இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Monday, 25 August, 2008

கொஞ்சுபவர்கள் அல்லது கெஞ்சுபவர்கள் சார்பில்

ஜோசப் அண்ணாச்சியின் சமீபத்திய பதிவில் உடன்பாடு இல்லாததால் "கொஞ்சுபவர்கள் அல்லது கெஞ்சுபவர்கள்" சார்பில் ஒரு பதில்பதிவு..

//வர வர இது ஒரு வாடிக்கையான வழக்கமாகி கொண்டே போகின்றது. நன்றாக எழுதிக்கொண்டிருக்கையிலேயே திடீர் என விடை பெறுகிறேன் என அறிவிப்பது. உடனே அவரது நண்பர்கள் அனைவரும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள், நீங்கள் எல்லாம் எழுதாவிட்டால் எப்படி என்பது போன்ற பின்னூட்ட கொஞ்சல்கள், கெஞ்சல்கள் செய்வது, பின்பு நீங்கள் எல்லாம் மிகவும் வேண்டிக்கொண்டதால் நான் மீண்டும் பதிவெழுத வருகிறேன் என்பது. ஏன் இதெல்லாம் ? நிஜமா நல்லவனின் விடை பெறுகிறேன் பதிவுக்கு நான் எழுதிய பின்னூட்டம் இதுதான். //
ஜோசப் பால்ராஜ் said...

இப்டியே எல்லாரும் போறேன்னு சொல்றதும், மத்தவங்க அவங்க இல்லீங்க நீங்க எல்லாம் தொடர்ந்து எழுதணும்னு கூப்பிடுறதும் தொடர் கதையா போயிடுச்சு. //
//
அது தான் நட்பு... எந்த ஒரு சராசரி மனிதனும் எளிதில் உணர்ச்சிவசப் படுபவன் தான். இந்த பதிவை எழுத அவருக்கும் உணர்ச்சிபூர்வமான காரணம் எதுவும் இருக்கலாம். அதனால் சட்டென உணர்ச்சிவசப் பட்டு எழுதி இருக்கலாம். அது தவறு என்று புரியவைத்து அவரை மீண்டும் எழுதுங்கள் என்று " கொஞ்சுவது அல்லது கெஞ்சுவது" நண்பர்களின் விருப்பம். அதை "தொடர்கதை" என்று சொல்லி நீங்கள் கொச்சை படுத்தினாலும் பரவாயில்லை. அந்த கொஞ்சலையும் கெஞ்சலையும் மதித்து அவர் மீண்டும் எழுத வருவது நண்பர்களுக்கு அவர் தரும் மரியாதை தானே ஒழிய வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை.

//நீங்க உண்மையிலேயே இனிமே எழுத எதுவும் இல்லைன்னு நினைச்சா நீங்க இனிமே கண்ண மூடிகிட்டு இருக்கப் போறீங்கன்னு அர்த்தம். எதையும் பார்க்க மாட்டீங்க, படிக்க மாட்டீங்கன்னு அர்த்தம். ஏன்னா நாம பார்கிறது, படிக்கிறதுல இருந்துதான் பாதிவுகள் வருது. அப்டித்தான் இருக்கப் போறீங்கன்னா ரொம்ப சந்தோசம் , போயிட்டு வாங்க,//

இது வரை சரிதான்..
//இனிமே எழுதாதீங்க. //
ஆனால் இது எதோ உத்தரவு மாதிரி அல்லவா இருக்கு? :(

//உங்களையெல்லாம் வாங்க வாங்கன்னு கூப்பிடவே கூடாதுங்கிறதுதான் என் கொள்கை.//
நல்ல கொள்கை. மெச்சுகிறோம். யாருக்கும் என்ன மாதிரியான கொள்கை வேணாலும் இருக்கலாம். தவறில்லை. அதே போல் அவருக்கும் கொள்கை இருக்கலாம். விளையாட்டாய் விடைபெறுகிறேன் என்று சொல்லவோ.. அல்லது உணர்ச்சிவசப் பட்டு விடைபெறுகிறேன் என்று பதிவிடவோ அவருக்கும் உரிமை இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

//மத்தவங்க கூப்பிடுறாங்கன்னு எல்லாம் வந்துடாதீங்க. உங்க கொள்கை இனிமே எழுத கூடாதுங்கிறது தானே? அதுல உறுதியா இருங்க. வாழ்த்துக்கள். நாம நல்ல நண்பர்களா இருப்போம் என் மின்னஞ்சல் முகவரி தர்றேன். தொடர்புல இருங்க. ஆனா இனிமே நீங்க எழுதவே வேண்டாம். நாடு ஒன்னும் கெட்டுப் போயிறாது. போயிட்டு வாங்க. நன்றி. இதுவரை நீங்க பதிவுலகத்துக்குச் செஞ்ச சேவைக்கு ரொம்ப நன்றிங்க. வணக்கம்.
என் மின்னஞ்சல் முகவரி: joseph.paulraj@gmail.com.
//

இது நிஜமா நல்லவருக்கு... ரொம்ப நல்ல வரிகள். மத்தவங்க கூப்பிடறாங்கன்னு வந்துடாதிங்கன்னு உங்க ஈமெயில் முகவரி கூட தெரியாத ஜோசப் உரிமையோட சொல்ற மாதிரி.. உங்களோட வாரத்தில் 4 நாட்களாவது பேசும் அளவுக்கு நெருங்கிய நண்பனாக இருக்கும் நான் உரிமையோட சொல்கிறேன். ஒழுங்கு மரியாதையா திரும்ப எழுத வாங்க.

