இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday 17 September, 2008

செந்தழல் ரவியின் காற்றாலைக்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட்

ஞாயிறு மாலையே செந்தழல் ரவி அவர் தங்கமணியுடன் என் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார்... அச்சச்சோ.. ஒரு காபிப் போட்டுக் குடுக்கக் கூட முடியாதே.. சமயல்க் கட்ல எல்லாரும் சமையல் தான் செய்வாங்க.. நான் துணித் தானேக் காயப் போட்டிருக்கேன் என்று கவலை பட்டாலும்.. சரி என்று சொல்லிவிட்டேன்... பிறகு ரவி என்ன நினைத்தாரோ.. அடுத்த நாள் செல்லா காரில் தங்கமணியுடன் வருவதாக சொல்லிவிட்டார்... ரைட்டு...

அடுத்த நாள்.. முக்கிய அலுவலக வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு ரவியை அழைத்தால் போன் எடுக்கலை.. சரி... அவருக்கு இன்னும் விடியலைப் போலன்னு நெனைச்சி செல்லாவுக்குப் போன் பண்ணேன்.. அவர் மச்சினியப் பார்த்துட்டு இப்போ தான் வந்ததாகவும் 2 பேரும் அவர் அலுவலகத்துக்கு வந்துடுங்கன்னும் சொல்லிட்டார்.. சரின்னு ரவியை அழைச்சிட்டு செல்லா அலுவலகம் போனேன்.. கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்.. ரவி ஸ்கூல் பய்யன் ரேஞ்ச்ல மத்தியான சோத்துக்கு போலாம்.. மத்தியான சோத்துக்கு போலாம்னு ரகளை பண்ணிட்டே இருந்தார்... சரி இதுக்கு மேல தாங்காதுன்னு புறப்பட்டோம்...

எங்க சாப்பிட போகலாம்னு யோசிச்சப்போ.. ரவி, அண்ணபூர்னா போகலாம்னு சொன்னார்.. எனக்கு எப்போவும் இந்த மாதிரி ஹோட்டல்கள்ல சாப்பிட சுத்தமா பிடிக்கறதில்லை... எதோ சத்திரத்தில் அடிச்சி பிடிச்சி சாப்பிடற மாதிர் ஒரு ஃபீல்.. நம்மூர்க்காரங்க ஊட்ல சமைக்கவே மாட்டாங்க போல.. எல்லாருமே சமயல்கட்ல துணிதான் காயப் போடறாங்களோ? :D..

செல்லா சும்மா இருககாம.. உங்கள எல்லாம் ஒரு கிராமத்துக்கு சாப்பிட கூட்டிட்டு போறேன்னு சொன்னார்.. அப்போ எனெக்கென்னவோ புன்னகைப் பூவே சார்ளி நினைவுக்கு வந்தார்.. " உங்கள எல்லாம் நான் கற்காலத்துக்கே கூட்டிட்டுப் போகப் போறேனு" அதுல அவர் சொல்வார்.. அப்போவே நான் உஷார் ஆயிருக்கனும்.. . சரி.. விதி வழியது.. :(

போனோம்.. போனோம்.. ஆனைக்கட்டியே வந்துடிச்சி.. ஆனா அந்த வழியெங்கும் அப்படி ஒரு பசுமை.. மலைகளுக்கு இடையே சாலைகள்.. ரொம்ப ரம்மியமாய்... வழியில ஒரு கடைல ராகிப் பக்கோடா வாங்கி சாப்ட்டோம்.. அடடா.. எனனா ஒரு சுவை? ரொம்ப அற்புதமா இருந்தது...

