இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 17 August, 2008

சத்யம் - விமர்சனம் + இத்யாதிகள்

சாப்பிடும் போதே பசங்க கிட்ட கேட்டுகிட்டேன். சத்யம் படம் எந்தெந்த தியேட்டர்ல போடறாங்கனு. யமுனா , கவிதால போட்டிருக்காங்க.. யமுனால டிக்கெட் கெடைக்காது( இந்த படத்துக்கு? ) அதனால கவித போங்கன்னு சொன்னாங்க. இந்த 2 தியேட்டர்லையும் படம் பாக்கறதுக்கு பதில் நான் ஊட்டுக்கு கவுந்தடிச்சி படுத்துடுவேன் ராசாக்களானு சொல்லி படம் பாக்கும் திட்டத்திஅ கைவிட முயற்சித்த கடைசி வினாடியில் சென்ட்ரல்ல போட்டிருக்கங்க பாருங்கனு சொன்னாங்க. அப்போ சரி பாத்துட வேண்டியது தான். சென்ட்ரல் தியேட்டர் ரொம்ப நல்லா இருக்கும்.

தியேட்டர் போனதும் கவுண்டரை பார்த்தா ஒரு பயலும் இல்லை. ஆஹா இன்ஹ படத்துக்கு டிக்கெட் இல்லையா? என்ன கொடுமை குசும்பா என்று நினைத்துக் கொண்டே கவுந்தரை நெருங்கி அங்கிருந்த ஒரு பணியாளரிடம் டிக்கெட் இருக்கான்னு கேட்டேன். இல்லை சார் முடிஞ்சதுனு சொன்னான். பாம்பு புத்துகுள்ள இல்லைனா அத புடிச்சி பொட்டியில அடைச்சி வச்சிருப்பாங்கனு எனக்கு தெரியாதா?.. பசங்க கிட்ட கெடைக்குமானு கேட்டேன். வெவரமான பையனா இருப்பான்(ஹிஹி) போலனு நெனைச்சிருப்பார் போல. ஓரம்கட்டினார். அண்ணே எனக்கு மெஜஸ்டிக் இல்லைனா ராக்கர்ஸ் வேணும்னு சொன்னேன். உடனே மெஜஸ்டிக் ஒன்னு குடுத்தார். 30 ரூபாய் தரை டிக்கெட்டை 200 ரூபாய்க்கு விப்பானுங்களே 75 ரூபாய் டிக்கெட்க்கு எவ்ளோ புடுங்க போறானோ .. இன்னைக்கு என் பர்ஸ் காலினு நெனைச்சேன். ஆனா ரொம்ப நல்லவர் போல.. அல்லது ப்லாக்ல கூட வாங்க ஆளில்லை போல.. 100 ரூபாய் தான் வாங்கினார். சரினு பைக்கை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு வந்து ஏசியில் உக்காந்து யோசிச்சதில் ......

 • திருட்டு விசிடி பாக்காதிங்க.. இணையத்தில் பாக்காதிங்க.. சினிமா என்பது பலரில் உழைப்பிலும் வியர்வையிலும் உருவாகிறது. இப்படி பார்ப்பதால் பலரில் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.. என்றேல்லாம் சொல்லி புலம்பும் சினிமா தோட்டத்து காவல்காரர்களே.. ப்ளாக்கில் டிக்கட் விற்பதை நிறுத்தினாலே நங்கள் திருட்டு விசிடி அல்லது இணையத்தை நாட மாட்டோம் என்பது ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை?
 • ப்ளாக்கில் டிக்கெட் விற்பவர்கள் யாரோ மூன்றாம் மனிதர்கள் அல்ல.பேராசை பிடித்த தியேடர்காரர்களின் ஊழியர்கள் தான்.
 • பல தியேட்டர்களில் படம் வெளிவந்து சில வாரங்களுக்கு கவுந்தரில் டிக்கெட் கொடுப்பதே இல்லை. அவர்கள் ஆட்களை வைத்தே ப்ளாக்கில் விற்கிறார்கள்.
 • 30 ரூபாய் டிக்கெட் 100 ரூபாய்க்கு மேல், 60 ரூபாய் டிக்கெட் 150 முதல் 200 ரூபாய்.. சில படங்களுக்கு 300 ரூபாய்க்கு மேல்...
 • படம் புடிக்கும் உங்களுக்கு மட்டும் தான் காசின் அருமை தெரியுமா? நீங்கள் மட்டும் தான் கஷ்டபட்டு சம்பாதிகிறிங்களா? நாங்க எல்லாம் கொள்ளை அடித்தா சினிமா பார்க்க வருகிறோம்.
 • நடிப்பு என்றால் என்ன என்றே கேள்விப் பட்டிராத பதுமைகளை மனித பொம்மைகளை அழைத்து வந்து அவர்களின் உடலின் அங்கங்களை மட்டுமே காட்டுவதற்கு கோடிகளில் சம்பளம் குடுப்பதை நிறுத்துங்கள். பன்ச் டயலாக் பேசியும் மரத்தை சுத்தி பாட்டு பாடியும் ( அதுவும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மரங்கள்) மேக்கப்பில் முகத்தை அழகாக்கி இடுப்பில் கயிறு கட்டி தாவி தாவி சண்டையிடும் நடிகர்களுக்கு கோடிகளில் குளிப்பாட்டுவதை நிறுத்துங்கள்.
 • இதை எல்லாம் குறைத்தால் திரை அரங்கிற்கு குறைந்த விலையில் படங்களை விற்கலாம். அவர்களும் நியாயமான விலையில் டிக்கெட் விற்பார்கள். மக்களும் நியாயமான விலை குடுத்து சினிமா பார்க்க வருவார்கள்.
 • நீங்கள் செய்யும் இந்த மொள்ளமாறித் தனங்களுக்கு நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை தண்டமாக வாரி இரைத்து தியேடருக்கு வந்து உங்களை ஆராதிக்க வேண்டுமா?
 • அப்படியே போனாலும் ஒழுங்காவா படம் எடுக்கிறிங்க? அரசியல்வாதிகள் மேடைகளில் அரசியல் எதிரிகளை திட்ற மாதிர் இவனுங்க சினிமா போட்டியாளர்களை சினிமாவில் திட்டிகிட்டு இருக்கானுங்க. அதை நாங்க காசு குடுத்து கேக்கனுமாம். கருமாந்திரம் புடிச்சவனுங்களா..
 • இனி எவனாச்சும் திருட்டு விசிடில பாக்காதிங்க.. இணையத்துல பாக்காதிங்கனு சொல்லிப் பார்ருங்க.. ரஜினி கிட்ட சொல்லி உதைக்க சொல்றேன்.
சரி.. இந்த பதிவு சத்யம் படம் விமர்சனம்னு தானே சொன்ன.. அது எங்கடா?..
விஜய் டிவில நம்ம சிசூசா சிம்பு ஒரு நடன ஜோடிங்க கிட்ட கேட்ப்பார்.. இந்த செருப்பு எந்த கடைல வாங்கினிங்க? கர்ச்சீப் எங்க திருடிங்க.. இப்டி எல்லாம்.. அப்போ தீதி பாட்டி குறுகிட்டு கேப்பாங்க.. சிம்பு.. இவங்க டான்ஸ் பத்தீஈஈஈ...
சிசூசா சொல்வார் " என்ன சொல்றதுன்னே தெரியலைங்க.. அதான் இப்டி பேசிட்டு இருக்கேன்னு"..