இது ஜோசப் அண்ணாவுக்கு,
அண்ணா அவர் எழுதலைனா நிச்சயம் நாடு ஒன்னும் கெட்டு பொயிறாது. ஏன்னா ஆக்கப் பூர்வமான படைப்புகளை எழுத நீங்க இருக்கிங்களே. அதுவே போதும் நாடு கெட்டு போகாமல் இருக்க. ஆனால் பணிச்சுமையின் காரண்மாக நினைத்த நேரத்தில் தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ பேச முடியாமல் இருக்கும் எங்களை போன்ற மொக்கை பதிவு நண்பர்களுக்கு வலைபதிவு தான் அழகான தொடர்பு கருவி. ஆகவே எங்கள் நட்பு குறையாமல் இருக்கவாவது அவர் திரும்ப பதிவு எழுதியே ஆகனும்... அவரை வர வெண்டாம் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருப்பது போல் தெரியவில்லை. ஏன்னா உங்க கிட்ட அவரோட மின்னஞ்சல் முகவரி கூட இருப்பதாக தெரியவில்லை... ஆனால் நான்க்காள் மின்னஞ்சலில் மட்டும் இல்லாமல் தொலைபேசியிலும் பேசும் அளவுக்கு நல்ல நண்பர்கள். ஆகவே எனக்கு அவரை மீண்டும் எழுத வைக்க உரிமை இருக்கு.

//எழுத ஒன்னுமே இல்லைன்னு சொல்லிட்டு போறவரை எதுக்கு இத்தனை பேரு திரும்ப வாங்கன்னு கூப்பிடனும் ? //
அவர் என்ன மூலப் பொருளை கொண்டு உற்பத்தி செய்யும் இயந்திரமா? மூலப் பொருள் தீர்ந்துவிட்டது.. இனி எதும் தயாரிக்க முடியாது என்று சொல்ல.. இன்று எழுத அவருக்கு ஒன்றும் இல்லாமல் போனாலும் நாளையே அவருக்கு எதாவது எழுத கிடைக்கலாமே.... அதும் இல்லாம இத்தனை பேர் திரும்ப வாங்கன்னு கூப்பிடறத( அதாவது அப்படி கூப்பிடும் எங்களை) கேள்வி கேக்க நீங்க யார்ணே..? //மாரத்தான் ஓட்டப் போட்டி நடக்குது, பல வீரர்கள் ஓடிக்கிட்டு இருக்காங்க. அதுல ஒருத்தரு இனிமே என்னால ஓட முடியாது, ஒடுறதுக்கு என் உடம்புல வலு இல்லன்னு உக்காந்துட்டாருன்னா என்ன செய்ய முடியும்? சரிங்க அப்டி ஓரமா உக்காந்துக்கங்கன்னு தானே சொல்ல முடியும்? இல்ல இல்ல நீங்க கட்டாயம் ஓடியே ஆகணும்னு சொல்லி ஓட முடியாதவர இழுத்துக்கிட்டு வர முடியுமா? //
இது மோசமான வரிகள். முடியாது என்று சொல்பவரை ஊக்கப் படுத்தி ஓட வைக்க வேண்டுமே ஒழிய.. அப்பாடா போட்டியில ஒருத்தன் ஒழிஞ்சான். நமக்கு குறைந்த பட்சம் ஒரு இடமாவது முன்னாடி கிடைக்கும் என்று நினைப்பதை என்னவென்ரு சொல்ல?

//எனக்கு என்னமோ நிஜமா நல்லவன் நிஜமான காரணம் எதையும் சொல்லாம வெறுமனே இனிமே எழுத ஒன்னும் இல்லன்னு சொல்லியிருக்காருன்னுதான் தோணுது.//
நல்லா ஜோசியம் பாப்பிங்க போல.. :).. ஏன்ணே.. ஜோசப் அண்ணே.. காரணமே இல்லாம எதுக்குண்ணே சொல்லனும்? ஒரு நையாண்டித்தனமான காரணமாவது இருக்கும்ணே.. நீங்க ஏன்ணே இம்புட்டு அவசரப் பட்டு அவரை துரத்துவதிலேயே குறியாக இருக்கிங்க? :(


// எப்டியிருந்தாலும் எழுத முடியாதுன்னு சொல்றவரப்போய் எதுக்கு மல்லுகட்டனும் ? காரணமே தெளிவா சொல்லாதவருகிட்ட எதுக்கு போயி எல்லாரும் கெஞ்சணும் ? //
அது கெஞ்சறவங்களோட( அதாவது எங்களோட) இஷ்டம்ணே.. அவர் எங்களுகெல்லாம் அந்த அளவுக்கு நல்ல நண்பர். அதனால் கெஞ்சறோம். உங்களுக்கு ஏன் எரியனும்?.. வேணும்னா இந்த மாதிரி நீங்க ஒரு பதிவு போட்டு பாருங்களேன்.. எத்தனை பேர் உங்களை கெஞ்சறாங்கன்னு பாக்கலாம்.. :))

//நேற்று இரவு இந்த பதிவை படித்துவிட்டு நானும் தம்பி விஜய் ஆனந்தும் வலையுரையாடலில் பேசிக் கொண்டிருந்தோம். இப்படி அறிவிப்பதும், கெஞ்சுவதும், திரும்ப வருவதுமான போக்கு அதிகரித்துக் கொண்டே போகின்றது.//
இதனால் உங்களுக்கு எங்கே ஆண்ணா குறைந்துவிட்டது? யார் என்ன அறிவித்தால் உங்களுகென்ன? அது அதிகரித்தே போனாலும் உங்களுகென்ன?.. அந்த மாதிரி பதிவர்கள வசிப்பதை நிறுத்திவிட்டால் போச்சி.. அதற்கு ஏன் தனி பதிவு போடனும்? இதற்கு முன் எத்தனை பேர் இப்படி அறிவித்திருக்கிறார்கள் தெரியுமா? அப்போதெல்லாம் நீங்க எங்கே போனிங்க? ஏன் நிஜமா நல்லவருக்கு மட்டும் ஆப்படிக்க முயற்சி பண்றிங்க? :)

