இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday 15 August, 2008

101. கோவை புத்தகத் திருவிழா 2008

மாலை 4 மணிக்கு புத்தகத் திருவிழா வளாகத்திற்கு போனேன். பைக் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு அதர்கான ரசீது கேட்டால் 10 ரூபாய் கேட்டார்கள். என்னய்யா இப்படி அநியாயம் பண்றிங்கனு கேட்டா.. நாங்க என்ன சார் பண்றது. சம்பளத்துக்கு வேலை பாக்கிறோம். மொதலாளி சொல்றத செய்றோம்னு செண்டிமெண்டலா டச் பண்ணதால அவங்கள உயிரோட விட்டேன். :)... 10 ரூவாய்க்கு ஒரு கொலையா? என்னடா அக்கிரமமா இருக்குனு யாரும் கேக்காதிங்க. எல்லாம் ஒரு பில்டப்பு தான். :))

உள்ளே நுழைவதற்கு முன்பு மிளகாய் பஜ்ஜி மற்றும் பானிப்பூரி கடைகள் பக்கம் பார்வை தானாகவே போனது. சரி வரும் போது கவனித்துக் கொள்ளலாம் என்று ஸ்டால்களுக்குள் நுழைந்தேன். முதல் ஸ்டாலில் நுழைந்த சில நொடிகளிலேயே ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. "அவன் - அது = அவன்" என்ற நண்பர் எஸ். பாலபாரதியின் புதிய புத்தகம். நவீன கதைகளை படிப்பதில் ஆர்வம் இல்லாதால் அதை வாங்கவில்லை. 4 மணி முதல் 7 மணி வரை கிட்டத் தட்ட அனைத்து ஸ்டால்களுக்குமே போனேன். கால் மற்ரும் இடுப்பு செம வலி. அப்புறம் தான் வெளியே வந்தேன்.