இப்போ என் நிலைமையும் தான்.. :)
ப்ளாக்ல டிக்கெட் வாங்கிட்டு தியேட்டர்ல போய் உக்காந்தா.. அடங்கொய்யால.. பாதி சீட்டு காலி.. இதுல பக்கத்துல ஒரு இம்சை கும்பல்... சர் நாங்க ஒன்னா வந்திருக்கோம். 2 சீட் மட்டும் வேற எடத்துல தான் கிடைச்சது. நீங்க அங்க போய் உக்காந்துக்கிறிங்களா என்று.. ஏண்டா டேய் தியேட்டருக்கு சினிமா பாக்க வரிங்களா இல்ல சோறு திங்க வரீங்களாடா? ஒன்னாவே உக்காந்து என்னடா புடுங்க போறிங்க..:(... அப்புறம் என்ன பண்ணி தொலையறது... அந்த கும்பல்ல பாதி பேர் பொண்ணுங்க.. போய் தானே ஆகனும்.. அட தாய்குலத்துக்கு மரியாதைங்க..

 • விஷாலை போலிஸ் உடையில் பார்க்க பல்லி போலிஸ் உடை போட்ட மாதிரி இருந்தது.
 • போலிஸ் உடை மட்டும் என்று இல்லாமல் எந்த உடையுமே அவருக்கு பொருத்தமா இல்லை.. காஸ்ட்யூம் டிசைன் செம சொதப்பல்...
 • ஒரு பாடலில் யார் குறைவான ஆடை உடுத்துவது என்று விஷாலுக்கும் நயனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
 • ஒவ்வொரு ஃப்ரேமிலும் யாரையாவது பந்தாடிக் கொண்டே இருக்கிறார் புரட்சிதளபதி விஷால்.
 • நயன் முன்புறம் பார்ப்பதை விட பின்புறத்தில் பார்க்க அழகாக இருக்கிறார். (என்னாது எப்டி பார்த்தாலும் ஒன்னு தானா.. குசும்பா .. கல்யாணம் ஆகியும் திருந்தலையா நீங்க? :P)
 • அந்த குட்டி பசங்கள எதுக்கு நடிக்க வச்சாங்கனு தெரியலை. அந்த சீன்களையும் பு.த.வுக்கே கொடுத்திருந்தால் பாவம் ஆசை தீர இன்னும் யாரையாவது பந்தாடி இருபபார்.
 • பாடல்கள் அனைத்தும் வலுக்கட்டாயமாக் திணிக்கப் பட்டிருக்கு. அதுவும் அந்த முதல் பாடல்... எந்த காரணமும் இல்லாமல் ஒரு டூயட். கர்மம்.. கர்மம்..
 • சிறையில் வில்லன் கம் எக்ஸ் போலிஸ்காரருடன் பேசும் போதும் க்ளைமாக்ஸில் இரண்டு வில்லைன்கள் தலையிலும் துப்பாக்கி வைத்துக் கொண்டு பேசும் போதும் "நின்று கொண்டே ஆய் போகிறமாதிரி" தெரிகிறார். :)
 • புரட்சிதளபதி கழுத்துக்கு கீழ் எடுத்திருக்கு சிரத்தையை சற்று முகபாவணைக்கும் எடுத்திருக்கலாம்.
 • முதல் காட்சியிலேயே " நான் பொறுக்கி இல்லை.. போலிஸ்" என்று விக்ரமை வம்புக்கு இழுக்கிறார்.
 • முதல்வரை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் போதும் மந்திரிகள் பவ்யமாய் இடுப்பில் துண்டை கட்டிகொண்டு அவரை இதய தெய்வமே என்று அழைக்கும் போது ஏனோ யாரோ மனதில் வந்து போகிறார்கள்.
 • முதல் காட்சியிலும் கடைசிகாட்சியிலும் பறந்து குருவி விஜயை மிஞ்சி இருக்கிறார்.
 • பனியனோடு நயன் கட்டிலில் உருளும் காட்சி நன்றாக இருப்பதாக சொல்லி எனக்கு டிக்கெட்டுக்கு100 + பாப்கார்னுக்கு 20 ரூபாய் செலவு வைத்த லக்கி ஒழிக. அப்டி ப்ரமாதமா எதும் இல்லை.
 • இந்த சோதாப் பயலை NCC பசங்க கூட கம்பேர் பண்ணதுக்கு லக்கிக்கு ஒழிக நெ2.

நயன்: என்னாது.. விஷாலை ஹீரோயினா போட்டிருக்கலாமா? மைண்ட் யுவர் டங் மிஸ்டர். மங்களூர் சிவா.

94 Comments:

said...

பதிவு முழுவதும் உங்கள் ”கருத்துக்களே” அதிகம் இருக்கிறது, பெரும் பதிவர் ஆகிகொண்டு இருக்கிறீர்கள் என்று சொன்னால் நம்ப மாட்டேன் என்று சொன்னீங்க. பாருங்க பெரும் பதிவர்கள் போல் எத்தனை கருத்து குத்துக்கள்!!!

said...

//எப்போதும் இந்த டுபாக்கூரின் பெயரை சொல்லி வெறுப்பேத்தும் ஒரு தங்க தமிழ் மகளுக்கு இந்த விமர்சனத்தை அர்பணிக்க வாய்ப்பு தந்த புரட்சிதளபதி வாழ்க. :))//

இது அவர்களை வெறுப்பேத்த எழுதிய பதிவாகவே தெரிகிறது:)))

said...

//தியேட்டர் போனதும் கவுண்டரை பார்த்தா ஒரு பயலும் இல்லை. //

ஏன் நீங்க கவுண்டரை பார்த்தீங்க? கவுண்டர் வீட்டு பொண்ணை பார்க்க வேண்டியதுதானே!!!

said...

//இதுல பக்கத்துல ஒரு இம்சை கும்பல்... சர் நாங்க ஒன்னா வந்திருக்கோம்.//

அவ்வ்வ் நீங்க எப்ப சர் பட்டம் வாங்கினீங்க ? இந்தியாவில் இதுவரை ஒருத்தருக்குதான் சர் பட்டம் கொடுத்து இருப்பதாக சொன்னாங்க? இருந்தாலும்
சர்.சஞ்செய் காந்தி வாழ்க!!!

said...

//இப்போ என் நிலைமையும் தான்.. :)
ப்ளாக்ல டிக்கெட் வாங்கிட்டு //

ப்ளாக்ல பதிவு போட்டு திட்டு வாங்க முடியும் அது எப்படி மாம்ஸ் டிக்கெட் வாங்குறது!!!

said...

//பனியனோடு நயன் கட்டிலில் உருளும் காட்சி நன்றாக இருப்பதாக சொல்லி எனக்கு டிக்கெட்டுக்கு100 + பாப்கார்னுக்கு 20 ரூபாய் செலவு வைத்த லக்கி ஒழிக.//

செந்தில்: டவுசருக்கு கூலி, பேண்டுக்கு தையகூலி எவ்வளோ?

டெய்லர்: டவுசருக்கு 50, பேண்டுக்கு 100!!

செந்தில்: டவுசரையே தைச்சுடுங்க ஆனா இறக்கம் மட்டும் கால் வரைக்குக்கும் வெச்சுடுங்க!!!

அதுபோல் பனியன் என்று சொன்னார் ஆனால் அது கனுக்கால் வரை இறங்கி இருக்கும் பெரிய பனியன் என்று சொல்லவிட்டுவிட்டார்!!!

said...

//நின்று கொண்டே ஆய் போகிறமாதிரி" தெரிகிறார். :)///

உம் கலை கண்ணை தயவு செய்து தானம் எல்லாம் செஞ்சுடாத ராசா!!!

said...

கருத்து கந்தசாமி வால்க

said...

