இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Friday, 12 September, 2008

மங்களூர் சிவா திருமண புகைப்படங்கள்

மாமா மங்களூர் சிவா அவர்களும் சகோதரி பூங்கொடி அவர்களும் எல்லா செல்வங்களும் பெற்று சந்தோஷமாய் வாழவேண்டும் என வாழ்த்துவோம்..
சிவா : இருங்க மாம்ஸ்.. ஒருவாட்டி நல்லா சிரிச்சிக்கிறேன்... :)
சிவா: அப்துல்லா அங்க சாப்ட உக்காந்துட்டார் பாருங்க.. அது வேற கல்யாண கோஷ்டிபபா. அவர கூப்டுங்க... :)
மக்கள் வெள்ளத்தில் மாப்பிள்ளை மங்களூர் சிவா :)

டோண்டு : நம்ம வயசு 26ன்னு சொன்னதுக்கு இந்த சஞ்சய் பய எதோ கமெண்ட் அடிச்சத கேட்டு அப்துல்லா கன்னா பின்னானு சிரிச்சாரே.. என்ன சொல்லி இருப்பான் இவன்? :(
கண்ணாடி போடாததால் 23 வயது குறைவான தோற்றத்துடன் தங்க தாமிரா.. கொள்ளை கொள்ளும் வெள்ளை சிரிப்புக்காரர்.. :)
குட்டி வெண்பூ : அட நம்புங்க.. நான் தாங்க நிஜமான வெண்பூ.. எங்கப்பா கொஞ்சம் கருப்புப்பூ.. :))

வெண்பூ : சரி சரி அழாத.. நீ தான் உண்மையான வெண்பூ... இனி என் பேரை போலி வெண்பூ என்று மாத்திக்கிறேன்.. :))
வெண்பூ : மேடம்.. ரொம்ப பசிக்கிது.. கொஞ்சமா சாப்ட்டுகிறேனே ப்ளீஸ்...

திருமதி வெண்பூ : ஹ்ம்ம்.. சரி சரி.. கொஞ்சமா சாப்டுங்க.. இல்லைனா உங்களுக்கு தான் பெரிய தொப்பைனு தாமிரா எல்லார்கிட்டயும் சொல்லிடுவார்..
வெண்பூ : சரிங்க மேடம்..

திருமதி வெண்பூ : சரி சரி .. பேச்சை கொறைங்க.. சீக்கிறம் சாப்ட்டு எனக்கு காபி ஆத்தி குடுக்கிற வழிய பாருங்க..

உ.தமிழன் : இதுக்கு தான் கம்பனி மீட்டிங்க் போறேன்னு வீட்ல சொல்லிட்டு தனியா வரனும்னு சொல்றது... தம்பி வெண்பூ இன்னும் வளரவே இல்லை.. :)
எவ்ளோ நேரம் தாங்க வாய தொறந்துட்டே இருக்கிறது... சீக்கிறம் சாப்பாடு போடுங்க.. :D

76 Comments:

said...

கடைசி போட்டோ சூப்பர். ;-)

said...

ரொம்ப நன்றி தலைவா

said...

பொண்ணு போட்டோ ஃபில்டர் பண்ணிட்டீங்க சஞ்சய்ன்னு சிலர் பீல் பண்றாங்களே சஞ்சய். :-)

said...

இங்கேயும் திரும்ப வாழ்த்து சொல்லிக்கிறேன். வாழ்த்துக்கள் சிவா-பூங்கொடி தம்பதிகள். :-)

said...

அந்த கூட்டத்துல அவர்தான் சிவான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க? ;-)

said...

மாப்பிள்ளைக்கு த்ருஷ்டி சுற்றிப் போடுங்கப்பா, ரொம்ப வழியுது !

மற்ற பதிவர்களின் நிழல்படங்களையும் பார்வைக்கு தந்தமைக்கு நன்றி !

said...

சஞ்சய் உங்க கமெண்ட் ம் சூப்பர்

said...

