இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comWednesday 13 August, 2008
பதிவர் பெயரிலியின் பித்தலாட்டம்.
பெயரிலி என்ற பதிவர் என்னை பற்றி எதோ தவறான பின்னூட்டம் போட்டிருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பதிவில் இதெல்லாம் சகஜமப்பா என்று விட்டுவிட்டேன். சமீபத்தில் தமிழ்மணம் திறந்த போது அவர் பதிவு ஒன்று முகப்பில் தெரிந்தது. அப்போது நண்பர் சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அவர் பதிவிற்கு சென்று பார்த்தேன். நல்ல வேளையாக அவர் பதிவில் தேடும் வசதியை வைத்திருக்கிறார். அதை பயன்படுத்தி என்னை பற்றிய பின்னூட்டத்தை கண்டுபிடித்தேன். படித்ததும் பயங்கர அதிர்ச்சி. ரொம்ப தரக் குறைவான வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார்.
அவர் பின்னூட்டம் 1 :
// -/பெயரிலி. said...
Wed Jul 16, 07:18:00 AM 2008//
இந்த பதிவர் இப்படி ஒரு பின்னூட்டமே எனக்கு போடவில்லை. அபப்டி போட்டிருந்தால் அது தானாகவே பிரசுரம் ஆகி இருக்கும். என்னால் தடுத்திருக்க முடியாது. ஏனென்றால் நான் மட்டுறுத்தலை நீக்கி பல மாதங்கள் ஆகிறது.
இதை சொல்ல இவர் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் இவர் யாரென்றே எனக்கு தெரியாது. இதர்கு முன் இவர் பதிவுகள் எதையும் நான் படித்ததும் இல்லை. இவரை பற்றி நான் கேள்விப்பட்டதும் இல்லை. இவர் யாராக இருந்து தொலைத்தாலும், நான் தமிழ்மணத்தில் தான் என் பதிவுகளை இணைத்துள்ளேன். நான் எழுதிய அந்த குறிபிட்ட பதிவு தமிழ்மணத்திற்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால் , அதை எழுதிய நான் தமிழ்மணத்தை பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்மணம் முடிவு செய்தால் அதை அதிகாரப் பூர்வமாக தமிழ்மணம் அல்லது அதன் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் அறிவிக்கட்டும். அந்த அறிவிப்பை கண்ட அடுத்த வினாடி என் வலைப்பூக்களை விலக்க சொல்லும் வேண்டுகோள் அவர்களுக்கு போகும். நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்பவன். எங்களுக்கு தன்மானத்தை விட பெரியது எதுவும் இல்லை. நான் என் வலைப்பூவை தமிழ்மணத்தில் இணைத்திருக்கும் போது அவர்கள் தான் இந்த கோரிக்கையை வைக்க வேண்டும். கண்ட கண்ட அனாமதேயங்களுகெல்லாம் இதை சொல்லும் உரிமை கிடையாது...
தமிழ்மணம் என்பது ஒரு திரட்டி. வலைத்தளம் இல்லை. அதன் வேலை அதில் இணைக்கப்பட்டுள்ள பதிவுகள திரட்டுவது மட்டும் தான். தமிழ்மணம், தனக்கென சொந்தமான ஆக்கங்களால்/படைப்புகளால் செயல்படும் வலைத்தளம் அல்ல. அதன் வளர்ச்சியே அதில் இணைக்கப்பட்டுள்ள வலைப்பூக்களால் தான். ஆகவே அந்த வலைப்பூக்களுக்கு சொந்தமானவர்கள் தமிழ்மணத்தின் செயல்பாடுகள் அல்லது கொள்கைகளில் குறை இருப்பதாக தெரிந்தால் சுட்டிக்காட்டும் அல்லது தட்டிகேட்கும் உரிமை பெற்றவர்கள் தான். நான் தமிழ்மணத்தில் இணைந்த பின்பு ஆங்கிலத்தில் எழுதி இருந்த சில நண்பர்களை தமிழில் எழுதவைத்து தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறேன். ஆகவே கேள்வி கேக்கவும் எனக்கு உரிமை இருக்கிறது. இணையத்தில் நாம் பயன்படுத்தும் பல சேவைகளில் குறை இருப்பின் அந்த சேவை அளிப்பவரை விமர்சிக்கிறோம். கேள்வி கேட்கிறோம். யாரும் வெளியே போ என்று சொன்னதில்லை. யாஹூ, கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் உட்பட. :)..