அடுத்து ஆனைக்கட்டி போய் சேர்ந்தோம்.. ஒரு ஹோட்டலி(மாதிரி)ல் சாப்பிட உக்கார்ந்தோம்... நான் பாட்டுக்கு புரோட்டா வாங்கி நிம்மதியா சாப்ட்டிருப்பேன்.. கிராமத்து சாப்பாடு நல்லா இருக்கும்னு( கிராமத்து சாப்பாடு பத்தி என்கிட்டயேவா? ) சொல்லி எல்லாருக்கும் சோறு - அளவு சாப்பாடு :( - சொல்லிட்டார் செல்லா.. சரி போகட்டும்...

சோறு போட்டாங்க.. அப்பளம் வச்சாங்க.. பூசனிக்காய் கூட்டு வச்சாங்க... உருளைகிழங்கு பொரியல் வச்சாங்க... ரவி மீன் குழம்பு வாங்கிகிட்டார்.. நானும் செல்லாவும் பருப்பு சாம்பார் வாங்கிகிட்டோம்... சாம்பார் முடிஞ்சதும் அடுத்ததா புளிக் குழம்பு, மோர்க் குழம்பு, ரசம், தயிர், மோர்.. இப்படி எல்லாம் இருக்கும்ல.... சரி.. சாம்பார் சாதம் முடிஞ்சது... அண்ணே.. புளிக்குழம்பு இருக்கா?.. இப்போ தாங்க முடிஞ்சது.. சரி.. மோர்க் குழம்பு.. அதெல்லாம் இல்லீங்க... சரி.. ரசம்.. அட அதும் இப்போதானுங்க காலி ஆச்சி... சஞ்சய் கண்ட்ரோல்ல்ல்ல்..... சரி ரசம் குடுங்க.. என்ன பண்றது... ஒரு 5 நிமிஷம் முன்னாடி வந்திருக்கக் கூடாதுங்களா?.... ரசம் தீர்ந்துபோனப்ப வந்து கேக்கறிங்களே... சஞ்சய்.. இப்போவும் கண்ட்ரோல்ல்ல்ல்ல்ல்ல்.... சரி தயிர்... இப்போ தாங்க அவருக்கு ( பக்கத்து டேபிள்) குடுக்கும் போது காலி ஆய்டிச்சி.. இப்போவும் கண்ட்ரோல்டா சஞ்சய்... இது மட்டுமா இருக்கப் போகுது என்று நினைத்துக் கொண்டே கேக்கலாமா வேண்டாமா என்று யோசித்து.. அட இவ்ளோ தாங்கிட்டோம்.. இதத் தாங்கிக்க மாட்டோமா.... மோர் இருக்குங்களா.... இவ்ளோ நேரம் வாய்ல சொன்னவன்.. இப்போ மோர் பாத்திரத்தை கொண்டுவந்து.. நீங்களே பாருங்க.. இருந்தா தர மாட்டேனா?... (மனசுக்குள்ள)டேய்.... டேய்... நாங்க சாப்ட உக்காரும் போது இதெல்லாம் சொல்லி தொலையறதுக்கென்ன?.. சரி கொஞ்சம் பூசனிக்கா கூட்டாவது வைங்க... எல்லாமே முடிஞ்சிருச்சிங்க.. மீன் குழம்பும் சாம்பாரும் தான் இருக்கு.. அடங்கொய்யால... தீர்ந்துப் போறதுக்கு முன்னாடி சாம்பாராவது ஊத்தித் தொலைடா என்று வாங்கி அவசர அவசரமா சாப்ட வேண்டியதா போய்டிச்சி.. பின்ன.. அதும் தீர்ந்து போச்சின்னா.. சோத்துல தண்ணி ஊத்தி திங்க சொல்லிடுவானுங்க போல.. :( ..