  • நண்பர் பாலபாரதி, சிறில் அலெக்ஸ், லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் ஜெயபாரதன் ஐயா போன்ற நமக்கு தெரிந்தவர்கள் புத்தகங்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது. இந்த மாதிரி ஜாம்பவான்களுடன் பழகும் வாய்பை குடுத்த இணையத்திற்கு வந்தனம்.
  • புத்தகங்களை பார்த்த அனைவருமே புத்தகத்தை தோராயமாக விரித்து சில வரிகளை படித்து/பார்த்தவுடன் மறக்காமல் புத்தகத்தின் விலையை பார்த்தார்கள்/பார்த்தோம். அப்படி பார்த்தவுடன் புத்தகத்தை அவசர அவசரமாக எடுத்த இடத்திலேயே வைத்தார்கள்/வைத்தோம். :)
  • சில புத்தகங்களில் அலங்கார வேலைகள் ரொம்ப தூக்கலாக இருந்தது. அதற்கும் சேர்த்து அநியாய விலை போட்டிருந்தார்கள். அந்த வகையை பார்த்து பெரும்பாலானோர் அபப்டியே வைத்து விட்டார்கள். குறிப்பாக பா.விஜய் கவிதை புத்தகங்கள். கல்லூரி மாணவர்களின் ஆட்டோகிராஃப் நோட்டுகள் மாதிரி இருந்தது. அதனால் விலையும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. படைப்புகளை மட்டுமே சந்தை படுத்தினால் நன்றாகவே வியாபாரம் இருக்கும். தேவை இல்லாத அலங்காரங்கள் செய்தால் அடக்க விலை அதிகமாகிவிடும். அதனால் புத்தகத்தின் விலையும் அதிகரிக்க வேண்டி இருக்கும். நமக்கு தேவை நல்ல படைப்புகள் தான். அலங்காரங்கள் இல்லை. படைப்புகளுக்கு தான் விலை குடுக்க முடியுமே தவிர அலங்காரங்களுக்கு இல்லை.வெளியீட்டளர்களும் படைப்பாளிகளும் கவனிக்க வேண்டும்.
  • ஒன்னுக்கடிப்பது எபப்டி?.. 30 நாட்களில் குழந்தைக்கு ஜெட்டி போட கற்ற்க் கொள்ளலாம் என்பது போன்ற புத்தகங்கள் ஏராளமாக இருந்தது. ஆனால் வலைப்பதிவது எப்படி என்று ஒரு புத்தகமும் இல்லை. புத்தக வெளியீட்டாளர்கள் கவனிக்க.
  • வழக்கம் போல எல்லா புத்தகத் திருவிழாவிலும் இருப்பது போல கம்யூனிசக் கொள்கை பரப்பும் புத்தகங்கள் அதிகமாகவே இருந்தது. அதே சில பக்க 10 ரூபாய் சிறு புத்தககங்கள்.. அதே வழக்கமான தவறான தகவல்கள் மற்றும் தவறான புள்ளி விவரங்களுடன். இந்த முறை அணு ஒப்பந்தம் பற்றிய புத்தகங்களை காம்ரேடுகள் சற்று அதிகமாகவே எழுதிக் குவித்திருந்தார்கள்.
  • இந்த வகை புத்தகம் தான் வாங்க வேண்டும் என்று எந்த முடிவுடனும் போகவில்லை. புத்தகங்களை பார்த்து முடிவு செய்துகொள்ளலாம் என்று சென்றுவிட்டேன். எனக்கு பிடித்தமாதிரி மிகக் குறைவாகவே இருந்தது. குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் மேலும் கவிதைகள் மற்றும் கதைகளே அதிகம் ஆக்கிரமித்து இருந்தது.
  • அபூர்வமான விஷயங்கள் பற்றியோ பழங்கால உண்மையான வீர வரலாற்று சம்பவங்களோ அவ்வளவாக இல்லை. கல்கி , சாண்டில்யன் படைப்புகள் மற்றும் அன்மிக புத்தகங்கள் ஓரளவுக்கு இருந்தது.
  • சர்வோதய பதிப்பகம் 27 ரூபாய்க்கு காந்தியின் சத்திய சோதனையும், 36 ரூபாய்க்கு அப்துல்கலாமின் அக்னி சிறகுகளும் விற்கிறார்கள்.
  • மக்கள் தொலைகாட்சியின் " அழகின் சிரிப்பு" டிவிடி வாங்கியதற்கு இன்றைய தமிழ் ஓசை இலவசமாக குடுத்தார்கள்.
  • பழங்கால வீர வரலாற்று கதைகள் படிபப்தில் ஆர்வம் இருப்பதால் பர்த்திபன் கனவு புத்தகத்தை வாங்கலாம் என்று அதை எடுத்து தோரயமாக பிரித்தேன். அதில் 2 வரிகள் படித்ததும் அடுத்த நிகழ்வுகள் தானாய் நினைவுக்கு வந்தது. இந்த கதைகளெல்லாம் வார இதழ்களில் தொடராக வரும் போது படித்திருக்கிறேன். இப்போது இந்தியா டுடே தவிர வேற எந்த வார இதழ்களுமே படிப்பதில்லை. எல்லாம் ஒரே சினிமா மற்றும் கல்லூரி மாணவிகள் மயம்.