பெரும் பதிவர் ஆகிகொண்டு இருக்கிறீர்கள் என்று சொன்னால் நம்ப மாட்டேன் என்று சொன்னீங்க. பாருங்க பெரும் பதிவர்கள் போல் எத்தனை கருத்து குத்துக்கள்!!!

said...

//எப்போதும் இந்த டுபாக்கூரின் பெயரை சொல்லி வெறுப்பேத்தும் ஒரு தங்க தமிழ் மகளுக்கு இந்த விமர்சனத்தை அர்பணிக்க வாய்ப்பு தந்த புரட்சிதளபதி வாழ்க. :))//

இது அவர்களை வெறுப்பேத்த எழுதிய பதிவாகவே தெரிகிறது:)))

said...

//நயன் முன்புறம் பார்ப்பதை விட பின்புறத்தில் பார்க்க அழகாக இருக்கிறார். (என்னாது எப்டி பார்த்தாலும் ஒன்னு தானா.. குசும்பா .. கல்யாணம் ஆகியும் திருந்தலையா நீங்க? :P)//

நான் நயனை பார்ப்பதை விட கூட ஆடும் பிகருகளை பார்ப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்தாச்சு!!!

said...

என்னுடைய எல்லா கமெண்டுக்கு ஒரு c போட்டு அத சுத்தி ஒரு வட்டம் போட்டுக்கிறேன். இதோ சிவா வந்துட்டார்!!!

said...

சஞ்சய்... உங்களின் ஒவ்வொரு பதிவும் நீளம் அதிகமாயிட்டே போற மாதிரி தெரியுது. ஒரு அன்பர் சொன்ன மாதிரி உங்களோட ஒவ்வொரு பதிவும் அதுக்கு முன்னாடி எழுதுன பதிவ விட 20% நீளமா இருக்குன்னா நீங்க உண்மைத்தமிழன் பதிவுகள அதிகமா படிக்கிறீங்கன்னு அர்த்தம். உடனே சுதாரிச்சிக்குங்க.

****

// நின்று கொண்டே ஆய் போகிறமாதிரி //

செம கற்பனை இது... சூப்பர்

****

//ப்ளாக்ல டிக்கெட் வாங்கிட்டு தியேட்டர்ல போய் உக்காந்தா.. அடங்கொய்யால.. பாதி சீட்டு காலி.. //

ஹா...ஹா.. அப்ப‌வே சுதாரிச்சிட்டு வெளிய‌ வ‌ந்திருக்க‌னும் நீங்க‌..

said...

//நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை//

ரொம்பவே!!!

said...

வெண்பூ மேட்டரே உங்களுக்கு தெரியாதா? அவரு இனி மொக்கை பதிவர் இல்லையாம்.

கருத்து பதிவராம் அவர் சொன்னதை வேண்டும் என்றால் உங்களுக்கு தனியாக மெயில் அனுப்புகிறேன்.

இனி இவர் சீரியஸ் பதிவர் சீரியஸ் பதிவர் சீரியஸ் பதிவர்!!!

said...

நான் மட்டும் தான் இருக்கேனா? சிவா எங்கய்யா போய்ட்ட?

said...

//குசும்பன் said...
வெண்பூ மேட்டரே உங்களுக்கு தெரியாதா? அவரு இனி மொக்கை பதிவர் இல்லையாம்.

கருத்து பதிவராம்
//

இனி அவர் கருத்து காந்தி என்று அழைக்கப்படுவாராக... (இவ்ளோ கருத்து சொன்னப்பவே மைல்டா டவுட் ஆனேன்...)

said...

வாங்க குசும்பன் சஞ்சய்க்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதிடுவோமா???

said...

//குசும்பன் said...
நான் மட்டும் தான் இருக்கேனா? சிவா எங்கய்யா போய்ட்ட?
//

அட விடுங்க... அவரு மங்களூர்ல ஒரு கன்னட ஃபிகரையோ, இல்ல மல்லு ஃபிகரையோ கரெக்ட் பண்ணி ஒரு மாதிரியா வீக் எண்ட் கொண்டாடிட்டு இருப்பாரு.. அவரைப் போயி டிஸ்டர்ப் பண்றீங்களே???

said...

//வெண்பூ said...

வாங்க குசும்பன் சஞ்சய்க்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதிடுவோமா???//

நம்ம பெயரிலியில் :) எழுதினா கடித்தத்தை படிக்க கூட மாட்டார்!! நாம வேறு பெயரிலியில் எழுதுவோம்!

புரிஞ்சுதா?

said...

என்னங்க ஒரே கருத்தா இருக்கு....:)

said...

/
திருட்டு விசிடி பாக்காதிங்க.. இணையத்தில் பாக்காதிங்க.. சினிமா என்பது பலரில் உழைப்பிலும் வியர்வையிலும் உருவாகிறது. இப்படி பார்ப்பதால் பலரில் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.. என்றேல்லாம் சொல்லி புலம்பும் சினிமா தோட்டத்து காவல்காரர்களே..
/

கதையோட படம் எடுங்கடான்னு கதறரது அவனுங்க காதுல என்னைக்கு விழுதோ அன்னைக்குதான் விடிவுகாலம் பொறக்கும்

said...

பொடிப்பதிவர் பெரும்பதிவர் ஆனது உண்மை தான் போல:)

said...

////மங்களூர் சிவா said...
/
திருட்டு விசிடி பாக்காதிங்க.. இணையத்தில் பாக்காதிங்க.. சினிமா என்பது பலரில் உழைப்பிலும் வியர்வையிலும் உருவாகிறது. இப்படி பார்ப்பதால் பலரில் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.. என்றேல்லாம் சொல்லி புலம்பும் சினிமா தோட்டத்து காவல்காரர்களே..
/

கதையோட படம் எடுங்கடான்னு கதறரது அவனுங்க காதுல என்னைக்கு விழுதோ அன்னைக்குதான் விடிவுகாலம் பொறக்கும்///

சதையோட எடுக்குறவங்க காதுல கதை கேக்குறீங்களே சிவா?????

said...

/
குசும்பன் said...

என்னுடைய எல்லா கமெண்டுக்கு ஒரு c போட்டு அத சுத்தி ஒரு வட்டம் போட்டுக்கிறேன். இதோ சிவா வந்துட்டார்!!!
/

கொக்க மக்க

said...

//குசும்பன் said...
நம்ம பெயரிலியில் :) எழுதினா கடித்தத்தை படிக்க கூட மாட்டார்!! நாம வேறு பெயரிலியில் எழுதுவோம்!

புரிஞ்சுதா?
//

சத்தியமா புரியல. ஆனா இதுல ஏதோ உள்குத்து, அரசியல், நுண்ணரசியல் எக்சட்ரா எக்சட்ரா எல்லாம் இருக்குன்றது மட்டும் புரியுது :)))

said...

//மங்களூர் சிவா said...
/
திருட்டு விசிடி பாக்காதிங்க.. இணையத்தில் பாக்காதிங்க.. சினிமா என்பது பலரில் உழைப்பிலும் வியர்வையிலும் உருவாகிறது. இப்படி பார்ப்பதால் பலரில் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.. என்றேல்லாம் சொல்லி புலம்பும் சினிமா தோட்டத்து காவல்காரர்களே..
/

கதையோட படம் எடுங்கடான்னு கதறரது அவனுங்க காதுல என்னைக்கு விழுதோ அன்னைக்குதான் விடிவுகாலம் பொறக்கும்
//

ஆஹா... சிவாவும் கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டாரே.. எல்லாரும் பெரும்பதிவர் ஆகற முயற்சியில இருக்காங்க போல..

said...