....... சார்ளி நினைவுக்கு வந்ததும்.. உஷார் ஆயிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?......:((

ஆர்வக் கோளாறுல நான் புரோட்டா சுடப் போயி அதையும் பொழப்பில்லாம போட்டோ எடுத்துட்டு இருந்தார் செந்தழல் ரவி..:)

இந்த கோயம்புத்தூர்காரங்களுக்கு ஒரு கெட்ட பழக்கம்.. சாம்பார்ல சக்கரை போடுவாங்க போல.. அம்புட்டு இனிப்பா இருக்கும்.. :(.. அதனால நான் கோவை சாம்பாருக்கு எதிரி.. சாம்பார்னா எப்டி இருக்கும்னு தர்மபுரி பக்கம் வந்து சாப்ட்டு பாருங்கய்யா.. அட அட... ஹ்ம்ம்... மாசத்துக்கு ஒருவாட்டி தான் அந்த பாக்கியம் கெடைக்கிது.. :(

...அடுத்து ஆனைக்கட்டி தாண்டி சோழையூர் வழியா அழகான கேரளப்பயணம்... செந்தழல் ரவியின் காற்றாலை நோக்கி.. அதை பற்றி படங்களுடன் விரைவில் ரவி எழுதுவார்.... அது வரை வெய்ட்டீசு மகா ஜனங்களே....:)

36 Comments:

said...

மீ தெ பர்ச்ட்டு? :):)

said...

ஹைய் :)

said...

ஏதோ காற்றாலையைப் பற்றி சொல்லப் போறீங்கன்னு வந்தா, சோறு கிடைக்காத சோகத்தைச் சொல்றிங்களே... :)

said...

//சஞ்சய்.. இப்போவும் கண்ட்ரோல்ல்ல்ல்ல்ல்ல்...//

ஹையோ ஹையோ :)

said...

//எல்லாருமே சமயல்கட்ல துணிதான் காயப் போடறாங்களோ? :D..//


:)))))))))))))))))))

said...

//Blogger தமிழ் பிரியன் said...

ஏதோ காற்றாலையைப் பற்றி சொல்லப் போறீங்கன்னு வந்தா, சோறு கிடைக்காத சோகத்தைச் சொல்றிங்களே... :)//

ரிப்பீட்டெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

/நான் பாட்டுக்கு புரோட்டா வாங்கி நிம்மதியா சாப்ட்டிருப்பேன்./

oru correction sanjay

நான் பாட்டுக்கு புரோட்டா வாங்கி(சுட்டு) நிம்மதியா சாப்ட்டிருப்பேன்
:-)))

said...

//ரவி ஸ்கூல் பய்யன் ரேஞ்ச்ல மத்தியான சோத்துக்கு போலாம்.. மத்தியான சோத்துக்கு போலாம்னு ரகளை பண்ணிட்டே இருந்தார்//

கல்யாணம் ஆன எல்லாருமே ஹோட்டல் சாப்பாடு சாப்பிட கிடைச்ச சான்சை விடமாட்டாங்க சஞ்சய். :)

said...

//புன்னகைப் பூவே சார்ளி நினைவுக்கு வந்தார்.. " உங்கள எல்லாம் நான் கற்காலத்துக்கே கூட்டிட்டுப் போகப் போறேனு" அதுல அவர் சொல்வார்..//

அது "பூவே உனக்காக".. முரளிகண்ணன் கோச்சிக்க போறாரு..

said...

மீ த டெண்த்து !!!

புரோட்டாவும் சிக்கன் கொழம்பும் நல்லாத்தான் இருந்திருக்கும்...

ஹும், நான் கிராமத்து ரசத்துக்கு ஆசைப்பட்டு இப்படியாச்சுது !!!

said...

விதி வலியது அப்படீன்னு இருக்கனும்...!!!

said...

ஒயினுக்கு செல்லா மப்பானதை சொல்லவேயில்லையே !!!

said...

இப்ப தெரியுதா, நாங்க ஏன் ரெண்டு எஸ்டி.டி கால் பண்ணோமுன்னு ??

said...

டக்கு டக்குன்னு குறுக்கு மறுக்கா க்ராஸ் பண்ண சேச்சி பிகர் பத்தி ஒரு தகவலும் இல்லையே ???

said...

:)))

said...

:)

Anonymous said...