வாழ்த்துக்கள் சிவா-பூங்கொடி தம்பதிகள். வாழ்த்துக்கள்

said...

படங்களும் கமெண்டும் அருமை! :)

என்னால் தான் வரமுடியாமல் போனது.. :(

கவனமாக பெண்களின் படங்களை தவிர்த்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்!!

said...

கமெண்ட் சூப்பர்

said...

சிவா-பூங்கொடி தம்பதிக்கு மனம் கனிந்த வாழ்த்துகள்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

வாழ்த்துகள் :)))

said...

இங்கேயும் திரும்ப வாழ்த்து சொல்லிக்கிறேன். வாழ்த்துக்கள் சிவா-பூங்கொடி தம்பதிகள். :)

said...

பெண்கள் ஃபோட்டோ குறித்து பாலாவின் கமெண்டைத்தான் போட நினைத்தேன். அவரே பாராட்டிவிட்டார்!

அப்துல்லா படமும் ஈயும் சூப்பரோ சூப்பர். மனுஷன் அவுட் ஆஃப் ஆஃபீஸ்ல இருக்காரு. இருங்க.. கூப்ட்டு பத்தவைக்கறேன்..

said...

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் சிவா.

said...

மங்களூர் சிவாவுக்கு இங்கயும் வாழ்த்து சொல்லிக்கறேன்.

அப்படியே, ஒரு விஷயம். அப்துல்லாவோட கள்ளங்கபடமற்ற சிரிப்புக்கு அவரோட நல்ல மனசும் ஒரு காரணம். இன்னைக்கு என் பதிவுல ஒரு பொண்ணுக்கு உதவிகேட்டு நோட்டீஸ் போர்டு போட்டிருந்தேன். அவரோட நிறுவனம் அந்தப் பொண்ணுக்கு தேவையான எல்லாத்தையும் ஸ்பான்சர் பண்றதா சொல்லியிருக்காரு! அவருக்கு இங்கயும் நன்றி சொல்லிக்கறேன்!

said...

யோவ்.. கல்யாணம் சிவாவுக்கு கலாய்குறதுக்கு நானா?? :))))

said...

ஜூனியர் வெண்பூ ஆதர்ஷுக்கு சுத்திப் போடுங்க தங்கச்சி...

(சஞ்சய்.. கமெண்ட்ஸ் கலக்கல்ஸ்!)

said...

சஞ்சய்..

நீங்க எங்க?

எப்பவுமே இப்படித்தான் நீங்க...

said...

@ வெண்பூ
//கலாய்குறதுக்கு நானா??//

குடும்பத்தோட ஓசி சாப்பாடு சாப்பிடப் போனீங்கள்ல.. வாங்கிக் கட்டிக்கங்க

:-))))))))

said...

///பரிசல்காரன் said...
@ வெண்பூ
//கலாய்குறதுக்கு நானா??//
குடும்பத்தோட ஓசி சாப்பாடு சாப்பிடப் போனீங்கள்ல.. வாங்கிக் கட்டிக்கங்க
:-)))))///
எம்புட்டு பேர் கலாய்ச்சாலும் தாங்குறாருய்யா... இந்த வெண்பூ ரொம்ப நல்லவரா இருப்பாரோ... ;))))

said...

படங்களும், அந்த குறும்புக் கமெண்ட்டுகளும் மிக அருமை சஞ்சய். கல்யாணத்துல எல்லாரையும் நீங்க தான் நல்லபடியா கவனிச்சுக்கிட்டீங்கன்னு சொன்னாங்க. ரொம்ப பெருமையா இருந்துச்சு. உங்க நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்.

said...

பரிசல்காரனே(ரே).. உங்கள வெளிய தேடிட்டிருக்காங்க நீங்க நண்பர் சிவா கல்யாண போட்டோ செஷன்ல இருக்கீங்களா?...
...
நேரடி அறிமுகமில்லைனாலும் ..புதுமண(தமிழ்மண) தம்பதிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

said...