  • பார்த்திபன் கனவு புத்தகத்தை நான் புரட்டியதை பார்த்த ஒருவர் " சார் இது அரசியல் புத்தகமா " என்று கேட்டார். இல்லீங்க அந்த காலத்து ராஜாக்கள் கதைங்க என்றேன். அடுத்து பதில் எதுவும் சொல்லாமல் ஒரு புத்தகத்தை ( பார்த்திபன் கனவுதான்) எடுத்து சென்று பணம் குடுத்தார். அடப்பாவிகளா.. :))
  • ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்கள் இருந்த ஒரு ஸ்டாலில் புத்தகங்கள் பார்த்துக் கொண்டிருந்த போது( தமிழ் தான்) அருகில் ஆங்கில புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் 2 ஆண்களும் ஆங்கிலத்தில் பீட்டர் விட்டுக் கொண்டிருந்தார்கள். சரி.. வேறு வேறு மாநிலத்தவர்களாக இருப்பார்கள் போல என்று நினைத்தேன். ஆனால் சிறிது நேரத்திலேயே ஹிந்தியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். பிறகு ஆங்கிலம். யாருய்யா சொன்னது 2 தமிழனுங்க பாத்துகிட்டா தான் தமிழை மறந்து ஆங்கிலத்தில் பேசுவார்கள். மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம் அவங்க மொழியில தான் பேசிக்கிறாங்கனு.. எல்லா ஊர் பய புள்ளைகளும் ஒரே மாதிரி தானுங்க. :)..
  • அந்த பொண்ணு கடைசியா சொன்ன ஒரு வசனம் " I dont find my kind of books yaar".. ங்கொக்கா மக்கா.. நாட்ல என்னய விட மோசமானவங்க நெறய பேரு சுத்திட்டு இருக்காங்கய்யா. :))
  • நல்ல வேளையா 4 மணிக்கே போனதால பொறுமையா எல்லா ஸ்டால்களும் பார்த்தேன். 6.30 மணிக்கு மேல கூட்டம் ரொம்ப ஜாஸ்தி ஆய்டிச்சி. அந்த கூட்டத்துல போய் இருந்தா ஒன்னும் ஒழுங்கா பார்த்திருக முடியாது. கோவை ஃபிகர்ஸ மட்டும் தான் பார்த்திருக முடியும். சினிமா போற மாதிரி நெறய குஜ்லீஸ் கூட்டம் கூட்டமா வந்திருந்தாங்க.
  • சில ஃபிகர்ஸ் கைல பா.விஜய், நா.முத்துகுமார், வைரமுத்து, மு.மேத்தா, ஷிட்னி ஷெல்டன் மற்றும் சில பேர் தெரியாத வெள்ளக்கார எழுத்தாளருங்க ஊஞ்சலாடிட்டு இருந்தாங்க.
  • பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு , கடல் புறா மற்றும் சில அரசியல் சம்பந்தமான புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். புத்தகத் திருவிழா முடிவதற்குள் வாங்க வேண்டும்.
  • சில புத்தகங்களை பார்க்கும் போது அதன் நம்பகத் தன்மை யோசிக்க வைக்கிறது. அதில் நடுநிலையான உண்மையான தகவல்களுக்கு பதில் ஒரு தலை பட்சமான தகவல்கள் இருக்குமோ என்ற எண்ணம் உருவாகிறது. குறிப்பாக அமெரிக்கா, விடுதலை புலிகள், தமிழீழம், சில நாட்டு உளவு அமைப்புகள் போன்றவை சம்பந்தமான புத்தகங்களின் நம்பகத் தன்மை யோசிக வைக்கிறது. காரணம் அவர்கள் ரெஃபர் செய்திருக்கும் நபர்கள் அல்லது இணையதளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் ஒரு தலைபட்சமானவர்களாக/மானவைகளாக அறியபட்டவர்கள்/பட்டவைகள்.
நான் வாங்கிய புத்தகங்கள்:
  • மஹாத்மா காந்தியின் சுய சரிதை
  • அட்லாண்டிக்கின் பெர்முதா முக்கோணமும் ஆழ்கடல் மர்மங்களும்
  • ஃப்ராய்ட்
  • நாஸ்டர்டாம்ஸ் சொன்னார்.. நடந்தது
  • இந்தியப்பெண் சோனியா காந்தி
  • அழகின் சிரிப்பு - பனை, பூ, ஏரி மற்றும் மலை பற்றிய காட்சிகவிதைகள் டிவிடி.
முடித்துவிட்டு வெளியே வந்து மிள்காய் பஜ்ஜி மற்றும் பானி பூரி ஏரியா வந்தால் உட்கார்ந்து சாப்பிட இடமில்லை. அவ்வளவு கூட்டம். 3 மணி நேரம் அன்ன நடை நடந்ததால் கால்/இடுப்பு வலி. ஆகவே மேலும் நின்றுகொண்டு சாப்பிட வாய்ப்பே இல்லை. வீட்டுக்கு கிளம்பி வந்து இந்த பதிவு போட்டாச்சி. :))