// இது கட்டாயம் தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பிடிக்கும் என்றும் சொன்னார். அதே போல் இன்று சூடாண இடுகைகளில் இடம்பிடித்து விட்டது. //
நீங்க இந்த பதிவை எழுதி இருபப்து கூட சூடாண இடுகையில் இடம்பிடிக்கும் உங்கள் ஆசையாகத் தான் தெரிகிறது.. ஏன்.. நான் உங்களுக்கு எழுதும் இந்த பதிவு கூட சூடாண இடுகையில் வரும்.. அதற்கெல்லாம் என்ன செய்ய முடியும் அண்ணா? அதிகம் பேர் பார்க்கும் பதிவு சூடாண இடுகையில் வரத்தான் செய்யும்.. சூடாண இடுகையில் இடம் பிடித்தாம் விருதோ அல்லது பணமோ தராங்களா? இதை ஏன் கேள்விக்கு உள்ளாக்குகிறீர்கள்?... தமிழ்மணம் சூடான இடுகையில் இடம் பிடிப்பது எபப்டி என்று நான் ஒரு பதிவு போட்டேன். அந்த பதிவில் வெறும் நாங்கு வரிகள் எழுதினேன்.. "இந்த பதிவு சூடான இடுகையில் வரும் பாருங்க" என்பது போல். விஷயமே இல்லாத அந்த பதிவும் சூடாண இடுகையில் வந்தது. அதுக்கு யாருமே எனக்கு பணம் தரலைணே.. எங்களை போன்ற மொக்கை பதிவர்களுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு.. அவ்வளவுதான்.. இதை ஏன் சீரியசா எசுத்துகிறீங்க?

//இப்படி காரணமில்லாமல் நானே போய் வருகிறேன், இனி எழுத மாட்டேன் என்று சொன்னால் யாரும் கெஞ்சக் கூடாது என்பதுதான் என் கருத்து. //

இது உங்கள் கருத்தாக மட்டும் இருக்கும் பட்சத்தில் யாருக்கும் கவலை இல்லை. ஆனால் இது உத்தரவாக மாரும் பட்சத்தில் தான் உங்களை கேள்வி கேக்கத் தோன்றுகிறது.

//தமிழ் மணத்திற்கு : // முதலில் நீங்கள் தமிழ்மணத்தை கேள்வி கேட்பதையே நான் விமர்சிக்க விரும்புகிறேன். நான் தமிழ்மணத்தை பல முறை கேள்வி கேட்டிருக்கிறேன். அவர்களை விமர்சித்து இருக்கிறேன். தமிழ்மணத்தில் என் பதிவை சேர்த்த நாள் முதல் இன்று வரை பல வடிவமைப்புகளை மாற்றியும் தமிழ்மணத்தின் லோகோ என் வலைப்பூவில் இடம் பெற செய்திருக்கிறேன். அவர்கள் என் வலைப்பூவை திரட்டுகிறார்கள் இலவசமாக. அதற்கு பதிலாக நான் அவர்களுக்கு என் வ்லைப்பூவில் இணைபு கொடுத்துள்ளேன். இந்த குறைந்த பட்ச புரிதல் கூட உங்களுக்கு இல்லை. உங்கள் வலைப்பூவை தமிழ்மணம் திரட்டிய போதிலும் நீங்க அவர்களுக்கு இணைப்பு தரவில்லை. ஆனால் "திரட்டி" எனும் திரட்டிக்கு இணைப்பு கொடுத்திருக்கிங்க. அப்படி இருக்கும் போது தமிழ்மணத்தை எப்படி உங்களால் கேள்வி கேட்க முடிகிறது?.. நிஜமா நல்லவரின் பதிவு சூடாண இடுகையில் வருகிற ஒரே காரணத்திற்காகவா? :)

//சூடாண இடுகைகளுக்கான பதிவுகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன ? //
என் சிற்றறிவுக்கு எட்டியவரை அதிகம் பேர் அல்லது அதிகம் முறை பார்க்கப் படும் பதிவு தானாகவே சூடான இடுகைகளில் இடம் பிடிக்கிறது.

//பதிவுகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை வைத்தா? பதிவுக்கு இடப்படும் பின்ன்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்தா? //

பார்ப்பவர்களின் எண்ணிக்கையை வைத்தே என்று நினைக்கிறேன்.

//ஏன் பெரும்பாலும் மொக்கை பதிவுகளே சூடாண இடுகைகளில் இடம்பிடிக்கின்றன? //

மொக்கை பதிவுகள் என்பதற்கு உங்களால் விளக்கம் தர முடியுமா?. . . என்னங்கய்யா ஆளாளுக்கு மொக்கை பதிவு மொக்கை அப்திவு சவுண்டு குடுக்கறிங்க. மொக்கை பதிவுகளால் யார்னா காயப் பட்டிருக்கங்களா? உங்கள மாதிரி ஆக்கப் பூர்வமான பதிவர்களால் தான் மற்றவர்கள் வருத்தப் பட வேண்டி இருக்கு. ( உதாரணம் உங்களின் இந்த பதிவு )சூடான இடுகையில் இடம் பிடிப்பதெல்லாம் மொக்கை பதிவுகள் என்றால் உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்குமே. அதை விட்டு மற்ற " ஆக்கப் பூர்வமான" பதிவுகளை படிக்கலாமே.

//இப்படி மொக்கை பதிவுகளே பெரும்பாலும் சூடாண இடுகைகளில் இடம்பிடித்துக்கொண்டிருந்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா?//

அண்ணே.. இப்போ எல்லாம் வலைப்பூக்கள் நட்பை வளர்க்கும் இடமாக மாறிவிட்டது. ஆகவே அதிக நண்பர்களை வைத்திருப்பவரின் பதிவுகள் அதிகம் பேரால் பார்க்கப் படுகிறது.. அது சூடாண இடுகையில் வந்து தொலைத்துவிடுகிறது. இது உங்க வெயித்தெரிச்சலை சம்பாதித்துவிகிறது. பேசாம தமிழ்மணத்திற்கு ஒரு கடிதம் எழுதி சூடாண இடுகையை எடுக்க சொல்லுங்க.. இனியாவது உங்க டென்ஷன் கொறையட்டும். இதுல தவறான முன்னுதாரணத்துகெல்லாம் ஒரு வேலையும் இல்லை. உங்களால இதில் இடம்பிடிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் தான் தெரிகிறது... தயவு செய்து "வழக்கம் போல்" ஆக்கப் புர்வமான பதிவுகள் மட்டும் எழுத முயற்சி பண்ணுங்க. பதிவு எண்ணிக்கைல ஒன்னு கூடனும்னு எங்கள மாதிரி நீங்களும் மொக்கை போடாமல் இருந்தால் சந்தோஷபடுவேன்.