கல்யாணத்துக்கு போக முடியலங்குற வருத்தம் போக்கிய நீவீர் வாழ்க. ஆனா சிவா மாமா படத்த மட்டும் போட்டது ஏன் ? எங்கே எங்க அத்த போட்டோ????

said...

புகைப்படங்களுக்கு நன்றி சஞ்சய்..

said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

படங்களோடு கமென்ட்களையும் வெகுவாகு ரசித்தேன் சஞ்சய்:)!

said...

//இளைய கவி said...
கல்யாணத்துக்கு போக முடியலங்குற வருத்தம் போக்கிய நீவீர் வாழ்க. ஆனா சிவா மாமா படத்த மட்டும் போட்டது ஏன் ? எங்கே எங்க அத்த போட்டோ????//

ரிப்பீட்டேய்..

said...

//மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

படங்களோடு கமென்ட்களையும் வெகுவாகு ரசித்தேன் சஞ்சய்:)!//

ரிப்பீட்டேய்.. அதிலும் வெண்பூ டயலாக்ஸ் அருமை..

said...

//இன்னைக்கு என் பதிவுல ஒரு பொண்ணுக்கு உதவிகேட்டு நோட்டீஸ் போர்டு போட்டிருந்தேன். அவரோட நிறுவனம் அந்தப் பொண்ணுக்கு தேவையான எல்லாத்தையும் ஸ்பான்சர் பண்றதா சொல்லியிருக்காரு! //

நமக்கெல்லாம் அப்துல்லா..
அந்த பெண்ணிற்கு அல்லா...

said...

//ஜூனியர் வெண்பூ ஆதர்ஷுக்கு சுத்திப் போடுங்க தங்கச்சி...//

அவ்ளோ அழகாய் இருக்கிறார் குட்டிவெண்பூ
அவங்க அப்பா அப்படி சொன்னது பெரிய‌தப்பூ

said...

@தாமிர ஃபோட்டோ,

முறைச்சு பார்க்கிறார் தாமிரா
உடைஞ்சு போச்சா கேமிரா?

said...

//:: மை ஃபிரண்ட் ::. said...

கடைசி போட்டோ சூப்பர். ;-)//

அந்த ஈ போட்டோ தான? ஆமா ஆமா.. ரொம்ப சூப்பரு.. :)
---
இருக்கட்டும் வாலு... :))
--------
என்ன செய்ய அனு? பதிவு உலகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான நல்லவர்கள் மத்தியில் ஊடுறுவி இருக்கும் ஒன்று இரண்டு "மிக நல்லவர்களை" பார்த்து பயம் வருகிறதே.. :(
----
//சிவான்னு எப்படி கண்டுபிடிச்சீங்க? ;-)//
நாங்க பல முறை நேரில் சந்திச்சிருக்கோம். அதுவும் இல்லாமம் கைப்பேசி எதற்கு இருக்கிறது.. அவர் இருக்கும் இடத்தை அதன் மூல அறிந்துகொண்டோம்.
---

said...

//மற்ற பதிவர்களின் நிழல்படங்களையும் பார்வைக்கு தந்தமைக்கு நன்றி //

நான் பெற்ற இன்பம் கோவியாரும் பெறவேண்டுமே..:))
--
// கிரி said...

சஞ்சய் உங்க கமெண்ட் ம் சூப்பர்//
நன்றி கிரி.. :)
---
//கவனமாக பெண்களின் படங்களை தவிர்த்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்!!//
நன்றி பாலபாரதி... மண வாழ்க்கை எப்படி போகுது?... :)
---
நன்றி முரளி கண்ணன்...
( டோண்டு என்னை பார்த்து " நீங்க முரளி கண்ணன் தானே" என்றார்.. நானும் ஆமாம் என்று சொல்லிவைத்தேன்.. :)
-----
நன்றி பரிசலாரே..
//இருங்க.. கூப்ட்டு பத்தவைக்கறேன்..//

ஹிஹி.. நடத்துங்க .. நடத்துங்க..
---

said...