பொடியரே கருத்து சொல்லுறதுக்கு முன்னாடி நீங்க திருந்துங்க....உங்கள எவன் ப்ளாக்ல டிக்கெட் வாங்கி படம் பார்க்க சொன்னது?????

said...

/
குசும்பன் said...

நான் மட்டும் தான் இருக்கேனா? சிவா எங்கய்யா போய்ட்ட?
/

இதோ வந்துட்டேன்

said...

Blogger வெண்பூ said...
ஆஹா... சிவாவும் கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டாரே.. எல்லாரும் பெரும்பதிவர் ஆகற முயற்சியில இருக்காங்க போல..//

அவரு அல்ரெடி ஸ்டார் ஆனவர் ஆகையால் அவர் பெரும் பதிவர்தான்!!!
(வீக் என்ட் ஜொள்ளை நிறுத்திய பொழுதே உங்களுக்கு தெரியவில்லையா:((((

said...

//நிஜமா நல்லவன் said...
சதையோட எடுக்குறவங்க காதுல கதை கேக்குறீங்களே சிவா?????
//

இவனுங்க எல்லாம் ஸ்டோரி டிஷ்கஷன்ல என்னா பேசுவானுங்க? யாரை எங்க எப்படி காட்டுறதுன்னா?

said...

/
வெண்பூ said...

வாங்க குசும்பன் சஞ்சய்க்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதிடுவோமா???
/

இன்னுமா யாரும் எழுதலை???

said...

உங்களை மாதிரி ஆளுங்க தான் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறதுக்கு காரணமா இருக்காங்க....அப்படி என்ன அந்த கருமத்தை பார்க்க வேண்டியிருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

said...

//நிஜமா நல்லவன் said...

பொடியரே கருத்து சொல்லுறதுக்கு முன்னாடி நீங்க திருந்துங்க....உங்கள எவன் ப்ளாக்ல டிக்கெட் வாங்கி படம் பார்க்க சொன்னது?????//

ஹி ஹி அவரு கூட்டம் இல்லாத சினிமா தியேட்டருக்கு போகனும் என்று முடிவு செஞ்சு அங்கன போனார்? அது ஏன் என்று கேட்டா அப்புறம் ஏன் பாப்கார்ன் வாங்கினார் என்று நான் சொல்லிடுவேன் :(( வேண்டாம் பிளீஸ்

said...

பயங்கர கொலவெறில இருக்கிங்க போலருக்கு.

said...

/
நடிப்பு என்றால் என்ன என்றே கேள்விப் பட்டிராத பதுமைகளை மனித பொம்மைகளை அழைத்து வந்து அவர்களின் உடலின் அங்கங்களை மட்டுமே காட்டுவதற்கு
/

அவ்வ்வ்வ்
எவ்ளோ டீடெய்ல் தெரிஞ்சி வெச்சிருக்கார்யா

said...

//குசும்பன் said...
அவரு அல்ரெடி ஸ்டார் ஆனவர்
ஆகையால் அவர் பெரும் பதிவர்தான்!!!
(வீக் என்ட் ஜொள்ளை நிறுத்திய
//

வீக் என்ட் ஜொள்ளை நிறுத்திய சிவாவை கண்டித்து மீண்டும் அதை துவங்கும் வரை காலவரையற்ற‌ உண்ணாவிரதம் இருப்பதாக குசும்பன் அறிவித்துள்ளார்..

said...

/
அப்படியே போனாலும் ஒழுங்காவா படம் எடுக்கிறிங்க? அரசியல்வாதிகள் மேடைகளில் அரசியல் எதிரிகளை திட்ற மாதிர் இவனுங்க சினிமா போட்டியாளர்களை சினிமாவில் திட்டிகிட்டு இருக்கானுங்க. அதை நாங்க காசு குடுத்து கேக்கனுமாம். கருமாந்திரம் புடிச்சவனுங்களா..
/

இந்த லட்சணத்துல திருட்டு விசிடி ஒழிக்காததுதான் குறைச்சல்
:)))))

said...

/
சரி.. இந்த பதிவு சத்யம் படம் விமர்சனம்னு தானே சொன்ன.. அது எங்கடா?..
/

அதெல்லாம் எவன் கேட்டான் இன்னைக்கு கும்மறதுக்கு ஒருத்தன் சிக்கிருக்கான் அது போதும்!!

:))

said...

நிஜமா நல்லவன் said...

உங்களை மாதிரி ஆளுங்க தான் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறதுக்கு காரணமா இருக்காங்க....அப்படி என்ன அந்த கருமத்தை பார்க்க வேண்டியிருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?//

நிஜமா நல்லவன் y கோவம்? no கோவம்... போனா போவுது விட்டு விடுங்க!!!

said...

/
ஏண்டா டேய் தியேட்டருக்கு சினிமா பாக்க வரிங்களா இல்ல சோறு திங்க வரீங்களாடா? ஒன்னாவே உக்காந்து என்னடா புடுங்க போறிங்க..:(...

அந்த கும்பல்ல பாதி பேர் பொண்ணுங்க..
/


பல்லு இருக்கறவன் பக்கோடா திங்கிறான் சரியான ஸ்டொமக் பயர் பார்ட்டி

:))

said...

ஏமாறுறவன் இருக்கிற வரைக்கும் ஏமாத்த்துறவனும் இருப்பான்னு சொல்லுற மாதிரி நீங்க ப்ளாக் ல வாங்கியாவது பார்க்கனும்னு நினைக்கிறப்போ அவங்களும் ப்ளாக்ல விக்கத்தான் செய்வாங்க....முதலில் நீங்க திருந்துங்க....அப்புறம் பண்ணுங்க அட்வைஸ்.

said...

ஏமாறுறவன் இருக்கிற வரைக்கும் ஏமாத்த்துறவனும் இருப்பான்னு சொல்லுற மாதிரி நீங்க ப்ளாக் ல வாங்கியாவது பார்க்கனும்னு நினைக்கிறப்போ அவங்களும் ப்ளாக்ல விக்கத்தான் செய்வாங்க....முதலில் நீங்க திருந்துங்க....அப்புறம் பண்ணுங்க அட்வைஸ்.

said...

//நிஜமா நல்லவன் said...
உங்களை மாதிரி ஆளுங்க தான் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறதுக்கு காரணமா இருக்காங்க....அப்படி என்ன அந்த கருமத்தை பார்க்க வேண்டியிருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?
//

டென்ஷன் ஆகாதீங்க நி.ந. நம்ம ஆளுங்க இப்பெல்லாம் படத்தை முதல் நாளே பாக்குறதுக்கு முக்கியமான காரணம் இருக்கே, அதுபத்தி சூடா ஒரு பதிவு போடுறதுதான் வேறென்னா.. அதத் தவிர குசும்பன் சொன்ன மாதிரி வேற எதுவும் காரணம் இருக்கிறதெல்லாம் எனக்கு தெரியாதுபா :)))

said...

/
ஒரு பாடலில் யார் குறைவான ஆடை உடுத்துவது என்று விஷாலுக்கும் நயனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
/

இப்பிடி எளுதுனா நாங்க படம் பாத்திருவமா?? அந்த பாட்டு மட்டும் சன் மீஜிக்ல ஹேமா சின்ஹா போடறப்ப பாப்போம்
:))

said...

/
நயன் முன்புறம் பார்ப்பதை விட பின்புறத்தில் பார்க்க அழகாக இருக்கிறார்.
/

கலா ரசிகர் ஆகீட்டீங்க வால்த்துக்கல்

said...