பின்னூட்டம் 2 :
// -/பெயரிலி. said...
இவ்ளோதான், இந்த போலித்தனமான சஞ்சய் வீரம்;
மேலே போட என் பின்னூட்டத்தினை விடவில்லை; ஆனால், அதற்குப் பிறகு நான் அநாமதேயமாக காப்பரேட் குறித்துப் போட்ட பின்னூட்டத்தினை விட்டிருக்கிறார்.
நாளைக்கு காலவரிசைப்படி, நான் போட்ட பின்னூட்டம் பொருந்தி அங்கே இருந்தால், அவருடைய நான் அனுமதித்தேனே க்ளெய்ம் சரியென்று படாமலிருக்க எதற்கும் ஒரு திரைச்சொட்டு இப்போது எடுத்திருக்கிறேன். வர வர எவரையுமே நம்பமுடிவதில்லை
அது இங்கே
Wed Jul 16, 07:36:00 AM 2008//
அட அனாமதேயமே... மூளை என்ற ஒரு வஸ்து இருக்கா உமக்கு?. நீங்க மேலே சொல்லி இருக்கிற பின்னூட்டமே எனக்கு வரலையே. அப்புறம் எங்க போயி உங்க பின்னூட்டத்த விடறது?.. எனக்கு நீங்க அந்த பின்னூட்டம் போட்டிருந்தா தானாகவே பிரசுரமாகி இருக்கும். ஏனெனில் முன்பே சொன்ன மாதிரி நான் பின்னூட்டம் மட்டுறுதல் செய்வதில்லை.உங்களுக்கு முன்பு தமிழ்மணத்தின் நிர்வாகிகளுல் ஒருவரான திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் போட்ட பின்னூட்டம் பாருங்க. அடுத்து உங்கஅனாமதேய பின்னூட்டம் பாருங்க.கீழே ஆதாரம்....
பொதுவாக மட்டுறுத்தல் இல்லாத பின்னூட்டங்களுக்குத் தான் மின்னஞ்சலாக வரும் நேரமும் பின்னூட்டம் இட்ட நேரமும் ஒன்றாக இருக்கும். மட்டுறுத்தல் செய்யப்படும் பின்னூட்டங்களில் நேரம் மாறி இருக்கும். அதாவது பின்னூட்டம் இட்ட நேரத்திற்கு பிந்தைய நேரமே மின்னஞ்சல் வந்த நேரமாக இருக்கும்.மட்டுறுத்தல் செய்யப்படும் பின்னூட்டங்களில் பின்னூட்டமிட்ட நேரமும் மின்னஞ்சல் வந்த நேரமும் வேறு வேறாக இருக்கும். பின்னூட்டம் இடுவதற்கும் அதை மட்டுறுத்தி வெளிவருவதற்கும் மிக குறந்த பட்ச நேர வித்தியாசமாக இருக்கும்.
இதில் எதற்காக திரு. சுந்தரமூர்த்தி அவர்களின் பின்னூட்டமும் போட்டிருக்கிறேன் என்றால், ஒருவேளை உங்களின் அனாமதேய பின்னூட்டம் வரும் போது மட்டுறுத்தல் நீக்கி இருக்கலாம் என்று நீங்கள் கூறுகெட்ட தனமாக வாதிடக் கூடும். அதற்கு தான்.