இப்படிக்கு
வழக்கம் போல் உங்கள் நண்பன்.


பிகு : ஜோசப் அண்ணாவுக்கு பதில் பதிவு எழுத நீ யாருடா என்று கேட்கும் நல்ல உள்ளங்களுக்கு .... நாளைக்கு நானும் விடை பெறுகிறேன்.. வடை சுடுகிறேனு ஒரு பதிவு போடுவேன். அப்போ யாரும் எனக்கு ரிவீட்டு அடிக்க கூடாது இல்ல.. அதான் இப்போவே கொஞ்சம் உஷாரு ஆய்க்கிறேன்..

---விரைவில் எதிர்பாருங்கள்....
........வாருங்கள் ஆயில்யனை வழியனுப்பிவிட்டு அவருக்கு பின்னூட்டம் போடுபவர்களை கேள்வி கேப்போம்............

43 Comments:

said...

மீ த பர்ஸ்ட்டூ :)

said...

//ஜோசப் அண்ணாச்சியின் சமீபத்திய பதிவில் உடன்பாடு இல்லாததால் "கொஞ்சுபவர்கள் அல்லது கெஞ்சுபவர்கள்" சார்பில் ஒரு பதில்பதிவு..
//

வெரிகுட்!

வெரிகுட்!

இப்ப பதிவுக்கு பதில் டிரெண்ட் செட் ஆகியிருக்கா????

said...

//வர வர இது ஒரு வாடிக்கையான வழக்கமாகி கொண்டே போகின்றது. நன்றாக எழுதிக்கொண்டிருக்கையிலேயே திடீர் என விடை பெறுகிறேன் என அறிவிப்பது. உடனே அவரது நண்பர்கள் அனைவரும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள்//

என்னிய யாருமே அது மாதிரி கூப்பிட்டதில்லைப்பா??????

:((((

said...

//அந்த கொஞ்சலையும் கெஞ்சலையும் மதித்து அவர் மீண்டும் எழுத வருவது நண்பர்களுக்கு அவர் தரும் மரியாதை தானே ஒழிய வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை.//

சூப்பரூ!!!!

said...

//ஆனால் இது எதோ உத்தரவு மாதிரி அல்லவா இருக்கு? :(//

பொதுவாவே பதிவுலகில் யாரும் யாருக்கும் எந்த கருத்துக்களாக இருந்தாலு கோரிக்கையாக வையுங்கள் உங்கள் கருத்துக்களை உத்தரவிடவேண்டாமே! அது கொஞ்சம் நட்பினை மேன்மைபடுத்தும்

said...

//உங்களோட வாரத்தில் 4 நாட்களாவது பேசும் அளவுக்கு நெருங்கிய நண்பனாக இருக்கும் நான் உரிமையோட சொல்கிறேன். ஒழுங்கு மரியாதையா திரும்ப எழுத வாங்க//

நானெல்லாம் தினத்தில் 4 தடவையாவது சாட்ல கும்மி அடிக்கிறேன் நானும் கூப்பிடறேன்....!

said...

//என் மின்னஞ்சல் முகவரி: joseph.paulraj@gmail.com. ////


அய்யோ! ஜோசப் அண்ணே தேவையில்லாம தானாவந்து வலையில விழாதீங்க! இது கும்மி திரெட் மெயில் அனுப்பியே கலங்கடிச்சுடுவாங்க :(((

said...

//அதற்கு ஏன் தனி பதிவு போடனும்? இதற்கு முன் எத்தனை பேர் இப்படி அறிவித்திருக்கிறார்கள் தெரியுமா? அப்போதெல்லாம் நீங்க எங்கே போனிங்க? ஏன் நிஜமா நல்லவருக்கு மட்டும் ஆப்படிக்க முயற்சி பண்றிங்க? :)///


ஆப்பா?

அவ்வ்வ்வ் இது என்ன புதுக்கதையா இருக்கு??????

said...

//"இந்த பதிவு சூடான இடுகையில் வரும் பாருங்க" என்பது போல். விஷயமே இல்லாத அந்த பதிவும் சூடாண இடுகையில் வந்தது. அதுக்கு யாருமே எனக்கு பணம் தரலைணே..//

சூடான இடுகையில் வருவது என்பது நட்பு வட்டத்தில் பிரபலமாகிவிட்டாலே போதுமான ஒன்று என்பது என் தனிப்பட்ட கருத்து !

நிறைய வலைப்பதிவு நண்பர்கள் சும்மா வந்து கிளிக் பண்ணிவிட்டு சென்றலே சூடான இடுகையில்தான் அந்த பதிவு வரும்! இப்படி நட்பு வட்டம் இல்லாத ஆடகள் சூடான வரிகளில் ஈசியாக வந்துவிட முடியும்!

said...

//விரைவில் எதிர்பாருங்கள்....
........வாருங்கள் ஆயில்யனை வழியனுப்பிவிட்டு அவருக்கு பின்னூட்டம் போடுபவர்களை கேள்வி கேப்போம்...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


நான் என்னிக்கு போறேன்னு சொன்னேன்!????
அடப்பாவிகளா! பார்சல் கட்டிட்டீங்களா??

முடியாது! முடியவே முடியாது நான் போகமாட்டேன் நான் அழப்போறேன்!!!!

said...

சஞ்சய்..

முழுமையான உடன்பாடு உங்கள் கருத்துகளில்.


எழுத மாட்டேன் என்று முடிவு செய்வதற்கு பல காரணிகள். இருக்கும் இடம், சூழல், பணிச்சுமை, மனச்சுமை.

தனிமையின் வெறுப்பில் சிலர் இப்படிச் செய்யத் தூண்டிடும் சூழ்நிலையில் இருப்பார்கள்.