/
முதல் காட்சியிலும் கடைசிகாட்சியிலும் பறந்து குருவி விஜயை மிஞ்சி இருக்கிறார்.
/

ஐய்யோ ஆத்தாடி நான் இனிமே இந்த படம் விமர்சனம் கூட படிக்க மாட்டேன்

:)))

said...

வெண்பூ said...
வீக் என்ட் ஜொள்ளை நிறுத்திய சிவாவை கண்டித்து மீண்டும் அதை துவங்கும் வரை காலவரையற்ற‌ உண்ணாவிரதம் இருப்பதாக குசும்பன் அறிவித்துள்ளார்..//

அது என்னமோ தெரியவில்லை ஆப்பு எப்பொழுது திரும்பி பூமராங் மாதிரி எனக்கே வருது:((((

said...

கடைசி 3 வரி பு.த.செ.வி

said...

50

said...

///குசும்பன் said...
நிஜமா நல்லவன் said...

உங்களை மாதிரி ஆளுங்க தான் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறதுக்கு காரணமா இருக்காங்க....அப்படி என்ன அந்த கருமத்தை பார்க்க வேண்டியிருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?//

நிஜமா நல்லவன் y கோவம்? no கோவம்... போனா போவுது விட்டு விடுங்க!!!///


அதெப்படிங்க விட முடியும்....அவர் ப்ளாக்ல டிக்கெட் வாங்கி பார்த்தது சரியா? அந்த காசுல யாருக்காவது சாப்பாடு வாங்கி கொடுத்திருக்காலாம்.....வயிறார வாழ்த்திட்டு போய் இருப்பாங்க.... அதவிட்டுட்டு...????

said...

//நிஜமா நல்லவன் said...

ஏமாறுறவன் இருக்கிற வரைக்கும் ஏமாத்த்துறவனும் இருப்பான்னு சொல்லுற மாதிரி நீங்க ப்ளாக் ல வாங்கியாவது பார்க்கனும்னு நினைக்கிறப்போ அவங்களும் ப்ளாக்ல விக்கத்தான் செய்வாங்க....முதலில் நீங்க திருந்துங்க....அப்புறம் பண்ணுங்க அட்வைஸ்.//

பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே இந்த நிஜமா நல்லவனை சாந்த படுத்தும்!!!

said...

//கடைசி 3 வரி பு.த.செ.வி //

ரிப்பீட்டேய்... எனக்கும் புரியல. (எவ்ளோ நேரந்தான் புரிஞ்ச மாதிரியே நடிக்கறது) விஷால் பொம்பள கணக்கா இருக்காருன்றீங்களா????

said...

/
வெண்பூ said...

வீக் என்ட் ஜொள்ளை நிறுத்திய சிவாவை கண்டித்து மீண்டும் அதை துவங்கும் வரை காலவரையற்ற‌ உண்ணாவிரதம் இருப்பதாக குசும்பன் அறிவித்துள்ளார்..
/

உண்ணா விரதமா உண்ணும் விரதமா சரியா சொல்லுப்பா
:)))

said...

நிஜமா நல்லவன் said...
அதெப்படிங்க விட முடியும்....அவர் ப்ளாக்ல டிக்கெட் வாங்கி பார்த்தது சரியா? அந்த காசுல யாருக்காவது சாப்பாடு வாங்கி கொடுத்திருக்காலாம்.....வயிறார வாழ்த்திட்டு போய் இருப்பாங்க.... அதவிட்டுட்டு...????///

அண்ணே போனா போவுது விட்டு விடுங்க ,ஓவர் கோவம் குடும்பத்துக்கு நல்லது இல்லை:)))

said...

/
நிஜமா நல்லவன் said...

நிஜமா நல்லவன் y கோவம்? no கோவம்... போனா போவுது விட்டு விடுங்க!!!///


அதெப்படிங்க விட முடியும்....அவர் ப்ளாக்ல டிக்கெட் வாங்கி பார்த்தது சரியா? அந்த காசுல யாருக்காவது சாப்பாடு வாங்கி கொடுத்திருக்காலாம்....
/

ஆமா கரிக்ட்
அப்பிடி யாரும் கிடைக்கலைனா ஒரு போன் போட்டு சொன்னா ரயில் பிடிச்சி நான் வந்திருப்பேன் எனக்கு வாங்கி குடுத்திருக்கலாம்
:))

said...

கூல் டவுன் நி.ந.

லெஸ் டென்ஷன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்ஷன்..

said...

////வெண்பூ said...
//நிஜமா நல்லவன் said...
உங்களை மாதிரி ஆளுங்க தான் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறதுக்கு காரணமா இருக்காங்க....அப்படி என்ன அந்த கருமத்தை பார்க்க வேண்டியிருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?
//

டென்ஷன் ஆகாதீங்க நி.ந. நம்ம ஆளுங்க இப்பெல்லாம் படத்தை முதல் நாளே பாக்குறதுக்கு முக்கியமான காரணம் இருக்கே, அதுபத்தி சூடா ஒரு பதிவு போடுறதுதான் வேறென்னா.. அதத் தவிர குசும்பன் சொன்ன மாதிரி வேற எதுவும் காரணம் இருக்கிறதெல்லாம் எனக்கு தெரியாதுபா :)))////


சூடா பதிவு போட இவர் ப்ளாக்ல டிக்கெட் வாங்கி படம் பார்க்கிறார்....தியேட்டர் காரன் சூட்டோடு சூடா ப்ளாக்ல வித்து காசு பார்க்கிறான்....எல்லோரும் ஆதாயம் தேடுறாங்க.....வேற என்னத்த சொல்லுறது?

said...

/
வெண்பூ said...

கூல் டவுன் நி.ந.

லெஸ் டென்ஷன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்ஷன்..
/

அப்ப நோ வர்க் நோ டென்சனா என்ன ஆப்பீசர் சொல்லறீங்க???

said...

/
பனியனோடு நயன் கட்டிலில் உருளும் காட்சி நன்றாக இருப்பதாக சொல்லி எனக்கு டிக்கெட்டுக்கு100 + பாப்கார்னுக்கு 20 ரூபாய் செலவு வைத்த லக்கி ஒழிக. அப்டி ப்ரமாதமா எதும் இல்லை.
/

பனியனா???

said...

/
புரட்சிதளபதி கழுத்துக்கு கீழ் எடுத்திருக்கு சிரத்தையை சற்று முகபாவணைக்கும் எடுத்திருக்கலாம்.
/

யாரோட கழுத்துக்கு கீழ ???
அவ்வ்வ்வ்

said...

//மங்களூர் சிவா said...
/
வெண்பூ said...

கூல் டவுன் நி.ந.

லெஸ் டென்ஷன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்ஷன்..
/

அப்ப நோ வர்க் நோ டென்சனா என்ன ஆப்பீசர் சொல்லறீங்க???
//

அட இது ஜென்டில்மேன் படத்துல சுவாமி செந்திலானந்தா சொன்னது

பி.கு: நிஜமா நல்லவன். நான் ஜென்டில்மேன் படத்தை தரை டிக்கட்டை கவுன்ட்டர்ல வாங்கிதான் பாத்தேன். ப்ளாக்ல வாங்கல.

said...

/
வெண்பூ said...

லெஸ் டென்ஷன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்ஷன்..
/

அப்ப நோ வர்க் நோ டென்சனா என்ன ஆப்பீசர் சொல்லறீங்க???
//

அட இது ஜென்டில்மேன் படத்துல சுவாமி செந்திலானந்தா சொன்னது

/

:))

said...

/
வெண்பூ said...


பி.கு: நிஜமா நல்லவன். நான் ஜென்டில்மேன் படத்தை தரை டிக்கட்டை கவுன்ட்டர்ல வாங்கிதான் பாத்தேன். ப்ளாக்ல வாங்கல.
/

பின்னூட்டத்துக்கும் பின்னூட்ட குறிப்பா வெளங்கும்!