//நாளைக்கு காலவரிசைப்படி, நான் போட்ட பின்னூட்டம் பொருந்தி அங்கே இருந்தால், அவருடைய நான் அனுமதித்தேனே க்ளெய்ம் சரியென்று படாமலிருக்க எதற்கும் ஒரு திரைச்சொட்டு இப்போது எடுத்திருக்கிறேன். வர வர எவரையுமே நம்பமுடிவதில்லை
அது இங்கே//
இதை திரும்ப திரும்ப படித்து சிரித்துக்கொண்டிருந்தேன். :)))... போடாத பின்னூட்டத்திற்கு திரைசொட்டு எடுத்தாராம்ல திரை சொட்டு.. :))
//இவ்ளோதான், இந்த போலித்தனமான சஞ்சய் வீரம்//
யார் போலி என்று இப்போது எல்லோரும் அறிந்திருப்பார்கள்.:)) மேலும் என் வீரத்தை பற்றி இந்த அனாமதேயம் பேசி இருக்கிறது, இதனிடன் என் வீரத்தை நிரூபிக்க நான் தயார். இந்த அனாமதேயம் தயாரா என்பதை அறிய ஆவல். :))
38 Comments:
அப்புறம் செல்லா.. வேற என்ன விஷயம் ?
:)) கிகிகி
அந்த ஆளோட வலை முகவரியும் கொடுங்க சஞ்ஜய்.. நாங்களும் பாப்போமில்ல.. அவரோட ப்ரொஃபைல் பப்ளிக் ஆக்ஸில் இல்லை.
Here it is..
http://wandererwaves.blogspot.com/2008/07/blog-post_14.html
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
//செந்தழல் ரவி said...
அப்புறம் செல்லா.. வேற என்ன விஷயம் ?
:)) கிகிகி//
ஏன் இந்த கொல வெறி ராசா? :(
//வெண்பூ said...
அந்த ஆளோட வலை முகவரியும் கொடுங்க சஞ்ஜய்.. நாங்களும் பாப்போமில்ல.. அவரோட ப்ரொஃபைல் பப்ளிக் ஆக்ஸில் இல்லை//
நான் சொல்றதுகுள்ள கண்டுபிடிச்சிட்டிங்களே தல :))
// தமிழ்நெஞ்சம் said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்//
நன்றி தமிழ்நெஞ்சம். உங்களுக்கும் என் மனமார்ந்த இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்:)
Here it is..
இப்பல்லாம் என்னப்பா உன் டவுசர கழட்ட ஆரம்பிச்சிட்டாங்களா??
பெரிய ஆள் ஆகீட்டே போல!!
:)))))))))))
/
அனானி செந்தழல் ரவி said...
அப்புறம் செல்லா.. வேற என்ன விஷயம் ?
:)) கிகிகி
/
ரிப்பீட்டு
:))))))))))
ROTFL
சஞ்சய்,
பெயரிலி அப்பின்னூட்டத்தை எழுதும்போது தமிழ்மண நிர்வாகிகளுள் ஒருவர். இப்போது இல்லை என நினைக்கிறேன் :)
எனக்கும் இப்படி ஒரு பிரச்சனை வந்தது, அதன் சுட்டி :
http://jyovramsundar.blogspot.com/2008/07/blog-post_16.html
பதிவையும் பின்னூட்டங்களையும் படித்துப் பாருங்கள், நல்ல காமெடியாக இருக்கும் :)
பெயரிலியே சொல்லியிருப்பதுபோல அவர் பல இடங்களில் அனானியாக (பெயரே அனாமதேயமாக இருப்பதாலோ என்னவோ!) பின்னூட்டியிருக்கிறார். எனக்கு புரியாத ஒன்று... ஏன் தமிழ்மண நிர்வாகிகள் அனானியாகப் பின்னூட்டவேண்டுமென்பது... :(
விட்டுத் தள்ளுங்க... எப்படியோ போறாங்க.. :)
இதை எழுதியதற்காகக்கூட அவங்க கட்டம் கட்டலாம் :(
/
:: Break The Rule ::
/
ப்ளாக் பேரை வாஸ்து பிரகாரம்
:: Will Break your Bone ::
இப்பிடி மாத்திட்டா இது மாதிரி எல்லாம் நடக்காதாம்.