//ஆனா இனிமே நீங்க எழுதவே வேண்டாம். நாடு ஒன்னும் கெட்டுப் போயிறாது. போயிட்டு வாங்க.//

ஜோ.பா அண்ணே -

என் கண்டனங்கள். நீங்கள் எழுதியோ இல்லை நான் எழுதியோ நாடு திருந்திவிடப் போவதில்லை. அப்படியேத் தான் நீங்களும் எழுதாமலிருக்கும் பட்சத்திலும் நாடு கெட்டுப் போய் விடப் போவதில்லை.

இப்படியான சூழ்நிலை உங்களுக்கு ஏற்படாமல் இருக்கவும், உங்களை யாரும் திரும்ப அழைக்காமல் இருக்கவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

மற்றவர்களுக்குச் சொல்லும் யோசிக்க முயன்றால் நலம். தண்டல்காரப் பேச்சு சரியில்லைங்கண்ணே ..


இன்றைக்கும் வருஷத்துக்கு நாலு இல்லை அஞ்சுன்னு எழுதிட்டு இருக்கிறதால எனக்குக் கிடைத்த பரிசுகள் அத்தனையும் அதிகம். பல நட்புகள். நான் எழுதாமல் போனதால் நாடு கெட்டுப் போகாது தான். ஆனால் நான் பல விஷயங்களில் தொடர்பற்றுப் போயிருப்பேன். அப்படி எங்கள் நண்பன் போகக் கூடாது என்று எங்கள் ஆதங்கத்தின் மீதழப்பதை கொச்சைப் படுத்தும் உங்கள் பதிவைக் கண்டு மனம் வேதனையடைகிறது.

ஆசிப் அண்ணாச்சி சொல்றது போல சொல்லி முடிக்கனும்னா

"நல்லா இருங்கடே"

said...

கடந்த இரு வாரங்களாக வலை வழியே உரையாடிக் கொண்டிருக்கும் பாரதிதான் அந்த நிஜமா நல்லவன் என்பது எனக்கு இன்று காலைதான் தெரியும். நேற்று மாலை நானும் அவரும் தொலைபேசியில் உரையாடினோம். வரும் வாரம் என்னை பார்க்க வருவதாகக் கூட கூறினார்.

பாரதிதான் நிஜமா நல்லவன் என்றால் நான் அவருடன் தொலைபேசியில் உரையாடி விட்டு இந்த பதிவை பேட்டிருப்பேன். ஜெக‌தீச‌ன் சொல்லித்தான் என‌க்கு பார‌திதான் அந்த‌ நிஜ‌மா ந‌ல்லவ‌ன் என்ப‌து தெரியும். நீங்க‌ள் கூறியுள்ள‌ப‌டி என‌து மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி கூட‌ தெரியாத‌வ‌ர் அல்ல‌ அவ‌ர். ஏற்க‌ன‌வே பேசிய‌ ந‌ண்ப‌ர் தான். ச‌ற்றுமுன் கூட‌ பேசினேன்.

த‌மிழ்ம‌ண‌த்திற்கு நான் கேட்டிருந்த‌ கேள்விக‌ள் என‌க்கு தெரியாத‌ விச‌ய‌ங்க‌ள். சூடாண‌ இடுகைக‌ள் எந்த‌ அடிப்ப‌டையில் தேர்ந்தெடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்ப‌து என‌க்கு தெரியாத‌ ஒன்று. என் ப‌திவுக‌ள் பல இதுவ‌ரை சூடாண‌ இடுகைக‌ளில் வ‌ந்துள்ள‌ன‌. என‌வே என‌க்கு அது ஒரு பெரிய‌ விச‌ய‌மே இல்லை. த‌ற்ச‌ம‌ய‌ம் அலுவ‌ல‌க‌த்தில் இருந்து உங்க‌ளுக்கு விள‌க்க‌மாக‌ ப‌தில் அளிக்க‌ முடிய‌வில்லை. மாலை வீட்டிற்கு வ‌ந்து உங்க‌ளுக்கு ப‌தில் அளிக்கிறேன். ந‌ன்றி ,

said...

ஹலோ,

இங்க என்ன நடக்குது?
//வாரத்தில் 4 நாட்களாவது பேசும் அளவுக்கு நெருங்கிய நண்பனாக இருக்கும் நான் உரிமையோட சொல்கிறேன். ஒழுங்கு மரியாதையா திரும்ப எழுத வாங்க.//

ஆமாம் நானும் இதயே தான் சொல்லுறேன், ஒழுங்கா எழுதற வேலைய மட்டும் பாருங்க என்ன சரியா?

said...

எக்ஸ் கூயுஸ் மீ குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் எங்க கிடைக்கும்? கொஞ்சம் சொல்ல முடியுமா?

said...

என்ன மாம்ஸ் இது அன்நியன் விக்ரம் மாதிரி போல்ட் இல்லாமல் ஒரு மாதிரியாகவு, போல்டோடு அதே கருத்துக்கு வேறு மாதிரியாகவும்...

(எ.கா)

என்னை அடிக்காதீங்க சார் -சோதா விக்ரம்

டேய் என்னை முடிஞ்சா தொட்டு பாரு - அன்நியன் விக்ரம்

இப்படி பதிவு முழுவதும் இருக்கு!:)))

said...

// ஏற்க‌ன‌வே பேசிய‌ ந‌ண்ப‌ர் தான். ச‌ற்றுமுன் கூட‌ பேசினேன். //

அசடு வழியுது ஜோசப் !! துடைச்சுக்கோங்க !!! :)

said...

ஜோசப் சார் ! நீங்க நிஜமாநல்லவனிடம் முதலிலேயே பேசியிருந்தால் இந்தப் பதிவைப் போட்டிருப்பீங்களா என்பதே சந்தேகம் தான்... நீங்களும் எங்களைப் போல் பின்னூட்டத்தில் கெஞ்சி/கொஞ்சி தான் இருப்பீர்கள்....