//அவரோட நிறுவனம் அந்தப் பொண்ணுக்கு தேவையான எல்லாத்தையும் ஸ்பான்சர் பண்றதா சொல்லியிருக்காரு! அவருக்கு இங்கயும் நன்றி சொல்லிக்கறேன்//

அப்துல்லாவின் நண்பன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. நேற்று நான் கோடம்பாக்கம் போகிறேன் என தெரிந்ததும்.. பஸ் வேண்டாம்.. கார் அனுப்புகிறேன்.. போய் வாருங்கள் என்றார்... அவர் ஆட்டோவில் போய்விடுவாராம்.. நான் அவர் காரிலாம்.. இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதர்.. பெருமையாய் இருக்கு..

said...

//வெண்பூ said...

யோவ்.. கல்யாணம் சிவாவுக்கு கலாய்குறதுக்கு நானா?? :))))//

அட இதெல்லாம் கலாய்ப்பா?.. கலாய்க்கறதுனா என்னன்னு நம்ம குசும்பன் மற்றும் நாமக்கல் சிபி பதிவுகளை படிங்க... நானெல்லாம் சும்மா.. கும்பல்ல கோயிந்தா போடுர ஆளு..:)
---
//பரிசல்காரன் said...

ஜூனியர் வெண்பூ ஆதர்ஷுக்கு சுத்திப் போடுங்க தங்கச்சி...//
ஆமாம்.. ஆமாம்.. பைய்யன் அழகு மட்டுமில்லை.. செம சமத்து.. அவன் அம்மா மாதிரி போலும்.. :))
---
// பரிசல்காரன் said...

சஞ்சய்..

நீங்க எங்க?//
உங்க கண்களை பழுதாக்குவதில் எனக்கு விருப்பமில்லை.. :)))
---
//குடும்பத்தோட ஓசி சாப்பாடு சாப்பிடப் போனீங்கள்ல.//
அட அவரெங்க சாப்ட்டாரு? ஊட்டம்மாவுக்கு காபி ஆத்தி குடுக்கவே டைம் சரியா இருந்துச்சி.. :))

said...

//யோவ்.. கல்யாணம் சிவாவுக்கு கலாய்குறதுக்கு நானா?? :))))

இந்த தலைப்பு நல்லா இருக்கே.. இதை வச்சி என்னை மாதிரி "சீரியஸ் பதிவர்" கூட ஒரு மொக்கை பதிவு போடலாம் போல..:D:D
----
நன்றி ஜோசப்...
---
நன்றி இளையகவி... தனி மடலில் அனுப்புகிறேன் நண்பா..
----
வாங்க உ.தமிழன் அண்ணாச்சி.. நீங்க அன்பாக உங்க பரிசை அப்படியே வைத்திருக்கிறேன்.. இன்னும் பிரிக்க கூட இல்லை..:P
----
நன்றி லக்ஷ்மியக்கா..
---
நன்றி சரவணக் குமார்..
----

said...

சிவாவை வாழ்த்தியவர்களுக்கு அவர் வந்து பதிலளிப்பார்..

பின்னூட்டம் இட்டமைக்காக அனைவருக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்...

said...

யாராவது கவனிப்பீர்கள் என்று நினைத்தேன்... இரண்டாவது படத்தில் கைய்யை நீட்டிக் கொண்டிருப்பது சிவா அல்ல.. :)

Anonymous said...

:)

said...

//SanJai said...
ஆமாம்.. ஆமாம்.. பைய்யன் அழகு மட்டுமில்லை.. செம சமத்து.. அவன் அம்மா மாதிரி போலும்.. :))
//

வெளிய வரும்போது எல்லா தங்கமணிகளும் சமத்துதான் அப்படின்னு தாமிரா அறிவுரை சொல்றாரு பாருங்க சஞ்சய் :))))

said...