:)))))))))
விடுய்யா நாய் கொலைச்சா திரும்ப குலைக்கிறதா. சேத்துல கல்லெறிஞ்சா மேலதான் தெறிக்கும். கடலை மொக்கை கும்மின்னு உன் வேலையை பாரு உன் பிசினஸை முன்னேத்த பாரு.
அன்புடன்
மங்களூர் சிவா
நல்ல ஜோக், பொடீ
இப்படியெல்லாம் கேள்வி கேட்டீங்கன்னா, 'கருத்து சொதந்திரத்த' பாதுக்காக்கிறவர்க உங்களை(யும்)- அதாவது உங்க பதிவுகளையும், 'இருக்கீங்க, ஆனா இல்ல' அப்படீங்கிர நிலை ஆக்கிடுவாங்க.
பதிவர் முழு லிஸ்ட்டில பாத்தீங்கன்னா என்னுடைய வலைப்பூ இருக்காது. ஆனா, புதுசா சேர்க்க போனா 'ஏற்கனவே உங்கள் வலைப்பூ இங்கே பதியப்பட்டுள்ளது' அப்படீன்னு வரும்.
பத்து பேரு கும்பல்ன்னு பீலா விடுவாங்க. ஆனா ஒரு ஆளு தன்னோட இஷ்டத்துக்கு கோடிங் பண்ணிக்கிட்டு நாட்டாம தனம்.
அது சரி, எங்கே அந்த தி(ர)ட்டிய பத்தி பேசினாலும் 'உள்ளேன் ஐயா' அப்படீன்னு சம்பந்தமே 'இல்லாத' ஒருத்தரு கரெக்டா ஆஜராகுறாரே, அது ஏன்?!
//mathangi mumu said...
Here it is..//
இன்னா சொல்ல வரீங்கோ? பிரிலையே..:(
//மங்களூர் சிவா said...
இப்பல்லாம் என்னப்பா உன் டவுசர கழட்ட ஆரம்பிச்சிட்டாங்களா??
பெரிய ஆள் ஆகீட்டே போல!!
:)))))))))))//
காரணமே இல்லாம வம்புக்கு வரானுங்க மாமா.. நம்ம டவுசர கழட்ட நெனைச்சா நாம அவனுங்க கோவணத்தையே உறுவற ஆளுன்னு புரிய வைக்கனும்ல.. :))
// மங்களூர் சிவா said...
/
அனானி செந்தழல் ரவி said...
அப்புறம் செல்லா.. வேற என்ன விஷயம் ?
:)) கிகிகி
/
ரிப்பீட்டு
:))))))))))
ROTFL//
அடிங்க.. நக்கலு... இந்த பதிவு பத்தி செல்லா கிட்ட சொல்லவே இல்லையே... :)
அட போங்க பாஸ் . இவிங்க இப்படித்தான் அடிச்சி கிட்டு இருப்பானுங்க. அடிக்கு பயந்தா நாம் எல்லாம் தொழில் பண்ண முடியுமா?
@ சுந்தர்
உங்க பதிவை பார்த்த்ஏன் நண்பரே. அங்கு போட்ட பின்னூட்டத்தை அப்படியே இங்கு போட்டுவிடுகிறேன்.
.......
அடக் கொடுமையே.. பெயரிலி இதே வேலையாத் தான் இருக்காரா?.. இது தெரியாம நான் ரொம்ப உணர்ச்சிவசப் பட்டு இவருக்காக ஒரு பதிவு போட்டுட்டேனே..
http://podian.blogspot.com/2008/08/blog-post.html
//Anonymous said...