அதற்காக முகம் தெரியாதவர் என்றால் பதிவுலகை விட்டு வெளியே போ, நாடு கெட்டுப் போயிறாதுன்னுலாம் சொல்றது ரொம்ப ஓவர் ....

said...

//ரொம்ப சந்தோசம் , போயிட்டு வாங்க,//

இது வரை சரிதான்..
//இனிமே எழுதாதீங்க. //ஏனுங்க, சேர்த்துவைச்சு படிக்காம, பிச்சு பிச்சு படிச்சுட்டு, பாணபத்ர ஓணாண்டிய பாடா படுத்துன இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி மாதிரி வம்பு பண்றீங்க. என்னமோ நான் புதுசா அவருக்கு உத்தரவு போட்டமாதிரியில்ல சொல்றீங்க. இனிமே எழுதமாட்டேன்னு சொன்னவர சரி நீங்க இனிமே எழுதாதீங்கன்னு சொன்ன எப்டிங்க உத்தரவாகும்?

மேலும் நிஜமா நல்லவனை எனக்கு தெரியாதுங்கிற உங்க வாதத்துக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லிட்டேன். இப்டி ஒரு பதிவு அவர திட்டி எழுதியிருக்கேன்னு அவருகிட்டயே சொன்னேன். அந்த அளவுக்கு அவரு எனக்கும் நண்பர் தான்.


//அவர் என்ன மூலப் பொருளை கொண்டு உற்பத்தி செய்யும் இயந்திரமா? மூலப் பொருள் தீர்ந்துவிட்டது.. இனி எதும் தயாரிக்க முடியாது என்று சொல்ல.. இன்று எழுத அவருக்கு ஒன்றும் இல்லாமல் போனாலும் நாளையே அவருக்கு எதாவது எழுத கிடைக்கலாமே.... அதும் இல்லாம இத்தனை பேர் திரும்ப வாங்கன்னு கூப்பிடறத( அதாவது அப்படி கூப்பிடும் எங்களை) கேள்வி கேக்க நீங்க யார்ணே..? //

சஞ்சய் காந்தி அண்ணே, நானா அவருகிட்ட எழுத ஒன்னுமே இல்ல, இனிமெ அவரு எழுதவே கூடாதுன்னு சொன்னேன்? ஏனுங்க சொன்னது அவரு. அப்டி இனிமே எழுத ஒன்னுமே இல்லைன்னு சொன்னதுக்கு கூட அப்ப அவரு கண்ணை மூடிகிட்டே போகப்போறாரான்னு கேட்டேன், ஏன்னா நாம பார்க்கிறது, படிக்கிறதுல இருந்துதான் நாம பதிவு எழுதுறோம்னும் தெளிவா சொல்லியொஇருக்கேனே அண்ணே. அத நீங்க பார்கலியா? இது தொடர்கதையா நடந்துகிட்டு இருக்கு. நிஜமா நல்லவன் இப்டி சொன்னதுக்கு காரணம் தன்னோட அலுவலகத்துல தன்னால வலைப் பணிகளை செய்ய முடியலை. வீட்டுக்கு வந்து இதே வேலையா உக்காந்துடுறதால நிறைய வேலைகள் அப்டியே முடியாம இருக்குன்னு சொன்னாரு. இந்த உண்மையான காரணத்தை அவரோட பதிவுல சொல்லியிருந்தா கட்டாயம் நாம் எல்லாம் என்ன செஞ்சுருப்போம்? சொந்த வேலைகளை பாதிக்காம நேரம் இருக்கப்ப பதிவுகளை எழுதுங்கன்னு சொல்லியிருப்போம். ஆனா அவரு சொன்ன காரணம் என்ன? இனிமே எழுத ஒன்னும் இல்லைன்னு சொன்னாரு. அப்டி சொல்றவர போய் எதுக்கு கெஞ்சனும், கொஞ்சனும்ங்கிறதுதான் என்னோட கேள்வி. உடல்நலம் ஒத்துழைத்தால் தான் ஓட முடியும். ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை என சொல்பவனைப்பார்த்து எப்படி ஓடச்சொல்ல முடியும்? அவர் எழுதியதை நிறுத்திவிடுவதால் எல்லோரும் என்னிடமா வரப்போறாங்க? என்னமோ அவரும் நானும் ஒரே தொழிலை செஞ்சதுமாதிரியும், அவரு போயிட்டா எனக்கு போட்டியே இல்லாம வருமானம் வருங்கிறதுமாதிரியும்ல இருக்கு உங்க ஒப்பீடு ? காலமும், உலகமும் யாருக்காகவும் நிக்கவே நிக்காது. நான் எழுதலைன்னாலும் தமிழ் வலையுலகம் அதுபாட்டுக்கு ஓடிகிட்டுத்தான் இருக்கும், அவர் எழுதலைன்னாலும் ஓடிக்கிட்டுத்தான் இருக்கும்.

தமிழ்மணத்திற்கு நான் எழுப்பிய கேள்வி, எனக்கு உண்மையிலேயே சூடான இடுகை எப்படி திரட்டப்படுகின்றது என்று தெரியாததால் கேட்டது. ஹிட்களின் அடிப்படையில் என்றால் அதை யாரும் எதுவும் செய்ய முடியாது.

அவரு எழுதுறத நிறுத்தப்போறேதுக்கு அவரு சொன்ன காரணம் இருக்கே அத பார்த்த உடனே எல்லாருக்கும் தெரியும் அது உண்மையான காரணம் இல்லைங்கிறது. இப்ப அவர்கிட்ட போன்ல பேசுனப்ப நான் சொன்னது சரின்னும் உறுதியாயிடுச்சு. இப்ப என்ன சொல்றீங்க? இதை கண்டுபிடிக்க ஜோசியம் வேற தெரிஞ்சுருக்கணுமாக்கும்? என்ன கொடுமை சஞ்சய் இது?