My heartly wishes to mangaloor maamu and Mrs mangaloor maamu

said...

thanks to sanjay for the post,mail and phots. mangaloor maamsukkum thangachikkum ennoda vaazthukkalalai soolikkiren:)

said...

aduthu namma sanjaykku seekeram oru kummi arambiyungappa... seekiram line clear agattum:P

said...

மணமக்களுக்கு வாழ்த்துகள். பணங்கள் தந்த சஞ்சய்க்கு நன்றிகள்.

//கவனமாக பெண்களின் படங்களை தவிர்த்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்!!//

வருத்தமாகத் தான் இருக்கிறது.

said...

//பணங்கள் தந்த சஞ்சய்க்கு நன்றிகள்.//

பக்கத்து விசைப்பிழை! படங்கள்னு வந்திருக்கணும்.

said...

Best Wishes.

மற்ற பதிவர்களின் Photos ellaam பார்வைக்கு தந்தமைக்கு Thanks!

said...

பிரமாதப்படுத்திட்டீங்க சஞ்சய்.! அதற்குள் டச்சப் வேலைகளும் நடந்திருக்கின்றன. வசனங்கள் அருமை. அதென்ன இப்பிடி இளிக்கிற படத்தைப்போட்டு நம்ப இமேஜை(?) காலிபண்ணிட்டீங்களே..

said...

எந்தப்படத்திலேயும் வெண்பூவின் தொப்பையை சரியான கோண‌த்தில் எடுக்காமல் விட்டதால் உங்களின் பொட்டித்திறமையை சந்தேகிக்கிறேன். பிறகு என் வார்த்தைகளை யாரும் நம்பாமல் போய்விடக்கூடுமல்லவா?

said...

பரிசல் : அவரோட நிறுவனம் அந்தப் பொண்ணுக்கு தேவையான எல்லாத்தையும் ஸ்பான்சர் பண்றதா சொல்லியிருக்காரு!// அவரின் கனிந்த மனத்தை நானும் பாராட்டுகிறேன்.

வெண்பூ : யோவ்.. கல்யாணம் சிவாவுக்கு கலாய்குறதுக்கு நானா??// கோச்சுக்காத தல.. சும்மனாச்சுக்கும்!

Anonymous said...

நல்ல படங்களுக்கும், குறும்பு வரிகளுக்கும் சஞ்சய்க்கு ஒரு பராட்டு.

தக்க சமயத்தில் உதவிய புதுகை அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள். அல்லா அவருக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும்.

said...

:-)))...

புகைப்படங்கள், கமெண்டுகள், பின்னூட்டங்கள்...எல்லாமே கலக்கல்!!!

said...

சிவா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்!!!

அப்துல்லா அண்ணாச்சிக்கு சல்யூட்...

நல்லா இருங்க...

said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

said...

அருமையான பதிவு,... படங்களும், கமெண்ட்டும் கலக்கல்...
உண்மை வெண்பூ ச்சோ க்யூட்...
//அதென்ன இப்பிடி இளிக்கிற படத்தைப்போட்டு நம்ப இமேஜை(?) காலிபண்ணிட்டீங்களே//
தாமிரா சார்... படம் நல்லாத்தானிருக்கு சார்...
என்னைப் போல் திருமணத்திற்கு வர இயலாதவர்களுக்கு இப்பதிவு ஒரு நல்ல விருந்து...
மணம்க்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

said...

உதவியதற்கு அப்துல்லாவிற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி...
பரிசலாருக்கு நன்றியோ நன்றி...

said...

பதிவர் மங்களூர் சிவாவிற்கு இனிய இல்லறம் அமைய என் நல்வாழ்த்துக்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

said...

சூப்பர் போட்டோஸ்..
பதிவுலகத்துத் தலைகளைப் பார்க்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
சஞ்சய் பாஸ், படங்கள்ல நீங்க எங்கே?

said...

மணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

கமெண்ட்லாம் சூப்பர் சஞ்சய் :)

said...

படங்களுக்கு நன்றிப்பா.

மணமக்கள் நல்லா இருக்கணும்.

said...

படங்களுக்கு நன்றி!

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!!

said...

SanJai said...
//யாராவது கவனிப்பீர்கள் என்று நினைத்தேன்... இரண்டாவது படத்தில் கைய்யை நீட்டிக் கொண்டிருப்பது சிவா அல்ல.. :)//

பார்த்தவுடனேயே தெரிந்தது சஞ்சய், மாப்பிள்ளை வெள்ளை சட்டையில், நீட்டிக் கொண்டிருப்பது வேறு யாருடைய கையோ என்பது:))!

said...

மாம்ஸ் உங்கள நினைச்சு நான் ரொம்ப பெருமை படுறேன். உங்கள் பொருப்பு, உங்கள் கடமை உணர்வு அனைத்துக்கும் ஒரு சல்யூட்

said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
புகைப்படங்களுக்கு நன்றி சஞ்சய்..///

சஞ்சய் இந்த நம்பரை லாட்டரி சீட் பார்பது போல் உண்மையார் நம்பரோடு சரி பார்க்கவும், ஏன் என்றால் அண்ணன் ஒரு வரியில் எல்லாம் பின்னூட்டம் போடமாட்டார்!!!

said...

///யெஸ்.பாலபாரதி ♠ said...
படங்களும் கமெண்டும் அருமை! :)

என்னால் தான் வரமுடியாமல் போனது.. :(

கவனமாக பெண்களின் படங்களை தவிர்த்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்!!///

இப்படி செய்வதற்கு திருமண புகைப்படங்கள் என்கிற தலைப்பெதற்கு? தமிழ்மணப்பதிவர்கள் மீது அவ்வளவு நம்பிக்கையா or இதற்கு பெயர்தான் கலாச்சாரமோ??

said...

கஷ்டபட்டு கவுஜ எல்லாம் எழுதினா யாரும் கண்டுக்க மாட்டறீங்களே... இப்ப யாரும் எதுவும் சொல்லலைனா அதர் ஆப்ஷனில் வந்து நானே ஏதாவது சொல்லிடுவேன்...

said...

வெண்பூ.. வெளியே வரும் போது கூட அப்பா சமத்து இல்லைனு ஆதர்ஷ் சொல்றானே.. :))
----
யோவ் ரசிகன் மாம்ஸ்.. கொழுப்பா.. சீனியர் சிட்டிசன் நீங்களே இன்னும் கம்முனு கெடக்கும் போது எனக்கு எதுக்கு இப்போ கல்யாணம்.. :)
-----
முகவை மைந்தன்.. நேரில் வந்திருக்கலாமே... :)

////பணங்கள் தந்த சஞ்சய்க்கு நன்றிகள்.//

பக்கத்து விசைப்பிழை! படங்கள்னு வந்திருக்கணும்.//

சரி சரி.. 6 மணிக்கு மேல இந்த மாதிரி கமெண்ட் வந்தா நான் அதில் பிழை பார்ப்பதில்லை.. எல்லாம் நெப்போலியன் செயல்.. :)
----
வருகைக்கு நன்றி தமிழ் குரும்படமே.. :)

said...

தாமிரா
//அதென்ன இப்பிடி இளிக்கிற படத்தைப்போட்டு நம்ப இமேஜை(?) காலிபண்ணிட்டீங்களே..//

ஹலோ.. என்ன நக்கலா? எவ்ளோ அழகா கொய்ந்த மாதிரி சிச்சிகினு கீறிங்க.. இதை போய் இளிக்கிற படம்னு சொல்லிட்டிங்களே.. ;(

//உங்களின் பொட்டித்திறமையை சந்தேகிக்கிறேன். //

என்னாது பொட்டி திறமையா? PIT நிபுணர்கள் யாராச்சும் பாத்துட போறாங்க.. உங்கள ரவுண்டு கட்டி அடிப்பங்க.. ;)
----
//வெண்பூ : யோவ்.. கல்யாணம் சிவாவுக்கு கலாய்குறதுக்கு நானா??// கோச்சுக்காத தல.. சும்மனாச்சுக்கும்!//

அட அவராவது கோச்சிக்கிறதாவது... அப்படியே கோச்சிக்கிட்டாலும் கவலை இல்ல.. அதெல்லாம் காபி ஆத்திக் குடுக்கறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்... :D:D

said...