17 Comments:

said...

ஆகா - நல்லதொரு விம்ரசனக் கட்டுரை / பயணக் கட்டுரை

ஆமா கடைசிலே புத்தகம் வாங்கிட்டே போல இருக்கு - அதுவும் நல்ல புத்தகங்களா வன்ங்கிட்டே - நன்று

said...

ஆகா - நல்லதொரு விமர்சனக் கட்டுரை / பயணக் கட்டுரை

ஆமா கடைசிலே புத்தகம் வாங்கிட்டே போல இருக்கு - அதுவும் நல்ல புத்தகங்களா வாங்கிட்டே - நன்று

said...

பயனான தகவல். நாஸ்ட்ராடாமஸ் புத்தகம் பல பதிபகங்கள் உள்ளன சில முழுமை பெறாமல் இருக்கும். படிக்கவும் சுவாரசியம் குறைவாக இருக்கும்...

said...

நல்ல வர்ணனை சஞ்சய்.. உங்கள் ஞாபக சக்தி பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு சிறு விவரத்தையும் பதிவு செய்துள்ளீர்கள். நேரில் சென்று வந்த உணர்வு. நன்றி..

said...

நல்ல வர்ணனை சஞ்சய்.. உங்கள் ஞாபக சக்தி பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு சிறு விவரத்தையும் பதிவு செய்துள்ளீர்கள். நேரில் சென்று வந்த உணர்வு. நன்றி..

said...

நன்றி சீனா சார்.. டபுள் கமெண்டுக்கு டபுள் நன்றி.. :)

---

நன்றி விக்கி.. பெர்முடா முக்கோணம் பற்றிய உங்க பதிவு படிச்சேன். அருமையா எழுதி இருக்கிங்க. நாஸ்டர்டாம் புத்தகம் இன்னும் படிக்கலை. பெர்முடா பற்றிய புத்தகம் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம். :)

--------

@ வெண்பூ : என்னாது ஞாபக சக்தியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. சத்தம் போட்டு சொல்லிறாதிங்க.. உங்களுக்கு சேதாரம் கடுமையா இருக்கும். சஞ்சய் ராமசாமியை விட மோசமானவன் இந்த சஞ்சய் காந்தி. :)).. பின்னூட்டத்திற்கு நன்றி சாரே.. :)

said...

/
" I dont find my kind of books yaar".. ங்கொக்கா மக்கா..
/

:))))))))))

ஆமா கடைசிலே புத்தகம் வாங்கிட்டே போல இருக்கு

said...

அப்பபோ வாங்கிட்டு தான் மாம்ஸ் இருக்கேன். முழுசா படிக்கிறது தான் இல்ல. :)

said...

ஒன்னுக்கடிப்பது எபப்டி?.. //

நாட்டுக்கு அவசியம் தேவையான புத்தகம் :))

joke apart ஓன்னுக்கு பற்றி இப்போது உங்களால் எனக்கு ஓரு கரு கிடைத்துள்ளது.விரைவில் கதையாகவோ,கவிதையாகவோ எழுதிவிடுகிறேன்(இந்தக் கொடுமை வேறயான்னு ஓங்க மனசாட்சி பேசுறது கேக்குது).

said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஒன்னுக்கடிப்பது எபப்டி?.. //

நாட்டுக்கு அவசியம் தேவையான புத்தகம் :))

joke apart ஓன்னுக்கு பற்றி இப்போது உங்களால் எனக்கு ஓரு கரு கிடைத்துள்ளது.விரைவில் கதையாகவோ,கவிதையாகவோ எழுதிவிடுகிறேன்(இந்தக் கொடுமை வேறயான்னு ஓங்க மனசாட்சி பேசுறது கேக்குது).//

ராயல்டி முக்கியம் அமைச்சரே.. :)

சீக்கிறம் எழுதுங்க.. :)

said...

//நாட்களில் குழந்தைக்கு ஜெட்டி போட கற்ற்க் கொள்ளலாம் என்பது போன்ற புத்தகங்கள் ஏராளமாக இருந்தது.//

ஜட்டி என்று எழுதினால் எங்கே ஜட்டிகதை ஆகிவிடுமோ என்று ஸ்பெல்லிங் மாற்றினால் மட்டும் தப்பிக்க முடியாது உங்கள தமிழ்மணத்தில் இருந்து நீக்க பரிந்துரை செய்யப்படும்!!!

said...

