இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSunday, 30 December 2007
Sunday Special .. கோவை பார்க்..
மாதக் கடைசி என்பதால் இன்றும் வேலை இருந்தது. 3 மணி வரை வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் பசி வயிற்றை குடைத்துக் கொண்டிருந்தது. சாப்பிடலாமே என்று நேரு ஸ்டேடியம் பக்கம் இருக்கிற கார்டன் ரெஸ்டாரண்ட் போகலாம்னு கெலம்பினேன். அங்க போனவுடனே வயித்தெரிச்சல் ஸ்டார்ட் ஆய்டிச்சி. எல்லாரும் ஜோடி ஜோடியா உக்காந்து திங்கறானுங்க. திண்ணதவிட கடல வறுத்தது தான் அதிகம். வறுத்த வாசம் பார்க் முழுசுக்கும் பரவி இருந்தது. இதுல நான் மட்டும் தனியா:( உக்காந்து சாப்டுட்டு இருந்தேன். ஒரே ஆறுதல் வெஜ் பிரியாணி அற்புதமா இருந்தது. அப்புறம் சமோசா கூட நல்லா தான் இருந்தது.:P
அப்டியே ஸ்டேடியம் பக்கம் இருக்கிற மைதானத்துக்கு போனாக்க அங்க பவிழம் ஜிவல்லரியும் யூ டிவியும் சேர்ந்து நடத்தற கிரிக்கெட் போட்டி நடந்துட்டு இருந்தது. நம்மாளுங்க கிரிக்கெட் மோகத்துக்கு ஒரு அளவே இல்ல போங்க. அம்புட்டு கூட்டம் அத பாக்க. ஞாயிற்றுக் கிழமை என்பதால் கூட்டம் ஜாஸ்தியா இருந்தது.நானும் அப்டியே கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துட்டு வந்தேன்.
பொழுது போகனுமே. அப்டியே பார்க் உள்ள போனேன். 3 ரூபாய் டிக்கெட். உள்ள நெறய வெளிநாட்டு பறவைகள் இருக்கு.நம்ம ஊர் கிளி முதல் ஆப்பிரிக்க காதல் பறவைகள் வரை.வேடிக்கை பார்க்க கூட்டம் அலை மோதியது. குட்டி பசங்கள கூட்டிட்டு போக அற்புதமான இடம். குரங்கு , நரி, பாம்பு, புறா, கிளி, வாத்து. வெள்ளை எலி, ஒட்டகம், மயில், குட்டீஸ் ரயில் என குட்டீஸ்க்கு பிடித்த எல்லாம் இருக்கு.
திடிர்னு மூளைகுள்ள மணி அடிச்சது. அட்டேண்ட் பண்ணாக்கா வாஷிங் மெஷின் கண்ணாபிண்ணானு திட்டுது. சாவு கெராக்கி. ஏண்டா ஒவ்வொரு ஞாயித்துக் கெழமையும் 6 மணிக்கு மேலயே என் உயிர வாங்கற. மூதேவி வந்து சீக்கிரம் உன் அழுக்கு துணிய தொவைச்சிட்டு என்ன சீக்கிரம் தூங்க விடுடானு திட்டுச்சி. வேற வழி.. பேக் டூ பெவிலியன்...
பார்க் நுழைவாயில்.. அந்த பொண்ணுங்க யார்ன்னு சத்தியமா தெரியாதுங்கோ. :(
பாம்பு சார் சட்டயை கழட்டறார். அரிய காட்சி. கண்ணாடி மற்றும் சரியான ஒளி இல்லாததால் சரியாக படம் எடுக்க முடியவில்லை. ஒரிகினல் படம் வேண்டுவோர்க்கு அனுப்பி வைக்கப் படும். 10MP படம். புகைப்பட தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தெளிவாக்கலாம்.
முக்கியமான மேட்டர் : பார்க்ல காதல் செய்யும் புண்ணியவான்களே.. கொஞ்சம் நாகரிகமா காதல் பண்ணுங்கய்யா. சகிக்கல. இவ்வளவு கூட்டம் இருக்கிறதே என்ற குறைந்த பட்ச கூச்சம் கூட இல்லாமல் படு கேவலமான முறையில் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.பார்க்கின் எந்தப் பக்கம் போனாலும் இவர்கள் ராஜ்ஜியம் தான்.
9 Comments:
Awesome pics!
Paambu mutta ipo than pakren :)
//
சட்டயை கழட்டறார்.
அரிய காட்சி. //
பின்ன இல்லியா
//Ponnarasi Kothandaraman said...
Awesome pics!
Paambu mutta ipo than pakren ://
அது சரி.. ஸ்கூல்ல நீ வாங்கினது வேற முட்ட தான.. :P.. இந்த பாம்பு நேத்தோட 12 முட்ட போட்டிருக்காம். நேத்து தினமலர்ல போட்டிருந்தாங்க.. :)
//மங்களூர் சிவா said...
//
சட்டயை கழட்டறார்.
அரிய காட்சி. //
பின்ன இல்லியா
//
அச்சச்சோ மாம்ஸ்.. இது உங்க வீக் எண்ட் மேட்டர் இல்ல..:(
யாரும் சட்டய கழட்டிடக் கூடாதே.. :-)))
//
SanJai said...
அச்சச்சோ மாம்ஸ்.. இது உங்க வீக் எண்ட் மேட்டர் இல்ல..:(
யாரும் சட்டய கழட்டிடக் கூடாதே.. :-)))
//
அட பாம்பை சொன்னேன்பா....
பின் குறிப்பு : சட்டைய கழட்டுனா வீக் எண்ட் மேட்டரில்ல அதுக்கு 'நெக்ஸ்ட்'தான்
சஞ்சய், பதிவு போரடிச்சாலும், படங்கள் அருமை - சட்ட்டெயெ கழட்டறது சிவாவோடதுலே ப்த்தேன் - இங்கெய்யும் பாக்குறேன். நல்லா இருக்கு
//சஞ்சய், பதிவு போரடிச்சாலும்,//
தாத்தா யூ டூ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
//
SanJai said...
//சஞ்சய், பதிவு போரடிச்சாலும்,//
தாத்தா யூ டூ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
//
பின்ன என்னய்யா யாராவது ஒத்த சமோசாவ போட்டோ எடுத்து போடுவாங்களா பக்கத்து டேபிள்ல ஒத்தையா ஒரு புள்ள உக்காந்திருந்திச்சில்ல அத போட்டோ புடிச்சி போட்டிருந்தா இப்பிடி ஒரு கமெண்ட் வருமா!?!?!?!?
@ சிவா மாம்ஸ்..
அங்க ஒத்தயா இருந்தது நானும் அந்த சமோசாவும் மட்டும் தான் மாம்ஸ்.. மத்த டேபிள் எல்லாத்துலயும் ஜோடி ஜோடியா குந்திகினு இருந்தாங்க :(..
தனியா யார்னா பொண்ணு இருந்தா நான் ஏன் தனியா இருக்கிற டேபிள்ல போய் உக்காறப் போறேன். அப்டியே பக்கத்துல உக்காந்து நூல் விட்டிருக்க மாட்டேனா? :P
Post a Comment