:)))

said...

வெளிய கெளம்புனும். கும்மிக்கு உதவிய குசும்பன், நி.ந., சிவாவிற்கு நன்றி. கும்மியை கன்டின்யூ பண்ணுங்க... பை..பை..

said...

:-))))

said...

அப்பப்பா இந்த பதிவ குத்தகை எடுத்து கும்மி குத்திருக்காங்கையா....

said...

// குசும்பன் said...
பாருங்க பெரும் பதிவர்கள் போல் எத்தனை கருத்து குத்துக்கள்!!//

மக்களே.. வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். :(
--
//இது அவர்களை வெறுப்பேத்த எழுதிய பதிவாகவே தெரிகிறது:)))//
பார்த்ததே வெறுப்பேத்த தான்.. :P
---
//ஏன் நீங்க கவுண்டரை பார்த்தீங்க? கவுண்டர் வீட்டு பொண்ணை பார்க்க வேண்டியதுதானே!!!//
அப்டி எதும் பார்த்து இருந்தா நான் ஏன் சினிமாவுக்கு போகப் போறேன்? :(
----
//அவ்வ்வ் நீங்க எப்ப சர் பட்டம் வாங்கினீங்க ? இந்தியாவில் இதுவரை ஒருத்தருக்குதான் சர் பட்டம் கொடுத்து இருப்பதாக சொன்னாங்க? இருந்தாலும்
சர்.சஞ்செய் காந்தி வாழ்க!!!//

அட காலை உட்டுட்டேன் மாமா?( எங்கனு எல்லம் கேக்காதிங்க:P ) அதான் சார் சர் ஆய்டிச்சி. :))
---
//ப்ளாக்ல பதிவு போட்டு திட்டு வாங்க முடியும் அது எப்படி மாம்ஸ் டிக்கெட் வாங்குறது!!!//
குசும்பு?.. :(
----
//
அதுபோல் பனியன் என்று சொன்னார் ஆனால் அது கனுக்கால் வரை இறங்கி இருக்கும் பெரிய பனியன் என்று சொல்லவிட்டுவிட்டார்!!!//
அட இந்த கோணத்துல சதுரத்துல எல்லாம் எனக்கு யோசிக்க தெரியலையே மாமா.. :))
---
//
உம் கலை கண்ணை தயவு செய்து தானம் எல்லாம் செஞ்சுடாத ராசா!!//
பொறாமை...:))

said...

// மங்களூர் சிவா said...

கருத்து கந்தசாமி வால்க//
சாரி.. ராங் நம்பர்.. :)
---
//மங்களூர் சிவா said...

பெரும் பதிவர் ஆகிகொண்டு இருக்கிறீர்கள் என்று சொன்னால் நம்ப மாட்டேன் என்று சொன்னீங்க. பாருங்க பெரும் பதிவர்கள் போல் எத்தனை கருத்து குத்துக்கள்!!!//
இதர்கு குசும்பனுக்கு ராயல்டி குடுக்கனும். :)
----
//குசும்பன் said...

நான் நயனை பார்ப்பதை விட கூட ஆடும் பிகருகளை பார்ப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்தாச்சு!!!//
அட எல்லாரும் தெளிவாத் தாம்லே இருக்காய்ங்க.. :)).. நான் எந்த ஈரோயினி ஆடினாலும் பக்கத்துல ஆடற ஃபிகருங்களை சைட் அடிக்கிறதை ஒரு பழக்கமாவே வச்சிருக்கேன் மாமா.. :P
----
// குசும்பன் said...

என்னுடைய எல்லா கமெண்டுக்கு ஒரு c போட்டு அத சுத்தி ஒரு வட்டம் போட்டுக்கிறேன். இதோ சிவா வந்துட்டார்!!!//
சூப்பரு.. விட்டா..மங்களூரார் உஷார்னு போர்ட் வச்சிடுவீங்க போல..
-----
//வெண்பூ said...

சஞ்சய்... உங்களின் ஒவ்வொரு பதிவும் நீளம் அதிகமாயிட்டே போற மாதிரி தெரியுது. ஒரு அன்பர் சொன்ன மாதிரி உங்களோட ஒவ்வொரு பதிவும் அதுக்கு முன்னாடி எழுதுன பதிவ விட 20% நீளமா இருக்குன்னா நீங்க உண்மைத்தமிழன் பதிவுகள அதிகமா படிக்கிறீங்கன்னு அர்த்தம். உடனே சுதாரிச்சிக்குங்க.//
அண்ணே 3 கட்டம் லேயவுட் இருக்கிறதால அப்டி ஒரு மன பிராந்திண்ணே.. படிச்சி பாருங்க.. 5 நிமிஷம் கூட ஆகாது. நான் பயங்கர சோம்பேறி. பெரிய பதிவெல்லாம் போட மாட்டேன். :).. உண்மை ட்ய்ஹமிழன் அண்ணாச்சி பதிவுகளை பார்க்கத் தான் முடியும் படிக்க எல்லாம் முடியாது. :P

said...

//குசும்பன் said...

//நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை//

ரொம்பவே!!!//

அட நம்புங்க சாமி. :(
------
//இனி இவர் சீரியஸ் பதிவர் சீரியஸ் பதிவர் சீரியஸ் பதிவர்!//
நான் மொக்கை பதிவர்..மொக்கை பதிவர்..மொக்கை பதிவர்.. :)
------
//குசும்பன் said...

நான் மட்டும் தான் இருக்கேனா? சிவா எங்கய்யா போய்ட்ட?//
ஆன் சைட் கால் ஃப்ரம் ஜெர்மனி. :P
------
//வெண்பூ said...
இனி அவர் கருத்து காந்தி என்று அழைக்கப்படுவாராக... (இவ்ளோ கருத்து சொன்னப்பவே மைல்டா டவுட் ஆனேன்..//
அண்ணே.. வதந்திகளை நம்பாதிங்க அண்ணே .. அவ்வ்வ்வ்வ்வ்வ் :((
---------
//வெண்பூ said...

வாங்க குசும்பன் சஞ்சய்க்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதிடுவோமா???//
என்னாது.. பகிரங்க கடிதமா?.. அது ஒரு தொடர் விளையாட்டு சாமி.. உடனே நான் ஒரு எதிர்வினை கடிதம் போடனும்.. அதுக்கப்புறம் நான் யாருக்காச்சும் பகிரங்க கடிதம் எழுதனும்... நான் பாவம் சாமி.. என்னைய வுட்றுங்க.. பொழைச்சு போறேன்.. :(

said...

//வெண்பூ said...

அட விடுங்க... அவரு மங்களூர்ல ஒரு கன்னட ஃபிகரையோ, இல்ல மல்லு ஃபிகரையோ கரெக்ட் பண்ணி ஒரு மாதிரியா வீக் எண்ட் கொண்டாடிட்டு இருப்பாரு.. அவரைப் போயி டிஸ்டர்ப் பண்றீங்களே???//

அவர் இண்டர்நேஷனல் லெவல்ல போய்ட்டிருக்கார்.. அவராவது டொமஸ்டிக் ஃபிகர்சை பாக்கறதாவது.. :))
---
//குசும்பன் said...

நம்ம பெயரிலியில் :) எழுதினா கடித்தத்தை படிக்க கூட மாட்டார்!! நாம வேறு பெயரிலியில் எழுதுவோம்!

புரிஞ்சுதா?//
அதை யாராவது ஒரு "நண்பர்" எனக்கு சொல்லனும்.. அப்போ தான் படிப்பேன். :P
-----
//நிஜமா நல்லவன் said...