ஏன் இப்ப இது சூடான இடுகைக்கு வருது ?

said...

ravi.antone@gmail.com said...
ஏன் இப்ப இது சூடான இடுகைக்கு வருது ?//

சஞ்சய் என்ற அரசியல் பதிவர், ரவி என்ற ரணகள பதிவரை பற்றி எழுதினா சூடான இடுகையி வராமல் என்ன செய்யும்?:))))

said...

மாம்ஸ் செல்லாவை கூலிங் கிளாஸோடு பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அவரு போட்டோ இருந்தா போடுங்க!!!

said...

//போனோம்.. போனோம்.. ஆனைக்கட்டியே வந்துடிச்சி//

ஆனைக்ககட்டியா? எங்க வந்துச்சு? உட்காரும் இடத்தில் வந்ததா? அய்யய்யோ அது என்னா செய்யும்? எப்படி உட்காந்தீங்க?

said...

அந்த ஆனைக்கட்டி வாயில வந்து இருந்தால் ஒரு பத்து பேருக்கு சாப்பாடாவது கிடைச்சு இருக்கும்!!!

மாம்ஸ் எல்லா ஹோட்டலிலும் ஒரு அளவோடுதான் சாம்பார் , ரசம் ஊத்துவாங்க , ஊடுகட்டி அடிக்கும் உமக்கு எல்லாம் சோறு போட்டதே பெரியவிசயம்.

மஞ்சூரார் வீட்டுக்கு போய் வந்த பிறகு

சாப்பாட்டு வகையில் ரூ100000 கடன் அவருக்கு.

said...

//அடுத்த நாள்.. முக்கிய அலுவலக வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு //

யப்பா எல்லோரும் நம்புங்கப்பா அண்ணன் ஆபிசில் வேலை செய்கிறார்.
(நந்து நீங்களும் நம்புங்க பிளீஸ்)

said...

// நான் பாட்டுக்கு புரோட்டா வாங்கி நிம்மதியா சாப்ட்டிருப்பேன்//

நீங்க பாட்டுக்கு புரோட்டோ வாங்கும் அளவுக்கு சங்கீத வித்துவான்(கத்துவான்) என்று தெரியாம போச்சே!!!

குரல் ரொம்ப இனிமையாக இருக்குமோ!!!

said...

//அதும் தீர்ந்து போச்சின்னா.. சோத்துல தண்ணி ஊத்தி திங்க சொல்லிடுவானுங்க போல.. //

அப்படி சொன்னாலும் எழுந்து வர ஆளுங்களா மாம்ஸ் நீங்க? வெறு சாத்த்தையே கட்டும் ஆள் அல்லவா நீங்க!!!

said...

//தர்மபுரி பக்கம் வந்து சாப்ட்டு பாருங்கய்யா.. அட அட... ஹ்ம்ம்... மாசத்துக்கு ஒருவாட்டி தான் அந்த பாக்கியம் கெடைக்கிது.. :(//

மாம்ஸ் ஒரு ஐடியா தருமபுரிய அப்படியே அலேக்கா தூக்கிட்டு வந்து கோவையில் வெச்சுட்டா எல்லோரும் நல்லா சாப்பிடலாம்ல்ல:):))

said...

// அச்சச்சோ.. ஒரு காபிப் போட்டுக் குடுக்கக் கூட முடியாதே.. சமயல்க் கட்ல எல்லாரும் சமையல் தான் செய்வாங்க.. நான் துணித் தானேக் காயப் போட்டிருக்கேன் //

1001 வது முறையா இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று குறிப்பாக சொல்லி பார்கிறீர்கள் இருந்தாலும் ....:(((

said...

// Podiponnu - பொடிப் பொண்ணு said...