நன்றி வேலன் அண்ணாச்சி..
//தக்க சமயத்தில் உதவிய புதுகை அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள். அல்லா அவருக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும்.//

வழிமொழிகிறேன்..
---
நன்றி விஜயானந்த்
---
நன்றி தருமி சார்
-------
நன்றி தமிழ்பறவை
பரிசலாருக்கும் அபுதுல்லாவுக்கும் பாராட்டுக்கள்..
---------
வருகைக்கு நன்றி வித்யா
-------
நன்றி ரிச்சு...
//சஞ்சய் பாஸ், படங்கள்ல நீங்க எங்கே?//

தம்பி நீ நினைக்கிற நேரத்துல பாஸை பார்க்க முடியாதுப்பா.. நீ இன்னும் நிறைய தெரிஞ்சிக்கனும் டம்பி.. :))

said...

நன்றி கவிநயா அக்கா..
---
நன்றி துளசி அம்மா
----
வருகைக்கு நன்றி தென்றல்..
---
ஆஹா லக்ஷ்மியக்கா.. நீங்க ஒரு பெரும் புகப்பட நிபுணர் என்பதை நிருபிச்சிட்டிங்க.. :)
----
குசும்பா .. உங்க உள்குத்தை நினைத்து பயந்தாலும்.. நன்றி மாமா.. :)

//ஏன் என்றால் அண்ணன் ஒரு வரியில் எல்லாம் பின்னூட்டம் போடமாட்டார்!!!//
பார்த்துட்டேன் மாம்ஸ்.. அவரே தான்..:))... இவர் டார்ச்சர் தாங்காம ஒரு வரி டைப் பண்ணதும் ப்ளாகர் தானாவே கமெண்ட் பப்ளிஷ் பன்ர மாதிரி கூகுள் கோடிங் எழுதி வச்சிருக்காங்க போல.. :))))
-----
ஹிஹி கார்க்கி.. அதுக்கு சிவா பதில் சொல்லுவார்.. இங்க அதர் ஆப்ஷன் எல்லாம் இல்லை தலைவா :))

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
கடைசி போட்டோ சூப்பர். ;-)

//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

// Dharan said...

இப்படி செய்வதற்கு திருமண புகைப்படங்கள் என்கிற தலைப்பெதற்கு? தமிழ்மணப்பதிவர்கள் மீது அவ்வளவு நம்பிக்கையா or இதற்கு பெயர்தான் கலாச்சாரமோ??//

இது நிச்சயமாய் திருமணப் புகைபடங்கள் தான் தரன். சிவா திருமணத்தில் எடுத்த படங்கள் தான். மாலையுடம் மாப்பிள்ளை கோலத்தில் சிவா இருக்கிறார் பாருங்க.அதனால் தலைப்பு சரியானது தான்.

அதென்ன தமிழ்மணப் பதிவர்கள்.. அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை.. எல்லா பதிவர்களுமே பல திரட்டிகளில் இணைந்திருக்கிறார்கள். ஆகவே இங்கு தமிழ்மணப் பதிவர்கள் என்றெல்லாம் யாரும் இல்லை நண்பரே..