From a technical perspective, both of you cannot prove "one way or other" that one party indeed "posted the comment" and the other party "never received the comment" conclusively.// (- இது சுந்தரின் பதிவுக்கு வந்த பின்னூட்டம்.)
நான் நிரூபித்திருக்கேன் பாருங்கோ. :))
பெயரிலி அதை பார்த்தாரா இல்லையா தெரியவில்லை. இன்னும் அவர் தவறை ஒப்புக் கொள்ளவில்லை... நான் மன்னிப்பெல்லாம் எதிர்பார்க்கவில்லை. இனியும் இது போல முட்டாள்தனமான அவதூறுகளை பரப்பி யாரையும் காயப் படுத்தாமல் இருந்தாலே போதும். இதை செய்வாரா பெயரிலி?
............
மங்களூர் சிவா said...
\\\
இப்பல்லாம் என்னப்பா உன் டவுசர கழட்ட ஆரம்பிச்சிட்டாங்களா??
பெரிய ஆள் ஆகீட்டே போல!!
:)))))))))))
\\\
ரிப்பீட்டு..:)
மங்களூர் சிவா said...
/
:: Break The Rule ::
/
ப்ளாக் பேரை வாஸ்து பிரகாரம்
:: Will Break your Bone ::
இப்பிடி மாத்திட்டா இது மாதிரி எல்லாம் நடக்காதாம்.
:)))))))))
\\\
ரிப்பீட்டு...
முதல் கமன்ட்டுதான் சூப்பரு...:)
அண்ணே என்ன நடக்கிறது ஏன் இப்படியான சண்டைகள்...
//விடுய்யா நாய் கொலைச்சா திரும்ப குலைக்கிறதா. சேத்துல கல்லெறிஞ்சா மேலதான் தெறிக்கும். கடலை மொக்கை கும்மின்னு உன் வேலையை பாரு உன் பிசினஸை முன்னேத்த பாரு.
அன்புடன்
மங்களூர் சிவா//
ரிபீட்டேய்ய்ய்ய்ய்
ஒவ்வொரு சாப்ட்வேர் கம்பெனியும் சொந்த பயுனுக்காக இன்டர்நெட் வசதி நிறுத்தினால், இந்தே வம்பு வராது.
//மங்களூர் சிவா said...
/
:: Break The Rule ::
/
ப்ளாக் பேரை வாஸ்து பிரகாரம்
:: Will Break your Bone ::
இப்பிடி மாத்திட்டா இது மாதிரி எல்லாம் நடக்காதாம்.
:)))))))))//
ஹாஹா.. அந்த மாதிரி பேரை மாத்தக் கூடாது மாமு. அதை செயல்ல காட்டனும். :)
// மங்களூர் சிவா said...
விடுய்யா நாய் கொலைச்சா திரும்ப குலைக்கிறதா. சேத்துல கல்லெறிஞ்சா மேலதான் தெறிக்கும். கடலை மொக்கை கும்மின்னு உன் வேலையை பாரு உன் பிசினஸை முன்னேத்த பாரு.
//
சரி தான் மாம்ஸ்.. ஆனா நம்மள பத்தி தவறான எண்ணத்தை உறுவாக்க பார்க்கும் போது அது தவறுனு நாம நிரூபிச்சாகனும்ல :)
/Kasi Arumugam - காசி said...
நல்ல ஜோக், பொடீ//
காசி அண்ணே.. என்ன இது? பொதுவா சொல்லிட்டிங்க? பெயரிலி பின்னூட்டம் ஜோக்கா? இல்லை அவரின் தவறான பின்னூட்டத்துக்கு நான் மறுப்பு சொல்லி இருக்கிறது ஜோக்கா? :(
இந்த பதிவு என் வலியோட பிரதிபலிப்பு. வெளியேறு என்று சொன்னதை நான் மறைத்துவிட்டது போலவும், போலியான வீரம் கொண்டவன் போலவும் சித்தரித்திருப்பது சாதரனமாக எடுத்துக் கொள்ள முடியாது. நான் கிராமத்தான். எனக்கு ரோஷம் சராசரிக்கு அதிகமாகவே வரும். அதை வெளிப்படுத்துவதும் சற்று முரட்டுத் தனமாக்த் தான் இருக்கும்.