என்னங்க ஒரே கருத்தா இருக்கு....:)//

இல்லையே .. ஏகப் பட்ட கருத்து இருக்கே.. ;))
--------
//மங்களூர் சிவா said...
கதையோட படம் எடுங்கடான்னு கதறரது அவனுங்க காதுல என்னைக்கு விழுதோ அன்னைக்குதான் விடிவுகாலம் பொறக்கும்//
மாமு.. எழுத்துப் பிழை இருக்கு பாருங்க.. சதையோட என்பதற்கு பதில் கதையோடனு சொல்லிட்டிங்க.. :D
----
//நிஜமா நல்லவன் said...

பொடிப்பதிவர் பெரும்பதிவர் ஆனது உண்மை தான் போல:)//
என் பெயருக்கு களங்கம் விளைவிக்க பார்க்கிறீர்கள். :((
-----
//
சதையோட எடுக்குறவங்க காதுல கதை கேக்குறீங்களே சிவா?????//
ரிப்பீட்டேய்..:)))))
---

said...

//வெண்பூ said...
சத்தியமா புரியல. ஆனா இதுல ஏதோ உள்குத்து, அரசியல், நுண்ணரசியல் எக்சட்ரா எக்சட்ரா எல்லாம் இருக்குன்றது மட்டும் புரியுது :)))//
விடுங்க வெண்பூ... இது சிங்கத்தின் குகையில் வந்து மாட்டிகொண்ட ஒரு சிறு நரியின் கதை.. :))
----
//நிஜமா நல்லவன் said...

பொடியரே கருத்து சொல்லுறதுக்கு முன்னாடி நீங்க திருந்துங்க....உங்கள எவன் ப்ளாக்ல டிக்கெட் வாங்கி படம் பார்க்க சொன்னது?????//
இதெல்லாம்.. தனியா வாழ்ந்துட்டு இருக்கிறவனோட சனிகிழமை இரவுகளின் அரிப்பு.. என்ன பண்றது அண்ணாச்சி? இங்கு ப்ளாக்ல மட்டும் தான் டிக்கட் கிடைக்குது என்ன செய்ய? :(

---
//குசும்பன் said...
அவரு அல்ரெடி ஸ்டார் ஆனவர் ஆகையால் அவர் பெரும் பதிவர்தான்!!!
(வீக் என்ட் ஜொள்ளை நிறுத்திய பொழுதே உங்களுக்கு தெரியவில்லையா:((((//
ரிப்பீட்டேய்ய்ய்.. :))

----
//வெண்பூ said...

இவனுங்க எல்லாம் ஸ்டோரி டிஷ்கஷன்ல என்னா பேசுவானுங்க? யாரை எங்க எப்படி காட்டுறதுன்னா?//
பின்ன? :))
--
// மங்களூர் சிவா said...

இன்னுமா யாரும் எழுதலை???//
அடிங்க... போட்டு குடுக்கறிங்களா? :(
----
//நிஜமா நல்லவன் said...

உங்களை மாதிரி ஆளுங்க தான் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறதுக்கு காரணமா இருக்காங்க....அப்படி என்ன அந்த கருமத்தை பார்க்க வேண்டியிருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?//
அதான் சாமி.. அந்த சனிக்கிழமை இரவுகளின் அரிப்பு.. ப்ளாக்ல மட்டும் தான் டிக்கெட் கிடைக்கும்.. இது என் குற்றமா? :(
---
// குசும்பன் said...

ஹி ஹி அவரு கூட்டம் இல்லாத சினிமா தியேட்டருக்கு போகனும் என்று முடிவு செஞ்சு அங்கன போனார்? அது ஏன் என்று கேட்டா அப்புறம் ஏன் பாப்கார்ன் வாங்கினார் என்று நான் சொல்லிடுவேன் :(( வேண்டாம் பிளீஸ்//
இதுக்கு தான் கல்யாணம் ஆனவங்க சகவாசம் வச்சிக்க கூடாதுனு சொல்றது. :P
---
//தம்பி said...

பயங்கர கொலவெறில இருக்கிங்க போலருக்கு.//
இப்போ தேவலை தம்பி.. :))
----
// மங்களூர் சிவா said...
அவ்வ்வ்வ்
எவ்ளோ டீடெய்ல் தெரிஞ்சி வெச்சிருக்கார்யா//
பாருங்க மக்களே.. இவரு சின்ன கொழந்தையாமாம்.. :)

said...

//நிஜமா நல்லவன் said...

ஏமாறுறவன் இருக்கிற வரைக்கும் ஏமாத்த்துறவனும் இருப்பான்னு சொல்லுற மாதிரி நீங்க ப்ளாக் ல வாங்கியாவது பார்க்கனும்னு நினைக்கிறப்போ அவங்களும் ப்ளாக்ல விக்கத்தான் செய்வாங்க....முதலில் நீங்க திருந்துங்க....அப்புறம் பண்ணுங்க அட்வைஸ்//
சோடா குடிங்க ப்ளீஸ்.. இந்த ஊர்ல சினிமா விட்டா வேற பொழுது போக்கே இல்லைண்ணே.. வேற வழியே இல்லாம தான் அப்டி பாக்குறோம்.. பணம் வீணடிக்க வேண்டுதலா என்ன? :(
---
//வெண்பூ said...

வீக் என்ட் ஜொள்ளை நிறுத்திய சிவாவை கண்டித்து மீண்டும் அதை துவங்கும் வரை காலவரையற்ற‌ உண்ணாவிரதம் இருப்பதாக குசும்பன் அறிவித்துள்ளார்..//
ஹேமா சின்ஹா தான் தலைமை. :P
----
//மங்களூர் சிவா said...

இந்த லட்சணத்துல திருட்டு விசிடி ஒழிக்காததுதான் குறைச்சல்
:)))))//
இந்த லட்சணத்தால தான் திருட்டு விசிடி ஒழியல. :))
----
//அதெல்லாம் எவன் கேட்டான் இன்னைக்கு கும்மறதுக்கு ஒருத்தன் சிக்கிருக்கான் அது போதும்!!

:))//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
----
//மங்களூர் சிவா said...
பல்லு இருக்கறவன் பக்கோடா திங்கிறான் சரியான ஸ்டொமக் பயர் பார்ட்டி

:))//
பக்கோடா கெடைச்சிட்ட ஆணவமா? அடங்குடி.. :))

(ஹைய்யா.. இன்னைக்கு கணக்குக்கு பாரதி அண்ணன் ஒரு டபுள் கமெண்டு போட்டுட்டாரு.:) :)
---
//வெண்பூ said...

டென்ஷன் ஆகாதீங்க நி.ந. நம்ம ஆளுங்க இப்பெல்லாம் படத்தை முதல் நாளே பாக்குறதுக்கு முக்கியமான காரணம் இருக்கே, அதுபத்தி சூடா ஒரு பதிவு போடுறதுதான் வேறென்னா.. அதத் தவிர குசும்பன் சொன்ன மாதிரி வேற எதுவும் காரணம் இருக்கிறதெல்லாம் எனக்கு தெரியாதுபா :)))//
அண்ணே அப்டி இல்லைண்ணே.. எதாச்சும் புது படங்கள் வந்தா சனிக்கிழமைகளில் அதை பார்க்கிறது வழக்கம்ணே.. நாம அனுபவிச்ச கொடுமையை மத்தவங்களும் அனுபவிக்க கூடாதுனு தான் விமர்சனப் பதிவு. அட ஒரு சமூக சேவை பண்ணா இவ்ளோ கொறை சொல்றாய்ங்களே.. பொல்லாத உலகமடா சொக்கா.. :))
---
//மங்களூர் சிவா said...