மீ தெ பர்ச்ட்டு? :):)//
வாம்மா மின்னல்...உன் பேரை விட கமெண்ட் சின்னதா இருக்கு..:P நன்றி.. :)
---
@த.பிரியன்.. சோறு கெடைக்காத சோகத்தைவிட ரவியின் காற்றாலை கொஞ்ச சின்னதா தான் தெரிஞ்சது.. :))
-----
நல்லா இருங்க ராஜி :(.. நன்றி.. :)
----
//கல்யாணம் ஆன எல்லாருமே ஹோட்டல் சாப்பாடு சாப்பிட கிடைச்ச சான்சை விடமாட்டாங்க சஞ்சய். :)//

நீங்க எவ்ளோ ஹோட்டல்ல சாப்ட்டிருக்கிங்க வெண்பூ? :P
.. உங்கள போய் நல்லவர்ன்னு இந்த உலகம் நம்புதே சாமி.. :))

said...

//அது "பூவே உனக்காக".. முரளிகண்ணன் கோச்சிக்க போறாரு..//
..அவ்வ்வ்.. மாத்திடறேன்.. நன்றி வெண்பூ அண்ணாச்சி.. :)
-------
//செந்தழல் ரவி said...

மீ த டெண்த்து !!!//
இன்னும் டெண்த்து பாஸ் பண்ணவே இல்லையா? :P

// புரோட்டாவும் சிக்கன் கொழம்பும் நல்லாத்தான் இருந்திருக்கும்...//

என்னாது சிக்கன் குழம்பா.. உவ்வே... :(

//ஹும், நான் கிராமத்து ரசத்துக்கு ஆசைப்பட்டு இப்படியாச்சுது !!!//
எல்லாம் செல்லாவின் திட்டமிட்ட சதியா இருக்குமோ? :(

said...

////கல்யாணம் ஆன எல்லாருமே ஹோட்டல் சாப்பாடு சாப்பிட கிடைச்ச சான்சை விடமாட்டாங்க சஞ்சய். :)//

நீங்க எவ்ளோ ஹோட்டல்ல சாப்ட்டிருக்கிங்க வெண்பூ? :P
.. உங்கள போய் நல்லவர்ன்னு இந்த உலகம் நம்புதே சாமி.. :))
//

யோவ்.. நான் சாப்பாடு சாப்புடுறத சொன்னேன்.. நல்லா இருக்குற குடும்பத்துல பூந்து கும்மியடிச்சிடாதீங்க :)))))

said...

//செந்தழல் ரவி said...

விதி வலியது அப்படீன்னு இருக்கனும்...!!!//

சரிங்க ஆபிசர்.. :)
---
// செந்தழல் ரவி said...

ஒயினுக்கு செல்லா மப்பானதை சொல்லவேயில்லையே !!//
அவர் எங்க அதுக்கு மப்பானார்.. கார் ஓட்டிட்டே குடிச்சிட்டே தான இருந்தார்.. :)

----
//செந்தழல் ரவி said...

இப்ப தெரியுதா, நாங்க ஏன் ரெண்டு எஸ்டி.டி கால் பண்ணோமுன்னு ??//
கம்முனு இருந்துடுங்க.. இருக்கிற கடுப்புல... எலலார்க்கும் புரியற மாதிரி ரொம்ப அசிங்கமா திட்டி வச்சிடுவேன்.. :((
---
//செந்தழல் ரவி said...

டக்கு டக்குன்னு குறுக்கு மறுக்கா க்ராஸ் பண்ண சேச்சி பிகர் பத்தி ஒரு தகவலும் இல்லையே ???//
ஆஹா.. ஆஹா.. என்ன அழகு.. எத்தனை அழகு.. அந்த வரப் பட்டிக்காட்டுல அப்படி ஒரு ஃபிகரா? :P
----

said...

நன்றி தம்பி :)
---
நன்றி ராப் :)
----
// ravi.antone@gmail.com said...

ஏன் இப்ப இது சூடான இடுகைக்கு வருது ?//
நாம சாப்ட்டது சூடான சோறு.. அதனாலயா இருக்கும்.. :))
----
// குசும்பன் said...