இது நம்பிக்கை சார்ந்த விஷயமல்ல... அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் மீது நம்பிக்கை இல்லாமல் தான் உங்கல் வீட்டைப் பூட்டிச் செல்கிறீர்களா? அது போன்றது தான் இதுவும்... பதிவு எழுதுவதைவிட அடுத்தவன் அந்தரங்கத்தை நோண்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் இருப்பது உங்களுக்கு தெரியாது போலும்..

இரண்டு நாட்களாக தமிழ்ப் பதிவுலகில் நடந்த கேவலமான விஷயம் உங்களுக்கு தெரியாமல் போனது என் குற்றமல்ல...

தப்பு செய்தவரே மன்னிப்பு கேட்டாலும் அதில் என்ன தவறு என்று வக்காலத்து வாங்கும் ஜந்துக்களும் வலம் வருகிறது..

நீங்க இன்னும் பதிவுலகம் பத்தி தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு தரன். :)

said...

கார்க்கி said...

//இன்னைக்கு என் பதிவுல ஒரு பொண்ணுக்கு உதவிகேட்டு நோட்டீஸ் போர்டு போட்டிருந்தேன். அவரோட நிறுவனம் அந்தப் பொண்ணுக்கு தேவையான எல்லாத்தையும் ஸ்பான்சர் பண்றதா சொல்லியிருக்காரு! //

நமக்கெல்லாம் அப்துல்லா..
அந்த பெண்ணிற்கு அல்லா...

//


அண்ணே பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க! நான் அந்த பெண்ணின் சகோதரன்னு வேண்ணா சொல்லுங்க :)

said...

// பதிவு எழுதுவதைவிட அடுத்தவன் அந்தரங்கத்தை நோண்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் இருப்பது உங்களுக்கு தெரியாது போலும்..//

ஆர்வம் கொண்டவர்கள் யார் யார் என்பது ஒரளவுக்குத்தெரியும். ha ha.//இரண்டு நாட்களாக தமிழ்ப் பதிவுலகில் நடந்த கேவலமான விஷயம் உங்களுக்கு தெரியாமல் போனது என் குற்றமல்ல...//

sorry எனக்குத்தெரியாது நண்பரே.

//நீங்க இன்னும் பதிவுலகம் பத்தி தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு தரன். :)//

அது என்னமோ கரெக்டுதான்.

said...

சூப்பர் புகைப்படங்கள் சஞ்சய் :)
என்னால் தான் வர முடியலை ...

கடைசி போடோ அருமை.

said...

இதுக்காகத்தான் நாங்கெல்லாம் காத்திக்கிட்டு இருந்தோம். குறிப்பா கடைசி புகைப்படம் ரொம்ப இயல்பா, சூப்பரா இருந்தது :):):)

said...

@சஞ்சய்

பதிவுக்கு, கல்யாண தினத்தன்று நண்பர்களை கவனித்துக் கொண்டமைக்கு மிக மிக நன்றி.

said...

@மை ஃப்ரெண்ட்
@வால் பையன்
@கோவி கண்ணன்
@கிரி
@ஷேர் பாயிண்ட்
@பாலபாரதி
@முரளி கண்ணன்
@ புது வண்டு
@தமிழ் பிரியன்
@பரிசல்காரன்
@மோகன்தாஸ்
@வெண்பூ
@ஜோசப் பால்ராஜ்
@சங்கணேசன்
@இளையகவி
@உண்மை தமிழன்
@ராமலஷ்மி அம்மா
@சரவண குமார்
@கார்க்கி
@தூயா
@ரசிகன்
@முகவை மைந்தன்
@தமிழ் ஷார்ட் ப்லிம்
@தாமிரா
@வடகரை வேலன்
@விஜய் ஆனந்த்
@தருமி ஐயா
@தமிழ் பறவை
@லிவிங் ஸ்மைல்
@ரிஷான்
@கவிநயா
@துளசி கோபால்
@தென்றல்
@குசும்பன்
@தரன்
@புதுகை அப்துல்லா
@பொடிப்பொண்ணு
@ராப்

அனைவருக்கும் மிக்க நன்றி

Tamiler This Week