சூடாண இடுகையில இடம்பிடிக்க ஒன்னும் பெருசா மெனக்கெட வேண்டியதுல்ல. அதுல இடம்பிடிச்சுட்டா நான் பெரிய எழுத்தாளர்னு அர்த்தமும் இல்லை, அதுல எனக்கு ஆசையும் இல்லை. இந்த பதிவு சூடாண இடுகையில வந்துருச்சு. உண்மையிலேயே இந்த பதிவுக்குப் பதிலா என்னோட முந்தைய பதிவு சூடாண இடுகையில வந்துருந்துச்சுனா நான் ரொம்ப சந்தோசப்பட்டிருப்பேன். இதுல எனக்கு எந்த சந்தோசமும் கிடையாது. சூடாண இடுகை என்பது புதிதாய் பதிவெழுத வருபவர்களுக்கு ஒரு உற்சாகத்தை தரலாம். எப்படியாவது அதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக கன்னபின்னாவென்று தலைப்பை வைக்கலாம், உண்மையிலேயே அவர்கள் எழுத நினைப்பதை எழுதாமல் மொக்கையாக எதையாவது எழுத ஆரம்பிக்கலாம் என்ற அர்த்தத்தில்தான் நான் அதை குறிப்பிட்டுள்ளேன்.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன். எனக்கு சூடாண இடுகையில் இடம்பிடிக்க வேண்டும் என்பது மட்டும் நோக்கமல்ல. நான் மொக்கையாக எழுதினால் என்னை உரிமையாய் திட்ட ஒரு நல்ல நண்பர்கள் கூட்டமே இருக்கு. ஜேகேரித்தீஷ் மன்றத்தில் நானும் சேருவேன் என்று சொன்னதற்கு அண்ணண் அப்துல்லா சொன்ன பதிலை பாருங்கள். எனக்கு அதுபோன்ற நண்பர்களின் வாழ்த்தும், பின்னூட்டமும் போதும். சூடாண இடுகையால் எனக்கு பெரிதாக எந்த நன்மையும் இல்லை. அதில் இடம்பெறாமையால் எனக்கு ஆதங்கமும் இல்லை.

என்றும் அன்புடன் உங்கள் நண்பண்,
ஜோசப்.

பி.கு: நாளைக்கே நீங்களும் விடை பெறுகிறேன், வடை சுடுகிறேன்னு எல்லாம் பதிவு போட்டீங்கன்னா, கெடா வெட்டிருவேன். இப்பவே சொல்லிட்டேன்.

said...

@பொண்வண்டு....
இதுல எனக்கு அசடு வழிய என்ன இருக்கு ?
பாரதிதான் அந்த நிஜமா நல்லவருன்னு முன்னாடியே தெரிஞ்சுருந்தா, கட்டாயம் அவருகிட்ட முன்னாடியே பேசிட்டு, அவரு போன்ல சொன்ன காரணத்தயும் வைச்சி பதிவ எழுதியிருப்பேன். இப்ப கொஞ்சம் தாமதமா தெரிஞ்சதால எழுதிட்டு கூப்பிட்டு சொன்னேன். அவருதான்னு தெரியாம போச்சு, தெரிஞ்சுருந்தா இன்னும் நல்லா கேள்வி கேட்ருக்கலாம். இங்க என் ஆதங்கம் நிஜமா நல்லவன் மேல மட்டும் இல்லீங்க. இதே போல செஞ்சுகிட்டு இருக்க எல்லாரு மேலயும்தான்.

said...

//இது ஜோசப் அண்ணாவுக்கு,
அண்ணா //

//சஞ்சய் காந்தி அண்ணே, //

இவரு அவரை அண்ணேங்கிறார், அவரு இவரை அண்ணேங்கிறார்...ச்சே ச்சே என்ன கருமம்ய்யா இது!!!

(வடிவேலு ஒருபடத்தில் சொல்வார் இவன் பொண்டாடிய அவன் வெச்சுருக்கான், அவன் பொண்டாட்டிய இவன் வெச்சு இருக்கான் ச்சே ச்ச்சே என்ன கருமம் புடிச்ச ஊருய்யா என்பார்)
அதுபோல் படிக்கவும்:))

கலவரபூமியில் கால்பந்தாடுவது
ஈசி இல்ல மாமுஸ்:))

said...

//பொன்வண்டு said...
ஜோசப் சார் ! நீங்க நிஜமாநல்லவனிடம் முதலிலேயே பேசியிருந்தால் இந்தப் பதிவைப் போட்டிருப்பீங்களா என்பதே சந்தேகம் தான்...//

மிகவும் இனிமையான நல்ல உள்ளம் படைத்த நண்பர்!

said...

ஜோசப்,

ண்'க்கும் ன்'க்கும் உள்ள வித்தியாசம் தெரிஞ்சு வைச்சுக்கோங்க... :))ஏதோ நானும் ஒரு கருத்து சொல்லியாச்சு.... :D

said...

உடனடி எதிர்வினை(உபயம் லதானந்த்) : @ ஜோசப் அண்ணாச்சி..

வெளக்கமெல்லாம் இருக்கட்டும்.. பதிவை பாத்துட்டு வந்து எதுனா சண்டை போடுவீங்கனு ஆசையா காத்துட்டு இருக்கும் போது சாட்ல வந்து 2013ல் நாடாளப் போகும் உங்க கட்சியில சேர சொன்னிங்களே.. அது எந்த கட்சி? எந்த நாட்டை ஆளப் போகும் கட்சினு இப்போ வரைக்கும் சொல்லவே இல்லை.. அத மொதல்ல சொல்லுங்க.:))
.. இனி யாராவது அறிவுறை சொல்றேன் பேர்வழினு கெலம்பனிங்க.. இப்டி தான் பண்ணுவோம்.. :))

..அடுத்து உங்க பதிவை இமினேட் செய்து ஏராளமான பதிவு வரும்.. இன்னொரு ஆள் சிக்கிட்டாருய்யா.. :))

said...

சண்டை போடுறது எல்லாம் எங்களுக்கு சர்கரை பொங்கல் சாப்பிடுறமாதிரி.

அப்றம் அந்த கட்சி மேட்டரு ஜோக்கு இல்லீங்க. 2013ல மத்தியில் நாங்கதான் ஆட்சி அமைக்க போறோம். அதான் கட்சிக்கு பெயரே 2013லிருந்து நாடாளும் கட்சினு வைச்சிருக்கோம்.