//நாட்களில் குழந்தைக்கு ஜெட்டி போட கற்ற்க் கொள்ளலாம் என்பது போன்ற புத்தகங்கள் ஏராளமாக இருந்தது.//

ஜட்டி என்று எழுதினால் எங்கே ஜட்டிகதை ஆகிவிடுமோ என்று ஸ்பெல்லிங் மாற்றினால் மட்டும் தப்பிக்க முடியாது உங்கள தமிழ்மணத்தில் இருந்து நீக்க பரிந்துரை செய்யப்படும்!!!

(எல்லோரும் இரண்டு இரண்டு முறை கமெண்ட் போட்டு இருக்காங்க அதானால நானும்)

Anonymous said...

10 வருஷத்துக்கு முன்னாடி இந்த மாதிரி எல்லாம் பெரிசா புத்தகத்திருவிழா இல்லீங்க. விஜயா பதிப்பகத்துக்காரங்க கிட்ட சொல்லி வைச்சா வேணுங்கற புத்தகம் குடுப்பாங்க. நம்மூர்ல மிஸ் பண்ற விஷயங்கள்ல இதுவும் ஒண்ணு. நீங்க தனியாவா போனீங்க. கூட யாரையாச்சும் கூப்டுட்டு போயிருக்கலாமில்ல

said...

//குசும்பன் said...

ஜட்டி என்று எழுதினால் எங்கே ஜட்டிகதை ஆகிவிடுமோ என்று ஸ்பெல்லிங் மாற்றினால் மட்டும் தப்பிக்க முடியாது உங்கள தமிழ்மணத்தில் இருந்து நீக்க பரிந்துரை செய்யப்படும்!!!//

நான் பன்ற அழிச்சாட்டியத்திற்கு விரைவில் இது நடக்கும். :))

said...

//சின்ன அம்மிணி said...

10 வருஷத்துக்கு முன்னாடி இந்த மாதிரி எல்லாம் பெரிசா புத்தகத்திருவிழா இல்லீங்க. விஜயா பதிப்பகத்துக்காரங்க கிட்ட சொல்லி வைச்சா வேணுங்கற புத்தகம் குடுப்பாங்க. நம்மூர்ல மிஸ் பண்ற விஷயங்கள்ல இதுவும் ஒண்ணு. //
நீங்க நியூசிலாந்து போனதும் தான் எல்லாரும் வெளிய வர ஆரம்பிச்சிருகங்க

//நீங்க தனியாவா போனீங்க. கூட யாரையாச்சும் கூப்டுட்டு போயிருக்கலாமில்ல//
ஏன் இந்த ரத்த வெறி? வயித்தெரிச்ச்லை கெலப்பறதே அக்காவுக்கு வேலையா போச்சி.. :(
வச்சிகிட்டாக்கா வஞ்சனை பண்றேன்..? :(

said...

வாங்கிய புத்தக ரசனை நல்லா இருக்குது.கொஞ்சம் நாஸ்டர்டாம்ஸு என்ன சொல்றாருன்னு படிச்சிட்டு ஒரு பதிவு போடுங்க.அந்த மனுசன் அந்தக் காலத்துலேயே கோடிங்கெல்லாம் படிச்சிட்டு என்னமோ கனவுல கண்டதையெல்லாம் எழுதி வச்சிட்டுப் போயிட்டார்.இப்பத்த ஆளுக தங்களுக்கு தகுந்தமாதிரியெல்லாம் கதைகள் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

//ஆனால் வலைப்பதிவது எப்படி என்று ஒரு புத்தகமும் இல்லை//

சும்மா கும்மியடிச்சிட்டு இருக்கறவங்க யாராவது முந்துங்கய்யா.

said...

@ நாஜ நடராஜன்.
நாஸ்டர்டாம் பத்தி நிச்சயம் எழுதறேன். நன்றி.

Tamiler This Week