மாம்ஸ் செல்லாவை கூலிங் கிளாஸோடு பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அவரு போட்டோ இருந்தா போடுங்க!!!//
இப்போ எல்லாம் அவர் கூலிங் க்ளாஸ் போடறதில்லையாம்..:)) அவர் தோழருக்கு அது பிடிக்கலையாம்... :P
---

குசும்பா... எனக்கு கண்ட எடத்துல கட்டி வரனும்னு உங்களுக்கு வேண்டுதலா? அடிங்க.. :(

---
//மஞ்சூரார் வீட்டுக்கு போய் வந்த பிறகு

சாப்பாட்டு வகையில் ரூ100000 கடன் அவருக்கு.//

அபியப்பாவை லிஸ்ட்டில விட்டுட்டிங்களே..:)))
----

//யப்பா எல்லோரும் நம்புங்கப்பா அண்ணன் ஆபிசில் வேலை செய்கிறார்.
(நந்து நீங்களும் நம்புங்க பிளீஸ்)//

அவுக மீன் புடிக்கிறதுல பிச்சியா இருப்பாக.. :))

said...

//நீங்க பாட்டுக்கு புரோட்டோ வாங்கும் அளவுக்கு சங்கீத வித்துவான்(கத்துவான்) என்று தெரியாம போச்சே!!!

குரல் ரொம்ப இனிமையாக இருக்குமோ!!!//

என் குரல்வளம் உங்களுக்கா தெரியாது.. அத வச்சி தான் ஒரு பதிவே போட்டிங்களே சாமி... :(

---
//அப்படி சொன்னாலும் எழுந்து வர ஆளுங்களா மாம்ஸ் நீங்க? வெறு சாத்த்தையே கட்டும் ஆள் அல்லவா நீங்க!!!//

வளர்ர பையன் மாம்ஸ்.. கண்ணு வைக்காதிங்க. :P
---
//மாம்ஸ் ஒரு ஐடியா தருமபுரிய அப்படியே அலேக்கா தூக்கிட்டு வந்து கோவையில் வெச்சுட்டா எல்லோரும் நல்லா சாப்பிடலாம்ல்ல:):))//

வந்து தூக்கி வைங்க.. நானே கொண்டு வந்து வச்சிடறேன்.. :))
---
//1001 வது முறையா இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று குறிப்பாக சொல்லி பார்கிறீர்கள் இருந்தாலும் ....:(((//

உங்களுக்கு ப்ரியுது.. ஆனா....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

said...

// வெண்பூ said...

யோவ்.. நான் சாப்பாடு சாப்புடுறத சொன்னேன்.. நல்லா இருக்குற குடும்பத்துல பூந்து கும்மியடிச்சிடாதீங்க :)))))//

அட.. இந்த கொழந்தைக்கு பால் மட்டும் தான் குடிக்கத் தெரியுமாம்ல.. :)

said...

இது ஏன் அடிக்கடி சூடான இடுகையில வந்து எட்டிப்பாத்துட்டு எட்டிப்பாத்துட்டு போவுது ???

said...

/* குசும்பன் said...

ஆனைக்ககட்டியா? எங்க வந்துச்சு? உட்காரும் இடத்தில் வந்ததா? அய்யய்யோ அது என்னா செய்யும்? எப்படி உட்காந்தீங்க?
அந்த ஆனைக்கட்டி வாயில வந்து இருந்தால் ஒரு பத்து பேருக்கு சாப்பாடாவது கிடைச்சு இருக்கும்!!!

*/

ஹா ஹா ஹா :) :) கலாய்ச்சிட்டீங்க :P

said...

@ ரவி : உங்க பேரின் மகிமை அது.. :))

----

@ பொடிப்பொண்ணு..

ரொம்ப சிரிக்காத.. பல்லு சுழுக்கிடும்.. :( #$%$#%$#%$#%$#%$#...

Tamiler This Week