மாம்ஸ் வாழ்த்துக்கள் மாம்ஸ்!!!
சீக்கிரம் ரணகள பதிவர் ஆக அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்!!!
ரவி கமெண்ட் செம கலக்கல்!!!
// மாயவரத்தான்.... said...
இப்படியெல்லாம் கேள்வி கேட்டீங்கன்னா, 'கருத்து சொதந்திரத்த' பாதுக்காக்கிறவர்க உங்களை(யும்)- அதாவது உங்க பதிவுகளையும், 'இருக்கீங்க, ஆனா இல்ல' அப்படீங்கிர நிலை ஆக்கிடுவாங்க//
ஹிஹி... என்னமோ நடக்குது .. மர்மமா இருக்குது.. ஒன்னுமே பிரியலே தமிழ்மணத்துலெ.. :)
//இளைய கவி said...
அட போங்க பாஸ் . இவிங்க இப்படித்தான் அடிச்சி கிட்டு இருப்பானுங்க. அடிக்கு பயந்தா நாம் எல்லாம் தொழில் பண்ண முடியுமா?//
வாங்க டூப்ளிகேட் போலிசு... ஆளையே காணல.. நலமா? :)
//தமிழன்... said...
அண்ணே என்ன நடக்கிறது ஏன் இப்படியான சண்டைகள்...//
எதுவுமே புரியாம சிலர் லூசுத்தனமா இருக்கிறதால தான் சண்டையே தமிழன் அண்ணாச்சி.. :)
நன்றி வடகரை வேலன் அண்ணே.. :)
---
//Ram said...
ஒவ்வொரு சாப்ட்வேர் கம்பெனியும் சொந்த பயுனுக்காக இன்டர்நெட் வசதி நிறுத்தினால், இந்தே வம்பு வராது//
அண்ணே.. இப்டி எல்லாம் நடந்தது.. பல பேர் சாபத்துக்கு ஆளாவீங்க..
வேணும்னா கொஞ்சம் மாத்தி சொல்லி பாருங்க..
"ஒவ்வொரு சாப்ட்வேர் கம்பனிலயும் செய்யறதுக்கு வேலை இருந்தா இந்த வம்பு வராது" :))
//குசும்பன் said...
மாம்ஸ் வாழ்த்துக்கள் மாம்ஸ்!!!
சீக்கிரம் ரணகள பதிவர் ஆக அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்!!!
ரவி கமெண்ட் செம கலக்கல்!!!//
கல்யாணம் ஆகியும் உம்ம குசும்பு மட்டும் குறையவே இல்லையே சாமி.. ஆயில்ஸ் சொன்ன மாதிரி " எல்லாம் சகோதரி வடிச்சி கொட்ற சோறு" பண்ற வேலை. :)
// தமிழ்மணம், தனக்கென சொந்தமான ஆக்கங்களால்/படைப்புகளால் செயல்படும் வலைத்தளம் அல்ல. அதன் வளர்ச்சியே அதில் இணைக்கப்பட்டுள்ள வலைப்பூக்களால் தான்.//
Thanks for the "Nach" lines! These ppl should realize that first! If they dont realize our (bloggers) importance .. we bloggers must treat them what they are!! one more old aggregator with no respect for the contributors!
anbudan
Osai Chella
நன்றி செல்லா ஆண்ணே..
இந்த செந்தழல் ரவி எதோ கமெண்ட் போட்டிருக்கார்.. என்னன்னு கொஞ்சம் கவனிங்க... இந்த வலைப்பூ உங்களோடதுனு நெனைச்சிட்டாரோ? :(
Post a Comment