அமைச்சரவை கூட பாதி முடிவு செஞ்சாச்சு.
ரயில்வே துறைக்கு ‍ தம்பி விக்னேஸ்வரன்
பாராளுமன்ற விவகாரத்துறை தம்பி விஜய் ஆனந்.
வன இலாகா மாமா லதானந்த்.
கப்பல் போக்குவரத்து துறை அண்ணண் பரிசல்காரர்.

வெளியில் இருந்து ஆதரவளிக்கும் தோழர் ஜெகதீசனுக்கு சபாநாயகர் பதவி.

வயது அதிகமாகிவிட்டதால் கோவி.கண்ணண் அவர்களுக்கு அதிபர் பதவி அல்லது மேகாலயா மாநில கவர்னர் பதவி.

சுரங்கத்துறைக்கு நண்பர் கோவை கிரி

சுகாதாரத் துறைக்கு மரு.புருனோ
உணவுத்துறைக்கு தங்கை தூயா.
பத்திரிக்கைத் துறைக்கு லக்கி லுக்.

கவிக்கோ சேவியர் அவர்களுக்கு மொழியியல் துறை.

பிரதமரே உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை பேன்றவற்றை கவனிப்பார்.

ஆசிப் அண்ணாச்சிக்கு கட்டிடக்கலைத் துறை
அபி அப்பாவுக்கு குழந்தைகள் நலத்துறை
குசும்பனுக்கு இதயத்தில் இடம் கொடுத்தாச்சு.

நீங்க உடனே எங்க கட்சியில சேர்ந்தா விவசாயத்துறை அமைச்சர் பதவி கிடைக்கும். என்ன சொல்றீங்க.

2சி கட்சிக்கு நன்கொடை கட்டிட்டு உடனே சேர்ந்துடுங்க.முந்துங்கள் இச்சலுகை பதவிகள் உள்ளவரை மட்டுமே.

மற்ற பெரியவர்களுக்கு எல்லாம் மாநில ஆளுநர் பதவிகள் தரப்படும்.

said...

//கப்பல் போக்குவரத்து துறை அண்ணண் பரிசல்காரர்.//

யோவ்... சீரியஸா படிச்சுட்டிருக்கறப்ப இதென்ன காமெடி?

ஆனா.. எங்க போனாலும் மொக்கை, காமெடி இல்லாம உலகமில்லை!

வாழ்க குசும்பன்!

வளர்க மொக்கை!!

said...

மீ தி 26த்

said...

ஐ! நான்தான் 25ஆ?

ஹையோ! சொக்கா! சந்தோஷம் தாங்கலியே.. யாராவது கும்மிக்கு தயாரா?

said...

ஐயா.. வாங்க சிவா.... வீட்ல எல்லாரும் சௌக்யமா?

said...

@jeeves அண்ணாச்சி நம்ம நல்லவர் எதோ வெள்ளாட்டா பண்ணிட்டார் ஃப்ரீயா விடுங்க

said...

// மங்களூர் சிவா said...

மீ தி 26த்//

இதுக்கு நான் ரிப்பீட்டே போடமுடியாது.

ஏன்னா இது 29 அல்லது 30!

said...

//ஆனா இனிமே நீங்க எழுதவே வேண்டாம். நாடு ஒன்னும் கெட்டுப் போயிறாது. போயிட்டு வாங்க.//

கொய்ய்ய்யாஆஆஆஆஆல

said...

// குசும்பன் said...

எக்ஸ் கூயுஸ் மீ குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் எங்க கிடைக்கும்? கொஞ்சம் சொல்ல முடியுமா?//

ரொம்ப முக்கியம்...

said...

@ மங்களூர் சிவா

//கொய்ய்ய்யாஆஆஆஆஆல//

வேணாம் தலைவா..

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்க... விட்டுடுங்க..ப்பாஆஆவம்!

said...

//போட்டுத் தாக்குங்க...//


அதத்தான் நீங்க பண்றீங்களே...

said...

ஜீவ்ஸ் அண்ணாச்சி சொன்ன மாதிரி
பின்னூட்டத்தில் மட்டுமல்லாது தொலைபேசியிலும் கெஞ்சறதுக்கோ கொஞ்சறதுக்கோ நாலு பேர் இருக்காங்க இல்ல அவருக்கு அதுதான் அவர் வலைப்பூ உலகில் அடைந்த வெற்றி.

said...

@நிஜமா நல்லவன்

கொய்யால மரியாதையா திரும்ப வந்திரு!

said...

எழுதும்போது வரும் உணர்ச்சிகள் வாசிப்பவரைப் பொறுத்து மாறுபடும்தான். இதுதான் பின்னவீனத்துவமா தெரியவில்லை...

ஆனா எந்த சீரியஸான விடயத்தை கதைச்சாலும் அதை மொக்கையாக்கி கும்மிபோடும் தமிழவலையுலகம் வாழ்க... நாளொரு ட்ரெண்டும் பொழுதொரு மொக்கையாகவும் வர வாழ்த்துக்கள்...

said...

சுரங்கத்துறைக்கு நண்பர் கோவை கிரி
//

என்ன உள் குத்து இதில்? :)))

said...

ஆயில்யன்
ஜீவ்ஸ்
ஜோசப் பால்ராஜ்
சுமதி அக்கா
குசும்பன்
பொன்வண்டு
ராம்
பரிசலார்
மங்களூர் மைனர்
மதுவதனன்
அப்துல்லா சார்
... எல்லாருக்கும் ரம்பா ரம்பா ™© நன்றி

said...

என்னப்பா நடந்திச்சு இங்க...

said...

ரொம்ப பெரிய பின்னூட்டங்களா இருக்கு...:)

said...

ஆயில்யனோட முதல் கமன்ட் தவிர மத்த எல்லாத்துக்கும்

ரிப்பீட்டு...:))

said...

நன்றி தமிழா.. இட்ஸ் டூ லேட் யார்.. :)))

Tamiler This Week