியமான பிரச்சனையை அணுகியிருக்கீங்க. நானும் இந்தமாதிரி விஷயத்தில கஷ்டப்பட்டிருக்கேன். அம்மா அக்கா நான் அப்படீன்னு மூன்று பெண்கள் இருக்க வீட்டுல நாப்கின்காக பட்ஜெட்ல ஒதுக்க முடியாது. பழந்துணிகள்தான் முடியும். வீட்டை விட்டு ஹாஸ்டல் போனப்பறம் இதோட முக்கியத்துவம் தெரிஞ்சுது. உங்கள் தோழிக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்

said...

தோழர் சஞ்சய் மிக அவசியமானதும் தேவையான ஒரு பதிவும் கூட

பெண்கள் பள்ளிகளில் இது போல ஒரு திட்டம் ஏற்கனேவே (மலிவு விலை நாப்கின்கள் குறித்து )
இருப்பதாக கேள்விபட்டுள்ளேன் .

மிக அருமையான பதிவு தோழர்

said...

நல்லதொரு - உடனடியாகச் செயல் படுத்த வேண்டிய திட்டத்தினைப் பற்றிய பதிவு. பொடியனும் பொடிப்பொண்ணூம் சேர்ந்து ஆக வேண்டியதைப் பார்க்கலாமே

நல்வாழ்த்துகள்

said...

நன்றி சின்ன அம்மிணி அக்கா..

அன்றி அதிஷா..

நன்றி சீனா சார்..

said...

muruganantham sir ku enoda nandrigal.nalla informatoin sollirukinga.

Tamiler This Week