கலா ரசிகர் ஆகீட்டீங்க வால்த்துக்கல்//
அட அவளை அஞ்சாங்கிளாஸ் படிக்கிற வரைக்கும் தான் மாமா ரசிக்க முடிஞ்சது. அப்புறம் நான் வேற பள்ளிகூடம் மறிட்டேன். :))
---

said...

/
இதெல்லாம்.. தனியா வாழ்ந்துட்டு இருக்கிறவனோட சனிகிழமை இரவுகளின் அரிப்பு..
/

அரிப்பு இதோட நிற்கட்டும் இல்லை என்றால் அரிப்பு எய்ட்ஸாக மாறும் அபாயம் உள்ளதாம்!

:)))))

said...

/
கலா ரசிகர் ஆகீட்டீங்க வால்த்துக்கல்//
அட அவளை அஞ்சாங்கிளாஸ் படிக்கிற வரைக்கும் தான் மாமா ரசிக்க முடிஞ்சது.
/

ஏன் அதுக்கப்புறம் சிலிண்டர் மாதிரி ஆகீட்டாளா???

said...

/
.:: மை ஃபிரண்ட் ::. said...

:-))))
/

மை ப்ரெண்டு வெறும் ஸ்மைலி மட்டும் போட்டதற்கு கண்டனங்கள்.

said...

// மங்களூர் சிவா said...

கடைசி 3 வரி பு.த.செ.வி//
அய்யோ.. இது கொழந்தையம்ல.. :(
---
//வெண்பூ said...

//கடைசி 3 வரி பு.த.செ.வி //

ரிப்பீட்டேய்... எனக்கும் புரியல. (எவ்ளோ நேரந்தான் புரிஞ்ச மாதிரியே நடிக்கறது) விஷால் பொம்பள கணக்கா இருக்காருன்றீங்களா????//

ஹிஹி.. :P
--
//நிஜமா நல்லவன் said...
சூடா பதிவு போட இவர் ப்ளாக்ல டிக்கெட் வாங்கி படம் பார்க்கிறார்....தியேட்டர் காரன் சூட்டோடு சூடா ப்ளாக்ல வித்து காசு பார்க்கிறான்....எல்லோரும் ஆதாயம் தேடுறாங்க.....வேற என்னத்த சொல்லுறது?//

அடங்க மாட்டேங்குறாரே.. :))
---
// மங்களூர் சிவா said...

/
புரட்சிதளபதி கழுத்துக்கு கீழ் எடுத்திருக்கு சிரத்தையை சற்று முகபாவணைக்கும் எடுத்திருக்கலாம்.
/

யாரோட கழுத்துக்கு கீழ ???
அவ்வ்வ்வ்//

ச்சீய்ய்.. :D
---
//பி.கு: நிஜமா நல்லவன். நான் ஜென்டில்மேன் படத்தை தரை டிக்கட்டை கவுன்ட்டர்ல வாங்கிதான் பாத்தேன். ப்ளாக்ல வாங்கல.//
ஹாஹா.. :))
----

said...

//வெண்பூ said...

வெளிய கெளம்புனும். கும்மிக்கு உதவிய குசும்பன், நி.ந., சிவாவிற்கு நன்றி. கும்மியை கன்டின்யூ பண்ணுங்க... பை..பை..//
அண்ணே.. நீங்க ரொம்ப நல்லவருண்ணே.. :(
---
//.:: மை ஃபிரண்ட் ::. said...

:-))))//
அக்க.. என்னக்க சொல்லவரீங்க.. :)
---
// VIKNESHWARAN said...

அப்பப்பா இந்த பதிவ குத்தகை எடுத்து கும்மி குத்திருக்காங்கையா....//
ஆமாம் விக்கி.. ஒரு அப்பாவி சிக்கிட்டன்னா.. சின்னாபின்னமாக்கிடறாங்க.. :(

said...

// மங்களூர் சிவா said...

/
இதெல்லாம்.. தனியா வாழ்ந்துட்டு இருக்கிறவனோட சனிகிழமை இரவுகளின் அரிப்பு..
/

அரிப்பு இதோட நிற்கட்டும் இல்லை என்றால் அரிப்பு எய்ட்ஸாக மாறும் அபாயம் உள்ளதாம்!

:)))))//

அடங்கொக்க மக்கா.. ரைமிங்கா ஒன்னியும் சொல்ல உடமாட்றாங்கய்யா.. :((

said...

// மங்களூர் சிவா said...

/
.:: மை ஃபிரண்ட் ::. said...

:-))))
/

மை ப்ரெண்டு வெறும் ஸ்மைலி மட்டும் போட்டதற்கு கண்டனங்கள்.//

ஏன் அவங்களுக் கூட சேர்ந்து கும்மனுமா? :(..

said...

:))))))))))))))))))))

said...

அண்ணே கடும் பதிவர்தான் நீங்க...:)

said...

எழுத்துல நெருப்பு தெறிக்குது...! :)

said...

கலக்குங்க...:)

said...

குசும்பனை பற்றி ஒரே உண்மை சொன்னதுக்கு இப்படி குமிறியிருக்கார்னா அண்ணே இனி அடிக்கடி குசும்பன் பற்றின உண்மைகளை எழுதுங்க...:))

Anonymous said...

சூப்பரு
கலக்கல்

சுபாஷ்

said...

நன்றி சுபாஷ்.. அடிக்கடி வாங்க.. :)

said...

நண்பரே சத்யம் படம் பாத்துட்டு தலைவலி மாத்திரை வாங்கலையா?

said...

//ஒரு பாடலில் யார் குறைவான ஆடை உடுத்துவது என்று விஷாலுக்கும் நயனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.//

அடடே...

said...

விஷாலை வம்புக்கு இழுக்கும் அனைவருக்கும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

"நாங்க பொறுக்கி இல்ல, மெகா பொறுக்கி"
- அகில உலக விஷால் ரசிகர் மன்றம்

said...

நன்றி தமிழன். நான் கடும் பதிவர் எல்லம் இல்லைண்ணே.. சும்மா ஒரு வெளம்பரம்.. அம்புட்டு தான்.. ஏமாந்துடாதிங்க.. :)

குசும்பனை பற்றி இன்னும் ஏராளமான உண்மைகள் விரைவில் வரும் பாருங்கோ.. :P

said...

// muthu said...

நண்பரே சத்யம் படம் பாத்துட்டு தலைவலி மாத்திரை வாங்கலையா?//
தலையையே மாற்ற தான் நினைத்தேன். என்னை போன்றே மூளை இல்லாத தலை என்று எதுவும் கிடைக்கவில்லை. :))
வருகைக்கு நன்றி நண்பரே. :)

said...

// VIKNESHWARAN said...

//ஒரு பாடலில் யார் குறைவான ஆடை உடுத்துவது என்று விஷாலுக்கும் நயனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.//

அடடே...//

அவசரப் பட்டு எந்த முடிவுக்கும் வராதிங்க.. :))

said...

// Thamizhmaangani said...

விஷாலை வம்புக்கு இழுக்கும் அனைவருக்கும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

"நாங்க பொறுக்கி இல்ல, மெகா பொறுக்கி"
- அகில உலக விஷால் ரசிகர் மன்றம்//

வாம்மா பாச மலரே... நீ விஷால் ரசிகை தானே.. ஆனா இது வாரி விடற மாதிரி இல்ல இருக்கு.. அண்ணனுக்கு தெரியாம திருந்திட்டயா என்ன? :))

Tamiler This Week